தமிழ்க் கவிதை உலகின் தன்னிகரற்ற ஆளுமை. அறுபது ஆண்டுகளுக்கும்
மேலாகத் தொய்வின்றித் தொடர்ந்து கவிதை, உரைநடை, மொழிபெயர்ப்பு, நாடகம்,
பேச்சு என்று பல தளங்களில் தன் முத்திரைகளைப் பதித்துக் கொண்டே
வந்திருப்பவர். மொழிபெயர்ப்புக்கும், மூலப் படைப்புக்கும் என்று இருமுறை
சாகித்ய அகாதமி விருது பெற்ற சாதனையாளர். புதுக்கவிதையை மக்கள் கவிதையாக
மலரச் செய்த வானம்பாடிக் கவிஞர்களில்
இன்றுவரை படைப்புலகில் இயங்கிவரும் சலிலியாத உழைப்பாளி. எந்தக் கொம்பனும்
புறக்கணித்துவிட முடியாத படைப்பாளி. "வெடிப்புறப் பேசு' என்ற பாரதி வாக்கு
இவர் கவிதைகளில் எதிரொலிலிக்கும். அலட்டலோ, ஆர்ப்பாட்டமோ இல்லாமல்
படைப்புலகில் சாதனைகள் புரிந்துவரும் இந்தக் கவிஞரின் சொற்களில் இருக்கும்
கம்பீரம் எப்போதும் குறைந்ததேயில்லை. எது கவிதை? எதற்காக எழுதப்படவேண்டும்
கவிதை? என்பதில் தெளிந்த ஞானம் கொண்ட கவிஞர். படைப்புலகில் சஞ்சரித்துக்
கொண்டிருந்த ஒரு பகல் பொழுதில், கோவையில் அவர் இல்லத்தில் உரையாடியபோது,
எந்தவிதத் தயக்கமோ, மறுப்போ சொல்லாமல் ஒவ்வொரு கேள்விக்கும் அவர் அளித்த
இனிய பதில்களை "இனிய உதயம்' வாசகர்களுக்குப் பந்தி வைக்கிறோம்.
தங்களின் முதல் கவிதை எது? எந்த இதழில் வெளி வந்தது? அப்பொழுது தங்களுக்கிருந்த மனநிலை எப்படியிருந்தது?
என் ஆரம்பக் கவிதையே அரசியல் கவிதைதான். கருப்புச் சட்டைக்கு - என்பது அதன் தலைப்பு. சிலம்புச் செல்வர் ம.பொ.சி. அய்யாவின் தமிழரசுக் கழகத்தில் சேர்ந்த புதிதில், திராவிட இயக்கங்களுக்கு எதிர் நிலைப்பாடு கொண்டு எழுதியது அது. 1951 ஜூனில், செங்கோல் இதழில் வெளிவந்தது அது. திராவிட நாடு கோட்பாட்டை நாங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. அதை, திராவிட மாயை என்று நாங்கள் குறிப்பிட்டோம். தமிழ், தமிழர், தமிழ்நாடு - என்பதே எமது கோட்பாடாக இருந்தது.
வானம்பாடி கவிதை இயக்கத்தின் முக்கியக் கவிஞர் நீங்கள். அதைத் தொடங்கிய சூழல்... காரணங்கள் குறித்துக் கூறுங்கள்...?
புதுக்கவிதையைத் தமிழுக்கு அறிமுகப்படுத்தியவர்கள் தாம், வானம்பாடி இயக்கம் தோன்றுவதற்கு சூழலை ஏற்படுத்திய மூலவர்கள்! எஸ்ரா பவுண்ட், டி.எஸ். எலிலியட் போன்ற ஆங்கிலக் கவிஞர்களின் கட்டற்ற புதுமையான கவிதைப் பாணியை, எழுத்து, கசடதபற, நடை போன்ற இதழ்கள் மூலம் தமிழுக்கு அறிமுகப்படுத்திய சி.சு. செல்லப்பா, ந. பிச்சமூர்த்தி, க.நா.சு., வைத்தீஸ்வரன், ஞானக் கூத்தன், சி.மணி, சுப்ரமணியராஜு, பிரமிள், நகுலன், பசுவய்யா, ஆத்மாநாம் போன்றவர்கள், தமிழகச் சூழலைக் கணக்கில் எடுத்துக் கொள்ளாமல், வாழ்க்கை அடியோடு சிதறுண்ட அய்ரோப்பியச் சூழலைப் படைத்த ஆங்கிலக் கவிஞர்களின் போக்கையே இங்கும் கடைப்பிடித்தனர்.
ஃபிராய்டியத் தாக்கம், அகமன உளைச்சல், வாழ்வின் மீதான வெறுப்பு, சலிப்பு, சுயமோகம், மிகுகாமம் போன்ற மனச் சிதைவுகளுக்கு ஆட்பட்டு அந்நியமாதலிலில் மூழ்கிப் போனார்கள். நிகழ்காலமும், நிகழ்காலக் கொந்தளிப்புகளும், சக மனிதரின் பரிதாப நிலையும், அதற்கான காரணங்களும் அவர்களின் கண்களில் படவேயில்லை. அவர்கள் எழுதுவதே கவிதை என்ற சூழலை அந்த மேட்டுக்குடி மக்கள் உருவாக்கி யிருந்தார்கள். பாரதிதாசனின் கவிதாமண்டலத்தைச் சேர்ந்த முடியரசன், வாணிதாசன், கோ.நீ. அண்ணாமலை, சுரதா போன்றவர்கள் மரபார்ந்த திராவிடச் சார்பில் கரைந்து போனார்கள்.
