முனைவர் பூ.மு.அன்புசிவா
விருந்தோம்புதல் என்பதன் ஆங்கிலச் சொல்லான
ஹாஸ்பிட்டாலிட்டி என்பது இலத்தீன் மொழிச்
சொல்லான ஹாஸ்பெஸ் என்பதிலிருந்த பெறப்படுகிறது. இச்சொல்லோ அதிகாரம் கொள்ளல் எனப் பொருள்படுவதான
ஹாஸ்டிஸ் எனும் சொல்லில் உரைப்பதாயின்
அந்நியர்களின் பெருமகன் எனப் பொருள் சார்ந்து
அப்படியே உரைப்பதாயின் “அந்நியர்களின் பெருமகன் எனப் பொருளாகும் ஹோஸ்டிஸ்
என்னும் சொல்லைக் கூறலாம். இதற்கு ஈடுகட்டுவது அல்லது
இழப்பைச் சரிகட்டுவது எனப் பொருளாகும்.
“செல்விருந்து நோக்கி வருவிருந்து பார்த்திருப்பான்
நல்விருந்து வானத் தவர்க்கு”
வள்ளுவர் ஓர் அறத்தை வலியுறுத்தும்
மூன்று விதங்களில் இது ஒன்று. உனக்குப்
பெரிய நன்மைகள் விளையும் என்று ஆசை காட்டுவார்.
இதைச் செய்யாவிட்டால் உனக்கு இப்படிப்பட்ட துன்பம்
விளையும் என்று அச்சுருத்துவார். இப்படிச்
செய்தவனுக்கு அடுத்த உலகிலும் பயன்
விளையும் என்று மோட்ச உலகத்தைப்
பற்றி இறப்பிற்குப் பிறகு பெறப்போகும் நன்மைகள்
குறித்து பேசுவார். அம்மாவைப் போன்ற உள்ளம். மாதானுபங்கி
என்று அவருக்கு ஒரு பெயர் உண்டு.
இந்தக் காரணத்தினால் தான். நம்மை எப்படியாவது
ஓர் அறம் செய்ய வைத்துவிட
வேண்டும் என்ற பேராசை. அதை
விடுங்கள் இந்தக் காலத்துக்கு இது
பொருந்துமா என்று குறுக்குக் கேள்வி
போட்டார் நண்பர். பசி இருக்கின்ற
வரையில் நிச்சயம் இது பொருந்தும். உணவு
விடுதியில் உண்ண முடியாத சூழல்
சில சமயங்களில் இன்னும் ஏற்பட்டுக்கொண்டுதான் இருக்கிறது பசியோடு
தவிக்கும் ஒரு ஜீவனைச் சந்திக்க
நேரிடலாம். வள்ளுவர் அப்போது நம்மிடம் பேசுவார்.
செவியுள்ளவன் கேட்கக் கடவன். உணவு
இல்லாமல் உயிர்கள் இல்லை. தமிழர்
உணவைப் பலவகையாகப் படைத்துச் சுவைத்தனர.; விருந்தினரை விரும்பி உபசரிப்பது தலைசிறந்த பண்பாடு என்று கொண்டாடினர்.
உண்டிக்கு அழகு விருந்தோடு உண்ணல்
என்பது முதுமொழி காதல் வாழ்வு நெறியை
விரித்துச் சொல்வன கோவை இலக்கியங்கள்,
கோவை நூல்களில் ஒரு
துறையாக மனையாளின் ஊடலைத் தணிக்க அமைந்துள்ளது.
தலைவன் விருந்தினரை வீட்டுக்கு அழைத்து விடுவான். பிறகு
வழி என்ன? பிணக்கை மறந்து
வருவோரை இன்முகம் காட்டி வரவேற்கத் தானே
வேண்டும். சிறையிருந்த காலத்தில் சீதை தன் கணவன்
உணவருந்த சமைப்பதற்கோ விருந்தினரை வரவேற்கத் துணையாகவோ யாரும் இல்லாது துன்புறுவதை
எண்ணி வருந்தினாள் என்பார் கம்பர். சடையப்ப
வள்ளலின் விருந்தோம்பலில் திளைக்கும் நேரத்தில்தான் கம்பருக்கு இந்தக் கவிதைக் கரு
உருப்பெற்று இருக்க வேண்டும். வேட்டையிலும்
வேளாண்மையிலும் ஈடுபட்ட தமிழர்
தாவரபுலால் உணவுகளைப் புசித்தனர். அரிசி நெல் விளையாப்
புன்செய் நிலங்களில் தினை வரகு, சாமை,
கம்பு, இறுங்கு போன்றவை அடிப்படைச்
சோறு ஆயின. மிக முற்காலத்திலேயே
தமிழ்நாட்டில் மிளகு,சீரகம், கொத்துமல்லி,
கடுகு, கறிவேப்பிலை முதலிய மணப்பொருள்களால் தாளிதம்
செய்து புளிசேர்த்துக் குழம்பு சமைக்கப்பட்டது தாளிப்பு
இலக்கிய வழக்கில் குய் எனப்படும். குய்யுடை
அடிசில் என்பது புறநானூறு, மரக்கறி,
புலால் கறி உணவுகளுக்குச் சேர்க்ப்பட்ட
மணப்பொருள் பொடிகளுக்கு உலகெங்கும் கறிப்பொடி என்ற பெயரே வழங்கலாயிற்று.
