Thursday, February 16, 2023

உலகத் தாய்மொழியும் அதன் சிறப்பும்

 

முனைவர் பூ.மு.அன்புசிவா

தமிழ்த்துறைத்தலைவர்

ஜேப்பியார் பல்கலைக்கழகம்

ராஜீவ்காந்தி சாலை, சென்னை-600119

பேச: 9842495241.

--------------------------------------------------------------------------------------------------------

 முன்னுரை

"தாய்மொழி கண் போன்றது பிறமொழி கண்ணாடி போன்றது" நமது எண்ணங்களைப் பிறருக்கு வெளிப்படுத்த உதவுவது மொழியே. மொழி ஒரு கருவி. மனிதன் மொழி கொண்டுதான் வாழ்கின்றான். மொழியால்தான் கருத்துப் பரிமாற்றமும் செய்கின்றான்.

ஒரு தாயிடம் இருந்து ஒரு குழந்தை கற்றுகொள்கின்ற மொழியினையே தாய் மொழி என்று அழைக்கலாம் அந்தவகையில் இங்கே வாழ்கின்ற ஒவ்வொரு மனிதர்களுக்கும் தாய்மொழி உணர்வு ரீதியானது.

தாய்மொழியில் சிந்திப்பதே நல்லறிவு என்று உலக அறிஞர்கள் ஆய்வு ரீதியாக இதனை நிரூபிக்கின்றனர் இத்தகைய தாய்மொழியே ஒப்பற்ற பல சிந்தனைகள் உருவாகவும் வழிவகுக்கின்றது.  உலகமெங்கும் ஆறாயிரம் மொழிகள் உள்ளன அவற்றில் ஒரு சில மொழிகளே தாய்மொழியில் கல்வி கற்பிக்கின்ற சிறப்புடையன தாய்மொழியின் பெருமை பேசும் தாய்மொழி தினம் தொடர்பாக இக்கட்டுரையில் காண்போம்.

 பிப்ரவரி-21

ஒவ்வொரு மொழிக்கும் அந்த மொழிக்கே உரிய சிறப்புத் தன்மைகள் உண்டு. ஒவ்வொரு இனக் குழுவிற்கும் அடையாளமாக இருப்பது அவர்களின் தாய்மொழி. தாய்மொழிகளின் சிறப்பையும், அவசியத்தையும் எடுத்துணர்த்த, ஒவ்வொரு வருடமும் பிப்ரவரி 21ம் நாள் உலக தாய்மொழிகள் தினமாகக் கொண்டாடப்படுகின்றது.

 உருவான வரலாறு

கிழக்கு பாக்கிஸ்தான் என்று அழைக்கப்படும் வங்கதேசம் பாக்கிஸ்தானின் கட்டுப்பாட்டில் இருந்த காலகட்டத்தில் ஒரு மொழி சார்ந்த புரட்சி இடம்பெற்றது 1952ல் இது இடம்பெற்றது. இது வங்க தேசத்து இளைஞர்கள் தமது வங்காள மொழியை காக்க பாக்கிஸ்தான் அரசுக்கு எதிராக போராடியிருந்தனர். இதனால் பங்களாதேஷ் என்ற நாடு உருவானது.

 தமிழின் சிறப்பும் தொன்மையும்

இது நமக்கு பேரிழப்பு. இலக்கியமாகட்டும், அன்றாட வாழ்வியலாக இருக்கட்டும், அரசியலாக இருக்கட்டும், அறிவியலாக இருக்கட்டும், துல்லியமாக பேச, எழுத, கேட்டு புரிந்துகொள்ள திறமை உடையவர்களாக இருத்தல் அவசியம். தமிழ் மொழியின் சிறப்பு பற்றி கூற வேண்டுமெனில் ஈழத்து தமிழறிஞர் கா.சிவத்தம்பி, “தமிழின் சிறப்பு அதன் தொன்மையில் இல்லை, அதன் தொடர்ச்சியில் இருக்கிறது," என்பார். ஆகவே, தமிழ் மொழியின் மேன்மை அதன் தொன்மையிலும், தொடர்ச்சியிலும் இருக்கின்றது.

