முனைவர் பூ.மு.அன்புசிவா
வெட்சி
கரந்தைப் போர்களில் ஈடுபட்ட வீரர்கள் வெற்றியோடு
மீண்டு வந்தால் ஊரவர் உண்டாட்டு
நிகழ்த்திக் கொண்டாடிப் போற்றினர்.
மாண்டால் நடுகல் நட்டு வணங்கி
வழிபட்டனர். சங்க இலக்கியங்களி;ல் கூறப்பட்டுள்ள
நடுகல் பற்றிய செய்திகள் அனைத்தும்
வெட்சி கரந்தைப் போர்களில் வீரமரணம் அடைந்த ஆடவர்களின் நினைவைப்
போற்றி வணங்குவதற்காக நடப்பட்ட கற்களளைப் பற்றியதாகவே உள்ளன. பெண்களுக்கு நடுகல்
நட்டப்பட்ட செய்தி சங்க இலக்கியங்களில்
காணப்படாமை நோக்கத்தக்கது. சேரன் செங்குட்டுவன் கண்ணகிக்கு
நடுகல் நட்டு கோயில் அமைத்து
வழிபாடு நிகழ்த்த ஏற்பாடு செய்ததனைச் சிலப்பதிகாரம்
கூறுகிறது. கண்ணகி தவிர்த்த பிறபெண்களுக்கு
நடுகல் நடப்பட்டதா என்பது தெரியவில்லை.
வெட்சிகரத்தை போர்களில் வீரமரணம் அடைந்த வீரர்களின் நினைவாக
நடப்பட்;ட நடுகற்களை தெய்வமாகக்
கருதி வணங்கி வழிபட்ட நிலை
தமிழகத்தில் ஏற்பட்டது. நடுகல் தெய்வமாக வணங்கப்பட்டதற்குப்
புலவர் மாங்குடி கிழார் சான்றளிக்கிறார். “கல்லே
பரவினல்லது நெல்லுகுத்தப் பரவும் கடவுளும் இலவே
என்பது அவரது கூற்று. நடுகற்களுக்கு
நாள்தோறும் தீபம் காட்டிப் ப+சைசெய்யும் வழக்கமும் ஏற்பட்டது.
“இல்லடகள்ளிக்
சில்குடிச் சீறூர்ப்
புடைநடு
கல்லின் நாட்பலிய+ட்டி
நன்னீராட்டி
நெய்நறை கொளீஇய
மங்குல் மாப்புகை மறுகுடன்
கமலும்
(இல்லங்களில் காய்ச்சப்படும் கள்ளையுடைய சிலவாகிய குடிகள் வாழும் சிற்றூரின்
பக்கத்தே நடப்பட்ட நடுகல்லுக்கு விடியற்காலையில் நன்னீராட்டி நெய்விளக்கேற்றிப் படையலைப் படைத்தனர். நெய் விளக்கு ஏற்றியதால்
உண்டான புகை மேகம் போல்
எழுந்து தெருவில் மணக்கும்) என்று நடுகல் வணங்கப்பட்ட
செய்தியைப் புறநானூற்றுப் பாடல் (306) கூறுகிறது. “நடுகல்லுக்குப் பீலி சூட்டி வணங்கும்
போது இல்லடுக்கள்ளும் படைத்து வணங்கினர் என்று
புறநானூறு கூறுகின்றது.” நடுகற்
பீலி சூட்டி நாரரி சிறுகலத்து
குப்பவும் என்று அதியமான் நெடுமானஞ்சியின்
நடுகல்லுக்குக் கள்ளும் படைக்கப்பட்டது. குறித்து
அவ்வையார் கூறுகிறார்.
ஆநிரைகளையுடைய கோவலர் உயர்ந்த வேங்கை
மரத்தின் நல்ல ப+ங்கொத்துக்களைப்
பனையோலையில் தொடுத்து அலங்கரித்து இலைமலை சூட்டி நடுகல்லை
வணங்கினர் என்று புறநானூறு கூறுகிறது.
“ஊர் நனியிகந்த பார்
முதிர் பறந்தலை
ஓங்குநிலை வேங்கை யொள்ளிணர் நறுவீப்
போந்தையந் தோட்டிற் புனைந்தனர் தொடுத்துப்
பல்லான் கோவலர் படலை
சூட்டக்
கல்லாயினை என்பது அது குறித்தபாடற்
பகுதியாகும்.
வெட்சியார் கவர்ந்து சென்ற ஆநிரைகளை மீட்பதற்காக
நடைபெற்ற கரந்தைப் போரில் உயிர்நீத்த வீரனுக்கு
ஊரவர் கலநட்டனர். மரல் நாரில் தொடுக்கப்பட்ட
சிவந்த ப+வையுடைய கண்ணியையும்
அழகிய மயிலினது பீலியையும் சூட்டிப் பெயரும் பீடும் எழுதிப்
பெருமை செய்து வழிபட்டனர் என்று
புறநானூறு ( 264) கூறுகிறது.
பரலுடை மருங்கிற் பதுக்கை
சேர்த்தி
மரல் வகுந்து தொடுத்த
செப்ப+ங் கண்ணியொடு
அணி மயிற்பீலி சூட்டிப்
பெயர் பொறித்து
இனி நட்டனரே கல்லும்
என்பது அப்பாடற் பெயர் பகுதி (புறம்.264)
நடுகற்களுக்கு நாள்தோறும் தீபம் காட்டிப் ப+சை செய்து வழிபடும்
காரியங்களைப் பெண்கள் செய்தனர், என்று
சங்க இலக்கியங்கள் கூறுகின்றன. கண்ணகிக்கு செங்குட்டுவன் அமைத்த நடுகல்லுக்குப் ப+சை செய்யும் கைங்கர்யத்திற்கு
அவள் தோழியான தேவந்தியென்பாளை அம்மன்னன்
நியமித்தான் என்று சிலப்பதிகாரம் கூறுகிறது.
