திராவிட
இயக்கம் கடவுள் வழிபாடு என்பது மூடநம்பிக்கை,
பொருளற்றது என்று வலியுறுத்தி வருகிறது. இந்த நம்பிக்கையைப் பொருத்த
மட்டில்கூடத் திராவிடருக்கும் ஆரியருக்கும் பெருத்த வேறுபாடு உள்ளது. வழிபாட்டு
முறையில் பார்த்தாலும் ஆரியர் - திராவிடருக்கு இன்றும் சரி அன்றும் சரி வேறுபட்டவர்கள்.
சங்க
காலத்தில் - 2500
ஆண்டு களுக்கு முன் சமய வாழ்க்கை திராவி டர்களிடையே தனித்த பண்போடு
இருந்துள்ளது. ஆயினும் ஆரியர் வழி பாட்டு முறைகளும் சமயக் கொள் கைகளும் பண்டைத்
தமிழர் வாழ்விலே புகத் தொடங்கின. இன்றைய நாளுக்கும் அன்றைய நாள்களுக்கும் உள்ள
வேறுபாடு ஆரிய ஆதிக்கம் தலை தூக்கியதே தவிர தலைமை வகித் திடவில்லை.
சங்க
நூற்களான எட்டுத் தொகை,
பத்துப் பாட்டு ஆகியவற்றில் ஆரியக் கடவுள்கள் கூறப்பட்டு உள்ளதை
அடிப்படையாக கொண்டு, சங்க
காலத்தில் தமிழ்நாட்டில் ஆரியர் சமய வாழ்க்கைப் பண்பே சிறந்தது என்று தவறாகக்
கருதினர். இக்கருத்து அதாவது ஆரியர் சமய வாழ்க்கைப் பண்பு சிறந் தோங்கியது என்பது
தவறான கருத்து என்பதைச் சுட்டிக் காட்டுவோம்.
சங்க
நூல்களில் திருமால்,
இந்திரன் முதலிய ஆரியக் கடவுள்கள் இடை யிடையே கூறப்பட்டுள்ளது உண்
மையே. ஆனால், சங்க கால மக்கள் நில இயற்கைக்கு ஏற்ப அமைந்த
முருகன், கொற்றவை முதலிய திராவிடத் தெய்வங்களை வணங்கி
வந்தனர் என்பதனைச் சங்க இலக்கியங்கள் தெளிவாக எடுத்துக் கூறத் தவறவில்லை.
ஆனால், காலப்போக்கில்
ஆரியக் கடவுள்களும் தமிழ்க் கடவுள்கள் யாவும் ஒன்றுபடுத்தப்பட்டு ஆரிய ஆதிக்கம் புகுந்துவிட்டது.
அதனால் தான் இன்று அவற்றைப் பிரித்து இன்று வேறுபடுத்திக் காணுவது என்பது
இயலாததாகிவிட்டது. எனினும் கூடச் சில கடவுள்களை
மட்டும் அவ்வாறு இது திராவிடர் வழிபட்ட கடவுள், இது ஆரியர்
வழிபட்ட கடவுள் என்று பிரித்துக்காண முடியும்.
அதுபோலவே
இங்கே பார்ப்பார்,
பார்ப்பனர் எனும் சொற்களால் தமிழர் அல்லாத, திராவிடர்
அல்லாத ஆரியப் பண்பாட்டு வாழ்க்கை மேற்கொள் வோரை அழைக்கிறோம். அதிலும் கூடச் சில
உண்மைகள் மறைக்கப் பட்டுப் போலிகள் புகுந்து விட்டனர் என்று அந்தச் சொல்லாராய்ச்சி
காட்டுகிறது.
பார்ப்பார்
எனும் சொல் இருக் கிறதே அதுகூடத் தமிழ்ச் சொல் அல்ல. அது பாலி மொழிச் சொல்லாகும்.
