Tuesday, February 21, 2023

சேலம், பாரதியார் கல்லூரியில் உலக தாய்மொழி தினவிழா...





சேலம், பாரதியார் மகளிர் கலை அறிவியல்கல்லூரியில்  21.02.2023 இன்று உலக தாய் மொழி தினவிழா கொண்டாடப்பட்டது. இவ்விழாவிற்கு பாரதியார் மகளிர் கல்வி நிறுவனங்களின் தலைவர் செ.இளையப்பன் அவர்கள் தலைமை தாங்கினார்.பாராதியார் கல்வி நிறுவனங்களின் அனைத்து இயக்குநர் பெருமக்களும் முன்னிலை வகித்தனர்.கல்வி நிறுவனங்களின் செயலர் டாக்டர் ஏ.கே.  ராமசாமி, பொருளாளர் எஸ்.ஆர்.டி. செல்வமணி அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்கள். பாரதியார் மகளிர் கலை அறிவியல் கல்லூரி முதல்வர் முனைவர் டி. இராஜகுமாரி அவர்கள் வரவேற்புரை வழங்கினார்.சிறப்பு விருந்தினர் சென்னை, ஜேப்பியார் பல்கலைக்கழகம்,  தமிழ்த்துறைத் தலைவர், முனைவர் பூ.மு. அன்புசிவா “செம்மொழியான தமிழ் மொழியே"- என்ற தலைப்பில் தமிழின் சிறப்பும், தமிழரின் பெருமை, தமிழ் மொழியின் அருமையை மாணவிகளுக்கு எடுத்துரைத்;தார். தாய்மொழியை பறைசாற்றும் விதமாக பாரதியார் மகளிர் கல்லூரி தமிழ்த்துறை மாணவிகள்;  தேசத் தலைவர்கள், தமிழ் அறிஞர்கள் என பல மாறு வேடங்கள் அணிந்து தாய் மொழி தினத்தை பெருமைப்படுத்தினர். பல நூற்றாண்டு கண்ட தமிழின் பெருமையை மாணவிகள் நடன நிகழ்ச்சிகள் மூலம் நிகழ்த்தினர். இறுதியாக தமிழ்த்துறை, உதவிப்பேராசிரியர் கே. புஷ்பா அவர்கள் நன்றி கூறினார்.

கணவன் - மனைவி உறவைவிட உன்னதமான உறவு உண்டா?

கணவனுக்குத் தலைவலி. நெற்றியை அழுத்திப் பிடித்துக் கொண்டு சோபாவில் உட்கார்ந்திருக்கிறான். மனைவி கொஞ்சம் தைலம் எடுத்து வந்து, கணவன் அருகில் அம...