ஒலிமென் கூந்தலொண்ணுதலரிவை
நடுகல் கைதொழுது பரவு
மொடியாது
விருந்தெதிர் பெறுகதில்யானே யென்னையும்
…………………………………………….
வேந்தனொடும் நாடுதருவிழுப்கை எய்துக எனவே
(தழைத்த மெல்லிய கூந்தலையும்
ஒள்ளிய நெற்றியையும் உடைய அரிவையானவள் யான்
விருந்தினர் எதிர் வரப்பெறுவேனாக என்றும், கணவனும்
வேந்தனும் மண்ணாசையால் நாடுகளைக் கைப்பற்றும் போரில் வெற்றி பெறுக
என்றும், நாளும் தவறாமல் நடுகல்லைக்
கைகூப்பித் தொழுதாள்) பெண்கள் ஆடவர்க்கு நடப்பட்ட
கல்லை வணங்கினர் என்னும் இச்செய்தியானது, பெண்
சமூகத்தின் தலைமையிடத்தில் இருந்து தூக்கியெரியப்பட்டு அடிமைப்படுகுழியில்
ஆழ்த்தப்பட்டதையும் ஆணாதிக்கம் மேலோங்கிவிட்ட நிலையையும் தெளிவாக உணர்த்துகிறது. நடுகல்லை
நாள் தோறும் வணங்கினால் விருந்தினர்
எதிர்படுவர் என்றும், போரில் கணவனுக்கும் அரசனுக்கும்
வெற்றி கிட்டும் என்றும் பெண்களிடையே மூடநம்பிக்கைகள்
பரப்பப்பட்டதனையும் மேற்குறித்த பாடலடிகள் நமக்குக் கூறுகின்றன.
‘நடுகற்களைத் தவறாது வணங்கினால் மழை
மிகுதியாகப்பெய்யும், வறட்சி நீங்கும், வளம்
ஓங்கும்” என்ற நம்பிக்கையும் மக்களிடையே
பரப்பப்பட்டது. பெண்கள் மட்டுமல்லாது சமுததாளத்தின்
அடிமட்டத்தில், செல்வர்களான புரவலர்களை அண்டியிருந்து அவர்களின் தயவில் வாழ்ந்த இரவலர்களான
பாணர்களும் கூட, வீரர்களின் நடுகற்களைக்
கண்டு வணங்கிச் செல்லுமாறு வற்புறுத்தப்பட்ட நிகழ்வுகளையும் சங்க இலக்கியங்கள் நமக்குக்
காட்டுகின்றன.
“பெருங்களிற் றடியில் றோன்று மொருகண்
இரும்பறை யிரவர சேறியின்
தொழாதனை கழித லோம்புமதி
வழாது
வண்டு மேம் படூஉ
மிவ் வற நிலையாறே
…………………………………………….
வில்லுமிழ் கடுங்கணை மூழ்கக்
கொல்புனற் சிறையின் விலங்கியோன்கல்லே (புறம்.263)
(பெரிய யானையின் அடிபோலத்
தோன்றும் ஒரு கண்ணினையுடைய பெரிய
பறையயினையுடைய இரவலனே, நீ போகின்றாயாயின்
பகைவரது வில்லில் இருந்து வெளிப்பட்ட அம்புகள்
மிகுதியாகதைக்கவும் எதிர் நின்று விலக்கியவனது
கல்லைத் தொழாமல் போவதைத் தவர்ப்பாயாக)
என்று பாணர்கள் நடுகல்லை வணங்கிச் செல்லுமாறு வற்புறுத்தப்பட்டதைப், புறநாறுனூறு (263) கூறுகிறது. ‘நடுகல்லைத் தொழுது செல்க என்னாது
“தொழாதனை கழிதலோம்புமதி (கல்லைத் தொழாமல் போதழைத்
தவிர்ப்பாயாக ) என்று கூறதல், கல்லைத்
தொழுது செல்லுமாறு பாணனைக் கட்டாயப்படுத்தும் செயலேயாகும்
என்பத மிகையன்று.
வழிச் செல்லும் பாணர்கள்
வழியிடைக்காணும் நடுகற்களை வணங்கி யாழை வாசித்து
செல்லமாறு வற்புறுத்தப்பட்ட செய்தியை மலைபடுகடாம் பாட்டின் வரிகள் (386-90) கூறுகின்றன.
‘ஒன்னாத் தெவ்வர் உலைவிடத்தார்தென
நல்வழிக் கொடுத்த நாணுடை மறவர்
கல்லேசு கவலை யெண்ணும்
மிகப் பலவே
இன்புறு முரற்கை நும்
பாட்டு விருப்பாகத்
தொன்றொழுகு மரபினும் மருப்பிகுத்தினைமின்
(ஏவல் பொருந்தாத பகைவர்
புற முதுகிட்ட அளவிலே தமது வெற்றி
தோன்ற வீரர்கள் ஆரவாரித்ததாக. அது பொறாமல் இவ்விடத்தே
உயிர் கொடுத்தற்கு நல்லகாலம் என்று மீண்டும் உயிரைக்
கொடுத்த பெயர்களை எடுதி நட்ட கற்கள்
மிகுதியாக உள்ளன. இன்பம் மிகுகின்ற
தாளத்தையுடைய உங்கள் பாட்டு, அந்நடுகல்லின்
தெய்வத்திற்கு விருப்பம் உடையதாதலின் நீங்கள் உங்களுடைய யாழை
வாசித்த விரைந்து செல்வீர்) என்று பாணர்கள் நடுகல்லைக்
கண்டு வணங்கிச் செல்லுமாறு கூறப்பட்டனர். ’நடுகல்லை நாளும் தவறாது வணங்கினால்
மழை வளம் பெருகும். மழை பெய்தலால் கொடுங்கானம்
வறட்சி நீங்கிக் குளிரும் மரம் செடிகள் தளிர்த்துப்
ப+க்கும், அதனால்
வறட்சிமிக்க இக்கொடிய வழியில் வண்டுகள் மிகுதியும்
மொய்க்கும், வளம் பெருகும் என்று
மக்களை நம்பச் செய்தனை,
“தொழாதனை
கழிதலோம்பு மதி வழாது வண்டு
மேம்படூஉ மிவ் வறநிலையாறே” என்ற
புறநானூற்றுப் பாடலடிகள் தெளிவுற உணர்த்துகின்றன.
