Monday, December 28, 2015

பா. விஜயின் ‘நந்தவனத்து நட்சத்திரங்கள்’ கவிதைகளில் சமுதாயச் சிந்தனைகள்

முனைவர் பூ.மு.அன்புசிவா
உதவிப் பேராசிரியர்
தமிழ்த்துறை
இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர்- 641 028
பேச: 098438 74545.

    இன்றைய தமிழ்க் கவிதையின் முதன்மையான பண்பே சமுதாய உணர்வுதான்.  கலையின்பம் தருவது கவிதையின் நோக்கம் என்ற நிலை மாறி மனித வாழ்க்கையின் முன்னேற்றம் குறித்து இன்றைய கவிஞன் குமுறி எழுகிறான். சமுதாயம் என்பது சலனமுற்றுக் கொண்டே இருக்கிறஇ மாறிக் கொண்டே இருக்கிற ஒரு திரவ அமைப்பு.  இந்த அமைப்பு கண்ணால் நிதர்சனமாகக் காணக் கூடியது அல்ல என்பார்.
க.நா. சுப்பிரமணியன், நாவல் கலை, ப.118. சமுதாய நோக்கமற்ற இலக்கியம் சிறகற்ற பறவை எனலாம்.  படைப்பாளன் என்பவன் சமுதாயத்தில் இருந்து வேறுபட்டவன் அல்லன்; அவனும் சமுதாயத்தில் ஓர் அங்கமாகவே விளங்குகிறான்.  சமுதாயத்தில் நடைபெறுகின்ற ஒவ்வொரு நிகழ்ச்சி பற்றிய அவனது ஏக்கம்;இ எதிர்பார்ப்பு, கோபம்;, குமுறல்; ஆகியவை அவனது கவிதைகளின் கருவாக அமைகின்றன. ~நந்தவனத்து நட்சத்திரங்கள்| என்னும் கவிதைத் தொகுப்பு இன்றைய சமுதாயத்தின் தேவைகள், கிராமத்தின் நிலைஇ  இளைஞர்களது நம்பிக்கை, வர்க்கப் போராட்டம், சரித்திரம்;, அந்நியமோகம், காதல், வறுமை,  போன்றவற்றைத் தெளிவாக விளக்கும் வகையில் அமைந்துள்ளது.
திரையுலகில் இன்று மாபெரும் சாதனை படைத்து வரும் பா.விஜய் 20-10-1974-ல் கோவை மாநகரத்தில்; வி.பாலகிருஷ்ணன், சரஸ்வதி தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார்.  ~பாக்யா| இதழில் வெளியான சில கவிதைகள் மூலம் இலக்கிய உலகில் நுழைந்தார்.  தேவி, குங்குமம், நக்கீரன் போன்ற இதழ்களில் இவர் தம் படைப்புக்கள் வெளிவந்தன.  கவிதைகள், கவிதைத் தொடர்கள், வரலாற்றுத் தொடர்கள், புதுக்கவிதைக் காப்பியங்கள், திரைப்படங்கள் ஆகியவற்றை எழுதிப் புகழ்பெற்ற இவர் சினிமா எக்ஸ்பிரஸ் விருது, தமிழ்நாடு திரைப்பட சங்க விருது, போன்ற இருபத்து நான்கிற்கும் மேற்பட்ட விருதுகளைப் பெற்றுள்ளார்.  மொழிப்பற்று, இனப்பற்று, இயற்கை, காதல் போன்ற பல பொருள்களில் கவிதை இயற்றியுள்ள இவரின் ~நந்தவனத்து நட்சத்திரங்கள்| என்னும் கவிதைத் தொகுப்பு பற்றி ஆய்வு செய்வது இவ்வாய்வின் நோக்கம் ஆகும்.

    நமது சமுதாயத்தில் அரசியலும் ஆன்மிகமும் போட்டி போட்டுக் கொண்டு மக்களை ஏமாற்றிக் கொண்டு வருகின்றன.  விஞ்ஞானம், கலாச்சாரம் என்ற நெருப்பில் நாம் கருகிக் கொண்டிருக்கிறோம்.  நம் நாட்டைப் பிரிக்க வேண்டும் என சில அந்நியக் குரங்குகள் வாலில் தீ வைத்துக் கொண்டு வந்துள்ளன.  அதை அறுத்து எறிய வேண்டும்.  நம் சமுதாயம் ஒரு கட்டுக் கோப்பு இன்றி இருக்கிறது.  இளைஞர்கள் அதை மாற்ற முன் வர வேண்டும்..
        ~~உனது சமுதாயம்
         வில் உயர்த்திய களைப்பில்
         விழுந்து கிடக்கிறது
         நாணை வில்லிலும்
         நம்பிக்கையை சமுதாயத்திலும்
         இணைத்து ஏற்று||            (ந.ந.ப.10)
என்ற இந்தக் கவிதை வரிகளில் சமுதாயத்தின் களைப்பை இளைஞர்கள் தான் போக்க வேண்டும் என்பதை உணர்த்துகின்றார் கவிஞர்.

