Wednesday, May 06, 2020

சங்க இலக்கியத்தில் வழிபாட்டுத் தொன்மங்கள்

முனைவர் பூ. மு. அன்புசிவா
இணைப்பேராசிரியர் மற்றும் தலைவர்,
தமிழ்த்துறை,
சங்கரா அறிவியல் மற்றும் வணிகவியல் கல்லூரி,
கோவை.
பேச:098424 95241.
பண்டையத் தமிழரின் வாழ்வியலைப் படம் பிடித்துக் காட்டும் காலக் கண்ணாடியாக சங்க இலக்கியங்கள் திகழ்கின்றன. அவற்றுள் சிறப்பு வாய்ந்த நூலாக விளங்குவது குறுந்தொகை ஆகும். இஃது எட்டுத் தொகையில் இடம் பெறும் அகநூல்களுள் ஒன்றாகும். இதில் கடவுளரைப் பற்றியும், கடவுள் வழிபாடு குறித்தும் பல்வேறு தொன்மக்கருத்துக்கள் இடம்பெற்றுள்ளன. இவை பழந்தமிழரின் சமய நம்பிக்கைகளை எடுத்துரைப்பனவாக உள்ளன.
தொன்மம் – விளக்கம்
தொன்மம் (ஆலவா) என்பது பழமை எனப் பொருள்படும். அகராதிகள் தொன்மம் என்பதற்கு பழமை, செய்யுளில் இடம் பெறும் எண்வகை வனப்புகளில் ஒன்று எனப் பொருள் தருகின்றன.பொதுவாக தொன்மம் எனப்படுவது பண்டைய மக்களின் சமயம், பழக்கவழக்கங்கள், வரலாற்றுக் குறிப்புகள், கலைகள் போன்ற வாழ்க்கையைச் சார்ந்த நம்பிக்கைகள் மற்றும் சடங்கு முறைகளைக் குறிக்கும்.
‘‘தமிழில் வீரம் என்பதற்கு நிகரான சொல்லாக ‘பெருமிதம்’ என்பதனை பழந்தமிழர்கள் பயன்படுத்தினர். அதுபோலவே புராணம் என்பதற்கு இணையான தமிழ்ச்சொல்லாக ‘தொன்மை’ என்ற சொல் தொல்காப்பியத்தில் பயன்படுத்தப் பட்டுள்ளது’’(யாழ். சு. சந்திரா, தொன்மவியல் கட்டுரைகள், ப., 8)
தொன்மம் என்பது நமக்குள் புதிதாக உருவாவதன்று அது நம் பிறப்பிலிருந்தே உண்டு என்பதை, ‘‘தொன்மமானது மனத்தின் விழிப்புநிலையில் ஆழ்மனத்தில் கருப்பெறுகின்றது. நம்மைக் கேட்காமலேயே உடல் வளர்வதைப் போலவே இயற்கையாகவே தொன்மங்கள் உரம் பெறுகின்றன’’     ( கதிர்.மகாதேவன், தொன்மம், ப. 19) என்கிறார் கதிர் மகாதேவன்.
‘‘தொன்மம் என்பது புனிதமான உண்மை (ளுயஉசநன வுசரநன) என்கிறது அமெரிக்கானா கலைக்களஞ்சியம்.  மேலும், தொன்மம் செயல்பாட்டின் அடிப்படையில் சடங்குகளுடனும் சமயங்களுடனும் தொடர்புடைய சமுதாயம் சார்ந்த கதை’’ (யாழ்.சு. சந்திரா, தொன்மவியல் கட்டுரைகள், ப. 49) எனலாம்.
ஆலவா (மித்) என்ற ஆங்கிலச் சொல் ஆலவா என்ற கிரேக்கச் சொல்லின் வேர்ச் சொல்லாகும். இதற்கு நிகரான தமிழ்ச் சொல்லாக ‘தொன்மம்’ கையாளப்பட்டு வருகிறது. கடவுள் பற்றியும் உயர்மனிதர்கள் பற்றியும் அமைந்த செய்திகள் தொன்மத்தில் அடங்கும்.
தொன்மம், பழமரபுக் கதைகள் இரண்டும் ஒன்றுமையுடையதாக இருப்பினும் இரண்டிற்கும் வேறுபாடு உண்டு தொன்மம் கடவுளர் செயல்களை விரித்துரைப்பது; பழமரபுக் கதைகள் மனிதர்களை முதன்மைப்படுத்துவது; சமயம் சார்ந்தும் சடங்குகளைப் பற்றி விளக்குவதும் தொன்மத்தில் அடங்கும்.
தொல்காப்பியம் தரும் விளக்கம்
தமிழின் இலக்கண நூலான தொல்காப்பியம் தொன்மம் என்பதற்கு,
‘‘தொன்மை தானே சொல்லுங் காலை
உரையொடு புணர்ந்த பழமை மேற்றே’’
என்கிறது தொன்மை எனப்படுவது, உரையோடு கூடிய பழமையாகிய கதைப் பொருளில் வருவது’’ (தொல் – செய். இளம்பூரணர் உரை, நூ.எ., 538)என்று இளம்பூரணர் உரை விளக்கமளிக்கிறது.
மேலும், முதல் பொருளுள் நிலம் பற்றிக் கூற விளைந்த தொல்காப்பியர்,
‘‘மாயோன் மேய காடுறை உலகமும்
சேயோன் மேய மைவரை உலகமும்
வேந்தன் மேய தீம்புனல் உலகமும்
வருணன் மேய பெருமணல் உலகமும்
முல்லை குறிஞ்சி மருதம் நெய்தலெனச்
சொல்லிய முறையாற் சொல்லவும் படுமே’’
(தொல்., அகத்திணை., நூற்பா, 5)
என்ற இந்நூற்பாவின் மூலம் கடவுளர் பற்றிய தொன்மங்களைப் பதிவு செய்கிறார்.
குறுந்தொகையில் வழிபாட்டுத் தொன்மங்கள்
குறுந்தொகையில் இடம் பெறும் கடவுளர் பற்றிய வழிபாட்டுத் தொன்மங்களை,
1.முருகன் பற்றிய தொன்மம்
2.கொல்லிப்பாவை பற்றிய செய்திகள்
3.இயற்கை வழிபாடு
4.நடுகல் வழிபாடு  என நான்கு வகையாகப் பகுக்கலாம்.
முருகன் பற்றிய தொன்மம்
‘‘சேயோன் மேய மைவரை உலகம்’’ எனத் தொல்காப்பியம் செப்புவதிலிருந்து குறிஞ்சி நிலக் கடவுள் முருகன் என்பது புலனாகிறது.
குறுந்தொகையில் முருகன் பற்றிய செய்திகள் கிடைக்கின்றன.  முருகப் பெருமான் அசுரர்களை அழித்த புராணச் செய்தியை,
‘‘செங்களம் படக்கொன்று அவுணர் தேய்த்த
செங்கோ லம்பின் செங்கோட்டி யானை
கழல்தொடிச் சேஎய் குன்றம்’’ (குறுந்.,பா.உ.1)
என்ற வரிகள் விளக்கி நிற்கின்றன.  இதேபோல் முருகன் சூரபத்மனை வதம் செய்த நிகழ்வை,
‘‘அவுணர் நல்வலம் அடங்கக் கவிழ்இனர்
மாமுதல் தடிந்த மறுஇல் கொற்றத்து’’
(திருமுருகாற்றுப்படை, 59-60 வரிகள்)
எனத் திருமுருகாற்றுப்படையும்,
‘‘பாய்இரும் பனிக்கடல் பார்துகள் படப்புக்கு
சேய்உயர் பிணிமுகம் ஊர்ந்து, அமர்உழக்கி
தீஅழல் துவைப்ப திரிய விட்டெறிந்து
நோயுடை நுடங்கு சூர்மா முதல் தடிந்து
…………………
மாய அவுணர் மருங்குஅறத் தபுத்த வேல்’’
(பரிபாடல் செவ்வேள் 5 : 1-7 வரிகள்)
எனப் பரிபாடலும் எடுத்துரைக்கின்றன.  இச்செய்தியினைக் கந்தபுராணத்திலும் காணலாம்.
கொல்லிப்பாவை பற்றிய செய்திகள்
மலையின் ஒரு பகுதியில் இடம் பெற்ற அணங்கு போன்ற பெண் தெய்வம் அல்லது தெய்வத்தால் வரையப்பட்ட பாவை கொல்லிப்பாவையாகும்.
சேர மன்னனின் மலையின் மேற்குப் பகுதியில் வருத்தக் கூடிய கொல்லித் தெய்வம் இருந்ததனை,
‘‘பெரும்பூண் பொறையன் பேஎமுதிர் கொல்லிக்
கருங்கண் தெய்வம் குடவரை எழுதிய
நல்லியற் பாவை’’ (குறுந்தொகை, ப., 130)
என்ற பாட்டாலும்,
‘‘வல்வில் ஓரி கொல்லிக் குடவரை
பாவையின் …….. ……….. ……..’’
என்ற பாட்டாலும் அறிய முடிகிறது. மேலும்,
‘‘…………. ………… பயங்கெழு பலவின்
கொல்லிக் குடவரை பூதம் புணர்த்த
புதிதியல் பாவை’’                      
(குறுந்தொகை, ப., 145)
என்ற பாடல் வாயிலாகவும், கொல்லிமலையின் மேற்குப் புறத்தில் தெய்வத்தால் வரையப்பட்ட பாவை உண்டென்பதை,
‘‘பொறையன் உரைசால் உயர்வரைக் கொல்லிக்
குடவயின் ……….. …………… ……………
நெடுவரைத் தெய்வம் எழுதிய
வினைமான் பாவை’’
(நற்றிணை, பா.எ., 192)
என்ற பாடலின் வாயிலாகவும் உணர முடிகிறது. இவை கொல்லித் தெய்வம் பற்றிய வழிபாட்டுத் தொன்மங்களை விளக்கும் வகையில் அமைந்துள்ளன.
இயற்கை வழிபாடு
பண்டையத் தமிழர்கள் இயற்கையைக் கண்டு அஞ்சி வாழ்ந்தனர்.  அதனால், அச்சத்தைப் போக்க எண்ணி இயற்கையோடு கூடியியைந்து வாழ்ந்தனர்.
சங்க கால மக்கள் பெண்கள் பிறையைத் தெய்வமாக தொழுது வணங்கினர் என்பதை,
‘‘செவ்வாய் வானத் தையெனத் தோன்றி
இன்னம் பிறந்தன்று பிறையே’’
(குறுந்தொகை, ப., 459)
என்ற குறுந்தொகைப் பாடல் விளக்குகிறது. இப்பாடலில் பிறையைப் பலசமயத்தோடும் தொழுதனர் என்ற செய்தி இடம் பெறுகிறது.  மேலும் கன்னிப் பெண்களும் பிறையை வணங்கினர். இச்செய்தியை,
‘‘ஒள்ளிழை மகளிர் உயர்பிறை தொழூஉம்
புல்லென் மாலை’’       (அகநானூறு, பா.எ., 239)
என்னும் அகநானூற்றுப் பாடல் வரிகளும்,
‘‘குடமுதல் தோன்றிய தொன்றுதொழு பிறையின்
வழிவழி சிறக்க நின்வலம்படு கொற்றம்’’
(மதுரைக் காஞ்சி, 193-194 வரிகள்)
எனும் மதுரைக் காஞ்சி வரிகளும் புலப்படுத்துகின்றன.
‘‘கன்னிப் பெண்கள் மட்டும் பிறையைத் தொழுவதற்கானக் காரணம் நல்ல கணவனைப் பெற்று இல்லறம் சிறக்கவும், கரு வயிற்றில் உருவாகவும், மழைவளம் சுரந்து வளம் பொழிய வேண்டும் என்பதற்காகவும் ஆகும்’’ (மேற்கோள் விளக்கம் – கோ.ப. சுதந்திரம், பொதுச்சடங்குகளில் இலக்கியம், ப., 62).
நடுகல் வழிபாடு
தம் நாட்டினைக் காக்கும் பொருட்டு, பகைவரோடு போரிட்டுப் பட்டு வீழ்ந்த வீரனுக்காக எடுக்கப்படுவது ‘நடுகல்’ எனப்படும்.
இந்நடுகல்லில் இறந்துபட்ட வீரனின் பெயரும் பீடும் எழுதி, தெய்வமாக வழிபட்டு வந்ததைத் தொல்காப்பியர் காலந்தொட்டு அறிய முடிகிறது.  இதனையே,
“காட்சி கால்கோள் நீர்ப்படை நடுதல்
சீர்த்தகு மரபின் பெரும்படை வாழ்த்தலென்று
இருமூன்று மரபின் கல்லொடு புணர’’
(தொல், புறத்., இளமபூரணர் உரை, நூ.எ., 63)
எனத் தொல்காப்பியம் மொழிகிறது.
மறக்குடியில் பிறந்த அனைவரும் இந்த நடுகல் வழிபாட்டைத் தம் இனத்திற்குச் சிறந்ததெய்வ வழிபாடாகக் கொண்டு வாழ்ந்தனர். இச்செய்தியை,
‘‘ஒன்னாத் தெவ்வர் முன்னின்று விலங்கி
ஒளிறேந்து மருப்பிற் களிறெறிந்து வீழ்ந்தெனக்
கல்லே பரவினல்லது
நெல்லுகுத்துப் பரவும் கடவுளும் இலமே’’
(புறநானூறு, பா.எ., 335)
எனும் இப்புறநானூற்றுப் பாடலும் புலப்படுத்துகிறது.
இத்தகு புகழ்வாய்ந்த நடுகல்லில் வீரரது பெயரும் பீடும் பொறிக்கப்பட்டு இருப்பதற்கு,
‘‘நல்லமர்க் கடந்த நாணுடை மறவர்
பெயரும் பீடும் எழுதி அதர்தொறும்
பீலிசூட்டிய பிறங்குநிலை மறவர்’’ (பா.எ., 67)
என்ற அகநானூற்றுப் பாடலே சிறந்த சான்றாகும்.
இவ்வாறு எடுக்கப்பட்ட நடுகல்லிற்கு வீரர்கள் தங்களது கிடுகினையும், வேல்களையும் வரிசையாய் நிரல்களாக நட்டு அரண் செய்தனர். இந்தச் செய்தியை,
‘‘மாலைவேல் நட்டு வேலி யாகும்’’ (குறுந்தொகை, ப., 358)
எனும் குறுந்தொகைப் பாடல் வரியும்,
‘‘கிடுகுநிரைத் தெஃகூன்றி
நடுகல்லின் அரண் போல’’ (பட்டினப் பாலை, 78-79 வரிகள்)
என்ற பட்டினப் பாலை வரிகளும் தெளிவாக உணர்த்துகின்றன.    இங்ஙனம் பழந்தமிழ் செவ்வியல் இலக்கியமான குறுந்தொகையில் கடவுளர் பற்றிய வழிபாட்டுத் தொன்மங்கள் அமைந்து தமிழர் தம் பண்பாட்டினையும் சமயஞ்சார்ந்த நம்பிக்கையினையும் புலப்படுத்துகின்றன.