இந்நிகழ்வுகள் தனியுடைமைச் சிந்தனையும் ஆணாதிக்கமும் தலைதூக்கியதால் சமூகத்தில் பெண்களும் அடித்தட்டு மக்களும் அடிமை நிலைக்குத் தள்ளப்பட்டு
விட்டதை தெளிவாக உணர்த்துகின்றன. ஆண்டைகளான
ஆண்கள் உயிருடன் இருக்கும் போது மட்டுமல்ல, இறந்த
பின்னும் அவர்களுக்குப் பணிந்து போக வேண்டும்
என்ற சுரண்டும் வர்க்கத்தவரின் (அண்டைகளின் ஆதிக்கமனப்பான்மையையும் அதிகார மமதையையும் வெளிபடையாக
உணர்த்துகின்றன என்பது மிகையன்று.
கல்லை வணங்கி வழிபடுமாறு
பயவுரைகளாலும் நயவுரைககளாலும் மக்கள் வற்புறுத்தப்பட்டனர் என்பதற்குச்
சங்க இலக்கியங்கள் சான்றளிக்கின்றன. இங்கு கடவுளாக்கிக் காட்டப்பட்டது
கல் அல்ல. ஒரு அடையாளம்
மட்டுமே.
ஆண்டைகளும் அதிகார வர்க்கத்தாரும் தான்
கடவுளாக்கப்பட்டள்ளனர். உயிருடன் இருந்தபோது ஆண்டைகளை நினைத்து வணங்கிணால் நன்மைகள் உண்டாகும் என்று மக்களை நம்பச்
செய்யும் சூழ்ச்சியே ஆகும். கல்லை மக்கள்
தொடர்ந்து வணங்கி வழிபட வேணடுமானால்,
அதற்கு ஒரு சிறப்புத்தன்மைக் கற்பித்துக்
கூற வேண்டும் மேன்மைப்படுத்pக் காட்ட வேண்டும்,
அவ்வாறு கற்பித்துக் காட்டும் முயற்சியே, அது வரம் கொடுக்கும்
நன்மை விளைவிக்கும் என்ற கூற்று.
தெய்வம் தன்னை வணங்குவார்க்கு
என்னென்ன வரங்களைக் கொடுக்கும் என்பதனை ஆள்வார்கள் முதல்
அபிராமி பட்டர்வரை பட்டியலிட்டுக் கூறியுள்ளார்கள். அவர்களுக்கு முன்னோடியாகவே நடுகல்லைப் புகழ்வாரது செயல் அமைந்துள்ளது என்பது
மிகையன்று. இங்கு அரசர்களை
தெய்வமாக்கிக் காட்ட வேண்டும் என்று
மனு முதலியவர்கள் கூறியுள்ள கூற்றும் நம் கவனத்திற்கு உரியதாகிறது.
15.சங்க
இலக்கியத்தில் நடு நிலைப்பண்புகள்
தமிழ் மொழி தமிழர்களுக்கான உயிர்,
உடல், இனம் சார்ந்த அடையாளம்
தமிழ்மொழியின் உயர்வு, வளர்ச்சி, அதன்
வளமை அத்தனைக்கும் அம்மொழி வாயிலாகப் படைக்கப்பெற்ற
படைக்கப்பெறும் இலக்கண இலக்கியங்கள் உறுதுணையாக
இருந்துவருகின்றன. தமிழ்மொழியின் சிறப்பு அம்மொழி வாயிலாகப்
படைக்கப்பெறும் இலக்கியங்களில் உறைந்த கிடக்கிறது என்பது
கருதத்தக்ககது. செம்மொழித் தமிழ் இலக்கியங்களில் காணக்கிடைக்கும்
ஒரு சிறப்புக் கூறு நடுவுநிலைமை என்பதாகும்.
இக்கூறு தமிழின், தமிழர்களின் நடுவுநிலைமை பண்பை வெளிவுலகிற்கு எடுத்துரைப்பபதாக
உள்ளது.
பட்டினப்பாலை என்ற பத்துப்பாட்டு நூலில்
தமிழர்களின் நடுவுநிலை சார்ந்த
வணிக முறைமையை மிக்கச் சிறப்பாக எடுத்துரைக்கின்றது.
சங்க காலத்தில் பண்ட மாற்று முறையில் வணிகம் நடைபெறவுள்ளது. கொண்டு
வந்த பொருளுக்கு மாற்றாக மற்றொரு பொருளை
தரும் வணிக வழக்கமாகும்.
பிற்காலத்தில் பணம் கொடுத்து பொருள்
பெறும் முறை தொடங்கியுள்ளது.
காவிரிப+ம்பட்டனததில் அகலமான
வணிகத் தெருக்கள் இருந்துள்ளன. அத்தெருக்களின் இருபுறங்களிலும் கடைகள் காணப்பெற்றுள்ளன. ஒவ்வொரு
கடையின் முன்பகுதியிலும் கொடி தொங்கவிடப்பெற்றிருக்கிறது. அக்கொடி விற்கும் பொருளின் அடையாளத்தை உணர்த்துவதாக இருந்துள்ளன. இக்கடைகளில் பொருள் வாங்குவோரும் பொருள்களைத்
தருவோரும் மிகுந்து காணப்பட்டனர். இவர்களிடத்தில் விளைபொருள்களைப் பெறும்போதும், அதற்கேற்ப மாற்றுப் பொருளைத் தரும்போது ஒரு நன்முறை பின்பற்றப்
பெற்றுள்ளது.