கவிக்கோ, முருகு சுந்தரம், தமிழன்பன், மீரா போன்ற தமிழிலக்கியப் புலமைமிக்க கவிஞர்கள், கவியரங்கங்களில் முழங்கிக் கொண்டிருந்தார்கள். தனிக் கவிதைகள் பக்கம் தலைகாட்ட இவர்களுக்கு நேரமில்லாமல் போனது. அந்த வெற்றிடத்தை நிரப்ப வந்த கவிஞர்களே எழுத்து -இதழ் சார்ந்தவர்கள். இவர்கள் வாழ்வை விட்டும், சமகாலக் கொந்தளிப்புகளை விட்டும் அந்நியப் பட்டுப் போனதால், அவர்களின் படைப்புகளும், சாதாரணத் தமிழ் வாசகனை விட்டு அந்நியப்பட்டு நின்றன. அப்போதுதான் எழுத ஆரம் பித்திருந்த கலாப்ரியா, கல்யாண்ஜி, கங்கை கொண்டான், ஆத்மாநாம் போன்றவர்களும் கொஞ்ச காலம் இந்தக் கவர்ச்சிக்கு ஆட்பட்டிருந்தனர். எழுத்தைத் தொடர்ந்து, கசடதபற, நடை, ழ, பிரக்ஞை போன்ற சிற்றிதழ்கள் வந்தன. அவற்றில் அருமையான கவிதைகள் இருந்தன என்பது உண்மை. ஆரம்ப காலப் புதுக்கவிதையாளர் கவித்துவ மேதைமையில் யாருக்கும் சளைத்தவர்கள் அல்லர். நல்ல கவிதாவிலாசம் இவர்களிடம் இருந்ததை யாரும் மறுக்க முடியாது. பார்வை சரியில்லை என்பதுதான் எமது குற்றச் சாட்டு.
பசுவய்யா, ஞானக்கூத்தன் போன்ற சிலர் அவ்வப்போது, நாட்டு நடப்பை விமர்சித்து சில கவிதைகள் எழுதி, தமது பாவங்களுக்குப் பரிகாரம் தேடிக் கொண்டார்கள்! அவற்றை நாங்கள் இன்றும் மேற்கோள் காட்டிப் பாராட்டிக் கொண்டிருக்கிறோம். சி. மணியின் "வரும்போகும்' ஓர் அற்புதம்! திராவிட இயக்கச் சார்பு கொண்ட ஆளுமைகள் ஒரு பக்கம், கவித்துவ மேதைமை இருந்தும் அந்நியமாதலுக்கு இரையாகிப்போன புதுக்கவிதையாளர்கள் ஒரு பக்கம். தமிழிலக்கிய சூழலிலில் ஏற்பட்டிருந்த பெரிய இடைவெளி இது. இந்த இடைவெளியை இட்டு நிரப்ப, காலத்தின் தேவை கருதி, காலம் கனிந்தபோது, கனவாய்ப் புறப்பட்டதே வானம்பாடி இதழும், வானம்பாடி இயக்கமும்!
1971 ஆரம்பத்தில், கோவையை அடுத்த சாந்தலிலிங்க அடிகளார் தமிழ்க் கல்லூரி விழா ஒன்றின்போது ஒரு தென்னந்தோப்பில் கருக்கொண்டது இக்கவிதை இயக்கம். முல்லை ஆதவன், அக்கினிபுத்திரன், நித்திலன், இளமுருகு, ஆதி ஆகியோரிடம் நான் பேசினேன். மூன்றாம் அணி உருவாக்கத்திற்கு உற்சாகம் தந்தவர் அனைவரும் தமிழாசிரியர் களே. தமிழையும், தமிழ்க் கவிதையையும் காக்கத் தமிழாசிரியர்களால் உருவாக்கப்பட்டதே வானம்பாடி இயக் கம்! ஆனால், தமிழாசிரியர்களே எங்களுக்கு விரோதமாகத் திரும்பியது சுவையான தனிக்கதை! முல்லை ஆதவன் முயற்சியில் ஓர் ஒருங்கிணைப்புக் கூட்டம், அவரது உப்பிலிலிபாளையம் வீட்டில் நடைபெற்றது. அதில் நான் முன் குறிப்பிட்டவர்களோடு, ஞானி, ஜன.சுந்தரம் போன்ற சிலரும் கலந்துகொண்டார்கள். அதன்பிறகுதான், தமிழ்நாடு முழுவதிலுமுள்ள கவிஞர்களை அணுகி ஆதரவு திரட்டி னோம். வானம்பாடிகளின் உள்வட்டம், திட்டவட்டமான மார்க்சியச் சார்புடையவர்களைக் கொண்டதாக அமைந்தது. சமுதாயப் பார்வை, மனிதநேயம் கொண்ட எவரும் இதழில் எழுதலாம் என்ற விதிவிலக்கும் வகுக்கப்பட்டது. முதலில் சில மாதங்கள் வடகோவை என்.டி.சி. கல்வியகத்தில் கூடிப்பேச, கவிதை வழங்க கு.வே.கி. ஆசான் இடமளித்தார்.
