அறிவியல் மேதையே...!
தென்னிந்தியாவின்
கடைக்கோடியில்
பிறந்திருந்தாலும்
எங்களை
தலைக்கோடியிலிருந்து ஆண்ட
எங்கள் எளிமைத் தலைவனே…
குறளுக்கு இலக்கணமாய் இருந்து
குமரித்தமிழ் பரப்பிய
உண்மைத் தலைனே...
அணுவின் அசைவுகளை
நுணுக்கமாய் ஆராயும்
அமெரிக்காவின் கண்ணில்
மண்ணைத் தூவி
பொக்ரானில் அணுவைப் பிளந்த
விஞ்ஞானத் தலைனே...
எங்கள் இதயத்தில்
சிம்மாசனமிட்ட
அறிவியல் மேதையே...
உன்னை இழந்து தவிக்கின்றோம்
நீ மீண்டும் எழுந்துவா
அன்புக் கரம் கொண்டு
உன்னை அழைக்கிறோம்
மீண்டும் வா...”
நமது இந்தியாவை
மீட்க வா... தலைவா...!
கவிஞர் அன்புசிவா, கோவை.
பேச:9842495241.