Thursday, December 31, 2015

கவிஞர் அன்புசிவாவின் “தேவதையின் வானம்”;- ஓர் பார்வை


முனைவர் பொ.திராவிடபிரேமா,
உதவிப் பேராசிரியர்
தமிழ்த்துறை
கொன்சாகாகலைஅறிவியல் மகளிர் கல்லூரி
கிருட்டிணகிரி.
முன்னுரை
“பாட்டெல்லாம் காதலிலேயேமுகிழ்க்கிறது.”  என்பார் ஆங்கிலக் கவிஞர் ஷெல்லி.  அந்த கூற்றிற்குஏற்றார்போல்,காதல் ஒன்றைமட்டுமேபாடுபொருளாகக் கொண்டுகவிதையிற்றிபுகழ் பெற்றவர்  கவிஞர் அன்புசிவாஅவர்கள்.மலரின் மெல்லியகாதல் பற்றியஉணர்வுகளை,உணர்ச்சிகளை  இக்கட்டுரைஎடுத்துரைக்கின்றன.
கவிஞரின் தேடலும் காதலும்
     இந்நிலவு.லகில் தோன்றியஉயிரினங்கள்யாவற்றிற்கு
ம்காதல் தோன்றுவது இயற்கையே. 
“எல்லாஉயிர்க்கும் இன்பம் என்பது
தான் அமர்ந்துவரூஉம் மேவற்றுஆகும்.”
என்றுதொல்காப்பியரும்
“காதல் அடைதல் உயிரின் இயற்கை”
என்றுபாரதிதாசனும் குறிப்பிடுகின்;றனர்.  “காதல்”என்ற மூன்றெழுத்தில்தான் நிறையபேருக்குக் கவிதையும் பிறக்கிறது.  வாழ்க்கையும் தொடங்குகிறதுஎனலாம்.  இதைக் கவிஞர்அன்புசிவா
“உன்னைத் தேடுவதிலிருந்து
தொடங்குகிறதுஎன் வாழ்வின் அர்த்தம்”
என்றுகுறிப்பிடுகின்றார்.
மனிதர்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமானதேடல் இருக்கும்.  அந்தத் தேடலில் தான் உண்மையானவெற்றி இலக்கு இருக்கும்.  இங்குகவிஞர் குறப்பிடும் “காதல்” தேடலில் தனதுவாழ்க்கைதொடங்குவதற்கானஅர்த்தம் இருப்பதையும்,காதலியைசந்தித்தபிறகுதான்காதலனுக்குமீசைமுளைத்ததாககுறிப்படுவதுபுதுமையானசிந்தனையாகஉள்ளது.   ஒருவரின் உடலளவிலும்,மனதனவிலும் வாழ்க்கையிலும் புதுப்பொலிவுடன் இருக்ககாதலேஅருமருந்தாகஅமைவதைக் காணமுடிகின்றது. இதனை,
கர்ப்பமும் காதலும்
வாழ்க்கையின்  ஒவ்வொருமணித்துளிகளிலும் காதலைஉணர்த்துகின்றது.  பெண்கள் கர்ப்பம் அடைந்துகுழந்தைப் பேற்றைப் பெறும் தாய்மைநிலைக்கு இவ்வுலகில் ஈடு இணைஎதுவும் இல்லை.  பெண்கள்,மேற்கண்டபேறுகாலத்தில் அடையும் உடல்,மனதளவிலானவலியையும்,ஆண்கள்,காதல் நிறைவேறாதநேரங்களில்; அடையும் வலியையும் ஒருசேர இணைத்துகவிதையாக்கிஉள்ளமை,கவிஞரின் கவிதைநயத்தைஉணர்த்துவதபய் உள்ளது.  இதனைவெளிப்படுத்தும் வகையில்,
“பெண்ணே உன் கர்ப்பமும் என் காதலும்
ஒரேவலிதான் என்பதைநீ
உணரும் வரைகாதலிக்கவேண்டும்”
என்றுகுறிப்பிடுகின்றார்.  இக்கூற்று,
காதலைவேண்டிக் கரைகின்றேன், இல்லையெனில்
சாதலைவேண்டித் தவிக்கின்றேன்.”
என்றபாரதியின் கூற்றுக்குஅரண் சேர்ப்பதாகஅமைகின்றது.
மலர்களும் காதலும்