பழங்காப்பியமான தொல்காப்பியத் திலேயே பல பாலி மொழிச் சொற்கள் கலந்துள்ளன. அவை ஆரிய
மொழிச் சொற்கள். அதாவது சமஸ்கிருதச் சொற்கள் வடசொற்கள் என்று தமிழ் ஆராய்ச்சியாளர்கள்
கூறி வருவது அவர்கள் பாலி மொழி அறிவில்லாத,
அல்லது பாலி மொழியைப் பயிலாத குறையே என்று பாலி மொழி குறித்து நன்கு
தெரிந்தவர்கள் சுட்டிக்காட்டி யுள்ளனர்.
பாலி
மொழியில் பார்ப்பார் என்ற சொல்லுக்கு ஆராய்வோர் என்ற பொருளையே தருகின்றது.
பார்ப்பார் என்று யாரை அழைத்தார்கள் என்றும் அறிகிறோம். புத்தர் அருளிய திரிபிடகம்
என்னும் ஆதிநூலைப் பார்ப்போரும்,
அதாவது ஆராய்வோரும் தன்னைப் பார்ப்போரும், அதாவது
தன்னை ஆராய்வோரும் ஆகிய கற்ற அறிஞர் களையும், பவுத்த
சங்கத்துச் செயலுக்கு உரியவர்களாக பவுத்த சமணர் களுமேதான் பார்ப்பார் என்று அழைக்
கப்பட்டனர்.
ஆரியர்களான
பிராமணர்கள் என்போர் மிலேச்ச கூட்டத்தார் என்றுதான் அழைக்கப்பட்டனரே ஒழிய
பார்ப்பார் என்று அழைக்கப்பட வில்லை. அப்படியானால் ஆரியர்கள் பார்ப்பார், பார்ப்பனர்
என்று ஆனது எப்படி என்று ஆராய்ந்தவர்கள் கூறியுள்ள கருத்துகள் கருதத்தக்கன, ஏற்கத்தக்கன.
ஆரியர்கள்
வயிற்றுப் பிழைப்பின் காரணமாய் அக்காலத்தில் பவுத்த பிட்சுக்களைப் போல வேடமிட்டுக்
கொண்டு பவுத்தக் குடிகளிடம் பிச்சை யேற்றுப் பிழைத்து வந்தனர்.
புத்தருக்கு
800 ஆண்டுகளுக்குப் பின்னால் ஆரியர்கள் தங்களின் மூடக் கொள்கைகளை மக்களிடம்
பரவிடச் செய்ய தங்கள் மாயையில் சிக்கிய துரோகிகளைக் கொண்டு பவுத்த சமணப்
பேரறிஞர்களை அழித்தனர்.
அதன்
பின்னர் பவுத்தப் பேரறிஞர் களுக்கு உரிய சிறப்புப் பெயராகிய பார்ப்பார் எனும் பாலி
மொழிச் சொல்லைத் தங்கள் இனத்தாருக்கு உரியதாக ஆக்கிக் கொண்டனர் என்று ஆய்வு செய்து
அறிஞர்கள் கூறியுள்ளனர்.
இத்தகு
கூற்றுக்கு ஆதாரமாக அறிஞர்கள் சிறுபஞ்ச மூலம் எனும் பண்டைத் தமிழ் நூலில்
காணப்படும் கீழ்க்கண்ட வரிகளை அடிப்படையாகக் கொள்கின்றனர்.
புற்றினான்
பற்றற்றான் நூல் தவசியெப் பொருளு முற்றினானாகு முதல்வன் நூல்
பற்றினாற் பாத்துண்பான் பார்ப் பான் பழியுணர்வான் சான்றவன் காத்துண்பான் காணான் பிணி
பற்றினாற் பாத்துண்பான் பார்ப் பான் பழியுணர்வான் சான்றவன் காத்துண்பான் காணான் பிணி
இதனை
நோக்கித் தொல்காப்பி யத்தில் வரும் பார்ப்பான் போலிப் பார்ப்பானேயன்றி
மெய்ப்பார்ப்பானல் லன் என்று அறிஞர்கள் கருதினர்.
அதாவது
தொல்காப்பியக் காலத்து மக்கள் போலிப்பார்ப்பான் மெய்ப்பார்ப் பான் இன்னார் என்று
உணராமல் போலிப்பார்ப்பனர்களையும் இன்று உண்மைச் சாமியார் யார், கபடச்
சாமியார் யார் என்று கண்டுபிடிக்க இயலாமல் இருப்பதுபோல் அன்றும் இருந்ததால்
பார்ப்பனர் என்றே கருதி வந்தனர் எனலாம்.