"வானம்பாடி' இதழ் தொடங்கும் முன்பே, முல்லை, அக்கினி, சிற்பி, தேனரசன், நித்திலன், தமிழ்நாடன், மீரா, பாலா, பிரபஞ்சன், மேத்தா, கங்கை, ஞானி, இளமுருகு, ஜன.சுந்தரம், சிதம்பரநாதன், சக்திக் கனல், சி.ஆர். ரவீந்திரன், நா. காமராசன், பரிணாமன், பரணன், அறிவன், பா.செ. பரந்தாமன், ஆதி, கி.வே. ஓடை துரையரசன் என தமிழகம் முழுவதுமாய் வியாபித்தது. எமது சித்தாந்த இறுக்கம் காரணமாக, கவிக்கோ, தமிழன்பன், தமிழவன், இன்குலாப் போன்ற பெருமக்கள் தமது முழு ஆதரவையும், கவிதைகளை யும் வழங்கிச் சிறப்பித்தனர். எழில் முதல்வன், த.கோவேந்தன், கண்ணதாசன் போன்றவர்கள் எல்லாம் எமக்கு உறுதுணை யாக இருந்தனர். கலாப்ரியா, கல்யாண்ஜி போன்ற கண்மணிக் கவிஞர்கள் கவிதைகள் வழங்கினார்கள். நாங்கள் தெருவில் இறங்கினோம். ஒரு மாயச் சூழலிலின் மயக்கத்தில், இருண்மையில் அகப்பட்டிருந்த தமிழ்க் கவிதைக்கு விடுதலை தந்து, ஜனநாயகப்படுத்தினோம். பிரம்மாண்டமான அரங்குகளில் கவிராத்திரி நிகழ்ச்சிகள் நடத்தினோம். ஒரு மாபெரும் கவிதை அலை அடித்தது. கவிதையை நாங்கள் அனைவரிடத்திற்கும் எடுத்துச் சென்றோம். எமக்கு முன் மூடப்பட்டுக் கிடந்த கல்லூரிக் கபாடங்கள் தாக்குப் பிடிக்காமல் திறந்து கொண்டன. கோயில் விழாக்களிலும் எமது கவிதைகள் சமரசமின்றி முழங்கின. கவிஞர் பழமலயைக் கேட்டால் சொல்வார்!
"வானம்பாடி ஓர் இதழல்ல; இயக்கம்' என்றும், "வானம் பாடிகளின் வரவு, தமிழ்க் கவிதை வரலாற்றின் மூன்றாவது கால கட்டம்' என்றும் கணித்துச் சொன்னார். இன்று பல்லாயிரம் இளைஞர்கள் கவிதை எழுத முனைவதற்கு வானம்பாடி இயக்கமே வரலாற்றுப் பூர்வமான அடிப்படை.
எழுத்து, கசடதபற வகையறாக்களின் கவிதைகள் மக்களிடத்தில் பரவலாகச் சென்றடையவில்லை.
ஆனால், வானம்பாடிக் கவிதைகளை மாணவர்கள்கூட விரும்பிப் படித்து வரவேற்றதற்கு என்ன காரணம்..? இன்று வரை எழுதுகிற நல்ல கவிதைகளில் வானம் பாடிகளின் தாக்கம் உள்ளதே?.. வானம்பாடிகளின் தனித்தன்மை என்ன?
அவர்கள் எங்களைக் கும்பல் என்று குற்றம் சாட்டினார் கள். பிரமிள் எழுதிய கவிதை வானம்பாடிக் கும்பலுக்கு என்பது. எமது தோழன் பரந்தாமனின் அஃ இதழிலேயே அதை வெளியிடச் செய்து எமது சினத்தைக் கிளப்ப முயன் றார்கள்! ஆனால், உள்ளடக்கம் எமைத் தாக்குவதாக
அமைந்திருந்தாலும், அந்த மாதத்தின் சிறந்த கவிதை எனத் தேர்ந்தெடுத்துப் பரிசுப் பணம் அனுப்பிவைத்தோம்! (அதை அவர் வானம்பாடி இதழின் நன்கொடையாக ஏற்றுக் கொள்ளும்படித் திருப்பி அனுப்பினார்) வானம்பாடிகள் கும்பல் அல்ல. அதற்கு எதிர்நிலை எடுத்தவர்களே கும்பல்; குறிக்கோளில்லாத கும்பல்; தமிழையும், பண்பாட்டையும் கவிச் சாதுர்யத்தால் சிதைக்க முற்பட்ட கும்பல். வானம் பாடிகள் திட்டவட்டமான தத்துவச் சார்பு கொண்டு, சக மனிதரின் கண்ணீர் துடைக்க முற்பட்ட, மானுடம் பாட முன்வந்த போராளிகள். களத்தில் நின்றவர்கள். அவர்கள் காகிதத்தில் மட்டுமே நின்றவர்கள். நாங்கள் தெருப்பாடகர்கள். வீதிக்கு வந்து வெட்ட வெளிச்சமாய் சகலத்தையும் விமர்சனம் செய்தவர்கள். அதன் காரணமாக அதிகார வர்க்கம் ஏவிய அடக்குமுறைகளுக்கும், துன்பங்களுக்கும் உள்ளானவர்கள். நான்கு சுவர்களுக்குள்ளே கதகப்பாகப் பாதுகாப்புத் தேடியவர்கள் அல்லர் வானம்பாடிகள். நாங்கள் மக்கள் கவிஞர்களாய் இருந்ததால், எமது கவிதைகள் சகலரையும் சென்றடைந்ததால், நாங்கள் மக்களால் வரவேற்கப்பட்டோம். கடல் கடந்த நாடுகளிலும் வானம்பாடிகளின் குரல் ஒலிலித்தது.
நாங்கள் எழுதியவை எல்லாம் கோஷங்கள் என்பது பொய்யான குற்றச்சாட்டு. தேவைப்பட்டபோது, தேவையான களங்களில் மட்டுமே எமது கவிதைகள் கோஷங்களாய் ஒலிலித்தன. வானம்பாடி இதழ்களில் எழுதிய கலாப்ரியா, கல்யாண்ஜி, வண்ணநிலவன், தமிழவன், கோ.ராஜாராம், நாஞ்சில் ஆரிது, ராகுலதாசன், அபி, இலங்கை பேனா. மனோகரன், முருகு சுந்தரம், த.கோவேந்தன், கவிக்கோ போன்றவர்கள் கோஷங்களா போட்டார்கள். மக்களுக்கான கவிதை படைத்ததே வானம்பாடி களின் தனித்தன்மை. அதனால், வானம்பாடிகள், மாபெரும் அரங்குகளில் மட்டுமல்லாமல் நாற்சந்திகளிலும் நின்று முழங்கினார்கள். அதனால்தான், வானம்பாடி இதழ் விலையிலாக் கவிமட லாய் விநியோகிக்கப்பட்டது.