நெல்லை வெந்நீரில் முக்கிக் காயவைத்து, இரும்பு உலக்கையால் குத்தி,
அரிசியாக்கி, நண்டுக் கறியுடன் உண்டனர்.
“இருங்காழ் உலக்கை இரும்பு முகம்
தேய்த்த
அவைப்புமாண்
அரிசி அமலை வெண்சோறு
சுவைதடதாள்
அலவன் கலவையொடு பெறுவீர்” – சிறுபாணாற்றுபடை
நண்டுக் குஞ்சுகள் மொய்ப்பது
போன்ற தினைச்சோhறும் ப+ளைப்போன்ற
வரகுச் சோறும் கொண்டனர். இருங்கிளை
சிறுபார்ப்பு அன்ன பசுந்தினை நெடுங்குரல்
ப+ளைப்பூவின் அன்ன
குநற்தாள் வரகு பயன்பட்டன. மான்
முயல், காடை, புறா, காட்டுப்
பன்றி, இன்னவற்றின் இறைச்சி நிறையக் கிடைத்த
காலத்தில் சுற்றத்தை அழைத்து பெருஞ்Nhற்றைப்
பகுத்துண்டனர். விருந்தினரைப் பாராட்டும் முகமாக ப+ங்கொத்து
ஈத்தனர் என்பதும் சங்கநூல்களில் காணக்கிடக்கிறது, உடும்புக்கறி சிறந்தது என்பது முழு உடும்பு
முக்கால் காடை, அரைக் கோழி,
கால் ஆடு என்னும் பழைய
தொடரால் அறியலாகும். நாய்களைப் பழக்கி உடும்பு வேட்டையாடினர்.
சேரமான் செல்வக் கடுங்கோ
வாழியாதன் கபிலர் கையைப் பற்றி
அவற்றின் மென்மைக்குக் காரணம் கேட்டான்” உனது
அவைக்களத்தே, ப+மணம் கமழும்
விறகுகளால் சமைத்த இனிய புலால்
அமுதத்தை உண்ணுவது தவிர உழகை;கும்
கடினத் தொழிலை இக்ககைகள் செய்வதில்லை
என நன்றி பாராட்டினர் அந்தணராகிய அப்பெரும்
புலவர்
“ப+நாற்றத்தப் புகை கொளீஇ ஊன்
தூவ
கறிசோறு
உண்டு வருந்து தொழில் அல்லது
பிறிது
தொழில் அறியாதாகாலின் நன்றும் மெல்லிய பெரும்”
என்பது
அவர் வாக்கு சமணத்தால் குறவரம்
போற்றப்பட்டுப் பின்னர் சிவநெறி தழைத்தபோது
புலால் உணவு கண்டிக்கப்பட்டன. திட
உணவு போலவே நீருணவும் இன்றியமையாதது.