நெடுநுகத்துப் பகல் போல
நடுவுநின்ற நல் நெஞ்சினோர்
வடு அஞ்சி வாய்
மொழிந்து
தமவும் பிறவும் ஒப்ப
நாடி
கொள்வதூஉம்
மிகைகொளாது
கொடுப்பதூஉம்
குறைகொடாது
பல்பண்டம் பகர்ந்து வீசும் (பட்டினப்பாலை 206-211) என்ற அடிகள்
சங்க கால நடுவுநிலை மிக்க
வணிக வாழ்க்ககை முறையை விளக்கி நிற்கின்றன.
உழவர்கள் பயன்படுத்தும் நுகத்தடி எனப்படும் உருகருவியல் தைக்கப்படும் பகலாணி நடுநிலையாக நிற்பதைப்
போல வணிகர்கள் நடுவுநிலை உடையவர்களாக இருந்தார்கள். அவர்கள் தம் பொருள்களையும்,
பிறர் பொருள்களையும் ஒப்ப நாடி வணிகம்
செய்துள்ளனர். பொருள்களைக் கொள்கின்றபோது அதிகமாகக் கொள்ளாமலும் பொருள்களைக் கொடுக்கின்றபோது குறைவுப்படாமலும் தம் தொழிலைச் செய்துவந்தனர்
என்ற இந்தப் பகுதிகள் சங்க
கால நடுவுநிலைமை மிக்க வாழ்க்ககைமறையை எடுத்துக்காட்டுவதாக
உள்ளது.
திருக்குறளும் மற்ற நீதி நூல்களும்
நடுவுநிலைமையை ஒப்பற்ற சான்றோர் குணமாக
கருதுகின்றன. நெஞ்சத்துக் கோடாமை சான்றோர்க்கு அணி
( திருக்குறள்.115) என்கிறது திருக்குறள். வணிகம செய்வார்க்கு வாணிகம்
பேணும் முறைமை எது எனில்
பிறவும் தம்போல் செய்தல் என்று
வள்ளுர் பட்டினப்பாலையின் வழிவந்து வணிகமுறையின் நன்முறையை
உரைக்கின்றனர். (திருக்குறள்.120)
முடிமுனைதல் மஞ்சள்
ப+சுதல் போன்றன
மனிதர்க்கு அழகல்ல. நல்லம் யாம்
என்னும் நடுவு நிலைமையால் கல்வி
அழகே அழகு (நாலடியார்.131) என்று
கல்வி கற்றோர்க்கு உரிய அழகாக நடுவுநிலைமை
என்பதை நாலடியார் காட்டுகின்றது.
நடுவுநிலை தவறிய பாண்டிய மன்னனின்
இறுதிரயச் சிலப்பதிகாரம் சுட்டுகின்றது.
தாழ்ந்த குடையன் தளர்ந்த
செங்கோலன்
பொன்செய்
கொல்லான் தன்சொல் கேட்ட
யானோ அரசன் யானே கள்வன்
மன்பதை
காக்கும் தென்புலம் காவல்
என்முதல்
பிழைத்தத கெடுக என் ஆயுள்
என
மன்னவன்
மயங்கி வீழ்ந்னனே (சிலப்பதிகாரம்.20,7276)
என்ற பகுதியில் ஒருவன் சொன்ன சொற்றொடர்களை
உண்மை என்று எண்ணி மாற்றார்
பக்கத்தைக் காணாது விட்டுவிட்ட மன்னனின்
அறம் தவறிய நிலை நடுவுநிலையில்
பிறழ்ந்த நிலையாகிவிடுகின்றது. நடுவுநிலைத் தவறாது வணிகம் செய்த
வணிகமுறையினரை நடுவுநிலைத் தவறி அரசன் தண்டித்த
கதை சிலப்பதிகாரமாகின்றது.
இவ்வாறு
செம்மொழி இலக்கியங்களில் நடுவுநிலை பற்றி பல செய்திகள்
உள்ளன. இவை தமிழ் மொழியின்
நடுவுநிலைத் தன்மைக்குச் சான்றாக நிற்கின்றன. இவை
புறம் சார்ந்த நடுவுநிலை என்பதாகக்
கொள்ளலாம்.
தொல்காப்பியத்திலும்
நடுவுநிலைமைப் பண்பு காணப்படுகிறது. தொல்காப்பியர்
காலத்தில் பாலைத்திணை என்ற பெயர் ஏற்படவில்லை.
நடுவணது திணை என்றே அதனைத்
தொல்காப்பியர் அழைக்கின்றார். பாலை ஏன் நடுவணது
திணை என்று அழைக்கப்பட்டது என்பது
ஆராயத்தக்கதாகும்.
நடுவுநிலைத்
திணையே நண்பகல் வேனிலோட
முடிவு
நிலை மருங்கின் முன்னிய நெறித்தே
தொல்காப்பியம்,பொருளதிகாரம்.11)
என்ற தொல்காப்பி நூற்பாவில் மிகத் தெளிவாக பாலைத்
திணையை நடுவுநிலைத் திணை என்று தொல்காப்பியர்
காட்டுகின்றார்.
காலையும் மாலையும் நண்பகலன்ன கடுமை கூறச் சோலை
தேம்பி; கூவன்மாறி நிரும் நிழலும் இன்றி
நிலம் பயன் துறந்து புள்ளும் மாவும் புலப்புற்று இன்பம்
இன்றி துன்பம் பெருகுவதொரு காலமாதலின்
இன்பத்திற்கு இடைய+றாகிய பிரிவிற்கு
நன்பகலும் வேனிலும் சிறப்புடையதாயிற்று என்று நச்சினார்க்கினியர் இதற்குப்
பொருள் கொள்வார். அதாவது காலை மாலை
என்ற நாள் பொழுதில் நடுவில்
வருவது நன்பகல் அந்த நன்பகலை
சிறுபொழுதாகக் கொண்ட பாலை நிலத்தை
நடுவுநிலைத் திணை என்று தொல்காப்பியர்
அழைத்திருக்கிறார் என்று நச்சினார்கினியார் முடிக்கின்றார்.
