Saturday, November 28, 2020

ஆதலினால் காதல் செய்வீர்...

'காதலித்துப் பார் உன்னைச் சுற்றி 

ஒளிவட்டம் தோன்றும் 

கண்ணிரண்டும் ஒளிகொள்ளும்...'

- வைரமுத்துவின் வாக்கு சத்தியம். காதல் வந்துவிட்டால்,  உடல் நலம், மன நலம் இரண்டும் அழகாகி உங்களைச் சுற்றி ஒளி வட்டம் தோன்றும் என்கிறார்கள் விஞ்ஞானிகள். 'காதலிப்பவர்களுக்கும் மகிழ்ச்சியான இல்வாழ்க்கையில் இருப்பவர்களுக்கும், மன அழுத்தம், மாரடைப்பு போன்ற பிரச்னைகள் வருவதற்கான சாத்தியங்கள் குறைவு’ என்கிறது அறிவியல்.

அமெரிக்காவின் 'வடக்கு கரோலினா பல்கலைக் கழகம்’ மேற்கொண்ட ஆய்வின் முடிவில், பெண்கள் தங்களது துணைவருடன் மகிழ்ச்சியாக இருக்கும்போது, அவர்களின் உடலில் ஆக்ஸிடோஸின் எனும் ஹார்மோன் அதிக அளவில் சுரக்கிறது என்பது நிரூபிக்கப்பட்டு இருக்கிறது. இதனால், 'சமூகத்தோடு இயைந்து வாழ்கிற மனப் பக்குவம் கிடைப்பதோடு, ரத்த நாளங்களில் சீரான ரத்த ஓட்டம் நிகழ்ந்து ரத்த அழுத்தம் வரும் வாய்ப்பும் குறைகிறது’ என்று இந்த ஆய்வு காதலுக்குப் பச்சைக் கொடி காட்டுகிறது. கூடவே,

'மன அழுத்தம், நோய் எதிர்ப்பு சக்தியைக் குறைக்கும் வல்லமைகொண்டது. இதனால், உடல் நலக் குறைபாடுகளும் மன நலக் குறைபாடுகளும் தோன்றுகின்றன. நீங்கள் யாரையாவது விரும்பும்போது அல்லது விரும்பப்படும்போது, மன அழுத்தம் உங்களுக்குள் எட்டிப்பார்க்கும் வாய்ப்புகள் மிகக் குறைவு. மனதுக்குப் பிடித்தவர் உங்களுடன் இருக்கும்போது எதையும் சமாளிக்க முடியும் என்ற தைரியத்தையும் தன்னம்பிக்கையையும் காதல் கொடுக்கிறது'' என்கிறார்கள்.

வெளியூர் விஷயங்கள் இப்படி இருக்க, நம் ஊரிலும் காதலைக் கொண்டாடும் குரல்கள் காலங்காலமாக ஒலித்துக் கொண்டேதான் இருக்கின்றன.

'காதலினால் மானுடர்க்குக் கவிதை யுண்டாம்,

கானமுண்டாம் சிற்பமுதற் கலைக ளுண்டாம்;

ஆதலினால் காதல் செய்வீர் உலகத்தீரே...

அஃதன்றோ இவ்வுலகத் தலைமை யின்பம்?

காதலினால் சாகாமா லிருத்தல் கூடும்,

கவலைபோம், அதனாலே மரணம் பொய்யாம்’

என்று பாரதியார் காதலையே பிரிஸ்கிரிப்ஷனாக எழுதிக் கொடுத்ததில் இருந்து, 'லவ் பண்ணுங்க ஸார்... லைஃப் நல்லாருக்கும்!’ என்று இன்றைய திரைப்படங்கள் வரை கலை உலகம் காதலைத் தீவிரமாக ஆதரிக்கிறது. இந்தக் கவிதைகளும் வசனங்களும் ஆய்வுகளும் எந்த அளவுக்கு நடைமுறைக்குப் பொருந்தும்? காதல் என்ற ஒன்று வாழ்க்கையில் நிஜமாகவே மாயாஜாலங்களை நிகழ்த்திவிடுமா? மருத்துவம் என்ன சொல்கிறது?

மன நல மருத்துவர் ஷாலினியும் இதை ஆமோதிக்கிறார்...

''காதலில்தான் ஓர் ஆணும் பெண்ணும் உச்சகட்ட முதிர்ச்சி அடைகிறார்கள். அது வரை அவர்கள் ஒருவருக்கு மகளாகவோ, மகனாகவோ, சகோதர உறவிலோ, நட்பாகவோதான் இருந்திருப்பார்கள். இந்த வழக்கமான உறவில் யாரும் யாருக்காகவும் எதையும் விட்டுக்கொடுக்கத் தேவை இல்லை. தன்னைத்தானே மாற்றிக் கொள்ளவும் வேண்டியது இல்லை. அந்தந்த உறவுகளை அப்படியே ஏற்றுக் கொண்டு விடுவார்கள். ஆனால், காதலில்தான் ஒருவருக்காக நம்மை மாற்றிக்கொள்கிறோம். விட்டுக்கொடுக்கிறோம். தனிப்பட்ட முறையில் தன்னைத்தானே செதுக்கிக்கொண்டு முதிர்ச்சி அடைகிற கட்டம் இது.

