Monday, November 30, 2020

மன அழுத்தம் போக்க என்ன செய்யலாம் ?

மன அழுத்தம்(டிப்றசன்), ஸ்ட்ரெஸ் , டென்சன் என்ற வார்த்தைகள் இன்றைக்கு அதிகம் பயன்படுத்தப்படும் வார்த்தைகளாகி வருகிறது. இதற்கு காரணம் மதிப்பெண்களுக்காக மாணவர்களுக்கு கொடுக்கப்படும் அழுத்தம், வாழ்க்கை பற்றிய பயமும் இளவயது பிள்ளைகளின் மன அழுத்தத்திற்கு காரணமாகிறது. இதனால் எதிர்மறை எண்ணங்களும், கவலை, பயம், டென்சன் போன்றவையும் ஏற்படுகின்றன. எனவே மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளிடமும், இளம் வயதினரிடமும் அன்பாக பழகினால் அவர்களை மன அழுத்தத்தில் இருந்து விடுவிக்கலாம் என்று உளவியல் வல்லுநர்கள் ஆலோசனை தெரிவித்துள்ளனர்.

மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் நண்பர்களுடன் உரையாடுவதை கூட விரும்புவதில்லை.தனிமையில் அமர்ந்து எதையாவது சிந்தித்தவண்ணம் இருக்கின்றனர். இதனால் பள்ளிகளில் கவனிக்கும் திறன் குறைகிறது. எனவே குழந்தைகளின் எதிர்காலத்தை பாதிக்கும் இந்த மன அழுத்தத்தை களைவது அவசியம் என்று தெரிவிக்கின்றனர் உளவியல் வல்லுநர்கள்.

எளிமையான எதிர்பார்ப்பு

கவுன்சிலிங், உளவியல் சிகிச்சை போன்றவற்றையும் அளிக்கலாம். அதேசமயம் இள வயதினருக்கு குரூப் சைக்கோ தெரபி என்னும் சிகிச்சை முறையினை கையாண்டு அவர்களை மன அழுத்தத்தில் இருந்து விடுவிக்கலாம் என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். வாழ்க்கையை எளிமையான எதிர்பார்ப்புகளுடன் நடத்த பழக்க வேண்டும். சின்னச் சின்ன சந்தோஷங்களையும் கொண்டாடுவது போன்ற பழக்கங்களை சிறு வயது முதல் வழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் உளவியல் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

நட்பான சூழல் அவசியம்

வயதுக்கு ஏற்ற உணவுடன் பள்ளிக் குழந்தைகள் ஏதாவது ஒரு விளையாட்டில் பயிற்சி செய்வதன் மூலம் உடல் வலிமை பெறும். உடல் எடை அதிகரிக்காது. டென்ஷனான மனநிலை மாறும். டீன் ஏஜ் பருவத்தில் உடல் மற்றும் மனதில் ஏற்படும் குழப்பங்களின் காரணமாக டென்ஷன் வர வாய்ப்புள்ளது. எனவே இளம் வயதிலே வாக்கிங் செல்லும் பழக்கத்தை ஏற்படுத்தலாம். மேலும் டீன் ஏஜ் குழந்தைகள் தங்களது பிரச்னைகளை மனம் விட்டு பேச வீட்டில் பெற்றோர் நட்பான சூழலை ஏற்படுத்தி தர வேண்டியதும் முக்கியம்.

சத்துக் குறைபாடு தரும் மன அழுத்தம்

குழந்தைகளின் உடலில் என்ன நோய் உள்ளது என்பதை கண்டறிய வேண்டும். வயதுக்கு ஏற்ப குழந்தைகளுக்கு விற்றமின் சத்துக் குறைபாடு, ரத்தத்தத்தில் ஹீமோகுளோபின் குறைவுப் பிரச்சனைகள் இருக்க வாய்ப்புள்ளது. இவற்றை மருத்துவரின் ஆலோசனைப்படி கண்டறிந்து சிகிச்சை எடுப்பதன் மூலம் நோய்களால் உண்டாகும் தேவையற்ற டென்ஷனை தடுக்கலாம். அவற்றை கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டால் அதுவே மன அழுத்தமாக மாறிவிடும்.

சூரியஒளி இல்லாத குளிர்காலமும் புலத்தில் வாழும் தமிழர்களும்

சூரியஒளி இல்லாத குளிர்காலம் அனைவருக்கும் விற்றமின் D குறைவையும், நோய் எதிர்ப்புசக்தி குறைவையும் ஏற்படுத்துகிறது. உடலின் எதிர்ப்பு சக்தி குறைந்து மற்ற நோய்களின் தீவிரத்தை அதிகரிக்கும். தலைவலி, காய்ச்சல், இருமல் உள்ளிட்ட தொற்றுநோய்கள் உடலை அடிக்கடி தாக்கும் . விற்றமின் D இன்மையால் மாரடைப்பு , மனஅழுத்தம், ஒற்றைதலைவலி, நரம்பு, மூட்டு சம்பந்தமான நோய்கள் உருவாகின்றன. இதனை புலத்தில் வாழும் தமிழர்கள் கவனத்தில்கொண்டு விற்றமின் D – 35 mg மாத்திரைகளை மறக்காது தினமும் இரண்டு குளிர்காலத்தில் உட்கொண்டால் ஆரோக்கியமாக வாழலாம். அத்துடன் குளிர்கால இருட்டும் மனஅழுத்தத்திற்கு காரணமாகிறது. அக்காலத்தில் றியூப் பல்ப் மூலம் வீட்டு மண்டபத்தை பிரகாசமாக்கினால் மனமும் பிரகாசமாகும், உற்சாகமும் வரும்.

தேவையற்ற டென்ஷன்

நேரத்தை திட்டமிடாததும் டென்ஷனுக்கு அடிப்படை காரணமாக இருக்கிறது. வேலைகளை பகிர்ந்து கொள்வது, குறித்த நேரத்தில் வேலைகளை முடிப்பது, அடுத்தவர் மற்றும் தேவையற்ற விடயங்கள் மீதான எதிர்பார்ப்புகளை குறைத்துக் கொள்வது, அடுத்தவர் சுதந்திரத்தில் தலையிடாமல் இருப்பது போன்றவற்றின் மூலம் மனதை இயல்பாக வைத்திருக்க முடியும். இந்த பழக்கங்களை சிறு வயது முதலே பழக்க வேண்டும் என்கின்றனர் உளவியல் வல்லுநர்கள், இதன் மூலம் மன அழுத்தம் ஏற்படுவதில் இருந்து அனைவரையும் காக்க முடியும் என்பது உளவியல் வல்லுநர்களின் கருத்தாகும். அத்துடன் பிடித்த இசை, தியானம் என்பனவும் டென்சனிலிருந்து விடுபட உதவும்.

பதின்ம வயதினரில் மன அழுத்தம்

உணர்வுகளை வெளிப்படுத்துவது மூளையின் பல தொழிற்பாடுகளில் ஒன்று. தேவையான நேரத்தில் உகந்த ஹோர்மோன் சுரப்புக்களைச் செய்வதன் மூலம் உணர்வுகளைக் கட்டுப்பாட்டுடன் வெளிப்படுத்துவதில் மூளை பெரும்பங்கு வகிக்கிறது. இக் கட்டுபாட்டில் பிசகு ஏற்படும்போது வெளிப்படும் ஒழுங்கற்ற உணர்வு மன அழுத்தம் என விபரிக்கப்படுகிறது.

மன அழுத்தத்தின்போது பெரும்பாலும் தொடரும் எதிர்மறையான எண்ணங்கள் அடிக்கடி உறுத்திக்கொண்டிருக்கும். இவ்வெதிர்மறை உணர்வுகள் சமூகம், கல்விச் சூழல், தனிப்பட்ட உறவுகள், குடும்ப உறவு போன்ற பல விடயங்களில் மிகவும் பாதகமான நிலைகளை ஏற்படுத்திவிடுகின்றன.

மன அழுத்தத்தைப் பலரும் சரியாக இனங்காண்பதில்லை. அதனால் அதற்கான சிகிச்சைகளையும் உரிய காலத்தில் மேற்கொள்வதில்லை.

மன அழுத்தம் சோகம் (sadness), மன உடைவு (feeling down) போன்ற சாதாரண உணர்வு நிலைகளின் வெளிப்பாடல்ல. அது மூளையின் கட்டுப்பாடட்டில் ஏற்படும் பிசகினால் ஏற்படும் ஒரு மருத்துவப் பிரச்சினை (medical condition). மன அழுத்தம், ஒருவர் சிந்திக்கும், உணரும், செயற்படும் முறைகளைப் பாதிக்கிறது. அவர் உலகைப் பார்ப்பதும் அனுபவிப்பதும் எப்போதும் எதிர்மறையானதாகவே இருக்கிறது.

மன அழுத்தம் ஏற்படும்போது அது பல மாதங்கள் நீடிக்கலாம். இதை மன அழுத்தத்தின் ஒரு அத்தியாயம் (episode of depression) எனச் சிலர் வர்ணிப்பதுண்டு. மன அழுத்ததுக்குள்ளாகும் பலர் தம் வாழ்நாளில் பல ‘அத்தியாயங்களைச் சந்தித்திருப்பர்.

சிலரது வாழ்வில் ஏற்படும் அதிர்சி தரும், துன்பகரமான சம்பவங்கள் (மிகவும் நேசித்த ஒருவரின் இழப்பு, நீண்டகால மன இறுக்கம் போன்றன) மன அழுத்தத்தின் ஒரு அத்தியாயத்தைக் கிளறிவிடுகின்றன, இருப்பினும் பின்னர் பல அத்தியாயங்கள் தாமாகவே தோற்றம்பெறுகின்றன. அது பொதுவாக மனப் பதட்டத்துடன் (anxiety) சேர்ந்தே ஏற்படுகிறது. குடும்பம், நண்பர்கள், வேலை, பாடசாலை எனப் பல விடயங்களையும் மன அழுத்தம் வெகுவாகப் பாதிக்கிறது.

பதின்ம வயதில் மன அழுத்தம் (Teen Depression)

பதின்ம வயதில் ஏற்படும் மன அழுத்தம் தீவிர மனநிலைத் தளும்பல்கள் (mood swings), மற்றும் எதிலும் ஆர்வமின்மை போன்ற அறிகுறிகளைக் காட்டுகின்றன. மன அழுத்தம் ஒரு பதின்ம வயது ஆணோ பெண்ணோ சிந்திப்பதிலும், உணர்வதிலும், நடத்தையிலும் பிரச்சினைகளை ஏற்படுத்தும். மன அழுத்தம் வாழ்வின் எந்தப் பருவத்திலும் தாக்காலாமெனினும், அவற்றின் அறிகுறிகள் பதின்ம வயதினருக்கும் முதியோருக்குமிடையில் வேறுபடுகின்றன.

பாடசாலைகள் பதின்ம வயதினரின் மன அழுத்த உருவாக்கத்துக்கு மிகவும் உகந்த விளைநிலமாக இருக்கின்றன. தோழமை அழுத்தங்கள் (peer pressure), கல்வியில் உயர் பெறுபேறுகளின் எதிர்பார்ப்புகள் (academic expectations), உடலில் ஏற்படும் பெளதீக மாற்றங்கள் (changing bodies) போன்றன பதின்ம வயதினரில் பல ஏற்ற இறக்கங்களைக் கொண்டுவருகின்றன. இறக்கங்கள், சில பதின்ம வயதினருக்கு, தற்காலிக உணர்வு மாற்றங்கள் என்பதிலிருந்து மன அழுத்தத்தின் வெளிப்பாடுகளாக மாறுகின்றன.

பதின்ம வயதில் ஏற்படும் மன அழுத்தம் ஒரு பலவீனமோ, அல்லது மனப் பலத்தினால் வென்றுவிடக்கூடிய ஒரு விடயமோ, அல்ல. அது மோசமான விளைவுகளை உருவாக்க வல்லது. நீண்டகால சிகிச்சை தேவைப்படுமொன்று. பல பதின்ம வயதினரின் மன அழுத்தம் மருந்தினாலும், உள வள ஆலோசனைகளாலும் தீர்க்கப்பட்டிருக்கிறது.

