Thursday, February 01, 2018

சமுதாய வளர்ச்சிக்கு இன்றைய இளைஞர்களின் பங்கு

முனைவர் பூ.மு.அன்புசிவா
தமிழ்த்துறைத்தலைவர்
சங்கரா அறிவியல் மற்றும் வணிகவியல் கல்லூரி
சரவணம்பட்டி, கோவை-641 035
அலைபேசி: 98438 74545.
சமுதாயத்தில் இளைஞர்கள் 
இளைய சமுதாயம்தான் நாட்டின் முதுகெலும்பு என்பதற்கேற்ப இன்றைய இளைஞர்கள் தங்களது சக்தியை நல் வழியில் பயன்படுத்தி, நாட்டின் வளர்ச்சியில் பங்கு பெற வேண்டும். 
பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை கட்டுபாட்டுடன் வளர்த்தால் நல்ல ஒரு இளைஞர் சமுதாயம் உருவாகும். குழந்தை பருவத்திலே அவர்களை நல்வழிப்படுத்தி வருதலில் பெற்றோர்களின் பங்கு அதிகம் உள்ளது. இளைஞர் சமுதாயத்தை நல்ல முறையில் 'டியூன்” செய்தால், இந்தியா வல்லரசு நாடாக மாறும் என்பதில் சந்தேகமே இல்லை. 
இன்றைய இளைஞர் சமுதாயத்தில் இன்றைய இளைஞர்களிடம் சமூக அக்கறை இல்லை. அவர்களது வாழ்க்கையே வாட்ஸ் ஆப், பேஸ் புக் என்றாகி விட்டது. வரதட்சணை கொடுமை போன்ற செயல்கள் தான் அடிக்கடி நடக்கின்றன. இவற்றின் பின்னால் இளைஞர் சமுதாயம் உள்ளது. ஒருவர் தப்பு செய்யும் போது ஒட்டு மொத்த இளைஞர் சமுதாயத்தை இது பாதிக்கிறது. இளைமையிலே குடி பழக்கத்திற்கு அடிமை ஆவதால் அவர்களால் சமுதாயம் சார்ந்த அக்கறைகளில் ஈடுபட முடியாமல் போகிறது. இதை ஒவ்வொரு இளைஞர்களும் ஒரு நிமிடம் சிந்தித்து பார்த்தாலே போதும், அவர்களின் வாழ்க்கை அவர்கள் கையில் என்பது புரியும்.
தாழ்வு மனப்பான்மையால்
தாழ்வு மனப்பான்மை இளைஞர்களை சமுதாய அக்கறையில் ஈடுபட முடியாமல் செய்கிறது. படிக்கிற காலத்தில் பெற்றோர், ஆசிரியர்கள் திட்டும் போது தாழ்வு மனப்பான்மை ஏற்படுகிறது. குடும்ப பொருளாதார நிலைமையால், அவர்களது தோற்றம், நடை, உடை போன்ற பல விஷயங்களில் ஒவ்வொரு இளைஞனும் தாழ்வு மனப்பான்மையால் சுருங்கி போகிறான். தாழ்வு மனப்பான்மை போன்ற காரணிகளை தவிர்த்து, இளைஞர் சமுதாயத்தை சமூக அக்கறை கொண்டவனாக மாற்ற வேண்டும்.
சமுதாய அக்கறை அதிகமே 
இன்றைய இளைஞர்களிடம் சமுதாய அக்கறை அதிகம் உள்ளது. பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் போதே என்.எஸ்.எஸ்., என்.சி.சி., களில் சேர்ந்து சமுதாய பணிகளில் ஈடுபடுத்தப்படுகிறான். இதன் மூலம் அவன் மனதில் சமூக அக்கறை ஏற்படுகிறது. கல்லூரி காலத்தில் கிராமங்களுக்கு சென்று விழிப்புணர்வு பிரசாரம், ஆறு, கண்மாய் போன்றவைகளில் தூர் வாரும் பணிகளில் ஈடுபட்டு சமுதாய அக்கறையில் பங்கு பெறுகிறான். 