வானம்பாடி இதழுக்கு முன்னரே தாங்களும் கவிஞர் இளமுருகும் கவிதைக்காக மட்டுமே "தேனீ' இதழைக் கொண்டு வந்தீர்கள்.. வானம்பாடிக்கு முன்னோடி இதழ் என்று தேனீயைச் சொல்லலாமா?
கோவை மாநகரம் மேலதிகமான அரசியல் விழிப்புணர்வும், இலக்கியச் செழுமையும் கொண்டது. நீண்ட காலமாக சிந்தனை மன்றங்கள் தொடர்ந்து செயல்பட்டன. அவற்றில் வானம்பாடிக்கு முன் வந்தது "தேன்கூடு இலக்கிய வட்டம்'. நானும், கவிஞர் இளமுருகும் நடத்தியது. அதன் வெளிப்பாடாக, "தேனீ' என்ற இதழ் மூலம் கவிதையில் சோதனை முயற்சிகளை மேற்கொண்டோம். அதிலும் அரசியல் இருந்தது; தமிழைப் பற்றியும், காதலைப் பற்றியும் எழுத வேண்டாம் என்று வேண்டிக் கொண்டோம். பற்றி எரியும் சமுதாயக் கொந்தளிப்பில், தமிழ் வாழ்த்தும் காதலும் கொஞ்ச காலம் ஒதுங்கியிருக்கட்டும் என்பது எமது அன்றைய நிலைப்பாடாக இருந்தது. இந்தச் சூழலே வானம்பாடித் தோற்றத் திற்கு உந்துதலாக அமைந்தது.
வானம்பாடி இயக்கத்தின் தொய்வுக்கும், தொடர்ந்து இயங்காமல் போனதற்கும் என்ன காரணம்? அதில் எழுதி வந்த சில கவிஞர்கள் தங்களை மட்டுமே முன்னிலைப்படுத்திக் கொள்ளவேண்டும் என்று முயற்சித்தார்கள் என்ற கருத்தும் பரவலாக உள்ளதே..?
தொய்வு அன்று; கூடு கலைந்து போயிற்று என்பதுதான் உண்மை! அதை எதற்காக மறைக்கவேண்டும்? கூடுதான் கலைந்ததே தவிர, பறவைகள் இன்னும் உயிரோடும், உயிர்ப்போடும், மேலும் பல உயரங்களைத் தொட்டபடி பறந்து கொண்டுதானிருக் கின்றன. ஜோநதன் சீகல் பறவைதான் சிறந்த சான்று. நாங்கள் இன்னும் களத்தில்தான் இருக்கிறோம். மீரா, பாலா, கங்கை காலம் ஆகிவிட்டார்கள். பிரபஞ்சகவி நாவல் பக்கம் ஒதுங்கிவிட்டார். சி.ஆர்.ரவீந்திரனும் அவ்வாறே. இருவரும் தமது ஆளுமைகளின் மேன்மை விளங்க, மானிட நேயம் கொண்டு படைத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். சிற்பி, தமிழ்நாடன், மேத்தா, சிதம்பரநாதன், ஞானி, தேனரசன், நித்திலன், முல்லை ஆதவன், நான் - எனப் பலரும், எமது பின்முறைகளாக நூற்றுக்கணக்கான இளைய தலைமுறையினரும் மானுடம் பாடிக்கொண்டுதான் இருக்கிறோம். எமது வட்டத்திற்குள் வராவிட்டாலும், இன்குலாபும், அறிவுமதியும், முன்னோடிகளான கவிக்கோவும், தமிழன்பனும், கனிந்த கவிதையில் வல்ல கல்யாண்ஜி, கலாப்ரியா, அபி - மனித நேயத்தில்தான் மையம் கொண்டு அலையடித்துக் கொண்டிருக்கிறார்கள். அறிவுமதி எப்போதும் தம் தம்பிகளுடன் களத்திலேயே நின்று கொண்டிருக்கிறார். வானம்பாடி இயக்கம் கலைந்ததற்கு, சிலர் தம்மை முன்னிலைப் படுத்த முயன்றது ஒரு சிறு காரணம் என்பது உண்மை. ஆனால், அடிப்படைக் காரணங்களில் ஒன்று சித்தாந்தப் பிளவு. சிலர் சீனச் சார்பு, பலர் சோவியத் சார்பு. இன்னொரு காரணம், முக்கிய காரணம், வானம்பாடி பிறந்த பயனை அடைந்துவிட்டது என்பதுதான்! நிறைவு! எதற்காக அது தோன்றியது, அது, எதிர்பார்த்ததைவிட பல மடங்கு சிறப்பாக நிறைவேறியது. கவிதை பரவலானது; அனைவர்க்கும் கவிதை பொதுச் சொத்தானது. சுய புலம்பல்களிலும், காமத்தின் மயக்கத்திலும் பாடிய அழுகுணிச் சித்தர்கள், வெறும் காகிதங்களிலேயே மரணமடைந்தார்கள். எனவே, நாங்கள் புதிய தலைமுறைக்கு வழியொதுக்கி, களம் தந்து, சற்றே ஒதுங்கி நிற்கத் தலைப் பட்டோம். எமது கவியாயுதத்தைக் கீழே போடாமலேயே.