அவதானிக்கக்கூடிய மாற்றங்கள்

பதின்ம வயதினரில் ஏற்படும் மன அழுத்தத்தின் அறிகுறிகள் பல. பதின்ம வயதினர் ஒருவரின் மனப்பாங்கில் (attitude) மற்றும் நடத்தை (behaviour) ஆகியவற்றில் ஏற்படும் மாற்றங்கள், நட்புச் சூழலிலோ, வீட்டிலோ, சமூகக் கூடல்களிலோ இதர சூழல்களிலோ உடனடியாக அவதானிக்கப்படக் கூடியவை. மன அழுத்தத்தின் அறிகுறிகள் அவற்றின் தீவிரத்தில் மாறுபடலாம். ஒரு பதின்ம வயதினரின் மனநிலையிலோ, நடத்தையிலோ ஏற்படும் மாற்றங்கள் சில:

உணர்வுநிலை மாற்றங்கள்:

மனச் சோர்வு, காரணமில்லாது அழுதல்

சிறிய விடயங்களுக்கும் கோபமும் விரக்தியும் ஏற்படுதல்

வெறுமையும், எதிலும் நம்பிக்கையீனமும்

காரணமில்லது எரிந்து விழுதல்

இயல்பான செயற்பாடுகளிலோ, குடும்ப விடயங்களிலோ, நண்பர்களிடமோ ஆர்வமில்லாதிருத்தல்                                                                

சுய மரியாதையீனம், தன்மீது வெறுப்பு, தான் பயனற்றவரென உணர்தல், குற்ற உணர்வு

முந்திய தவறுகளை மீண்டும் நினைவு மீட்டல், தேவைக்கதிகமாக தற்பிழை கற்பித்தல், சுய விமர்சனம் செய்தல்

தவறுகள், நிராகரிப்புகள் விடயத்தில் அதீத கவனம் கொள்ளல், மித மிஞ்சிய ஐயம் தெளிதல்

சிந்திப்பதில், மனக்குவிப்பில், முடிவுகளை எடுப்பதில், ஞாபகம் வைத்திருப்பதில் சிரமப்படுதல்

எதிர்காலம் இருண்டது, பிரகாசமற்றது எனத் தொடர்ந்து எண்ணுதல்

இறப்பும், தற்கொலையும் அடிக்கடி நினைவில் வரல்

நடத்தை மாற்றங்கள்:

இலகுவில் களைத்துப்போதல், பலவீனமாக உணர்தல்

தூக்கமின்மை அல்லது அதிகமாகத் தூங்குதல்

பசியில் மாற்றங்கள் – பசியின்மையால் சாப்பிடாது உடல் மெலிதல் அல்லது பசியினால் அதிகம் சாப்பிட்டு உடல் பருமனாதல்

மது அல்லது போதை வஸ்து பாவித்தல்

பதட்டப்படுதல் அல்லது துடிப்பு அதிகமாதல் (சுற்றிச் சுற்றி குறு நடை நடத்தல், கைகளை அடிக்கடி முறுக்கிக் கொள்ளல், ஓரிடத்தில் தொடர்ந்து இருக்க முடியாதிருத்தல்)

வேகமாகச், சிந்திக்க, பேச அல்லது உடலசைவுகளை மேற்கொள்ள முடியாமை

விளக்க முடியாத உடல் வலியும் தலை வலியும்; அடிக்கடி பாடசாலைத் தாதியிடம் செல்வதும்

தனிமையை விரும்புவது

கல்வியின் பெறு பேறுகளில் வீழ்ச்சி

பாடசாலை செல்வதில் ஒழுங்கீனம்

சுய ஆரோக்கியத்திலோ தோற்றத்திலோ அக்கறையின்மை

கோபத்தில் பிறரில் எரிந்து விழுதல், தன்னைத் தானே சீர்குலைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுதல், வழக்கத்துக்கு மாறான வகைகளில் நடந்துகொள்ளல்

சுய துன்புறுத்தல் (தன்னைத் தானே வெட்டிக்கொள்தல், எரித்துக் கொள்தல், தேவைக்கு அதிகமாக உறுப்புகளில் துவாரங்களை இட்டுக் கொள்ளல் அல்லது பச்சை குத்திக் கொள்தல்

தற்கொலைக்குத் திட்டமிடுதல் அல்லது முயற்சித்தல்

எது சாதாரணமானது அல்லது சாதாரணமற்றது?

பதின்ம வயதினரின் நடத்தைகள் பொதுவாகவே ஏற்ற இறக்கங்களைக் கொண்டவை. தமக்குத் தேவையான அல்லது விருப்பமான நிகழ்வுகள் நடைபெறாதபோது இறக்கங்களையும், நடைபெறும்போது ஏற்றங்களையும் வெளிக்காட்டுவது இயல்பு. இதனால் மன அழுத்தம் காரணமாக வெளிப்படும் ஏற்ற இறக்கங்களையும் இயல்பானவையென எடுத்துவிடக்கூடிய சந்தர்ப்பங்களும் உண்டு.

பதின்ம வயதினரில் மாற்றங்களை அவதானிக்க முடிந்தால் அவர்களுடன் உரையாடுவது நல்லது. அவை சாதாரண பதின்ம வயதிற்கு இயல்பாக ஏற்படும் மாற்றங்களாயினும் சரி, மன அழுத்தத்தினால் ஏற்படும் மாற்றங்களாயினும் சரி அவர்களுடன் உரையாடி அம் மாற்றங்களைச் சமாளிக்க அவர்களால் முடிகிறதா என்பதை அறிந்துகொள்ள வேண்டும். அவர்களது வாழ்க்கையில் தாங்கமுடியாத சுமைகள் ஏதாவது இருக்கின்றனவா எனபதை விசாரிக்க வேண்டும்.

எப்போது மருத்துவரைப் பார்ப்பது?

பதின்ம வயதினரில் மன அழுத்தத்திற்கான அறிகுறிகள் தெரியவாரம்பித்ததும் அவரகளுடன் உரையாடலை உடனேயே ஆரம்பிப்பது நல்லது. ஒரு மருத்துவருடன் அல்லது உள நல சேவையாளருடன் பேசுவது நல்லது. பதின்ம வயதுப் பிள்ளையின் குடும்ப வைத்தியர் அல்லது பாடசாலையால் பரிந்துரைக்கப்படும் வைத்தியரை முதலில் அணுகுவது நல்லது. மன அழுத்ததின் அறிகுறிகள் தாமாகவே தீர்ந்து விடுவனவல்ல. சிகிச்சையளிக்காது போனால் அது மேலும் பல மோசமான விளைவுகளுக்குக் காரணமாகிவிடலாம்.

நீங்கள் ஒரு பதின்ம வயதினராக இருந்து மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டிருப்பதாகக் கருதினாலோ அல்லது உங்களது நண்பரோ நண்பியோ மன அழுத்தத்துக்கு ஆளாகியிருக்கிறாரென அறிந்தாலோ உடனே மருத்துவ உதவியை நாடுங்கள். உங்கள் மருத்துவர் அல்லது பாடசாலைத் தாதியை முதலில் அணுகுங்கள். உங்கள் ஆதங்கங்களைப் பெற்றோரிடமோ, உற்ற நண்பரிடமோ, ஆசிரியரிடமோ அல்லது நீங்கள் அதிக நம்பிக்கை வைத்திருக்கும் ஒருவரிடமோ தெரிவியுங்கள்.

மன அழுத்தத்திற்கான காரணங்கள்

மன அழுத்தம் ஏற்படுவதற்கான காரணங்கள் இதுவரைக்கும் அறியப்படவில்லை ஆனால் சில விடயங்கள் மீது ஊகங்கள் எழுப்பப்படுகின்றன. அவை:

மூளையின் இரசாயனம் (Brain chemistry).  நரம்பணுக்கடத்திகள் (Neurotransmitters) எனப்படுபவை இயற்கையாக மூளையில் ஏற்படும் இரசாயனப் பொருட்கள். மூளையின் ஒரு பகுதியிலிருந்து இன்னொரு பகுதிக்கோ அல்லது உடலின் இன்னொரு பகுதிக்கோ சமிக்ஞைகளைக் (signals) கடத்துபவை இவைதான். இவ்விரசாயனப் பொருட்களில் ஏதாவது குளறுபடி ஏற்படும்போது நரம்பணுத் தொகுதியின் செயற்பாடு குழப்பமடைந்து மன அழுத்தத்தைத் தோற்றுவிக்கிறது.

ஹோர்மோன்கள் Hormones. ஹோர்மோன்கள் மூளையின் கட்டுப்பாட்டினால் சுரக்கப்படும் பதார்த்தங்கள். இவை கட்டுப்பாட்டிற்குள் (சமநிலையில்) இருக்கும்போது உடலின் தொழிற்பாடுகள் சரியாகவிருக்கும். சமநிலையில் தளம்பல் ஏற்படும்போது, சில வேளைகளில் மன அழுத்தம் ஏற்படுகிறது.

பரம்பரைத் தொடர்ச்சி Inherited traits. குடும்பத்தில் (தாய் / தந்தை) பக்கத்தில் யாருக்காவது மன அழுத்தம் வந்திருந்தால் பிள்ளைகள், பேரப்பிள்ளைகளுக்கு அது வருவதற்குச் சாத்தியமுண்டு.

குழந்தைப் பருவத்தில் ஏற்படும் அதிர்ச்சி Early childhood trauma.  குழந்தைப் பருவத்தில் அதிர்ச்சிதரும் சம்பவங்கள்( பெற்றோரை இழத்தல்), உடல் / உள ரீதியான துர்ப்பிரயோகங்கள் போன்றவை நடைபெற்றிருந்தால் அவை மூளையில் சில மாற்றங்களை ஏற்படுத்துகின்றன. இப்படியானவர்களில் சிலர் பிற்காலத்தில் மன அழுத்தத்துக்கு ஆளாகின்றனர்.

எதிர்மறையான எண்ணங்களைக் கற்றுக்கொள்தல் Learned patterns of negative thinking. பதின்ம வயதினரின் மன அழுத்தம், சில வேளைகளில் ‘நிர்க்கதியாகிவிட்டோம்’, ‘தனிமைப்படுத்தப்பட்டுவிட்டோம்’, ‘உதவியற்றவராகிவிட்டோம்’ என்பது போன்ற எண்ணங்களை வளர்த்துக்கொள்ள இடமளிப்பதன் மூலம், வாழ்க்கையின் சவால்களை எதிர்கொள்ள முடியாது தப்பியோடும் மனப்பான்மை வேரூன்ற அனுமதிப்பதன் மூலமும் ஏற்படுகிறது.

ஆபத்துக் காரணிகள் Risk factors

பல காரணிகள் பதின்ம வயதினரில் மன அழுத்தத்தை உருவாக்கவோ அல்லது கிளறிவிடவோ செய்கின்றன. அவை:

உடற் பருமன் (obesity), தோழமைப் பிரச்சினைகள் (peer problems), நீண்டகாலமாகக் கொடுமைப்படுத்தப்படல் (long-term bullying), கல்வியில் வெற்றி காணாமை ஆகியவை ஒருவரின் தற்பெருமையை (self-esteem) வெகுவாகப் பாதிக்கின்றன.

