Posts

Showing posts from 2015

தமிழ் மக்கள் (ஆண்கள்) பேரவை - நளினி ரட்ணறாஜா

நாட்டின் மொத்த சனத்தொகையில் 52% பெண்களையும் மொத்த வாக்காளார்களில் 58% பெண் வாக்காளர்களையும் கொண்டுள்ள இலங்கையில், அரசியலில் பெண்கள் வகிக்க வேண்டிய பங்கின் முக்கியத்துவத்தை இன்னும்கூட ஆண் அரசியல்வாதிகளும், ஆண் அரசியல் தலைமைகளும் புரிந்து கொண்டதாகத் தெரியவில்லை. புரியாமல் இருக்கிறார்களா அல்லது புரியாத மாதிரி நடிக்கிறார்களா என்பது எனக்கு இன்னும் புதிராகவே இருக்கிறது. தொடர்ந்து ஆறு தசாப்தங்களாக பெண்கள் வகிக்க வேண்டிய அரசியல் பாத்திரம் ஆண்களால் மறுக்கப்பட்டேதான் வந்திருக்கிறது. அத்துடன், சிறுபான்மை மக்களுக்கு சிறு நன்மையேனும் ஆண் அரசியல் தலைமையால் கிடைக்கவில்லை . இன்று பிரச்சனை தீரும், நாளை விடிவு வரும் என்று கூவிக் கூவி வாக்கு வேட்டை நடத்துவது மட்டுமே நாம் காலம் காலமாகக் காணும் யதார்த்தம். மாற்றுக் கட்சிகள், பேரவைகள் எனத் தினம் தினம் அரசியல் அமைப்புக்கள் உருப்பெறுகின்றன. அதற்கான காரணம் என்னவென்று அவர்களைக் கேட்டால், மக்களுடைய பிரச்சனைகளுக்குத் தாமே – இதுநாள் வரை தாம் அங்கம் வகித்த அமைப்புக்கள் அல்ல – விடிவைப் பெற்றுத் தரப்போகிறோம் என்கிறார்கள். அரசியல் கட்சிகள் தம...

நிலத்தில் புரளும் கவிதைகள்- கறுத்தடையானின் “ஊட்டு”

கடந்த நூற்றாண்டின் தொண்ணூறுகளில் நிகழ்ந்த மாறுதல்களான உலகமயமாக்கல் , தாராளமயமாக்கல் உள்ளிட்ட நிகழ்வுகள் இரண்டாயிரத்திற்கு பிறகாக நம் வாழ்முறையில் பெரும் மாறுதலை விளைவித்திருக்கின்றன . கிராமம் தன் சாயலை இழப்பதை சிறு உச்சுக்கொட்டுதலோடு ஏற்றுக் கொண்டிருக்கிறோம் , இயற்கை குரூரமாக வேட்டையாடப்படுவதை ரசிக்கப் பழகியிருக்கிறோம் , மண்ணோடு வாழ்ந்தவர்களின் வாழ்வாரம் சிதைக்கப்படுவதற்கு மெளனசாட்சிகளாகியிருக்கிறோம் . மண்ணும் மலையும் மலடாக்கப்படுவதின் சூட்சுமத்தை இந்த உலகம் கற்றுக் கொண்டிருக்கும் அதே சமயம் இரண்டாயிரத்திற்கு பிறகான வாழ்முறை மாறுதல்களுக்கு இணையான வேகத்தில் தமிழ்க்கவிதையின் போக்கு பாய்ச்சலை சந்தித்திருக்கிறதா என்று வினாவை நமக்கு நாமே எழுப்பிக் கொள்ளலாம் . அதற்கான பதில் இல்லை என்றே இருக்கும் . சற்றேறக்குறைய பதினைந்து ஆண்டுகளில் கவிதை தன்னளவில் மாறுதலைச் சந்தித்திருக்கிறதுதான் ஆனால் அது மெதுவான அதே சமயம் சீரான மாறுதல் . வாழ்முறை மாறுதலின் வேகத்திலும் பரிமாணத்திலும் ஒப்பிடும் போது கவிதையில் நிகழ்ந்திருக்கும் மாற...