நன்னூலில் நல்லாசிரியரின் பண்புகள்

முனைவர் அன்பு சிவா


இயற்றமிழ் இலக்கண நூல்களுள் அகத்தியத்திற்கு அடுத்தபடியாகப் போற்றப்படுகின்ற நூல்களில் ஒன்று தொல்காப்பியம். மற்றொன்று நன்னூல் ஆகும். சில்வகை எழுத்தில் பல்வகைப் பொருளைச் செறித்துச் சொல்லும் இந்நூல் இலக்கணச் சூத்திரங்களைக் கொண்டது. தொல்காப்பியத்தை முதல் நூலாகக் கொண்டு எழுதப்பட்ட நன்நூல் வழிநூல் மட்டுமல்ல, நல்ல வழிகாட்டி நூலும் ஆகும். இந்நூலின் வழி நல்லாசிரியரின் பண்புகளையும், தன்மைகளையும் நடத்தை நெறிகளையும் இக்கட்டுரை எடுத்துரைக்கிறது,
  கற்றுக் கொடுக்கிற ஆசிரியர் குலமும், கற்றுக் கொள்கிற மாணவர் குலமும் சேர்ந்தது தான் குருகுலம். இந்த இரண்டு குலங்கள் இல்லையென்றால் மனித குலத்திற்கு மகத்துவம் இல்லை. குருகுலக் கட்டமைப்புகள் உடைந்து மாணவர் மைய கல்வி ஆதிக்கம் செலுத்துகிறது. “ஒரு தேசத்தின் தலைவிதியை வகுப்பறைகள் நிர்ணயிக்கின்றன.” என்ற பொன்னெழுத்துகளுக்கு மதிப்பை வழங்கியவர்கள் ஆசிரியர்களே. “ஒரு குழந்தையின் முதல் ஆசிரியராக பெற்றோர், இரண்டாவது பெற்றோராக ஆசிரியர்”. என்ற வைர வரிகள் மாதா, பிதா, குரு போன்றோரின் சிறப்புகளைப் பட்டியலிடுகின்றன. குருமார்களை தெய்வமாக வணங்கிய காலம் போய், குருமார்கள் நண்பர்களாக மாறிவிட்ட புது யுகத்தில் ஆசிரியர்களின் சிறப்புகளை தொல்லிலக்கண நூல்களின் மூலமாக அலசி ஆராய்தல் சாலச் சிறந்தது
       “குலன்அருள் தெய்வம் கொள்கை மேன்மை
   கலைபயில் தெளிவு கட்டுரை வன்மை
   நிலம்மலை நிறைகோல் மலர்நிகழ் மாட்சியும்
   உலகியல் அறிவோடு உயர்குணம் இணையும்
   அமைபவன் நூலுரை ஆசிரி யன்னே”

உயாந்த குடிபிறப்பு. அருளுடைமை, கடவுள் பற்று, பல்கலைத் தேர்ச்சி, சொல்வன்மை, உலகியலறிவு, உயர்ந்த குணம் ஆகியவைகளை ஓர் ஆசிரியன் கொண்டிருக்க வேண்டும் என்று நன்னூல் எடுத்துரைக்கிறது. மேலும் பூமி, மலை, துலாக்கோல், மலர் ஆகியவற்றின் நற்பண்புகளையும் நல்லாசிரியன் பெற்றிருக்க வேண்டும் என்று வலியுறுத்தியும் உள்ளது.
  பல்கலைகளினால் தேர்சிப் பெற்ற ஆசிரியரால் தான் மாணவர்களின் அறிவுப் பசிக்குத் தீனி போட முடியும். எனவே கையளவு கற்ற கல்வியோடு நின்று போகாமல், கடலளவுக் கல்வியைப் பருகும் தாகத்தோடு வாழ்நாள் முழுவதும் கற்றலை நெடிய பயணமாக நல்லாசிரியர் கொள்ள வேண்டும். கற்றதையும் பெற்றதையும் விரித்துரைக்கும் சொல்வன்மைக்கு சொந்தக்காரராக விளங்கும் போதுதான் நல்ல போதிப்பு நிகழ்கிறது. அப்போதுதான் ஆசிரியரும் நல்ல தகவல் தொடர்பாளராகக் கற்பித்தலை நிகழ்த்த முடியும்.
  உள்ளார்ந்த நூலறிவும், உலகத்துப் பொது அறிவும் கொண்ட ஆசிரியர், தன் படிப்பறிவாலும் பட்டறிவாலும் மாணவர்களின் வாழக்ககைக்கான வசந்த வாசல்களைத் திறந்து வைக்கிறார். அறிவுடைமையோடு அருளுடைமையும் சேரும் போது பொறுமையின் சின்னமாய் ஆசிரியர் மாறிவிடுகிறார். இது நல்ல கற்றலுக்கான நல்ல சூழல்களை அகத்தேயும் புறத்தேயும் உருவாக்கித் தருகிறது.
  அறிவால், அன்பால், அருளால், கல்வியால், கருணையால், கனிவால், பண்பால், பழக்கத்தால், பொறுமையால், பெருமையால் மேலும் பலவற்றாலும் சிறந்து விளங்குபவராக ஓர் ஆசிரியர் இருத்தல் வேண்டும். அத்தகைய ஆசிரியரே மாணவர்களின் சிறந்த முன்மாதிரியாகத் திகழ்வர்.
      “தெரிவரும் பெருமையும் திண்மையும் பொறையும்
  பருவம் முயற்சி அளவிற் பயத்தலும்
  மருவிய நன்னில மாண்பா கும்மே”