கனிவருக்கம் நிறைந்த தமிழ் நிலங்களில்
அவற்றைச் சாறாகக் தீம்பிழி எந்திரங்கள்
பயன்பட்டன. பழச்சாறு சுவை நீர்ப் பானகம்
மட்டுமின்றக் கள்ளுண்ணலும் பெருந்தவறாகப் பழங்காலத்தில் கருதப்படவில்லை, கள்ளுக்குத் தேன் என்று பொருளும்
உண்டு
“நின்னைத்
தேன் என நினைத்தேன்”
மலைத் தேன் என
மலைத்தேன் என்று இதமாகப் பேசி
இதயம் கவர்ந்தவனிடம் கொல்லிமலைத் தேன்வேண்டினாள் ஒருத்தி
“நாள் உன்று சென்றதேன் என்று
அக்காதலி கேட்க தேன்காரன் தமிழ்த்தேன்
சொட்டச் சொட்டச் சொல்கிறான்
“ நேற்றே
மலைக்கு நடந்தேன் பல இடங்களில் அலைந்தேன்
கடைசியில்
பெரும் பாறைத்தேன் பார்த்தேன், சற்றே மலைத்தேன்,
ஒரு கொடியைப்பிடித்தேன், ஏறிச் சென்று கலைத்தேன்
கலயத்தில்
பிழிந்தேன், நன்றாக வடித்தேன்,
உள்ளம்
மலர்ந்தேன், மலர்த்தேன் சிறிது குடித்தேன்
களித்தேன்,
களைத்தேன், கால் நொந்தேன், அயர்ந்தேன்,
மறந்தேன், காலையில் எழுந்தேன், உன் விருப்பம் நினைத்தேன்,
தேனை அடைந்தேன், எடுத்தேன் எண்ணம் முடித்தேன், மகிழ்ந்தேன்,
விரைந்தேன், வந்தேன், உன்னைச் சேர்ந்தேன், சுவைத்தேன்
கொடுத்தேன், கோபித்த தேன்? குடித்தேன்”
கள் என்ற சொல் களித்தல்
என்னும் வினையடியாகப் பிறந்தது. பழங்கஞ்சியில் சுடச் சிறிதளவு கள்
உள்ளது. மேனாடுகளில் இருந்து இறக்குமதியான மதுவை
யவனர் நன்கலம் தந்தண்கமழ் தேறல்
என்றனர். கள் குறைவாக இருந்ததால்
தான் பருகாது ஒளவை போன்றவர்க்கு
அளிப்பான். ஆனால் மிகுதியாக இருப்பின்
பாணருடன் பகிர்ந்துண்டு பாடலில் திளைப்பான் என்பது
புறநானூறு. மூங்கில் குழாயில் மதுவைப் பெய்துவைத்தால் விளைச்சல்
ஏறும் என்பது நிலப்புதைப்பழுனிய மட்டின்
தேறல் போன்றவற்றால் புலனாகிறது. தேள் கடுப்பன்ன நாள்படு
தேறல். அரவு வெகுண்டன்ன தேறல்,
களமர்க் கரித்த விளையல வெங்கள்,
இன்கடுங்கள் என்பவற்றை வருந்தி உழகை;கும்
உழவர் பணிமுடிவில் விரும்பி மாந்தினர். நெல்முளையைக்
காயவைத்து, மாவாக்கி, அரிசி சேர்ததுக், கஞ்சி
வைத்துப், புதுக் கரத்தில் இட்டு,
தென்னம்பாளை செருகித் , தோப்பி என்னும் நெற்கள்
தயாரித்துக் கொள்றவைக்குப் படைத்துத் தாமும் அருந்தினர்.
சங்க காலம் தொடங்கி, இந்நாளும்
இருக்கும் நெற்கள் ஜப்பான நாட்டாரின்
சாக்கி அரிசிகளுக்;கு ஒப்பாகும். ஈழத்தில் மேனாட்டு மதுக்கடைகள் திறக்கப்டடுப் பெருவிலை விற்றது. அச்சமயத்தில்,
“இவ்வளவு போதும் எனக்கு” என்ற
ஈற்றடி கொடுத்து யாழ்ப்பாணம் ஈந்த மகாகவி உருத்திரமூர்த்தியைப்
பாடச் சொன்னார்கள். உடனே
அவர் செய்த கவியைக் காண்போம். காய்ச்சுச்
சாராம் கடைவிஸ்கி காசுக்கு ஏன? தீய்ச்சு
கறிச்சோற்றுத் தீயலுடன்-ஆய்ச்சியின் செவ்விளநீர்த தென்னையிலே சின்னைய்யன் சீவும் கள் இவ்வளவும்
போதும் எனக்கு குப்பிகளைத்திறந்தும்,
ஆடு கிடாய் அறுத்தும் - மட்டுவாய்
திறப்பவும், ஆமைவிடை வீழ்ப்பவும் வாழ்ந்த
தமிழரை, அவற்றை ஒழித்து அறநெறி
நிற்க வலியுறுத்தினார் வள்ளுவர். அறுசுவை
உணவு திடநிலையிலோ அல்லது நீரியலாகவோ விளங்கும். உணவு
உட்கொள்ளல் குடித்தல், உறிஞ்சல், நுங்கல், பருகல், மாந்தல். ஊண்ணல்,
தின்றல், நக்கல், அருந்தல், மெல்லல்,
விழுங்கல், துய்த்தல் எனப் பல வகைப்படும்.