இருப்பினும் இன்பம் துன்பம் என்ற
இரண்டில் தலைவனுக்கும் தலைவிக்கும் இன்பத்தைத் தருவது குறிஞ்சி என்ற
திணை. மற்ற நான்கு திணைகளிலும்
இருத்தல், ஊடல், இரங்கல் என்று
துயரத்தின் சாயலே மிக்கு இருக்கின்றது.
ஆனால் பாலையில் தலைவன் மட்டும் பிரியலாம்,
அல்லது தலைவனும் தலைவியும் தம் சொந்தங்களை விட்டுப்பிரியலாம்.
இந்தச்சூழலில் பிரிதல் என்பதை இன்பத்துள்
வைப்பதா, துன்பத்துள் சேர்ப்பதா என்று கருதிப் பார்த்தால்
நடுவுநிலைக்குள் தொல்காப்பியர் வைத்தது சரி எனப்படும்.
குறிஞ்சி, முல்லை என்ற இரண்டிலும்
தலைவன் வந்துவிட்டான். வருவான் என்ற உறுதி
உள்ளது. மருதம், நெய்தல், இவற்றில்
தலைவன் திரும்பி வருவானா வாரானா என்ற
சந்தேகம் நிலைப்படுகிறது. இவை இரண்டு இரண்டாக
பிரிவுபட்டு நிற்கும் நிலையில் பாலை என்பது நடுவணதாக
நிற்க வாய்ப்புள்ளது. தலைவன் ஏதோ ஒரு
காரணம் நிறைவேறும் வரை தலைவன் தலைவி
இருவரும் காத்திருந்து அதன்பின் அனுபவிக்கப் போகிற இன்பத்தை எண்ணி
வாழும் பாலை வாழ்க்கை நடுவணதாகத்தான்
இருக்க இயலும். எனவே தமிழர்
அக வாழ்விலும் நடுவு நிலை ஆட்சி
செய்துள்ளது என்பது தெளிவாகின்றது.
வடமொழியானது மெய்ப்பாடுகள் அதாவது இரசங்கள் ஒன்பது
என்று கொள்ளும். நடுவுநிலை அதாவது சாந்தம் என்பதையும்
அது ஒரு சுவையாகக் கொள்கின்றது.
ஆனால் தொல்காப்பியர் அதனை விடுத்து எண்
சுவைகளை மட்டுமே மெய்ப்பாடாகக் கொள்ளுகின்றார்.
இருப்பினும் நடுவுநிலை என்ற மெய்ப்பாட்டை விட்டுவிடாது
பிற நிலைகலன்கள் என்ற வரிசையில் தருகின்றார்.
(தொல்காப்பியம் மெய்ப்பாட்டியல்.11) அகமம் புறமும் சாhந்த மெய்ப்பாடாக நடுவுநிலை
என்ற மெய்ப்பாடு விளங்கி நிற்கிறது.
எனவே தமிழ்மொழியைப்
பொறுத்தவரையில் தென் நடுவுநிலை என்பது
அகம்,புறம், இரண்டிற்கும் பொதுவானது
என்ற மூன்று நிலைப்பாடுகளைப் பெற்றுள்ளது
என்பது உணரத்தக்கதாகும்.
இவ்வாறு நடுவுநிலைப் பண்பு
என்பது தமிழர் வாழ்வியலின் சிறப்புப்
பொருளாகித் தமிழ்மொழிக்குப் பெருமை சேர்த்து வருகிறது.
இப்பெருமை தமிழ்மொழியைச் செம்மொழி வரிசையில் தகுதி பெற வைத்துள்ளது.
16.சங்க இலக்கியம் பரிபாடலில்
முருகன் வரலாறு
எட்டுத்தொகை
இலக்கியங்களுள் “ஓங்கு பரிபாடல்” என
அடைமொழியால் சிறப்பிக்கப்படும் சங்க இலக்கியமாகப் பரிபாடல்
விளங்குகிறது. பரிபாடல் எனப் பெயர் பெற்றது.
பரிபாடல் பாடிய புலவர்கள் பதின்மூவர்.
அவற்றிற்கு இசை வகுத்தோர் பதின்மர்
ஆவர். செவ்வேளைப் பற்றிய எட்டுப்பாடல்கள் 612 அடிகளைக்
கொண்டவையாக அதைந்துள்ளன.
செவ்வேள்
பற்றிய பாடல்கள்
செவ்வேளைப் பற்றிய பாடல்களைக் கடுவனிளவெயினனார்,
ஆசிரியன் நல்லந்துவனார், குன்றம் பூதனார், கேசவனார்,
நல்லழிசியார், நப்பண்ணனார், நல்லச்சுதனார் போன்ற புலவர் எழுவர்
பாடியுள்ளனர். குன்றம் ப+தனார்
இரு பாடல்களைப் பாடியுள்ளார் ( பாடல் எண்.9-18)
கந்தவேளின்
பெயர்கள்
முருகன் என்னும் பெயர்
பரிபாடல் உள்ளிட்ட எல்லாச் சங்க இலக்கியங்களிலும்
பயின்று வந்துள்ளது (முருகு.269, அகம்.158, பரி.5.50, புறம்.53 ஐங்குறு.249)” விழை” எனப் பொருள்படும்
“ வேள்” (8.61) என்னும் சொல் அடைமொழி
சேர்ந்து நெடுவேள் (3:37) வெல்வேள்(18:36) செவ்வேள்(5:13) எனப் பரிபாடலில் காணப்படுகிறது.
கந்தவேளைக் குறிக்கும் செவ்வேள் என்னும் பெயர் பரிபாடலில்
மட்டும் தான் இடம் பெற்றுள்ளது.
அதனால்தான் முருகனைப் பற்றிய பாடல்களைச் “செவ்வேள்”
என்னும் தலைப்பில் பரிபாடலில் அமைத்தனர் எனலாம்.
