இன்றைய
தமிழ் இலக்கிய உலகில் மூத்த எழுத்தாளர்களில் முக்கியமானவர் "கலைமாமணி' ஆ. மாதவன். ஏறத்தாழ அரை நூற்றாண்டுக்
காலமாக எழுதி வருகின்ற இவர், இன்றும் தம் எண்பதாம் வயதிலும்
ஆர்வமுடன் தமிழ், மலையாள உலகில் சமகால இலக்கியங்களைப் படிக்கிறார், விமரிசிக்கிறார். வாழ்வியல்
எதார்த்தங்களை
அறிந்து உணர்ந்து
மென்மையுடன் எழுதுகிறவர்.
ஆ. மாதவனின் "இலக்கியச் சுவடுகள்' என்ற அரிய நூலுக்கு இந்த ஆண்டு மத்திய அரசின் சாகித்ய அகாதெமி விருது அறிவிப்பாகி உள்ளது.
1934-ஆம் ஆண்டு திருவனந்தபுரத்தில் பிறந்தவர் ஆ. மாதவன். பூர்வீகம் திருநெல்வேலி. வணிகம் காரணமாக அன்றைய கேரளாவைச் சேர்ந்த திருவிதாங்கூர் மாவட்டத்தின் நாஞ்சில் நாட்டில் (இன்றைய கன்னியாகுமரி மாவட்டத்தில்) குடியேறிய குடும்பம். பின்னர், அங்கிருந்து திருவனந்தபுரத்திற்கு இடம்பெயர்ந்த ஆவுடை நாயகம் பிள்ளை - செல்லம்மாள் தம்பதியரின் புதல்வர்.
தாய்மொழி தமிழ் என்றபடியால் சிறுவயது முதற்கொண்டே தேவாரம், திருவாசகம் தொடங்கி, பழந்தமிழ் இலக்கியங்கள் பல கற்றவர். 1948-ஆம் ஆண்டு தமது பள்ளி இறுதி ஆண்டு வரை மலையாளத்தில் மட்டுமே பயின்றவர்.
ஆ. மாதவனுக்கு "செண்பம்' எனும் இலக்கிய அமைப்பின் "சிறுகதைச் செல்வர்' (1977), கன்னியாகுமரி மாவட்ட எழுத்தாளர்கள் சங்கத்தின் "தமிழ் மாமணி' (2003) ஆகிய சிறப்புப் பட்டங்கள் வழங்கப்பட்டன. இவரது படைப்புகளுக்கு "திருப்பூர் தமிழ்ச் சங்க விருது - 1994', திருவனந்தபுரம் தமிழ்ச் சங்கத்தின் "மகாகவி உள்ளூர் நினைவு விருது - 2002', "விஷ்ணுபுரம் விருது' போன்ற பாராட்டுகளும் வழங்கப் பெற்றன.
புது தில்லி, "சாகித்ய அகாதெமி'யின் உறுப்பினராகவும் செயல்பட்டார். இவரது படைப்புகளில் பல, பல்கலைக்கழகங்களில் பாட நூல்களாக இடம்பெற்றுள்ளன. 1966-ஆம் ஆண்டு திருமணமானவர். இவரது மனைவி 2002-ஆம் ஆண்டு காலமானார். வளைகுடா நாட்டில் பணியாற்றிவந்த ஒரே மகன் 2004-ஆம் ஆண்டு இளமையில் மரணம் அடைந்தார்.
மகள்கள் இருவருக்கும் திருமணம் செய்து வைத்துப் பேரக் குழந்தைகளுடன் தனது சொந்த வணிகத்தில் இருந்து ஓய்வு பெற்று, தமிழ் இலக்கியங்கள், இதழ்கள், மலையாளப் படைப்புகள் மற்றும் ஒட்டுமொத்த இந்திய இலக்கியப் போக்கையும் திருவனந்தபுரத்தில் இருந்தபடியே கவனித்துக் கொண்டிருக்கிறார்.
"...ஒரு படைப்பாளி முற்றும் அறிந்த பேரறிஞன் அல்ல. அவன் தன் படைப்புகளில் சுத்த நேர்த்தியும், யதார்த்தத் தலையாக்கமும் பரிமளிக்கச் செய்திட வேண்டும். அதில் வாசகனுக்கு ஏதேனும் உய்யும் வழி தெரிந்தால் சிறந்த வாசகன் அவனாகவே எடுத்துக் கொள்வான்,' என்று கூறுபவர் மாதவன்.
