Wednesday, March 04, 2020

மன அழுத்தத்தினால் ஏற்படும் உடலியல் மாற்றங்கள்

டாக்டர். B. செல்வராஜ் Ph.D.
 முதுநிலை உளவியல் விரிவுரையாளர், 
அரசு கலைக்கல்லூரி,
கோவை.

நமது உடலின் செயல்பாடுகள் எல்லாவற்றையும் நரம்பு மண்டலமே கட்டுப்படுத்தி உடலின் சீரான செயல்பாட்டிற்கு காரணமாக விளங்குகிறது. நரம்பு மண்டலம் பல பிரிவுகளாக பிரிந்து உடலின் செயல்பாடுகளை கவனித்துக் கொள்கிறது. தானியங்கி நரம்பு மண்டலம் என்பது நரம்பு மண்டலத்தின் ஓர் முக்கிய பிரிவாகும். இந்த தானியங்கி நரம்பு மண்டலம் சிம்பதடிக் நரம்பு மண்டலம் மற்றும் பாரா – சிம்பதடிக் நரம்பு மண்டலம் என இரண்டு பிரிவாக பிரிந்து செயல்படுகிறதுநமது உடலின் செயல்பாடுகள் எல்லாவற்றையும் நரம்பு மண்டலமே கட்டுப்படுத்தி உடலின் சீரான செயல்பாட்டிற்கு காரணமாக விளங்குகிறது. நரம்பு மண்டலம் பல பிரிவுகளாக பிரிந்து உடலின் செயல்பாடுகளை கவனித்துக் கொள்கிறது. தானியங்கி நரம்பு மண்டலம் என்பது நரம்பு மண்டலத்தின் ஓர் முக்கிய பிரிவாகும். இந்த தானியங்கி நரம்பு மண்டலம் சிம்பதடிக் நரம்பு மண்டலம் மற்றும் பாரா – சிம்பதடிக் நரம்பு மண்டலம் என இரண்டு பிரிவாக பிரிந்து செயல்படுகிறது.

சூழ்நிலை சாதாரணமாக இருக்கும் போது தானியங்கி நரம்பு மண்டலத்தின் பாரா – சிம்பதடிக் நரம்பு மண்டலம் நமது உடலின் செயல்பாடுகளை கவனித்துக் கட்டுப்படுத்தி வரும். இச்சாதாரண சமயங்களில் நாம் மூச்சை ஆழமாக இழுத்து விடாமல் மேலோட்டமாக மூச்சு விடுவோம். இரத்த அழுத்தம் சரியான அளவில் இருக்கும். இதயத்துடிப்பும் இயல்பாக இருக்கும். உடல் வியர்க்காது. சுரப்பிகள் இயல்பாக செயல்பட்டு சரியான அளவில் ஹார்மோன்களை சுரந்து கொண்டிருக்கும்.

நாட்டில் சாதாரண் சமயங்களில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட போலீஸ் படை உள்ளது. திடீரெனெ ஏதாவது கலவரம், அடிதடி, ரகளை போன்றவை ஏற்பட்டு விட்டால் அவைகளை சமாளிக்க உள்ளது தான் அதிரடிப்படை. சாதாரண போலீஸ் படையால் சமாளிக்க முடியாத விஷயங்களை இந்த அதிரடிப்படை கட்டுப்படுத்தி விடும். இவர்களுக்கு என சிறப்பு பயிற்சிகளும், ஆயுதங்களும் வழங்கப்பட்டுள்ளன. இதைப் போலவே தானியங்கி நரம்பு மண்டலத்தின் அதிரடிப் பிரிவே சிம்பதடிக் நரம்பு மண்டலம் ஆகும். நமக்கு உணர்ச்சிகளும் மனவெழுச்சிகளும் சூழ்நிலையின் காரணமாக ஏற்படும் போது அச்சூழ்நிலையை சமாளிக்க ஏதுவாக பல உடலியல் மாற்றங்களை ஏற்படுத்துவது சிம்பதடிக் நரம்பு மண்டலமே ஆகும்.

அமைதியாக அமர்ந்திருக்கும் ஒருவரை திடீரென நாய் ஒன்று கடிப்பதற்காக துரத்துகிறது என வைத்துக் கொள்ளுங்கள். இப்போது அமைதியான ஊரில் கலவரம் ஏற்பட்டது போன்று நமது உடல் செயல்பாடுகளிலும் மாற்றங்கள் ஏற்படும். தானியங்கி நரம்பு மண்டலத்தின் அதிரடிப் பிரிவான சிம்பதடிக் நரம்பு மண்டலம் உடனே உடலை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விடும். அப்போது உடலில் என்னென்ன நிகழும் என்பதை கவனியுங்கள்:-

இதயத்துடிப்பு மிக் அதிகமாகும் எனவே உங்கள் இதயம் வழக்கத்தை விட படப்டவென அடித்துக் கொள்ள ஆரம்பிக்கும். இதயத்துடிப்பு அதிகரித்து இரத்தத்தை பம்ப் செய்வது அதிகரிப்பதால் இரத்த அமுத்தம் அதிகமாகும். சாதரணமாக இதயம் துடிக்கும் போது இரத்த அழுத்தம் 120 ஆகவும், இதயம் ஓய்வெடுக்கும் போது இரத்த அழுத்தம் 80 ஆகவும் இருக்கும். மன நெருக்கடி அதிகமானால் எல்லை மீறிப்போய் இரத்த அழுத்தம் எக்கச்சக்கமாய் ஏறிவிடும். உலகிலேயே அதிக இரத்த அழுத்தம் கொண்ட மிருகம் ஒட்டகச்சிவிங்கி தான். இப்போது நீங்களும் ஒட்டகச்சிவிங்கியை போல் உயர் இரத்த அழுத்தம் கொண்டவராக மாறிவிடுவீர்கள்.

துரத்திவரும் வெறிநாயிடமிருந்து தப்பித்து வெகுதூரம் ஓடிப்போய் ஒளிந்து கொள்ள வசதியாக உங்கள் கால்களுக்கு அதிக இரத்தம் அனுப்பி வைக்கப்படும். எனவே கால்கள் புத்துணர்வு பெற்று அதிக வேகத்துடன் ஓட ஆரம்பிக்கும். அதைப் போலவே மூளையில் உள்ள செல்கள் விரைவாகவும், ஆற்றலுடனும் புத்துணர்வுடனும் செயல்பட்டு சமயோசிதமான முடிவை எடுக்க வேண்டியுள்ளது. அப்போது தான் நம்மை நாம் காப்பாற்றிக்கொள்ள முடியும். எனவே மூளைக்கும் அதிக இரத்தம் அனுப்பி வைக்கப்படும். மூளைக்கும் கால்களுக்கும் அனுப்பத் தேவையான அதிக இரத்தம் எங்கிருந்து வந்தது? நெருக்கடி நேரங்களில் உயிரை பாதுகாத்துக் கொள்வதே முக்கியம். எனவே வயிறு, ஜீரன மண்டலம் போன்றவற்றிக்கு அனுப்பப்படும் இரத்தம் மூளைக்கும் கால்களுக்கும் திருப்பி விடப்படும். அவசரகாலம் முடிந்தவுடன் மீண்டும் இரத்த ஓட்டம் சகஜ நிலைக்கு திரும்பி விடும்.

இது மட்டுமல்லாமல் பின்வரும் மாற்றங்களும் நம் உடலில் ஏற்படுகின்றன:

•இரத்தத்தில் சர்க்கரை சக்தியின் அளவை அதிகப்படுத்துவதற்காக கல்லீரலிருந்து அதிக அளவு சர்க்கரை சக்தி திரட்டப்படும் இதன் மூலம் அவசர காலங்களில் நம் உடலில் சக்தி இல்லையென்றாலும் நம்மால் அத்தியாவசியமான வேலைகளை செய்து கொள்ள முடியும்.

•அவசர நேரங்களில் நம் உடல் மிக வேகமாக செயல்படுகிறது. எனவே உடலின் வெப்பநிலையும் உயர்கிறது. இதை சமாளிக்க நம் உடலில் உள்ள வியர்வைச் சுரப்பிகள் வியர்வையை சுரக்கின்றன. உடல் ஈரம் பட்டவுடன் தன் வெப்பத்தை குறைத்துக் கொள்கிறது. கோடை காலங்களில் காவடி எடுத்து ஆடும் பக்தர்கள் மீதும், அவர்கள் நடந்து செல்லும் பாதையிலும் குடம்குடமாக தண்ணீர் ஊற்றி அவர்களின் உடல் வெப்பத்தை குறைப்பதை போன்றதுதான் வியர்வை சுரப்பிகள் வியர்வையை சுரப்பதும்.