உடல் ரீதியாகவோ, உள ரீதியாகவோ அல்லது பாலியல் ரீதியாகவோ பாதிக்கப்பட்டிருத்தல்

இதர உள வளப் பிரச்சினைகள், உதாரணமாக, இரு-துருவக் கோளாறு (bipolar disorder), பதட்டம் (anxiety), பசியின்மையால் உண்ணாதிருத்தல் (anorexia) அல்லது பெரும்பசியால் அதிகமுண்ணுதல் (bulimia)

கற்கை இயலாமை (learning disability), கவனக்குறைவு (attention-deficit) / அதிதுடியாட்டம் (hyperactivity) (ADHD)

நீண்டகால வியாதிகளால் ஏற்படும் உடல் வலி ( புற்றுநோய், நீரழிவு, தொய்வு)

ஆளுமைப் பிரச்சினைகள் (தற்பெருமைக் குறைவு, இன்னொருவரில் தங்கியிருத்தல், தன்னில் குறை காணுதல், நம்பிக்கையீனம்)

மது, புகைத்தல், போதை வஸ்து பாவனைகள்

பாலியல் பிரச்சினைகளை (ஒருபால் மோகம், பாலடையாளம்) எதிர்கொள்வதற்கேற்ற சூழல் அமையாமை

குடும்பத்தில் பின்வரும் வியாதிகள் / குறைபாடுகள் இருந்திருந்தால் உங்கள் பதின்ம வயதுப் பிள்ளை, பேரப்பிள்ளைகளுக்கு மன அழுத்தம் ஏற்படக்கூடிய சாத்தியங்களுண்டு:

பெற்றோர், அவர்களின் பெற்றோர் அல்லது இரத்த உறவுகள் யாராவது மன அழுத்தம், இரு-துருவக் கோளாறு அல்லது போதைக்கு அடிமையாகும் பழக்கங்களுக்கு உள்ளாகியிருந்தமை

யாராவது குடும்ப உறவினர் தற்கொலை செய்துகொண்டமை

பெற்றோர் பிரிந்து வாழ்ந்தமை அல்லது தொடரும் குடும்பப் பிரச்சினை

குடும்பத்தில் பிரிவு, இறப்பு போன்ற அதிர்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெற்றமை

சிக்கல்கள் Complications

சிகிச்சை பெறாத மன அழுத்தம் பதின்ம வயதினரின் வாழ்வின் இதர பக்கங்களையும் தீவிரமாகப் பாதிக்க வாய்ப்புண்டு. இதனால் ஏற்படக்கூடிய விளைவுகள் சில:

மது அல்லது போதை வஸ்துவுக்கு அடிமையாதல்

கலவியில் பின்தங்கல்

குடும்பப் பிரச்சினைகள், உறவு நீடிப்பில் பிரச்சினைகள்

குற்றவியற் பிரச்சினைகளுக்குள் சிக்குதல்

தற்கொலை முயற்சிகள் அல்லது தற்கொலை செய்துகொள்ளல்

தவிர்ப்பு Prevention

மன அழுத்தத்தைத் தவிர்ப்பதற்கு உகந்த வழிகள் என்று எதையும் சொல்வதற்கில்லை. இருப்பினும் சில தற்காப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும். அவற்றில் சில:

மன இறுக்கத்தைத் (stress) தவிர்க்க முயலுங்கள். தற்பெருமையை வளர்த்து, பிரச்சினைகள் தோன்றும்போதே தீர்த்துக்கொள்ள முயற்சியுங்கள், தாங்கும் திறனை (resilience) வளர்த்துக் கொள்ளுங்கள்

நல்ல நண்பர்களையும், சமூகச் சூழலையும் உருவாக்கி பிரச்சினை வரும்போது அவர்களின் ஆதரவைப் பெற்றுக்கொள்ளுங்கள்

பிரச்சினையின் ஆரம்பத்திலேயே சிகிச்சை பெற்றுக்கொள்ளுங்கள். மன அழுத்தம் மோசமாவதை அது குறைக்கும்.

பரிந்துரைக்கப்பட்டால், அறிகுறிகள் நின்றபோதும் கூட சிகிச்சையைத் தொடர்ந்து பெற்றுக்கொள்ளுங்கள். நோய் திரும்பி வராமல் இருப்பதற்கு இது அவசியம்.

எப்போது அவசர சேவைகளை நாடுவது?

தற்கொலை, பெரும்பாலும் மன அழுத்தத்துடன் தொடர்புடையது. தற்கொலை செய்யவேண்டுமென்ற உணர்வு எப்போதாவது உறுத்துமானால் உடனே 911 ஐ / அவசர அழைப்பிலக்கத்தை அழையுங்கள் அல்லது உங்கள் பெற்றோரையோ, நீங்கள் நேசிக்கும் ஒருவரையோ அல்லது உற்ற நண்பரையோ அழையுங்கள்.


மன அழுத்தத்திற்கு பல காரணங்கள்

வேலை செய்யும் இடங்களில் நிலவும் பகை, எரிச்சல், கடுமை, மரியாதையின்மை, மன அழுத்தம் என்று பலவித எதிர்மறை மனோபாவங்கள் பற்றியும் அவை நம் உடல் நிலையை எப்படி பாதிக்கின்றன என்பது பற்றியும் அந்தக் கட்டுரை விரிவாக எழுதப்பட்டிருந்தது. கட்டுரை எழுதியவரின் அப்பா ஒரு ஆஸ்பத்திரியில் மூக்கிலும் வாயிலும் டியூப்கள் பொருத்தப்பட்டு படுக்கையில் இருந்ததைப் பார்த்து மனம் நொந்து அவர் எழுதுகிறார். “எப்படி கம்பீரமாக, சுறுசுறுப்பாக இயங்கிக்கொண்டிருந்த என் அப்பா இந்த நிலைக்கு தள்ளப்பட்டார்? நிச்சயமாக அலுவலகத்தில் அவருக்கு ஏற்பட்ட மன அழுத்தம்தான் காரணம் என்று எனக்குப் புரிகிறது. இப்போதெல்லாம் வேலை செய்யும் இடங்களில் நிலவும் போட்டியும், கடுமையும், பிறர் உணர்வுகளை மதிக்காத மனோபாவமும் மிகுந்த மன அழுத்தத்தை ஏற்படுத்தி உடல் நிலையை மிகவும் பாதிக்கின்றன. என் அப்பா ஒரு உதாரணம்….” என்ற ரீதியில் செல்கிறது அந்தக் கட்டுரை. 

“ஜீப்ராக்களுக்கு  ஏன் அல்சர் போன்ற வியாதிகள் வருவதில்லை – Why Zebras don’t get Ulcers” என்ற புத்தகத்தை எழுதிய ராபர்ட் எம் சபோல்ஸ்கி (Robert M Sapolsky) என்ற ஸ்டான்போர்ட் யுனிவர்சிடி பேராசிரியர் ஒருவரின் ஆராய்ச்சியை இந்தக் கட்டுரையாளர் மேற்கோள் காட்டுகிறார். மன அழுத்தத்தினால் இதயக் கோளாறுகள், டயபடீஸ், நரம்புத்தளர்ச்சி, கான்சர் போன்ற உடல் உபாதைகள் வருகின்றன என்று இந்த ஆராய்ச்சி சொல்கிறது.  

அலுவலகத்தில் ஏற்படும் எரிச்சல் அல்லது தகாத வார்த்தைகள் போன்றவை நம் காதுகளில் விழுந்தவுடனேயே அவை மூளையில் உள்ள  செல்களை பாதிக்கின்றன. க்ளுகொகார்டிகாய்ட்ஸ் (Glococorticoids ) என்ற ஹார்மோன் உற்பத்தி அதிகரித்து  உபாதைகளை விளைவிக்கிறது என்றும் இந்த ஆராய்ச்சி விளக்குகிறது.

இந்தக் கட்டுரையைப் படித்தபோது 1990 ல் இதே போன்று மன அழுத்தம் ஏற்படுத்தும் உடல் உபாதைகளைப் பற்றி நான் எழுதிய கட்டுரை நினைவுக்கு வந்தது. அன்று எழுதியதிலிருந்து சமூகம் மாறிப்போய்விடவில்லை. 25 வருடங்கள் கழித்தும்  இன்றைய சூழ்நிலைக்கும் இந்தக் கட்டுரை மிகப் பொருந்தும். 

1990 – டில்லி

அந்தக் குடும்பத்தில் ஒரு காலை வேளை  அது. 7.30 மணிக்கு தெரு முனையில் ஸ்கூல்  பஸ்ஸில் குழந்தைகளை ஏற்றிவிட்டு, அவசரம் அவசரமாக திரும்பக் கிச்சனுக்குள் ஓடிவந்து பாக்கி சமையலை முடித்து தனக்கும் கணவனுக்கும் இரண்டு டிபன் பாக்ஸ்களை ரெடி செய்துவிட்டு என்று தொடர்ந்து அந்தப் பெண் ஓடி, பின்னர் ஒரு வழியாக ஆபீசில் தன் இடத்தில் வந்தமர்ந்தபோது அவளுக்கு மூச்சு  முட்டுவதுபோல் இருந்தது. பைக்குள்ளிருந்து தண்ணீர் பாட்டிலை எடுத்து தண்ணீர் குடித்து ஆசுவாசப்படுத்திக்கொண்டு அன்றைய வேலைகளைப் பார்க்க ஆராம்பித்தாள் அவள்.

வீட்டிலும் வெளியிலும் ஓய்வில்லாது உழைக்கும் அந்தப் பெண்ணுக்கு  ஏகப்பட்ட மன அழுத்தம். இன்னும் சில நாட்களில் அவருக்கு இதய நோய்கள், அல்லது நரம்புத் தளர்ச்சி என்று வந்தால் அதன் காரணம் இந்த மன அழுத்தமாகத்தான் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. 

ஆண்களும் பெண்களுமாக இவரைப்போல் இன்று பலர் மன அழுத்தத்தில் தவிக்கிறார்கள். இதற்கு பெரும்பாலும் வேலை செய்யும் இடங்களும் வேலைக்கான பளுவும்தான் காரணம் என்றும் கூறப்படுகிறது.  பலர் வெளியே சொல்வதுமில்லை.  

பலர் நினைப்பதுபோல் மன அழுத்தம் என்பது ஒரு மன நிலையோ அல்லது ஒரு உணர்ச்சியோ அல்ல. தாங்கள் எதிர்நோக்கும் சவால்களையும் சந்திக்கும் சூழ்நிலைகளையும் ஒருவர் மனதால் அணுகும் முறையும், எதிர்கொள்ளும் முறையும்தான் இப்படி மன அழுத்தமாக வெளிப்படுகிறது என்று மன நல மருத்துவர்கள் கூறுகின்றனர். 

“மன அழுத்தத்திற்கு பல காரணங்கள் உள்ளன.” என்று குறிப்பிடுகிறார் பி.பி. பக்ஷி என்ற மன நல மருத்துவர். ஒவொருவருக்கும் ஒவ்வொரு விதமாக இந்தக் காரணங்கள் வேறுபடும். “ஒவ்வொருவரும் தாங்கள் வளர்ந்த சூழ்நிலை அல்லது மனத்  திண்மை போன்றவற்றை பொறுத்து ஒரே விதமான காரணம் பலவித வித்தியாசமான விதங்களில் விளைவுகளை ஏற்படுத்தும்.

உதாரணமாகக் காலை வேலை அவசரம் அல்லது ஒரு குறிப்பிட்ட காலகெடுவுக்குள் முடிக்க வேண்டும் என்று கட்டாயம் போன்றவை சிலருக்கு அழுத்தம் கொடுக்கும். “ஆனால் இது போன்ற அழுத்தங்கள் எனக்கு ஒரு பொருட்டே அல்ல” என்கிறார் நிர்வாகத்துறையில் ஆலோசகராக இருக்கும் ஒரு பெண். “இது போன்ற அழுத்தங்கள் ஒரு சவால் போல. நம் மூளைக்கும் சுறுசுறுப்பு கிடைக்கும். தவிர இவை ஆக்கப்பூர்வமான அழுத்தங்கள். ஒரு குறிக்கோளை நோக்கி செல்கிறோம் என்று மனதில் ஒரு ஆர்வம் அல்லது கடமையுணர்வு இருக்கும். சாதிக்கும் உணர்வும் இருக்கும். அதனால் இது போன்ற அழுத்தங்கள் உடல் நிலையை பாதிக்கும் என்று கூற மாட்டேன். என்னைப் பொறுத்தவரையில் மன அழுத்தம் என்பது எந்த ஒரு முடிவும், என்ன ஆகும் என்று தெரியாத ஒரு சூழ்நிலை. ஒரு  uncertainty அல்லது vagueness நிலை எனக்கு ஏகப்பட்ட மன அழுத்தத்தைக் கொடுக்கும்.” என்கிறார் இவர். இவரது தந்தை சமீபத்தில் காலமானபோது மிகுந்த மன அழுத்தம் இருந்தது என்கிறார் இவர். 

