Friday, January 01, 2016

கால மாற்றம்



அன்புசிவா

     அந்த ஊர் எனக்கு வினோதமாக இருந்தது. மக்களும், அந்த ஊரும் சொல்லும்படியாக இல்லை என்றாலும் அரசாங்கத்தால் நியமிக்கப் பட்ட நான் , நடுநிலைப் பள்ளியில் தமிழாசிரியராக நியமிக்கப்பட்டேன்.  பத்து வருடங்கள் தனியார் பள்ளியில் வேலை பார்த்த நான் 2009ல் தான் கோவைக்கு அருகிலுள்ள வெள்ளலூரில் பணியில் சேர்ந்தேன்.  நானும் கிராமத்தில் பிறந்தவன் என்றாலும், அந்த ஊரும் எனக்கு வேறாகத் தெரியவில்லை. 
     ஒரு வயதான பாட்டி மட்டும் இட்லிக்கடை வைத்திருப்பார்.  காலை பதினோரு மணிக்கு ஒரு டீ,  மாலை  மூணு மணிக்கு ஒரு டீ என என்னால்  நினைத்துக்கூடப் பார்க்க முடியவில்லை.   காரணம் அந்த ஊர் மக்கள் காட்டு வேலைக்கும்,  கூலி  வேலைக்;கும்  போவதால் அவர்களுக்கு கடைகள் தேவை இருக்காது என்பதை உணர்ந்தேன்.  எனக்கு ஒருமாதமாக வனாந்தரக் காட்டில் விட்டது போன்று  இருக்கிறது.  அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியர் பால்ராஜ் அந்த ஊருக்கு வந்து  பதினைந்து ஆண்டுகள் ஆகின்றன எனச் சொன்னார்.  எப்பவும் வகுப்பில்  அனைத்து மாணவர்களும் இருப்பார்கள் என நினைக்கக்கூடாது.  ஒரு வகுப்பில் வருவார்கள்.  மற்ற வகுப்பில் வரமாட்டார்கள்.  சில பெற்றோர்கள் கூலி வேலக்குப் போவதால், தன் கைக் குழந்தைகளையும் இங்கு படிக்கிற குழந்தைகளிடம் கொடுத்துவிட்டுப் போவார்கள்.  சில நேரங்களில் அந்தக் குழந்தைகள் ஒண்ணுக்கு, ரெண்டுக்குப் போகும்.  அதைத் தூக்கிக் கொண்டு வெளியே போகும் போது, மற்றக் குழந்தைகள்  தன் மூக்கைக் கைகளால் மூடிக்கொண்டும், கண்களை இறுக மூடிக்கொண்டும், பாடத்தில் கவனம் இல்லாமல் இருக்கும்.   என்று கூறினார். 
     ஆனால், நான் பாடம் நடத்தும்போது  அனைவரும் பாடத்தில் கவனமாக இருக்கவேண்டும் என நினைப்பேன்.  இருப்பினும்,  சூழலைப் புரிந்துகொண்டு விட்டுவிடுவேன். 
     ஒரு நாள் ஆறாம் வகுப்புக்குக் காலை பாட வேளையில் போகும் போது, எல்லாக் குழந்தைகளும் கத்திக் கொண்டிருந்தார்கள்.  “ஏன் கத்தரீங்க” என அதட்டி, அமைதியாகப் படிக்கச் சொன்னேன்.  அதில் ஒரு பெண் கௌரி என்பவள் எழுந்து “சார், மூணு மாதமா எங்களுக்குத் தமிழ்ப் பாடமே நடத்தல சார்” எனச் சொன்னாள்.  எனக்குத் திகைப்பாக இருந்தது.  நேராகத்  தலைமை ஆசிரியர் அறைக்குச் சென்று இதைக் கேட்டேன்.   அதற்கு அவர் “அப்படித்தான்,  அந்த ஆறுமுகம் சில நேரங்களில்  லீவு போட்டுவிட்டுப் போய்விடுவார்.  அதனால் எனக்கு வேற வகுப்பு இருப்பதால், அதைக் கவனிக்கல. இனிமேல் நீங்களே பாத்துக்குங்க”  என்று சொல்லிவிட்டார்.
     தனியார் பள்ளியில் வேலை அதிகம், ஆனால் வாங்கும்  சம்பளம் குறைவு.                                                    
           ஆரசாங்கத்தில் வேலை குறைவு,  வாங்கும் சம்பளம் பத்து மடங்கு அதிகம்  எனக்கு வாழக்கை வேறு ஒரு உலகத்திற்கு சென்றது போல் உணர்ந்தேன். 