ஜாதி, மத பேதமின்றி உதவி 

  • இன்றைய இளைஞர் சமுதாயத்தினர் அடுத்தவர்களுக்கு உதவும் மனப்பான்மையை அதிகம் கொண்டுள்ளனர். 
  • நூற்றுக்கு 50 சதவீதம் உதவும் மனப்பான்மை இருக்கும் என்றால், மீதமுள்ள 50 சதவீதம் உதவா எண்ணம் இருந்தால் யாராது சொல் கேட்டு உதவி செய்யாமல் இருப்பர். 
  • சென்னையில் நடந்த இயற்கை பேரிடர் நேரத்தில் இளைஞர்கள் சமுதாயம் தானாக முன்வந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு ஜாதி, மத பேதமின்றி உதவி செய்துள்ளதை குறிப்பிடலாம். 
நாடு முன்னேற துடிப்பு வேண்டும் 
சமுகத்தில் என்ன நடக்கிறது, நாம் எப்படி சூழ்நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்று தெரியாமல் இன்றைய இளைஞர் சமுதாயம் உள்ளது. நாட்டு நடப்புகளை ஊடகங்கள், நாளிதழ்களை பார்த்து அப்டேட் செய்து கொள்ள வேண்டும். சமுகத்தில் என்ன நடக்கிறது என்பது தெரியாமல் உள்ளனர்.
சமூகத்தில் தன்னை ஈடுபடுத்தி கொண்டு அதை முன்னேற்று வதற்கான வழிமுறைகளை தேட வேண்டும். நாடு முன்னேற வேண்டுமானால், இளைஞர் சமுதாயத்தினர் துடிப்புடன் செயல்பட வேண்டும்.
ரத்த தானம் செய்வதில் ஆர்வம்
இன்றைய இளைஞர்கள் சமுதாய அக்கறையில் தன்னை ஈடுபடுத்தி கொண்டுள்ளனர். உயிர் காப்பு பணிகளில் அதிகம் ஈடுபடுகின்றனர். விபத்து காலங்களில் இளைஞர்கள் ரத்த தானம் செய்கின்றனர். கல்லூரியில் படிக்கும் காலத்தில் ரத்த தானம் செய்வதில் ஆர்வம் காட்டி வந்துள்ளனர். தாய் நாட்டின் மீது உள்ள அக்கறையால் தான் ஆண்கள், பெண்கள் அனைவரும் ராணுவத்தில் சேர்ந்து பணியாற்றுகின்றனர்.
உறுப்பு தானங்களில் இளைஞர்கள் 
உடல் உறுப்பு தானங்களில் இளைஞர்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். பெரும் விபத்து நடந்து உயிர் இழந்த இளைஞனின் உடல் பாகங்கள் மற்றவர்களுக்கு பொருத்தப் பட்டுள்ளதாக செய்திகளில் அடிக்கடி பார்க்கிறோம். கல்லூரிகளில் சமூக நற்பணி மன்றங்கள் அமைத்து பொதுமக்களுக்கு சமுதாய் தொண்டாற்றி வருகின்றனர். 
சாதிக்கும் உணர்வை விதைப்போம் 
இன்ளைய இளைஞர்களிடத்தில் ஜாதிய உணர்வு அதிகம் உள்ளது. பள்ளி, கல்லூரிகள் மூலம் இது ஓரளவு தடுக்கப்படுகிறது என்றாலும், இதுஒரு 'ஸ்லோ பாயிசன்' மாதிரி இளைஞர்களிடத்தில் பரவி மெதுவாக சமுதாயத்தை அழிக்க கூடியது. நம்முடைய துரதிஸ்டம், இதை வளர்த்து விடத்தான் ஆட்கள் இருக்கிறார்களே தவிர, இதை ஒழித்து நல்ல இளைஞர் சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் யாருக்கும் இல்லை. இவற்றையெல்லம் கடந்து தான் இளைஞர் சமுதாயம் நல்ல முறையில் வந்து கொண்டிருக்கிறது. சாதியை சான்றிதழில் மட்டும் வைத்து விட்டு, சாதிக்கும் உணர்வை மட்டும் மனதில் விதைப்போம். இளைஞர்களே டாக்டர், ஆசிரியர், இன்ஜினியர் என எது வேண்மானாலும் ஆகுங்கள். மனிதனாய் இருங்கள்.