தினசரி வாழ்க்கைக்கே வருமானம் போதாமல் இருக்கும் குடும்பத்தில் ஒருவித அழுத்தம் என்றால், வியாபாரத்தில் போட்டி, நஷ்டம் என்று வேறுவிதமான அழுத்தம் செல்வந்தர்களுக்கு. 

வேலை செய்யும் இடங்களில் ஏற்படும் மன அழுத்தம் தற்காலத்தில்  அதிகமாகத்தான் இருக்கிறது. உலகில் நிலவி வரும் வியாபாரப் போட்டியே காரணம். ” சின்னதாக சறுக்கினாலும் அதள பாதாளத்தில் விழுவோம் என்ற நிலையில்தான் இன்றைய வேலை செய்யும் இடங்கள் இருக்கின்றன. இதற்கு முன்னால் எவ்வளவு திறமையாக வேலை செய்தோம் என்பதெல்லாம் காணாமல் போய்விடும்,” என்கிறார் ஒரு கணினிப் பொறியாளர். “குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் முடிக்க வேண்டும் என்கிற அழுத்தமும், செய்யும் வேலையைத் திறமையாக முடிக்க வேண்டுமே என்ற அழுத்தமும் எனக்கு சற்று அதிகம்தான் என்று ஆமோதிக்கிறார் ஒரு அரசு அதிகாரி. 

சமூக சூழ்நிலைகளில் அழுத்தம் உண்டாக்கும் காரணங்களில், இன்னும் அதிகம் சம்பாதிக்க வேண்டும் அல்லது ஆசைப்படுவதெல்லாம் கையில் கிடைக்க வேண்டுமென்ற மனோபாவமும் மிக முக்கியமான ஒன்று என்று கருதப்படுகிறது. பாண்டிச்சேரி ஜிப்மேரில் உளவியல் துறையில் பேராசிரியராக இருந்து ஒய்வு பெற்ற திரிவேதி சொல்கிறார், “தங்கள் தேவைகளைப் பெருக்கிக்கொண்டு, இன்னும் வேண்டும்; அது வேண்டும் இது வேண்டும் என்று ஆசை பேராசையாக உருவெடுக்கும் இந்நாட்களில் இதுபோன்ற ஆடம்பர பொருட்களின் பின்னால் ஓடும் மனோபாவத்தால் பலர் மன அழுத்தத்தில் விழுகின்றனர்.” 

ஒரு கல்வி நிறுவனத்தில் பேராசிரியராக இருக்கும் டாக்டர்  சரஸ்வத், போட்டி மனப்பான்மை மன அழுத்தத்திற்கு வெகுவாக காரணம் என்கிறார். ஆனால் பொருள் திரட்டுவதற்காக, விரும்பியதை வாங்க வேண்டும் என்பதற்காக இப்படி உடல் உபாதைகளை வரவழைத்துக்கொள்ள வேண்டுமா? 

“கட்டாயமாக. வேற வழி? என் மகளுக்கு நல்ல வாழ்க்கையை நான் கொடுக்க வேண்டாமா? நாளைக்கு அவளுக்கு என்று நான் ஏதாவது விட்டுச் செல்ல வேண்டாமா?” என்கிறார் நிர்வாக ஆலோசகரான தாய். 

மன அழுத்தத்தினால் சில சமயம் நல விளைவுகளும் உண்டு. “இன்று மிகவும் பிரபலாமாகவும் வெற்றிகரமாகவும் இருக்கும் பலர் இப்படி ஒரு அழுத்தத்தின் உந்துதலில்தான் பல வெற்றிப்படிகளைத் தாண்டியுள்ளார்கள்“, என்கிறார் டாக்டர் பக்ஷி. இந்த மாதிரி மனோபாவம் உள்ளவர்களுக்கு மன அழுத்தம் ஒரு தூண்டுகோல். இது இல்லையென்றால் இவர்கள் வேலை செய்யும் திறன் குறைந்துவிடும்.” என்று இவர் விளக்குகிறார். வீட்டில் மந்தமாக உணரும் சில பெண்கள் வெளியே வேலை செய்யப்  பிரியப்படுவார்கள். அதில் எதிர்கொள்ளும் அவசரமும், டென்ஷனும் அவர்களுக்கு இன்னும் ஊக்கம் கொடுக்கும். Adrenaline ஓட்டத்தை விரும்பும்  மனிதர்கள் இவர்கள். சிலருக்கு ஒய்வு என்பதே பிடிக்காது. அதேபோல் வேலை செய்யும் இடங்களில் இவர்களது ஆர்வத்துக்கும், மனத் தேவைக்கும் சவால்கள் இல்லாமல் இருக்கும்போது இவர்கள் விரைவிலேயே சலித்து விடுவார்கள். அதுவே கூட அவர்களுக்கு வேறுவிதமான மன அழுத்தத்தைக் கொடுக்கும்” என்கிறார் பக்ஷி. மலையேறுவது, பந்தயங்களில் பங்கு பெறுவது போன்ற வீர சாகச செயல்கள் செய்பவர்கள் இது போன்ற அழுத்தம் விரும்பிகள் என்கிறார் இவர். workaholic எனப்படும் வகையைச் சேர்ந்தவர்கள் இப்படிப்பட்ட அழுத்தத்தை விரும்புவார்கள். சவால்களும், சாகசங்களும் சிலருக்கு விருப்பமாக இருப்பதற்கு காரணம், அந்த சவால்களைத் தீர்க்கும் ஆர்வமும், சாதிக்கும் ஆர்வமும்தான். நமக்குப்  பிடித்த எதையும் செய்யும்போது அது டென்ஷனாக இருந்தாலும் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தாது. 

ஆனாலும் சில சமயம்  அப்படிப்பட்ட பாசிட்டிவ் மன அழுத்தங்களும் கூட உடல் நிலையை பாதிக்கும் என்கிறார் டாக்டர்  திரிவேதி. அழுத்தம் நம்மை முன்னேற்றுகிறது என்று வைத்துக்கொண்டாலும், உடல் பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பதில் சந்தேகமில்லை.” என்கிறார் இவர். இந்த மாதிரி நபர்களுக்கு வேலையிலிருந்து ரிடையர் ஆனவுடன் “சும்மா” இருக்கும் மன அழுத்தம் பாதிக்கும். இது பல விதத்தில்  உடல் நலத்தை பாதிக்கும் என்பதோடு, வாழ்க்கையில் ஒரு பிடிப்பின்மையையும் உண்டாக்கும். மன அழுத்ததிற்காக வேலையைத் தேடித் தேடி செய்து பழகியவர்கள் ரிடையரானவுடன் தங்கள் காலுக்கடியில்  கம்பளம் உருவப்பட்ட உணர்வில் தவிப்பார்கள். 

தனக்கு வரும் நோயாளிகளில் இப்படி பலவித மன அழுத்தத்தால் உடல் நிலை பாதிக்கப்பட்டு வருபவர்கள் அதிகம் என்று  குடும்ப மருத்துவர் டாகடர் பி. எம். வர்மா சொல்கிறார். 

எப்படி இந்த மன அழுத்தம் உடல் நிலையை பாதிக்கிறது? Fight or Flight என்ற முறையில்  நம்முள் இயற்கையாகவே பாதுகாப்பு ஏற்பாடுகள் உள்ளன. ஏதோ ஒரு அழுத்தம் என்ற நிலை மூளையில் பதிவு செய்யப்பட அடுத்த நொடியில் இந்த பாதுகாப்புப் படை இயங்க ஆரம்பிக்கிறது. இதற்கு முக்கிய சேனாதிபதி, மூளைக்கு அடியில் இருக்கும்  பிட்யூட்டரி சுரப்பி. ஹார்மோன்கள் உற்பத்தி செய்தபடி இருக்கும் என்டாக்ரின் (Endocrine) சுரப்பிகள் இப்போது இன்னும் வேகமாகவும் அதிகமாகவும் சப்ளை செய்ய ஆரம்பித்து ரத்த ஓட்டத்தில் கலக்கும். Stress Harmones எனப்படும்  cortisol, epinephrine என்ற ஹார்மோன்கள் அதிக அளவில் சுரக்கும்போது அவை நமது உடலில் பல செயல்பாடுகளை பாதிக்கும். அல்சர், ரத்த அழுத்தம் போன்ற வியாதிகள் வர ஆரம்பிக்கும்.” என விளக்குகிறார் டாக்டர் வர்மா. 

டாகடர் ஹான்ஸ் செல்யே என்ற ஹங்கேரியைச் சேர்ந்த மருத்துவர் இந்த ஸ்ட்ரெஸ் ஹார்மோன்கள் பற்றி விரிவாக ஆராய்ச்சி செய்துள்ளார். இவை மூன்று நிலைகளில் வேலை செய்கிறது என்று இவர் குறிப்படுகிறார். ஒரு மன அழுத்த சூழ்நிலை அறிவிப்பு மூளைக்கு வந்தவுடனேயே, ஒரு ராணுவத்தடவாளம் போன்று பிட்யூட்டரி சுரப்பிகள் ஹார்மோன்கள் சுரக்க ஆரம்பிக்கின்றன. இது ஒரு “அபாய அறிவிப்பு” போன்று முதல் கட்டம். Somatotrophic harmone (STH), மற்றும் Adrenocriticotropic ()ACTH  என்பவை இதில் சுரக்கும்   முக்கியமான இரண்டு ஹார்மோன்கள்.

இதில் எஸ் டி ஹெச் எனும் ஹார்மோன் உடனடி விளைவுகளை வெளிப்படுத்தும் – அதாவது காய்ச்சல், உடல் வலி, அசதி என்று முதல் அறிவிப்புகளை வெளிப்படுத்தும். ஏ சி டி ஹெச் ஹார்மோன் அடிரிலின் சுரப்பியை ஊக்குவித்து கார்டிசோல்  என்கிற ஹார்மோனை சுரக்க செய்யும். இந்த ஹார்மோன் எஸ் டி ஹெச் விளைவுகள் சமன் செய்யும். இப்படி நம் உள்ளுக்குள்ளேயே தாக்குதலும் தானாகவே சமாதானமும் ஆகிக்கொண்டிருக்கும். இது இரண்டாவது கட்டம். மன அழுத்த நிலை தற்காலிகமாக உருவாகும்போது இப்படி நம் உள்ளே இருக்கும் பாதுகாப்பு படைகள் நிலையை சரி செய்துவிடும்.

ஆனால், ஹார்மோன்கள் சரியாக தேவையான அளவு மட்டுமே சுரக்கும் போது பிரச்சனையில்லை. மன அழுத்த நிலை தொடர்ந்து,  தேவைக்கதிகமாக கார்டிசால் சுரக்கும்போது  அயர்ச்சி என்ற மூன்றாவது கட்டத்தைத்  தொடும்.  இந்த மூன்றாவது கட்டத்தில்தான் அல்சர், டயபெடீஸ், ரத்தகொதிப்பு போன்ற வியாதிகள் ஆரம்பிக்கின்றன. 