•அவசர காலங்களில் இரத்தம் விரைவாக உறைந்து இரத்தப்போக்கு நின்றுவிடும். உதாரணமாக திருடன் ஒருவன் திருடியதை ஒருவர் பார்த்து சத்தம் போட்டு ஊரைக் கூட்டி விட்டார் என வைத்துக் கொள்வோம். ஊரே சேர்ந்து அவனை துரத்துகிறது. தப்பிக்க ஓடும் திருடனை முள் கிழிக்கிறது. அதை அவன் கண்டு கொள்ளாமல் ஓடினாலும் கூட அவனுக்கு ஒன்றும் ஆகாது. சிறிது நேரம் கழித்துப் பார்த்தால் கிழிந்த இடத்தில் இரத்தம் தானாக உறைந்து போயிருக்கும். இதுவே சாதாரண சமயத்தில் ஏதாவது சிறிது காயம் ஏற்பட்டிந்தாலும் கூட இரத்தம் போய்க்கொண்டே இருக்கும். அவ்வளவு சீக்கிரம் நிற்காது.

•தோல் வழக்கத்திற்கு மாறாக மொரமொரப்பு கொண்டதாக மாறிவிடும். தோலில் உள்ள மயிர்கால்கள் குத்திட்டு நிற்கும்.

•கண்மணிப் பாவை விரியும் எனவே அதிக விழிப்புணர்வுடன் சூழ்நிலையில் நடக்கும் எல்லாவற்றையும் விரைவாக காண முடியும்.

•மேலோட்டமாக மூச்சு விட்டது போய் இப்போது மூச்சு விடுவது மிக விரைவாகவும் அதே சமயத்தில் மிக ஆழமாகவும் நடைபெரும். எனவே உடலில் உள்ள செல்களுக்குத் தேவையான அதிக அளவு ஆக்ஸிஜன் கிடைக்க வழி ஏற்படுகிறது.

இதுவரை நீங்கள் படித்த உடலியல் மாற்றங்கள் யாவும் சிம்பதடிக் நரம்பு மண்டலத்தின் தூண்டுதலாலேயே ஏற்படுகின்றன. எதற்காக இவ்வாறு உடல் செயல்பாடுகள் மாற வேண்டும்?

அவசர காலங்களில் நம் உயிரும் உடலும் மிகவும் முக்கியம். அவ்விரண்டையும் காப்பாற்றவே இத்தகைய மாற்றங்கள் ஏற்படுகின்றன. பின்னர் சாதாரன சூழ்நிலை ஏற்பட்டவுடன் இவையாவும் சகஜ நிலைக்கு திரும்பி விடுகின்றன.

* * *

மன அழுத்தத்தினால் உடலுக்கு ஏற்படும் பாதிப்புகள்

உடலுக்கு ஏற்படும் நோய்கள் எல்லாம் உடலில் தோன்றும் கோளாறுகளால் மட்டுமே ஏற்படுகின்றன என்பது சரியல்ல. சில உடல் நோய்கள் மனதில் ஏற்படும் பிரச்சனைகளாலும் ஏற்படுகின்றன என்பது உளவியல் அறிஞர்கள் கண்டறிந்துள்ள உண்மை ஆகும். மன அழுத்தத்தினால் நமது உடல் உறுப்புக்கள் தீவிரமாக பாதிக்கப்படுகின்றன. இதற்குக் காரணம் நமது உடலின் படைப்புத் தத்துவம் ஆகும். ‘பயன்படுத்து – பாழ்படுத்து’ என்ற தத்துவத்தின் அடிப்படையிலேயே நம் உடல் படைக்கப்பட்டு இருக்கிறது.

உங்களிடம் ஒரேயொரு நல்ல சட்டை இருக்கிறது என வைத்துக் கொள்ளுங்கள். வேறு உடைகள் ஏதுமில்லாததால் தினமும் ஒரு சட்டையையே துவைத்து, இஸ்திரி செய்து அணிந்து கொண்டே வருகிறீர்கள். நான்கு மாதம் கழித்துப் பார்த்தால் விலையுயர்ந்த, தரமான சட்டை கூட முதுகுப் புறம் வெளுத்து சாயம் போயிருக்கும். தொடர்ந்து அதையே அணிந்து கொண்டிருந்தீர்கள் என்றால் துணி தேய்ந்து கிழியத் தயாராகி விடும். அதற்கு மாறாக, உங்களிடம் இருபது சட்டைகள் இருக்கின்றன என வைத்துக் கொள்ளுங்கள். எல்லா சட்டைகளையும் மாற்றி மாற்றி அணிந்து கொண்டே வந்தால் உங்களிடம் உள்ள தரம் குறைந்த சட்டை கூட நான்கு ஆண்டுகள் நன்றாக உழைக்கும். இதற்கு காரணம் குறைவாக பயன்படுத்துவதே ஆகும். இந்த சட்டை தத்துவத்தின் அடிப்படையிலேயே நம் மனித உடலும் படைக்கப் பட்டிருக்கிறது. உடலில் உள்ள எல்லா உறுப்புகளும் படைக்கப்பட்டு இருக்கிறது.

எனவே, நமது உடலின் உறுப்புகள் சாதாரணமாக, அளவாக வேலை செய்து வந்தால் நீண்ட நாட்களுக்கு இயல்பாக இயங்கிக் கொண்டிருக்கும். அதற்கு மாறாக அடிக்கடி அளவுக்கு அதிகமாக வேலை செய்து கொண்டிருந்தால் விரைவிலேயே அவ்வுறுப்புக்களுக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. உதாரணமாக, இதயம் வேகமாக துடிப்பது மன அழுத்தத்தின் காரணமாக ஏற்படக்கூடிய ஓர் உடலியல் மாற்றம். என்றாவது ஒருநாள் ஏதாவது ஓர் பிரச்சனையின் காரணமாக மன அழுத்தம் ஏற்படலாம், அதனால் இதயம் வேகமாக துடிக்கலாம். அவ்வப்போது ஆபத்து ஏற்படலாம், அதனாலும் இதயம் வேகமாக துடிக்கலாம் ஆனால் எப்போதும் எதற்கெடுத்தாலும் மன அழுத்தம் ஏற்பட்டு இதயம் வேகமாக துடித்துக் கொண்டே இருந்தால் இதயத் தசைகளின் சுருங்கி விரியும் தன்மை விரைவில் குறைந்து போய்விடும். எனவே இதயத்தின் செயல்பாடு விரைவிலேயே பாதிக்கப்பட்டு விடும். ஓரிரு சமயங்களில் இருக்கும் உயர் இரத்த அழுத்தம் நமது உடல் செயல்பாடுகளை துரிதப்படுத்தி அவசர செயல்களுக்கு ஆயத்தப்படுத்தும். ஆனால் அன்றாடம் நமது உடல் உயர் இரத்த அழுத்தத்தைக் கொண்டிருந்தால் நமக்கு ஏற்படப்போவது இரத்தக் கொதிப்பு.

அவ்வப்போது பதட்டம் ஏற்படுவதால் உங்கள் உடல் வியர்க்கலாம். அதனால் பாதிப்பு ஏதும் இல்லை. ஆனால் ஆழ்மனதில் உள்ள மன அழுத்தத்தின் காரணமாக ஏன் என்றே தெரியாமல் எப்போதும் உங்கள் உடல் வியர்த்துக் கொட்டிக் கொண்டே இருந்தால் உங்கள் உடல் பாதிப்புக்கு உள்ளாகிக் கொண்டு இருக்கிறது என்று அர்த்தம். கோடையிலும் குளிர்காலத்திலும் வற்றாத நீர் வீழ்ச்சியாக வியர்த்துக் கொட்டிக் கொண்டிருக்கும் நீங்கள் மன அழுத்தம் என்னும் சூறாவளியில் சிக்கி சீரழிந்து கொண்டிருக்கிறீர்கள்.

தொடர்ந்து மன அழுத்தத்திற்கு உட்பட்டிருக்கும் ஒருவரின் உடலில் அதீத உடல் செய்ல்பாடுகள் நிகழ்ந்து கொண்டே இருக்கும். எனவே விரைவாகவே செயலாற்றிக் கொண்டிருக்கும் உறுப்புகள் யாவும் விரைவாகவே தங்களின் செயல்பாடுகளை முடித்துக் கொள்ளும் வாய்ப்பு அதிகம்.

மன அழுத்தத்தினால் தோற்றுவிக்கப்படும் தீவிர செயல்பாடுகளால் நம் உடல் பாதிக்காத வண்ணம் அதை காப்பாற்ற வேண்டும். எனவே மன அழுத்தத்தை குறைத்துக்கொள்ள முயற்சி எடுப்பது முக்கியமாகும்.