நம்நாட்டின் தரத்தை உயர்த்த வேண்டும் 
இன்றைய இளைஞர்களிடம் சாதிக்கும் உணர்வு அதிகமாக உள்ளது. படித்துமுடித்த உடன் வெளிநாட்டிற்கு வேலைக்கு சென்று விடுகின்றனர். தாய் நாட்டில் வேலை பார்த்து நம்நாட்டின் தரத்தை உயர்த்த வேண்டும். சமூக அக்கறை என்பது முதலில் தேர்தல் காலங்களில் தங்கள் வாக்குரிமையை பயன்படுத்துவது தான். இதை பெரும்பாலான இளைஞர்கள் செய்வது இல்லை. தானும் வாக்களித்து, மற்றவர்களையும் வாக்களிக்க செய்வது தான் உண்மையான சமூக அக்கறை. இதை ஒவ்வொரு இளைஞனும் செய்ய வேண்டும்.
மாணவர்களின் முன்னேற்றத்தில் ஓர் ஆசிரியரின் பங்கு
  • ஆசிரியர் தொழில் புனிதமானது. மாணவர்களின் அறிவுக் கண்களைத் திறப்பவர்கள் ஆசிரியர்கள் மாணவர்களின் கல்வி உணர்வுக்கும் ஊக்கத்துக்கும் முக்கிய தூண்டுகோலாக இருப்பவர்கள் ஆசிரியர்களே. 
  • “எழுத்தறிவித்தவன் இறைவனாகும்" என்பது அதிவீர இராம பாண்டியரின் வெற்றி வேற்கை ஆகும். அறிவே தெய்வம் என்பர் அறிஞர் பெருமக்கள். அறிவைப் போதிக்கும் ஆசானும் இங்கு தெய்வமாக கருதப்படுகிறான்.
  • மாணவர்கள் தொடர்ந்து படித்து முன்னேற வேண்டுமானால்ஆசிரியர்கள் தங்களிடம் பயிலும் மாணவர்களின் கல்வியில் அக்கறைக் காட்ட வேண்டியது அவசியம் ஆகும். பள்ளியில் கல்வியைப் பாதியில் விடுகின்ற மாணவர்களின் எண்ணிக்கையைக் குறைப்பதற்கு ஆசிரியர்கள் மாணவர்களின் படிப்புக்கு ஆக்கமும், ஊக்கமும் கொடுக்க வேண்டும். இந்திய சமுதாயம் ஏழைச் சமுதாயம் என்பதை மனதில் நிறுத்தி, ஆசிரியர்கள் மொட்டாக இருக்கும் மாணவச் செல்வங்களுக்கு நிறைவான கல்விச் செல்வத்தைக் கொடுத்து மணம் வீசும் மலராக திகழச் செய்ய வேண்டும். ஒவ்வொரு தமிழாசிரியருக்கும் மொழிப்பற்று, இனப்பற்று, சமுதாயப் பற்று இருக்க வேண்டியது அவசியமாகும்.

  • கண்ணுடையர் என்பவர் கற்றோர்,
  • முகத்திரண்டு புண்ணுடையர் கல்லாதவர்
என்ற குறளுக்கு ஏற்ப பகுத்தறிவையும், அறிவு சிந்தனையையும் சமூகத்திற்கு உருவாக்கிட ஆசிரியர் பணி மிகப்பெரிய பங்கை வகிக்கின்றது. அறிவுக் கண்களைத் திறந்து விடும் கல்விப் பணி மிக முக்கியமானதாகும். அந்த உன்னதப் பணியில் ஈடுபட்டிருக்கும் ஆசிரியர்களைச் சமூகம் பெருமளவில் நம்பியிருக்கிறது. 