பிறரால் அறிய முடியாத கல்விப்பெருமையைக் கொண்டிருக்கும் ஆசிரியர் பிறரால் முழுமையாக உணர்ந்து கொள்ள முடியாத நிலத்துடன் ஒப்பிடப்பட்டிருக்கிறார். தன்னிடம் நெருங்கிய மாணவர்களால் கலங்காத மனத்திண்மை கொண்ட ஆசிரியர். தன்மேலுள்ள பொருட்களால் கலங்காத வலிமையுடைய நிலத்திற்கு ஈடாக சுட்டப்பட்டிருக்கிறார்.
       “அளக்கல் ஆகா அளவும் பொருளும்
   துளக்கல் ஆகா நிலையும் தோற்றமும்
   வறப்பினும் வளந்தரும் வன்மையும் மலைக்கே”

அளவிட முடியாத கல்வியறிவும்; அளக்க முடியாத நூலறிவும்; கற்றவர்களால் அசைக்க முடியாத புலமையறிவும் கொண்ட ஆசிரியர் அளந்தறிய முடியாத வடிவமும், அளக்க முடியாத பொருள்களும், அசைக்க முடியாத வலிமையும் கொண்ட மலையுடன் ஒப்பிடப்பட்டிருக்கின்றார்.
      “ஐயம் தீரப் பொருளை உணர்த்தலும்
  மெய்க்கடு நிலையும் மிகும்நிறை கோற்கே”

வினவப்பட்டதற்கு ஐயம் நீங்க எடுத்துரைத்தலும், மாறுபட்ட இருவாpடத்தில் தான் நடுவுநிலையோடு நடந்துகொள்ளுதலும் ஆசிரியரின் அருங ;குணங்களாதலால் இங்கு ஐயம் தீர தன்மேல் வைக்கப் பட்ட பொருளை நிறுத்துக் காட்டுதலும், நடுநிற்றலும் செய்யும் துலாக்கோலுடன் ஆசிரியர் ஒப்புக்கூறப்பட்டுள்ளார்.
  பூமி, மலை, துலாக்கோலின் தன்மைகளோடு ஒப்பிடப்பட்ட ஆசிரியர், மலருடனும் ஒப்பு கூறப்பட்டுள்ளார்.
   “மங்கலமாகி இன்றியமையாது
   யாவரும் மகிழ்ந்து மேற்கொள மெல்கிப்
   பொழுதின் முகமலர் அ[டைமது பூவே”
நற்செயலுக்கு உரியவராய், எச்செயலுக்கும் இனியவராய், யாவரும் மகிழ்ந்து போற்றும் மென்மைப் பண்பு கொண்டவராய். பாடம் சொல்லும் காலத்தில் முகம் மலர்ந்து இருப்பவராய் ஆசிரியர் திகழ்வதால் தான் இங்கு ஆசிரியர் மலருடன் ஒப்பிடப்பட்டிருக்கிறார்.
  நல்லாசிரியர் ஆவதற்குரிய நற்பண்புகளை அறிவுறுத்திய நன்னூல், ஆசிரியர் ஆகக்கூடாதவர்களின் பண்புகளையும் பட்டியல் இட்டுள்ளது.
“மொழிகுணம் இன்மையும் இழிக்குண இயல்பும்
அழுக்காறு அவாவஞ்சம் அச்சம் ஆடலும்
கடற்குடம் மடற்பனை பருத்தி குண்டிகை
   முடத்தெங்கு ஒப்பென முரண்கொள் சிந்தையும்
உடையோர் இலர்ஆ சிரியர் ஆகுதலே”
உணர்ந்ததை உணர்த்தத் தெரியாத உரைத்திறனின்மை, பொறாமை, ஆசை, வஞ்சனை, அச்சம் ஆகிய உணர்வெழுச்சிகளோடு பேசுதல் போன்றவை ஆசிரியர் ஆகக் கூடாதவர்கள் இயல்புகள் என்று நன்னூல் முதன்மைப் படுத்துகிறது.

இவ்வாறு நல்ல ஆசிரியர்களுக்கு இருக்க வேண்டிய பண்பு நலன்களையும், இருக்கக் கூடாத பண்பு நலன்களையும் நன்னூல் உதாரணங்களோடு மனதில் பதியும் வண்ணம் எடுத்துரைத்துள்ளது. சிகரத்தைத் தொடுவதற்கு ஏணிகளாகவும், கரைகளை முத்தமிடுவதற்குத் தோணிகளாகவும் விளங்கும் ஆசிரியர் சமூகம் நல்ல சமூகமாக மாறும் போது, அந்த நல்ல பாதையில் மாண்புமிகு மாணவர் சமூகமும் பயணம் மேற்கொள்ளும். இந்தப் பயணம் புனிதப் பயணமாய் மானிடக் குலத்திற்கு மகத்துவம் சேர்க்கும். இதனால் ஒரு கல்விச் சாலைத் திறக்கப்படும் போது பல சிறைச்சாலைகள் மூடப்படும். அறிவில் ஊனமில்லாத ஞானத்தை நானிலம் முழுதும் தழைக்கச் செய்ய ஆசிரியர் சமூகத்தால் மட்டுமே முடியும்.