இந்த முதிர்ச்சியால் எனக்கும் ஒருவர் இருக்கிறார் என்ற நம்பிக்கை அதிகமாகும். இந்த நம்பிக்கை அளவு அதிகமாகும்போது, துணிச்சலான முடிவு எடுக்கிற தைரியம் வந்துவிடும். சுய மதிப்பு அதிகமாகும். நன்றாக ஆடை அணிந்துகொள்வதில் ஆரம்பித்து, ஒவ்வொரு விஷயத்திலும் தன்னை மேம்படுத்திக் கொள்வது நிகழும். இந்த மன எழுச்சி ஓர் ஆண் நண்பன் சொல்வதாலோ அல்லது ஒரு பெண் தோழி சொல்வதாலோகூட ஏற்படாது; காதலில் மட்டும்தான் இது சாத்தியம். சாதிக்க வேண்டும் என்கிற  ஊக்கம் ஒரு புத்தகம் மூலமாகவோ, தன்னம்பிக்கை சொற்பொழிவைக் கேட்பதாலோகூட கிடைக்கலாம். ஆனால், காதலில் கிடைக்கும் ஊக்கம் போதை கலந்தது. அதற்கு சக்தி அதிகம்.

ஒரு பெண் ஒரு பையனைப் பார்த்து ஆசையாகச் சிரித்துவிட்டால், அவனுக்கு டெஸ்டோஸ்டிரான் ஹார்மோன் அதிகமாகச் சுரக்க ஆரம்பிக்கும். தான் ஒரு சாகசக்காரன் என்பதை அந்தப் பெண் முன்னால் நிரூபிக்க வேண்டும் என்ற செயல்திறன் பல மடங்கு அதிகமாகும். இளவட்டக் கல்லைத் தூக்குவது போன்ற விஷயங்கள் எல்லாம்கூட காதல் கொடுக்கும் மனோபலத்தினால் ஏற்படுவதுதான். 'கண்ணின் கடைப்பார்வை காதலியர் காட்டிவிட்டால், மண்ணில் குமரர்க்கு மாமலையும் ஓர் கடுகாம்’ என்று கவிதை உலகம் சொல்வதும் இதைத்தான்.

காதலால் ஏற்படுகிற இந்த சக்தியை, நல்ல லட்சியங்களை சாதிக்கப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அதேபோல, காதல் வயப்பட்ட பெண்ணுக்கு ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன் அதிகமாகச் சுரக்கும்.  ஆக்ஸிடோஸின், எல்.ஹெச். (LH), எஃப்.எஸ்.ஹெச். (FSH) போன்ற ஹார்மோன்களும் அதிகமாகச் சுரக்கும். இதனால் மன அழுத்தம் உருவாகும் வாய்ப்புகள் இல்லை.

நம் மனசு, மூளை, உடல் மூன்றும் ஒன்றுக்கொன்று சம்பந்தப்பட்டவை. மனது நன்றாக இருந்தால் மூளையில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகும். ஒரு நோய் நினைத்தாலும் தாக்க முடியாது. மன அழுத்தம் அதிகமாகும்போது, நோய் எதிர்ப்பு சக்தியை உடல் இழந்துவிடும். அதன் தொடர்ச்சியாகத்தான் ஆஸ்துமா, முடி கொட்டுவது,  ரத்தக் கொதிப்பு, மாரடைப்பு எல்லாம் வருகின்றன.

உங்களுக்கென்று ஓர் உறவு இருக்கும்போது, இந்த மன அழுத்தம் வர வாய்ப்பு இல்லை. அதனால்தான் எங்களிடம் வருகிற நோயாளிகளிடம் 'அன்பு செலுத்த உங்களுக்கு உறவுகளோ, சொந்தங்களோ, நண்பர்களோ இல்லாவிட்டால், குறைந்தபட்சம் ஒரு நாயோ, ஒரு பூனைக்குட்டியோ வளர்த்துப் பாருங்கள்... அட்லீஸ்ட் ஒரு செடியாவது வளர்த்து அந்தச் செடியுடன் பேசுங்கள்’ என்று சொல்வோம்.

மனதோடு அறிவும் ஒன்றிணைந்து இயங்கும் போதுதான், வாழ்க்கை வசீகரிக்கும்.  எனவே, அன்பு செலுத்துவோம்!''

உங்களைச் சுற்றியும்

ஒளிவட்டம் தோன்றட்டும்!

 

'உன்னைவிட்டு விலகுவதும் இல்லை. உன்னைக் கைவிடுவதும் இல்லை’ என்ற பைபிள் வசனம் காதலுக்கும் பொருந்தும். உனக்காக நான் இருக்கிறேன் என்பதை உணர்த்திக்கொண்டே இருப்பது முக்கியம்.

உங்கள் பார்ட்னரை மனதுக்குள் கோயில் கட்டிக் கும்பிடுவது எல்லாம் சரிதான். ஆனால், அதை ராணுவ ரகசியம்போல் வைத்துக்கொண்டிராமல், அவ்வப்போது வெளிப்படுத்துங்கள்.

அவசர உலகம்தான். எல்லோருக்கும் எட்டிப் பிடிக்க உயரங்களும், சமாளிப்பதற்கு பொருளாதாரச் சிக்கல்களும் இருக்கின்றனதான். ஆனால், இந்த விவகாரங்கள் காதல் மேல் கைவைத்துவிடாமல் கவனமாக இருங்கள். காதலுக்கென்று கொஞ்சமாவது நேரம் ஒதுக்குங்கள்.

காதலர் மேல் அன்பு காட்டுவதைப் போல, காதலரின் உறவினர்களிடமும் அன்பு காட்டினால், உங்கள் மேல் உள்ள பிரியம் அதிகரிக்கும்.  

உங்களின் திருமண நாள், பார்ட்னரின் பிறந்த நாள், காதலர் தினம் போன்ற முக்கிய நாட்களை நினைவுவைத்து சின்னச் சின்னப் பரிசுப் பொருட்களைக் கொடுத்துப் பாருங்கள். உங்களது பார்ட்னர் அன்பால் திக்குமுக்காடுவார்! 

