Posts

Showing posts from August 25, 2024

பள்ளு இலக்கியத்தில் மள்ளர்களின் வாழ்க்கை

  முன்னுரை சிற்றிலக்கிய வகைகளில் எளிமையும் இனிமையும் வாய்ந்த ஓர் இலக்கியம் பள்ளு இலக்கியம் ஆகும் . பள்ளு நூல்களில் பாட்டுடைத் தலைவனின் பெயர் மட்டும் கூறப்படும் . மற்றவர்களின் பெயர்கள் கூறப்படுவது இல்லை . பள்ளனின் பெயர் பாட்டுடைத் தலைவனின் பெயருடன் சேர்த்துக் கூறப்படும் . மூத்த பள்ளியின் பெயர் பாட்டுடைத் தலைவனின் ஊர் அல்லது நாட்டின் பெயருடன் சேர்த்துக் கூறப்படும் . இளைய பள்ளியின் பெயர் பாட்டுடைத் தலைவனின் ஊரின் பக்கத்து ஊர் அல்லது பக்கத்து நாட்டின் பெயருடன் சேர்த்துக் கூறப்படும் . இரண்டு பள்ளியர்களில் ஒருத்தி சிவன் அடியாராகவும் மற்றொருத்தி திருமால் அடியாராகவும் காணப்படுவர் .   பெயர்க் காரணம் பள்ளர்களின் வாழ்க்கையை விளக்கிக் கூறும் இலக்கியம் ஆதலால் இதற்குப் பள்ளு என்ற பெயர் ஏற்பட்டது . பள்ளர்கள் என்போர் யாவர் ? உழவுத் தொழில் செய்யும் மக்கள் பள்ளர்கள் ஆவர் . இவர்களில் பெண்கள் பள்ளியர் , பள்ளத்தியர் என அழைக்கப்படுவர் . எனவே , வயல்களில் உழவுத் தொழில் செய்யும் மக்களின் வாழ்க்கையைப் பாடும் இலக...