  • எதிர்காலத்தில் பல சாதனைகளைப் படைக்கவிருக்கும் மாணவர்களின் கல்வி அறிவு எந்த அளவுக்கு முக்கியம் என்பது அனைவரும் அறிந்த எனவே, ஆசிரியர்கள் மாணவர்களின் பிரச்சினைகளைப் புரிந்து கொண்டு அன்பு கலந்த மனித நேயத்தோடு கல்வி கற்பிக்க வேண்டும். எத்தனை ஆண்டுகள் வேலை செய்தோம் என்பது முக்கியமல்ல. மாறாக எத்தனை மாணவர்களை முன்னேற்றியுள்ளோம் என்பதே முக்கியம். தன்னிடம் கற்ற மாணவன் ஒருவன் உயர்ந்த நிலையில் வாழ்கிறான் என்று கேள்விப்படும்போது ஏற்படும் மகிழ்ச்சிக்கு எல்லை இல்லை. அந்த நல்ல வார்த்தைகளை செவிமடுப்பது ஒன்றே ஒரு நல்ல ஆசிரியருக்கு கிடைக்கும் அரிய பரிசாகும்.  
  • “மாதா, பிதா, குரு, தெய்வம்” என்பது அமுதவாக்காகும். தெய்வத்திற்குச் சமமாக கருதப்படும் ஆசிரியர்கள் பெருமைக்குரியவர்களே! எதிர்கால சமுதாயத்தை உருவாக்கும் சிற்பிக்கள் ஆசிரியர்கள் என்றால் அதற்கு மாற்று கருத்து இருக்க முடியாது. 
  • இன்றைய கல்வி உலகம் பல்வேறு மாற்றங்களுக்கு உட்பட்டு, அதற்கேற்ப அதிநவீன முறையில் கல்விக்கூடங்களும் உருவாகி வருகின்றன. கல்வித் துறையிலும் போதனா முறையிலும் பல்வேறு புதிய நவீன உத்திகள் முறைகள் கையாளப்படுகின்றன. இருந்தபோதும் ஆசிரியரின் பங்கும் இன்னும் குறிப்பிட்டு கூறுகிற அளவில் இருப்பதை யாராலும் மறுக்க இயலாது. 
  • தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள் மிகக்குறைந்த கற்றல் கற்பித்தல் வசதிகளோடு தமிழ்ப்பள்ளி மாணவர்கள் முன்னேற்றத்தில் அக்கறை காட்டுகிறார்கள். அரசாங்கமும், பெற்றோர்களும் முழு ஒத்துழைப்பை வழங்கினால், தமிழ்ப்பள்ளி மாணவர்கள் மற்ற இன பள்ளி மாணவர்களுக்கு இணையாக விளங்குவார்கள் என்பது முற்றிலும் உண்மையாகும். 
  • தேர்வில் வெற்றிபெறவும் தலைசிறந்த மாணவனை உருவாக்குவதற்கும் ஆசிரியர்களே தங்களது பொன்னான காலத்தை மாணவர்களுக்கு அர்ப்பணிக்கிறார்கள். மாணவர்களின் பிரச்சினைகளைத் தெளிவுடன் சிந்தித்து, கவனத்தைப் படிப்பின் மீது செலுத்துவதற்கு உதவுகிறார்கள் ஆசிரியர்கள். கல்வி அறிவைத் தவிர்த்து மாணவர்களுக்கு பொது அறிவையும் சமுதாய சிந்தனையையும் உட்புகுத்துகின்றனர். இதன் மூலம் மாணவர்கள் உலக விஷயங்களையும் அறிந்துக் கொள்கிறார்கள். தம்மிடம் பயிலும் மாணவர்கள் நல்வாழ்வுக்குப் பாடாற்றக் கூடிய ஆசிரியர்கள் தம் மாணவர்கள் வாழ்வு நாசமாவதை விரும்ப மாட்டார்கள். 