அறிஞர் அண்ணாவின் கவிதைகள்

இரா.காமராசு 


அறிஞர் அண்ணா தமிழ்ச் சமூகத்தில் அசை வியக்கத்தை உருவாக்கியவர்.  எழுத்துபேச்சுநடிப்புசெயல்பாடு..  எனப் பன்முக ஆளுமையாக மிளிர்ந்தவர்.
குள்ள உருவம்குறும்புப் பார்வைவிரிந்த நெற்றிபரந்த மார்புகறைபடிந்த பற்கள்கவலை யில்லாத தோற்றம்;நறுக்கப்பட்ட மீசை;நகை தவழும் முகம்;சீவாத தலை;சிறிதளவு வெளிவந்த தொப்பைசெருப்பில்லாத கால்பொருத்தமில்லாத உடைகள்இடுப்பில் பொடி மட்டை,கையில் வெற்றிலை பாக்கு பொட்டலம். இந்தத் தோற்றத்தோடு அதோ காட்சியளித்து நிற்கிறாரே அவர் தான் அண்ணாஎன அவரின் புறத்தோற்றத்தைக் காட்சிப்படுத்துவார் நாவலர் இரா.நெடுஞ்செழியன்.
அவரின் அகத்தினை,“பேரறிஞர் அண்ணா அறிவுலக மேதை,அரசியல் விடிவெள்ளிபகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரின் தன்மானத் தளபதி,கலையுலகக் காவலர்திரையுலகில் திருப்புமுனையை உண்டாக்கியவர். சாதி மதப் பேதங்களைச் சாடு வதில் இங்கர்சால்இசையறிவில் ஏழிசை மன்னர்தாய்மொழி காப்பதில் தன்னிகரில்லா அரியேறுநயம்பட நவில்வதில் நாவலர் மாமணிஎழுத்துலகிற்கு எழுஞாயிறுஉரையாடலில் அங்குப் புகழ்பெற்ற ஒளிவிளக்கு,வாதிடுவதில் வல்லமை,பேரறிஞர் அண்ணா நல்லதொரு பல்கலைக்கழகம் என்று போற்றப்படுவர்” என்று சா.மருதவாணன் அடையாளப்படுத்துவார்.
அறிஞர் அண்ணா திராவிட இயக்கத்தை வெகு மக்கள் கருத்தியக்கமாக மாற்றிக் காட்டியவர். தந்தை பெரியார்,கல்வியறிவற்ற மக்களையும் கவரும் வகையில் தன் பரப்புகையை மிக எளிமையாக அமைத்துக்கொண்டார். அண்ணாவோ காலனியத் தாக்கத்தால் உருவான எழுத்தறிவுபெற்ற இடைத் தட்டு மக்களைத் தன் இலக்காக்கிக் கொண்டார்.  இவ்வகையில் முதல் ஓரிரு தலைமுறைகளாகக் கல்வி பெற்று அரசு தனியார் நிலைகளில் மாத ஊதியம் பெறுவோர்,வணிகர்கள்,சுயதொழில் புரிவோர்,படித்த இளைஞர்கள்,பயிலும் மாணவர்கள் ஆகிய சமூகத்தின் விழிப்படைந்தபகுதியினரிடம் திராவிடக் கருத்தியலை எடுத்துச்செல்லும் பொறுப்பு அவருக் கிருந்தது. 
நாடு விடுதலை அடையும் தருணத்திலும் அதன் பிறகான தொடக்க காலத்திலும் உருவான தமிழ் இலக்கியப் பரிச்சயமும்வாசிக்கும் பழக்கமும்நாடகம்திரைப்படம்மேடைப்பேச்சு ஆகிய காட்சி,கேள்வி ஊடகத் தாக்கமும் மக்களிடையே ஒரு வித விழிப்புணர்வை உருவாக்கின. இதனை மிகச் சரியாக அண்ணாவும் அவரின் திராவிட இயக்கத்தினரும் பயன்படுத்திக் கொண்டனர்.
அண்ணா,எழுத்தின் அனைத்து வகைமை களையும் கையாண்டவராகத் திகழ்கிறார்.  பத்திரிகை களுக்குத் தலையங்கம்கட்டுரைசிறுகதைநெடுங்கதைகடிதங்கள்உரையாடல்நாடகம்திரைப்படம்திறனாய்வுகவிதைமேடைப்பேச்சுகேலிச் சித்திரங்கள்மொழிபெயர்ப்பு...  முதலிய அனைத்திலும் தடம் பதித்தவர் அண்ணா.
அண்ணா முழுநேர எழுத்தாளர் அல்லர்;களப்பணியாளர். தேவை கருதி எழுத்தைப் பயன்படுத்தியவர். “கடுமையாகப் பணியாற்றுவதற்கு இடையிலேயும் உனக்கு மடல் எழுதவும்,கதை கட்டுரை உரையாடல் போன்ற வடிவங்களில் என் எண்ணங் களை வெளியிடவும் நான் தயங்கினதுமில்லை. அது எனக்குப் பளுவான வேலையாகவும் தோன்றினது மில்லை. 
சொல்லப்போனால் மனத்திலே ஏற்பட்டு விடும் சுமையும் அதனாலேற்படும் சோர்வும் உனக்காக எழுதும்போது பெருமளவு குறைந்து போவதுடன் புதிய தெம்பும் பிறந்திடுகிறது” (தம்பிக்கு அண்ணா 2008:205) எனத் தான் எழுதும் சூழலையும்அதனால் தான் அடையும் மன நிறை வையும் அண்ணா பதிவு செய்வார்.
அண்ணாவின் கவிதைப்பார்வை
அமைப்பு நிலையில் அண்ணாவின் கவிதைகள் எளிமையும்இனிமையும் நிரம்பியவையாக உள்ளன. இசைப்பாடல்கள்வாழ்த்துப்பாக்கள்இதழ் வாழ்த்து,பொங்கல் வாழ்த்துகதைப்பாடல்கள்அங்கதப் பாடல்கள்போற்றிப்பாடல்கள்மொழிபெயர்ப்புப் பாடல்கள்...  என அவரின் கவிதைகள் அமைகின்றன. ‘அண்ணாவின் கவிதைகள்என்னும் நூலில் உள்ள குறிப்புகளின் வழி அவரின் முதல் கவிதை 9.12.1937 நாளிட்ட விடுதலை (காங்கிரஸ் ஊழல்) இதழில் வெளிவருகிறது. 
இறுதிக் கவிதை தென்னகம்வார இதழுக்கு அவர் எழுதிய வாழ்த்துக் கவிதையாக 16.01.1969இல்வெளிவருகிறது. அண்ணாவின் கவிதைகள் திராவிடநாடுகாஞ்சிவிடுதலைகுடியரசு,தென்னகம்ஆகியஇதழ்களில்வெளிவந்தன. அண்ணாவின்உரைநடைதனிச்சிறப்புமிக்கது. 
நீரோட்டம் போலத் தாவி வரும் வார்த்தைகள்வரிக்கு வரி அழகான உவமைகள்,புதிய புதிய சொல்லாட்சி,தமிழ் இலக்கணத்திற்கே அப்பாற்பட்ட புதிய பாணிகள்என அண்ணாவின் மொழி ஆளுமையைக் கவிஞர் கண்ணதாசன் சிறப்பிப்பார். ‘அண்ணா ஒரு பேச்சுப் பாடகர்’ என்பார் கவிஞர் சுரதா.
வெட்டிப்பேச்சைத் தட்டி நடக்கும் வீரர்கள் - கை
கொட்டி நகைத்து மட்டித்தனத்தை மட்டந்தட்டும் மாவீரர்கள்
சுகபோகங்களில் சுகவாழ்வு நடத்தும் சுயநலமிகளைப்பார்த்துச்
சுருட்டிக் கொள்உன் சூதை என்றுரைக்கும் சூரர்கள்
என்றெல்லாம்அண்ணா எழுதும்போது உரை நடைக்கும்,பாட்டுநடைக்கும் இடைப்பட்டதொரு நடை புதிதாக உருவாகி விடுவதைக் காணலாம்.  மட்டுமல்ல,
எதையும் தாங்கும் இதயம் வேண்டும்
மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு
என்றெல்லாம் தொடர்களை அமைப்பது ஒற்றை வரிக் கவிதைகளாகக் கருதத்தக்கன என்றாலும்அண்ணாவிற்குக் கவிதை குறித்த தனித்தனிக் கருத்துக்கள் இருந்தன.  தமிழின் சங்க இலக்கியங் களையும் காப்பியங்களையும் ஆழமாகக் கற்று அதன் நுட்பங்களை அழகாகத் தன் பேச்சிலும் எழுத்திலும் வெளிப்படுத்தியவர். ஆங்கில மொழி இலக்கியத்திலும் ஆழங்கால்பட்ட அறிவு மிக்கவர்.  தமிழ்ஆங்கில இலக்கியஇலக்கணதிறனாய்வு நுட்பங்கள் தெரிந்தவர். எனவேதான் பிற இலக்கிய வடிவங்களைச் சரளமாகக் கையாளும் அண்ணா கவிதையை மிகவும் எச்சரிக்கையாகக் கையாள்கிறார்.  அவரே கூறுகிறார்:
பாடுகிறான் அண்ணன் ஓர் கவிதை என்று
பரிவாலே எண்ணிடாதீர் உடன்பிறந்தோரே!
சீர் அறியேன் அணி அறியேன் சிந்தை உந்தும்
செய்திதனைத் தெரிவித்தேன் ஆசையாலே(1969)
சீர்,அணி முதலிய யாப்புக் கூறுகள் கவிதைக்கு அடிப்படை என்பது அண்ணாவின் கருத்தோட்டம். அதே போலச் செய்யுளைக் காட்டிலும் ஓசையுடைய பாடல்கள்மெட்டுக்குரிய பாட்டு என்பதில் அண்ணா ஆர்வம் காட்டினார்.  இதுவும் கூடத் தனது கருத்துமக்களிடம் பரவலாகச் செல்ல வேண்டும்;அதற்குப் பாமரரையும் கவரும் இசைப்பாடல் வடிவம் சிறந்தது என அவர் எண்ணியிருக்கக்கூடும்.  பாரதிதாசனின் பிறந்த நாளையொட்டி எழுதப்பட்ட ஒரே நிலவுஎன்ற கவிதையில்,தனது கவிதை குறித்த கருத்துக்களை மேலைக் கவிஞர்களின் கூற்றுக்களோடு முன்வைக்கிறார்.
எதுகைமோனைஎழில் தரும் உவமை
வசீகர வர்ணனை - பழமைக்கு மெருகு
இத்தனையும் தேடிஎங்கெங்கோ ஓடி
வார்த்தைமுடையும்வலைஞன் அல்ல!                                                                          - வால்ட் விட்மன்
உயர்ந்த உள்ளங்களின் உன்னத நேரங்கள்!
வடித்துக் காட்டும் வரலாற்றுத் துளிகள்
அவையே கவிதை அதுவே வாழ்வின் நூல்!
                                                                                                                                                                                - ஷெல்லி
உன்னத எண்ணம்உயர்ந்த உணர்ச்சி