தொலைந்த கிராமம்
    ‘நம் இந்தியாவின் முதுகெலும்பு கிராமங்கள்’ என்றார்இ மகாத்மா காந்தி. கிராமங்களில் தான் பண்பாடு பாதுகாக்கப்பட்டு வருகின்றது. ~~நம் பண்பாட்டுச் சில்லரைகளைப் பாதுகாக்கும் உண்டியல்கள்|| கிராமங்கள் என்று கூறியுள்ளார் கவிஞர் வைரமுத்து.  இன்று கிராமங்கள் தன் அடையாளத்தை இழந்து வருகின்றன.  தொலைக்காட்சி, செல்போன்; போன்றவை கிராமக் கலாச்சாரங்களை அழித்து வருகின்றன.  பழங்கதை பேசுதல், வாழை இலைகளில் உணவு உண்ணுதல் போன்ற பாரம்பரியங்கள் இன்று இல்லாமல் போய்விட்டன.
        ~~இப்போது அடையாளங்களில்லை
         அலங்காரங்களில்லை
         அர்த்தங்களில்லை!||  (ந.ந.ப.22)
என்ற வரிகளில் தொலைந்து போன கிராமத்தைப் பற்றிக் கவிஞர் வருந்திக் கூறியுள்ளார்.

இளைஞர் நிலை
    இன்றைய இளைஞர்களிடம் தன்னம்பிக்கை குறைந்து வருகின்றது.  நம்பிக்கை இருந்தால் தான் வாழ்க்கையில் முன்னேற முடியும்.    வாழ்க்கை என்ற போர்க்களத்தில், நம்பிக்கை என்ற ஆயுதம் கொண்டு போர் புரிய வேண்டும்.  முயற்சியும் நம்பிக்கையும் இருந்தால் சாதனை படைக்கலாம். இளைஞர்;கள்  நம்பிக்கை என்ற விதையை நெஞ்சில் நிறுத்த வேண்டும் என்பதைஇ
        ~~இடிவிழக் கண்டு
 கூரை நடுங்கலாம்
 இடிதாங்கி நடுங்கலாமோ?
 நீ இடிதாங்கி||
 ~~உன் ஆள்காட்டி விரலுக்கு
 ஆற்றல் இருந்தால்
 சஞ்சீவி மலையை நீயும்
 சுமக்காலம்||            (ந.ந.ப.29)
என்று கூறியுள்ளார். இளைஞர்கள் நம்பிக்கையுடன் செயல்பட்டால் சிகரத்தையும் அடையலாம் என்பது கவிஞர் இளைஞர்களுக்குக் கூறும் நன்னம்பிக்கை ஆகும்.

ஏற்றதாழ்வுகள்
    ஏழை, பணக்காரன் என்ற ஏற்றத் தாழ்வுகள் சமுதாயத்தில் இன்றும் உள்ளன.  மனிதனை, மனிதனே சுரண்டிப் பிழைக்கும் பழக்கம் நம் சமுதாயத்தில் காணப்படுகிறது.
~~உயிரினங்களில் மனிதன் மட்டும் தான் சுரண்டிப் பிழைக்கிறான்|| என்றார் அப்துல் ரகுமான்.  அன்றைய சமுதாயத்தில்; ஜமீன்தார், பண்ணையார், ஆண்டான்இ அடிமை என்ற வர்க்கப் பாகுபாடு இருந்தது.  சட்டங்கள் பல இயற்றப்பட்டுஇ  அந்தப் பாகுபாடுகள் ஒழிக்கப்பட்டாலும் இன்று முதலாளிஇ தொழிலாளி என்ற புதிய வடிவம் கொண்டு அவை நிலவி வருகின்றன.
        ~~ஊமவாய்ச் சொல்லு
         ஊர்கூத்தில் கேட்காதே
         முறைச்ச பண்ணையாறு
         முதுகுதோலு உரிச்சாரு|| (ந.ந.ப. 33)
என்று தன் அடிமை நிலையைப் பற்றி ஆடு மேய்ப்பவன் கூறுவதாகக் கவிஞர் அமைத்துள்ள இந்த வரிகள் ஆண்டான்இ அடிமை நிலை இருப்பதை அம்பலப்படுத்துகின்றன.