     “கார் மேகம் சார், உங்களை தலைமை ஆசிரியர் கூப்பிடறாங்க”  என்று வாட்ச்மேன் கூப்பிடும் போது ஆறாம் வகுப்பில் பாடம் நடத்திக் கொண்டிருந்தேன். 
     “இதோ வர்ரேன் எனச் சொல்லுங்க”  அந்தப் பீரீடு  முடிய பத்து நிமிடம்  இருக்க தலைமை ஆசிரியர் அறைக்குச்  சென்றேன். 
“சார் வணக்கம்!” 
“வாங்க கார்மேகம் சார்,  ஒக்காருங்க… . “சொல்லுங்க சார், நேத்து அந்த கௌரியோட அம்மா வந்து அந்தப் பொண்ண கூப்பிட்டாங்களாம்…”  “நீங்க ஏன் சார் அனுப்பல?
     “சார் வகுப்பு நடந்துட்டு  இருந்துச்சு,  அதா..ன் கொஞ்சம் பொறுங்க எனச் சொன்னேன் சார்”. 
     அது விசயம் இல்ல… “அவுங்க வந்து அவுங்க புள்ளைய கூப்பிட்டா…நீங்க அனுப்பணும்.  அதுதான் விதி,  ஏன்னா?  அப்புறம் இவனுங்க எலலாம்  ஒண்ணு சேர்ந்து நம்மளயே கொறை சொல்லுவானுங்க.”  என்று கூறினார். 
     “சார் என்ன சார் இப்படி இருக்காங்க…,”  “நான் தான் படிக்கல எம்புள்ளை நல்லா படிக்க வையுங்க” என  எத்தனையோ பெற்றோர்கள் என் காது பட சொல்லிக் கேட்டிருக்கேன். 
     இப்படியும்… பாமர மக்கள் இருக்காங்களா?
     “சார்…”
     என்னடா…?
         ஒரு பையன் ஓடிவந்தான்…
     “பிரபு எங்கம்மாவை கெட்ட வார்;த்தையில்  திட்டுறான. சார்….” எனச் சொன்னான். 
     “ஏண்டா… பெரிய எளவாப் போச்சு … கொஞ்ச நேரம் பேச முடியாதா… இந்தப் பொளப்புக்கு ஊர்;ல…விவசாயம் பாக்கலாம்…”   “இவனுகளோட பேசியே,  ஏ ஆவியே எலலாம் போச்சு.  போடா… போய் ஒக்காருங்க… இதோ… வர்ரேன்.” எனறு அந்தப் பையனிடம் கூறினார் தலைமையாசிரியர். 
     தயக்கத்துடன,; “சார் நா வேணுண்ணா … அந்த வகுப்பைப் பாத்துகட்டுமா…?
         இல்ல சார் “அவனுக கொஞ்ச வாலுப் பயலுக…” நான் பார்த்துக்கிறேன். 
     நீங்க வேணும்னா… அந்த ஏழாம் வகுப்பை பர்ததுக்குங்க.  அபிராமி மிஸ் இன்னிக்கு லீவு.” என்றார். 
     வகுப்பறைக்குள் போனதும் பகீர் என்றது. பத்து மாணவர்கள், பதினைந்து மாணவிகள் தான் இருந்தனர்.  அதிர்ச்சியடைந்த நான் “மொத்தமே இவ்வளவுதானா?”  எனக் கேட்டேன். 
     “பத்துபேரு என்னிக்காச்சும் வருவாங்க.  பத்துபேரு வரவே மாட்டாங்க!  சார்.” இது மாணவர்கள் கூற்று. 
     ஏன்?
     “அவுங்க எல்லாம் அவுங்க அம்மா அப்பாவோட காட்டு வேலைக்கு போய்டுவாங்க சார்” என்றான் ஒரு பையன். 
     “மீதிப்பேரு என்னாச்சு?” என்றேன் நான்.
     “மத்தவங்க மத்தியானம் சோறு போடும்போது வருவாங்க… வந்து வாங்கிட்டு அப்படியே ஓடிருவானுங்க!”  என்றனர்.
     “சரி…சரி…விடுங்க நீங்களாவது ஒழுங்கா வாங்க… வந்து படிங்க…” என்று கூறிவிட்டு
     சரி…
     “ஒவ்வொருத்தரா எழுந்திருச்சு… அவுங்க… அவுங்க பேற…சொல்லுங்க…” என்று நான் சொன்னதும் அனைவரும் சொன்னார்கள். 
     “ஒரு தமிழ் புக் கொடுங்க …” எனக் கேட்டதும், பத்துக்கு மேற்பட்டவர்கள் எழுந்து “இந்தாங்க ஐயா…” என நீட்டினார்கள்…
    “எதுக்கு இப்பிடி…ஆடு மாடு மாதிரி…எழுந்திருக்கிறீங்க… எதாவது கேட்ட யாராவது ஒருவர் மட்டும் கொடுத்தால் போதும்.”  என்று கூறினேன். 