சுமகாலத்திய
பயன்பாடு
சுமகால மேற்கத்திய உலகில்,
விருந்தோம்பல் என்பது இன்னமும் பாதுகாப்பு
மற்றும் உயிர் காத்தல் ஆகியவை
தொடர்பானவையாக இல்லாது, மாறாக நடத்தை முறைமைகள்
மற்றும் கேளிக்கை ஆகியன தொடர்பாகவே உள்ளன. இருப்பினும்,
விருந்தாளிகளை மதிப்பது, அவர்களின் தேவகளைப் பூர்த்தி செய்வது, அவர்களைத் தமக்கு சமதையாக நடத்துவது
போன்றவற்றை இன்னமும் அது ஈடுபடுத்துகிறது. அந்நியர்கள்
மற்றும் அவர்களுக்கு எதிராக தமது நண்பர்கள் அல்லது குழுவில் உள்ளோர்
ஆகியோருக்கு எந்த அளவு விருந்தோம்பல்
காட்ட வேண்டும், என்பதில் கலாச்சாரம் மற்றும் துணைக் கலாச்சாரங்களுக்கு
இடையில் வேறுபாடுகள் உள்ளன.
விருந்தோம்பல் சேவைத் தொழிற்துறை என்பது
உணவகங்கள், சூதாட்டக் களங்கள், சுற்றுலா விடுதிகள் ஆகியவற்றை உடபடுத்தும் இவை வெளியாட்களுக்கு வசதிகள்
மற்றும் வழி நடத்துதல்கள் ஆகியவற்றை
இவை வணிக
உறவின் ஒரு பகுதியாக அளிக்கின்றன.
ஹாஸ்பிடல் ஹாஸ்பைஸ் மற்றும் ஹாஸ்டல் என்னும்
சொற்கள் அனைத்துமே விருந்தோம்பல் எனப் பொருள்படுவதான ஹாஸ்பிடாலிட்டி
என்னும் சொல்லினின்றும் பெறப்பட்டவையே இந்த நிறுவனங்கள் தனிப்பட்ட
முறையில் கவனிப்பு அளிப்பதை இன்னும் கைக்கொண்டுள்ளன. விருந்தோம்பலின்
இத்தகைய பயன்பாட்டை ஆய்வதே விருந்தோம்பல் நெறிமுறைகள்
என்பதாகும்
உலகெங்கும்
விருந்தோம்பற் பண்பு
தேவதைகளை விருந்தோம்பும் ஆபிரகாம் மத்திய கிழக்குக் கலாச்சாரத்தில்
தம்மிடையே வாழும் அந்நியர்கள் மற்றும்
வெளிநாட்டினரை கவனித்துக் கொள்வதானது ஒரு கலாச்சார விதிமுறையாகவே
கருதப்பட்டது. பல விவிலிய ஆணைகனிலும்
உதாரணங்களிலும் இத்தகைய விதிமுறைகள் வெளியாகின்றன.
இதன் உச்சமான உதாரணம் விவிலியத்தின்
ஆதி ஆகமத்தில் காணப்படுகிறது. தேவதைகளின் ஒரு குழுவினை லோத்
விருந்தோம்புகிறார். (அச்சமயம் அவர்கள் மனிதர்கள் என்றே
அவர் நினைக்கிறார்) கும்பல் ஒன்று அவர்களை
வன்புணர்ச்சி செய்ய முயலும்போது அவர்களுக்குப்
பதிலாகத் தமது மகளிரை எடுத்துக்
கொள்ளுமாறு அவர் வேண்டுகிறார். இவர்களை
ஒன்றும் செய்யாதீர்கள். அவர்கள் பாதுகாப்பு வேண்டி
என் கூரையின் கீழ் வந்திருக்கின்றனர் என
அவர் கூறுகிறார். விருந்தாளி மற்றும் புரவலர் ஆகிய
இருவரின் கடப்பாடுகளுமே கண்டிப்பானவை ஒரே கூரையின் கீழ்
உப்பைத் தின்பதன் மூலம் இந்தப் பிணைப்பு
உருவாகிறது. ஒரு அராபியப் புனைவின்படி
ஒரு வீட்டில் சீனி என எண்ணி
உப்பைத் தின்று விட்ட திருடன்
ஒருவன். அது உப்பு என்று
அறிந்ததும் தான் திருடிய அனைத்தயும்
அங்கேயே விட்டு விட்டுச் செல்கிறான்.
விருந்தோம்பல்
நெறி முறைகள்
“விருந்தோம்பல்
நெறிமுறைகள் என்னும் சொற்றொடரானது வேறுபட்ட
ஆயினும் ஒன்றுக்கொன்று தொடர்புடைய இரு கல்விசார் துறைகளைக்
குறிப்பதாக அமைகிறது.
