Monday, January 04, 2021

புத்தாண்டு சிறப்புப் பட்டிமன்றம்


 சுகுணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை நடத்திய புத்தாண்டு சிறப்புப் பட்டிமன்றம்  ஊரடங்கு காலத்தில் உறவுகளைப் பேணிக்காத்தது ஆண்களா? பெண்களா?” என்னும் தலைப்பில் காலை 10.00 மணிக்கு கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. நிகழ்வுக்கு சுகுணா கல்வி நிறுவனங்களின் தலைவர் திருமிகு வி. லட்சுமிநாராயணன் அவர்கள் தலையேற்றார். சுகுணா கலை மற்றும் அறிவியல் கல்லூரித் தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் பூ.மு.அன்புசிவா அனைவரையும் வரவேற்றார். சுகுணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் முனைவர் ஆர். வி. வைத்தியநாதன் வாழ்த்துரை வழங்கினார். பட்டிமன்ற நடுவராக வழக்கறிஞர் முனைவர் எஸ்.டி.கலையமுதன் உரையாற்றினார். திருமதி. ஜெ. சந்திரப்பிரியா, கவிஞர் அன்புசிவா, முனைவர் சேமலாவசந்தா, முனைவர் பி.அனுராதா, திரு. மணிகண்டன், தீபக் ஆகியோர் தம் கருத்துக்களை வாதிட்டர். சுகுணா பொறியியல் கல்லூரி முதல்வர் முனைவர் மகுடீஸ்வரன், இயக்குநர் முனைவர் சேகர் மற்றும் 20க்கு மேற்பட்ட பேராசிரியர்கள் சமூக இடைவெளியுடன் கலந்து கொண்டர்.  கல்லூரி வணிகவியல் முதலாமாண்டு மாணவி எம். மகாலட்சுமி நன்றியுரையாற்றினார்.

கணவன் - மனைவி உறவைவிட உன்னதமான உறவு உண்டா?

கணவனுக்குத் தலைவலி. நெற்றியை அழுத்திப் பிடித்துக் கொண்டு சோபாவில் உட்கார்ந்திருக்கிறான். மனைவி கொஞ்சம் தைலம் எடுத்து வந்து, கணவன் அருகில் அம...