Posts

Showing posts from September 15, 2019

சங்கப்பாட்டில் 99 வகையான மலர்கள்

பத்துப்பாட்டு தொகுப்பில் ஒரு பகுதி குறிஞ்சிப் பாட்டு ஆகும். இந்த நூல் கபிலரால் எழுதப்பட்டது. மேலும், இது காதலர்கள் மேற்கொள்ளும் நீண்டதூரப்பயணத்தை பற்றியதாகும். இந்நூலில் 99 வகையான மலர்களை பற்றிய குறிப்புகள் உண்டு. இந்த நூல் குறிஞ்சி பகுதியின் வளத்தை எடுத்துரைக்கும் என்றாலும், அனைத்து திணை மலர்களையும் சொல்கிறது. இதன் மூலம் சங்ககாலம் முதலே தமிழகத்தில் எண்ணற்ற மலர்கள் உண்டு என்பதை அறியலாம். அந்த மலர்களின் பெயரை தந்துள்ளேன். (1) காந்தள் (2) ஆம்பல் (3) அனிச்சம் (4) குவளை (5) குறிஞ்சி (6) வெட்சி (7) செங்கோடுவேரி (8) தேமாம்பூ (9) மணிச்சிகை (10) உந்தூழ் (பெருமூங்கில்) (11) கூவிளம் (வில்வம்) (12) எறுழம் (13) கள்ளி (14) கூவிரம் (15) வடவனம் (16) வாகை (17) குடசம் (வெட்பாலை) (18) எருவை (கோரை) (19) செருவிளை (காக்கணம், சங்கு) (20) கருவிளை (21) பயினி (22) வாணி (ஓமம்) (23) குரவம் (24) பசும்பிடி (இலமுகிழ்) (25) வகுளம் (மகிழம்) (26) காயா (27) ஆவிரை (28) வேரல் (சிறு மூங்கில்) (29) சூரல் (30) பூளை (31) கன்னி (குன்றி மணி) (32) குருகிலை (முருங்கிலை) (33) மருதம் (34) கோங்...

தமிழ் இலக்கியத்தில் சுற்றுப்புறச்சூழல்

முனைவர் பூ.மு.அன்புசிவா இணைப் பேராசிரியர் மற்றும் தலைவர் , தமிழ்த்துறை சங்கரா அறிவியல் மற்றும் வணிகவியல் கல்லூரி கோயம்புத்தூர்- 641 035. பேச: 098424 95241. முன்னுரை    சங்க இலக்கியங்கள் காலக் கண்ணாடி போன்று எடுத்துரைக்கின்றன. சங்க இலக்கியங்கள் உலக இலக்கியங்களோடு வைத்து எண்ணத்தக்க செவ்வியல் இலக்கியங்களாகத் திகழ்கின்றன. இவை பழந்தமிழ் மக்களின் வாழ்க்கை முறைகளையும் , அவர்களது சுற்றுச்சூழல்களையும் எடுத்துரைக்கும் காலப்பெட்டகங்களாக மிளிர்கின்றன.மனித வாழ்வு பிறரையும்    பிற பொருள்களையும் சூழ்ந்த வாழ்வாக அமைந்துள்ளது என்பது ஒரு உண்மை. அந்தச் சூழலை இரண்டு பெரும் பிரிவாகப் பகுக்கலாம்: 1. குடும்பச் சூழல் , சமூகச் சூழல் , நாட்டுச் சூழல் , வரலாற்றுச் சூழல் , அரசியல் பண்பாட்டுச் சூழல் என்றவைகளும் மனித வாழ்வைப் பாதிக்கும். 2. இயற்கைச் சூழல் – கடல் , மலை , காடு , ஆகியவை சிலருக்கு நேரடியாக அதாவது விருப்பக் கூறுகளாக அமைய நிலம் , நீர் ஆகிய இரண்டும் எல்லோருக்கு உரிய அடிப்படைக் கூறுகளாக அமையும். சுற்றுச் சூழல் திறனாய்வு     இருபதாம் நூற்றாண்டில...