எழுப்பிக் காட்டும் இனிய சங்கீதம்
அதுவே கவிதை
                                                                                                                                                                     - வால்டேர் (ப.7)
ஆகவேஅண்ணா யாப்பமைதி கொண்ட பா வகைகளைமரபுக்கவிதைகளைஇசைப்பாடல் களையே கவிதைகள் எனக் கொள்கிறார் எனலாம்.
அண்ணாவின் பிற படைப்புகள் பேசப்பட்ட அளவுக்கு அவரின் கவிதைகள் கவனப்படுத்தப் படவில்லை.  அண்ணா தன் அரசியல்சமூகச் செயற் பாடுகளுக்கு உறுதுணையாகவே தன் கவிதைகளைப் படைத்துள்ளார். சாதி,மத,மூடநம்பிக்கை எதிர்ப்பு,வைதீகஎதிர்ப்புபொருளாதார ஏற்றத் தாழ்வு எதிர்ப்புசமூக விடுதலைபொருளாதார விடுதலைஅரசியலில் லஞ்சம் / ஊழல் எதிர்ப்பு.... ஆகியன அண்ணாவின் கவிதைகளின் பாடுபொருள்களாகின்றன. மரபும்புதுமையும் சேர்ந்த கலவை யாக அவரின் கவிதைகள் மிளிர்கின்றன.
கவிதைகளின் உள்ளடக்கம்
அறிஞர் அண்ணாவின் கவிதைகள்யாவும் பகுத்தறிவு,சுயமரியாதை,சமதர்மக் கொள்கைகளைத் தாங்கியே நிற்கின்றன. இரண்டாம் மொழிப் போரில் தந்தை பெரியார் சிறைப்பட்டபோது அவருக்குப் புறாவிடம் கவித்தூது அனுப்புகின்றார். ஓர் புறம் ‘ஒழிக இந்தி’,மறுபுறம் பெரியார் வாழ்கஎன இரண்டு பக்க இறக்கைகளோடு புறா பறந்து செல்கிறது.
பெரியாரை,
வாழ்ந்திட வேண்டும் வையகமெல்லாம்
தாழ்ந்தவர் மேலவர் எனும் தருக்கின்றி
உழைத்திடும் மக்களை உறிஞ்சிடு கூட்டம்
ஊரில் இருப்பது உலகக் கேடென
உரைத்திடும் பண்பினர் ஊன்று கோலினர்” (ப.18)
என்கிறது புறா.
இலஞ்சம்ஊழலுக்கு எதிரானவர் அண்ணா.  அன்றைய ஆட்சியின் அவலத்தினைக் கூறும் ஒரு கவிதையில்,
புதிது புதிதாய் வெளிக்கிளம்புகிறது - அனுதினமும் பேப்பரில்
லஞ்சப் புரளி அதிகரிக்கிறது
..............................................
தேசிய போர்வையைப் போர்த்திக் கொண்டே
சிலர் திருடும் தொழிலாக இருந்தால்
அதைத் திருத்தி அமைக்க வேண்டுமென்றே” (ப.30)
என வெளிப்படையாய்ப் பேசுகின்றார்.  அதே போலப் பிடிபட்டான் என்ற கவிதையில் சூழல் காரணமாகச் சொற்பப் பணத்துக்கு ஆசைப்பட்டு இலஞ்சம் பெற்ற அரசு அலுவலர் ஒருவர் மாட்டிக் கொண்டு,தண்டனையும் பெறுவதையும்இதற்கு மேல் இவனைப் போன்றவர்களைக் கருவியாக்கிக் கோடிக்கணக்கில் கொள்ளையடிப்பவர்கள் தப்பித்துக் கொள்வதை நுட்பமாகவும் ருசிகரமாகவும் விளக்குகின்றார்.
மேலும் அண்ணாவின் பல கவிதைகள் வெள்ளை யாதிக்கத்துக்கு எதிராகவும் நம்மவரின் கொள்ளை யாதிக்கத்துக்கு எதிராகவும் முழங்குகின்றன. ஏழ்மைவறுமை ஒழிந்து சமத்துவம் மலர வேண்டும்,பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் அகல வேண்டும் என்பது இவரின் பேரெண்ணமாக இருப்பதை இவரது கவிதைகள் மெய்ப்பிக்கின்றன. சமூகச் சிக்கல்கள் அளவுக்குப் பொருளியல் சிக்கல்களையும் அண்ணா கவனப்படுத்தியிருப்பது நோக்கத்தக்கது.
சீறிடும் சிட்டு’ என்றொரு கவிதை.
பாரீர்! படுத்துறங்கும் பராரியை! எழுப்பிப்
பணக் கோட்டைகளைப் பிடித்துக் குலுக்கு!
அடிமைக் குருதி கொதித்திடும் நம்பிக்கை யூட்டிச்
சிட்டு வல்லூறை எதிர்த்திடும் வகை செய்!
மக்களாட்சி மலர்ந்ததென மொழிந்து
பழமைப் பாசிப் படத்தைத் துடைத்திடு!
உழவன் வாழ்ந்திட வழிதரா வயலின்,
செந்நெலை மிதித்து மண்ணாகச் செய்திடு!
பட்டிட்டுப் பரமனை மறைத்திடல் ஏனோ!
பக்தர் கண்படாது களித்திடத்தானே!
கோயிற் குருக்கள் கூட்டத்தை விரட்டிடும்.” (ப.124)
இது 1942இல் வெளிவந்த கவிதை. விடுதலைக்குப் பின் நடக்கவேண்டிய சமூகப் பொருளாதார மாற்றத்தை முன்மொழிகிறார். இப்படிப் பல கவிதைகள் ஒட்டுமொத்த மாற்றம் குறித்துப் பேசுகின்றன.
அண்ணாவின் கவிதையமைப்பும் வடிவமும்
பெரும்பாலும் ஆசிரியப்பா அமைப்பின் பல வகைமைகளில் அண்ணாவின் கவிதைகள் அமை கின்றன.  மரபுப்பாவில் படைத்தாலும் கருத்துக்களில் புதுமையே காணப்படுகின்றது.  வாழ்த்துப் பாக்களிலும் அண்ணாவின் அழகுநடை ஈர்க்கிறது. தென்னகத்தின் பெருமை கூறும் கவிதையில்
அதிர்ந்தன நாலு திசைகள்!
அடங்கின ஏழுகடல்கள்!
பதிர்ந்தன ஓரி மலைகள்!
பிறந்தது தூளி படலம்!  (ப. 26)
என்று பா எழத்தக்க வீரம் காட்டினர்” என அடுக்கிக் காட்டுவது சுவைக்கத்தக்கது.
பொங்கல் வாழ்த்தில் கூட
தமிழ்வாழ நாம் வாழ்வோம்
அறிவாய் நன்றாய்!
நாம் வாழ்வில் பெறும் இன்பம்
கரும்பாகிடல் வேண்டும்
நாட்டி னோர்க்கு” (ப. 26) இக்கவிதையில் மொழிச் சிந்தனையும் வாழ்வியல் சிந்தனையும் இணைகின்றன.
இசைப்பாடல் வெளிப்பாடு
இசையோடு பாடுவதற்குரிய பாடல்கள் அண்ணா இயற்றினார். நேரடி அரசியல் கருத்துக்களை அச்சமயம் புகழ்பெற்றிருந்த பாடல் மெட்டுகளில் எழுதி உள்ளமை கவனிக்கத்தக்கது.  இப்பாடல் களைச் சிந்துநொண்டிச்சிந்துகும்மிஎண்சீர் விருத்தம்ஆகிய வகைமைகளில் அடக்கலாம். எனினும் எளிமையாக நடப்பு அரசியல்,சமூக நிகழ்வுகளை மக்கள் மனதில் ஓசைநயத்துடன் பதிவு செய்வதாய் அமைந்துள்ளன.
வெள்ளி முளைக்குது’ என்னும் பாடலில் ஆரிய திராவிடப் பகைமையைச் சுட்டுகிறார்.
ஒன்றே குலமென்றோம் நாம் ஒருவனே தேவனென்றோம்
ஓங்கார மூர்த்திக் கன்று ஒய்யாரமில்லையென்றோம்.
ஆங்கார ஆரியர் அலைந்து திரிந்தவர்கள்
ஆபாச நியதிகள் அவர்வாழப் புகுத்தினார்.” (ப.34)
இதற்குத் தீர்வாகப் பெரியாரின் கொள்கை களை முன்வைக்கிறார்.
வெள்ளி முளைக்குது வெண்தாடி அசையுது!
வீணரின் விலாவெல்லாம் வேதனை மீறுது
வெள்ளையரும் அதிரவெடி வேட்டுக் கிளம்புது
வேதியக் கூட்டமெல்லாம் வியர்த்தின்று விழிக்குது” (ப. 35)
விளக்கம் தேவைப்படாத வரிகள் இவை
மகாத்மா காந்தியடிகளைக் கொன்ற கோட்ஸே குறித்த பாடலில்.
அநியாயம் தானுங்கோ
அவனிக் கடுக்காதுங்க!
அக்ரமக்காரன் பேரு
கோட்சே தானுங்க... (ப. 26)
என்று பாடுவதோடு நிற்க வில்லை.
கோட்சே கூட்டம் இன்னும்
கொடிகட்டி ஆளுவதா?
கொலைக்காரக் கும்பலின் கொட்டம்
தரைமட்ட மாக்கோனும்
குலமும் ஒண்ணுகடவுளும் ஒண்ணு
என்றேதான் ஓதனும்” (ப. 42)
எனத் தீர்வையும் கூறுகிறார். மதவெறி கூடாது. மனித நல்லிணக்கம் தேவை என்பது அண்ணாவின் கருத்து.
கதைப்பாடல் உத்திகள்
அண்ணாவின் கவிதைகளில் அழுத்தமான இடத்தினைப் பிடிப்பது அவரின் கதைப்பாடல்கள் தாம். குறுங்காப்பியங்கள் என உணரும்வகையில் அமைந்த இக்கதைப்பாடல் வடிவத்தில் அண்ணா தான் கூற எண்ணும் சீர்திருத்தக் கருத்துக்களை அற்புதமாக முன்வைத்துவிடுகிறார்.  பாத்திர உருவாக்கம்கதைப்போக்குவளர்த்தெடுத்தல்திருப்பம்தீர்வுமுடிவு எனக் கச்சிதமாக இக்கதைப் பாடல்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
அண்ணா எழுதியுள்ள கதைப்பாடல்கள்
1. தேம்புகின்றேன் (1956)
2. மூதறிஞர் மூவர் (1961)
3. நானே தலைவன் (1961)
4. புத்தியில்லா உலகமிது (1963)
5. அவனா இவனா அறிவாளி (1964)
6. காடுடையார் (1965)
7. வேட்பாளர் வருகின்றார் (1965)
8. கோபம் (1965)
இக்கதைப்பாடல்களின் உள்ளோட்டமாக அரசியல் அமைகின்றது என்றாலும் நேர்மையாக வாழ்தல்மூடநம்பிக்கை ஒழித்தல்உழைத்தல்சோம்பல் போக்குதல்கோபம் தவிர்த்தல்சந்தேகம் கொள்ளாமல் வாழ்தல்,பிறர்க்குதவுதல்,மொழிப்பற்றுடன் இருத்தல்நாட்டுக்குழைத்தல் ஆகிய மனிதவாழ்வின் கொள்ளத்தக்க பண்பியல்புகளை இக்கதைப்பாடல்கள் முன்னிறுத்துகின்றன.