* * *

மன அழுத்தத்தின் நிலைகள்

நம் சக்திக்கு மீறிய பிரச்சனைகளை நாம் சமாளிக்க நேரிடும் போது ஏற்படும் மன அழுத்தம் நம் உடல்நிலையை பாதிக்கிறது. மன அழுத்தத்தை உண்டாக்கும் சூழ்நிலையை வெல்ல முயலும் நமது உடலும் மனமும் மூன்று நிலைகளில் மன அழுத்தத்தை எதிர்த்து போராடுகின்றன. அந்நிலைகளைப் பற்றி சுருக்கமாகக் காண்போம்:

நிலை 1 : எச்சரிக்கை அடையும் நிலை

எதிரி நாட்டு படைகள் நம் நாட்டின் மீது படையெடுத்து வர வாய்ப்புள்ளது என்றால் ஒரு மன்னர் என்ன செய்வார்? எதிராளியை எதிர் கொள்ள தன்னையும் தன் படைவீரர்களையும் தயார்படுத்திக் கொள்வார். தன் வீரர்களை எச்சரித்து எதையும் எதிர்கொள்ள தயாராக இருக்கச் செய்வார். எதிரிகள் சில நேரம் எதிர்பார்த்தபடியே தாக்கலாம். அப்போது போரிட வேண்டிய நிலை ஏற்படும். சில நேரங்களில் எதிரிகள் வெறுமனே இருந்துவிடக் கூடும். அப்போது மன்னருக்கும் படைவீரர்களுக்கும் பிரச்சனை ஏதுமில்லை. எப்போதும்போல் அன்றாட வேலைகளை தொடங்கி விடலாம்.

மேற்சொன்ன உதாரணத்தை போல நம் உடலும் மன அழுத்தத்தினால் ஏற்படப் போகும் அபாயத்தினை சமாளிக்க தன் சக்தியெல்லாம் திரட்டி தயாராக இருக்கும். பிரச்சனை தீவிரமானது எனில் அதை எதிர்த்து போரட ஏதுவாக நம் மூளையும் தசைகளும் தயாராக இருக்கும். பிரச்சனை சுமூகமாக் முடிந்து விட்டது எனில் நம் உடல் சாதாரண நிலைக்கு திரும்பி விடும். இந்த நிலை எச்சரிக்கை அடையும் நிலை எனப்படும்.

நிலை 2 : எதிர்த்துப் போராடும் நிலை

போர் என்று வந்துவிட்டால் பிறகு வாழ்வா-சாவா என்று நிலைதான். ஒன்று எதிரி புறங்காட்டி ஒட வேண்டும் அல்லது நாம் எதிரியின் தாக்குதலால் சீரழிய வேண்டும். தோற்று விடுவோம் என்று தெரிந்தால் எந்த மன்னனும் சுலபத்தில் விட்டுவிட மாட்டான். தன்னால் முடிந்த அளவு எல்லா ஆயுதங்களையும் பிரயோகித்துப் பார்ப்பான்.

அதைப் போலத்தான் பிரச்சனை என்று வந்து விட்டால் அதை நாம் சுலபத்தில் விட்டுவிட மாட்டோம். இந்நிலையில் நம் உடல் ஹார்மோன்கள், உடலிலுள்ள தாதுப் பொருட்கள் மற்றும் இரத்தத்திலுள்ள சர்க்கரை சக்தி ஆகியவற்றை முழுமையாகப் பயன்படுத்தி மன அழுத்தத்தினால் ஏற்படும் உடலியல் மாற்றங்களை சமாளிக்க முயலும். மிதமிஞ்சிய சக்தியை பிரயோகிப்பதால் சில நேரங்களில் பிரச்சனையை வென்றெடுத்து வெற்றிகொள்வோம். சில நேரங்களில் பெரும் பிரச்சனை நம்மையும் நம் பெரும் சக்தியையும் வென்று விடும். இறுதியில் நம்மை கொன்றும் விடும். இந்நிலையை எதிர்த்து போராடும் நிலை எனலாம்.

நிலை 3 : எல்லாம் முடிந்த நிலை

பெரும் விபத்து ஒன்றில் மாட்டிக் கொண்ட ஒருவர் நிச்சயம் இறந்தே போவார். ஆனால் சில நேரங்களில் உயிர் போகாது. மாறாக கை, கால் ஊனமாகிவிடும், உடலுக்கு பெரும் ஊனம் ஏற்படும். அம்மனிதர் ஆறுதல் அடையலாமே தவிர விபத்தின் விளைவுகள் கொடுமையானவைதான்.

அதைப் போலவே எதிர்த்து போராடும் நிலையில் தன் சக்தியெல்லாம் திரட்டிப் போராடிய உடல் தன்னால் இனிமேல் மன அழுத்தத்தை சமாளிக்க இயலாது என்ற நிலை வந்தவுடன் தன் முயற்சியை விட்டு விடும். அதற்கு மேல் போராட சக்தி எதுவும் இருக்காது. இந்நிலையில் மன அழுத்தம் நம் உடலில் ஏதாவது ஓர் நோயை தோற்றுவிக்கலாம். அந்நோய் உடல் காரணங்களால் ஏற்படும் நோய் அல்ல. மாறாக மனக் காரணங்களால் ஏற்படும் உடல் நோய். சில சமயங்களில் மன அழுத்தத்தின் தீவிரம் அதிகமாக இருந்தால் உயிரிழப்பும் ஏற்படலாம். இந்நிலையை எல்லாம் முடிந்த நிலை எனலாம்.

அன்புள்ள மகனுக்கு...


அன்புள்ள மகனுக்கு...
அப்பா எழுதுவது
வசதியாக தான் இருக்கிறது மகனே
நீ கொண்டு வந்து சேர்த்த இல்லம்!

பொருப்பாய் என்னை ஒப்படைத்துவிட்டு
சலனமின்றி நீ வெளியேறிய போது
முன்பு நானும் இது போல்
உன்னை பள்ளியில்
விட்டு விட்டு செல்லும் போது!

என் முதுகுக்கு பின்னால்
நீ கதறக் கதற அழும்போது
என் கண்ணீரை மறைத்தபடி
புறப்பட்ட காட்சி
எனக்கு ஞாபகத்தில் வருகிறது!

தேடித் திரிந்து நீ தேர்ந்தெடுத்ததை
அறிகையில் கூட அன்று உனக்காக
நானும் பொருத்தமான கல்லூரி எதுவென்று
ஓடி அலைந்ததை ஒப்பீடு செய்கிறேன்!

இது வரையில் ஒரு முறையேனும்
நீ என்னைப் பார்க்க நீ வராமல் போனாலும்
என் செலவுக்கான பராமரிப்பு தொகையை
மாதம் தவறாமல்... மறக்காமல்...
அனுப்பி வைப்பதில்
என் மனம் மகிழ்ச்சி அடைகிறது!

நீ வெளியூரில் தங்கி படித்த காலத்தில் 
உன்னை பார்க்க வேண்டும்
என்ற ஆவல் இருந்தாலும்
உன் படிப்பை நினைத்து
உன்னை சந்திக்க மறுத்ததின்
எதிர் வினையே இதுவென்று
என்னால் உணர முடிகின்றன!

இளம் வயதில் நீ சிறுகச் சிறுக
சேமித்த அனுபவத்தை
என் முதுமை பருவத்தில்
மொத்தமாக எனக்கே செலவு செய்கிறாய்.
ஆயினும் உனக்கும்  எனக்கும்
ஒரு சிறு வித்தியாசம் 
நான் கற்றுக் கொடுத்தேன்
உனக்கு வாழ்க்கை இதுவென்று
நீ கற்றுக் கொடுக்கிறாய்
எனக்கு உறவுகள் இதுவென்று..!!

ஜென்னியின் காதல்..!


"குழந்தை பிறந்த போது தொட்டில் இல்லை 
இறந்தபோது சவப்பெட்டி இல்லை"  
ஜென்னியின் கடிதத்தின் வாக்கியங்களைப் படித்தவுடன் கண்கள் கலங்கிவிடுகிறது. ஜென்னியின் வறுமைக்கு சவப்பெட்டி நிகழ்வு போதும். என்னாயிற்று குழந்தைக்கு? யார் இந்த ஜென்னி? இப்படியொரு கொடுமை பெற்றவளுக்கு இருந்தால் என்ன செய்வாள்? பதறுகிறோம் நாம். இத்தனைக்கும் ஜென்னி மிக வசதியான வீட்டுப் பெண் தான். அவளுடைய உண்மை காதலுக்கு முன் இந்த வறுமையும் துச்சமென சிரித்து விரட்டுவாள் ஜென்னி. யார் அந்த அதிஷ்டகார காதலன்?

ஜென்னியின் முன்னோர்கள் பிரபு வம்சத்தைச் சேர்ந்தவர்கள். பிரபு வம்சத்தினர் என்றால் கிட்டத்தட்ட குட்டி ராஜாக்கள் போன்ற வசதியுடையவர்கள் என்றுக் கூட சொல்லலாம். மிகவும் பிற்போக்கான உணர்வு உடையவர்கள். ஜென்னியின் தந்தை ட்ரீவ்ஸ் என்னும் நகரின் பிரதம அதிகாரியாக வேலைமாற்றம் கிடைத்து தன் குடும்பத்தினருடன் ட்ரீவ்ஸ் வருகிறார். அப்போது ஜென்னிக்கு வயது 2. ஜென்னியின் பக்கத்து வீடு கார்ல் மார்க்ஸ். ஆனால் அப்போது கார்ல் மார்க்ஸ் பிறக்கவில்லை.

