நானும் மழையும்
அம்மாவும் நானும்
மழை வரும்போல
குடை எடுத்துட்டு போடா
இது அம்மாவின் குரல்
ஒவ்வொரு முறையும்
வீட்டை விட்டு வெளியேறும் போதும்
அம்மவாவின் குரல்
உள்ளிருந்து ஒலிக்கும்…
மழையில் நனையத்தான்
வெளியே செல்கிறேன் என்பதனை
அம்மா அறிவால் இருந்தும்
அவள் குரல்தான்
அன்பு…
நனைந்து பின்
வீடு சேரும்போது
நான்தான் அப்பவே
சொன்னேனே
இந்த வார்த்தைகளோடு
புடவை தலைப்பில்
தலை துவட்டிவிடும்போது
இன்னும் அதிகமாகிறது
வாழ்வதற்கான ஆசைகள்…
வேடிக்கை மனிதர்கள்
வேடிக்கை பார்பதிலே
வாழ்க்கையின் நகர்வுகள்
எந்த சலனமும்
ஏற்படுத்தவில்லை
ஒரு நாளின்
நீல வானத்தின் கருமை மேகங்கள்
மழையின் பெரு சீற்றத்தை தந்து
அடுத்தநாள் வெயில்
முதல் நாளின் மழையை
மறக்க செய்கிறது..
வேடிக்கை பார்பதிலே
வாழ்க்கையின் நகர்வுகள்
வீணாகி போனபின்
வாழ்க்கை சலனம்
இல்லாமலே
பயணம் செய்யமுடிகிறது.
மழை பூமியின்
அனைத்தையும்
சுத்தப்படுத்துகிறது
மனிதனின் அழுக்கு படிந்த
மனசை தவிர…
நானும் மழையும்
ஒவ்வொரு முறையும்
என் கைகள்
பிடிக்கும்போது
நழுவி விலகி
செல்கிறது
மழை…
ஒவ்வொரு முறையும்
மழை
என் முகத்தில்
விழுந்து எழுந்து
என் இதழை
முத்தமிடும் முயற்சியில்
விலகி செல்கிறேன்
நான்…
ஒவ்வொரு முறையும்
தோல்விகளில்
முடிவதை
வேடிக்கை பார்க்கிறது
மழைக்கும் எனக்கும்
இடையேயான
குடை…
கவிதை மழை
கவிதை என தலைப்பு
வைத்துவிட்டாலே
எழுத்து கிறுக்கல்களும்
அழகான கவிதைதான்
மழை என சொல்லும்போதே
நனைதல்
சந்தோசம்
ஓர் உடலியல்
சிலிர்ப்பு…
மழை தேநீர்
என் அருகில்அமர்ந்து
தேநீர் அருந்த
மழை
காதலியாகவோ
நண்பனாகவோ
இருக்க அவசியமற்றது
மழையாக இருந்தாலே
போதும்…
குடை வேண்டாம்
இனி
மழை பருவம்
என் குடையை எடுத்து
ஒளித்து வைக்க வேண்டும்
மறந்தும் அதை
தொட்டுவிட கூடாது…
குடை
எனக்கும் மழைக்கும்
இடையேயான
காதலை முறித்துவிடும்
ஆயுதமல்லவா…
அம்மாவும் நானும்
மழை வரும்போல
குடை எடுத்துட்டு போடா
இது அம்மாவின் குரல்
ஒவ்வொரு முறையும்
வீட்டை விட்டு வெளியேறும் போதும்
அம்மவாவின் குரல்
உள்ளிருந்து ஒலிக்கும்…
மழையில் நனையத்தான்
வெளியே செல்கிறேன் என்பதனை
அம்மா அறிவால் இருந்தும்
அவள் குரல்தான்
அன்பு…
நனைந்து பின்
வீடு சேரும்போது
நான்தான் அப்பவே
சொன்னேனே
இந்த வார்த்தைகளோடு
புடவை தலைப்பில்
தலை துவட்டிவிடும்போது
இன்னும் அதிகமாகிறது
வாழ்வதற்கான ஆசைகள்…
வேடிக்கை மனிதர்கள்
வேடிக்கை பார்பதிலே
வாழ்க்கையின் நகர்வுகள்
எந்த சலனமும்
ஏற்படுத்தவில்லை
ஒரு நாளின்
நீல வானத்தின் கருமை மேகங்கள்
மழையின் பெரு சீற்றத்தை தந்து
அடுத்தநாள் வெயில்
முதல் நாளின் மழையை
மறக்க செய்கிறது..
வேடிக்கை பார்பதிலே
வாழ்க்கையின் நகர்வுகள்
வீணாகி போனபின்
வாழ்க்கை சலனம்
இல்லாமலே
பயணம் செய்யமுடிகிறது.
மழை பூமியின்
அனைத்தையும்
சுத்தப்படுத்துகிறது
மனிதனின் அழுக்கு படிந்த
மனசை தவிர…
நானும் மழையும்
ஒவ்வொரு முறையும்
என் கைகள்
பிடிக்கும்போது
நழுவி விலகி
செல்கிறது
மழை…
ஒவ்வொரு முறையும்
மழை
என் முகத்தில்
விழுந்து எழுந்து
என் இதழை
முத்தமிடும் முயற்சியில்
விலகி செல்கிறேன்
நான்…
ஒவ்வொரு முறையும்
தோல்விகளில்
முடிவதை
வேடிக்கை பார்க்கிறது
மழைக்கும் எனக்கும்
இடையேயான
குடை…
கவிதை மழை
கவிதை என தலைப்பு
வைத்துவிட்டாலே
எழுத்து கிறுக்கல்களும்
அழகான கவிதைதான்
மழை என சொல்லும்போதே
நனைதல்
சந்தோசம்
ஓர் உடலியல்
சிலிர்ப்பு…
மழை தேநீர்
என் அருகில்அமர்ந்து
தேநீர் அருந்த
மழை
காதலியாகவோ
நண்பனாகவோ
இருக்க அவசியமற்றது
மழையாக இருந்தாலே
போதும்…
குடை வேண்டாம்
இனி
மழை பருவம்
என் குடையை எடுத்து
ஒளித்து வைக்க வேண்டும்
மறந்தும் அதை
தொட்டுவிட கூடாது…
குடை
எனக்கும் மழைக்கும்
இடையேயான
காதலை முறித்துவிடும்
ஆயுதமல்லவா…
No comments:
Post a Comment