தமிழாசிரியராய்ப் பணிபுரிந்த தங்களுக்கு மொழி பெயர்ப்பில் எப்படி ஆர்வம் ஏற்பட்டது..? எண்ணிப் பார்ப்பதற்கே வியப்பாக இருக்கும் அளவிற்கு மொழி பெயர்ப்பில் ஈடுபட்டிருக்கிறீர்கள்.. தங்களுடைய ஆங்கில அறிவையும், மொழிபெயர்க்கும் ஆற்றலையும் அந்நாளில் எப்படி வளர்த்துக் கொண்டீர்கள்?
தமிழாசிரியர் ஆவதற்கு முன்பே, அறிவியல் கல்வி கற்கும் கல்லூரி நாள்களிலேயே, உள்ளூர் இதழ்களில், ரீடர்ஸ் டைஜஸ்ட் இதழ்களில் வந்த கம்யூனிச எதிர்ப்புக் கதைகளை மொழி பெயர்த்து வெளியிட்டு வந்தேன்! ஜூலிலியஸ் சீசர் வகுப்பு நடக்க நடக்க அதைத் தமிழாக்கம் செய்து வந்தேன் ஒரு வேடிக்கையாக. அது பின்னால் தொடர்ந்து பற்றிக் கொண்டது. ஏராளமான ஆங்கிலப் புத்தகங்கள் படித்து வந்த அனுபவம் அன்றி, முறையாகக் கற்ற ஆங்கில அறிவு குறைவுதான். கற்ற அதிசயங்களை மற்றவர்க்குச் சொல்லவேண்டும் என்ற ஆசையே, மொழியாக்க முயற்சி களின் மூலகாரணம்.
தற்பொழுது நவீனகவிதை என்று எழுதப்படுவற்றில் பெரும்பாலானவை சாரமற்றவையாக உள்ளனவே..
அந்நியக் கவிதையைப் படிப்பது போலல்லவா இருக்கிறது.. வலிலிய இழுத்துப் போட்ட வார்த்தைகளைப் பின்னிப் பின்னிக் கவிதையையும் வாசகனையும் வதைக்கிறார்களே, இந்தப் போக்கு சரிதானா...?
தற்போது சிற்றிதழ்களில் பக்கம் பக்கமாகக் காணப்படும் புதுக்கவிதைகளில் பெரும்பான்மை, "கசட தபற'க்காரர்களின் மிச்ச சொச்சங்கள். அவை பிறந்து அச்சேறியவுடனே அந்தத் தாள்களிலேயே செத்துப் போய்விடுகின்றன. உலகக் கவிதைகளையெல்லாம் படித்தும் சொல்லிலியும், தமிழாக்கியும் வருகிற எமக்கே விளங்கவில்லை யென்றால் அவை என்ன கவிதைகள். எந்த வாசகனும் அதைப் படிப்பதே இல்லை என்பதே உண்மை. புரியாததெல் லாம் மகத்தானது என்ற பூச்சாண்டி அது. மொழிப் பேத்தல். தமிழின் களங்கம். இளைய தலைமுறையினர் சிலரின் சித்தம் பேதலிலித்த கிறுக்கல்கள். இந்தப் போக்கை சில சிற்றிதழ்கள் இழுத்துப் பிடித்து உயர்த்த முயல்கின்றன. இவை தோற்றுப் போகும்.
தற்பொழுது பரவலாக பல பெண் கவிஞர்கள் எழுதி வருகிறார்கள். சிலர் யோனி அரசியல் நடத்துவதாகக் குற்றச்சாட்டும் எழுகிறது. கவிதை எழுதுபவரின் அடக்கப்பட்ட ஆவேச உணர்வு என்பதா.. இல்லை விளம்பர மோகம் என்பதா..? இந்த நிலை சரிதானா..?
தற்போதைய பெண் கவிஞர்கள் பற்றி முதன்முதலாக வாயைத் திறந்து வம்புக்கு இழுக்க முயற்சிக்கிறீர்கள் அதற்கெல்லாம் பின்வாங்குகிற ஆட்கள் அல்ல நாங்கள். கனிமொழி, தமிழச்சி தங்கபாண்டியன், வெண்ணிலா, இளம்பிறை, இரா. மீனாட்சி, ஜோதி பெருமாள், சுகந்தி சுப்பிரமணியன், ஆண்டாள் பிரியதர்சினி, தி. பரமேசுவரி, திலகபாமா, சக்திஜோதி, சுமதிராம், உமாமகேஸ்வரி, மித்ரா, நிர்மலா சுரேஷ் எனப் பூத்துக் குலுங்கும் அருமையான பெண்ணியக் கவிஞர்கள் நடுவே சிலர் தமிழின் சாபக்கேடுகள். புதுக்கவிதைப் பூதகிகள். நவீன பெண்மொழி, உடல்மொழி பேச வந்த ஷகீலாக்கள், மும்தாஜ்கள், கும்தாஜ்கள், இரகசி யாக்கள். சான்று சில தரவா? நாறும் சான்றுகள்? நல்லதற்குச் சான்று தராமல் இந்தச் சாக்கடை நாற்றத்திற்குச் சான்று தர நேர்ந்தது என் விதி. தமிழ்க் கவிஞனின் விதி. என் புதருக்குள் நுழைந்தவனை/ மீளவிடேன்/ ஆணுறுப்பு மலையருவி/ சொரிந்து நிறையவும் வழி தருவேன் எனப் பரவசப்படுகிறது ஒரு பெண்ணியக் கவிதை. இப்படி யோனி முத்திரை குத்தி எழுதினால்தான், மனோன்மணி (ஆண்பிள்ளைதான்) தமது "புது எழுத்தில்' அச்சேற்றுவார் என்று சில புதுக் கவிதைப் பையன்களும், யோனியில் எழும்பும் கூக்குரல் என்றும், அவள், தற்கொலை யுண்ட நாவால், ஆண்குறிகள் அழியச் சாபமிடுகிறாள் / அவற்றை நீட்டிப் புகைத்து / ஒழுகும் மதுவைக் குடிக்கிறாள் என்று எழுதி அனுப்ப, மனோன்மணியும், பக்கத்தில் ஒரு முழு நிர்வாணப் படத்தை அச்சிட்டு அந்தக் கவிஞனுக்கு ஜென்ம சாபல்யம் அளிக்கிறார்! இந்த மானக்கேடான நிலை ஒரு மூலையில் இரகசியமாய் நடந்து கொண்டிருப்பதை நாங்கள் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறோம்!