  • ஆசிரியர் பணி போற்றுதலுக்குரியது. சில ஆசிரியர்கள் நோய் கண்ட காலங்களிலும் பரிவோடும், பள்ளி மாணவர்கள் மீது அன்பும் பாசமும் காட்டி சிறப்பாகப் போதிக்கின்றனர். இதனை மனதார உணர்ந்து, மதித்துப் போற்றுவது முகாமை கடமையாகும். ஆசிரியர்களை மதித்துப் போற்றியவர் தாழ்ந்த தில்லை, மிதித்துத் தூற்றியவர் வாழ்ந்த தில்லை". உலக உண்மையை அறிந்து கொள்ள இயலாதவனாய் இருந்த மனிதனை உலக வளர்ச்சிக்கு ஏற்ப அவனது எண்ணத்தை தட்டியெழுப்பியவர் ஆசிரியரே! கற்றவனுக்குச் சிறப்பு சேர்க்கும் ஆசிரியர் துறை போற்றுதலுக்கு உரியது.

“மன்னும் மாசறக் கற்றோனும் சீர்தூக்கின்
மன்னனின் கற்றோன் சிறப்புடையோன்"
“மன்னனுக்கு தன் தேசமல்லால் சிறப்பில்லை
கற்றோனுக்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு”.
வருங்கால இந்தியாவில் மாணவர் பங்கு 
  • இந்தியாவின் வளர்ச்சியே மாணவர்களின் கையில்தான். மான் *அவன் + மாணவன். மாண் என்றால் பெருமை. அதனால்தான் மாண்ூஅவர்கள் என்று இந்தப் பருவத்தினரை ஊக்கப்படுத்தி வருகின்றாகள். இப்பருவத்தினரின் மீது ஊக்கம் செலுத்தி வருவதால் மாண்ூஅவர்கள் பங்கு வருங்கால இந்தியாவின் வளமை அடங்கி இருக்கிறது. 
  • பெருமைமிக்க திறமைகள் இப்பருவத்தில் தான் கிடைக்கும். மண்ணைக் குழைத்தால்தான் பாண்டம் வரும். மாணவர்களை செம்மைப்படுத்தினால்தான் இந்தியா வளரும். இந்தியாவின் ஆக்கப் பூர்வ சக்தியே இந்த மாணவர்கள் தான். மாணவர்களின் வளர்ச்சியில்தான் இந்தியாவின் வளர்ச்சியும் அடங்கி இருக்கிறது. 
  • தேசியத் தலைவர்கள், மாணவர் பருவத்திலேயே இந்தியாவிற்கு ஆற்றவேண்டிய பங்குகளை செய்ததினால்தான் இன்றும் அவர்கள் சரித்திரத்தில் நிலைத்து இருக்கிறாகள். அன்றைய காலக் கட்டத்தில் சுதந்திரம் தான் பிறப்புரிமையாக கருதப்பட்டது. இன்றையக் காலக்கட்டத்தில் மேலும் ஒரு பாரம் மாணவர் சமுதாயத்தின் மீது விழுந்துள்ளது. அதுதான் தீவிரவாத சக்திகளுக்கு எதிரான போராட்டம். வேலிப் போட்டால்தான் விலங்குகள் பயிரினை மேயாது. இந்தியாவின் வேலிகளாக மாணவர்கள் இருந்தால்தான் தீவிரவாதங்கள் தலைத் தூக்காது. காந்தி தேசத்தில் கோட்சேக்களை வளரவிடக்கூடாது. அவர்களை அழிப்பதில் பெரும்பங்கு மாணவர்களுக்கு இருக்கிறது என்பதை இன்றைய தருணத்தில் மாணவர்கள் முழுமையாக உணரவேண்டும். 