ஜென்னிக்கு 4- வயது நடக்கும் போது கார்ல் மார்க்ஸ் பிறந்தார். ஜென்னியை விட கார்ல் மார்க்ஸ் 4- வயது குறைவு. கார்ல் மார்க்ஸ் தந்தை வக்கீல் தொழில் செய்தவர். அவருக்கு மொத்தம் 8- குழந்தைகள். ஐந்து பெண்கள் 3- மகன்கள். இதில் இரண்டு பெண் குழந்தைகளும், 2- ஆண் குழந்தைகளும் எலும்புருக்கி நோயால் இறந்துவிட்டனர். அதனால் கார்ல் மார்க்ஸ் மீது தந்தை மிகவும் பாசமாக இருந்தார்.

பக்கத்து பக்கத்து வீடுகளில் இருந்ததால் ஜென்னியின் தந்தைக்கும் கார்ல் மார்க்ஸின் தந்தைக்கும் நல்ல நட்பு இருந்தது. ஜென்னியும் கார்ல் மார்க்ஸிம் சிறுவயதில் இருந்தே ஒன்றாக பள்ளிக்கு செல்லும் போதும், விளையாடும் போதும் வேறு எங்குச் சென்றாலும் ஒன்றாகவே செல்வார்கள். 17- வயதில் கார்ல் மார்க்ஸ் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த போது கனவுகளில் ஜென்னி அக்கிரமித்தாள். ஒவ்வொரு மணித்துளியும் ஜென்னியின் ஞாபகம். கார்ல் மார்க்ஸ்சுக்கு காதல் வந்துவிட்டது. ஜென்னியின் பக்கம் பார்த்தால் காதல் உணர்வுகளில் கார்ல் மார்க்ஸ் ஹீரோவாக வாழ்ந்துக் கொண்டிருக்கிறான்.

கார்ல் மார்க்ஸ் ´பான்´ கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த நாட்கள் அவை. ஜென்னியும், கார்ல் மார்க்ஸீம் திருமணம் செய்துக் கொள்வதாக இரகசியமாக பேசி முடிவு செய்துக் கொண்டனர். இருவரும் ஒருவரை ஒருவர் விரும்புவது இருகுடும்பத்தினருக்கும் தெரியாது. கார்ல் மார்க்ஸீன் தந்தைக்கு முதன் முதலில் தெரிந்த போது அதிர்ந்து போனார். மிகப் பெரிய பணக்காரப் பரம்பரைச் சேர்ந்தவர்கள். நடக்கிற காரியமா இது? ஜென்னியின் தந்தை தன்னை என்ன நினைப்பாரென்று கவலைப்பட்டார். இந்த காதல் கூத்தில் தன்னுடைய நட்பு பிரிந்துவிடப் போகிறது என்ற கவலை வேறு. மகனிடம் பக்குவமாக சொல்லிப் பார்த்தார். முதலில் படிப்பை முடி என்று சொல்லி வைத்தார். கார்ல் மார்க்ஸ் ´பெர்லின்´ கல்லூரிக்கு மேற்படிப்புக்கு சென்ற போதும் கார்ல் மார்க்ஸீன் தந்தையிடம் இருந்து ´காதல் வேண்டாம்´ என்ற அறிவுரையோடு கடிதம் அடிக்கடி வந்துக் கொண்டே இருந்தது.

ஜென்னியும் கார்ல் மார்க்ஸீம் தங்கள் காதலில் உறுதியாக இருந்தனர். கார்ல் மார்க்ஸ் சம்பாதிக்க ஆரம்பித்ததும் திருமணம் செய்துக் கொள்வதாகவும் அதுவரையில் ஜென்னி காத்திருப்பதாகவும் முடிவாயிற்று. கார்ல் மார்க்ஸ் படிப்பை முடிக்கும் வரை 7- வருடங்களாக ஜென்னி காத்திருந்தாள். சிலமுறை அவளின் தந்தை வரன்கள் பற்றி பேச்சு எடுத்த போதும் தவீர்த்து வந்தாள். இருவரையும் விட கார்ல் மார்க்ஸ் தந்தை மிகுந்த சங்கடத்துடனும் பயத்துடனும் இருந்தார்.

ஜென்னியின் காதல் தவீர, சட்டம், சரித்திரம், பூகோளம், தத்துவம் பாடங்களை விட்டால் நூல் நிலையங்களுக்குச் சென்று தத்துவ நூல்களை விரும்பிப் படிப்பது இவை தவீர, கார்ல் மார்க்ஸ் வேறெதிலும் ஈடுபாடு காட்டியதில்லை. குறிப்பாக தத்துவம் பாடத்தில் மிகுந்த ஈடுபாடு ஏற்பட்டது கார்ல் மார்க்ஸீக்கு. தந்தைக்கோ மகன் தன்னைப் போல் வழக்கறிஞன் ஆகவேண்டும் என்று விரும்பினார். கார்ல் மார்க்ஸ்சின் சிந்தனையோ பாடங்களுடன் சமூகத்தை ஒப்பிட்டுப் பார்த்துக் கொண்டிருந்தது.

அதிக சிந்தனை, இரவு நெடுநேரம் விழித்திருந்து படிப்பது அல்லது தத்துவங்கள் குறித்து எழுதிக் கொண்டிருப்பது என இருந்த கார்ல் மார்க்ஸ் அக்காலத்தில் புகழ்பெற்ற ´எகல்´ என்ற தத்துவத்தை ஆராய்ச்சி செய்து டாக்டர் பட்டம் பெற்றிருக்கிறார்.

கல்லூரி படிப்பை முடித்ததும் வேலை தேட ஆரம்பித்தார். தனக்காக காத்துக் கொண்டிருக்கும் ஜென்னியை நினைத்துக் கவலைப்பட்டார். எப்போதாவது வரும் கார்ல் மார்க்ஸீன் கடிதங்களும் நினைவுகளும் அவளை வாழ வைத்ததாக பிரிதொரு சமயத்தில் ஜென்னி சொல்கிறாள். அந்தளவுக்கு பிரிவை ஏற்றுக் கொள்ள முடியாமல் இருந்தாள். கார்ல் மார்க்ஸீம் அப்படியே.

மகன் தன்னுடைய சொல்லுக்கு கட்டுப்படாமல் ஜென்னியை திருமணம் செய்வதில் காட்டிய ஈடுபாட்டால் தந்தையிடம் பிரச்சனை வந்திருந்தது. மேலும் அக்கால அரசியலில் ஏகப்பட்ட குளறுபடிகள் சர்வாதிகாரங்கள் ஜெர்மனியில் இருந்தன. நேர்மையாளரான துடிப்பு மிக்க வாலிபனுடைய வார்த்தைகளில் பலவித தொந்தரவுகள் ஏற்பட கார்ல் மார்க்ஸீக்கு ஒழுங்கான வேலை கிடைக்கவில்லை. அந்த கட்டத்தில் கார்ல் மார்க்ஸ் தந்தையும் இறந்து போனார். கார்ல் மார்க்ஸ் சிறுவயதாக இருக்கும் போதே அக்காக்கள் திருமணம் செய்துக் கொண்டு போய்விட்டார்கள். நெருங்கிய தொடர்பும் அவர்களுடன் இல்லை. கார்ல் மார்க்ஸீக்கு தனிமையில் தவீத்தார். ஜென்னியை திருமணம் செய்துக் கொள்வதும் ஜெர்மன் நாட்டை விட்டு வெறியேற வேண்டும் என்ற இரு குறிக்கோளைத் தவிர வேறொன்றையும் நினைக்கவில்லை.

1843- இல் ஜீன் 13-இல் க்ருஸ்னாக் என்ற ஊரில் இருவரும் திருமணம் செய்துக் கொண்டனர். அப்பொது ஜென்னியின் வயது 29. அத்துடன் ஜென்னியின் வசதி நிறைந்த வாழ்க்கையும் முடிவுக்கு வந்தது. அதே வருடத்தில் பாரீசுக்கு வந்துவிட்டார் மார்க்ஸ். 1843- இல் ஜீன் 13-இல் க்ருஸ்னாக் என்ற ஊரில் இருவரும் திருமணம் செய்துக் கொண்டனர். அப்பொது ஜென்னியின் வயது 29. அத்துடன் ஜென்னியின் வசதி நிறைந்த வாழ்க்கையும் முடிவுக்கு வந்தது. அதே வருடத்தில் பாரீசுக்கு வந்துவிட்டார் மார்க்ஸ். ஜென்னியின் வீட்டில் பணிப்பெண்கள் வேலை செய்வார்கள். ஜென்னிக்கு வறுமையும் தெரியாது, வேலையும் தெரியாது, பட்டினியும் தெரியாது. தன் காதலனின் விருப்பப்படி சொந்த நாட்டையும், குடும்பங்களையும் பிரிந்து வேலையில்லாத காதலனுடன் ஒருவேளை சாப்பாட்டுக்கும், தங்கி இருந்த மிகச் சிறிய அறையிலும் தன்னுடைய காதலனுடன் வாழ்க்கையை தொடங்குகிறாள். வறுமையின் விளிம்பில் இருந்த போதும் ஒருமுறைக் கூட காதல் கணவனை அவள் குற்றம் சுமத்தவில்லை. அவள் காதலை மட்டும் நேசித்தாள். கார்ல் மார்க்ஸிடம் அளவுக்கு அதிகமாக கிடைத்தது.