மறப்பினுமோத்துக்
கொளலாகும் பார்ப்பான்
பிறப்பொழுக்கல்
குன்றக் கெடும் என 133ஆவது திருக்குறளில் வள்ளுவப் பெருந்தகை கூறியுள்ளாரே என்று கேட்டு அதன் பொருள்தான்
என்ன என்று வினவக்கூடும் திருக்குறள் உரைகளில் காலத்தால் முந்திய உரை யான
திருக்குறளுக்கு உரையெழுதிய பதினெட்டுப்பேரில் முன்னவர் மணக்குடவர் என்பதையும்
பரிமேலழர் தம் உரையில் பல இடங்களில் மறுப்பது மணக்குடவர் உரையே என்பதை அறி வோம்.
அத்தகைய மணக்குடவரும்கூட இக்குறளுக்குத் தம் உரையில்
பிராமணன்
வேதத்தினை ஓதிட
மறந்தாளாயினும், பின்னும்
ஓதிக்கொள்ளலாம் ஒழுக்கம்
குறையுமாயின் குலம் கெடும்
என்றே பொருள் கூறினார்.
மறந்தாளாயினும், பின்னும்
ஓதிக்கொள்ளலாம் ஒழுக்கம்
குறையுமாயின் குலம் கெடும்
என்றே பொருள் கூறினார்.
இதை
ஒட்டியே பின்னர் உரை எழுதிய பலரும்,
பார்ப்பனன் வேதத்தை மறந்தாலும் கற்றுக் கொள்ளலாம். அவனுடைய
பிறப்பின் உயர்வு ஒழுக்கம் கெட்டால் அழிந்துவிடும் என்று பொருள் எழுதினர். ஆனால்,
பார்ப்பார் என்ற பாலி மொழிச் சொல்லுக்கு உள்ள உண்மையான பொருளில் அடிப்படையாகக்
கொண்டு பார்த்தால் வேறாக இருப்பது நன்கு புரியும். இக்குறளுக்குப் பார்ப்பான்
என்றால் ஆராய்வோன் என்ற பொருளில் பார்த்தால்
தன்னை
அறிந்து ஆராயதவன்
ஆயினும் குற்றமில்லை. தன்னை
அறிந்து ஆராய்வோனெனத்
தோன்றிய மானிடன் நல்ல ஒழுக்கநெறியில் நில்லாமல் கெடுவான்
என்பதே பொருளாகும்.
ஆயினும் குற்றமில்லை. தன்னை
அறிந்து ஆராய்வோனெனத்
தோன்றிய மானிடன் நல்ல ஒழுக்கநெறியில் நில்லாமல் கெடுவான்
என்பதே பொருளாகும்.
இப்படிப்
பார்ப்பார் என்ற சொல் லுக்கே உண்மைப் பொருள் என்ன என்று ஆராய்வோர் அருகி விட்டனர்
என்றால் தமிழ்க்கடவுள் எது,
ஆரியக் கடவுள் எது என்று பிரித்துப் பார்க் கிறவர்களைக் காண்பது எப்படி
இயலும்.
எனவே, இந்தக்
கடவுட் கொள்கை யிலே புகுந்த ஆரியம் படிப்படியாகக் கல்வி, சமுதாயம்,
பண்பாடு என்ற தமிழரின் அனைத்துத் துறையிலும் ஆதிக்கம்
செலுத்தியமையால் உண்மைத் தமிழர் யார், போலித் தமிழர் என்பவர்
யார் என்று காண இயலாமல் போய் விட்டது. ஆளும் நிலைக்குக் கூட அயலவர் தமிழ்நாட்டில்
என்றாகி விட்டது.
