சுகுணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி சார்பாக பத்மஸ்ரீ விருது பெற்ற திருமதி பாப்பம்மாள் அவர்களுக்கு பாராட்டு விழா கல்லூரி கலையரங்கத்தில் 20.02.2021 அன்று காலை 10.00 மணிக்கு கல்லூரி கலையரங்கத்தில் நடைபெற்றது. விழாவுக்கு சுகுணா கல்வி நிறுவனங்களின் தலைவர் திருமிகு வி. லட்சுமிநாராயணன் அவர்கள் தலைமை தாங்கினார். கல்லூரி முதல்வர் முனைவர் ஆர்.கே. வைத்தியநாதன் அவர்கள் அனைவரையும் வரவேற்றார். சுகுணா கல்வி நிறுவனங்களின் செயலர் திருமிகு ஸ்ரீகாந்கண்ணன் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார். திருமதி பாப்பம்மாள் பாட்டி பேசுகையில் நல்ல உணவு, மனதை எப்போதும் சந்தோநமாக வைத்துக்கொள்ள வேண்டும் என்றார். முடிவில் கணினித்துறைத்தலைவர் பேராசிரியர் திருமதி சுகன்யா நன்றியுரையாற்றினார். தமிழ்த்துறைத்தலைவர் முனைவர் பூ.மு.அன்புசிவா, மேலாண்மைத் துறைத்தலைவர் முனைவர் லட்சுமணன் ஆகியோர் விழாவை ஒருங்கிணைத்தனர். 200க்கு மேற்பட்ட மாணவர்களுக்கு நாளைய நாயகர்கள் விருது வழங்கப்பட்டது. 20க்கு மேற்பட்ட ஆசிரியர்களுக்கு சிறந்த ஆசிரியர் விருது வழங்கப்பட்டது.
Saturday, February 20, 2021
Friday, February 19, 2021
சிறந்த பேராசிரியர் விருது
கே.பி.ஆர். கல்வி நிறுவனங்கள் மற்றும் புதுயுகம் டி.வி இணைந்து நடத்திய இனி ஒரு விதி செய்வோம் நிகழ்ச்சியில் விருது வழங்கும் விழாவில் கல்லூரியில் ராகம் கலையரங்கத்தில் 19.02.2021 காலை 10.00 மணிக்கு நடந்தது. 2020-2021 கல்வி ஆண்டுக்கான சிறந்த பேராசிரியர் விருது கோவை, சுகுணா கலை மற்றும் அறிவியல் கல்லூரித் தமிழ்த்துறைத்தலைவர் முனைவர் பூ.மு.அன்புசிவா அவர்களுக்கு நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் முனைவர் கலையமுதன் அவர்கள் வழங்கினார். நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் பாலுசாமி தலைமை தாங்கினார்.
Subscribe to:
Comments (Atom)
கணவன் - மனைவி உறவைவிட உன்னதமான உறவு உண்டா?
கணவனுக்குத் தலைவலி. நெற்றியை அழுத்திப் பிடித்துக் கொண்டு சோபாவில் உட்கார்ந்திருக்கிறான். மனைவி கொஞ்சம் தைலம் எடுத்து வந்து, கணவன் அருகில் அம...
-
ஒரு தந்தையாவது மிகவும் இலகுவானது. ஆனால் ஒரு தந்தையாக இருப்பது மிகவும் கடினமானது. -Wilhelm Busch- அப்பா... ஒரு மனிதன்,பின்னாளில் தனக்கு சொந்...
-
உலகில் தொன்மையான தற்போது மக்கள் பயன்பாட்டில் உள்ள மொழிகள் சிலவற்றை செம்மொழிகள் என அறிவித்துள்ளனர். உலக மக்கள் பேசும் மொத்த மொழிகளின் எண்ண...
-
பேரா.முனைவர் பூ.மு.அன்புசிவா 149, ஹரிஸ்ரீகாடர்ன்ஸ் சுண்டப்பாளையம்(அ) கோயம்புத்தூர் - 641 007 பேச:098438 74545. பண்பாடும் மொழ...