இளைஞர்களுக்கான வாழ்க்கை திறன்கள்

1. தன்னைத்தானே அறிதல்.

2. தகவல் தொடர்பாற்றல்.

3. பிறருடன் உறவு பேணும் திறன்.

4. உணர்ச்சிகளைக் கையாளும் திறன்.

5. பிறரைப் புரிந்து கொள்ளும் திறன்.

6. ஆழ்ந்து சிந்திக்கும் திறன்.

7. மாறுபட்டு சிந்திக்கும் திறன்.

8. முடிவெடுக்கும் திறன்.

9. பிரச்சனையைத் தீர்க்கும் திறன்.

10. மன அழுத்த மேலாண்மை.

அப்பாவாகப்போகும் ஆண்களுக்கு அருமையான ஆலோசனைகள்!

தாயாகும் பூரிப்பு ஒவ்வொரு பெண்ணுக்கும் பேரின்ப நிகழ்வு. கருத்தரித்த நாள் தொடங்கி குழந்தையை பூமிப் பந்தில் தவழவிடும் நாள் வரை அவர்கள் படும் சிரமங்களும் குறைவு இல்லை. பிரசவத்தோடு பெண்ணின் கஷ்டங்கள் தீர்ந்துவிடுகின்றனவா என்ன? அந்தக் குழந்தையைப் பராமரித்துப் பாதுகாக்கும் அத்தனை வேலைகளும் தாய்க்குத்தானா? அப்போ... அப்பாக்களுக்கு? மனைவி கருவுற்றபோதும், பிரசவித்தபோதும் சக நண்பர்களுக்கு 'பார்ட்டி’ கொடுப்பதோடு சரியா? 

''குழந்தையைப் பெற்றெடுப்பது முதல் பேணிக்காப்பது வரை தாய்க்கு நிகரான பணியைத் தந்தையும் செய்ய வேண்டும். மனைவியுடன் கூடவே இருந்து குழந்தையைக் கவனிக்க வேண்டிய பெரும் பொறுப்பு கணவனுக்கு உண்டு'' எனச் சொல்லும் முதன்மைக் குடியுரிமை (மகப்பேறு) மருத்துவர் சித்ரா செல்வமணி, மனைவியின் கர்ப்பகாலத்தில் கணவர்எப்படி நடந்துகொள்ளவேண்டும் என்பதையும், தந்தையாகப் போகும் தன்னிகரில்லா உறவை, வரவேற்க எப்படிக் காத்திருக்கவேண்டும் என்பதையும் விளக்கினார்.

''இந்த விஷயத்தில் திருமணம் ஆனதில் இருந்தே ஆண்களின் பங்கும் தொடங்கிவிடுகிறது.

 முதலில் இப்போது நமக்குக் குழந்தை அவசியம்தானா என்பதைத் தம்பதிகள் இருவரும் கலந்துபேசி முடிவெடுக்க வேண்டும். இப்போதைக்கு குழந்தை வேண்டாம் என்பது உங்கள் முடிவு என்ற£ல், தகுந்த கருத்தடை சாதனங்களைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.

கருவுற்ற பிறகு தொடர்ந்து செக்-அப்கள் செய்வது அவசியம். இதை தேவையற்ற செலவு என ஒருபோதும் நினைக்காமல், ஒத்துழைப்பு தரவேண்டியது முக்கியம்.

டாக்டர் சொல்லும் நேரத்தை ஒருபோதும் தவிர்க்காமல், அழைத்துச் செல்லுங்கள். அதைவிட முக்கியமானது,  ஒவ்வொரு முறையும் செக்-அப்பிற்கு நீங்களே உடன் இருந்து அழைத்துச் செல்லவேண்டும். ஆபீஸ் வேலையைக் காரணம் காட்டி தப்பிக்காதீர்கள்.  

திருமணம் ஆன புதிதில் பெண்ணுக்குப் புகுந்த வீட்டில், பிறந்த வீடு அளவுக்கு அந்நியோன்யம் இருக்காது. அதனால் கணவனாகிய நீங்களும் உங்கள் குடும்பத்தாரும் அந்தப் பெண்ணுக்கு, இதுவும் நம் வீடுதான் என்ற எண்ணத்தை மனதில் ஆழ பதிக்கவேண்டும்.  அந்த அளவுக்கு மனைவிக்கான உரிமைகளையும், பொறுப்புகளையும் வழங்குவது முக்கியம். ஏனெனில் கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு அடிக்கடி ஏதாவது சாப்பிடத் தோன்றும் அல்லது பிடித்த தின்பண்டங்களை உண்ணத் தோன்றும்.

விரும்பிக் கேட்கும் பதார்த்தங்களை வாங்கிக் கொடுப்பது சரிதான். அவை தரமானதாக இருக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள். முடிந்தவரை எண்ணெய்ப் பதார்த்தங்களை  தவிர்த்திடுங்கள்.

அடிக்கடி மனைவியை வெளி இடங்களுக்கு அழைத்துச் சென்று அவருடன் மனம் விட்டுச் சிரித்துப் பேசி, கொஞ்சி விளையாடுங்கள். இது கர்ப்பக் காலத்தில் அவருக்கு இருக்கும் தேவையற்ற பயத்தைப் போக்க உதவும்.

கர்ப்பம் ஆன முதல் மூன்று மாதங்களில் ஒரு பெண்ணுக்கு எடைக் குறைவு இருப்பது இயல்புதான். அதைப் புரிந்துகொள்ளுங்கள். இதுகுறித்து தேவை இல்லாமல் பயம்வேண்டாம்.  