காலப்போக்கில்
ஆரியக் கடவுள் களுடன்,
தமிழ்க் கடவுள்கள் யாவும் ஒன்றுபடுத்தப்பட்டன. அதனால்தான் இன்று
அவற்றைப் பிரித்து வெவ் வேறாகக் காணுதல் இயலாததாகி விட்டது. எனினும் சில கடவுள்களை
மட்டும் அவ்வாறு பிரித்துக் காண முடியும். காலம் செல்லச் செல்ல ஆரியரின் ஆதிக்கம்
மிகுந்தது, ஆரியரின் செல் வாக்கு மிகுந்தது. இதனால்
தமிழருக்கே உரிய வெறியாட்டு முதலிய வழிபாட்டு முறைகளும் ஆரியருடைய கிரியை முதலியவற்றால்
மறைக்கப்பட்டு ஒழிந்தன.
பகுத்தறிவாளரைப்
பொருத்த மட்டில் பண்டைத் தமிழரின் வழிபாட்டு முறையாயினும் சரி, ஆரியரின்
கிரியை முதலிய வழிபாட்டு முறையாயினும் சரி. அவை மூட நம்பிக்கையின்பால் பட்டவையே.
வழிவழியாக வந்ததை, பண்டைத் தமிழர்களுக்கு உரியவை அவற்றைச்
சரி என்பதோ, அவை உயர்ந்தவை என்பதோ கொள்வது கிடையாது. தங்க
ஊசி என்பதற்காகக் கண்ணில் குத்திக் கொள்ளவா முடியும் என்னும் நிலையே. மந்திரங்கள்
கூறி, சுவாகா என்று கூறி யாகங்கள், வேள்விகள்
செய்வதே ஆரியருக்குச் சிறப்பாக உள்ள முறை.
தமிழருடைய
வழிபாட்டிலே வெறி யாட்டு முதலியன முதன்மையான இடம் பெற்றன. தமிழர் இசை வளர்ச்சியும்
இதுவும் மிகத் தொடர்பு உடையவை.
சங்க
இலக்கியத்தில் முருக வழிபாடு கூறப்படும் இடங்களில் இத்தகைய கூத்துகள்
வருணிக்கப்படுகின்றன. இவ்வழிபாடுகளில் பூசாரி, பட்டர், புரோகிதர்
முதலிய இடைத்தரகர்கள் இல்லை. இறைவன் தம்மிலே வந்து வெளிப்படுவோன் என்னும்
நம்பிக்கையே மிகுந்திருந்தது. குறமகள் அதாவது குறிஞ்சி நிலப்பெண் கோரும் மணியும்
ஒலிக்க யாவரும் அஞ்சத்தக்க முறையில் இசைக்கு ஏற்ப ஆடுதல் பல பாடல்களில்
காணப்படுகிறது.
சங்க
காலத்தில் பெரு வழக்காயிருந்த இவ்வெறியாட்டைத் தொல்காப்பியர் பொருளதிகாரத்தில்
வெறியறிசிறப்பின் வெவ்வாய்வேலன் வெறியாட்டயர்ந்த காந்தளும்
(தொல்பொருள் 60:1-2)
என்று கூறுகிறார்.
(தொல்பொருள் 60:1-2)
என்று கூறுகிறார்.
இந்த
ஆட்டத்தைக் கையில் வேலைக் கொண்டு கூத்தாடுவதனால் வேலன் என்னும் பெயருடைய ஒருவன்
முருகனை வாழ்த்திக் கூறுவான். துன்பங்களுக்கு முருகனே அடிப்படை என்று கொண்டு அவனை
வழிபட்டு வேண்டுவான்.
பத்துப்பாட்டு
நூல்களில் ஒன்றான
மதுரைக்காஞ்சி
இந்த மரபைப் பின் வரும் இப்பாடலால் கூறுகிறது.அருங்கடி வேலன் முருகொரு வனாகி
அரிக்கூடின்னியங் கறங்க நேர் நிறுத்துக
கார்மலர் குறிஞ்சி சூடிக்கடம்பின்
சீர்மிகு நெடுவேள் பேணித் தழூஉப் பிணையூஉ
மன்றுதொறு நின்ற குரவை (மதுரை 613-615)
இப்பாடலுக்கு
விளக்கம் இது. அரிய அச்சத்தை ஏற்படுத்தும் வேலன் இடுக்கண் முருகனால் வந்ததெனக்
கூறினான். தான் கூறிய அச்சொல்லின் கண்ணே கேட்டோரை வளைத்துக் கொண்டு அரித்தெழும்
ஓசையையுடைய இனிய இசைக் கருவிகள் ஒலிக்க,
கார்காலத்து மலரான குறிஞ்சியைச் சூடிக் கடம்பு அணிந்த முருகனைச்
செவ்விதாகத் தன்மெய்க்கண்டே நிறுத்தி வழிபடுவாள். அவ்வாறு வழிபட மகளிர் தமக்குள்
தழுவிக் கைகோத்து மன்றுகள் தோறும் நின்று குரவைக் கூத்து ஆடுவர்.