சரித்திரங்கள்
    ~இன்றைய செய்தி நாளைய வரலாறு| என்பர். நம் வரலாற்றுச் சரித்திரங்களைத் தோண்டிப் பார்த்தால் அவை அனைத்தும் சவக் குவியல்களாகவே உள்ளன.  அன்று முதல்  இன்று வரை மண், பொன், பெண் என்ற மூன்றின் மேலும் பேராசை உடையவர்களாகவே ஆட்சியாளர்கள் படைத்துக் காட்டப்பட்டிருக்கிறார்கள்;. எல்லைக் கோடுகளுக்காகச் சண்டையிடும் அவல நிலை இன்றும் தொடர்கின்றது. இதை,
        ~~போதும் போர் போதும்
         நேற்றைய கிழக்கு ரத்தம்
         குளித்ததற்காக அடுத்த விடியலும்
         அழுக்காக வேண்டாம்
         கடந்த நூற்றாண்டுக்
         கண் இழந்தமைக்காக
 இன்றைய நாட்கள்
         இமை இழக்க வேண்டாம்||        (ந.ந.ப.38)
என்ற வரிகளில் பதிவு செய்துள்ளார் கவிஞர்.  மண்ணுக்காக மக்களிடையே உயிரிழப்பு வேண்டாம் என்பதை வலியுறுத்தவே ~~கண்ணீர் சுமக்கும் காலண்டர்|| என்ற கவிதை படைக்கப்பட்டுள்ளது.

அந்நியமோகம்
    தேசத்திற்காக உயிர் கொடுத்த தியாகிகளை உடைய நாடு இந்தியா.  இந்த தேசத்தில் பெயரளவில் கூட தேசப்பற்று இல்லாமல் போய்விட்டது. மக்களிடம் அந்நிய நாட்டின் மோகம் இருப்பதால் இந்தியாவில் படித்த இளைஞனே தன் சொந்த தேசத்தை உதறி எறியும் நிலை காணப்படுகிறது.  இதை,
        ~~உன் அதிக பட்ச இலட்சியம்
         ஆறாயிரம் மைல்கள் தாண்டிய
         அமெரிக்கா!
         உன்குறைந்த பட்ச இலட்சியம்
         இரண்டாயிரம்
         மைல்கள் தாண்டிய
         அரேபியா!||        (ந.ந.ப.50)
என்ற வரிகளில்  படம் பிடித்துக் காட்டியுள்ளார் கவிஞர்.

வறுமை
    ~கொடிது கொடிது வறுமை கொடிது| என்றார் ஒளவையார். அடிப்படைத் தேவைகளான உணவு, உடை, உறையுள் ஆகியவற்றைக் கூடப் போதுமான அளவு பெற இயலாத நிலையில் இன்றைய சமுதாய மக்களுள் சிலர்; காணப்படுகின்றனர்.  வறுமையின் காரணமாகச் சிறுவன் ஒருவனால் ஒரு வெடி கூட வாங்க இயலாத நிலை.  அவன் ஆசை யானை வெடியில் ஆரம்பித்துஇ  ~லட்சுமி வெடி, சிவாஜி வெடி, குருவி வெடி| என இறங்கியது.  இறுதியில் குருவி வெடியும் கிடைக்காமல் திரி கொளுத்தும் பத்தி தான் கிடைத்தது  என்பதைக்,
        ~~காசுக் குவியலை அள்ளி
         கல்லாவில் போட்டுக் கொண்டு
         திரி கொளுத்தும் பத்தியை
         திணித்தான் கைகளில் . . .||    (ந.ந.ப.88)
என்ற வரிகள் உணர்த்துகின்றன.  வறுமையின் காரணமாகச் சிறுவனின் ஆசை வெறும் கனவாக மாறியது என்பதைப் பட்டாசுக் கனவுகள் என்ற இக்கவிதை காட்டுகின்றது.
அரசியல்
    ~சமுதாயத்தில் வாழ்கின்ற மனிதன் தன் உள்இ வெளி விவகாரங்களை உருவாக்குவதும் இயக்குவதும்  ஆள்வதும் ஆகிய அறிவியல் கலையே அரசியல் ஆகும்|| என்று கூறுவர்.  தேர்தல் நாள் என்றாலேஇ   அது அரசியல்வாதிகள் மக்களை முட்டாள் ஆக்கும் தினம் என்று கவிஞர் குறிப்பிடுகிறார்.
        ~~தேர்தல் நாள்
         தெரிவிக்கப் படுகிறதா
         அது ஏப்ரல் முதல்
         தேதியென்று எழுதிவை||  (ந.ந.ப.13)
என்ற கவிதை வரிகள் தேர்தல் நாள் பற்றிக்  கூறுவதாக அமைந்துள்ளன.