மலர்களும் காதலும் ஒத்ததன்மைஉடையன.  ஏனெனில் இரண்டுமேமென்மையானது.  ஆதனால் தான் காதலர்கள் தங்கள்  காதலைபரிமாற்றம் செய்துகொள்ளமலர்களைபரிசாகஅளிக்கும் வழக்கத்தைமேற்கொண்டுள்ளனர்எனலாம்.   கவிஞரும் தனதுகவிதைகளில் ஆங்காங்கேமலரச் செய்துள்ளார்.  இதனை
“மலரோடுசேர்ந்தால் நாறும் மணக்குமென்றால்
அப்போதுஉன்னோடுசேர்ந்தநானும்
என்றுகுறிப்பிடுகிறார்.
“பூவோடுசேர்ந்தநாறும் மணக்கும்.”
என்றஆன்றோர்கள் சொல்லுக்குவலுசேர்ர்கும் வகையில் கவிஞர் குறிப்பிடுவதைக் காணமுடிகின்றது. தனிமனிதனுடையவாழ்க்கைசெம்மையடையவேண்டுமானால் அவன் காதலில் வெற்றியடையவேண்டும்.  காதல் என்பதுஒத்தமனமுடையஇரு மனங்களின் சேர்க்கையே,தமிழர்கள் கண்டறிந்;த  வாழ்வின் அனைத்து இன்பங்களையும் துய்த்திடவேண்டுமெனின் காதலர்கள் ஒன்றிணையவேண்டும் என்பதனைத் தனதுகவிதைகளில்  கவிஞர்அன்புசிவாபதியச் செய்துள்ளார். 
செடிகளில் பூத்துக் குலுங்கும் மலர்கள் வாடியமலர்களாகபூமியில் உதிர்வது இயற்கையே.  அம்மலர்களையும் உயிர்த்தெழச் செய்யும் ஆற்றல் காதலுக்குஉண்டுஎன்பதை
“வாடியபூக்களைமலரச் செய்வேன்
உன் கூந்தலில் சூடி”
என்றுகுறிப்பிடுகிறார்.
“வாடியபயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்”
என்பார் வள்ளலார்.
     அக்கூற்றினைஉறுதியாக்கும் வகையில்,ஒரறிவுஉயிர்களுக்கும் இரக்கம் கொள்ளும் தன்மையைகலிஞர் தனதுபாடலில் பதியச் செய்துள்ளாhர். 
வாடியமலர்களை,காதலியின் கூந்தலில் சூடி மலரச் செய்வேன்.  என்றஉண்மையானகாதலின் நம்பிக்கையானதுஅக்காதலின் ஆழத்தையும்,புனிதத்தையும்,தெய்வீகத்தையும் உணர்த்துவதாகஉள்ளது.
காதலி,தனது கூந்தலில் சூடியிருக்கும் மலர்கள்,அவளைவிடஅதிகமானமுறைகாதலனைப் பார்த்துகண் சிமிட்டுவதை
“தினமும் என் தெருவழியேவரும்போது
பூக்கள்தான் என்னைப் பார்த்துஅதிகமாகக்
கண் சிமிட்டுகிறது”
என்றுகுறிப்பிடுவதுகவிஞரின் கற்பனைத் திறனைஉணர்த்தும் கவிதையாகும். அஃறிணைஉயிரினமானமலர்களையும் கண் சிமிட்டச் செய்து,கவிஞர் தனதுமனஉணர்வுகளைமலரின் மீதேற்றிதனக்கெனஒருதனி இடத்தைநிலைநிறுத்தியுள்ளார் எனலாம்.  இயல்பாக இயற்றும் எதார்த்தமானகவிதைகளிலும்,கவிஞர் தற்குறப்பேற்றஅணிஅமையப் பாடியுள்ளமைகவிதைக்குமேலும் அணிசேர்பபவையாகஉள்ளன. 
இழப்புகளும் காதலும்
இருநாடுகள் போரிடும் போது,அந்நாடுகளின் போர்க் கருவிகள்,போர் வீரர்கள்,பொன்,பொருள,; இன்னும் பிறஉடைமைகள்,அரசாட்சிபோன்றவற்றை இழக்கநேரிடும்.  இவ்வாறு இரு நாடுகளுக்கும் இழப்புஏற்பட்டாலும்,ஏதேனும் ஒருநாடுவெற்றியைஈட்டும்.  தோல்வியடைந்தநாடுமறுபடியும் அந்நாட்டின் மீதபோரிட்டுவெல்லக்கூடியவாய்ப்பு இயல்பாகவேஉள்ளது.ஆனால்,காதலை இழந்தது இழந்ததுதான்,அதைமீட்டுருவாக்கம் செய்ய இயலாதுஎன்பதை,