பார்ப்பார், பார்ப்பனர்
பற்றித் தொடங்கித் தமிழர் வழபாட்டு முறை களை எடுத்துக் கூறுவதில் காரணம் உள்ளது.
தமிழர் முறைகள் யாவை என்று தெரிந்து கொண்டால் அய்யர் என்பவருக்கு அதில் இடமே இல்லை.
பார்ப்பனரின் பங்கு ஏதும் இல்லை என்று காட்டுதற் பொருட்டுத்தான்.
அய்ங்குறு
நூற்றில் வெரிப்பத்து என்னும் பகுதி இருக்கிறது. (அய்ங் 241- 250). எப்படி
மதுரைக் காஞ்சியில் தலைவியின் துன்பத்திற்குக் காரணம் முருகனே என்று கூறப்படதோ அது
போலவே அய்ங்குறு நூற்றிலும், குறுந் தொகையிலும் கூறக்
காண்கிறோம்.
கறிவளர் சிலம்பிற் கடவுட்பேணி
யறியா வேலன் வெறியெனக் கூறும்
என அய்ங்குறுநூறு (243: 1-2)
கறிவளர் சிலம்பிற் கடவுட்பேணி
யறியா வேலன் வெறியெனக் கூறும்
என அய்ங்குறுநூறு (243: 1-2)
கூறுகிறது.
இவ்வாறு தலைமகளின் பொலிவற்ற நிலைக்கு முருகனே காரணமென்று கொண்டு நோயின் காரணத்தை
அறிவதற்கு வேலன் முரு கனைப் பேணுவாள் எனக் கூறப் படுகிறது. குறுந்தொகையில், மென்றோணெ
கிழ்த்த செல்லல் வேலன்வென்றி நெடு வேனென்றும்(குறு: 111: 1-1)என்று கூறும் இந்தப் பாடல் வரி களுக்கு விளக்கம் மெல்லிய தோளை மெலியச்
செய்த துன்பம் வெற்றியை முருகக் கடவுளால் வந்ததென்று வேலன் சொல்லுவான் என்பதாகும்.
அகநானூறு
வெள்ளிய பனந் தோட்டினைக் கடப்ப மலரோடு சூடி இனிய சீர் அழகியதாக அமைந்த தாளத்தோடு
பொருத்தி முருகனின் பெரும்புகழினைத் துதித்து வேலன் வெறியாடுவது
குறிப்பிடப்பட்டுள்ளது.
வெறியாட்டில்
ஆட்டின் கழுத்தை அறுத்துத் திளையையுடைய பிறப்பை வைத்து வழிபட்டனர்.
பலவாகிய
வேறுபட்ட நிறம் பொருத்திய சோற்றையுடைய பலியுடன் சிறிய ஆட்டுக் குட்டியைக் கொன்று நோய்
உள்ள பெண்ணின் நரிய நெற்றியைத் தடவி முருகனை வணங்கிப் பலியாக வேலன் கொடுத்தான்
என்று குறுந்தொகை கூறும்.
வெறியாடும்
களத்தினை நன்கு அமைத்து வேலிற்கு மாயை சூட்டி வளம் பொருத்திய கோயிலில்
ஒலியுண்டாகப் பலிகொடுத்து அழகிய சிவந்த தினையை இரத்தத்துடன் கலந்து தூவி முருகனை
அச்சம் பொருந்திய நடு இரவில் வேலன் வரவழைப்பான் என்று அகநானூறு கூறும்.
