Friday, October 30, 2020
அப்துல்கலாம் நூல் வெளியிட்டு விழா
கோவை, சுகுணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியும் கோவை விஜயா பதிப்பகமும் இணைந்து 15.10.2020 காலை 10.00 மணிக்கு கல்லூரி வளாகத்தில் அப்துல்கலாம் பிறந்தநாள் விழாவை இளைஞர்கள் எழுச்சி நாளாக கொண்டாடப்பட்டது. விழாவிற்கு சுகுணா கல்வி நிறுவனங்களின் தலைவர் திருமிகு வி.லட்சுமிநாரயணசாமி அவர்கள் தலைமைதாங்கினார். விழாவுக்கு கோவை மாவட்டம் கூடுதல் காவல்துறை கண்காணிப்பாளர் திருமதி ஜி.எஸ். அனிதா அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு “அப்துல்கலாம் கவிதைகள்-கருத்துகள்” என்னும் நூலை வெளியிட்டு மாணவர்களின் எதிர்காலம், வாழ்க்கை முறை படிப்பு, மனம் சிந்தனை பற்றியும் சிறப்புரை ஆற்றினார். சுகுணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் முனைவர் ஆர்.கே. வைத்தியநாதன் வரவேற்புரை ஆற்றினார். சுகுணா கல்வி நிறுவனங்களின் தாளாளர் திருமதி எல். சுகுணா அவர்களும் கல்லூரி செயலர் ஸ்ரீகாந்கண்ணன் கல்லூரி இயக்குநர் முனைவர் சி. இராதாகிருஷ்ணன் தமிழ்த்துறைத்தலைவர் முனைவர் அன்புசிவா திரு. மு. வேலாயுதம் முனைவர் ச. கவிதா ஆகியோர். கலந்து கொண்டனர். மேலாண்மைத் துறைத்தலைவர் முனைவர் எல். லட்சுமணன் நன்றி கூறினார். சமூக இடைவெளியுடன் 20க்கு மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர்.
Wednesday, October 28, 2020
Tuesday, October 27, 2020
Subscribe to:
Posts (Atom)
கணவன் - மனைவி உறவைவிட உன்னதமான உறவு உண்டா?
கணவனுக்குத் தலைவலி. நெற்றியை அழுத்திப் பிடித்துக் கொண்டு சோபாவில் உட்கார்ந்திருக்கிறான். மனைவி கொஞ்சம் தைலம் எடுத்து வந்து, கணவன் அருகில் அம...
-
இமையம் மொழி என்ற தொடர்பு சாதனம் உருவானபோதே கதை சொல்வது என்ற செயலும் உருவாகியிருக்க வேண்டும். மனிதனால் எவ்வாறு பேசாமல் இருக்க ...
-
பேரா.முனைவர் பூ.மு.அன்புசிவா 149, ஹரிஸ்ரீகாடர்ன்ஸ் சுண்டப்பாளையம்(அ) கோயம்புத்தூர் - 641 007 பேச:098438 74545. பண்பாடும் மொழ...
-
தமிழிலக்கியச் சூழலில் இன்று உரக்க ஒலிக்கும் விவாதங்களிலொன்று பெண்கள் எழுதும் கவிதைகளைப் பற்றியது. எல்லா விவாதங்களையும் போல இதிலும் ம...