1. விருந்தோம்ல் உறவுகள் மற்றும் நடைமுறைகளில்
ஒழுக்கம் சார் கட்டுப்பாடுகள் தத்துவ
இயல் ஆய்வு.
2. வர்த்த ரீதியான விருந்தோம்பல்
மற்றும் சுற்றுலாத் தொழிற்துறைகளின் வணிக நெறிமுறைகளை குவிமைப்படுத்தும்
பிரிவு.
நெறிமுறைகள்
என்பன செய்யப்பட்டவை எவை என்பதற்கும் அப்பாற்சென்று
எவை செய்யப்பட வேண்டும் என உரைப்பவை விருந்தோம்பல்
நெறிமுறைகள், செயற்பாடுகள், மற்றும் கோட்பாடுகள் உறவுகள்
ஆகியவற்றின் நுண்ணிய பகுப்பாய்வின் மூலமாக
விரந்தோம்பற் கோட்பாடுகள் மற்றும் விதிகளும் பெறப்படுகின்றன.
இறுதியாக விருந்தோம்பற் கோட்பாடுகள் வர்த்தக மற்றும் வர்த்தகமல்லாத
நிலைகளில் பயன்படுத்தப்படுகின்றன.
நடத்தையின் ஒரு பொது விதியாக
வரலாறு எங்கிலும் விருந்தோம்பல் என்பதனை ஒரு சட்டமாக
ஒரு நெறிமுறையாக ஒரு கொள்கையாக கடமையாக
குறியீடாக பண்பாகவே கருதப்பட்டு வந்துள்ளது. விருந்தாளிகள் புரவலர்கள் குடிமக்கள் மற்றும் அந்நியர்கள் ஆகியோருக்கு
இடையிலான தெளிவற்ற உறவு நிலைகளைப் புரிந்து
கொள்ளும் விதமாக இவை உருவாயின
பல்வேறு கலாச்சாரங்களிலும் பண்டைய காலம் தொட்டே
பரவரலாக இருந்து வந்திருப்பினும், விருந்தோம்பல்
என்னும் கருத்துரு ஒழுக்கத் தத்துவ இயலாளார்களின் கவனத்தை
மிகக் குறைந்த அளவே பெற்று
வந்துள்ளது. நல்லது தீயது முறையான
மற்றும் தவறானது ஆகியவை தொடர்பான
இதர நெறிக் கோட்பாடுகளிலேயே அவர்கள்
தங்களது கவனத்தைக் குவிமையப்படுத்தி வந்துள்ளனர். இருப்பினும் தவிர்க்க இயலாத ஒழுக்கம்சார் அதிகாரமாக
அல்லது ஒரு நெறிமுறை நடத்தைகளுக்கும்
இது முற்செல்வதாக அமைந்திருந்தது.. பண்டைய மத்திய கிழக்குப்
பகுதிகளிலும் கிரேக்கம், ரோமன் கலாச்சாரங்களிலும் விருந்தோம்பல்
நெறிமுறை என்பது புரவலர் மற்றும்
விருந்தாளி ஆகிய இருவரிடம் இருந்தும்
குறிப்பிட்ட நடத்தை முறைகளை எதிர்பார்ப்தாக
இருந்தன. ஒரு எடுத்துக் காட்டு
தேவைப்பட்ட எவருக்கும் உண்டியும் உறைவிடமும் அளிப்பதை வீரப் பெருமகனார் பேராண்மைப்
பண்பு என விளங்குதாகக் கொண்டனர்.
தற்காலத்தில் வர்த்தக விருந்தோம்பற் தொழிற்
துறையிலும் இத்தகைய பொதுத் தர
நிலைப்ப:டுத்திய நடத்தைகள் நிலவி
வருகின்றன. விருந்தோம்பல் என்பதன் பண்டைய கருத்துருக்களும்
நடைமுறைகளும் இன்றைய நடைமுறை மற்றும்
பொதுத் தரநிலைகளை அறிவிப்பதாக உள்ளன.
இந்தியாவில்
விருந்தோம்பல்.