சில சமயம் இந்த மன அழுத்தம் உடலில் வலிகளைத் தோற்றுவித்து தசை மற்றும் நரம்புக் கோளாறுகளும் வர ஆரம்பிக்கும். தலைவலிக்கு பெரும்பாலும் இந்த அழுத்தமே காரணம். இது மன அழுத்தமாக இருக்கலாம் அல்லது உடலில் வேறு எந்த அவயத்தின் மீதும் அழுத்தம் ஏற்படலாம். தலை மற்றும் கழுத்து தசை நார்கள் தொடர்ந்து சுருங்கி விரிந்து வேலை செய்யும்போது அவைகளில் ஒரு இழுப்பு (spasm) வரக்கூடும். இந்த தசை இழுப்பு ரத்த நாளங்களையும் இழுத்து அதனால் வலி ஏற்படலாம். அளவுக்கதிகமாக வேலை செய்பவர்கள், அழுத்தம் நிலவிய சூழ்நிலையில் வேலை செய்பவர்கள், அல்லது பிடித்தமில்லாத வேலையைச் செய்பவர்களுக்கு இப்படிப்பட்ட வலிகள் வரும். மற்றொரு வகை டென்ஷன் தலைவலி வாஸ்குலர் தலைவலி எனப்படும். இதில் ரத்த நாளங்களில் சுருங்கி விரியும் வேலை மிக விரைவாக நடக்கும். இந்த சமயத்தில் ரத்த நாளங்களில் படபடப்பும் (throbbing) கசிவும் இருக்கும். மைகிரைன் வித தலைவலி இந்த வகை. 

வயிற்றுக்கும், நம் உணர்வுகளுக்கும் நேரடித் தொடர்பு உண்டு. வயிற்றைக் கலக்கும் டென்ஷன்களும், வயிற்றில் பட்டாம்பூச்சி பறக்கும் உணர்வுகளும் நமக்கு மிகப்  பழக்கமானவையே. அதேபோல், ரொம்ப பசியாகவோ அல்லது வேறு ஏதோ உடல் உபாதையில் இருந்தால்கூட, ஒரு சந்தோஷமான விஷயம் காதில் விழுந்தவுடன், அல்லது நமக்குப்  பிடித்த நபரின் வருகை என்ற நிகழ்வுகள் நடக்கும்போது பசியோ உடல் உபாதையோ காணாமல் போய்விடும். இதனால், வயிற்றுப்புண் வியாதிக்கும் மன அழுத்தத்திற்கும் தொடர்பு உண்டு. 

ஜீரணம் ஆகும் வகையில் நம் வயிற்றில் ஜீரண திரவங்கள் உற்பத்தியாகிக்கொண்டிருக்கும். மன அழுத்தம் ஏற்படும்போது ஸ்டிரெஸ் ஹார்மோன்கள் அதிக அளவில் சுரந்து, வயிற்றின் சுவர்களில் ரத்த சப்ளையை தாமதப்படுத்தும். இந்தச்  சுவர்களில் மெல்லிய திரை போன்ற ஒன்று படர்ந்து இருக்கும். ரத்த ஓட்டம்  குறையும்போது இந்தத் திரைகளுக்கு ஜீரண அமிலத்தை எதிர்க்கும் சக்தி குறைந்துவிடும். அழுத்த சூழ்நிலையில் ஜீரண திரவங்கள் அதிகமாக உற்பத்தியாகும். ஒரு  பக்கம் ரத்த ஓட்டம் குறைந்து ஜீரண அமிலங்களை எதிர்கொள்ளும் சக்தி குறைகிறது. மறு பக்கம் இந்த அமிலங்களின் உற்பத்தி அழுத்த சூழ்நிலையால் அதிகமாகி, வயிற்றுக் சுவர்களின் மேல் இருக்கும் மெல்லிய திரைக்கு மேலும் சோதனை. முடிவில் அவை பிய்ந்து, வயிற்றில் புண்கள் ஆரம்பிக்கும். 

இதுபோல், மன அழுத்தத்தால் கோபம் ஏற்பட்டு மூளையில் உள்ள ரத்த நாளங்கள் வெடித்து உயிருக்கு ஆபத்தான உதாரணங்கள் அநேகம். எக்கச்சக்கமாக ரத்த நாளங்கள் சுருங்கி விரியும் வேலையைச் செய்தால், கொரோநரி ஆர்டரீஸ் எனப்படும் இதயத்துக்கு ரத்தம் கொண்டு போகும் ரத்த நாளங்கள் சுருங்கிப்போகும். 

சுருங்கிய ரத்த நாளம் வழியாக இதயத்துக்கு ரத்தம் செல்லும் அளவு குறைந்துவிடும். நாளடைவில் இந்த ரத்த நாளம் மிகவுமே சுருங்கும்போது அது அந்த மனிதரின் முடிவில் கொண்டுவிடும். 

நாம் உண்ணும் உணவில் இருக்கும் சக்தியை புரதச் சத்தாகவும், க்ளுகோசாகவும்  மாற்றும் ஸ்டிரெஸ் ஹார்மோன்கள் அளவுக்கதிகமாக சுரக்கும்போது சக்கரை அளவு ரத்தத்தில் அதிகமாகி டயபடீஸ் உருவாகிறது. 

பொதுவாகவே மன அழுத்தம் பலவித நோய்களை விளைவிக்கிறது என்று நம் அனைவருக்குமே தெரிந்தாலும் நம்மையறியாமலேயே ஏதோ ஒரு ஓட்டத்துக்குள் நுழைந்துவிடுகிறோம் – ஆசைகள், ஆர்வங்கள் நிறைவேற்ற வேண்டிய குறிக்கோள்கள் என்று நம்மை ஓட வைக்கும் இந்த லிஸ்ட் வெகு நீளம். ஆனால் ஒரு நிமிடம் நின்று நிதானித்து மன அழுத்த சுழல் காற்றில் சிக்காமல் படிப்படியாக நமது குறிக்கோள்களையும் ஆசைகளையும் நிறைவேற்றிக்கொள்ளலாமே? 

கட்டாயம் முடியும் – மனது வைத்து ஒருமுகமாக செயல்பட்டால். நமது வாழ் முறையையும் உணவுப் பழக்கங்களையும்  இன்னும் இயற்கையோடு ஒத்ததாகவும், உடல் நல கேடுகள் வராமலும் இருக்கும் வகையில் அமைத்துக்கொள்ளலாம். நம் ஓட்டத்தில் மன அழுத்தம் தவிர்க்க முடியாததா? பரவாயில்லை. அவ்வப்போது நின்று நிதானித்து பயணப்படலாம். இளைப்பாறி, பயணத்தைத் தொடரலாம். மனதுக்கு பிடித்த விஷயங்களில் – இசை, நண்பர்களுடன் அரட்டை, அல்லது வழக்கமாக செய்யும் வேலையிலிருந்து  ஏதும் வித்தியாசமான ஆர்வம், என்று பல வித மாற்று வழிகளில்  நடுநடுவே மனதை செலுத்தலாம்.

செய்த ஒரு ஆராய்ச்சியில் atherosclerosis என்ற இதய நோயை வாழ் முறையை மாற்றிக்கொள்வதன்  மூலமும் உணவுப் பழக்கத்தில் மாறுதல் செய்வதன் மூலமும்  மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வரலாம் என்று கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. மருந்தே அவசியமில்லை. 

உடல் பயிற்சிகளும் ஒரு அருமையான Stress busters. நாம் முன்பு பார்த்த நிர்வாக ஆலோசகர் பெண் கூறுகிறார். “சில சமயம் வீட்டில் தரையை நன்றாகத் துடைப்பது என் மன அழுத்தத்திற்கு சரியான வடிகாலாய் உணருகிறேன்.” என்கிறார். யோகா, தியானம், ஏரோபிக்ஸ் என்று உடல் பயிற்சிகளும் பலவகை. ஒன்றுமேயில்லாமல் வெறுமே நடைப் பயிற்சி கூட சிறந்த பலனையளிக்கும். 

இன்றைய தலைமுறை எதிர்கொள்ளும் உளச்சிக்கல்

இன்றைய நவீன யுகத்தில் மனித வாழ்வு இயந்திரமயமாகியுள்ளது. அவனது செயற்பாடுகளும் பரபரப்பு நிலைக்கு உள்ளாகியுள்ளதோடு, தேவைகளும் எதிர்பார்ப்புக்களும் கூட முடிவிலின்றி அதிகரித்து செல்கின்றன. இதன் விளைவாக இரவு பகல் பாராது உழைக்க வேண்டிய நிலைக்கு அவன் தள்ளப்பட்டுள்ளான். இருந்த போதிலும் அவனது தேவைகளும், எதிர்பார்ப்புக்களும் முழுமை அடைவதாக இல்லை.  

இந்த வாழ்க்கை அமைப்பும், பரபரப்பு நிலைமையும் மனிதனின் உடல் உள ஆரோக்கியத்திற்கும் பெரும் சவாலாக அமைந்துள்ளன. இதேவேளை இன்றைய சமூக அமைப்பில்  உள ரீதியாக முகம் கொடுக்கும் முக்கிய நெருக்கடியாக மன அழுத்தம் (Depression) விளங்குகின்றது. இன்றைய காலகட்டத்தில் எல்லா வயது மட்டத்தினரும் இந்நெருக்கடிக்கு முகம் கொடுக்கின்றனர். இதனைப் பரவலாக அவதானிக்க முடிகின்றது. இருந்தும் இப்பாதிப்பு தொடர்பில் அறிந்து தெரியாதவர்களாக அனேகர் உள்ளனர்.  

அதன் காரணத்தினால் மன அழுத்தம் என்றால் என்ன? அதன் பாதிப்புக்கு யாரெல்லாம் உள்ளாகலாம்? அதற்கான சிகிச்சை முறை என்ன? என்பன தொடர்பில் அறிந்து தெரிந்து செயற்படுவதன் அவசியம் குறித்த கவனம் செலுத்தப்பட வேண்டிய காலம் இது.  

வாழ்க்கையே சவால்கள் நிறைந்தது தான். ஆசைகள் நிராசையாவதும், உறவு பிரிவதும் இயல்பானது. சமநிலையில் இருக்கும் மனத்துக்கும் அது தெரியும். இருப்பினும் உண்மையை எதிர்கொள்ளும்போது வாழ்வின் ஏமாற்றத்தையும் பிரிவின் துயரையும் ஏற்றுக்கொள்ள முடியாமல் மனித உள்ளம் தடுமாறும். தடம் மாறும். பின் சில நிமிடங்களிலோ சில மணித்தியாலயங்களோ சில நாட்களிலோ உள்ளம் தன் இயல்புக்குத் திரும்பும்.  

ஏமாற்றங்களும் பிரிவுகளும் இழப்புகளும் தாங்கிக்கொள்ள முடியாத அளவுக்கு ஆழமானதாக இருந்தால், மனம் இயல்பு நிலைக்குத் திரும்ப முடியாமல் சோகத்திற்கு உள்ளாகும். இத்தேக்க நிலை, அதாவது நிஜத்தை ஏற்றுக்கொள்ள மறுக்கும் மனத்தின் போராட்டம் மன அழுத்தத்தின் ஒருவகை என்றால், மூளையில் சுரக்கும் இரசாயனப் பதார்த்தங்களின் குறைபாட்டால் ஏற்படும் மன அழுத்தம் மற்றொரு வகை ஆகும்.  

பொதுவாக மன அழுத்தம் என்றவுடன் அதனால் பாதிக்கப்பட்டவர்கள் சோகமாக இருப்பார்கள் என்றோ எந்நேரமும் அழுவதற்குத் தயாராக இருப்பார்கள் என்றோ எண்ணி விடக்கூடாது. வாழ்வின் முக்கிய நிகழ்வுகளின் மீதான ஈடுபாட்டுக் குறைபாடே மன அழுத்தமாகும்.  

ஆனால் மன அழுத்தத்துக்கு உள்ளானவர்கள் அதிகமாகவோ குறைவாகவோ சாப்பிடுவர். தனித்திருக்க விரும்புவர். நட்பைத் தவிர்த்து கொள்வதில் ஆவர்ம் கொள்வர். வழமையான செயற்பாடுகளில் ஆர்வமின்றி இருப்பர். அதாவது ஒரு செயலைச் செய்வதற்கான ஆற்றல் குறைந்தவர்களாகவோ அல்லது ஆற்றல் இல்லாதவர்களாகவோ இருப்பர். வழக்கத்துக்கு மாறாக அதீத மறதியுடன் ஒருவிதக் குழப்ப மனநிலையில் காணப்படுவர். கோபமும் வருத்தமும் பயமும் மிகுந்த ஒருவித விளிம்பு நிலையில் உணர்ச்சிகள் வெடித்துவிடும் நிலையில் அவர்கள் காணப்படுவர். தனக்கோ பிறருக்கோ தீங்கு விளைவிக்கும் எண்ணமும் அவர்களிடம் இருக்கும். நீண்டகால நோய்கள், பதற்றம், மனச்சிதைவு போன்ற உடல்நலப் பிரச்சினைகளோடும் மனஅழுத்தத்துக்கு தொடர்புண்டு.  