கர்ப்பக் காலத்தில் சில பெண்களுக்குச் சிறுநீர் வெளியேறுவதில் பிரச்னைகள் இருக்கலாம். உங்கள் துணைக்கு, இந்தப் பிரச்னைகள் இருக்கிறதா என்பதைத் தயக்கம்கொள்ளாமல் கேட்டுத் தெரிந்து, பிரச்னை இருப்பின் அதற்குரிய தீர்வுகள் கிடைக்க வழிவகை செய்யுங்கள். எந்த விஷயத்திலும் இருவருக்குள்ளும் ஒளிவுமறைவு வேண்டாம்.

கர்ப்பக் காலத்தில் சரியான உணவுகள் எடுத்துக்கொள்வது அவசியம். மனைவி சரியாகச் சாப்பிடுகிறாரா என்பதைக் கவனியுங்கள். நேரம் கிடைக்கும்போது, நீங்களே ஊட்டிவிடுங்கள். அப்போது உங்கள் மனைவி, நிச்சயம் குறைந்தது ஒரு கைப்பிடியாவது அதிகம் சாப்பிடுவார்.

 வெவ்வேறு மருத்துவர்களைச் சந்தித்து ஆலோசனை பெற்றிருந்தாலும், ஒரே இடத்தில் ஆலோசனை பெற்று வந்தாலும், அனைத்து டாக்குமென்ட்களையும் தேதிவாரியாக வைத்துக்கொள்ளுங்கள். இது சரியான சிகிச்சைக்குப் பேருதவியாக இருக்கும்.

மூட நம்பிக்கைகளை ஆதரிக்காதீர்கள். உதாரணமாக 'சித்திரை மாதம் குழந்தை பிறந்தால், மாமனுக்கு ஆகாது’ என்பன போன்ற மூட நம்பிக்கைகளைக் காரணம் காட்டி, சித்திரை மாதம் பிறக்கவேண்டிய குழந்தையை முன்கூட்டியே அறுவைசிகிச்சை செய்து பங்குனி மாதமே வெளியில் எடுப்பார்கள். இது முற்றிலும் தவறானது. இது முதலில் இரண்டு உயிர்கள் சம்பந்தப்பட்ட விஷயம் என்பதை மறவாதீர்கள்.

 பிரசவ நேரத்தில் கணவன் அருகில் இருந்தாலே, பெண்ணுக்குத் தனி தைரியம் பிறக்கும். அதே சமயம் இதில் அனுபவம் மிக்க பெண் ஒருவரையும் அருகில் இருத்திக்கொள்வதும் மிகவும் நல்லது.

  குழந்தை பிறந்த பிறகு சில பெண்கள், தாய்ப்பால் கொடுக்கக் கூச்சப்படுவார்கள். இந்த நேரத்தில் அருகில் இருந்து, தாய்ப்பாலின் மகத்துவத்தைச் சொல்லி மனைவிக்குப் புரியவைப்பதும், தேவையற்ற கூச்சத்தைப் போக்குவதும் உங்கள் கடமை.  

சில குழந்தைகளுக்கு அடிக்கடி உடல்ரீதியாகச் சின்ன சின்னப் பிரச்னைகள் இருந்துகொண்டே இருக்கும். அந்த நேரங்களில் கணவன், குழந்தையையும் மனைவியையும் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதில் ஆரம்பித்து, மருந்து, மாத்திரைகள் சரியாகக் கொடுக்கப்படுகிறதா என்பதைக் கண்காணிப்பது வரை எல்லாவற்றிலும் பொறுப்பாகச் செயல்படுங்கள்.

ஒரு குழந்தைக்கும் மறு குழந்தைக்கும் போதுமான இடைவெளி இருக்கவேண்டும். வயிற்றில் அடுத்த குழந்தையைச் சுமக்கும்போது, பிறந்த பச்சிளம் குழந்தைப் போதிய கவனிப்பு இல்லாமல் சவலைப் பிள்ளையாகிவிடக்கூடாது.''

உளவியல்ரீதியில் பல பயனுள்ள விஷயங்களை அலசுகிறார் சென்னையைச் சேர்ந்த உளவியல் நிபுணர் ராஜ்மோகன்

''திருமணம் ஆனவுடனேயே குழந்தை பெற்றுக்கொண்டாக வேண்டும் என்று இல்லை. உங்களின் விருப்பத்தையும், கடமைகளையும், பொருளாதாரத்தையும் கணக்கில்கொண்டு, இருவரின் பரஸ்பர சம்மதத்துடன் குழந்தைப் பெறுவதைப்பற்றி முடிவெடுங்கள். இல்லையெனில் குழந்தை பிறந்த பிறகு 'இப்ப நான் குழந்தை கேட்டேனா?’ என்ற வாக்குவாதம் ஏற்படலாம்.

 கர்ப்பமான பிறகு, நல்லபடியாகக் குழந்தை பெற்றுக்கொள்வது மனைவியின் வேலை; நமக்கு இதில் என்ன இருக்கிறது?’ என்று இருக்காதீர்கள். குழந்தையை பெற்றெடுப்பதில் இருவருக்குமே சம அளவில் பொறுப்பு இருக்கிறது என்பதை மறக்க வேண்டாம்.

கர்ப்ப காலத்தில் மனைவிக்கு வாந்தி எடுப்பது, பசியின்மை போன்ற உடல்ரீதியான பிரச்னைகள் ஏற்படும்போது, கணவன் கூடுமானவரை அருகிலேயே இருந்து, அனுசரனையாகப் பேசினால், இந்தப் பிரச்னைகள் அவர்களை மனதளவில் பாதிக்காது.

மனைவியுடன் வாக்கிங் போவது, உணவு ஊட்டிவிடுவது, சிரிக்கச் சிரிக்கப் பேசுவது, நெறிக் கதைகளைச் சொல்வது இதெல்லாம் மற்ற நேரத்தைவிட இந்த நேரத்தில் மிகவும் அவர்களைக் கவரும். இதன் மூலம் உங்கள் மீதான காதலும் பெருகும்.