ஒரு நல்ல கவிதை எப்படி இருக்க வேண்டும் என்று கருதுகிறீர்கள்..?
பாலஸ்தீனக் கவிஞர் மொகமத் தர்வீஸின் மொழியில் சொன்னால் சரியாக இருக்கும்.
கவிதை வீட்டுக்கு வீடு
ஒரு விளக்கை எடுத்துச் செல்லவில்லையானால்
ஏழைகளுக்கு அதன் அர்த்தம்
விளங்கவில்லையானால்
அதை விட்டொழிப்பது உத்தமம்.
உழைப்பாளியின் கைச்சிற்றுளியாக
தீவிரவாதியின் கையெறி குண்டாக
உழவனின் கைக் கலப்பையாக
ஒரு சட்டையாக
ஒரு கதவாக
ஒரு சாவியாக
ஆகவேண்டும் கவிதை..
கவிதையில் நீங்கள் மேற்கொண்ட நெடிய பயணத்தில் அன்றிலிலிருந்து இன்றுவரை தாங்கள் கண்ட வளர்ச்சியை, தளர்ச்சியைக் குறித்துச் சுருக்கமாக சொல்ல முடியுமா..?
எனது கவிதைப் பயணம் 62 ஆண்டுகள் நீளம் கொண்டது. வேறு படைப்பு கள், மொழியாக்கங்கள், நாடக முயற்சிகள், அரசியல் போராட்டங்கள் என இடை யிடையேவந்து போனாலும் கவிதையே உயிர் மூச்சாய் என்றும் தொடர் கிறது. அனைத்திலும் நான் காண்பது கவிதையே. காலத் திற்கு ஏற்ப அது வடிவம் மாறிக் கொண்டே இருக்கிறது. உள்ளடக்கம் உலகம்தான்; மனிதம்தான்.
தங்களின் நாடக, திரையுலக அனுபவங்கள் குறித்துக் கொஞ்சம்..
எனது நாடக, திரை அனுபவங்கள் பற்றிச் சொன்னால் அது ஒரு தனிப் புத்தகமே ஆகிவிடும். பள்ளி, கல்லூரி நாடக ஈடுபாடுகளிலிருந்து நேராக மேடை நாடகத்திற்கு 1960களில் வந்து சேர்ந்தேன். முதலிலில், நாடகங்களுக்குத் தலைமை தாங்குதல், பாராட்டுதல், விமர்சித்தல் என்ற அளவில் நின்றது. நாடக விழாப் போட்டிகளில் கடுமையாக விமர்சித்ததால், நாடகம் எழுத அறைகூவல் விட்டனர். பூமகள் என்ற அமைப்பின் சார்பில் போட்டியாளன் ஆனேன். முருகேசன் இயக்கத்தில் எனது நாடகங்கள் 10, 12 முதல் பரிசுகளைப் பெற ஆரம்பித்து அது தொடரவே, என்னைப் போட்டிகளிலிலிருந்து விலக்கிவிட தொடர்ந்து மூன்றாண்டு களுக்கு மேலாக முதல் பரிசு (கதை, வசனம், பாடல்) பெற்றமைக்காக, நாடக கலாரத்தினம் என்ற விருதளித்து விலகிவிட வேண்டினர். நான் விலகவில்லை. மேடையை விட்டு மட்டும் இறங்கினேன். பம்பாயில், ஞானராஜசேகரன் (ஐஏஎஸ்), நாஞ்சில் நாடன் ஆகிய நண்பர்கள், எனக்கு நவீன நாடகம் காட்டி "ஞானஸ்நானம்' செய்தனர்! நான் கோவை வந்து, கடைசியாக என்று, இ.பா.வின் "போர்வை போர்த்திய உடல்கள்' - நாடகத்தை அரங்கில் நிகழ்த்தி என் பழைய புரசீனிய நாடகங்களைத் துறந்ததாக அறிவித்துத் தெருவுக்கு இறங்கினேன். சங்கமம் என்ற அமைப்பின் சார்பில் வழக்கறிஞர் ஜீவனின் இயக்கத்திலும், என் இயக்கத்திலும், ஞானராஜசேகரனின் வயிறு, ந. முத்து சாமியின் நாற்காலிக்காரர் தொடங்கி நிறைய நவீன நாடகங்களை, கோவை, திருப்பூர், சென்னை, செங்கற்பட்டு ஆகிய ஊர்களில் நிகழ்த்தினோம். அரங்கங்கள் தேவைப் படாமல், மரத்தடிகளே எமக்குப் போதுமானதாக இருந்தது. இப்போது, அரவிந்தன், திலீப் குமார் ஆகிய நண்பர்களுடன் இணைந்து கல்லூரி மாணவர்களுக்கு, நவீன நாடகப் பயிற்சி வழங்கிக் கொண்டிருக்கிறேன். விரைவில் "இப்டா'வுக்குப் புத்துயிர் அளிக்க, கலை இலக்கிய பெரு மன்றம் மூலம், ஏற்பாடுகள் செய்து வருகிறோம்.