உலகில் மிகப் பழமையான
நாகரிங்களில் இந்திய நாகரிகமும் ஒன்று
தொன்மையான ஏனைய கலாச்சாரங்களைப் போலவே
விருந்தோம்பலையும் உள்ளிட்ட பல அருமையான புனைவுகளை
முறையயில் இந்தியக் கலாச்சாரமும் கொண்டள்ளது. மூடன் ஒருவன் அழையாத
விருந்தாளியுடன் தனது சிறு உண்டியை
மறுபேச்சின்றிப் பகிர்ந்து கொள்கையில் தன்னிடம் வந்த விருந்தாளி மாறுவேடம்
ப+ண்ட இறைவன்
என்பதைக் கண்டு கொள்கிறான். அவனது
தாராள மனதிற்காக் கடவுள் அவனுக்கு மிகுந்த
செல்வமளிக்கிறார். பசியுடன் இருக்கும் எவரும் உண்பதற்காக பெண்
ஒருத்தி தன்னிடம் இருக்கும் கிச்சடி அனைத்தையும் சமைத்து
அளிக்கிறாள். ஒரு நாள் அவனிடம்
இருக்கும் உணவுப் பண்டங்கள் அனைத்தும்
தீர்ந்து விடவே இறுதியாக பசியுடன்
இருக்கும் ஒருவனுக்கு தன் உணவையே அவள்
அளிக்கையில் இறைவனிடம் இருந்து என்றும் குன்றாது
நிறைந்தே இருக்கும் கிச்சடி கொண்ட பாத்திரம்
ஒன்றைப் பெறுகிறாள். குழந்தைகளாகத் நாம் இருந்த காலம்
முதல் இத்தகைய கதைகளைக் கேட்டு
வளரும் பெரும்பாலான இந்தியர்கள் விருந்தாளியே ஆண்டவன் எனப் பொருள்படும்
“அதிதி தேவோ பவ” என்னும்
தத்துவத்தில் நம்பிக்கை கொண்டுள்ளனர் இதிலிருந்தே இல்லத்திலும் சமூக நிகழ்வுகளிலும் விருந்தாளிகளின்
பால் அன்புடன் கருணையுடனும் நடந்து கொள்ளும் இந்திய
அணுகு முறையானது உருவானது.
‘சூலுடன் தலைசாய் செந்நெல்
அரிசியும்
மாலின் வண்ணமாம் மையார்
உழுந்தும்
பாலின் நிறம்போல்படிய அரைந்து
ஓர்நாள் நன்கு புளித்து
வார்க்கத் தோசை வனப்பொடும் வருமே
கனியிடை ஏறிய சுளையும்
முற்றல் கழையிடை ஏறிய
தேனும்
காய்ச்சுப் பாகிடை ஏறிய சுவையும்
நனிபசுப் பொழியும் பாலும்
தென்னை நல்கிய குளிர்
இளநீரும்
செந்நெல் மாற்றிய சோறும்
தன்னிகர் தானியம் முதிரை
கட்டித் தயிரோடு மிளகின்
சாறும்
கானில் நன்மதுரம் செய்
கிழங்கும்
நாவில் இனித்திடும் அப்பமும்
நம் எல்லாரையும் நலமுடன் வளர்ப்பன என்று
பாரதிதாசன் பாடுகிறார்.
இந்தியாவின் ஏனைய மாநிலங்கள் இலங்கை
சிங்கை மலேசியா மேல்நாடுகளின் சமையல்
முறைகள் தமிழரின் பரம்பரை உணவு வழக்கங்களோடு
சேர்ந்து பெருகி வருகின்றன. இன்று
நம் உணவு விதவிதமான முறைகளால்
சமைக்கப்படுகிறது அவித்தல், இடித்தல், கலத்தல், காய்ச்சல், கிண்டல், கிளருதல், சுடுதல், துகைத்தல், பிசைதல், பிழிதல். பொங்கல், பொரித்தல், மசித்தல், வடித்தல் வறுத்தல், வதக்கல், வாட்டல், வார்த்தல் போன்ற வகைகள் அவற்றின்பால்
அடங்கும் உண்டி உடை உறைவிடம்
என்னும் தேவைகளுள் தலைமையிடம் வகிக்கும் உணவு செல்வத்தால் தமிழரின்
வாழ்க்கை அனுபவமும் இரசனையும் நயமும் விளங்குகிறது. இந்த
நூற்றாண்டின் ஆரம்பத்தில் கூட விருந்து என்ற
சொல் இன்னொரு பொருளிலும் பயன்பட்டது.
இன்றைக்கு நாம் அந்தப் பொருளை
ஏறத்தாழ மறந்துவிட்டோம். விருந்து என்ற சொல்லுக்கு புதுமை
என்று பொருள் இந்தச் சொல்லுக்கு
முதல்முதலில் இருந்த பொருளும் இதுதான்
“வேடர்வா ராத விருந்துத் திருநாளில்
என்று குயில்பாட்டில் பாரதி எழுதியிருப்பதைப் பார்க்கலாம்.
