Posts

புதினத்தின் தோற்றமும் வளர்ச்சியும்

  முன்னுரை               உரைநடையில் எழுதப்பட்ட நெடுங்கதையை ஆங்கிலேயர் நாவல் என்பர் . நாவெல்லஸ் என்ற இலத்தின் சொல்லின் சிதைந்த வடிவமே நாவல் என்பதாகும் .   தமிழரும் முதலில் இதை நாவல் என்றே அழைத்தனர் . பிறகு வடமொழிப்பெயரால் நவீனம் என்றும் அழைத்தனர் . பிறகு புதினம் என்று தமிழ்ப்படுத்திக்கொண்டனர் . தமிழ் இலக்கிய மரபில் புதினத்துக்கு என தனித்துவமான இடம் உண்டு அதை விரும்பிப் படித்த , படிக்கும் வாசகர்கள் உண்டு . தமிழ்ப்புதினத்தில் ஏற்பட்ட வளர்ச்சிகளை இக்கட்டுரையின் வழிக் காண்போம் . நாவலின் கட்டமைப்பு               நாவலின் தாயகம் இத்தாலி ஆகும் . கதை சூழ்ச்சி , பாத்திரங்கள் , உரையாடல் என சிறந்த கட்டமைப்புடன் பொழுதுபோக்கிற்காக மட்டுமின்றி சிறந்த அறக்கருத்தையும் உணர்த்துவதே சிறந்த புதினத்தின் கட்டமைப்பாகும் . சிறுகதைக்கும் நாவலுக்குமான வேறுபாடு        ...

வசந்த வாசல் கவிமன்றம்

Image
 

கணவன் - மனைவி உறவைவிட உன்னதமான உறவு உண்டா?

கணவனுக்குத் தலைவலி. நெற்றியை அழுத்திப் பிடித்துக் கொண்டு சோபாவில் உட்கார்ந்திருக்கிறான். மனைவி கொஞ்சம் தைலம் எடுத்து வந்து, கணவன் அருகில் அமர்ந்து இதமாக அவன் நெற்றியில் தடவும்போதே தலைவலி பறத்துவிடுகிறது. அவளுடைய விரல்களின் மென்மையான ஸ்பரிசம் அவனுக்கு சுகமாக இருக்கிறது. மனைவிக்கு ஒருநாள் முடியவில்லை. அவள் குளிப்பதற்காக கணவன் வெந்நீர் போட்டு, அதைக் கொண்டுபோய் குளியலறையில் இறக்கி வைக்கிறான். இந்தப் பேரானந்தத்தில் மனைவிக்கு உடற்சோர்வெல்லாம் பட்டென்று நீங்கிவிடுகிறது. ஒருவர் மீது ஒருவர் காட்டுகின்ற பரிவு; ஒருவரை ஒருவர் சார்ந்திருக்கின்ற ஆத்மார்த்தம்; இணைபிரியாமல் கைகோர்த்து நடக்கின்ற இன்பம்...கணவன் மனைவியைத் தவிர வேறு யாருக்கு இவை வாய்த்துவிட முடியும்! வாழ்க்கை எத்தனை அழகானது என்பதைக் குடும்பம்தான் நமக்குக் காட்டுகிறது. இல்லறம் எத்தனை இன்பமானது என்பதைத் தாம்பத்தியம் நமக்கு உணர்த்துகிறது. முதலில் வாழ்வை ரசிக்கின்ற பண்பு வேண்டும். ஏனெனில், ரசனைதான் நம் வாழ்விற்குச் சுவையூட்டுகிறது. கணவனின் விருப்பமறிந்து ஆசை ஆசையாய் மோர்க்குழம்பு சமைக்கிறாள் மனைவி. கணவன் வீட்டிற்கு வந்ததும் ஆவலாய் உணவு பரிமாற...