  • மாணவர்களின் சேவைகளில்தான் இந்தியாவின் தேவைகள் எதிர்ப் பார்க்கப்படுகிறது. இன்றையக் காலக் கட்டத்தில் இந்தியாவை அச்சுறுத்தும் தீவிரவாதங்களை ஒடுக்குவதற்கு மாணவர் சமுதாயம் பல நல்ல யுக்திகளை கையாள வேண்டும். இந்த இந்திய மண் எதிரியையும் வாழ வைக்கின்ற கருணை மண். அதனால்தான் இந்த மண்ணில் மட்டும் மனித இனத்திற்கு எதிராக மரண தண்டனைகள் மறுக்கப்படுகின்றன. எவ்வளவு கொடியவனாக இருந்தாலும் சிறைவாசத்தின் மூலம் அகிம்சை வழியில் அவர்களை திருத்தக்கூடிய கண்ணியம் இந்த மண்ணிற்கு உண்டு. கண்ணியத்தைக் கடைப் பிடிக்கக்கூடிய சட்டத் திட்டங்களைப் பின்பற்றக் கூடிய மாணவ சமுதாயம் உருவாக வேண்டும். (அல்லது) உருவாக்கவேண்டும். 
  • ஒளிதரும் நெருப்பாக இருக்க வேண்டுமே தவிர ஒழிக்கும் நெருப்பாக மாணவ சமுதாயம் மாறக் கூடாது. இதற்க்கு சிறந்த எடுத்துக் காட்டாக நமது இந்திய ஜனாதிபதியும் அணு விஞ்ஞானியுமான டாக்டர் ஏ.பி.ஜெ. அப்துல்கலாம் போன்ற மாணவர்கள் சமுதாயத்திற்குத் தேவை. கற்றக் கல்வியால் இந்தியாவிற்கு ஆற்றக் கூடிய கடமைகளையும் கற்று வரக்கூடிய மாணவர் சமுதாயம் தேவை. 
  • புயல் வீசினால் படகை செலுத்த நினைப்பது தவறு. தீய சக்திகளை தீய சக்திகளால் அழிக்க நினைப்பது தவறு. புயலைப் போன்ற தீய சக்திகளை பொறுமையோடு யோசித்து களைவதற்கு தேவையான காரியங்களை உருவாக்க வேண்டும். 
  • படிக்கின்றப் பருவத்திலேயே இடையூறு வந்தால்தான் சிறந்த சிந்தனை வளரும். ஈர மண்ணில்தான் பூக்கள் அழகைக் கொட்டும். மாணவப் பருவத்தில்தான் மனதைக் கட்டுப் படுத்த முடியும். அதற்கான பயிற்ச்சிகள் மாணவர்கள் மேற்கொள்ள வேண்டும். அப்படிப்பட்டப் பயிற்சிப் பெற்ற மாணவர் சமுதாயத்தின் மூலம் இந்தியாவின் தேவைகள் எதிர்ப் பார்க்கப்படுகின்றன. வருங்கால இந்தியாவின் மாணவர் பங்கு இன்னொரு கால சரித்திர சுவடாகும்.

சமூக சேவையில் இளைஞர்களின் பங்கு! 
  • இன்றைய உலகம் அதீத வளர்ச்சியை நோக்கி சென்றுக் கொண்டிருக்கின்றது என்றால் அதில் இளைஞர்களின் பங்கு மிகப் பெரியதாகும். காரணம் எதையும் செய்து முடிக்க வேண்டும், சாதிக்க வேண்டும் என்ற துடிப்பும் துணிவும் ஒரு இளைஞனிடம் இருப்பது தான். எனவே ஒரு சமூகத்தை வளர்ச்சி பாதையில் இழுத்து செல்ல வேண்டுமென்றால் அது அந்த சமூகத்தின் இளைஞர்கள் கையில்தான் இருக்கின்றது. அப்படிபட்ட இளைஞர்களை உருவாக்குவது இந்த சமூகத்தின் கடமையாகும்.