வேடர்கள் வராத புதுமையான நாள்
என்று பொருள். விருந்தளித்தல் விருந்தோம்பல்
என்றால் நம்மைப் பொறுத்தவரையில் வீட்டுக்கு
வரும் மாமா சித்தப்பா என்று உறவினர்களை
உபசரித்தல் சிதைந்து வரும் கூட்டுக் குடும்ப
அமைப்பில் அண்ணணும் தம்பியும் கூட ஒருவன் வீட்டில்
இன்னொருவன் விருந்தாளிதான். ஆனால் உண்மையில் விருந்தோம்பல்
என்பது உறவினருக்கு உணவளித்தல் இல்லை.
நடைமுறையில்
உள்ள விருந்தோம்புதல் நெறிமுறைகள்
வணிக விருந்தோம்புதல் அமைப்பில்
நெறிமுறைகள் செயல்முறையாக்கம் செய்த நெறிமுறைகள் என்பது
நெறிமுறைகள் சார் கோட்பாடுகள் மற்றும்
தீர்ப்புகள் ஆகியவற்றை ஆராய்ச்சியாளர்கள் தமது பயன்பாட்டில் அமைக்கும்
முறைமை சார்ந்த கிளையாகும் பயன்பாட்டு
நெறிமுறை என்பதிலும் பல கிளைகள் உள்ளன.
வணிக நெறிமுறைகள் சுற்றுச் சூழல் நெறிமுறைகள் என்பன
போன்று பல உள்ளன. விருந்தோம்பல்
நெறிமுறை என்பது இத்தகைய பயன்பாட்டு
நெரிமறையின் ஒரு பிரிவாகும். நடைமுறையின்
ஒரு பிரிவாகும் நடைமுறையில் பயன்பாட்டு நெறிமுறைகளின் வேறு பல பிரிவுகளையும்
இது இணைத்துக் கொள்கிறது வர்த்தக நெறிமுறை சார்ந்த குழப்பங்கள்
பல உருவாகின்றன. தொழில் முறை நடவடிக்கைகளின்
பலனாக சுற்றுச் சூழல் என்னவாகும்? புரவலர்
சமூகத்தின் நிலை என்னவாகும்? பகுதி
சார்ந்த பொருளாதாரத்தின் நிலை என்னவாகும்? தங்களது
பகுதி சார்ந்த சமூகத்தின் மீது
குடிமக்களின் மனப்போக்கு மற்றும் வெளி நபர்கள்
சுற்றுலாப் பயணிகள் மற்றும் விருந்தாளிகளின்
மீதான அவர்களது மனப்போக்கு
ஆகியவை எவ்வாறு இருக்கும், செயற்பாட்டு
நெறிமுறையாக உள்ள விருந்தோம்பல் நெறிமுறைகள்
இத்தகைய வினாக்களைத் தொடுக்கலாம்.
விருந்தோம்பல் மற்றும் சுற்றுலா ஆகிய
இரண்டும் இணைந்து உலகின் மிகப்
பெரும் தொழில் துறையினை உருவாக்குவதால்
சிறப்பான மற்றும் மோசமான நடத்தை
ஆகிய இரண்டிற்குமே வாய்ப்புகள் மிகுதியாக உள்ளன. இதைப் போல
விருந்தோம்பல் மற்றும் சுற்றுலாத் துறை
செயற்பாட்டாளர்கள் முறையான அல்லது தவறான
செயல் முறைகளில் ஈடுபடுவதற்கும் அநேக வாய்ப்புகள் உள்ளன.
பணியாளர் கையேடுகள் (நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ) பொதுத்தர
நிலைப்படுத்தப்பட்ட தொழில் முறை நடத்தைக்
கோட்பாடுகள் பல வழிகள் மூலமாக
இத்தொழில்களில் நெறிமுறைகள் வழி நடத்தப்படலாம்.
உலக சுற்றுலா நிறுவனம்
( றுழசடன வுழரசளைஅ ழுசபயnணையவழைn) இத்தொழிலுக்காக
நெறிமுறைக்கோட்பாடு ஒன்றினை முன்வைத்துள்ளது இருப்பினும்
உலகளாவியதான செல்லுமை கொண்டதாக விருந்தோம்பல் துறைக்கான கோட்பாடுகள் ஏதும் தற்போது இல்லை
அண்மையில் வர்த்தகப் பின்னணியில் நெறிமுறைகள் பற்றி பல கல்விச்சார்
புத்தகங்கள் பிரசுரமாகி உள்ளன. இவையே விருந்தோம்பல்
தொடர்பான படிப்புகளில் பயன்படுகின்றன.
அன்னம் சோறு அல்லவா?