முன்பு அதிகம் கவனம் செலுத்தப்படாதிருந்த இம்மன அழுத்தம் கடந்த ஒரு தசாப்த காலதிற்குள் அபரிமித வளர்ச்சியை அடைந்துள்ளது. உலகில் 30கோடிக்கும் மேற்பட்ட மக்கள், அதாவது உலக மக்கள்தொகையில் சுமார் 4வீதத்தினர் மன அழுத்தத்துக்கு ஆளாகியுள்ளனர் என உலக சுகாதார ஸ்தாபனம் (WHO) 2015இல் வெளியிட்ட புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. மன அழுத்தத்தால் ஆண்களைவிடப் பெண்கள் தான்அதிகம் பாதிக்கப்படுவதாகவும் அப புள்ளிவிபரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.  

உலகலாவிய ரீதியில் முன்கூட்டிய மரணத்துக்கான காரணங்களில் பத்தாவது இடத்தில் மன அழுத்தம் உள்ளது. 15வயதுக்கும் 29வயதுக்கும் இடைப்பட்டவர்களின் மரணத்துக்கு இரண்டாவது முக்கியக் காரணம் மன அழுத்தத்துடன் தற்கொலை உள்ளது. தற்கொலைக்கும் மன அழுத்தத்துக்கும் நெருங்கிய தொடர்புண்டு. உலகில் ஒரு நிமிடத்துக்கு இருவர் இதனால் உயிரிழப்பதாகவும் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.  

உலகில் அதிக மன அழுத்தமுள்ள மனிதர்களைக் கொண்ட நாடாக அமெரிக்காவே உள்ளது. அதற்கு அடுத்தபடியாக கொலம்பியா, உக்ரைன், நெதர்லாந்து, பிரான்ஸ் ஆகிய நாடுகள் காணப்படுகின்றன. ஆனால் ஜப்பான், நைஜீரியா, சீனா ஆகிய நாடுகளில் மனஅழுத்த பாதிப்பு குறைந்த அளவிலேயே காணப்படுவதாகவும் பதிவுகள் தெரிவிக்கின்றன.  

மன அழுத்தத்தின் தாக்கம் கீழை நாடுகளில் குறைவாகவும் மேலை நாடுகளிலும் அதிகமாகவும் இருப்பதால், அது மேலைநாடுகளின் பிரச்சினையாகவோ ஆடம்பரத்தின் வெளிப்பாடாகவோ இருக்கலாம் என்று சிலரால் கருதப்படுகின்றது. மன அழுத்தம் ஏழை பணக்காரன் என்ற வேறுபாடின்றி பெரும்பாலான நாடுகளில் மன அழுத்தம் ஒரே அளவில்தான் உள்ளது என மருத்துவ ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. மன அழுத்தத்தின் பாதிப்பு ஆப்கானிஸ்தானில் மிக அதிகமாகவும் ஜப்பானில் மிகக் குறைவாகவும் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றன.  

வளர்ச்சியடையாத நாடுகளில் வாழும் மக்களுக்கு மன அழுத்தத்தை ஒரு குறைபாடாகக் கருதும் மனமுதிர்ச்சி இல்லை. தங்கள் உணர்வுகளையும் எண்ண ஓட்டங்களையும் வெளிப்படையாகப் பேசினால் சமூகத்தில் தங்களுக்குக் களங்கம் ஏற்படும் என்று அஞ்சி, வெளியில் உதவி பெறத் தயங்கி, அவர்கள் தங்கள் குறைபாட்டைத் தங்களுக்குள்ளேயே புதைத்துக் கொள்பவர்களாக உள்ளனர்.  

கடந்த காலங்களில் மனநோயால் பாதிக்கப்பட்டவர்களைப் பேய் பிடித்துள்ளது எனக் கருதி சமூகத்திலிருந்து ஒதுக்கி வைத்தல் அல்லது மந்திரவாதிகள் எனக் கருதி தூக்கிலிடுதல் போன்றன இடம்பெற்றன

.அந்தக் காலகட்டத்துடன் ஒப்பிடும்போது இன்று மனநோய் குறித்த விழிப்புணர்வில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் மன அழுத்தத்தால் பாதிப்புக்கு உள்ளானவர்கள் இன்றும் தவறாகவே புரிந்து கொள்ளப்படுகின்றனர். அதனால் மனநல மருத்துவரொருவர், 'மன அழுத்தம் வலுவானவர்களின் சாபம்' என்று குறிப்பிட்டுள்ளார்.  

அவரது கூற்றுப்படி, மூளையின் ஒரு பகுதி தான் உடலின் செயல்பாடுகளையும் மனநிலையையும் கட்டுப்படுத்துகின்றது. வாழ்வின் ஏற்றத்தாழ்வுகளுக்குப் பின் மனநிலையை இப்பகுதியே சமன்படுத்துகின்றது. மன அழுத்தத்துக்கு உள்ளானவர்களுக்கு சில இரசாயன சுரப்புகள் குறைவாக காணப்படும். அதனால் மன அழுத்தம் என்பது மனநோய் அல்ல அது உடல் நோயின் வெளிப்பாடேயாகும்.  

நிதி நெருக்கடி, தனிப்பட்ட இழப்புகள், உறவுகளின் பிரிவுகள், நீண்ட நாள் நோய், தாங்க முடியாத வலி, போதைப் பொருட்களின் பயன்பாடு, கடந்த கால அதிர்ச்சிகள், அவமானங்கள் போன்றவற்றால் மன அழுத்தம் ஏற்படலாம். அதீத மன அழுத்தமோ, சிலவகை நோயோ உடலின் நோயெதிர்ப்பு சக்தியை தேவைக்கு அதிகமாக இயங்க வைக்கும். இதனால் மூளையில் வீக்கமும் அதன் விளைவாக மன அழுத்தமும் ஏற்படும் என்று மருத்துவ அறிவியல் தெரிவிக்கின்றது.  

என்றாலும் உடலின் இரசாயன சுரப்புக்களது குறைபாட்டால் ஏற்படும் மன அழுத்தத்தைத் 'தீவிர மன அழுத்தம்' என்றும், வாழ்வின் நிகழ்வுகளால் ஏற்படும் மன அழுத்தத்தை 'மிதமான மன அழுத்தம்' என்றும் மற்றொரு உளநல மருத்துவரொருவர் குறிப்பிட்டுள்ளார்.  

இம்மன அழுத்தத்திற்கு உள்ளானவர்களுக்கு சிகிச்சை அளிக்கவென மருந்துகள் உள்ளன. இதில் ஒரு வகை மருந்து நோயுற்றவரின் பரபரப்பைக் கட்டுப்படுத்தி அவரை அமைதிப்படுத்தும். மற்றைய வகை மருந்துகள் இந்நோய்க்கு உள்ளானவரின் சோர்வையும் அசதியையும் நீக்கி சுறுசுறுப்பை அதிகரிக்கும்.  என்றாலும் உயிரை மாய்த்துக் கொள்வது தொடர்பான எண்ணங்களோ முயற்சிகளோ அதிகமாகக் காணப்படுமாயின் அவர்களை மருத்துவமனையில் தங்க வைத்து சிகிச்சை அளிப்பதே சிறந்தது.  

மன அழுத்தத்திற்கு உள்ளானவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகளால் நா உலர்தல், மலச்சிக்கல், பசியின்மை, அதிகப் பசி, இலேசான மயக்கம், வயிற்றில் எரிச்சல், மாதவிலக்கு தள்ளிப்போகுதல், மாதவிலக்கில் அதீத  குறைவான இரத்தப்போக்கு போன்ற பக்கவிளைவுகள் ஏற்படலாம்.  

அதேநேரம் தீவிர மனநோயால் பாதிக்கப்பட்டவருக்கு ஆரம்ப கட்ட உள நல ஆலோசனை பயனளிக்காது. ஆனால், அவர்களை எப்படிக் கையாள்வது என்பது குறித்த ஆலோசனையை அவர்களது குடும்பத்தினருக்கு வழங்க வேண்டும். மிதமான மன அழுத்தத்துக்கு உள வள ஆலோசனை மிகவும் அவசியம். அதனால் ஏற்படும் உறக்கமின்மை, பதற்றம் ஆகிய இரண்டையும் குறைப்பதற்காக ஆரம்ப கட்டங்களில் சில மாத்திரைகள் தேவைப்படும்.  

மன அழுத்தத்துக்கு நிறைய சிகிச்சை முறைகள் உள்ளன. இருப்பினும் உலகில் மன அழுத்தம் குறைந்தபாடில்லை. மனிதர்களின் மீதான அதன் பிடி இறுகிக்கொண்டு தான் இருக்கின்றது. 2015-க்குப் பிறகு மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 20சதவீதம் அதிகரித்துள்ளது. 1945-க்குப் பிறகு பிறந்தவர்கள் 10மடங்கு மேல் மன அழுத்தத்துக்கு ஆளாகியுள்ளனர். குறிப்பாக 60,- 74வயதுடையவர்கள் ஏனைய வயதினரை விடவும் மன அழுத்தம் காரணமாக அதிகம் பாதிக்கப்படுகின்றனர். உலகில் வயதானவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதும் இந்நோய் அதிகரித்து காணப்படுவதற்கு ஒரு காரணமாகும்.  

அதனால் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள் தாமாகவே முன்வந்து தமது பிரச்சினைகளை வெளிப்படையாகப் பேசி, உதவி கோரும் அளவுக்கு ஓர் ஆரோக்கியமான சமூகத்தை ஏற்படுத்தும் பொறுப்பு அனைவருக்கும் உண்டு. இப்பொறுப்பை உணர்ந்தால், மன அழுத்தத்தால் களையிழந்த வாழ்வுக்கு மீண்டும் உயிரூட்ட முடியும்.

மன அழுத்தம், மன உலைச்சலை போக்க 5 சிறந்த வழிகள்!

 மன அழுத்தம் என்பது நம்மை எந்நேரத்திலும் தாக்கலாம். நம்மை சுற்றி நிலவும் சுழல்கள் மற்றும் சமூக அமைப்புகள் அடிக்கடி நமக்கு தரும் பரிசு மன அழுத்தம். மன அழுத்தம் என்பது ஒரு பெரிய பிரச்சனை, மன உலைச்சல் என்பது மனது அளிவில் மட்டும் அல்லாமல் உடல் அளவிலும் பல பாதிப்பினை ஏற்படுத்துகிறது.

இத்தகு மன உலச்சல்களை நமது வழக்கமான செயல்களில் மேற்கொள்ளும் சில மாற்றங்கள் மூலம் கையாளலாம். அதற்கான 5 எளிய வழிமுறைகள் கீழே...

நடைபயிற்சி : அலுவலகங்களில் (அ) பணியிடங்களில் ஏற்படும் மனஉலைச்சல்களை குறைக்க ஒரு எளிய வழி நடைபயிற்சி தான். ஆன்ம சுதந்திரத்தை பாழாக்கும் மனஅழுத்தத்தினை ஒரு தனிமையா நடைபயிற்சி போக்கிவிடும். அதேவேலையில் நெருங்கிய நண்பர் துணையுடன் செல்லும் நடைபயிற்ச்சியும் புத்துணர்ச்சியை அளிக்கும் என்பதினை மறுத்துவிட முடியாது. 