கந்தவேளைக் குறிக்கும் பழைய சொல்லான “சேயோன்
என்பதனைத் தொல்காப்பியத்தில் காணலாம். இச்சொல் விகுதியின்றி “சேய்
எனப் பரிபாடலில்(6:69,5:54) வந்துள்ளது. நச்சினார்கினியர்,” செய்யவன் என்பதே சேயோன் என
நீண்டிருக்கவேண்டும் எனக் கருதவர். (முருகு.61,நச்சர் உரை) “சேஎய்
என்பது, “காஅய் கடவுட்சேய்(5:13) என
“மகன் என்ற பொருளிலும் “சேஎய்குன்றம்(6:69)
என “செம்மை என்ற பொருளிலும்
வழங்கப்படுகின்றனர்.
“வேள்”
என்னும் சொல், “மன்மதன், முருகன்
இருவருக்கும் பொதுவாக இருந்ததால் முறையே
“கருவேள் (மன்மதன்). செவ்வேள் (முருகன்) என்றும் அடைமொழி கொடுத்துக்
குறிப்பிட்டனர். இளமையாய் இருத்தலின், குமரன் என்றும்(9:82) திருமாலுக்கு
மருமகனாய் இருத்தலின், “மாஅல்மருகன்9:57) முருகனுக்குப் பல பெயர்கள் உண்டு.
“வெறிகொண்டான் (9:44) என்றும் முருகனை அழைக்கின்றனர்.
கந்தவேள்
பிறப்பு
செவ்வேளைப’
பற்றி பாடிய புலவர்களுள் கடுவனிளவெயினனாரே
கந்தவேளின் பிறப்பை விரிவாகக் கூறியுள்ளார்,
திரிபுரத்தை அழலால் எரித்த பின்பு
சிவபெருமான் உமையோடு சேர்ந்திருந்தான். இந்திரன்
சிவபெருமானிடத்து ஒரு வரம் பெற்று
இச்சேர்க்கையால் தோன்றிய கருவை அழிப்பாயாக
என வேண்டினான். சிவபெருமான் இந்திரனுக்குக் கொடுத்த வரத்தின்படி அக்கருவினைச்
சிதைத்தான். சிதைக்கப்பட்ட கரு அமரர் சேனைத்தலைவனாகும்
என ஞானத்தால் உணர்ந்த தெய்வ முனிவர்கள்
எழுவரும் இந்திரனுக்கு ஊறு வராதென உறுதி
கூறி அவனிடமிருந்து அச்சிதைந்த கருவை ஏற்றுச் சென்றனர்.
அதனை அம்மாதவர் வேள்வியின் கண் இட்டனர். பின்னர்
அதனை அருந்ததி நீங்கலாக கார்த்திகை மகளிர் அறுவர்க்கும் வழங்கினர்
இவ்வறுவரும் அதனை உண்டு சூலுற்றப்
பின் இமயமலையிலுள்ள சரவணப் பொய்கையில் தாமரைப்
ப+வாகிய பாயலில்
குழந்தையை ஈன்றனர.; ஈன்ற அப்பொழுதே இந்திரன்
இகல்கண்டு முனிவர்களுக்குத் தான் கொடுத்த வரத்தை
மீறி வச்சிரப்படையால் அவற்றை வெட்டினான், அவை
ஆறு துண்டமாகச் சிதைந்தன. ஆறு துண்டமும் ஆறு
குழந்தைகளாகிய பின் ஒன்றாயின. குழந்தைப்
பருவத்திலே முருகனிடம் இந்திரன் தோல்வியுற்றால், முருகனுடைய இவ்வாற்றலைக் கண்ட அக்னித்தேவன் (அனலன்)
தன் மெய்யிற் பரித்துக் கொழியை முருகனுக்குப் பரிசாக
கொடுத்தான். இந்திரன் மயிலை அளித்தான்’. எமன்
வெள்ளாடு நல்கினான்.
முருகனைக்
கார்த்திகை மகளிர் உமையம்மை இருவருக்கும்
மகனெனப் பரிபாடல் கூறுகிறது.(8:127,128) சிவன், முருகன் என்னும்
கடவுளரைவிடப் பெருமை வாய்ந்தவன் என்பதை
நிறுவவே முருகன் பிறப்புப் பற்றிக்
கதை கட்டிவிடப்பட்டுள்ளது என மறைமலையடிகளால் கருதுவர்
(மறைமலையடிகளார். தமிழர் மதம். ப.207)
முருகனின்
திருவிளையாடல்கள். பல பரிபாடல்கள் முருகன்
சூரபதுமனை மாய்த்ததைக் குறிப்பிட்டுள்ளன. புராணக் கதைகளை விரித்துரைக்கும்
கடுவனிளவெயினரனார் சூரபதுமன் அழிவினையும் விரிவாகப் பாடியுள்ளார். முருகன் தன் “பிணிமுகம்”என்னும் யானை மீதமர்ந்து
சூரன்தங்கி வாழும் கடலுக்குச் சென்றார்
அவன்மா மரமாகுவும் மலையாகவும் மாற்றுருக் கொண்டு மறைந்தனன். கந்தவேள்
தன்னுடைய வேலை எரிந்து மாவினை
அழித்தாh.; மலையினையும் அழித்தார் சூரனின் சுற்றத்தாரையும் அழித்தார்
(பரி.5:12-14 5:7, 9:70,
14:18, 18:4, 19:10-103,21:8-9) கிரௌஞ்கசிரி
என்ற வடமொழிப் பெயர் பரிபாடலில் இடம்பெறவில்லை.
கிரௌஞ்சம் என்பது அன்றிற் பறவையினைக்
குறிக்குமாதலால் அம்மலையை பறவையின் பெயர்பெற்ற மலை “புள்ளொடு பெயராய
பொருப்பு” (பரி.21:9, 5:9) எனத் தமிழுணர்வுடன் கூறியிருப்பது
குறிப்பித்தக்கதாகும்.