சில பெண்கள் பிரசவக் காலத்தில் பிறந்த வீட்டிற்குச் செல்வார்கள். சில பெற்றோர்கள் தங்கள் மகளை விரும்பி அழைத்துச் செல்வதில் தவறே இல்லை. சிலர் வற்புறுத்தி அனுப்பிவைப்பதும் உண்டு. இது தவறு. தன் பெற்றோர்களுக்கு ஏற்படும் பொருளாதார நெருக்கடி, அந்த பெண்ணுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தும். இதைத் தவிர்ப்பது கணவனின் கையில்தான் இருக்கிறது.

குழந்தை பிறந்த சில மாதங்கள் வரை, மனைவி கணவனுடன் செலவிடும் நேரம் குறைவது இயல்பு. குறிப்பாக உடலுறவில் சிறிய இடைவெளி ஏற்படலாம். இதைக் கணவன் சகஜமாக எடுத்துக்கொள்ளவேண்டும். மனைவியை வற்புறுத்தவோ, சண்டை போடவோ செய்யாதீர்கள்.

பொதுவாக வீட்டு வேலைகளை இருவருமே பகிர்ந்துகொள்வது நல்லது. குறைந்தபட்சம் குழந்தை பிறக்கும் காலகட்டத்திலாவது வீட்டு வேலைகளைக் கணவரே செய்யுங்கள். தவறில்லை.

'இது என் குழந்தையும் இல்லை, உன் குழந்தையும் இல்லை; நம் குழந்தை’ என்ற நினைப்பதை இருவருமே உணர்ந்திருக்க வேண்டும். அப்போதுதான் குழந்தையின் மனநிலையும் ஆரோக்கியமாக இருக்கும்.

அப்பாவுக்கு நிகர் ஏதப்பா?

பெற்றோரும் குழந்தைகளே!

வயதான தாய் தன் மகனுடன் தோட்டத்தில் அமர்ந்து இருக்கிறாள். ஒரு மரத்தில் அமர்ந்திருக்கும் சிறு பறவையைக் காட்டி, 'மகனே, அது என்ன பறவை?’ என்கிறாள். 'மைனா’ என்கிறான் மகன். அந்தப் பறவை வேறு மரத்தில் போய் அமர்கிறது. மறுபடியும் தாய் அது என்ன பறவை எனக் கேட்கிறாள். 'மைனா’ என்கிறான் மகன். அடுத்து வேறு மரத்துக்கு அந்தப் பறவை தாவுகிறது. மூன்றாவது முறையாக அம்மா அதே கேள்வியைக் கேட்கிறாள். ''உனக்கென்ன பைத்தியமா பிடிச்சிருக்கு. அதான் சொல்றேன்ல... அது மைனான்னு...'' என எரிந்து விழுகிறான் மகன். அந்தத் தாய் வீட்டுக்குள் போய் தன் டைரியை எடுத்து வருகிறாள். மகனிடம் கொடுக்கிறாள். 

''என் மகனுக்கு அப்போது இரண்டு வயது. நானும் என் மகனும் தோட்டத்தில் அமர்ந்திருந்தோம். அப்போது மைனா ஒன்று பறந்து வர 'அது என்ன?’ எனக் கேட்டான் என் மகன். 'மைனா’ என்றேன். மைனா அடுத்த மரத்துக்குத் தாவியபோது மறுபடியும் அது என்ன எனக் கேட்டான். 'மைனா’ என்றேன். இப்படியாக ஒவ்வொரு மரமாக மைனா தாவியபோதும் என் மகன் கேள்வி கேட்டுக்கொண்டே இருந்தான். ஒவ்வொரு முறையும் மைனா... மைனா எனச் சொன்னபோது அந்த மைனாவைப் போலவே ஆனந்தத்தில் நான் பறந்துகொண்டு இருந்தேன்!''  

சென்ற வருடத்தின் சிறந்த குறும்படமாக சர்வதேச விருது பெற்ற  படத்தின் காட்சி இது. அலுவலகம், நட்பு வட்டாரம், ஃபேஸ்புக் என எது எதற்கோ நேரம் ஒதுக்கும் நாம் நம் பெற்றோருக்காக ஒரு நாளைக்கு எவ்வளவு நேரத்தை ஒதுக்குகிறோம்? அவர்களுக்கான தேவைகளை நம்மில் எத்தனை பேர் மனம்விட்டுக் கேட்கிறோம்? தள்ளாத வயதில் பேரன் - பேத்திகளைக் கொஞ்சி மகிழும் காலத்தில் பல பெற்றோர்கள் வறுமையிலும் தனிமையிலும் தவிக்கும் அவலத்தை எப்படித் தவிர்ப்பது? வழிசொல்கிறார் முதியோர் நல மருத்துவ நிபுணர் எஸ். சிவகுமார்.

''சம்பாத்தியத்தை நோக்கியே சுழலும் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த பலருக்கு வயதான பெற்றோரைக் கவனிக்க நேரம் இல்லை. நாலு வார்த்தை பரிவாய்ப் பேசக்கூட பொறுமை இல்லை.

வறுமையில் வாடும் ஏழ்மை நிலையில் இருக்கும் பெற்றோர்களோ உழைப்பதற்குத் தயாராக இருந்தும், உடலில் வலு இல்லாமல், ஒடுங்கிக்கிடக்கின்றனர். இதுதான் இன்றைய வயோதிகப் பெற்றோர்களின் யதார்த்த நிலை. இதற்கு உதாரணமாக நான் பார்த்த முதியவரைப் பற்றிச் சொல்கிறேன்.  