இவ்வாறான
பழக்கவழக்கங்கள் பண்பாடு மிக்கதாகக் கூறப்படும் தமிழ்ச் சமூகத்தில்
காணப்படுவதையெல்லாம் வைத்துக் கள்ளிக்கோட்டை பேராசிரியர் எம்.ஜி.எஸ். நாராயணன்
சங்க காலச் சமூகம் பண்டை இனச் சமூகம் அதாவது Tribal Society என்று
கூறுகிறார்.
நடுகற்கள்
போரில்
வீழ்ந்த வீரரைக் கல்லில் அமைத்து வழிபடும் வழக்கமும் இப்பகுதியில் இருந்தது.
வீரரின் நினைவுக் கற்கள் நிறுத்தப்பட்டு அவற்றின் அருகில் கேடயங்களும் ஈட்டிகளும்
வைக்கப்பட்டன என பட்டினப்பாலை கூறும்.
கிடுகிடு
நிரைத் தெஃகூன்றி
நடுகல்லினரண்போல்
கல்லை வெட்டியெடுத்து அதனி டத்தே இவ்வாறே பொழுதுபட்டான் இன்னான் என்று அவன் பெயரை எழுதி மராமரத்தின் நிழலிலே நட்டு அதனைத் தெய்வமாகப் போற்றுவரென மலைபடுகடாம்.
நடுகல்லினரண்போல்
கல்லை வெட்டியெடுத்து அதனி டத்தே இவ்வாறே பொழுதுபட்டான் இன்னான் என்று அவன் பெயரை எழுதி மராமரத்தின் நிழலிலே நட்டு அதனைத் தெய்வமாகப் போற்றுவரென மலைபடுகடாம்.
பெயர்
மருங்கறிமார் கல்லெறிந்தெழுதிய நல்லறை மரா அத்த கடவுள் என்று கூறுகிறது. (மலைபடு 394-396)
நடுகல்
பற்றிய செய்து அய்ங்குறு நூறு,
அகநானூறு, புறநானூற்றிலும் உண்டு. நடுகல்
அமைத்தல் அக்காலத் தில் வெகுவழக்கில் இருந்தமையால் அவற்றை அமைத்தற்குரிய முறைகள்
யாவும் முறையாகப் பின்பற்றப்பட்டதை தொல்காப்பியம் இலக்கணமாக வகுத்துள்ளது.
பழைய
தமிழர் வழிபாட்டு முறை குறித்துப் பட்டினப்பாலை கூறும் நெய்தல் நில மக்கள் -
பெண்கள் - குழந் தைகள் ஆகியோர் முழு நிலா நாள் களில் கடற்கரையில் கூடிக் கடல்
தெய்வத்திற்கு மீனும் இறைச்சியும் படைத்து வணங்கினர்.
கடற்தெய்வத்தின்
அடையாளமாக நெய்தல் நில மக்கள் வணங்கியது சுராவின் கொம்பே. சங்க காலத்தில் உருவ
வழிபாடு இருந்ததாகத் தெரிய வில்லை. எனினும் மன்றங்களில் மக்கள் வணக்கத்திற்காகக் கற்கள்
நிறுவி யதைப் பட்டினப் பாலை கூறுகிறது.
தாம்
உரைத்த கற்களை விடுத்துத் தெய்வங்கள் நீங்கப் பாழடைந்த அம் பலத்தைப் பற்றிப்
புறநானூறு கூறு கின்றது. புதர்கள் படரப் பெற்ற பொதி யிலிடப் பெற்ற விடத்தே தெய்வம்
கை விட்டுப் போன வலிய தாளினையுடைய தூணைப் பற்றி அகநானூறு கூறுகிறது.
இதுவரை
எடுத்துக் காட்டிய திராவிட வழிபாட்டு முறை ஆரிய வழி பாட்டு முறையிலிருந்து
வேறுபட்டது. இதில் ஆரியக்கூறு ஏதும் இல்லை. ஆரிய இன்றைய வழிபாட்டு முறை யையும்
தனியே கண்டால்தான்!
தமிழன்
கண்டாய் ஆரியன் கண்டாய் என்று நாம் தனியே பிரித்து நம் வழியில் சொல்லலாம்.