வேதாத்திரி வாழ்க்கை வரலாறு

எனது அறிவோடு அறிவாய் உயிரோடு உயிராய்க் கலந்து கொண்டு அன்பு காட்டும் என் நண்பர்கள், மாணவர்கள் பலர் விருப்பப்படி எனது வரலாற்றை யானே எழுதுகிறேன். எனது வரலாற்றை முழுமையாக அறிந்துி கொள்ள வேண்டும் என்ற ஆர்வமுடையோர்கள் உள்ளம் நிறைவு பெற வேண்டுமென்று கருதி என் கதையை யானே எழுதத் தொடங்குகிறேன். எந்தப் பேராற்றலுடைய சக்தியின் அகத்திலே பல கோடி அண்டங்கள் மிதந்து உருண்டு ஓடி இயங்கிப் பேரியக்க மண்டலமாக அமைந்திருக்கிறதோ, அந்த எல்லாம் வல்ல பெரு நிலையை நினைவுகொண்டு எனது வரலாற்றை யானே எழுத முற்படுகிறேன். எல்லா உயிர்களுக்கும் அமைத்தது போன்றே, எனக்கும் யான் பிறக்கும் போதே என் வாழ்நாட்கள் முழுமைக்கும் தேவையானவற்றை எல்லாம் அமைத்து எனது பிறப்போடு இணைத்து வைத்திருக்கும் தெய்வீக ஒழுங்கமைப்பை, அதன் பெருமையை நினைந்து, நினைந்து, கனிந்து, கனிந்து, மகிழ்ந்து, மகிழ்ந்து, என் வரலாற்றை நண்பர்களுக்குக் கூற விழைகிறேன். எந்த மனித சமுதாயம் என்னை உருவாக்கி, இந்த உலகில் பலவிடத்திலும் தோன்றும் பொருட்களை எனது வாழ்வின் வளத்திற்காகத் தந்து என்னை வாழ வைக்கின்றதோ, அந்த அன்புச் சமுதாயத்திற்கு, எனது நன்றியைத் தெரிவித்தும், அதனை உளம் ...

நினைவுகள்… -அன்புசிவா

நான் உன்னை மட்டும் எவ்வளவு  விரும்பினேன் என்பதையே  நீ மறந்தும் விட்டாய்…  நான் செலவிட்ட நேரம்  நான் சொல்லிய கவிதை   நான் முகிழ்ந்த காதல்  நெகிழ்ந்த என் மனம் என  கடந்த காலம்  எதற்கும் இனிப் பொருளில்லை! சம்பிரதாயமாக உன்னை  சந்தித்து இனி யாரோ போல்!  புன்னகைத்து  கைகுலுக்கி  கடக்க மறுக்கிறேன். போகிறது போகட்டும் இனி  உன் அருகில்  நான் இருந்தென்ன… நான் ஒழிந்தென்ன… என்றோ நிகழ்ந்திட்ட   ஓர் அன்பை இன்று மீண்டும்  விளக்கிச் சொல்ல நேரும்  துர்பாக்கியங்கள்  இப்பூமியில்  எவருக்கும்  இனி நிகழ வேண்டாம்.

பாரதியும் வாழ்வியலும்

  முனைவர் பூ . மு . அன்புசிவா தமிழ்த்துறைத்தலைவர் , ஜேப்பியார் பல்கலைக்கழகம் , ராஜீவ்காந்தி சாலை , சென்னை -600119. பேச :98424 95241.   மகாகவி சுப்ரமணிய பாரதி ஒரு பிறவி ஞானி , பாட்டுக்கொரு தலைமகன் என பட்டம் பெற மட்டுமே பிறந்தவர் , தென் தமிழகத்தின் பெருமையான ‌ அடையாளம் , நிச்சயமாக சொல்லலாம் அறிவுச்சூரியன் . ஆனால் வாழும்பொழுது ஒருவனை ஓட ஓட விரட்டி , செத்த பின்னால் சிலை வைத்து வணங்கும் உயர்ந்த அறிவு கொண்ட தமிழ்ச்சமூகத்தில் பிறந்ததுதான் அவன் தவறு , அதில் அவன் தவறு என்ன இருக்கிறது ? 6 வயதில் கவிதை எழுதினார் , நெல்லையில் தான் தமிழைக் கற்றார் , பின்னர் காசியில் கல்வியோடு மொத்த உலகத்தையும் படித்தார் , ஆங்கிலம் , பிரெஞ்ச் , சமஸ்கிருதம் , வங்கம் என பல மொழிகளை படித்ததனால் தான் திமிராகச் சொன்னார் " யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிமையானதை எங்கும் காணோம் ", உண்மைதான் . பல ஊர்களில் தண்ணீர் குடித்தால்தான் சுவையான நீர் எது என்று தெரியும் ,   அது அவருக்கு தெரிந்தது . தமிழைக் கற்றார் தமிழ்க் கவிதை...