அழுத்தம் உண்டாக்கும் தின்பண்டங்களை கைவிடுங்கள் : நாம் உண்ணும் உணவு கூட நமக்கு மன அழுத்தத்தினை உண்டாக்கும் என்றால் நம்ப முடிகிறதா... 60 கலோரிக்கு குறைவாக இருக்கும் உணவு பொருட்களை உண்டால் அது மனஅழுத்தம் உண்டாகலாம். அதாவது நீங்கள் உண்ணும் நொறுக்கு தீனிகள் இனிமையாக இருந்தால் அது அழுத்தத்தினை உண்டாகும், அதேப்போல் உப்புத்தன்மை அதிகமாக இருக்கும் பொருட்களை உண்டால் அது அழுத்தத்தினை குறைக்கும் என தெரிவிக்கிறது ஒரு ஆய்வு.

உடற்பயிற்சி : மனநிலை சோர்வாக இருந்தால், மனம் மட்டும் அல்ல உடலும் சோர்ந்துவிடும்... அதற்காக படுக்கையிலேயே ஓய்ந்து விடாதிர்கள். வெளியே வந்து தூய்மையான காற்றில் ஆசுவாசப்படுங்கள். குறிப்பாக புத்துணர்சி தரும் உடற்பயிற்சியினை தொடர்ந்து செய்து வந்தால் புத்துணர்வின் அளவு 360 டிகிரியினையும் தாண்டிச் செல்லும் என்பதை மறந்து விடாதீர்கள்... உடற்பயிற்சி என்றது உங்கள் உடலுக்கான ரீசார்ஜ்!

யோகா ஒரு சிறந்த நண்பன் : மனதொய்வில் இருந்து விடுப்பட அற்புதமான வழி யோகா ஆகும். மன ஊக்கத்திற்கு மட்டும் அல்லாமல் உடல் ஊக்கத்திற்கு யோகா வழிவகுக்கிறது. ஒரே நேரத்தில் உங்கள் மன மற்றும் உடல் ஆரோக்கியத்தை பார்த்துக்கொள்வதோடு ஒரு அமர்வுக்குப் பிறகு நிம்மதி அளிக்கும் பெருமை யோகாவிற்கு உண்டு.

சிறு இடைவெளி : தொடர்ந்து ஓடிக்கொண்டு இருக்கும் இயந்திர வாழ்க்கைக்கு ஒரு இடைவெளி கொடுங்கள்... இது வரவிருக்கும் மனஅழுத்தத்தினை குறைக்கும். மேற்கூறிய காரணங்களால் மன அழுத்தம் ஏற்படலாம், அதனை புரிந்துக்கொண்டு நடந்துக்கொள்வது எவ்வளவு முக்கியமோ, அந்த அளவு முன்னெச்சரிக்கையாக செயல்படுவதும் முக்கியம். எனவே பிரச்சனை வருவதற்கு முன்னதாகவே அதில் இருந்து விடுப்படலாமே.... ஏனெனில் 'வருமுன் காப்பதே சிறந்தது!'

மன அழுத்தம் என்றால் என்ன?

நாம் ஒவ்வொரு நாளும் எத்தனையோ முகங்களைப் பார்க்கிறோம். அவற்றில், எத்தனை முகங்களில் சிரிப்பையோ, சிறு புன்னகையையோ பார்க்க முடிகிறது? ஏன் முகங்களில் இத்தனை இறுக்கம்?

ஒரு நாளில் எத்தனை முறை மகிழ்ச்சியாக மனம் விட்டு சிரிக்கிறீர்கள்? எத்தனை முறை கோபம் / பதற்றம் / பயம்/ கவலை கொள்கிறீர்கள்?‘இவ்வுலகில் எனக்கு எந்த பிரச்னையுமே இல்லை’ எனச் சொல்லும் யாராவது ஒருவரை இதுவரை நீங்கள் சந்தித்ததுண்டா?

தொந்தரவுகள், ஏமாற்றங்கள், காலக்கெடுக்கள் என எல்லாம் கலந்ததாகவே உள்ளது நம் அன்றாட வாழ்க்கை. பள்ளி செல்லும் குழந்தைகளைக் கேட்டால் படிப்பு, ஆரோக்கியமற்ற குடும்பச் சூழல், இணக்கமில்லாத சக மாணவர்கள் போன்றவை பிரச்னை ஏற்படுத்துவதாகச் சொல்கிறார்கள்.

டீன் ஏஜ் குழந்தைகளோ, பாடத்திட்டப் பளுவுடன் அவர்களின் வயதுக்குரிய விஷயங் களான காதல், தோற்றம், புரிந்து கொள்ளாத பெற்றோர், ஆசிரியர், கேலி செய்யும் நண்பர்கள் என பல்வேறு விஷயங்கள் தினம் தினம் தாக்குவதாகச் சொல்கிறார்கள்.

வேலைக்குச் செல்வோரோ அதிக வேலைப்பளு, மோசமான சூழல், குறைந்த சம்பளம், நிரந்தரமற்ற வேலை, இணக்கமற்ற மேனேஜர், சக ஊழியர்கள், சலிப்பு தட்டும் வேலைத் தன்மை, விருப்பமில்லாத வேலையைப் பார்ப்பது என பல விஷயங்கள் பிரச்னை அளிப்பதாகக் கூறுகிறார்கள். வெளியில் செல்கிறவர்களுக்குத்தான் இவ்வளவு பிரச்னை என்றால், வீட்டிலேயே இருக்கும் குடும்பத்தலைவிகளுக்கு பிரச்னை இல்லையா என்ன?

புகுந்த வீட்டினருடன் சுமுக உறவு இல்லாதது, அதனால் சண்டை சச்சரவுகள், குடிகார கணவன், அனுசரித்துப் போகாத கணவன், தொந்தரவு கொடுக்கும் பிள்ளைகள், வேலைக்காரி பிரச்னை எனப் பல்வேறு சிக்கல்களை சந்திப்பதாகச் சொல்கிறார்கள்.

முதியோர் களோ நலிந்து வரும் உடல்நலம், பிறரைச் சார்ந்திருக்க வேண்டிய சூழ்நிலை, வீட்டுச்சூழல், போதிய பணமின்மை, தனிமை, வெறுமை, கணவன்/மனைவியின் மரணம், எப்போதும் ‘சும்மா’வே இருக்க வேண்டிய நிர்பந்தம், தங்கள் கருத்தை யாரும் மதிப்பதில்லை என்ற உறுத்தல், கடைசி காலம் குறித்த பயம் போன்றவை தொந்தரவு அளிப்பதாகக் கூறுகிறார்கள். பிரச்னைகளின் காரணிகள் வேண்டுமானால் வேறு வேறாக இருக்கலாம்...

ஆனால், அந்தப் பிரச்னை களைச் சமாளிக்க முடியாமல், நவீன வாழ்க்கை முறையில் மன அழுத்தத்துக்கு ஆளாகாதவர்களை(Stress)  பார்ப்பது மிக அரிது. பெரும்பாலும் மனஅழுத்தம் என்றாலே அது மனதுக்கும் / உடலுக்கும் ஒவ்வாத விஷயங்களாலேயே ஏற்படும் என பலர் நம்புகின்றனர். அது தவறு.

எனப்படும் மன அழுத்தமானது திருமணம், குழந்தைப் பிறப்பு, வேலை மாற்றம் என வாழ்வில் நல்ல தருணங்களில் ஏற்படக்கூடியது. Distress என்பது நெருங்கியவரின் மரணம், வேலை இழப்பு, காதல் தோல்வி எனப் பல விரும்பத்தகாத சம்பவங்களால் ஏற்படுவது.

இக்காலத்தில் ஆரோக்கிய வாழ்வுக்குப் பெரிய சவாலாக இருக்கும் மன அழுத்தம், நம் உயிரைக் காப்பாற்றவே உருவானது என சொன்னால் ஆச்சரியமாக இருக்கும்தானே?

ஆதிகாலத்தில், மனிதன் காட்டில் நடமாடும் போது, ஒரு புலி அவன் முன் திடீரெனத் தோன்றினால், அவன் அதனை எதிர்த்து போரிட வேண்டும் (Fight) அல்லது ஓட வேண்டும் (Flight ). ஆபத்திலிருந்து காப்பாற்ற நம்மை தயார் நிலையில் வைப்பதற்காக உடலில் சில ரசாயன மாற்றங்கள் ஏற்படுகின்றன.

நம் நரம்பு மண்டலம் புலியை பார்த்தவுடனேயே, பலவிதமான ஹார்மோன்களை (Adrenaline - Cortisol) சுரக்கச் செய்கிறது. இவை அவசர நடவடிக்கை எடுக்க வசதியாக மனிதனுக்குள் சில மாற்றங்களை செய்கின்றன.

* இதயத்துடிப்பு அதிகரிக்கும்.

* தசைகள் இறுகும்.

* ரத்த அழுத்தம் அதிகரிக்கும்.

* மூச்சு இரைக்கும்.

* புலன்கள் கூர்மையாகும்.

இந்த உடல் ரீதியான மாற்றங்கள் நம்முடைய வலிமையையும் சகிப்புத்தன்மையையும் கூட்டி, கவனத்தை அதிகரிக்கச் செய்து, ஆபத்திலிருந்து காப்பாற்றும். மன அழுத்தத்தினால் ஏற்படும் இவ்வகை மாற்றங் கள் உடலுக்கு ஏற்படும் ஆபத்திலிருந்து(Physical threats  மிருகங்கள்/திருடர்களின் தாக்குதல், இயற்கைப் பேரழிவு, விபத்து போன்ற நிகழ்வுகள்) ஒரு மனிதனைக் காப்பாற்றவே செயல்படுகின்றன. புலியிடமிருந்து தப்பித்தவுடன் மனஅழுத்தம் குறைந்து, உடல் பழைய நிலைக்கு திரும்பி விடும்.

இன்றைய காலகட்டத்திலோ நம் உயிருக்கு ஏற்படும் இவ்வகை அச்சுறுத்தல்கள் குறைந்து நவீன கால பிரச்னைகளான பணத்தேவை, தேர்வு, நச்சரிக்கும் கணவன்/மனைவி, வேலைப்பளு, அலுவலகப் பிரச்னை, பிடிக்காத திருமணம்/வேலை போன்றவை அச்சுறுத்தலை ஏற்படுத்திக்கொண்டே இருக்கின்றன.

 பல நேரங்களில், உளவியல் அச்சுறுத்தல்களை (Psychological threats) ஏற்படுத்தும் காரணிகளை விட்டு ஒருவரால் தப்பிக்க இயலாது (திருமணம், தேர்வு போன்றவை...). இப்படி அன்றாடம் ஏற்படும் உளவியல் அச்சுறுத்தல்களால், மன அழுத்த ஹார்மோன்கள் தொடர்ந்து சுரந்து கொண்டி ருக்கும் நிர்பந்தம் ஏற்படுகிறது. இப்படித் தொடர்ந்து ஏற்படும் ரசாயனம் மற்றும் நரம்பியல் மாற்றங்களால் பல்வேறு உடல் பாகங்கள் சேதம் அடைகின்றன.

இது இன்னும் பல மோசமான விளைவுகளை உடலுக்கும் மனதுக்கும் ஏற்படுத்தும். ஏன் இவ்வளவு மன அழுத்தம் உங்களுக்கு? இப்படி யாரைக் கேட்டாலும், பல வெளிக்காரணிகளை பட்டியல் இடுவார்கள். உண்மையில், பல நேரங்களில் வெளிக் காரணங்களால் மட்டுமே மன அழுத்தம் ஏற்படுவதில்லை. ஒருவர் தமக்குத் தாமே அதிக அளவில் மன அழுத்தத்தை ஏற்படுத்திக் கொள்வதும் உண்டு. எப்படி?

 உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் குறுகிய கால மன அழுத்தமானது (மிருகம் / திருடன் தாக்குதல், இயற்கை சீற்றம்) எல்லா மனிதனுக்குமே ஒரே மாதிரி தாக்கத்தையே ஏற்படுத்தும். இதர வகை காரணங்களால் ஏற்படும் மன அழுத்தங்கள் எல்லா மனிதனையும் ஒரே விதமாகத் தாக்குவதில்லை.