     “யாராவது வகுப்புக்குள் வந்தா  எழுந்து நின்றுதான் வணக்கம் சொல்ல வேண்டும்.  நம்மள பாத்த படுச்சவங்க மாதிரி தெரிய வேணும்…” என்று அவர்களுக்கு அறிவுரை சொன்னேன். 
     சரி, “யாருக்கு திருக்குறள் தெரியும்?” எனக் கேட்டேன்.  யாரும் எதுவும் பேசவில்லை.  எல்லோரும் அமைதியாக இருந்தனர்.  ஏன்?  என்ற வினாவோடு எல்லோரையும் பார்த்தேன்.  அனைவரும் தலையை கீழே பொட்டுக் கொண்டு ஏதோ…முணுமுணுத்துக் கொண்டிருந்தனர்.
     அவர்களால் எதையும் தைரியமாக சொல்ல முடியவில்லை. 
     “டேய்! சுரேஷ்;  நீ சொல்லுடா… டேய் ரகு நீ சொல்லு” என்று ஒருத்தர் விடாம பெயர் சொல்லிக் கொண்டே இருந்தேன். 
     யாரும் எதையும் சொல்ல வில்லை.  அனைவரும் எழுந்து தன் இருகைகளையும், கட்டிக்கொண்டு இருந்தனர். 
     “டேய்…நான் வகுப்புக்குள் இருக்கும்போது நீங்க என்னத்தான் பாக்கணும்.  சும்மா… ஜன்னலைப்  பாக்கக் கூடாது.” எனச் சொல்லி முடிக்கும் முன்… அனிதா ஜன்னலை வெறித்துப் பார்ததாள்.
     “என்ன”   எனக் கேட்டேன்.
     “எங்க அம்மா…சார்,” எனக் கை காண்பித்து சொன்னாள். 
     “இந்தப் பக்கம் வரச் சொல”; எனக் கடிந்தேன். 
     அவுங்க அம்மா, கதவுப் பக்கம் வந்து “தலையை சொரிந்த வாரே! இன்னிக்கு! 3 மணிக்கு ரேஷனில் சீமெண்ணை உத்தராங்க! ஆதான் அனிதாகிட சொல்லி வாங்கச் சொல்லி;ட்டு நா… காட்டுக்கு கூலி  வேலைக்குப் போலாமேன்னு”…. சார்.
     “தெனமும்…இப்படியே… ஊரே….ஒருத்தர் விடாம… புள்ளைகிட்ட வெலை சொன்னா அவுங்க எப்ப்பெ; படிப்பாங்க…?
     “இல்ல சார்!”
     “இப்ப     வாங்கலீன்னா?”
     “அவ எப்படி  சார் வீட்டில படிப்பா…? என அந்த அம்மா கேட்டாள்!
     “ஏ! நீங்க போய் வாங்கலாமில்ல!”
     “நா… போய் சீமெண்ணை வாங்கினா! எனக்குப் பதிலா! நீங்களா,  போய் காட்டுல வேலை செய்வீங்க?
     “வகுப்பில் புள்ளைங்க படிக்கிறதே! கஷ்டம,;  அதுல…  அதுக படுச்ச மாதிரிதான்     சரி…சரி!  என்னமோ!  செய்யுங்க!”  “போமா … அனிதா! என்றேன். 
     காசும், கேனையும் மகளிடம் கொடுத்துவிட்டு,  தூக்கு வாளியை எடுத்துக் கொண்டு அந்தப் பெண் போனாள். 
     “வணக்கம் சார்!”   என 50 வயதுக்கு மேல் உள்ள  ஒரு பெரியவர் வந்து  தலையில் இருந்த துண்டை எடுத்து கக்கத்தில் கட்டிக் கொண்டு குறுகி நின்றார். 
     அவரைப் பார்த்த எனக்கு ஒரே சிரிப்புதான் வந்தது. 
     இந்தியா சுதந்திரம் வாங்கி இத்தனை ஆண்டுகள் ஆகியும் எந்த மனிதர்களும் கைகளைக் கட்டி நடுங்கும் தன்மையை மறக்காமல் வைத்திருக்கிறார்களே! என எனக்குள்ளே புலம்பிக் கொண்டேன். 
     ஏ!... என்னப்பா! என்ன வேண்டும்?
     சார் ஏ! பையனை கூப்புட்டுக்கிறேன். 
     ஏ!  என்ன  விசயம்?