போலிச்சாமியாரிடம் ஏமாந்து இல்லறம் துறந்து அவர் வழியில் சென்ற ஒருவன் உண்மை உணர்ந்துதிருந்தி இல்லறம் திரும்புவதைக் கூறும் தேம்புகின்றேன்’ கதைப்பாடலில். . .
கட்டுவது காவிதான்
கருத்தோ ஆதிக்கம் தாவும் காணீர்!
உருட்டுவதும் உருத்திராக்க மாலை யேதான்,
உருட்டு விழிப் பாவையர்-மேலே நாட்டம்!
அருட்கடலே! என்றேத்தி வருவோர் பல்லோர்.
அவர் தாமும் அடித்தாட் கொள்வார்.
வெருட்டுவார்வெஞ்சினங் கொண்டு,
மருட்டுவார்மாடென்பார் மனிதர் தம்மை. (ப.44)
எனப் போலிச்சாமியாரின் சித்துவேலைகளைத்’ தோலுரிக்கின்றார்.
மூதறிஞர் மூவர்” கதைப்பாடல்மருத்துவம்சோதிடம்இசைஞானம்கைவரப் பெற்ற மூவரைப் பற்றியது. மூவரும் சமையல் செய்யத் திட்டமிடுகின்றனர். காய்கறி வாங்க மருத்துவரும்,அரிசி வாங்க சோதிடரும்,அடுப்பு மூட்ட இசை கற்றோரும் ஒத்துக்கொள்கின்றனர். மூவரும் தத்தமது புலமைச் செருக்கால் உணவுக்கு வழிஇன்றி நிற்பதை எள்ளலுடன் அண்ணா பகர்கின்றார்.
இடரை வரவழைத்து இலட்சியம் இழந்திடுதல்
எற்றுக்கு என்பதனை எண்ணிடுவீர் எல்லோரும்
சாதாரண சமையல்அதனைச் செய்திடவோ
சங்கீதம் கற்றவனும் ஜாதகம் கணிப்பவனும்
நோய் தீர்க்கும் மருத்துவனும் கூடி முடியவில்லைகாரணமோ,
குறிக்கோள்தனைக் கெடுக்கும் குறை அறிவு கொண்டதுதான்.
                                                                                                                                                                                       (ப.49.50)
மற்றும் தமக்கென்று மாமேதாவித் தன்மை
மெத்த இருக்குதென்ற பித்தத்தி னாலுங்காண்
ஏட்டுச்சுரைக்காய் கறிக்குதவாது.  கொள்கை இலட்சியம் வேறு.  நடைமுறை அறிவு வேறு.  அண்ணா உள்அரசியலை மையப்படுத்தினாலும்கூட இக்கவிதை இன்றைக்கும் வாழ்வியலுக்குச் சிறந்த சான்றாக அமைகின்றது.  நானே தலைவன் - கதைப்பாடல் எட்டாம் ஹென்றி வரலாற்றிலிருந்து ஒரு நிகழ்வை எடுத்துத் தமிழகத்து அரசியலுடன் ஒப்புமை செய்து அங்கதச் சுவையுடன் அமைக்கப்பட்டுள்ளது.
புத்தியில்லா உலகமிது’ கதைப்பாடல் சமூக அவலத்தை ஏழ்மைக் கொடுமையினால் நவீன நல்ல தங்காள் ஆகிப்போன வேணி என்னும் பெண்ணின் சித்திரத்தை அண்ணா சித்திரிப்பதில் கலையியல் செறிவினைக் காணமுடிகிறது.  பொறுப்பற்ற கண வனால் தனது குழந்தைகளில் இரண்டைக் கொன்று விட்டு மூன்றாம் குழந்தையோடு தானும் உயிர்துறக்க நினைக்கும்போது, ‘கொலைக்காரி’ என்னும் பட்டத்தைச் சமூகம் அளிக்கிறது.  வாழ்வதற்குப் போராடிச் சாகலாம் என முயன்று அதற்காகவும் போராடும் அவலம்அப்பெண்ணுக்கு.  ‘இது பொல்லாத உலகம் மட்டுமல்ல,புத்தியில்லாத உலகமும்தான்எனச் சூடு போடுகிறார் அண்ணா.
மலர்கள்தரும் கொடியதுவும் காய்ந்து - போனால்
மணம் விரும்பும் மக்கள் அதை நாடு வாரோ?
ஏழை அனாதைப் பெண்ணிற்கு அண்ணா காட்டும் உவமை இது.
யாழ் இனிது,குழல் இனிது என்றெல்லாம் குழந்தைகளின் மழலையைக் கொண்டாடும் சமூகம்.  அண்ணா அதைப் பற்றி வேறு சித்திரத்தைத் தருகிறார்.
குழலப்பா...  யாழப்பா என்று யாரும்
குழந்தைகளின் ஒலிபற்றிச் சொன்னாரில்லை
அவன் செவிக்கு அவ்வொலியே நாராசமாக” (ப.60)
வறுமை,ஏழ்மை,வாழ வழியற்ற நிலைமையில் மழலை மதிப்புகள் நாராசமாக மாறுகின்றன.  அப்பெண் குழந்தைகளைக் கொன்று தானும் சாக முடிவெடுப்பதை அண்ணா,
பூவும் பிஞ்சும் போகும் முதலில்
பின்னர் சாயும் கொடியே வேரும் அறுத்து” (ப.67)
எளிமையான நெருடலற்ற உருவகம்!
அவனா இவனா அறிவாளி?’ என்னும் கதைப் பாடல் அருணகிரிபெரியண்ணன் என்னும் இரு எதிர் எதிர் பண்புடையாரைப் பற்றி உரைக்கின்றது.  ஏழை ஓ பணக்காரன்அறிவாளி ஓ முட்டாள்நல்லவன் ஓ கெட்டவன் என முரண்களில் வளரும் வாழ்க்கை.  காலமும் சூழலும் நல்லதை அழித்து அல்லதைச் செழிக்கச் செய்கிறது. நேர்மைஉழைப்புதிறமை இவற்றுக்குச் சமயங்களில் பின்னடைவு ஏற்படலாம் என்ற கருத்து இப்பாடலில் எதிரொலிக்கிறது.
மோட்டார் வருகுது ஊர் சுற்ற
நோட்டாய்க் குவியுது இலஞ்சமுந்தான்.
பாட்டாய்ப் படிக்கிறார் உடன் உள்ளார்
பழிபாவம் கண்டு பயம் கொள்வார்” (ப.76)
இப்படிச் சந்த நயத்தோடு பாடல் முழுமையும் அமைக்கப்பட்டுள்ளது.
காடுடையார் என்னும் கதைப்பாடலில் காட்டிலிருந்து பிடித்துவரப்பட்ட புலிக்குட்டியானது ஒரு சீமானின் வீட்டில் வளர்கிறது. அங்கு நகரத்தின் அசிங்கத்தைத் தரிசிக்கிறது.  அங்கிருந்து தப்பிப் போகிறது. நடந்தவற்றைத் தன் இனத்திடம் கூறி,பின் கடவுளைச் சந்தித்து மனிதர்களின் மோசமான பண்புகளைப் பட்டியல் போடுகிறது. இதனைக் கேட்டு நொந்துபோன இறைவன் இனி நாடு உதவாது எனக் ‘காடுடையார்’ ஆகிறார். இதனைக் கனவு காணும் உத்தியில் அண்ணா படைத்துள்ளார்.
விலங்குகள் இரை தேடும் நிலையைப் புலி,
வயிற்றுக்கு வழி தேட
மோப்பம் பிடித்தறிந்துமெல்ல
நடை நடந்து
இடம் பார்த்துப் பாய்கின்றோம்
இடறியும் வீழ்கின்றோம்
எத்தனையோ இன்னல்பிறகே
இரைதனைப் பெறுகின்றோம். (ப.83)
எனக் கூறித் தான் பார்த்த மனிதரின் நிலையைப் புலி ஒப்பிடுகிறது.
உழைக்காமல் உருசியான
பண்டம் பானமெலாம்
வேண மட்டும் உட்கொண்டு
வீணாக்கியும் போடும்
வித்தையினைக் கற்றவர்கள்
மாளிகையில் வீற்றுள்ளார்.
.............................
சிரித்தபடியே அவர்கள்
சித்ரவதை செயவல்லார்!
சொல்லாமலே சாகடிக்க
வல்லாரும் ஆங்குள்ளார்.
.............................
உண்டு மகிழ்வதுடன்
ஊர்க் குடியைக் கெடுப்பதற்கு
விழித்துக் கிடக்கின்றார். (ப.83-84)
.............................
என வரிசையாக மனிதரின் இழிசெயல்களைப் புலி பந்தி வைக்கிறது.கடவுள் கலக்கமுறுகிறார்.  நாடு வெறுத்துக் காடடையத் தயாராகிறார்.
கடவுள்:
நாடு கைவிடினும் காடுளது
களிப்புற்றேன் மிகவும் என்றார்.
அதற்குப் புலி:
காடுடைப் பொடி அலவோ
பூசிடுவதுமய்யா!
ஆடையும் எமதினம்
அளித்தது அன்றோ! (ப.92)
என்கிறது.
சிரித்தார் சிவனார்.  சிரித்தேன் நானும்.
எனப் பொருத்தமாக முடிக்கிறார். நடப்பைக் கற்பனையாய் உருவகம் செய்து கவி புனைந்திருப்பது சிறப்பு.
வேட்பாளர் வருகின்றார்’ - கதைப்பாடல் இன்றைய தேர்தல் முறைவேட்பாளர் தகுதிப்பாடு குறித்ததாக அமைகின்றது.  குறுக்குவழியில் பணம் சேர்த்தவர்கள் தேர்தலில் கொடி நாட்டும் இழி நிலையை அண்ணா கவிதைகளாகப் படைத்துள்ளார்.
கோபம்’ என்னும் கதைப்பாடல் சுப்பன்-குப்பி என்னும் இருமாந்தர்களை வைத்து நடத்தப் பெறுகின்றது. வறுமையும் ஏழ்மையும் வாட்டும் குடும்ப நிலை. வேலையில்லை இருவருக்கும். குடும்பம் காக்க பெண்ணான குப்பி,விறகு சுள்ளிப் பொறுக்கச் செல்கிறாள் தோப்புக்கு. கண்ணப்பர் என்னும் பண்ணையாரோ குப்பியைச் சுற்றுகிறார். ஒரு நாள் முயற்சியிலும் இறங்குகிறார். தப்பி வருகிறாள் குப்பி. கணவனிடம் கயவனைக் குறை சொல்ல அச்சம். இந்நிலையில் கண்ணப்பருக்காகச் சொக்கன் என்பவனை வெட்டிக்கொன்றுவிட்டுச் சுப்பன் சிறைக்குச் செல்கிறான். இத்தருணத்தைத் தோட்டக்கார முதலாளி பயன்கொள்ளக் கருதகுப்பி சென்னைக்கு மில் வேலைக்குப் பயணமாகிறாள்.