ஒருவருக்கு அதிக மன அழுத்தத்தை ஏற்படுத்தும் சம்பவம்/காரணி, மற்றொருவருக்கு சிறிய தாக்கத்தைக்கூட ஏற்படுத்தாமல் இருக்கலாம். சிலர் சிறிய பிரச்னைக்கே மனம் தளர்ந்து போய் விடுவார்கள். சிலரோ, பெரிய பிரச்னைகளை சந்தித்தாலும், அதனை மன உறுதியோடு எதிர்கொண்டு மீண்டு வருவார்கள். பிரச்னை ஒன்றே என்றாலும், அதனை எதிர்கொள்பவரின் மனநிலைக்கேற்ப அதன் விளைவுகள் நிர்ணயிக்கப்படுகின்றன.

குமார் மற்றும் சேகர் ரயிலில் பிரயாணம் செய்கிறார்கள் என வைத்துக் கொள்வோம். இருவருக்குமே ஒரு பெரிய நிறுவனத்தில் காலை 10 மணிக்கு இன்டர்வியூ. திடீரென ரயில் ஏதோ காரணத்தினால் நின்று விடுகிறது. சரியாக 10 நிமிடம் கழித்து ரயில் நகர்ந்தது. இடைப்பட்ட 10 நிமிடத்தில் இருவரும் எப்படி இந்த பிரச்னையை அணுகினார்கள் எனப் பார்ப்போம்.

ரயில் நின்றவுடன் குமார் ஏகத்துக்கும் டென்ஷன் அடைந்து, ‘ரயில்வே துறையே இப்படித்தான்... இவர்களெல்லாம் ஒழுங்கா வேலை செய்றதே இல்ல... இதே வேலையாப் போச்சு’ என அருகில் இருப்பவர்களிடம் புலம்பித் தள்ளினான்.  படபடப்புடன் காணப்பட்டான். ‘எனக்கு மட்டும் இப்படி நடக்கிறதே’ என மனம் வெறுத்தான்.

‘இந்த வேலையும் கண்டிப்பாகக் கிடைக் காது’ என நினைத்தான். வீட்டிலிருந்து அந்நேரம் போன் வரவே, ‘உன்னால்தான் லேட்’ என மனைவியிடம் எரிந்து விழுந்தான். மீண்டும் ரயில் நகர்ந்தால், அலுவலகத்துக்குச் சரியான நேரத்தில் போய் சேர்ந்தான். கோபமும் படபடப்பும் இன்னும் குறையாத குமார், இன்டர்வியூவில் தேர்வாகவில்லை.

 தன் தோல்விக்கு தன் மனைவியும் தன் நேரமும் காரணமென மேலும் வருத்தமடைந்து தன் டென்ஷனைக் குறைக்க மது அருந்தினான். பின்னர் வீட்டுக்குத் தாமதமாக சென்று மனைவியுடன் மேலும் சண்டையிட்டு, தன் வாழ்க்கையை நொந்து கொண்டான்.

சேகர் ரயில் நின்றவுடன் வெளியே எட்டிப் பார்த்து நிலவரத்தைப் புரிந்து கொண்டான். இறங்கி நடந்து போக வழி உள்ளதா எனப் பார்த்தான்... வழி ஏதுமில்லை என தெரிந்தவுடன், வீட்டுக்கு போன் செய்து தகவல் தெரிவித்தான். இந்த விஷயத்தில் தன்னால் எதுவும் செய்ய இயலாது என்பதை உணர்ந்தவனாக, ‘நடப்பது எல்லாம் நன்மைக்கே’ என தனக்குத் தானே சமாதானம் சொல்லிக் கொண்டான்.

 ‘வருத்தப்படுவதால் மட்டுமே வண்டி நகராது’ என்பதை உணர்ந்து, ஒரு புத்தகத்தை எடுத்து படிக்க ஆரம்பித்தான். ரயில் நகர்ந்ததால், அலுவலகத்துக்கு சரியான நேரத்தில் போய் சேர்ந்த சேகர், கேட்ட கேள்விகளுக்கு தெளிவாக பதிலளித்ததால் வேலையும் கிடைத்தது. மகிழ்ச்சியுடன் இனிப்பு வாங்கிக் கொண்டு வீடு திரும்பினான்.

இக்கட்டான தருணத்தில் ரயில் நின்றது என்பது, இருவருக்குமே பெரிய அளவு மன அழுத்தத்தை ஏற்படுத்தக்கூடிய ஒரு சம்பவம். இருவரும் அதை அணுகிய விதம்தான் வேறு. இதற்குக் காரணம் இவர்களின் ஆளுமை (Personality). பொதுவாக மனிதர்களை வித்தியாசப்படுத்திக் காட்டுவது அவர்களது உணர்வுகள், எண்ணங்கள் மற்றும் செயல்பாடுகள்தானே? பிரச்னைகளை அணுகும் போது அதை எந்தளவு வெற்றிகரமாகச் சமாளிக்கிறார்கள் என்பதை, அவர்களின் ஆளுமை நிர்ணயிக்கிறது.

சேகரைப் போல சரியான விதத்தில் மன அழுத்தத்தை சமாளித்தால் (Adaptive Coping Mechanism), அது உடலை பாதிக்காமல் காப்பாற்றலாம். குமாரைப் போல, தவறான வழியில் (maladaptive coping mechanism) அதைச் சமாளிக்க முற்பட்டால், அதுவே உடல் / மன ஆரோக்கியத்துக்குக் கேடு விளைவித்து விடும்.

இந்த உதாரணத்தில், குமாருக்கு மன அழுத்தம் அதிகமாவதற்கு அவரின் ஆளுமை முக்கிய காரணம். மன அழுத்தத்தை அதிகரிக்கக்கூடிய மற்றும் மன அழுத்தத்தை தங்கள் வாழ்வில் உருவாக்கிக் கொள்கிற சில ஆளுமைகளைப் பற்றி அடுத்த இதழில் பார்ப்போம். 

கல்பனாவுக்கு என்ன கவலை?

6 மாத காலமாக கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு பதற்றமாகவும் பயமாகவும் இருப்பதாக கூறினார் கல்பனா. ஒரு பெரிய நிறுவனத்தில் பணிபுரியும் அவருக்கு திருமணம் ஆகவில்லை. ‘எதைப் பார்த்து பயப்படுகிறீர்கள்’ என கேட்டபோது, ‘இதுதான்’ என அவரால் குறிப்பிட்டுச் சொல்லமுடியாதபடி, பணம், ஆரோக்கியம், வேலை, குடும்பம் என ஒன்றன் பின் மற்றொன்றாக அவரை கவலையில் ஆழ்த்துவதாகக் குறிப்பிட்டார்.

 நடுக்கம், தலைவலி, எரிச்சல், ஜீரணக் கோளாறு போன்றவை அடிக்கடி ஏற்படுவதால், நிறைய விடுப்பு எடுக்க வேண்டியிருப்பதாகவும் வருத்தப்பட்டார். எந்த நேரமும் எதையேனும் நினைத்துக் கவலையடைவதாகவும் கூறினார்.

அலுவலகத்தில் யாரேனும் சாதாரணமாகக் கோபப்பட்டால் கூட, அதையே நினைத்து பல மணி நேரம் வருத்தப்படுவதாகவும் இதனால் தன் வேலை பறிபோய் விடுமோ என பதற்றமாவதாகவும் சொன்னார்.

 எந்த விஷயத்திலும் ஈடுபாடு இல்லாமல் இருப்பதாகவும் ‘ஏதோ ஆபத்து நேர்ந்து விடுமோ’ என மனம் படபடப்பாக உள்ளதாகவும் பயந்தபடியே கூறினார். இவை காரணமற்ற கவலைகள் என உணர்ந்தாலும், கவலையைக் கட்டுப்படுத்த முடியவில்லை என கூறிக் கொண்டே குலுங்கி அழ ஆரம்பித்தார்.

கல்பனா பொது மருத்துவரிடம் பரிசோதனை செய்து, எந்த உடல்நல பிரச்னையும் இல்லை என அறிந்த பிறகே, என்னிடம் வந்தார். சில உளவியல் பரிசோதனைக்கு பின்னர், கல்பனாவுக்கு ஏற்பட்டது ஒருவித மனப்பதற்ற நோய் (Generalized Anxiety Disorder) என்பது தெரிய வந்தது. இந்த மனநலக் கோளாறு ஏற்பட பல காரணங்கள் உள்ளன.

 மரபணு ஓரளவு பங்கு வகித்தாலும் பொதுவாக ஒருவரின் வாழ்க்கையில் அதிக மன அழுத்தம் ஏற்படும் தருணத்தில் இம்மாதிரியான உளநோயின் அறிகுறிகள் வெளிப்படையாக உணரப்படும். கல்பனா சிறு வயதிலிருந்தே அவர் அம்மாவைப் போன்று பயந்த சுபாவம் கொண்டவர்.

அவரது தாயார், தன் கணவனின் குடி மற்றும் சந்தேக புத்தியால் விவாகரத்து பெற்று கல்பனாவை தனியே வளர்த்து வந்துள்ளார். சென்ற ஆண்டி லிருந்து மாப்பிள்ளை தேடுவதாக அவர் அம்மா சொன்னதிலிருந்து, கல்பனாவுக்கு மிகுந்த மன அழுத்தம் ஏற்பட்டுள்ளது. திருமணம் பற்றிய பயம்,  அவநம்பிக்கை, ஆண்கள் மேலுள்ள வெறுப்பு ஆகியவை இனம் புரியாத பயத்தை ஏற்படுத்தியுள்ளன. பல வாரங்கள் மனநல ஆலோசனைக்குப் பின்னர் கல்பனாவின் உடல் ரீதியான பிரச்னைகள் மற்றும் கவலைகள் குறைந்தன. சில மாதங்களில், கல்பனா வாழ்வில் ஏற்படும் பிரச்னைகளை சமாளி க்கும் பக்குவம் பெற்றார்.

திருமணம் செய்து கொள்ளவும் சம்மதம் தெரிவித்தார். எல்லா ஆண்களும் தவறானவர்கள் இல்லை என்பதையும் உணர்ந்தார். இப்போது, வேலையில் நல்ல முன்னேற்றம் அடைந்து, மனநிறைவுடன்திருமணத்தை எதிர்பார்த்து காத்திருக்கிறார் கல்பனா.கல்பனா மற்ற இளம் பெண்களைப் போலத்தான் தோற்றம் கொண்டுள்ளார். ஆனால், அவர் அனுபவிக்கும் மன உளைச்சலை, அவராலும் ஒரு மனநல ஆலோசகராலும் மட்டுமே உணர முடியும்.

மனநலம் குன்றியவர்களைத் தோற்றத்தைப் பார்த்தே கண்டுபிடித்து விடலாம் என்பது தவறான எண்ணம். அப்படியோர் கருத்து ஊடகத்தினாலும் சாலையோரம் பார்க்கும் மனச்சிதைவு நோயினால் (Schizophrenia) பாதிக்கப்பட்டவர்களைப் பார்ப்பதாலும் ஏற்படுகிறது. பெரும்பாலான மனநலம் குன்றியவர்கள், நாம் தினசரி வாழ்வில் பார்க்கும் பத்து பேரில் ஒருவராகவும் இருக்கலாம். மனநோய் குறித்த தவறான கண்ணோட்டம் மாறினால்தான் பலரும் விழிப்புணர்வுடன் கல்பனாவைப் போல தங்கள் பிரச்னைகளுக்கு சிகிச்சை எடுக்க முன் வந்து, நிம்மதியாக வாழ்வை ரசிக்க முடியும்.

கணவன் - மனைவி உறவைவிட உன்னதமான உறவு உண்டா?

கணவனுக்குத் தலைவலி. நெற்றியை அழுத்திப் பிடித்துக் கொண்டு சோபாவில் உட்கார்ந்திருக்கிறான். மனைவி கொஞ்சம் தைலம் எடுத்து வந்து, கணவன் அருகில் அம...