சாதிப்பாகுபாடு
    உயிருள்ளவைகளில் முதல் நிலை கொண்ட மனித இனத்திடம் மட்டுமே சாதிப்பாகுபாடு இருந்து வருகிறது.  சாதிப் பாகுபாட்டின் தீமையைஇ     ~~வர்க்கம் இரண்டாக வாழ்கின்ற நாள் வரைக்கும் பூமியெங்கும் போர்க் களமாய்த் தானிருக்கும் புரிகிறதா|| என்று கூறுகிறார் கவிஞர் மேத்தா.  ~~மனிதனின் வாழ்க்கை வரப்பு தரிசாகக் கிடக்கிறது.  அதற்கு முறையான வரப்புக் கட்ட வேண்டும்.  அதற்குச் சாதிப்பாகுபாடு என்ற ஒன்றை ஒழிக்க வேண்டும்.
        ~~மேல்குடி கீழ்குடியென்று   
         இரண்டு வர்க்கம்
         இன்னமும் இருக்கின்றது
         அவ்விரண்டையும் ஒருமித்து
         ஓர் ஒப்பந்தம் செய்|| (ந.ந.பா.10)
என்று சாதிப்பாகுபாடு ஒழியக் கவிஞர் கூறியுள்ளார்.




காதல்
    அனைத்து உயிர்களிடமும் இயற்கையாய்த் தோன்றும் ஓர் உணர்வு காதல்.  இறைவன் படைப்பில் ஆண், பெண் என்ற தத்துவத்தின் வித்தாகவும் வாழ்வின் வளமைக்கு அடிப்படையான சத்தாகவும் அமைவது காதலாகும் என்பதை,
        “தரிசாய் கிடக்கும்
        வரண்ட வாலிபத்தில்
        துளசிச் செடிகளைத்
        துளிர்க்கச் செய்வது
        காதல்
        இளமை சுமக்கும்
        பூப்பொதி மூட்டை”  (ந.ந.ப.8)
என்ற வரிகளில் அழகாக் கூறியுள்ளார்.

தொகுப்புரை
    ~நந்தவனத்து நட்சத்திரங்கள்| கவிதைத் தொகுப்பிலுள்ள கவிதைகள் அரசியலும் ஆன்மிகமும் போட்டி போட்டு மக்களை ஏமாற்றி வருகின்ற அவலத்தை அம்பலப்படுத்துகின்றன; கிராமங்களின் அடையாளங்கள் அழிந்து வருகின்ற தன்மைகளை அழகாகப் பதிவு செய்கின்றன; இளைஞர்கள் உள்ளத்தில் நம்பிக்கை என்னும் உரம் ஊட்டி வாழ்க்கைப் பயிர் செழிக்க வகை செய்கின்றன; சட்டங்கள் பல இயற்றினாலும் ஏழை, பணக்காரன் என்ற பாகுபாடு மறையாது என்பதைக் கோடிட்டுக் காட்டுகின்றன; படித்த இளைஞர்கள் அந்நிய நாட்டின் மேல் மோகம் கொள்வதைச் சுட்டிக் காட்டுகின்றன; சமுதாயத்தின் வறுமை நிலையை ஏழைச் சிறுவன் வாயிலாகப் படம் பிடித்துக் காட்டுகின்றன.  மனிதனைப் புனிதப் படுத்தும் காதல் பற்றியும் பேசுகின்றன; மொத்தத்தில் ~நந்தவனத்து நட்சத்திரங்கள்| தமிழ்த்தாயின் மணிமுடியை அழகுபடுத்தும் நவமணிகள் என்றால் மிகையில்லை.

No comments:

Post a Comment

கணவன் - மனைவி உறவைவிட உன்னதமான உறவு உண்டா?

கணவனுக்குத் தலைவலி. நெற்றியை அழுத்திப் பிடித்துக் கொண்டு சோபாவில் உட்கார்ந்திருக்கிறான். மனைவி கொஞ்சம் தைலம் எடுத்து வந்து, கணவன் அருகில் அம...