     “அது இல்ல சாரே!  நா… நாளைக்கு வெளியூர் போறேன்.  ஆதனால எம்புள்ள ஸ்கூலுக்கு வரமாட்டான்@  நா… செஞ்ச  வேல மீதி இருக்கு அதை அவன் செய்வான்.@ அப்புறம்!     எனக்கு வேற சட்டை இல்லை@   என் என் சட்டையை இவ போட்டுக்குட்டு வந்துட்டான்.  வேற சட்டத்துணி இல்ல.  இவ! இங்க வந்துட்டா எம் பொழப்பு நாறிடும்.  அதுனால இந்த சட்டத் துணியை போட்டுக் குட்டுதான் போகணும்.”  என்றார்  அவர்.
     “ஏண்டா! இந்த வேலைக்கு   வந்தோம?”; என எனக்கு நானே  கேள்வி கேட்டுக் கொண்டேன். 
     காலம் மாறியது.  காட்சி மாறியது.  இரண்டு ஆண்டுகள் போனதே தெரியவில்லை   இந்த மனிதர்களின் முதுகு கேள்விக் குறி போல வளைந்தே இருப்பதை உணர்ந்தேன். 
     நான் எப்போதும் எந்த வேலைகளைச் சொன்னாலும் மூணு பேர் நாலு பேர் ஓடுவதைப் பார்க்கும் போது  நான் பள்ளியில் எங்க டீச்சருக்கு வேலை செய்தது நினைவுக்கு வந்து போனது.    ஒரு மனிதனை கல்வி மற்றுமே மாற்றும் என்பது எத்தனை உண்மை என்பதை உணர்ந்தேன்.
     அந்த கிராம மக்கள் அதிகமான பாசத்தை வைத்து இருந்தார்கள்.  என்னை எங்கு பார்ததாலும் வணக்கம் சொல்லுவது@ நலம் விசாரிப்பது என என் மேல் அன்பைப் பொழிந்தார்கள். 
     எனக்கு வேறு ஊருக்கு மாற்றலாகி வுந்தும்  போகாமல் மேலும் இரண்டு ஆண்டுகள் அதே ஊரில் இருந்தேன். 
     ஒரு நாள் இரவு பதினோரு மணி இருக்கும்.  ஒரு பெண் அழுது கொண்டே என் வீட்டு கதவைத் தட்டிக் கொண்டே இருந்தாள்.  திடுக்கிட்டு எழுந்து கதவைத் திறந்தேன். 
     அந்தப் பெண் அனிதா…தான்.  ஏன் எனக் கேட்டேன். “அவங்க அம்மா உடம்பு சரியில்லாம… கத்திக் கொண்டு இருப்பதை”  அழுது  கொண்டே  சொன்னாள். 
     “சரி…என…அந்தப்  பெண்ணுடன் அவங்க வீட்டுக்குப் போN;னன்.  ஆங்கு வேறு யாரும் இல்லை, அவர்கள் இருவர் மட்டும்தான் என்பதை உணர்ந்து கொண்டு ஆட்டோவைப் பிடித்து பக்கத்தில் இருக்கும் ஜீ.ஆர் ஹாஸ்பிடலுக்கு கூட்டிட்டு வந்தேன்.” 
     டாக்டர் வந்து அந்த அம்மாவை, பரிசோதித்துப் பார்த்து விட்டு, “ஒரு வாரம் மருத்துவ மனையில் இருக்க  வேண்டும”; என்ச் சொன்னார். 
     அந்தப் பெண்ணிடம் எவ்வளவு  பணம் இருக்கிறது எனக் கேட்டேன்.  தன்னிடம் 500 ரூபா இருப்பதை சைகயில் சொல்லி பணத்தைக் காட்டினாள்.   என்னிடம் இருந்த பணத்தையும் சேர்த்து  ஹாஸ்பிட்டலில் கட்டிவிட்டு அங்கு  இருந்த நாற்காலியில்  அமர்ந்து கொண்டு மேலேநிமிர்ந்து பார்த்தேன்;;.  அன்னை தெரசா… ஒரு குழந்தையைக் கொஞ்சிக் கொண்டு இருந்தார். 
     அந்தப் போட்டோவுக்கு கீழே ஒரு வாசம் எழுதியிருந்தது…
     “இவள் கருவுற்றிருந்தால்  ஒரு குழந்தைக்கு தாயாக இருந்திருப்பாள்- கருணையுற்றதால் தான் ஆயிரம் குழந்தைகளுக்குத் தாயானாள்”     என்று எழுதியிருந்தது. 
     பிறருக்கு உதவுங்கள் - நன்மை பயக்கும் என நினைத்துக் கொண்டு அனிதாவின் கைகளை இறுக பற்றிக் கெண்டு வாங்கி விட்டேன்.

No comments:

Post a Comment

கணவன் - மனைவி உறவைவிட உன்னதமான உறவு உண்டா?

கணவனுக்குத் தலைவலி. நெற்றியை அழுத்திப் பிடித்துக் கொண்டு சோபாவில் உட்கார்ந்திருக்கிறான். மனைவி கொஞ்சம் தைலம் எடுத்து வந்து, கணவன் அருகில் அம...