80 வயது வயோதிகரின் மருமகள், 'என் மாமனார் நடக்கவே முடியாமல் சோர்ந்து விழுகிறார். கொஞ்சம் வீட்டுக்கு வந்து பார்க்க முடியுமா?’ என்று விடிகாலை எனக்கு போன் செய்தார். ஓரளவு வசதியான வீடுதான். கிருமித் தொற்றால் அந்த முதியவர் பாதிக்கப்பட்டிருந்தார். ஊசியைப் போட்டுவிட்டு மாத்திரைகளைக் கொடுத்தேன். கிளம்பும்போது அந்தப் பெரியவர், 'வாயில நாலு பல்லுதான் இருக்கு... சாப்பிடவே முடியலை. அதை எடுத்துவிட்டுடுங்க’ என்றார். அருகே இருந்த அவருடைய மனைவி, 'எனக்கு கண் சரியாத் தெரியலை... அதையும் பார்த்திடுங்களேன்’ என்றார். 'கண் டாக்டர்கிட்ட போய்க் கண் பரிசோதனை செய்து, கண்ணாடி போடணும். நீங்க பல் டாக்டரைப் பார்க்கணும்’ என்று அட்வைஸ் தந்துவிட்டு, அந்த அறையைவிட்டு வெளியே வந்தேன். அங்கே நீல நிறக் கண்களோடு அந்த முதியவரின் பேத்தியைப் பார்த்தேன். 'நிஜமாவே கண் நீலமா?’ என்று நான் வியந்து கேட்க, 'இல்லை டாக்டர், லென்ஸ் போட்டிருக்கா. காலேஜ் படிக்கிறதால அவ டிரெஸுக்கு மேட்சா கலர் கலரா லென்ஸ் வாங்கித் தந்திருக்கேன்’ என்று பெருமிதத்துடன் சொன்னார் அந்த மருமகள்.  

படிக்கும் மகள், மகனுக்காக லட்சங்களைச் செலவழிக்கும் அதே பெற்றோர், தங்களைப் பெற்றவர்களின் சின்னச் சின்ன அவசியத் தேவைகளைக்கூடப் பூர்த்திசெய்ய மறந்துவிடுகின்றனர். அவர்களின் தேவைகளை அறிந்து, பிரச்னைகளைப் புரிந்து, பேசுவதைக் காது கொடுத்துக் கேட்டாலே போதும். அவர்கள் வாழும் காலம் வரை நிம்மதியும் சந்தோஷமும் நிரந்தரமாய் இருக்கும்'' - தீர்க்கமாகச் சொல்லும் டாக்டர் சிவகுமார், பிள்ளைகள் கவனத்தில்கொள்ள வேண்டிய எட்டுக் கட்டளைகளைப் பட்டியல் போட்டார்.

பேச்சு சுதந்திரம் பேரானந்தம்!

பெரியவர்களின் வடிகாலே... பேச்சுதான். தேக்கிவைத்த ஆசைகள், கனவுகள், இன்ன பிற நினைவுகளைப் பற்றிப் பேசும்போது, அதைக் காது கொடுத்துக் கேளுங்கள். 'நீங்க படிச்ச காலத்தில் பரிசுகள் வாங்கியிருக்கீங் களா?’ என்று நீங்களோ அல்லது பேரப் பிள்ளைகளோ கேட்கும்போது, பாட்டியின் முகத்தில் தெரியும் பரவசத்தை வார்த்தைக ளால் விவரிக்க முடியாது. விசேஷ நாட்களில் பாடச் சொல்லி, பாட்டியின் கச்சேரியை ரசிக்கலாம். கை வேலைப்பாட்டில் திறமை இருந்தால், அவர் செய்த பொருட்களைக் கொண்டு வீட்டை அலங்கரிக்கலாம். தனக்கு இந்த வீட்டில் மதிப்பு இருக்கிறது என்பதை உணர ஒரு வாய்ப்பும் மன பாரத்தை இறக்கிவைத்த சந்தோஷமும் அவர்களுக்குக் கிடைத்துவிடும்.

குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை!

அம்மாக்களைப் பொருத்தவரை என்னதான் வயதாகிவிட்டாலும் அவர்களுக்கு அடுக்களையில் வேலை செய்வது மிகவும் பிடிக்கும். தனது மகனுக்கும் பேரக் குழந்தைகளுக்கும் தினம் தினம் என்று இல்லாவிட்டாலும் நாள்  கிழமைகளின் போதாவது தன் கையால் எதையாவது சமைத்துக் கொடுக்க வேண்டும் என்ற ஆசை வரும். அப்படிப்பட்டவர் என்றாவது ஒரு நாள் கேசரியில் சர்க்கரை போட மறந்திருக்கலாம். அதனால், 'அம்மா. உனக்குதான் வயசாடுச்சு இல்ல... பேசாம ஒரு மூலையிலே உட்கார். இனி மேல் நீ கிச்சன் பக்கம் போக வேண்டாம்’ என்று முகத்தில் அடித்தாற்போல் பேசுவதோ... 'நல்ல வேளை உப்பைக் கொட்டாம இருந்தீங்களே...’ என்று கிண்டலடிப்பதோ, அவர்களது மனதை ரணப்படுத்தும் என்பதை நினைவில்கொள்ளுங்கள்.

