கலித்தொகை காட்டும் ஏறுதழுவல்...
முல்லை நிலமக்களின் வீரவிளையாட்டாக விளங்குவது ஏறுகோள் ( ஆயர் விளையாட்டு ) ஏறு தழுவலாகும் . இவ்விளையாட்டு இன்றும் விளையாடப்பட்டு வருவதைக் காண்கிறோம் . இதற்கு மதுரை அலங்காநல்லூர் குறிப்பிடதக்க ஊராகும் . இவ்வீர விளையாட்டு ஜல்லிக்கட்டு என்றும் , காளை விரட்டு என்றும் , வடமாடு என்றும் , மஞ்சுவிரட்டு என்றும் , எருதுகட்டு என்றும் பல பெயர்களில் அழைக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கதாகும் . தமிழர் திருநாளாம் பொங்கலையொட்டி பல ஊர்களில் இவ்விளையாட்டு நடத்தப்படுகின்றது . இதைக்காண வெளி மாநிலங்களிலிருந்தும் , வெளி நாடுகளிலிருந்தும் ஏராளமானோர் தமிழகத்திற்கு வருகை தருகின்றனர் . வேறு சங்க நூல்களில் காணப்பெறாத ஏறுதழுவலைக் கலித்தொகை மட்டுமே குறிப்பிடுகின்றது . முல்லைக் கலியில் உள்ள பதினேழு பாடல்களில் , முதல் ஏழு பாடல்கள் ஏறுதழுவலைப் பற்றிக் கூறுகின்றன . முல்லை நிலத்தில் வாழ்ந்த செல்வப் பெருங்குடி ஆயர் மக்கள் தங்கள் மந்தையில் காளைக் கன்று ஒன்றைத் தனியே வளர்ப்பார்கள் . இதற்குத் தனியாக போர்ப் பயிற்சி கொடுத்து ஏறுதழுவலுக்குப் ப...