தேவதைக்கான காத்திருப்பு
அது ஒரு தனித்த உலகம்
அங்கே கவிதைகள் கூத்தாடும்
சிரிப்பும் கும்மாளமும் தேர்ந்தாடும்
கவலைக்கு அங்கே தடை உத்தரவு
சந்தோசம் மட்டுமே நிரந்தரம்
எல்லோருக்கும் எல்லோருக்கும்
அன்பு மட்டுமே பகிர்ந்தளிக்கப்படும்
கண்ணீருக்குக் கதவடைப்பு
புன்னகை மட்டுமே கையிருப்பு
இப்படியான உலகத்தில்
ஒற்றை அரசன் கவிஞர் அன்புசிவா...
தன் தேவதைக்கான காத்திருப்பு
இந்த நிலாவும் பட்டாம்பூச்சியும் கவிதைத் தொகுப்பு....
கவிஞர் அன்புசிவாவின் மனசின்
ஆழத்திலிருந்து ஊற்றாகக்
கசியும் கவித்துவம்-அவரைக்
காலமெல்லாம் கைப்பிடித்து
வழி நடத்தும்... இன்னும்
கொஞ்ச காலத்தில் ஒரு
தேவதை வருவாள். அவளுக்கு இப்போதே
எழுதிமுடித்திருக்கும் அன்புசிவா கவிதைகள்
சொல்லும்-அவரின் மனசுக்குள்
பொதிந்து வைத்திருக்கும்
பாசத்தையும் நேசத்தையும்...
இது தேவதைக்கான வாசல் வீசும் தொகுப்பு.
“இந்த நினைவின் இல்லத்தில்
தாழ்ப்பாள் ஏதும் இல்லை
கதவு திறந்துதானிருக்கிறது”
என்று பிரகடனம் செய்யும் கவிஞர் அன்புசிவாவுக்கு
முதல் மழை வாசம் போல் நெகிழும் குணம்
நெகிழ்த்தும் குணம் இரண்டும் உண்டு.
கிராமத்து வெக்கைக்காற்றும்,
புழுதி மண்ணும்,குளத்தின்
நீர்த்திவலையும்,மாடுகளின் மேய்ச்சலும்,
கோழிகளின் பாய்ச்சலுமாக
கருப்பட்டிச் சிறுவனாக வளர்ந்த அன்புசிவா
இன்றைக்குக் கவிஞர், முனைவர், பேராசிரியர்...!
நகரும் ஒவ்வொரு வினாடியுமே
ஆச்சரியங்களின் இருப்பிடம் தான்
அதிசங்களின் பிறப்பிடம் தான்
ஒடி நொடி துவங்கி அடுத்த நொடி
ஆவதற்குள் எந்தவொரு
மனிதரையும் அன்பினால்
வசீகரிக்கம் மாயம் அன்புசிவாவுக்கு உண்டு.
இப்போதும் வசீகரிக்கிறார் கவிதைகளோடு...
“நாளைய ஏக்கம்
நேற்றைய கவலை பலருக்கு
இன்று இந்த நிமிசம்
நாமிருப்பதே நிஜம்”
என்கிற கவிதை சொல்லும் வாழ்வியல் தத்துவம்
எளிய வார்த்தையில் வலிய சிந்தனை.
“அடங்காப் பசியென
வார்த்தைகளை
விழுங்கிக் கொண்டேயிருக்கிறேன்” என்று கூறுகிறார்.
பரவாயில்லை அன்புசிவா
விழுங்கிய வார்த்தைகள்
கவிதைகளாகக் கனிவதால்
நீங்கள் - கோடி கோடி
வார்த்தைகளையும் விழுங்களாம்.
உற்சாக அன்புசிவாவுக்கு ஒரு சின்ன நெருடல்
“ஒரு மரணத்தை ஒத்த நிகழ்வு
என்னைச் கூழ்ந்நு கொள்கிறது”
என்று ஒப்புதல் வாக்குமூலம் தருகிறார்.
உங்களின் மனஇருக்கம் கரையட்டும்
வெளிச்சங்கள் நிறையட்டும்.