உணவே மருந்து

வயதான பெற்றோர்களுக்குக் குறைவான கலோரி உள்ள சத்தான உணவே போதுமானது. எலும்புகளை வலுவாக்கக் கொள்ளு, புரதச் சத்துக்கு காளான், கோதுமை, கொண்டைக் கடலை, பட்டாணி இவற்றைத் தினமும் சேர்த்துக் கொடுக்கலாம். ஓட்ஸில் அதிக புரதம், கலோரி, நார்ச் சத்து, ஆன்ட்டி ஆக்சிடென்ட்ஸ், வைட்டமின்கள் மற்றும் தாது உப்புகள் இருப்பதால் அது அவர்களுக்கு மிகவும் நல்லது. மலச்சிக்கலையும் தவிர்க்கும். அரிசியைக் குறைத்து கேழ்வரகை உணவில் சேர்ப்பதன் மூலம் உடலில் சுண்ணாம்புச் சத்து சேரும். எடை அதிகரிக்கும் மாவுச் சத்துள்ள கிழங்கு வகைகள், கொழுப்பு நிறைந்த எண்ணெய், நெய், வெண்ணெய் ஆகியவற்றைக் குறைவாகத் தந்தால் போதும். இரும்புச் சத்து நிறைந்த கீரை, பேரீச்சம்பழம், வெல்லம், தேன் மற்றும் சிட்ரஸ் பழங்கள் போன்றவற்றை அவர்கள் சாப்பிட்டால், ரத்த சோகை வராமல் இருக்கும். எந்தச் சாப்பாடாக இருந்தாலும் உப்பு குறைவாக இருந்தால், அவர்களுக்கு உயர் ரத்த அழுத்தம் வராமல் தடுக்க முடியும். அதே சமயம், உடலில் உப்பின் அளவும் குறையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். நாள் ஒன்றுக்குக் குறைந்தபட்சம் ஒன்றரை லிட்டர் தண்ணீர் குடித்தால், மலச்சிக்கல், சோர்வு, பலவீனம், நீரிழப்பு போன்ற பல்வேறு பிரச்னைகளை அவர்கள் தடுக்கலாம்.

உற்சாகம் தரும் உடற்பயிற்சி

60 வயதைக் கடந்தவர்களாக இருந்தாலும்கூட வாரத்துக்கு மூன்று மணி நேரம் நடந்தால், மாரடைப்பு வருவதற்கான வாய்ப்பு 35 முதல் 45 சதவிகிதம் குறைவு. ஐந்து மணி நேரம் நடந்தால், 50 சதவிகிதம் மாரடைப்பு வாய்ப்பு குறையும். ரத்த ஓட்டமும் சீராகும். உங்கள் அப்பா - அம்மாவை அருகில் இருக்கும் பூங்கா, மைதானத்துக்குச் சென்று உடற்பயிற்சியோடு, நடைப்பயிற்சி செய்யச் சொல்லலாம். விடியற்காலையில் நடப்பது அவர்களது உடலுக்குப் புத்துணர்ச்சியைக் கொடுக்கும். மற்றவர்களுடன் கலந்து உரையாடும்போது மனதில் உற்சாகம் பாயும். நல்ல உறக்கம் கிடைக்கும். பார்வைக் கோளாறு, மூட்டு வலி மற்றும் பக்கவாதப் பிரச்னை உள்ளவர்களாக இருந்தால், உட்கார்ந்த நிலையிலேயே உடலின் மேற்பகுதிக்கு மட்டும் பயிற்சி செய்யச் சொல்லி உற்சாகப்படுத்தலாம். பெற்றோர்கள் தனியாக நடந்து செல்வதாக இருந்தால், அடையாள அட்டையை அவர்களது பேன்ட் அல்லது சட்டை பாக்கெட்டில் வைத்து அனுப்புங்கள்.    

தடுக்கி விழுவதைத் தவிர்க்கலாம்

வயதானவர்கள் சில சமயங்களில் தடுக்கி விழ நேரிடும். இதனால், எலும்பு முறிய வாய்ப்பு உண்டு. இதைத் தடுக்க அவர்களின் வசதியைக் கருத்தில்கொண்டு அவர்கள் புழங்கும் அறை, கழிப்பறை மற்றும் நடக்கும் இடங்களில் சொரசொரப்பான டைல்ஸைப் பதிப்பது நல்லது. அவர்கள் அதிகமாக நடமாடும் இடங்களில் ஆங்காங்கே, பிடிமானத்துக்கு கைப்பிடிகளைப் பொருத்துவது அவர்களுக்குப் பேருதவியாக இருக்கும். மிருதுவான செருப்பாக இல்லாமல், முள் போல் பதிக்கப்பட்ட ரப்பர் செருப்புகளை வாங்கித் தரலாம். வெஸ்டர்ன் டாய்லெட் மூட்டு வலிப் பிரச்னை வராமல் தடுக்கும். குளிக்கும் அறை, நடக்கும் இடங்கள், தூங்கும் அறை இவற்றில் போதிய வெளிச்சம் இருக்கும்படியாகப் பார்த்துக்கொள்ள வேண்டும். நடக்கும் இடத்தில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்வது அவசியம். தள்ளாடியபடி நடப்பவர்களுக்குக்  கைப்பிடி (Walking stick) அல்லது வாக்கர் (Walker) கொடுக்கலாம்.  

நோய்க்கு நிரந்தரத் தீர்வு

முதுமையில் மனச்சோர்வு, மறதி நோய் மற்றும் மனப்பதற்றம் போன்ற தொல்லைகள் வர வாய்ப்புகள் நிறைய இருக்கின்றன. அதனால், வயதானவர்களுக்கு நினைவாற்றல் குறையும். நாளடைவில், தன்னையே மறக்கும் நிலை உருவாகும். வீட்டிலே சின்னச் சின்ன உடற்பயிற்சி, நடைப்பயிற்சி, தியானம் போன்றவற்றை மேற்கொள்ளச் செய்யலாம். இதனால் மறதி நோய்கள் வருவதைத் தவிர்க்க முடியும்.