திரையுலகத் தொடர்பு பற்றிச் சுருக்கமாகத்தான் இங்கே குறிப்பிட முடியும். பாக்கியராஜ், கமல் அவர்கள் தொடர்பால் அது ஆரம்பம் ஆயிற்று. எமது மேடை நாடகங்களுக்குத் தலைமை தாங்கத் திரைப்பட இயக்குநர் கள் அழைக்கப்பட்டார்கள். எஸ்.பி.முத்துராமன், குகநாதன், வியட்நாம் வீடு சுந்தரம், எஸ்.பி.நாகராஜன், அதற்கு முன், டி.கே.சண்முகம், டி.கே.பகவதி எனப் பலரும் வந்து பாராட்டிப் போக, சில கதைகள் திருட்டுப் போக, ஓர் ஈர்ப்பு ஏற்பட்டது. ஆனால், நான் கதைகளைத் தூக்கிக் கொண்டு கோடம்பாக்கத்தில் அலையவில்லை. மரியாதை யாக ஆலோசனைகள் வழங்கு வதோடு நிறுத்திக் கொண்டேன். திரைச்சூழல் என் இயல் பிற்கு ஒத்துவரவில்லை. நான் பாடல் எழுதினால் மிக உயரத் திற்கு வருவேன் என்று நண்பர்கள் நச்சரித்துக் கொண்டே இருந்தார்கள். நான் சினிமாப் பாடலைத் துறந்தேன்.
அதற்கான இரகசியக் காரணம் நண்பர்களுக்குத் தெரியாது! நான் பத்துப் படங்களுக்கு மேல் பாடல் எழுதியிருக்கிறேன். ஜேசுதாஸ், எஸ்.பி.பி, வாணி ஜெயராம், சுசீலா, சசிரேகா எனப் பலரும் என் பாடல்களைப் பாடியிருக்கிறார்கள். இசைத் தட்டுகள்கூட வந்தன. படங்கள் வரவே இல்லை!
கமல் சார் எனக்காக ஒரு முயற்சி செய்தார், எனக்குத் தெரியாமலேயே.. அப்புறம் அவருடன் தீவிரமாகச் சண்டை போட்டு, சினிமாப் பாட்டுக்கு விடைகொடுத்தேன். நான் விரும்பியிருந்தால், கமல் சாரின் எல்லாப் படங்களிலும் என் பாடல் இடம்பெற்றிருக்க முடியும். என் பெயரன் அரவிந்தன் இயக்கிய எங்கே என் கவிதை? என்ற படத்திலும்கூட, பரத்வாஜ் அவர்கள் என்னை எழுதச் சொன்னபோது, மறுத்துவிட்டு, தம்பி சினேகனுக்கு எல்லாப் பாடல்களும் எழுத வாய்ப்பளித்தோம். தமிழ் சினிமாவுக்கு இனி கிழவர்கள் தேவையில்லை. புதிய தலைமுறை அதைக் கையிலெடுத்துக் கொண்டு சாதனை புரிந்து வருகிறார்கள்.
சமீபத்தில் உலக இலக்கியங்களில் ஒன்றான கரம சோவ் சகோதரர்கள் நூலை பெரிய அளவில் மொழி பெயர்த்து முடித்தீர்கள்.. இப்படி மொழிபெயர்க்கும் பொழுது தாங்கள் கண்ட இடர்ப்பாடுகள் என்ன.. எல்லா வற்றையும் எளிமையாக மொழிபெயர்க்க முடிந்ததா..?
மொழிபெயர்ப்பில் எனக்கு எந்த இடர்ப்பாடும் இல்லை. 6 மொழி பெயர்ப்புகளை வைத்துக்கொண்டு, ஒப்பிட்டு நோக்கி எழுதுவதில் 30 மாதங்களுக்குமேல் ஆகி விட்டது. எழுதுவது விரல்களுக்குச் சிரமம். (அவ்வப்போது விரல்கள் விறைத்துக் கொள்ளும்) மற்றபடி அது ஓர் ஆனந்த பரவச அனுபவம். கரமசோவ் சகோதரர்கள், மிர்தாதின் புத்தகம், வரவிருக்கும் அம்மை வடுமுகத்து ஒரு நாடோடி ஆத்மாவின் நினைவுக்குறிப்புகள் என்ற மூன்றும், என் மொழியாக்கப் படைப்புகளில் சிகரமானவை.
உங்கள் படைப்புகளுக்காக ஒவ்வொரு நாளையும் எப்படித் திட்டமிடுகிறீர்கள்..?
படைப்பிற்கு நேரம் காலம் எதுவும் இல்லை. குறிப்பாக கவிதைக்கு உறுத்தல் ஏற்பட்டால் உடனே உருவாகும் கவிதை. மறதி இருப்பதால் உடனே எழுதிவைக்கவேண்டிய நிலை. அப்புறம், மெல்லத் திருத்தங்கள் செய்து செழுமைப் படுத்திக் கொள்வேன். மொழியாக்கம், குறிப்பாக உரைநடை, முற்பகலில் மட்டும். பிற்பகல், இரவுகளில் எழுதுவதில்லை. இது இரவு தொலைக் காட்சிக்கான நேரம்; குடும்பத்தாருடன்!
தமிழ்க் கவிதை உலகைப் பார்த்தால், சிறு சிறு குழுக்களாகச் சிதறிக் கிடக்கிறது. ஒவ்வொரு குழுவும் ஒரு சிலரை முன்னிறுத்து கிறது.. குழுக்களுள் அடை படாமல் சுதந்திரமாய் எழுதும் கவிஞர்களுக்குச் சரியான அடையாளம் கிட்டுமா?