தத்துவவிவாதம் குறித்து ஜென்னியுடன் பேசியபோதெல்லாம் ஆர்வத்துடன் கேட்டுக் கொண்டும், உற்சாகத்துடன் ஊக்குவித்துக் கொண்டும் இருந்தாள் ஜென்னி. 1844- இல் மே 1-ந் தேதி பெண் குழந்தை பிறந்தது. அக்காலகட்டத்தில் மார்க்ஸ் பொது வாழ்க்கையில் ஈடுபட்டிருந்தார். படிப்பதும், சிந்திப்பதுமாக இருந்த கார்ல் மார்க்ஸ் பாரீசில் ஜெர்மன் தொழிலாளர்களுக்கும், பாரீஸ் தொழிலாளர்களுக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சனை குறித்து தீவிர ஆர்வம் காட்டினார். குறைந்த கூலியில் வேலை செய்த ஜெர்மானியர்கள் மீது பாரீஸ் தொழிலாளர்கள் வெறுப்புடன் இருந்தனர்.

அந்தக்காலக்கட்டத்திலேயே பிரான்சில் சோஷலிஸக் கருத்துக்களுக்கு தீவிர ஆதரவு கிளம்பின. பல இடங்களில் கூட்டங்கள் நடத்தினர். இருப்பினும் தொழிலாளர்களிடம் தெளிவான கொள்கைகளோ, ஒற்றுமையோ இல்லாமல் பிளவுபட்டுக்கிடந்தது. முடிந்த வரை எல்லாக் கூட்டங்களுக்கும் செல்வார் கார்ல் மார்க்ஸ். கூட்டத்தில் பேசப்படும் கருத்துக்கள் மீது திருப்தி இல்லாமல் இருந்தது அவருக்கு. அதைக் குறித்தே சிந்தித்துக் கொண்டிருப்பார். வேலையில்லாத கணவன் எப்போதாவது கட்டுரை எழுதினால் அதில் வரும் வருமானம். ஜென்னி கைக் குழந்தையுடன் எப்படி சமாளித்தாளோ?

கணவனின் செயல்பாடுகள் அரசாங்கத்திற்கு எதிராக இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இருப்பினும் கார்ல் மார்க்ஸ் அசரவில்லை. தன் கருத்தை எழுதிக் கொண்டும் பேசிக் கொண்டே இருந்ததால் ஜெர்மானிய நாட்டு அரசாங்கம் பிரான்ஸ் அரசாங்கத்திடம் கார்ல் மார்க்சை கவனிக்கும்படி சொல்லியது. பிரான்ஸ் அரசாங்கம் கார்ல் மார்க்ஸை 24- மணிநேரத்திற்குள் நாட்டை விட்டு வெளியேறும்படி சொல்லியது. ஜென்னியையும், குழந்தையையும் பிரான்சில் விட்டு பெல்ஜிக் சென்றார். ஜெர்மன் அரசாங்கம் அந்த நாட்டிலும் கார்ல் மார்க்ஸை நிம்மதியாக விடவில்லை. வெறுப்புற்ற அவர் ஜெர்மன் நாட்டின் பிரஜை என்ற உரிமை எனக்குத் தேவையில்லையென தூக்கியெறிந்தார். சில காலத்திற்கு பிறகே ஜென்னியை வரவழிக்க முடிந்தது.

´ப்ரஸ்ஸல்ஸ்´ என்னும் இடத்தில் அவர்கள் தங்கி இருந்தபோது பொதுவுடமைக் கழகத்தின் கட்டிடத்தில் கார்ல் மார்க்ஸ் மற்றும் தோழர்களுடன் ஆலோசனை செய்து கொண்டிருந்தபோது பெல்ஜீய போலீஸ் கட்டிடத்தைச் சுற்றி வலைத்தது. கார்ல் மார்க்ஸை தவீர மற்ற அனைவரும் தப்பி சென்றுவிட்டனர். கார்ல் மார்க்ஸ் கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

ஜென்னிக்கு தகவல் தெரிந்ததும் பதறினாள். தன் கணவனுக்கு ஏதாவது ஆபத்து வந்துவிடுமோ என்று பயந்தாள். ஜென்னிக்கு அப்படி என்னத்தான் தீராத காதலோ? எதுவும் வேண்டாம் அவளுக்கு, கார்ல் மார்க்ஸ் தனக்கு அருகில் இருந்தால் போதும். தத்துவங்களுடன் தர்க்கம் செய்துக் கொண்டும், பேசிக் கொண்டிருந்தாலுமே போதும். கார்ல் மார்க்ஸீடன் ஒரு அடி ரொட்டித் துண்டை பகிந்து கொண்டு கந்தல் உடைகளை போட்டுக் கொண்டு வறுமையின் கொடுமையில் வாழ்ந்தாலும், ஜென்னி தாய் வீட்டில் இருந்த சந்தோஷத்தை விட அதிகமான சந்தோஷத்தையே கார்ல் மார்க்ஸீடன் இருந்த போதும் அவளுக்கு இருந்தது. அப்படிப்பட்டவளுக்கு கணவன் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறான் என்றால் எப்படி இருக்கும்?

கணவனைக் காப்பாற்றியாக வேண்டுமே. புதிய இடம்; யாரையும் தெரியவில்லை. பெல்ஜீயம் ஜனநாயக சங்கத்தின் தலைவரான ´ஜோட்ரான்ட்´ என்பவரிடம் நடந்த சம்பவங்களை கூறி உதவி கேட்டாள். தேவையான ஏற்பாடுகளை அவர் செய்வதாக சொல்லி ஜென்னியை பாதுகாப்பாக வீடு வரை சென்று விட்டு வரும்படி ஜனநாயகக் கட்சியின் உறுப்பினர் ´கிகாட்´ என்பவரை உடன் அனுப்பினார் தலைவர். வீட்டுக்கு வந்த போது வீட்டினுள் ஒரு போலீஸ் இருந்தான். "கார்ல் மார்க்ஸை பார்க்க வாருங்கள் அழைத்துச் செல்கிறேன்" என்றான். கிகாட்டுக்கு சற்று யோசனையாக இருந்தது. எதையும் வெளிக்காட்டாமல் ஜென்னி உங்களுடன் நானும் வருகிறேன் என்றார்.

போலீஸ் ஸ்டெஷனுள் ஜெயில் அதிகாரி மரியாதைக் குறைவாக பேச ஆரம்பித்தான். ´விபச்சாரி´ போன்ற வார்த்தைகளை உபயோகித்த போது கிகாட் கண்டித்தார். அதனால் கிகாட் ஜெயிலில் அடைக்கப்பட்டார். ´வில்லே´ என்ற சிறையில் விபச்சாரிகளுடன் ஜென்னியும் அடைக்கப்பட்டாள்; கணவனைத் தேடி வந்த ஜென்னிக்கு கிடைத்த இழிபேச்சுக்களும், விபச்சாரிகளுக்கு இணையாக அவளை ஜெயிலில் நடத்தியது அவளுக்கு எப்படி இருந்திருக்குமோ? அப்போது கூட அவளைப்பற்றி கவலைப்பட்டிருக்க மாட்டாள். கார்ல் மார்க்ஸை தான் நினைத்து கவலைப்பட்டிருப்பாள். ஜெயிலுக்குள் மற்ற கைதிகளுக்கிடையில் ஜென்னியைப் பற்றி செய்தி பரவியது. எல்லா பெண் கைதிகளும் ஜென்னிக்கு ஆதரவாக குரல் எழுப்பினர். ஜென்னியை வெளியே விடு என்று விபச்சாரிகளும் கோஷமிட்டனர்.

ஜென்னியை காணாமல் அவள் வீட்டில் இருந்த ´ஹெலன்´ என்ற பெண் எல்லோரிடமும் நடந்த விஷயத்தை கூறினாள். எல்லோரும் ஜெயிலை முற்றுகையிட்டு கோஷங்கள் எழுப்பினர். ஜெயிலைச் சுற்றி பதற்றமாக இருந்தது. மறுநாள் மாஜிஸ்ட்டிரேட் முன் ஜென்னியை நிறுத்தியபோது குழந்தைகளையும் ஏன் கைது செய்யவில்லையென்று போலீசை கண்டித்தார் என்றால் சட்டத்தின் ஒழுங்கை பாருங்கள்.

அரசாங்கம் மக்களிடம் கார்ல் மார்க்ஸீக்கு இருந்த ஆதரவைக் கண்டு வேறு நடவடிக்கைகளில் ஈடுபடாமல் நாட்டை விட்டு 24- மணிநேரத்திற்குள் வெளியேற வேண்டும் என்று கார்ல் மார்க்ஸ் குடும்பத்திற்கு கெடு வைத்தது. ஜென்னியும் கார்ல் மார்க்ஸையும் விடுதலை செய்தனர். 24- மணிநேரத்தில் 4- மணிநேரமே இருந்தது. வீட்டில் இருந்த சாமான்களை கூட எடுக்க முடியவில்லை. குழந்தைகளுடன் போலீஸ் ஜென்னியையும், கார்ல் மார்க்ஸையும் நாட்டின் எல்லையில் கொண்டுபோய் விட்டது.