கந்தவேள்
விண்ணக மடந்தை தேவ சேனையை
மணந்த போலவே, மண்ணக மடந்தை
வள்ளியையும் மணந்தமையால் விண்ணுலகும் மண்ணுலகும் முருகனால் இன்புற்றன (பரி.,19:171,14:21-22)
கந்தவேள்
உருவச் சிறப்பு
கந்தவேளின்
உருவ அழகைப் பரிபாடலில் புலவர்கள்
பலரும் ஈடுபாட்டுடன் பாடியுள்ளனர். மேனி கடுவனிளவெயினனார் செவ்வேளின்
நிறம் கதிரவள் ஒளி ஒக்கும்
என்பர். கொழுந்தவிட்டெரியும் தீயின் நிறத்தை உவமையாக்குவர்.
நப்பண்ணனார்(பரி,5:12, 19:99) இவ்விரு உவமைகள் தவிர
அவர் நிறத்துக்கு வேறு உவமைகள்
பரபாடலில் காணப்பெறவில்லை. தலை, கைகள், ஆறு
தலைகளையும் இளங்கதிர் அண்டிலம் போன்ற முகத்தினையும் உடையவர்
கந்தவேள் (பரி. 5:10)
கந்தவேள்
தன் பன்னிருகைகளிலும் பன்னிருபடைகளைக் கொண்டுள்ளார் (பரி.,5:63-68) அவர்தம் முந்நான்கு தோளும்
முழவினை ஒக்கும் (பரி,,5:11) முருகனது பேரறிவையும், பேராற்றலையும் புலப்படுத்தவே ஆறுதலைகளையும், பன்னிருபடைகளையும் உடையவராக அவரை உருவகஞ்செய்துள்ளனர் என்பர்.
(மாணிக்கவாசகர் வரலாறும் காலமும் தொகுதி -2,ப.
487).
மார்பும்
அடியும் மலைபோன்ற ஆற்றலும் அகலமும் கொண்டது. செவ்வேளின்
மார்பு. அதன் கண் வாளால்
வெட்டப்பட்ட வெற்றித் தழும்புகள் நிறைய உள்ளன (பரி.,
9:27-28). சந்தானம் முதலிய நறுமணப் புகை
கமழ மலர்மாலையும் முத்து மாலையும் கந்தவேள்
மார்பினை அணிசெய்கின்றன. (பரி., 9:28-29) தன்
திருவடியில் தோலாகிய செருப்பினைக் கந்தவேள்
அணிந்துள்ளான் (பரி., 21:3-7) மிதியடியைப் புனைந்துரைத்தல் நல்லச்சுதனார் பாடல் ஒன்றிலேதான் காணப்படுகிறது.
அணியும்
ஆடையும் முருகனது ஆடை செந்நிறமானது. பசும்
ப+னினையும், முத்தாரத்தினையும்
அவர் அணிந்துள்ளார். மாலை கடப்பந்தாரும் முத்துமாலையும்;
அவர்தம் மார்பினுக்கு அழகு செய்கின்றன. (பரி..19:97).
கந்தவேளுக்கு உரியது கடம்பு ஆதலின்,
பெரும்பாலான புலவர்கள் அவரைக் கடப்பந்தாரும் முத்துமாலையும்
அவர்தம் மார்பினுக்கு அழகு செய்கின்றன (பரி.,19:97).
கந்தவேளுக்கு உரியது கடம்பு ஆதலின்,
பெரும்பாலான புலவர்கள் அவரைக் கடப்பந்தார் சூடியவராகவே
பாடியுள்ளனார்(பரி.,5:81 21:10-11)
படைகள்,
கொடி. ஊர்தி
செவ்வேளைப் பற்றிப் பாடிய புலவர்கள்
அனைவரும் முருகனது
படைகள். கோடி, ஊர்திப் பற்றிய
சிறப்புகளை அழகுற எடுத்தியம்புகின்றன.
கந்தவேளைப்
பாடிய புலவரெல்லாம் அவர்தம் வேற்படையினையும் சூரபதுமனை
அழித்ததையும் தவறாது குறிப்பிட்டுள்ளனர். வேல்
பரிபாடலில்” சுடர்ப் படை (14-18 ஏந்திலை(17-2),
எ.கு(9-79) எனப்
பலபெயரால் வழங்கப்பெறுகிறது. பலதேவர்கள் வழங்கிய பதினோரு படைகளும்
முருகனிடம் இருந்தன” (பரி., 5:63-68)
சேவலும்
மயிலும் எழுதிய கொடிகளே முருகனுக்குரியன. (பரி.,17-48)
யானையும், மயிலையும் ஊர்தியாக உடையவர் செவ்வேள் (பரி.,19-28,8-67)
கடுவனிளவெயினனாரும், நல்லாசிரியரும் பாடிய பாடல்களால் முருகனுடைய
யானை ஊர்தியின் பெயர்” பிணிமுகம்” என்பதனை
அறியலாம். (பரி.,5:2,17-49)
வெறியாட்டு
வெறியாட்டத்தைப் பரிபாடல் விரிவாகக் கூறவில்லை. கந்தவேளைப் பாடிப் பரவும் வேலனைப்
பற்றிக் கூறும்போது சொல்லளவில் “வெறியாட்டம்” பற்றிய குறிப்பு காணப்படுகிறது
(பரி., 5:13-15,9:44).
பரிபாடலும்
முருகாற்றுப்படையும்
பரிபாடலின்
முதற்பாடலே திருமாலைப் பற்றியதாதலின் அதற்கெனத் தனிக்கடவுள் வாழ்த்தில்லை. அதுபோன்றே பத்துப்பாட்டின் முதற்பாட்டு முருகனைப் பற்றியதாதலின் அதற்கும் தனியாகக் கடவுள் வாழ்த்தில்லை பரிபாடல்
பாண்டிய நாட்டை மட்டும் சிறப்பித்துக்
கூறுகிறது, ஆனால் முருகாற்றுப் படை
தமிழகத்திலுள்ள முருகனுடைய ஆறுபடைவீடுகளையும் பாடிப் புகழ்ந்தள்ளது. முருகனுக்குரியது.
என்று விளம்பும், பரிபாடலோ அதனைத் திருமாலுக்குரியதாகக் கூறும்.