வாய்ப்புகள் கிடைக்காத தால், பல ஊர்களில் பரவிக் கிடக்கும் இளைஞர் சிறு குழுக் களாகச் சேர்ந்து, சிற்றிதழ்கள் நேர்கின்றது. அது தவிர்க்க இயலாதது. தரமான படைப் புகள் என்றால், ஆள் பார்க் காது சென்னை இதழ்கள் வெளியிட முன்வர வேண்டும். கேரளாவில் இவ்வகை இருட் டடிப்பு இல்லை. எனக்கு வேண்டிய தம்பி மனோஜ் எழுதிய நாவல், மின்னாமினிகளும் மெழுகுதிரிகளும் என்பது கேரள சாகித்ய அகாதெமி பரிசு பெற்றது. அப்போது மனோஜ் சித்தூர் கல்லூரியில் பி.ஏ. இரண்டாம் ஆண்டு படித்துக் கொண்டிருந்தான். அதன் வெளியீட்டு விழாவுக்கு திருவனந்தபுரத்திலிலிருந்து முதல்வர் அச்சுதமேனன் வந்திருந்தார். அங்கே அப்படி! இங்கே எப்படி?
கவிதையின் வடிவம் உள்ளடக்கம் எல்லாம் மாறிக் கொண்டேயிருக்கிறது. எதிர்காலக் கவிதை எப்படி இருக்கும், இருக்க வேண்டும் என்று கருதுகிறீர்கள்?
தமிழ்க் கவிதையின் எதிர்காலம் ஒளிமயமானது. மூத்த தலைமுறைக் கவிஞர்கள் வியக்கும்படியாக கவிதைகளை பாலைநிலவன், இளங்கோ கிருஷ்ணன், மயூரா ரத்னசாமி, ஸ்ரீபதி பத்மநாபா, மகுடேஸ்வரன், பிரான்சிஸ் கிருபா ஆகியோர் படைத்துக் காட்டியிருக்கிறார்கள். இவர்களுக்கு முன்னோடியாக அறிவுமதி, எச்.ஜி.ரசூல், என்.டி.ராஜ்குமார், ஹைகூ முருகேஷ், சுகுமாரன், கண்மணி குணசேகரன், ராஜா சந்திரசேகர், சென்னிமலை தண்டபாணி, மனுஷ்யபுத்திரன், தேவதேவன், விக்ரமாதித்தன் ஆகிய பல கவிஞர்கள் முற்றிலும் புதிதான சிந்தனைகளைத் துணிவாக முன்வைத்திருக்கிறார்கள். நெருக்கடியான நேரத்தில், கொந்தளிப்பான காலகட்டத்தில்- எமக்கு பாப்ரி மஸ்ஜித்தும் வேண்டாம்; ராமஜென்ம பூமியும் வேண்டாம். எமக்கு வேண்டியவை சில நல்ல கக்கூசுகள் - என்ற மனுஷ்யபுத்திரனின் கவிதை எவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது! திகம்பர பெண்கவிகளுக்கு அப்பால், காயம்பட்ட பெண்மையின் குரலாய் ஒலிலிக்கும் தாமரை, தேன்மொழிதாஸ், தமிழ்நதி போன்றவர்களின் படைப்புகள் தமிழின் வீச்சை மேம்படுத்துவன. இவையெல்லாம் உலக மொழிகளுக்குப் போனால் மட்டுமே நமது ஆற்றல் உலகறியப் புலப்படும்.
மூன்றாம் பிறை, மனிதன் கவிதை நாடகங்களுக்குப் பின் ஏன் அந்த முயற்சியைத் தொடர வில்லை..? காவியம் எழுதும் எண்ணமுண்டா..?
பெரிதாகப் படைக்க உடலிலின் மொழி மறுக்கிறது.
அண்மையில்கூட என் கட்டைவிரல் நட்டுக் கொண்டது. ஏகலைவன் என்ன பாடு பட்டிருப்பான் என்பதை அது உணர்த்தியது. காவியம் படைக்கும் எண்ணம் இல்லை. இது காவியக் காலம் அன்று. அவசர யுகம். ஹைகூ மட்டுமே இனி உலவும் போல் தோன் றுகிறது. நல்ல சிறுகதைகள் எல்லாம் ஒரு பக்கக் கதைக் குள் சுருங்கிவிட்டது. இதன் அடையாளம். துணுக்கைப் படித்துவிட்டுத் தூக்கிப் போடுகிறவர்களே அதிகம். அதுவும் சினிமாத் துணுக்கை!
தங்கள் படைப்புகளுக் குள் இருக்கும் இளமையின் இரகசியம் என்ன? தங்களின் கவிதைகள் குறித்து ஆய்வு செய்தவர்களின் முடிவு என்ன?
மனம் கிழடு தட்டாமல் இருப்பதுதான். கல்லூரி, பள்ளிப் பிள்ளைகளுக்குச் சமமாக, அதே தொனியில், என்னால் சிந்திக்கவும், உரையாடவும் முடியும். என் படைப்புகளில் பலர் எம்ஃபில், பிஎச்டி பட்டங்களுக்கு முன்பு ஆய்வு செய்துள்ளனர். இப்போது மூவர் முனைவர் பட்டத்திற்கு ஆய்வுகள் மேற்கொண்டு வருகின்றனர்.
தங்களின் குடும்பம் குறித்து கொஞ்சம்..
மூன்று பெண்கள், ஒரு புதல்வன். இவர்களின் பிள்ளை கள்; பிள்ளைகளின் பிள்ளைகள் என விரிந்து கொண்டி ருப்பது என் குடும்பம். ஒரு சாதாரண மத்தியதரக் குடும்பத் தின் சகல இலக்கணங்களும் இதில் உண்டு. இதற்குமேல் சொல்லிலி எவராவது விடுபட்டுப் போய்விட்டால், வருமே ஒரு விவகாரம், அது கூடங்குளம் விவகாரத்தைவிடப் பெரிது. ஒரு கூடங்குளமே நமக்குப் போதுமானது, இல்லையா?

No comments:
Post a Comment