சில துணி மூட்டைகள் குழந்தைகள் கணவனுடன் நாட்டை விட்டு துரத்தப்பட்ட ஜென்னி கார்ல் மார்க்ஸீடன் அந்த சூழலில் என்ன பேசி இருப்பாள்? வேறு பெண் அந்த இடத்தில் இருந்திருந்தால் எப்படி இருந்திருப்பாள்? ஜென்னியைப் போன்று ஒரு பெண் காதலால் இவ்வளவு பிரச்சனைகளை எதிர்க்கொண்டும் சாகும்வரையில் காதலனுடன் இருந்திருப்பார்களோ என்னவோ? பிரச்சனை, வறுமை, நாடு கடத்தப்படல் இப்படியே ஆயுள் முழுவதும் ஜென்னி எப்படி தாக்கு பிடித்திருப்பாளோ?

மீண்டும் கார்ல் மார்க்ஸ் தன் குடும்பத்தினருடன் பாரீஸ் வந்தார். பிறகு சில வாரங்களில் ஜெர்மனிக்கு சென்றார். தோழர்களுடன் கூட்டம், பிரச்சாரம் என போராட்டங்களை சுருக்கி எழுதவிட முடியாது. நீண்ட போராட்ட வாழ்க்கை அவர்களுடையது என்றாலும், ஜென்னியை மையப்படுத்தி செல்ல வேண்டுமென்பதால் மீண்டும் ஜென்னியிடமே செல்வோம்.

ஜெர்மனியில் இருந்த போது கார்ல் மார்க்ஸ் தொடங்கிய பத்திரிக்கை மிகப் பிரபலமாகியது. மார்க்ஸீய கருத்துக்கள் முக்கியத்துவம் பெறத் தொடங்கியதும் ஜெர்மன் நாட்டை விட்டு வெளியேறும்படி கட்டளை வந்தது. அப்போது ஜென்னி கர்ப்பமாக இருந்தாள். மற்ற குழந்தைகளும் சிறியது வயதுடையவர்கள். மீண்டும் 1- வருடத்திற்கு பிறகு பிரான்சுக்கு வந்தார்கள். அங்கு வந்ததும் 1- மாதத்திற்குள் பிரான்சை விட்டு 24- மணிநேரத்திற்குள் வெளியேற வேண்டும் என்ற அரசு கட்டளை. ஜென்னி நிறைய மாத கர்ப்பிணி. வேலை எதுவுமில்லை. சின்ன குழந்தைகளையும் வைத்துக் கொண்டு இனியும் வேறு நாட்டுக்கு போகும் அளவு ஜென்னியின் உடல்நிலை இல்லாததால் அரசாங்கத்திடம் நாடு கடத்தல் உத்தரவை ரத்து செய்யும்படி தன் சூழலை விரிவாக குறிப்பிட்டார் மார்க்ஸ். அரசாங்கம் வேண்டுமானால் மனைவியும், குழந்தைகளும் இருக்கட்டும். ஆனால் நீங்கள் இருக்கக் கூடாது என்றது. கார்ல் மார்க்ஸ் வேறு வழியின்றி அன்றே வேறு நாட்டுக்கு செல்ல வேண்டிய சூழல்.

ஜென்னிக்கு வாழ்க்கை இப்படித்தான் இருந்தது. எப்போது என்ன நடக்குமென்று தெரியாது. இருப்பினும் எல்லாவற்றையும் பொறுத்துக் கொண்டாள். கார்ல் மார்க்ஸீன் கொள்கைக்கு உறுதுணையாக இருந்தாள். லண்டனுக்கு மார்க்சை அனுப்பும் வேலைகளில் ஈடுபட்டாள். கார்ல் மார்க்ஸ் லண்டனுக்குச் சென்று ஜென்னியையும், குழந்தைகளையும் அழைத்துக் கொள்வதாக முடிவாகியது.

லண்டனில் மார்க்ஸ் குடும்பத்தினரை வரவழித்த போது வேலை எதுவும் இல்லை. நண்பனின் உதவித் தொகையில் வீட்டு வாடகை கட்டிக் கொள்ள மட்டும் முடிந்தது. பிள்ளைகளுக்கு ஒருவேளை உணவுக்கு கூட வழிக்கிடைக்காமல் பட்டினி கிடந்தன. நல்ல உடைகள் இல்லை. குளிருக்கு பாதுகாப்பான போர்வைகள் இல்லை. சிறிய ரொட்டித்துண்டகளும், சில உருளைக்கிழங்களும் கூட கிடைக்காமல் கஷ்டப்பட்டிருக்கின்றனர். ரொட்டியும் உருளைக்கிழங்கும் ஐரோப்பாவில் ஏழைகளின் உணவு. அது கூட மார்க்ஸ் குடும்பத்தினருக்கு கிடைக்கவில்லை. பிச்சை எடுப்பவர்களுக்கு கூட ஒருவேளை உணவுகள் கிடைத்திருக்கும். குழந்தைகளையும், கணவனையும் நினைத்து மனதுக்குள் அந்த தாய்யுள்ளம் நிச்சயம் தவித்திருக்கும்.

குழந்தைகளின் தேவைகளைக் கூட கார்ல் மார்க்ஸீடம் ஜென்னி சொல்வதில்லை. குழந்தைகளின் கஷ்டத்தை நினைத்து கார்ல் மார்க்ஸ் சிந்தனைகள் சிதறிவிடக் கூடாது என்பதில் ஜென்னி உறுதியாக இருந்தாள். இருப்பினும் கார்ல் மார்க்ஸ் தன்னுடைய மனைவியை நினைத்தும், குழந்தைகளின் நிலையை நினைத்தும் மிகவும் வருந்தினார். போதிய சத்துணவு இல்லாததால் குழந்தைகள் உடல்நிலை பாதிப்பு அடைந்தன. ஜென்னிக்கு முதுகுவலி, நெஞ்சுவலி வர ஆரம்பித்தது. பசிக்கு அழும் குழந்தைக்கு தாய்பால் கொடுக்கக் கூட முடியாத நிலை. பாலுக்கு பதில் ரத்தம் தான் ஜென்னிக்கு வந்தது. நல்ல குளிரிலும் தரையில் படுத்தார்கள். வீட்டுக்கு வாடகை கட்ட முடியாமல் போய்விட்டது.

வறுமையோடு போராடிய ஜென்னியிடம் குடியிருந்த வீட்டுக்கு உரிமையான பெண் ஏலம் போடுபவர்களுடன் வீட்டுக்குள் நுழைந்து எல்லா சாமான்களையும் பொறுக்கிக் கொண்டு வாடகையான 5- பவுன் பணத்தை உடனே கொடுக்காவிட்டால் அத்தனை பொருட்களையும் ஏலத்துக்கு விடுவேன் என்று கத்தினாள். மார்க்ஸ் பித்து பிடித்தவர் போல் உட்கார்ந்து விட்டார். குழந்தைகள் பயத்தில் அழுதன. நண்பர் ஒருவர் யாரிடமாவது உதவி கேட்கலாமென்று குதிரையில் புறப்பட அன்று பெரும் மழை பெய்துக் கொண்டிருந்தது. அதில் குதிரை தாக்கு பிடிக்க முடியாமல் தவறிவிழ நண்பருக்கு உடம்பெல்லாம் ரத்தக் காயம் ஏற்பட்டு வெறும் கையுடன் திரும்பினார்.

"வாடகை பணத்தை வை, இல்லாவிட்டால் வீட்டை விட்டு வெளியேறு" என்று வீட்டுக்காரப் பெண் பணத்தில் குறியாய் இருந்தாள். ஒரே ஒரு நாள் கெடு கொடுத்தாள். அப்படியே பணத்தை கொடுத்தாலும் உடனே வீட்டை காலி செய் என்று கட்டளை இட்டாள். டக்கென்று வேறு இடம் பிடிப்பதென்றால் நடக்கிற காரியமா? குழந்தைகள், மனைவியுடன் என்ன செய்வது?

கடைசியாக நண்பர் ஒருவர் வீட்டுகொஞ்சம் பணஉதவி செய்தார். மீதி பணத்திற்கு வீட்டில் இருந்த பொருட்களை விற்று வாடகை கட்டினார். மறுநாள் வீட்டுக்குள் ஏலம் எடுப்பவர்கள் நுழைந்த செய்தி அக்கம் பக்கத்தில் இருப்பவர்களுக்குள் பேசிக் கொண்டார்கள். கார்ல் மார்க்ஸீடம் துக்கம் விசாரிப்பதுபோல் எல்லோரும் கேள்வி கேட்டார்கள். அவமானத்தில் குறுகிப் போவிட்டார் கார்ல் மார்க்ஸ். அவர் பட்ட கஷ்ட நஷ்டங்களை இப்படி எழுத்தாக்கி விளக்குவதற்கு கூட நமக்கு நெஞ்சம் பதறுகிறது.