பொதுவாக வயதானவர்களுக்கு எந்த வேளை எந்த மாத்திரை சாப்பிட வேண்டும் என்று பார்த்து எடுத்து சாப்பிடத் தெரியாது. பெற்றெடுத்த பிள்ளைகள் வேளாவேளைக்குத் தங்கள் கையால் மருந்து கொடுத்தால், அது அவர்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கும். இதற்குச் சாத்தியம் இல்லை என்றால், குறைந்தபட்சம் எந்த வேளைக்கு எந்த மருந்துகளைச் சாப்பிட வேண்டும் என்பதை நாமே தனித்தனி சின்ன பொட்டலங்களாக மடித்துவைத்துவிட்டு வந்தால், அது அவர்களுக்குப் பேருதவியாக இருக்கும்.

நோய்க்கு மருந்து மாத்திரைகள் எடுத்துக்கொள்பவர்கள், 'ஒரு வேளை மறந்துவிட்டோமே...’ என்று அடுத்த வேளை மருந்தையும் சேர்த்துச் சாப்பிட்டுவிடக் கூடாது. கை - கால்களில் எரிச்சல் ஏற்பட்டால், அது சர்க்கரை நோய் அறிகுறியாக இருக்கலாம். முகம், கால்களில் ஏற்படும் வீக்கம், உயர் ரத்த அழுத்தத்துக்கு அறிகுறியாக இருக்கலாம். நோய் வருமுன் காப்பதற்கு வருடம் ஒரு முறை முழு உடல் பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும். கண், பல், காது ஆகியவற்றைக் கண்டிப்பாகப் பரிசோதித்துக்கொள்ள வைப்பது அவசியம்.

தனிமையைத் தவிர்க்கவும்

முதுமையின் விரோதி தனிமை. முதுமையில் தனிமையோடு முடங்கிக் கிடப்பவர்களுக்கு மூப்பின் விளைவு ஆறு மடங்கு அதிகரிக்கும். தள்ளாத வயதில் கணவன் - மனைவி இருவரில் ஒருவரின் இழப்பு மற்றொருவருக்குத் தாங்க முடியாத தளர்வை ஏற்படுத்திவிடும். இழப்பை ஈடுசெய்ய முடியாது என்றாலும், கூடப்பிறந்த உறவுகள், அவர்களுடன் வசித்த, படித்த, பணிபுரிந்த நட்பு வட்டாரங்களைத் தேடிப் பிடித்து வீட்டுக்கே வரவழைத்து வேதனையை மறக்கச் செய்யலாம். பெற்றோர்கள் தனியாக வசிக்க வேண்டிய நிலை ஏற்படும்போது, நீங்கள் வசிக்கும் வீட்டுக்கு அருகிலேயே குடி வைத்துக்கொள்ளுங்கள். வாரம் ஒரு முறை குடும்பத்தினருடன் சென்று பார்ப்பதை வழக்கமாகக்கொள்ளுங்கள். ஆறு மாதங்களுக்கு ஒரு முறை பெற்றோரையும் அழைத்துக்கொண்டு வெளியூர்களுக்குச் செல்வதை கட்டாயமாக்கிக்கொள்ளுங்கள்.

நீங்கள் வெளியூர்வாசிகளாக இருந்தால் உறவு - நட்பு வட்டாரங்களுக்கு அருகில் பெற்றோரைக் குடி அமர்த்தலாம். அவ்வப்போது போன் மூலமாக நலம் விசாரிக்கலாம். இதனால், நீங்கள் அருகிலேயே இருப்பதுபோன்ற உணர்வு அவர்களுக்கு ஏற்படும். கேரம், பல்லாங்குழி, பரமபதம் போன்ற விளையாட்டுப் பொருட்களை வாங்கித் தாருங்கள். குழந்தைகளைப் போல அவர்கள் விளையாடி மகிழ்வதைப் பாருங்கள். உங்களுக்கும் ஆனந்தம் பொங்கும்.

தொல்லை இல்லாத் தூக்கம்

வயது ஏற ஏறத் தூக்கம் குறையத் தொடங்கும். ஒரு நாளில், அவர்களுக்குக் குறைந்தது ஐந்து முதல் ஆறு மணி நேரத் தூக்கம் அவசியம். முடிந்த வரை பகலில் தூங்காமல் ஈசி சேரில் சாய்ந்தபடி அவர்களை ஓய்வெடுக்க ஆலோசனை சொல்லுங்கள். தூங்குவதற்கு இரண்டு மணி நேரத்துக்கு முன்பாக உணவைக் கொடுத்துவிடுங்கள். அதுவும் கெட்டியான உணவாக இல்லாமல், நீராகாரமான உணவாக இருப்பது நல்லது. சூடான, குளிர்ச்சியான பானங்களைக் குடிக்கக் கொடுக்காதீர்கள். தூங்கப் போகும் சமயத்தில் அதிகப்படியான தண்ணீரைக் குடிக்கக் கூடாது. இதனால், அடிக்கடி சிறுநீர் கழிக்க எழ வேண்டி இருக்கும். பெற்றோரின் அறையில் அதிக சத்தம் இல்லாத, அவர்களுக்குப் பிடித்த இனிமையான இசையைத் தவழவிடுங்கள். நிம்மதியாகத் தூங்குவார்கள்!

கணவன் - மனைவி உறவைவிட உன்னதமான உறவு உண்டா?

கணவனுக்குத் தலைவலி. நெற்றியை அழுத்திப் பிடித்துக் கொண்டு சோபாவில் உட்கார்ந்திருக்கிறான். மனைவி கொஞ்சம் தைலம் எடுத்து வந்து, கணவன் அருகில் அம...