“ஏனோ தானோ வென
எழுதிக் கொண்டிருக்கிறேன்
கவிதைகளை
எப்படியும் நீ வாசிக்கையில்
அழகாகி விடும் என்ற நம்பிக்கையில்”
இப்படியாக அன்புசிவா அந்தத் தேவதைக்காகக்
காத்துக்கொண்டிருக்கிறார். நானும்
காத்துக் கொண்டிக்கிறேன்
கை நிறைய அட்சதையோடு
என்றும் அன்புடன்
கவிஞர் ஆண்டாள் பிரியதர்சினி
01.01.2013
அது ஒரு தனித்த உலகம்
அங்கே கவிதைகள் கூத்தாடும்
சிரிப்பும் கும்மாளமும் தேர்ந்தாடும்
கவலைக்கு அங்கே தடை உத்தரவு
சந்தோசம் மட்டுமே நிரந்தரம்
எல்லோருக்கும் எல்லோருக்கும்
அன்பு மட்டுமே பகிர்ந்தளிக்கப்படும்
கண்ணீருக்குக் கதவடைப்பு
புன்னகை மட்டுமே கையிருப்பு
இப்படியான உலகத்தில்
ஒற்றை அரசன் கவிஞர் அன்புசிவா...
தன் தேவதைக்கான காத்திருப்பு
இந்த நிலாவும் பட்டாம்பூச்சியும் கவிதைத் தொகுப்பு....
கவிஞர் அன்புசிவாவின் மனசின்
ஆழத்திலிருந்து ஊற்றாகக்
கசியும் கவித்துவம்-அவரைக்
காலமெல்லாம் கைப்பிடித்து
வழி நடத்தும்... இன்னும்
கொஞ்ச காலத்தில் ஒரு
தேவதை வருவாள். அவளுக்கு இப்போதே
எழுதிமுடித்திருக்கும் அன்புசிவா கவிதைகள்
சொல்லும்-அவரின் மனசுக்குள்
பொதிந்து வைத்திருக்கும்
பாசத்தையும் நேசத்தையும்...
இது தேவதைக்கான வாசல் வீசும் தொகுப்பு.
“இந்த நினைவின் இல்லத்தில்
தாழ்ப்பாள் ஏதும் இல்லை
கதவு திறந்துதானிருக்கிறது”
என்று பிரகடனம் செய்யும் கவிஞர் அன்புசிவாவுக்கு
முதல் மழை வாசம் போல் நெகிழும் குணம்
நெகிழ்த்தும் குணம் இரண்டும் உண்டு.
கிராமத்து வெக்கைக்காற்றும்,
புழுதி மண்ணும்,குளத்தின்
நீர்த்திவலையும்,மாடுகளின் மேய்ச்சலும்,
கோழிகளின் பாய்ச்சலுமாக
கருப்பட்டிச் சிறுவனாக வளர்ந்த அன்புசிவா
இன்றைக்குக் கவிஞர், முனைவர், பேராசிரியர்...!
நகரும் ஒவ்வொரு வினாடியுமே
ஆச்சரியங்களின் இருப்பிடம் தான்
அதிசங்களின் பிறப்பிடம் தான்
ஒடி நொடி துவங்கி அடுத்த நொடி
ஆவதற்குள் எந்தவொரு
மனிதரையும் அன்பினால்
வசீகரிக்கம் மாயம் அன்புசிவாவுக்கு உண்டு.
இப்போதும் வசீகரிக்கிறார் கவிதைகளோடு...
“நாளைய ஏக்கம்
நேற்றைய கவலை பலருக்கு
இன்று இந்த நிமிசம்
நாமிருப்பதே நிஜம்”
என்கிற கவிதை சொல்லும் வாழ்வியல் தத்துவம்
எளிய வார்த்தையில் வலிய சிந்தனை.
“அடங்காப் பசியென
வார்த்தைகளை
விழுங்கிக் கொண்டேயிருக்கிறேன்” என்று கூறுகிறார்.
பரவாயில்லை அன்புசிவா
விழுங்கிய வார்த்தைகள்
கவிதைகளாகக் கனிவதால்
நீங்கள் - கோடி கோடி
வார்த்தைகளையும் விழுங்களாம்.
உற்சாக அன்புசிவாவுக்கு ஒரு சின்ன நெருடல்
“ஒரு மரணத்தை ஒத்த நிகழ்வு
என்னைச் கூழ்ந்நு கொள்கிறது”
என்று ஒப்புதல் வாக்குமூலம் தருகிறார்.
உங்களின் மனஇருக்கம் கரையட்டும்
வெளிச்சங்கள் நிறையட்டும்.
“ஏனோ தானோ வென
எழுதிக் கொண்டிருக்கிறேன்
கவிதைகளை
எப்படியும் நீ வாசிக்கையில்
அழகாகி விடும் என்ற நம்பிக்கையில்”
இப்படியாக அன்புசிவா அந்தத் தேவதைக்காகக்
காத்துக்கொண்டிருக்கிறார். நானும்
காத்துக் கொண்டிக்கிறேன்
கை நிறைய அட்சதையோடு
என்றும் அன்புடன்
கவிஞர் ஆண்டாள் பிரியதர்சினி
01.01.2013
No comments:
Post a Comment