இறக்கும் சாகும் என்பன ஒரே
பொருளை உடையன சாகும் என்பதன்
சுருக்கம். சாம் பார் என்பதற்குப்
ப+மி என்று
அர்த்தம் ஆக சாம்பார் எனில்
அறக்கும் பூமி . சாம்பார்
இல்லாவிட்டால் ஏங்கி
ஏங்கி இறக்கும் பூமி என்று வேடிக்கையாகச்
சொல்லாகும். சுவை என்பதன் வடசொல்
இரசம், பாய,; ஆடு… பாய்கிற
ஆடு அன்று. ஆடு வடமொழியில்
அசம் ஆகும். இனிய பாயசத்தைப்
பாயாடு என்று சொற்சிலம்பம் ஆடுகிறார்
புலவர். நவகிரகங்களில் மெதுவாகச் சூரியனைச் சுற்றி வருவது சனி
மந்தன் என்ற பெயர் சனிக்கோளுக்கு
உண்டு. ப+சனியைப் பிரித்து
மலர் மந்தன் என்று மாற்றுச்
சொல்லமை தருகிறார் முனிவர். விடுகதை அவிழ்ந்தால் விருந்துப்
பட்டியல் நாவில் சுவைய+ர
வைக்கிறது குழந்தைகள் முதியோர் நோயுற்றோர் உட்பட அனைவருக்கும் சிறந்த
உணவு எளிதில் செரிக்கும் இட்டளி.
இட்லி என்பது தற்கால வழக்கு
இட்லி மாவில் செய்யப்படும் தோசையும்
புகழ்பெற்றது. செந்நெல்லியில் தீட்டிய அரிசியையும் கரிய
உறையை நீக்கி அழுந்தையும் சேர்த்து
அரைத்து மாவிலிருந்து
தோசையை இரும்புக்கல்லில் ஒட்டாது உருவாக்கும் கலை
தமிழச்சிகளுக்குக் கைவந்தது.
சங்க காலம் தொடங்கி
இந்நாளும் இருக்கும் நெற்கள் ஜப்பான் நாட்டாரின்
சாக்கி அரிசிக்களுக்கு ஒப்பாகும.; சில ஆண்டுகளுக்கு முன்னே
ஈழத்தில் மேனாட்டு மதுக்கடைகள் திறக்கப்பட்டு பெருவிலை விற்றது. அச்சமயத்தில் இவ்வளவு போதும் எனக்கு
என்ற ஈற்றடி கொடுத்து யாழ்ப்பாணம்
ஈந்த மகாகவி உருத்திமூர்த்தியைப் பர்டச்
சொன்னார்கள். உடனே அவர் செய்த
கவிதையைக் காண்போம் காய்ச்சும் சாராயமும் கடைவிஸ்கி காசுக்கு ஏன்? தீய்ச்ச கநிச்சோற்றுத்
தீயலுடன் ஆய்ச்சியின் செவ்விளநீர்த் தென்னையிலே சின்னையன் சீவும்கள் இவ்வளவும் போதும் எனக்கு குப்பிகளைத்
திறந்தும் ஆடு கிடாய் அறுத்தும்
மட்டுவாய திறப்பவும் ஆமைவிட வீழ்ப்பவும் வாழ்ந்த
தமிழரை அற்றை ஒழித்து அறநெறி
நிற் வலியுறுத்தினார் வள்ளுவர். அறுசுவை உணவு திடநிலையிலோ
அல்லது நீரியலாகவோ வியங்கும் உணவு உட்கொள்ளல், குடித்தல்,
உறிஞ்சுதல், நுங்கல் பருகல், மாந்தல்,
உண்ணல், தின்றல், நக்கல், அருந்தல், மெல்லல்,
வழுங்கல், துய்த்தல் எனப் பலவகைப் படும்
புதிதாகத் திருமணம் நிகழ்வுற்ற பெண் புகைபடிந்த கண்ணோடும்,
சாந்தும் கறியும்படிந்த முந்தானையோடும் அக்கறையுடன் முயன்று தயிரால் ஆன
புளிக்குழம்பு வைத்தாள். குழம்பு நன்றாக உள்ளது
என்று கணவன் சொன்னதும், புகை
உண்டிருந்த கண்கள் மலர்ந்து முகத்தில்
ஒளி வீசியதாம். இது குநற்தொகையில் வரும்
ஓர் அருமை ஓவியம் அவ்வைப்
பெருமாட்டி இளநங்கை ஒருவளிடம் அடகுக்
கீரையை உண்டு விட்டு அமுதம்
தான் கீரை அல்ல என்று
வாழ்த்தினார்.
No comments:
Post a Comment