“கநற்தபால் மடிப்புகா இழந்தநாட்டை இன்னொரு
யுத்தத்தில் திரும்பபெற்றுவிடலாம்  ஆனால்
குhதலல் இழந்தது இழந்ததுதான்”
என்றசித்தர்களின் பாடலுக்குவலுவூட்டுவதாகஅமைகிறது.
மருந்தும் காதலும்
பழங்காலந் தொட்டு“காதல்”எனபதுஅழியாமல் இன்றுவரைநீடித்தும் நிலைத்தும் நிற்கிறது.  காதலில் காதலர்களுக்குத் தோல்விஏற்படலாமேதவிர,காதல் தோற்காது. அதனாலேயேநமது இலக்கிங்;கள் காதல் வாழ்க்கையைப் போற்றிவளர்த்தன.  பாரதியும்
     “ஆதலினால் காதல் செய்வீர்; உலகத்தவரே”
என்று கூக்குரல் விடுத்தார். 
     இவ்வாறானகாதலில்  ஒருவர் தோற்றுப் போனால் அவரதுமனவலிக்குமருந்துஎன்பதேகிடையாதுஎன்பதுஒருபுறம்,அதற்குமருந்துமீண்டும் காதலிப்பதுதான்  என்றுமறுபுறம் கூறிகாதல்; அழியாமல் வாழ்வதற்கானவழிமுறைகை; கவிஞர் குறப்பிட்டுகையில்
“தோற்பதுநானும் நீயும்
தானேதவிரகாதல் இல்லை”என்றும்
காதல் தோல்விக்குமருந்துகிடையாது
மீண்டும் காதலிப்பதைத் தவிர”
என்றும் குறிப்பிடுகின்றார், இக்கவிதை
“பூழ்கால் அன்னசெங்கால் உழுந்தின்
ஊழ்படுமுதுகாய் உழையினம் கவரும்
அரும் பனிஅற்சிரம் தீர்க்கும்
மருந்துபிறிது இல்லைஅவர் மணந்தமார்பே”என்ற
குறுந்தொகைப் பாடலைசார்ந்ததாகவேஅமைகின்றது. 
மேலும் நமதுமுன்னோர்கள் கூறிய
“முள்ளைமுள்ளால் எடு”
என்ற கூற்றினைஉறுதிப்படுத்தும் வகையில்
“காதல் தோல்விக்குமருந்துகாதலே”
என்ற கூற்றுஅமைவதைநாம் காணமுடிகின்றது. காதல் தோல்வியி;ல் வீழ்ந்தஒருவனைஅழிவிலிருந்துமீட்டுருவாக்கம் பெற்றுஉயிர்த்தெழச் செய்தமை, இன்றைய இளையசமுதாயத்திற்குவெற்றிப் பாதையைஉருவாக்குவதாகஅமைகின்றதுஎனலாம். 
தொகுப்புரை
 புதுக்கவிதைஎன்னும் ஆழ்கடலுள் மூழ்கிகாதல் என்னும் நவரசக் கவிதைமுத்தைகண்டெடுத்துள்ளார்.
 காதல் என்னு; மலர்களைஒன்றிணைத்துகவிதைமாலையாகயாத்துள்ளார்.
 காதலைமிகமென்மையுடன்; அணுகியுள்ளபார்வை,கல் மனதிலும் காதலைவளர்க்கும் காவியத்திற்குசொந்தக்காரராகக் கவிஞர் விளங்குகிறார்.
 எச்சூழ்நிலையிலும் காதல் உறுதித் தன்மையுடன் அழியாச் சின்னமாகவிளங்கவேண்டும் என்பதைகவிஞர் வலியுறுத்துறார். 
 காதல் தோல்விக்குமருந்துகாதலேஎன்றபுதுமையானகருத்தைபதியச் செய்துள்ளார்.
உயிர்களிடத்துஅன்புகாட்டவேண்டும் என்றமனப்பான்மையைவளர்ப்பதாக இவரதுகவிதைகள் உள்ளன.

No comments:

Post a Comment

கணவன் - மனைவி உறவைவிட உன்னதமான உறவு உண்டா?

கணவனுக்குத் தலைவலி. நெற்றியை அழுத்திப் பிடித்துக் கொண்டு சோபாவில் உட்கார்ந்திருக்கிறான். மனைவி கொஞ்சம் தைலம் எடுத்து வந்து, கணவன் அருகில் அம...