ஏறக்குறைய, 1953-ஆம் ஆண்டிலிருந்து தமிழ் இலக்கிய உலகில் அழுத்தமான இலக்கிய முத்திரைகள் பதித்தவர். இவர் எழுதிய முதல் நாவல் "புனலும் மணலும்' (1974) ஆற்று மணல்வாரி ஜனங்களின் வாழ்க்கை அவலங்களைச் சித்திரிக்கும் அற்புதமான படைப்பு.
இரண்டாவது நாவலான "கிருஷ்ணப் பருந்து' (கலைஞன் பதிப்பகம், சென்னை, கலைஞன் வெள்ளி விழா வெளியீடு, டிசம்பர் 1980) நூலின் உள்ளடக்கத்தை இங்கு விவரிப்பதைக் காட்டிலும் அது குறித்த நகுலனின் முன்னுரையை இங்கு குறிப்பிடுவதே சிறப்பு.
"இயற்கையாகப் பாத்திரங்களை உருவாக்குவதிலும், பிராந்திய பாஷைகளைப் பளிச்சென்று ஒரு சீறும் வேகமாக உருவாக்குவதிலும், இங்கும் அவர் வெற்றியைக் காணலாம்' என்று உரைக்கிறார். மாதவனின் மூன்றாவது நாவல் "தூவானம்' (அன்னம் வெளியீடு, சிவகங்கை, முதற்பதிப்பு, டிசம்பர் 1987). இந்நூல் கல்லூரிப் பாடநூலாகவும் இடம்பெற்றது.
எழுத்துலகில் "சின்ன ஜானகி ராமன்' என்கிற செல்லப் பெயருடன் அறியப்படுபவர். இவர் எழுதிய "கடைத்தெருக் கதைகள்' (1975), "மோக பல்லவி' (1975), "காமினி மூலம்' (1975), "ஆனைச் சந்தம்' (1981), "மாதவன் கதைகள்' (1985), "அரேபியக் குதிரை' (1995), "ஆ. மாதவன் கதைகள்' (2002), "ஆ. மாதவன் - முத்துக்கள் பத்து' (2007) என ஏழு தொகுப்புகளின் சொந்தக்காரர்.
"மாதவன் கதைகள்' (1985) இவரது ஐந்தாவது தொகுப்பு. காரூர் நீலகண்ட பிள்ளை எழுதிய மலையாள நாவலினைத் தமிழில் "சம்மானம்' (1974) என்றும், பி.கே. பாலகிருஷ்ணனின் நாவல் ஒன்றினை "இனி நான் உறங்கட்டும்' (2002) என்றும் ஆ. மாதவன் சில நாவல்களைத் தமிழாக்கம் செய்தார்.
திருவனந்தபுரத்தில் தமிழ் இலக்கியப் படைப்புகள் மட்டுமன்றி, தமிழ்ச் சமுதாய வளர்ச்சிக்கும் பாடுபட்டு வருபவர். 2013-ஆம் ஆண்டு, திருவனந்தபுரம் தமிழ்ச் சங்கத்தின் பொன்விழாவை ஒட்டி, தமிழில் இலக்கிய ஆர்வலர்களை உருவாக்கும் நோக்கில் ரூ.25,000 வைப்பு நிதி வழங்கி "ஆ. மாதவன் இலக்கிய அறக்கட்டளை' நிறுவி இருக்கிறார் என்பது ஓர் இனிப்புச் செய்தி.
மாதவன் சிறந்த பத்திரிகையாளரும் ஆவார். "கேரளத் தமிழ்' இதழ் அன்றியும் "தீபம்' நா. பார்த்தசாரதியுடன் இணைந்து "தினமணி கதிர்', "தீபம்' ஆகிய இதழ்களின் இணையாசிரியராகவும் இயங்கியவர்.
பன்முகப் படைப்பாற்றலும், பன்மொழி அறிவும், தன்னலம் அற்ற தமிழ்த்தொண்டும் ஆற்றிய ஆ. மாதவனின் "இலக்கியச் சுவடுகள்' (அன்னை ராஜேஸ்வரி பதிப்பகம், சென்னை, 2013) அவரது படைப்புத் திறனுக்கு நிகரான திறனாய்வு இலக்கியப் பார்வையும் உள்வாங்கிப் பதிவான நூல்.
தகுதியான அந்த நூலுக்கு தேசிய அங்கீகாரம் பெற்ற ஆ. மாதவனை தமிழ் இலக்கிய உலகம் போற்றிப் பாதுகாக்கும் என்பதில் இருவேறு கருத்து இல்லை.

No comments:
Post a Comment