பாலியலை உளவியல் நோக்கில் நுட்பமாகக் கூறுகின்றார் அண்ணா.
ஊருக்குப் பெரியவராம்
உண்மை நீதி அறிந்தவராம்
ஏருக்கு மாடாக உழைக்கும்
ஏழைக்குக் கூற்றாவார்.
பெண்பித்துக் கொண்டலையும்
பேயெனத் தெரிந்திருந்தால்
பொன்விறகு கிடைத்தாலும்
புகுவேனோ மாந்தோப்பு!
பாம்பு சீறுமுன் பசுப்புல்
வெளியதுவும் பாங்குதான்.  அதுபோல
பாவி இப்பார்வை காட்டு முன்னே
என்தந்தை போல் தெரிந்தார். (ப. 102-103)
மிக எளிமையாகச் சூழலைக் காட்சிப்படுத்தும் பாங்கு அண்ணாவின் படைப்புத்திறனாக மிளிர்கிறது.
பல்சுவைப் பாடல்களின் தனித்தன்மைகள்:
பல்சுவைப்பாடல்கள் பகுதியில் மொழி பெயர்ப்புக் கவிதைகளும் சில புதுக்கவிதை வடிவங்களும் இடம்பெறுகின்றன.
சூரிய குட்டியைத் தேடிய மாப்பிள்ளை
மாடு இல்லா வண்டி
மானத்திலே போவுதாம்!
மைதானத்திலே ஒரு கம்பி!
எண்ணை இல்லே திரியுமில்லை
எரியுதாம் விளக்கு!
என்னென்னமோ இருக்குதாம்
என்மாமன் வாழும் சீமையிலே.” (ப.123)
விடுகதையைப் போல அமைக்கப்பட்ட கவிதை.  இது 30.08.1942-இல் வெளிவந்தது.  விமானம்வானொலிமின்விளக்கு ஆகியவற்றைச் சுட்டும் கவிதை இன்புறத்தக்கது.
சின்னான் சிந்து’ என்னும் கவிதை ஏற்றத் தாழ்வுற்ற சமுதாயத்தின் அவசியத்தைச் சிந்து வடிவத்தில் தருகிறது.
வெள்ளைக்காரக் கூட்டமெல்லாம் வெளியேறிப் போகணும்!
சள்ளைப்பிடிச்ச வாழ்வுபோயி ஒரு சவுகரியம் பிறக்கணும்!
கொள்ளையிடும் கும்பலது கூண்டோடே தொலையணும்!
பள்ளுபறை என்ற பேச்சைப் பழசாக்கிப் போடணும்!
ஏழை எளியவங்க பிழைக்க வழிதேடணும்!
வெள்ளை - சள்ளை கொள்ளை.....
பள்ளு பறை.....
ஏழை எளியவங்க....” (ப.133)
என்சாதி உசந்ததென்னும் எண்ணக்காரன்
ஒழியனும் எல்லாரும் ஒண்ணு என்னும்
எண்ணம் உதிக்கணும்.
போன்ற எதுகைமோனை சந்தச் சொல் அமைப்புகள் பாடலில் இயல்பாக அமைந்துசிறப்புத் தருகின்றன.  சாதியற்ற சமூகம் உருவாக அண்ணாவின் கவிதை அறைகூவி நிற்கின்றது.
புதுக்கவிதை
அண்ணா மேலைக் கவிதைகளில் அதிக ஈடுபாடு கொண்டிருந்தாலும் புதுக்கவிதை போன்ற யாப்பு மீறிய கவிதை அமைப்புகளில் அதிகம் கவனம் செலுத்தவில்லை. ஒரு சில கவிதைகள் புதுக்கவிதை களாகக் கருதத்தக்கவை.
மனிதன்
மனிதா!
நீ யாருக்கும் தலைவணங்காதே.
நிமிர்ந்து நட!
கைவீசிச் செல்!
உலகைக் காதலி!
செல்வரை செருக்குள்ளவரை
மதவெறியரைத் தள்ளி எறி
மனசாட்சியே உன் தெய்வம்!
உழைப்பை மதி ஊருக்குதவு.
உனக்கு எட்டாத கடவுளைப் பற்றிப் பிதற்றாதே! (ப.135)
சிந்தனை செய்! செயலாற்று!
வண்டிக்காரன் மகன்
ஓயாமல் உழைக்கின்றாய்!
உன் மகனை ஆளாக்க
ஊர் மெச்சும் வாழ்வுதர
உருக்குலைய உழைக்கின்றாய்!
பேர் சொல்லி மகன் வாழ்வான்
பெருமை மிகும் என்றெண்ணிப்
பேய் மகனும்உனை மறந்தால்
நாய் மகனே ஆவான் காண்! (ப. 152) என்பன போன்ற அறச்சீற்றங்களும் அண்ணாவின் கவிதையில் காணக்கிடைக்கின்றன.
அண்ணா தனது கருத்துநிலைகளைப் பரப்புகை செய்யும் விதமாக இசையும் சந்தமும் மிக்க பாடல் களைப் படைத்துள்ளார். அண்ணாவின் உலக நோக்கையும் சமூக நோக்கையும் அறிந்திட அவரே தன்நிலை அறிமுகமாக ஒரு கவிதையில் கூறுகிறார்.
மனித மேம்பாடு
மனித மேம்பாடே என் இயக்கம்
தோழமையே என்மேடை
தூய மனத்தினர் என்பேன்
உழைத்திடின் மக்கள் நன்மைக்கே
தொலைவிலே சிறு பொறி கண்டு
துடித்தெழும் போக்கினர் யாரும்
தோழர்களையும் எந்தனுக்கே
துணைவராம் புனிதப்போர் தனக்கே. (ப.198)
இக்கவிதையில் தன் பயணம்,பாதை,வழித் துணை ஆகிய யாவற்றையும் அண்ணா சுட்டி விடுகிறார்.  இதுதான் அண்ணாவின் இலட்சியம் எனலாம்.
மொழிப்பயன்பாடு
மொழிப்பற்று மிக்குடையவரான அண்ணா தம் படைப்புகளில் பிறமொழிச் சொற்களையும்வட்டார வழக்குச் சொற்களையும் வசதி கருதியும் சராசரி மக்களுக்கு விளங்கும் தேவை கருதியும் பயன்படுத்துகிறார்.
ஓய்ந்தது பாளை உட்கார்ந்தா(ள்) சாணாத்தி” (பழமொழி)
கரடுமுரடான பாதையிலே அந்தக் கறுப்புக் கண்ணாடி கோச்சு மானும்’ (பிறமொழிச்சொல்)
நாமே நம் ஓட்’ கொடுத்து நல்லவரென்றே எடுத்து’ (ப.32)
                                                                                                                                                            (பிறமொழிச்சொல்)
கஷ்டத்தை எண்ணினால்
கலந்தண்ணீர் வருகுதே
அடுப்பிலிட்ட கட்டைபோல்’                                                                                                (வட்டார வழக்கு)
சர்க்கார் மோட்டார் (பிற மொழிச் சொற்கள்)
ஏனப்பா எம்மான் பேச்சு எப்படி இருந்த தென்றேன்?
தேனப்பா! தெவிட்டா தப்பா! தேகமே கூசு தப்பா!
ஆமாப்பா! என்றான் நண்பன்’                                                                                                  (பேச்சு வழக்கு)
மொழித்தூய்மை நோக்கு அண்ணாவின் கவிதை களில் இல்லை. மக்கள் பயன்பாட்டில் உள்ளவற்றை அப்படியே எடுத்தாளும் போக்குக் காணப்படுகிறது.
எச்சரிக்கையுணர்வு
தமிழ்க் கவிதையியலின் ஆழங்களை உணர்ந்தவர் அண்ணா. எனவே மேம்போக்காகக் கவிதை போலச் செய்வதில் அவருக்கு உடன்பாடில்லை. மரபு தழுவிய இசைப்பாடல் வகையினையே அவர் தேர்ந்தெடுத்துக் கொண்டார்.  பேச்சிலும்மடல்சிறுகதைநாடகம்போன்ற உரைநடை வடிவங் களிலும் தன்னியல்பாக வீரியத்தோடும் துணி வோடும் வெளிப்பட்ட இவர் கவிதையில் மட்டும் உள்வாங்கிச் செயல்படுகிறார்.  தன்னடக்கம் என் பதைக் காட்டிலும் இலக்கண - இலக்கியச் செழுமை மிக்க மொழியின் மீதான கவனத்தையே இது காட்டுகிறது.
இது கவிதை அல்ல - புலவர் துணை கொண்டு
கவிதையாக்கிக் கொள்க’.
தமிழாசிரியர்துணைகொண்டு சீரும் தளையும் செப்பனிட்டுக் கொள்வாய் என்ற துணிவில் குறை நிறை கவிதை வடிவம் கொடுத்துவிட்டேன்என் றெல்லாம் ஆங்காங்கே குறிப்பிடுவது அண்ணாவின் படைப்பு நேர்மையைக் காட்டுகிறது.
முடிவாக
ஆசிரியப்பாவின் வகையினங்கள்சிந்துகண்ணிவாயுரை வாழ்த்துகும்மி... என மரபோடு எழுதப் பட்ட கவிதைகள் அண்ணாவினுடையவை.
எளிதில் புரியும் மொழியும்மனதில் நிற்கும் ஓசை ஒழுங்கும் இவரின் பொதுவான கவிதை இயங்குதளங்கள்.
அரசியல் சார்ந்த கருத்துகளை வலிமையோடு மக்கள்திரள் முன்படைத்திடும் தன்மை இவரின் கவிதைகளின் அடிப்படையாகின்றது.
எதுகைமோனைஅடுக்குமொழிபேச்சுவழக்குபிறமொழிச் சொற்கள் விரவி நின்று அண்ணாவின் கவிதைகளுக்கு அணி செய்கின்றன.
உவமைகள்உருவகங்கள் மிக எளிய அடிப் படையில் கவிதைகளில் ஆங்காங்கே தென்படுகின்றன.
அண்ணாவின் கதைப்பாடல்கள் தனித்துவ மிக்கவை.  குறுங்காப்பியங்களாக விரியும் தன்மை கொண்ட இவற்றில் கதைகளில் இவரின் கற்பனையாற்றலும் படைப்புத்திறனும் வெளிப் படுகின்றன. கதைக்கருத்தேர்வுபாத்திர வளர்ப்புநிகழ்வுக்கோவைசொல்லாட்சிநடத்திச்செல்லுதல்,எடுத்துரைப்பு,முடிவுஆகியகூறுகள்யாவும்ஓர்மையுடன்தொழிற்படுகின்றன.  தமிழ் மரபுக் கவிதைகளில் அண்ணாவின் பங்களிப்பு என  யோசித்தால் அவரின் கதைப்பாடல்களாகவே அமையும் சிறப்புப் பெறும்.
ஒட்டுமொத்த சமூக மாற்றம் என்கிற கருத் தியலே அண்ணாவின் கவிதைகளின் இயங்கு தளமாக உள்ளது.