இரண்டாயிரம் ஆண்டு மரபுடையது நம் மொழி, இந்த மரபு உலகத்தில் வெகு சில மொழிகளுக்கு மட்டும்தான் உண்டு. கிரேக்க மொழிக்கு இந்த சிறப்பு உண்டு, ஆனால் தொன்மையான கிரேக்க மொழியின் இலக்கியத்தை இன்றைக்கு அவர்களால் எளிதாக கற்றுக் கொள்ளவோ, புரிந்து கொள்ளவோ முடியாது.

 எமது தாய்மொழி

எமது தாய்மொழியான தமிழ் மொழியானது உலகின் தொன்மையான மொழியாக கீழடி ஆய்வுகளின் பிரகாரம் நிரூபிக்கப்பட்டது. செம்மொழி என்ற பெருமை உடைய மொழியாக உயர்ந்திருப்பது இந்த மொழியை பேசுகின்ற எம் அனைவருக்கும் கிடைத்த பெருமை என்றே கூறலாம்.

நடுவில் அது தன் மரபுத் தொடர்ச்சியினை இழந்து இருந்தது. ஆனால் தமிழில் அறுபடாத தொடர்ச்சி இருக்கின்றது. குறிப்பிடத்தக்க செய்தி என்னவென்றால், இடையில் குறைந்தது 500 - 600 ஆண்டுகள் நாம் அயலார் ஆதிக்கத்தில்தான் வாழ்ந்து இருக்கின்றோம். அப்படி இருந்த போதிலும், நம்முடைய மொழி எந்த விதமான அரசின் துணையும் இல்லாமல் மக்களால் மட்டுமே தொடர்ச்சியாக உயிர்ப்புத்தன்மையுடன் கொண்டுவரப்பட்டுள்ளது. திருக்குறளோ, சங்க இலக்கியங்களோ எதுவாயினும் ஒவ்வொரு தலைமுறையும் , அடுத்த தலைமுறைக்கு இந்த இலக்கியங்களை கொண்டு போய் சேர்க்க வேண்டும் என்ற விழிப்புணர்வோடு செயல்பட்டு இருக்கின்றனர்.

உலகத்தின் பல இடங்களில் இன்று தமிழர்கள் வாழ்ந்து கொண்டிருப்பதனால் தமிழ்மொழியும் உலகமெங்கும் பேசப்பட்டு கொண்டிருக்கின்றது. தமிழ் மொழி என்பது வெறுமனே மொழி அன்றி அது நமது பண்பாடு மற்றும் கலாச்சாரத்தை பிரதிபலிக்கின்ற உணர்வாக விளங்குகின்றது.

 தமிழ் மொழியின் பெருமைகள்

தமிழ் மொழியின் பெருமைகள் பற்றி சொல்வதாக இருந்தால் அது எண்ணற்றவையாகும்.

செந்தமிழ் நாடெனும் போதினிலே இன்ப தேன் வந்து பாயுது காதினிலேஎன்ற வரிகள் மூலம் தமிழ் மொழியை தாய்மொழியாக கொண்ட மக்களின் பெருமையின் உச்சம் புலனாகிறது.

3000 ஆண்டுகளுக்கு முன் தோன்றிய இலக்கிய இலக்கண பெருமைகளை உடையதாகவும் விளங்குகின்றது. எந்த ஒரு காலகட்டத்துக்கும் தன்னை தகவமைத்து கொள்ளும் ஆற்றல் தமிழ் மொழிக்கு இருப்பதனை காணலாம். இதனால் தான் இன்றும் அழியாத மொழியாய் இது விளங்குகின்றது.

 அடையாளம்

    தாய் மொழி என்பது ஒரு இனத்தின் அடையாளமாக பார்க்கப்படுகின்றது. தாய்மொழியை காப்பதற்காக இந்த உலகமெங்கும் பல புரட்சிகள் தோன்றயிருக்கின்றன. மொழி தான் பண்பாடு கலாச்சாரம் போன்ற தனித்துவ இயல்புகளை பிரதிபலிக்கின்றது. ரஸ்யா, கியூபா, ஜப்பான், சீனா, பிரான்ஸ் போன்ற நாடுகளில் இன்றுவரை தாய்மொழியில் தான் கல்வி கற்று வருகின்றனர். அதனுடைய பயன் என்னவெனில் அந்த நாடுகள் சிறப்பான இலக்கிய வெளிப்பாடுகளையும் உலக அளவில் அவற்றின் தனித்துவ அடையாளங்களையும் வெளிப்படுத்துவதை அவதானிக்க முடிகின்றது.