மறுநாள் வேறு ஓர் இடத்திற்கு மார்க்ஸ் குடும்பத்தினருடன் இடம் மாறினார். அவை சேரிப்புறம் போன்றது. மிகவும் மோசமான சுகாதாரம். இரைச்சலும், அழுக்கும், துர்நாற்றமும் உடைய பகுதி அது. இரண்டு அறைகள் அடங்கிய அந்த வீட்டில் 6- வருடங்கள் வாழ்ந்தார்கள். அங்கு சென்றதும் மார்க்ஸீன் சிறிய குழந்தைக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. மார்ப்புச்சலியால் அவதிப்பட்டு மூன்று நாட்களில் இறந்துவிட்டது. சவப்பெட்டி வாங்க கையில் பணம் இல்லை. ஜென்னியின் கதறிவிட்டாள்.

"குழந்தை பிறந்த போது தொட்டில் வாங்க பணமில்லை
அவன் இறந்த போது சவப்பெட்டி வாங்க பணமில்லை."

பக்கத்து வீட்டுக்காரர் கொடுத்த 2- பவுன் பணத்தில் சவப்பெட்டி வாங்கி அடக்கம் செய்தனர். சில வருடங்களுக்கு பிறகு 6- வயது மகன் எட்கார் இறந்தான். குழந்தைகள் மீது மிகுந்த பாசம் வைத்திருந்த ஜென்னியும், கார்ல் மார்க்ஸீக்கும் மரணத்தை ஏற்றுக் கொள்ள முடியாதிருந்தது. மார்க்ஸீக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது. உடல் முழுவதும் கொப்பளங்கள் உண்டாயின. அத்தொற்று வியாதி ஜென்னிக்கும் வந்தது. சரியான சாப்பாடு இல்லாமல், பட்டினி, உடல் நிலை மிகவும் மோசமடைந்தது. விகாரத்தோற்றம் அருவெறுப்பாக மற்றவர்களை பார்க்கத் தூண்டும் அளவு கொப்புளங்கள். யாரும் வேலைக்கு கூட கூப்பிட மாட்டார்கள். தன்னுடைய பெரிய பெண்கள் இருவரையும் பணக்கார வீட்டில் வேலைக்கு அமர்த்திவிட்டு சிறிய குழந்தையும், ஜென்னியுடனும் ஏதாவது அனாதை விடுதியில் தங்கிவிடலாமா என்ற சிந்தனையும் கார்ல் மார்க்ஸீக்கு இருந்தது.

ஜென்னிக்கு வறுமையும், கஷ்டங்களும் அவமானங்களும் பெரியதாக தெரியவில்லை. தன்னுடைய குழந்தைகளின் மரணம் பெரிய பாதிப்பை ஏற்படுத்தி இருந்தது.

"என் குழந்தைகள் இல்லாமல் நான் வாழ்கிற நாட்கள் அதிகரிப்பானது என் துன்பத்தை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது" என்று குழந்தைகள் இறந்து 10- ஆண்டுகளுக்கு பிறகும் கூறிக் கொண்டே இருந்தாள். அக்குழந்தைகளைப் பற்றியே பேசினாள். யாருக்காவது கடிதம் எழுத நேர்ந்தால் இறந்த குழந்தைகளைப் பற்றியே எழுதினாள்.

டிசம்பர் 2, 1881- இல் ஜென்னி இறந்தபோது கார்ல் மார்க்ஸை நேசித்தாள். இறந்த குழந்தைகளை நினைத்து வருந்தினாள். ஜென்னி இறந்த போது கார்ல் மார்க்ஸ் இறந்து விட்டார். காதலியின் மறைவுக்கு பிறகு நடைப்பிணமாகவே அவர் இருந்தார். 1883- ஜனவரி 11- இல் மூத்த மகள் பாரீசில் இறந்த செய்தி கிடைத்தது. அதற்கு பிறகு இரண்டு மாதங்கள் சென்று மார்ச் 14- இல் மதியம் 2.45- க்கு கார்ல் மார்க்ஸ் இறந்தார்.

ஜென்னி தன் இளைய வயதில் இருந்த வசதியான வாழ்க்கை இனி கிடைக்காதே என்று ஏங்கவில்லை. அவளுக்கு பணம் பெரியதாக தெரியவில்லை. தன்னை நேசித்த கார்ல் மார்க்ஸின் காதலை மட்டும் கடைசி வரையில் பெற்றிருந்தாள். காதலில் ஜென்னி தோற்கவில்லை. காதலுக்கு அகராதியில் அர்த்தம் தேடுகிறோம். காதலின் உணர்வுகளை பலர் அலட்சியப்படுத்தி விடுகிறோம். ஆனால், காதல் என்பது இருவரின் இதயத்தில் இருந்தும் உண்மையான நேசிப்பில் தொடங்கினால் நிச்சயம் வெறுப்பில் முடிந்துவிடும் உணர்வல்ல காதல் என்பதற்கு ஜென்னியின் காதல் முன் உதாணம்....

கார்ல் மார்க்ஸ் ஒவ்வொரு முறையும் ஜென்னியை விட்டு பிரிந்து செல்லும் கட்டாயம் ஏற்படும் போதெல்லாம் ஜென்னி சொல்லுவாள்....
"நீ என்னருகில் இல்லை என்ற உணர்வானது நான் என்னிடம் இல்லை என்பதை உணரக் கூட முடிவதில்லை"

மன அழுத்த மேலாண்மை

டாக்டர் B. செல்வராஜ் Ph.D. 
(முதுநிலை உளவியல் விரிவுரையாளர், 
அரசு கலைக்கல்லூரி,
கோவை. 

பிரச்சனையை எதிர் கொண்டு அதை உண்டு இல்லை என்றாக்கி விடுவோம்.கோடி கோடியார் பணத்தைக் கொட்டி வியாபாரம் செய்யும் பெரும் வியாபாரியோ, அல்லது மரம் ஏறிப் பிழைக்கும் மிகச் சாதாரண தொழிலாளியோ அல்லது இவ்விருவருக்கும் இடைப்பட்ட நடுத்தர வர்க்கத்தைச் சார்ந்த ஒருவரோ, யாராக இருந்தாலும் செல்போன் இல்லாமல் இனி அன்றாட வாழ்க்கையை வாழ முடியுமா? கிரைண்டர், மிக்ஸி, வாஷிங்மெசின் போன்ற வீட்டு உபகரணங்கள் இல்லாமல் ஓர் குடும்பத்தலைவியால் இனி குடித்தனம் நடத்த முடியுமா? கவலைகள் இல்லாமல் இக்காலத்தில் இடும்பத்தலைவர் ஒருவரால் காலந்தள்ள முடியுமா? இவையாவும் இனி முடியாது. அப்படியே முடிந்தாலும் அடுத்தவர் உங்களை விடமாட்டார். இவைகளைப் போல, அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியும் தகவல் தொடர்பு வளர்ச்சியும், மக்களிடம் பரஸ்பர உறவை பராமரிக்க வேண்டிய கட்டாயமும் ஏற்பட்டுள்ள இக்காலத்தில் மன அழுத்தம் இல்லாமல் மனிதர்களால் இனி வாழ முடியாது. மனிதர்கள் ஒவ்வொரு நிமிடமும் மன அழுத்தம் ஏற்படுத்தும் விஷயங்களைத் தேடிப் போய் கொண்டு இருக்கிறார்கள். இல்லையேல் உங்களுக்கு மன அழுத்தம் தரும் ஏராளமான விஷயங்களோடு உங்கள் உறவினர்களும் நண்பர்களும் உங்களை தேடி வந்து கொண்டிருக்கிறார்கள்.

இந்த உலகத்தில் உற்றார், உறவினர் மற்றும் நண்பர்களோடு நீங்கள் வாழ வேண்டும் என்றால், அறிவியல் வளர்ச்சியினாலும் தொழில் நுட்ப வளர்ச்சியினாலும் ஏற்பட்டுள்ள வாழ்க்கை வசதிகளை நீங்கள் அனுபவிக்க வேண்டும் என்றால் அதற்கு ஓர் விலை கொடுத்தே ஆக வேண்டும். அந்த விலையே மன அழுத்தம்.

பிரச்சனையை எதிர் கொண்டு அதை உண்டு இல்லை என்றாக்கி விடுவோம்.கவலைகள் இல்லாமல் வாழ்வதெப்படி என்ற தலைப்பில் ஓர் பயிற்சி நடத்தப்பட்டது. நிறைய பேர் அதில் கலந்து கொண்டார்கள். அப்பயிற்சியை நடத்திய உளவியல் அறிஞர் “கவலை இல்லாமல் வாழ்வதெப்படி என்று தெரிந்து கொள்ளும் ஆர்வத்தோடு நிறையப் பேர் இங்கே கூடியிருக்கிறீர்கள். உண்மையில் கவலை இல்லாமல் வாழ்வது சாத்தியமில்லாதது. எனவே கவலையோடு சந்தோஷமாக வாழ்வதெப்படி என்றே நான் கற்றுக் கொடுக்கப் போகிறேன்” என்று கூறி பயிற்சியை நடத்தினார். அதுபோல மன அழுத்தம் இல்லாமல் வாழ முயற்சி செய்வதை விட, மன அழுத்தத்துடன் மகிழ்ச்சியாக வாழ்வது எப்படி என்று கற்றுக்கொள்வதே புத்திசாலித்தனம் ஆகும்.