பெண் கவிதையில் வலி

முனைவர் பூ.மு.அன்புசிவா

பேச : 098424 95241.

     இனபுணர்ச்சியை இத்தனை நுணுக்கமாகவும், வெளிப்படையாகவும். விவரிக்கும் இது போன்ற தமிழ் கவிதைகள் மிக அரிதாக எழுதப்பட்டு வந்தவை.  இன்று இது போன்ற பெண் படைப்பாளர்களின் மத்தியில் பரவலாக விவரிக்கப்பட்டு வருகிறது முக்கியத்துவம் பெறுகிறது.  சிறுகதை, கட்டுரை , நாவல், புதினம் போன்ற வௌ;வேறு ஆளுமையில் பெண்கள் ;இருந்த போதிலும் அதன் அடுத்தகட்டமான  நவீனம்.  அதிநவீனம் என்கிற இலக்கிய கட்டமைப்பில் எழுதப்பட்டு வந்த பெண் ஒரு களம் கடந்து கவிதைகளிலும் ஆளுமை  செய்தது.  கோணங்கி, எஸ்.ராமகிருஸ்ணன்;, எம்.ஐp.சுரேஸ் போன்ற ஆண்கள் மட்டுமே புனைவு  செய்து வந்த இலக்கியங்களை ஒரு காலகட்டத்தில் பெண்களாலும் அவர்களின் ;வலியை , துக்கத்தை, துயரத்தை பிரதிபளிக்க முடியும் என நிரூபித்தது. வெகுஐன பெண் கவிஞர்கள் எழுதுகிறார்கள்.  தமிழில் சமையல், வீடு குழந்தைகள் என்ற தளத்திலோ அல்லது பெண்ணியம், சமத்துவம் என்ற தளத்தில் மட்டும் இயங்கிவந்த பெண்மொழி இப்போது பாலியல் உறவுகள், அந்தரங்க விசயங்கள் போன்ற வேறு பல எல்லைகளை தொடத் துவங்கியிருக்கிறது.

    சாரு நிவேதா போன்ற எழுத்தாளர்கள் ஆண்களின் சுய விசயங்களைக் கடந்து பெண்மொழியையும், கவிதை, கதை, கட்டுரைகள் போன்ற வெளிப்பாட்டில் அடையாளம் காண்பித்தார்கள்.  பெண்களுக்கு ஆண்களைவிட அனுபவங்களும், அதற்கான வாய்ப்புகளும் குறைவு என்ற நிலை மாற்றமடைந்து சிலர் தங்களுக்கே உரிய இடத்தை தங்களது படைப்புகளின் மூலம் வடிவமைத்துக் கொண்டிருக்கின்றனர் என்பது நிதர்சனம்.  ஒரு காலத்தில் லட்சுமி மாதிரியான சில பார்ப்பனியப் பெண்கள் மட்டுமே எழுதிவந்த படைப்புகள் சில காலமாற்றத்;தில் பார்ப்பனர் அல்லாத சில பெண்களையும் கடந்து.  ஒதுக்கப்பட்டுக் கிடந்த இலக்கியமான தலித் இலக்கியத்தையும் சிவகாமி, பாமா போன்றோரால் முன்னிலைபடுத்தப்பட்டு கதை வடிவங்கள், நாவல், ஆவணப்படங்கள், என்ற வகைகளும் ஆண்களுக்கு நிகரானது.  திலகவதி, சிவகாமி, பாமா, கிருஷாங்கினி, சல்மா, உமாமகேஸ்வரி போன்றோர் இன்னும் படைப்பாளுமையில் உயர்நிலையில் இருக்கிறார்கள். திலகவதியின் கல்மண்டபம் (நாவல்) சாகித்ய அகடாமி விருதுவரை பெற்றிருப்பது தமிழ் பெண்படைப்பாளர்களுக்கு ஒரு பெரிய அடையாளம் என்றே சொல்லலாம்.

    சிவகாமியின் பழையன கழிதலும், ஆனந்தாயி, பாமாவின் கருக்கு, சங்கதி மாதிரியான நாவல்கள் தலித் இலக்கியத்துக்கும் பேச்சுமொழி வழக்கு நாவலில் பெரிய அடையாளத்தையும் கொடுத்து பெரிய அளவில் பேசப்பட்டது.  சல்மாவின் இரண்டாம் ஐhமங்களின் கதை(நாவல்) இஸ்லாமிய பெண்களின் புறவாழ்வியலை எந்த மாற்றமுமில்லாமல் பட்டவர்த்தமாக எழுதியது இஸ்லாத் சமூகத்து மக்கள் மத்தியில் பெரும் ;சர்ச்சையை கிளப்பியது.  சு.தமிழ்செல்வியின் அளம், கீதாரி, கற்றாழை பெரிய அடையாளத்தைத் தந்;தது.  பாரததேவியின் கரிசல் இலக்கியத்தின் பேச்சு ;மொழிக்கதைகள் பரவலாக அறியப்பட்டது பல்வேறு பல்கலைகழகங்களில் பாடமாக வைக்கப்பட்டது.

    …..சுமக்கவேயில்லாத
    படி எப்படி ;இவ்வளவு
    கனத்துவிடுகிறது
    இந்த மாலை
    மாதவிடாய் ஈரம்நிரம்பி
    கணக்கிற பஞ்சை
    போல        (கவிஞர்.சல்மா)

   
    சல்மாவின் ஒரு மாலையும் இன்னொரு மாலையும்(கவிதை) தொகுப்பில் சொல்லப்பட்டுள்ள  கவிதை இது.  வெளிவந்த காலகட்டங்களில் கடுமையான விமர்சனங்கள் எழுந்தது இருந்தாலும் இதுமாதிரியான  கவிதைகள் கடுமையாக விற்பனையானது. பெருவாரியான  வரவேற்பும் கிடைத்தது என்பதை மறுக்க முடியுமா?
தமிழிலக்கியத்தில் தலித் இலக்கியத்துக்குப் பின் பெரிய  தாக்கத்தை ஏற்படுத்தியது.  தமிழ்ச் சமூகத்தில் மட்டுமல்ல  எந்த சமூகத்திலுமே  ஆண்கள் தங்கள் பாலியல் உணர்வுகளை பேசினால் அது ஆண்களின் ;அடையாளமாகப் பார்க்கப்படுகிறது.  சமீபகாலமாக பெண்கவிஞர்கள். படைப்பாளிகள் தங்கள் பாலியல் உணர்வுகளை பேச வந்திருப்பது நல்ல விசயம். மிக முக்கியமான நிகழ்வு புதியதலைமுறை  கவிஞர்களின் அதீத வருகை குறிப்பாக பெண் வாசகர்களின் தனி கவனத்தைப் பெற்று வருகின்றன.  தொடர்ந்து; கவிதைகள் தொகுப்புகளாக வந்துகொண்டுதானிருக்கிறது.  அகத்திணை(கனிமொழி). பச்சைதேவதை(சல்மர்). முலைகள்(குட்டிரேவதி). மஞ்சனத்தி(தமிழச்சி). சங்கராபரணி(மாலதிமைதிரி), இரவுமிருகம்(சுகிர்தராணி), வெரும்பொழுது(உமாமகேஸ்;வ்ரி). லீனாமணிமேகலை. தமிழ்நதி, இளம்பிறை, அ.வெண்ணிலா, சந்திரா, புரியமாதவி, சத்யா இன்னும் பலவென்று எண்ணிக்கை கூடிக்கொண்டேதான் போகிறது.  இதுபோன்ற புதிய தலைமுறைக் கவிஞர்கள் பெண்மொழி வாயிலாக பெண்களின் அந்தரங்க பிரச்சனைகளாக கருதப்பட்டு வருபவை பற்றியும், உடல் பற்றியும், பாலியல் உறவுகள் பற்றியும், பெண்;ணுறுப்புகள் குறித்தும். தைரியமாக எழுதத் தொடங்கியுள்ளது தமிழிலக்கத்தில் பெரிய அடையாளம் சங்ககாலப் பெண்கவிஞரான வெள்ளிவீதியார் பாடல்களிலும், எட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த ஆண்டாள் பாடல்;;களிலும் பாலியல் நிகழ்வுகள் நிறைய இருந்தன.

    சமகாலத்தில் பெண்கள் தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்துவதற்கு நிறைய சுதந்திரம் இருக்கிறது.  எல்லைகளை உடைக்கத் தொடங்கிருக்கும் தங்கள் மீது விமர்சனங்கள் கிளம்புவது நியாயமில்லை என்றே கூறவேண்டும்.  சிலர் ஒரு சில அதிர்ச்சிக்காக எழுதலாம்.  ஆனால் எல்லாக் கவிதைகளையும் அப்படிச் சொல்;லிவிட முடியாது.  பெண்களுக்கான வெளிப்படைப்புலகம் இப்போதுதான் விரிவடைந்து கொண்டிருக்கிறது.  அது முழுவதுமாக அவர்களை ஈர்த்து திசை திருப்பும், யதார்த்தத்தில் இல்லாத, கிடைக்காத சுதந்திரம் கிடைக்கும்.  அனைவரின் பார்வையும் கூர்மைப்படும். இவ்வiயான பெண்களை ஊக்கப்படுத்தலாம்.  கூடிய மட்டும் விவாதம் செய்யலாம்.  விமர்சனம் தவிர்;க்கலாமே. பெண்படைப்பாளி என்கிற பேதமில்லாமல் ;சகபடைப்பாளியாக பார்ப்போமா?

கணவன் - மனைவி உறவைவிட உன்னதமான உறவு உண்டா?

கணவனுக்குத் தலைவலி. நெற்றியை அழுத்திப் பிடித்துக் கொண்டு சோபாவில் உட்கார்ந்திருக்கிறான். மனைவி கொஞ்சம் தைலம் எடுத்து வந்து, கணவன் அருகில் அம...