முடிவுரை

v  யாமறிந்த மொழிகளில் தமிழ் போல் இனிதாவதெங்கும் காணேன்என்ற பாரதியின் வரிகளை போல் எம் தாய் மொழியான தமிழ் மொழி சிறப்புற நாம் அதனை பாதுகாத்திடல் வேண்டும்.

v  ஒவ்வொருவருக்கும் தமது தாய் மொழி என்பது மிகவும் அவசியமானதாகும். அதனை ஆர்வத்துடன் கற்கவும் எழுதவும் வேண்டும்.

v  அதன் மூலம் தங்களின் மூல அடையாளத்தை தொலைத்து வருகிறார்கள் என்பதை மறந்துவிடுகிறார்கள். ஒவ்வொருவரும் தங்கள் பிள்ளைகளுக்கு ஆங்கிலம் உள்பட பிறமொழியில் கல்வி கொடுத்தாலும், வீட்டில் தாய்மொழியை கற்றுகொடுக்க வேண்டும். உலக தாய்மொழி தினமான இன்று தமிழ் மொழியை காக்க உறுதிமொழியை ஏற்போம்.

v  சுவாசிக்காமல் மனிதனால் எப்படி வாழ முடியாதோ அது போல் தாய்மொழியை பேச முடியாது போவதும் அப்படியே. எல்லா மொழிகளையும் மதிப்போம் அவர் அவர் தாய்மொழிகளையும் காப்போம்.

Wednesday, February 15, 2023

கவிஞர் அன்புசிவா எழுதிய "காத்திருந்த கனவுகள்" கவிதை நூல் வெளியீட்டு விழா

வேந்திரகுல வேளாளர் நலச் சங்கம் - தாம்பரம் சார்பாக 14. 02.23 செவ்வாய்க் கிழமை மாலை 05.30  மணிக்கு  சென்னை ஜேப்பியார் பல்கலைக்கழகத் தமிழ்த் துறைத்தலைவர் பேராசிரியர் முனைவர் அன்புசிவா எழுதிய 30வது நூலான "காத்திருந்த கனவுகள்" என்ற கவிதை நூல் வெளியீட்டு விழா சென்னை வண்டலூர் மூதறிஞர் தேவ ஆசிர்வாதம் நூலகத்தில்  நடைபெற்றது . விழாவிற்கு சங்கச் செயலாளரும் தமிழ் ஆர்வலருமான மருத்துவர் சு. மதிவாணன் தலைமை தாங்கினார். நூலை சென்னை எஸ்.ஐ.வி.இ.டி.பொருளியியல் துறைத் தலைவர் மற்றும பேராசிரியரும் தமிழ்நாடு அரசு உதவி பெறும் கல்லூரி பேராசிரியர் சங்கச் செயலாளருமான முனைவர் பாலசரவணன் வெளியிட்டார். விழாவில் சங்கத்தலைவர் செல்லத்துரைஇ திருசூலம் கண்ணாயிரம் இ கவிஞர் துரைசாமி வேளச்சேரி சங்கத் தலைவர் கந்தசாமி சங்கத் துணைத்தலைவர் செல்வராஜ் மற்றும் பலர் வாழ்த்துரை வழங்கினர். சங்க மகளிர் அணித் தலைவி சரஸ்வதி செல்வராஜ் நன்றி கூறினார். விழா ஏற்பாடுகளை சங்க நிர்வாகிகளும் சங்க அலுவலக மேலாளர் மார்க்கண்ணும்  சிறப்பாக செய்திருந்தனர்.






கணவன் - மனைவி உறவைவிட உன்னதமான உறவு உண்டா?

கணவனுக்குத் தலைவலி. நெற்றியை அழுத்திப் பிடித்துக் கொண்டு சோபாவில் உட்கார்ந்திருக்கிறான். மனைவி கொஞ்சம் தைலம் எடுத்து வந்து, கணவன் அருகில் அம...