நம் அனைவரிடமும் ஓரளவு பணம் இருக்கும். உங்களிடம் 500 ரூபாய் இருக்கும் போது 5 ரூபாய்க்கு செலவு வந்தால் என்ன பிரச்சனை இருக்கப் போகிறது? சாதாரணமாக அந்த செலவை சமாளித்து விடலாம். ஆனால் 50 ரூபாய் இருக்கும் போது 5000 ரூபாய் அளவுக்கு செலவு வந்தால் உங்களால் எப்படி சமாளிக்க முடியும்?

அதைப் போலவே, நம் ஒவ்வொருவருக்கும் குறிப்பிட்ட அளவு உடல், மன சக்தி உள்ளது. சாதாரண, நம் சக்திக்கு உட்பட்ட செயள்களை நாம் செய்யும் போது பிரச்சனை ஏதுமில்லை. ஆனால் தீர்க்க முடியாத பிரச்சனை ஒன்றை தீர்க்க முயலும் போது அல்லது செய்ய முடியாத செயல் ஒன்றை செய்து முடிக்க முயலும் போது நாம் நம் உடல், மன சக்தியை மீறி செயல்படுகிறோம் என்று அர்த்தம். இதுபோல நம் உடல், மன சக்திக்கு மீறிய விஷயம் ஒன்றை சமாளிக்க முயலும்போது நம் மனதில் ஏற்படும் தவிப்பு அல்லது பய உணர்வே மன அழுத்தம் எனப்படும்.***

பிரச்சனையை எதிர் கொண்டு அதை உண்டு இல்லை என்றாக்கி விடுவோம்.மன அழுத்ததை நல்ல மன அழுத்தம், தீய மன அழுத்தம் என இரண்டு வகையாகப் பிரிக்கலாம். சைக்கிள் டயரில் ஓரளவுக்கு காற்று இருந்தால் தான் சைக்கிள் இலகுவாக ஓடும். காற்றழுத்தம் குறைவாக இருந்தால் சைக்கிள் ஓடுவது கடினம். காற்றழுத்தம் அளவுக்கு மீறினால் டயர் வெடித்து விடும். அதைப் போல மிதமான மன அழுத்தம் நமக்குத் தேவையே, உதாரணமாக உங்கள் மனைவி உங்களிடம் உள்ள கெட்ட விஷயங்களை எடுத்து சொல்லும் போது உங்களுக்கு மன அழுத்தம் ஏற்படலாம். ஆனால் அது நல்ல மாற்றத்துக்கான அறிகுறி. விரைவிலேயே அந்த கெட்ட விஷயங்களை விட்டு வெளிவர முயற்சி செய்து வெற்றியும் பெறுவீர்கள். பெரிய காரியம் ஒன்றை முடிக்க வேண்டி ஒருவரிடம் உதவிகள் கேட்டு செல்கிறீர்கள் அப்போது உங்களுக்கு மனப் பதட்டமும், மன அழுத்தமும் ஏற்படும். ஆனால் இம்மன அழுத்தம் உங்களை செயல் வீரராக்கும்.

பிரச்சனையை எதிர் கொண்டு அதை உண்டு இல்லை என்றாக்கி விடுவோம்.மன அழுத்தம் சிறிதளவு கூட இல்லையென்றால் யாராலும் எந்தக்காரியத்தையும் செய்து முடிக்க முடியாது. தேர்வு வருகின்றது என கேள்விப்பட்டவுடன் மன அழுத்தத்திற்கு உட்படாத மாணவன் உருப்படியாக படித்து தேர்வில் வெற்றி பெற மாட்டான். ஓரளவுக்கு மன அழுத்தம் கொள்ளும் மாணவர்களே சிரத்தையுடன் படித்து தேர்வில் வெற்றி பெறுவார்கள். இதுபோன்ற சூழ்நிலைகளில் ஏற்படும் நல்ல மன அழுத்தம் நம்மை கச்சிதமாக காரியத்தை முடிக்கத் தூண்டும். மேலும் நல்ல மன அழுத்தம் நம் உடலில் பல்வேறு மாற்றங்களை உண்டாக்கி நம்மை செயல்புரிய வைக்கிறது. முடிக்க வேண்டிய காரியத்தை நினைத்து சிறிதளவு பயம் கொள்ளச் செய்கிறது.

அளவுக்கதிகமான கெட்ட மன அழுத்தம் நம்மை நிலைகுலையச் செய்வது போல, அளவுக்கு அதிகமான நல்ல மன அழுத்தம் நம்மை சிறப்பாக செயல்புரிய செய்கிறது. நாம் அனைவரும் மன அழுத்தத்தின் கெட்ட முகத்தைத் தான் காண்கிறோம். அதற்கு இன்னொரு நல்ல முகமும் உண்டு.

பாம்பின் விஷம் கூட மருந்துக்குப் பயன்படுவது போல மன அழுத்தமும் நமக்கு நன்மை புரியும். எனவே எந்த ஒரு சூழ்நிலையிலும் ஓரளவுக்கு ஏற்படும் மன அழுத்தம் நன்மைக்கே என்பதை மனதில் கொள்ள வேண்டும்.***

நாய் ஒன்று பூனையைத் துரத்துகிறது. பூனையோ நாயிடமிருந்து தப்பிப்பதற்காக தன் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு ஓடுகிறது. இறுதியாக ஓர் அறையின் மூலையொன்றில் பூனை மாட்டிக்கொள்கிறது. அதற்கு மேல் ஓட வழியில்லை. அப்போது பூனை என்ன செய்யும் என்று கவனித்து இருக்கிறீர்களா?

பூனையின் கண்மணிப்பாவை விரிந்து பார்வை கூர்மையாகும். அமுங்கி இருக்கும் கால் நகங்கள் நாயை கீருவதற்கு வசதியாக வலிமை பெறும். பூனையின் உடலிலுள்ள மயிர்கால்கள் குத்திட்டு நிற்கும். கூறிய பற்களை காண்பித்து சத்தத்துடன் நாயைக் கடிக்க பூனை தயாராகிவிடும். இறுதிப் போரட்டத்தில் சிறிய பூனை வலிமையான நாயையே கொண்று விடக்கூடிய வாய்ப்பும் உள்ளது.

நாயைப் போன்ற மன அழுத்தம் நம்மை தாக்கும்போது நாமும் பூனையைப் போலவே ஒன்று பிரச்சனையைக் கண்டு ஓடி ஒளிவோம் அல்லது பிரச்சனையை எதிர் கொண்டு அதை உண்டு இல்லை என்றாக்கி விடுவோம்.

இவ்வாறு நாம் நடந்து கொள்வதற்கு போராடு-அல்லது-புறங்காட்டு வினை (Fight-or-Flight response) என்று பெயர். இந்த வினை கற்காலத்திலிருந்தே மனிதர்களிடத்தில் காணப்படுகிறது. அடுத்த வேளை உணவுக்கு என்ன செய்வது என்று வருந்திக் கொண்டிருந்த மனிதன் சிங்கதைக் கண்டதும் அதையே அடித்து உணவாகப் பயன்படுத்திக் கொண்டான். சிங்கத்தை அடிக்கும் அளவுக்கு மனபலமும் உடல் பலமும் இல்லாத மனிதன் சிங்கத்திற்கு இரையாகிப் போனான். எனவே ஒருவன் சிஙகத்தை உணவாக்கிக் கொண்டதும், சிங்கத்திற்கு உணவாகிப் போனதும் எவ்வளவு வேகமாக போராடு-அல்லது-புறங்காட்டு வினையை ஒருவன் வெளிப்படுத்துகிறான் என்பதைப் பொறுத்தே அமைந்தது. அதைப் போல இந்த நவீன உலகில் நம்மை துரத்திவரும் மனஅழுத்தம் ஏற்படுத்தும் பிரச்சனைகளை எதிர்கொண்டு வெல்வதும், பயம் கொண்டு விலகி ஓடுவதும் நம்முடைய போரடும் அல்லது புறங்காட்டும் வினையைப் பொறுத்தே அமைகிறது. அதுவே நமக்கு ஏற்படும் மன அழுத்தத்தையும் தீர்மானிக்கிறது

கணவன் - மனைவி உறவைவிட உன்னதமான உறவு உண்டா?

கணவனுக்குத் தலைவலி. நெற்றியை அழுத்திப் பிடித்துக் கொண்டு சோபாவில் உட்கார்ந்திருக்கிறான். மனைவி கொஞ்சம் தைலம் எடுத்து வந்து, கணவன் அருகில் அம...