கனிமொழி கவிதைகளில் வாழ்வியல் சிக்கல்கள்
முனைவர் பூ. மு. அன்புசிவா இணைப்பேராசிரியர் மற்றும் தலைவர் , தமிழ்த்துறை , சங்கரா அறிவியல் மற்றும் வணிகவியல் கல்லூரி , கோவை . பேச: 098424 95241. ஒரு நாட்டு மொழி வரலாறு பரந்துபட்ட ஒன்று. அதில் பல்வேறு இலக்கியக் கலைக்களங்கள். சங்ககால முதலான தமிழிலக்கிய வரலாற்றில் கடந்த பத்தொன்பதாம் நூற்றாண்டு தொடங்கி பல புது இலக்கியங்கள் தோன்றியுள்ளதைக் காணலாம். ‘ புதுக்கவிதை ஒரு வடிவம் ’ எனலாம். ஏனென்றால் கவிஞர்கள் சமுதாயப் போக்கில் மக்களோடு பழகும்பொழுது அவர்களின் எண்ணங்கள் காலச் சூழலுக்கு ஏற்பப் பின்னோக்குப் பார்வையாக வீசும் என்பதில் எந்தவிதமான மாற்றமுமில்லை. கால ஓட்டத்தில் இலக்கியத்திற்காக கவிதைத்துறையில் ஒரு மிகப் பெரிய மாற்றம் ஏற்பட்டதைக் காணலாம். நாகரிகம் வளர வளர மக்கள் சிறு சிறு கூட்டமாக இருந்து பெரிய சமுதாயமாக வாழும் நிலைக்கு உயர்ந்துள்ளனர். கால ஓட்டத்தில் சிறு நாடுகள் பலவும் ஒரு குடும்பத்தின் உறுப்புகள் போல் உலகம் பெருஞ்சமுதாய அமைப்பாக உருக்கொள்ளும். மக்கள் தங்கள் ஆற்றலின் வலிமையும் , சிறப்பையும் நன்குணர்ந்து போராட்டக் களத்தில் இறங்குவர். ...