முருகனது
பிறப்பு அவனது சிறப்புகள் முதலியவற்றை
இருநூல்களும் கருத்தொப்புமையுடன் எடுத்தியம்புகின்றன. வெறியாட்டு பற்றிய செய்திகளை முருகாற்றுப்படையில்
(முருகு.,218-288) விரிவாக காணலாம்.
முருகாற்றுப்படையை
விட பரிபாடலே கந்தவேளின் பிறப்பை விரிவாகக் கூறியுள்ளது.
முருகனின் ஊர்திகளுள் ஆடும் ஒன்றென முருகாற்றுப்படை
கூறுகிறது (முருகு.,210)
திருமாள்,
சிவன், அயன் முதலிய கடவுளர்கள்
பரங்குன்றத்திற்கு முருகனை வணங்கச்சென்றனர். என்று
பரிபாடல் கூறும். முருகனால் சிறைப்படுத்தப்பட்ட
நான்முகனைச் சிறைவீடு
செய்யவே சிவன் மால், இந்திரன்
முதலிய தேவர்கள் சென்றனர். என்று முருகாற்றுப்படை மட்டுமே
முருகனின் ஆறு தலைகளும், பன்னிருகைகளும்
புரியும் பணிகளை விரிவாக் கூறுகிறது.
பரிபாடலுக்குப் பண் வகுக்கப்பட்டுள்ளது. முருகாற்றுப்படைக்கு
பண் வகுக்கப்படவில்i
பரிபாடலும்
கந்தபுராணமும்
பரிபாடலும்
கந்தபுராணமும் முருகனைச் சிவபெருமானின் மகன் எனக் கூறினும்
முருகனும் பிறந்த கதையைக் கூறுவதில் கந்தபுராணம் பரிபாடலிலிருந்து வேறுபடுகிறது. பிரமனும் தேவர்களும் கைலாயம்
சென்று சிவனைக் கண்டு தம்மைச்
சூரபதுமனின் கொடுமைகளினின்றும் விடுவிக்க வேண்டுமென வேண்டினர். ஐம்முகமுடைய சிவபெருவான், மேலும் ஒருமுகத்தைப் படைத்துக்கொண்டு
தம் ஆறுமுகங்களிலிருந்து ஆறு தீப்பொறிகளை உண்டாக்கினார்.
பின்னர் தீக்கடவுளையும், வாயுதேவனையும் நோக்கி இப்பொறிகளைக் கங்கயிற் கொண்டு
சேர்க்குமாறு கூறினார். அவர்கள் சேர்க்கவே கங்கை
அவற்றைச் சரவணப் பொய்கையில் சேர்த்தது.
அங்கு அவ்வாறு தீப்பொறியும் ஆறுகுழந்தைகளாக
மாறின.
திருமால்
உள்ளிட்ட தேவர்கள் வேண்டுகோளுக்கிணங்க கார்த்திகை மகளிர் அறுவரும் அக்குழந்தைகளை
வளர்த்தனர், உமையம்மை சரவணப் பொய்கை சென்று
ஆறு குழந்தைகளையும் ஒருசேரத்தழுவியவுடன் அவை ஆறுதலையும் பன்னிருகைகளுமுடைய
ஒரு குழந்தையாயின. இதுவே முருகன் பிறப்புப்
பற்றிய கந்தப்புராணக்கதையாகும்
நான்முகனைச்
சிறைப்படுத்திய குறிப்பு பரிபாடலில் இல்லை ஆனால் பிரணவப்
பொருளை நான்முகன் அறியாததால் முருகன் அவரைச் சிறை
வைத்ததாகக் கந்தப்புராணம் கூறுகிறது.
சூரபதுமனைக்
கொன்ற வரலாறு பரிபாடலில் காணப்படுவது
போன்று கந்தப்புராணத்தில் காணப்படவில்லை. முருகனது வேல் சூரனது மார்பை
இரு கூறாக்கியதெனவும்,
ஒரு கூறு மயிலாகவும், மற்றொன்று
சேவலாகவும் மாறின என்றும் அவற்றை
முருகன் ஊர்தியாகவும், கொடியாகவும் கொண்டான் எனவும் கந்தப்புராணம் கூறுகிறது.
இச்செய்தி பரிபாடலுள் வேறாகக் காணப்படுகிறது. கந்தவேளின்
ஊர்தியாக ஆடு நாரதர் செய்த
வேள்வியினின்றும் வந்தது எனக் கந்தபுராணம்
கூறுகிறது. யமன் ஆட்டினை முருகப்பெருமானுக்குப்
பரிசளித்ததாகப் பரிபாடல் கூறுகிறது. கந்தப்புராணம் மிகப் பெரிய நூலாகும். அது வீரகுவாவின் வரலாறு,
சூரபதுமனின் தம்பி தரகாசூரன் பற்றிய
கதை, சூரனின் பிறப்பு, அவன்
வேள்வியில் மறைந்து, பின்னர் உடனே தோன்றியது,
சுவர்க்கம், சத்தியவுலகம். வைகுந்தம் என்னும் உலகங்களுக்குச் சென்றது
முருகனுக்கும், சூரனுக்கும் நிகழ்ந்த பெரும் போர் முருகன்,
வள்ளி தேவசேனையாரை மணந்தது முதலியவற்றைக் கற்பனையுடன்
விரித்துரைக்கும்.
தொகுப்புரை
சங்க இலக்கியங்களில் மற்ற
நூல்களைக் காட்டிலும் பரிபாடலிலேயே கந்தவேளைப் பற்றிய செய்திகள் மிகுதியாகக்
காணக்கிடக்கின்றன. பரிபாடலில்
கந்தவேள் அனைவருக்கும் அருளும் தெய்வமாகவும்,
சூரனையழித்த தேவசேனாதிபதியாகவும் சித்திரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. பரிபாடலில் பரங்குன்றம் மட்டும் சிறப்பாகக் கூறப்பட்டுள்ளது.
கந்தபுராணம் கூறும் முருகனது பிறப்பு
வரலாறு பரிபாடலில் முற்றிலும் வேறுபட்டதாகக் காணப்படுகிறது.
No comments:
Post a Comment