Monday, January 22, 2018

கோவை, சங்கரா அறிவியல் மற்றும் வணிகவியல் கல்லுரியில் மே 19,20ல் பன்னாட்டுக் கருத்தரங்கம்.

சங்கரா அறிவியல் மற்றும் வணிகவியல் கல்லுரியின் தமிழ்த்துறையும் திண்டுக்கல் வளர்தமிழ் ஆய்வு மன்றமும் இணைந்து நடத்தும் பன்னாட்டுக் கருத்தரங்கம் எதிர்வரும் மே 2018 ஆம் ஆண்டு  19-05-2018 மற்றும் 20-05-2018 (சனி,ஞாயிறு) ஆகிய இரு நாட்களும் நடத்தப்பட உள்ளன. இக்கருத்தரங்கத்தில் கல்லூரி, பல்கலைக்கழகப் பேராசிரியர்கள், ஆய்வாளர்கள், மற்றும் தமிழ் ஆர்வலர்கள்  ஆகியோர் கட்டுரை வழங்கலாம். தமிழ் இலக்கிய இலக்கணங்கள் மற்றும் அவற்றோடு தொடர்புடைய பிற துறைகள் சார்ந்த வகையில் கட்டுரையின் களமாக அமையலாம். கட்டுரைகள் அனைத்தும் பாமினி எழுத்துருவில் (12புள்ளி அளவில்) ஐந்து பக்கங்களுக்கு மிகாமல் 1.5 இடைவெளியில் அமைய வேண்டும்இதற்குரிய கட்டணம் பேராளர்களுக்கு ரூ.700/- விருந்தினர் கட்டணம் ரூ.300/- கட்டுரைகளை valartamil2k@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கும் அதன் தட்டச்சுப் படிவத்தைக் கேட்பு வரைவோலையோடு இணைத்து பின்வரும் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
முகவரி
செயலர்,
வளர்தமிழ் ஆய்வு மன்றம்
பூங்குன்றன் வளாகம்,
விவேகானந்தா நகர்(விரி),
திண்டுக்கல்-624 001
தொலைபேசி: 0451-2427458.

மேலும் விபரங்களுக்கு
முனைவர் பூ.மு.அன்புசிவா
தமிழ்த்துறைத்தலைவர்
சங்கரா அறிவியல் மற்றும் வணிகவியல் கல்லூரி,
சரவணம்பட்டி, கோவை–641 035.
அலைபேசி: 9843874545, 9842495241.

கணவன் - மனைவி உறவைவிட உன்னதமான உறவு உண்டா?

கணவனுக்குத் தலைவலி. நெற்றியை அழுத்திப் பிடித்துக் கொண்டு சோபாவில் உட்கார்ந்திருக்கிறான். மனைவி கொஞ்சம் தைலம் எடுத்து வந்து, கணவன் அருகில் அம...