  • ஆனால் நமது சமூகத்தில் இன்றைய இளைஞர்களின் போக்கு மிகவும் கவலையளிப்பதாகவே உள்ளது. இதற்கு முக்கிய காரணம் அவர்களிடையே உண்மையான இஸ்லாமிய அறிவும் தேடலும் அற்றுப்போனமையாகும். நமது இளமைப்பருவத்தை வீணான கேளிக்கைகளிலும் அர்த்தமற்ற செயற்பாடுகளிலும் பயனற்ற பொழுதுபோக்குகளிலும் செலவிடுகின்றனர்.
  • இன்று சில சிந்தனை உள்ள இளைஞர்களும் படித்து பட்டம் பெற்று கைநிரம்ப சம்பாதித்து வாழ்க்ககையில் செட்டிலாகி விடவேண்டும் என்ற எண்ணத்தில் வாழ்ந்துக் கொண்டிருக்கின்றனர். காரணம் அவர்களை வளர்க்கும் பெற்றேர்களும் நல்ல படித்து வெளிநாட்டிற்கு சென்று சம்பாதிக்க வேண்டும் என்ற சிந்தனையை படிக்கும் பருவத்திலேயே புகுத்தி விடுகின்றனர்.
  • இந்த சமூகத்தின் மீது அல்லாஹ்வின் தூதர் நபி (ஸல்) அவர்களும் ஸஹாபாக்களும் எந்த அளவு அக்கறை உள்ளவர்களாக இருந்தார்கள் அந்த உணர்வு நம்மிடம் உள்ளதா? என்பதை இன்றைய இளைஞர்கள் சிந்தித்து பார்க்க வேண்டும். உண்மையான சமூக அக்கறை என்பது ஆபத்திலிருந்து மக்களை காப்பாற்றுவது தான் இதை தான் நபி (ஸல்) அவர்கள் செய்தார்கள்.
  • என்னுடைய நிலையும் மக்களின் நிலையும் ஒரு மனிதரின் நிலைக்கு ஒத்திருக்கிறது. அவர் தீ மூட்டினார். அவரைச் சுற்றிலும் அது ஒளிவீசியபோது விட்டில் பூச்சிகளும் நெருப்பில் விழும் இதரப் பூச்சிகளும் அந்தத் தீயில் விழலாயின. அந்த மனிதரோ அவற்றை (தீயில் விழாமல்) தடுத்துக் கொண்டிருந்தார். (ஆனால்) அவை அவரையும் மீறி தீயில் விழுகின்றன. (இவ்வாறுதான்) நரகத்(தில் விழுவதிலிருந்து (உங்களைத்) தடுக்க உங்கள் இடுப்புகளை நான் பிடித்துக் கொண்டிருக்கிறேன். (ஆனால்) நீங்களோ (என்னையும் மீறி) நரகத்தில் நுழைந்து கொண்டிருக்கிறீர்கள்.'என்று கூறினார்கள்.  
  • நபி(ஸல்) அவர்கள் மக்களிலேயே அழகானவர்களாகவும் மக்களிலேயே வீரமிக்கவர்களாகவும் மக்களிலேயே தாராள மனமுடையவர்களாகவும் இருந்தார்கள். (ஒரு முறை மதீனாவின் மீது பகைவர்கள் படையெடுத்து வருகிறார்கள் என்று வதந்தி பரவவே) மதீனாவாசிகள் பீதிக்குள்ளானார்கள்.
  • அப்போது அவர்களை நபி(ஸல்) அவர்கள் முந்திச் சென்று குதிரையில் ஏறி (மக்களின் அச்சத்தைப் போக்கும் வகையில் எதிரியை எதிர்கொள்ளப்) புறப்பட்டார்கள்; மேலும் 'இந்தக் குதிரையைத் தங்கு தடையின்றி வேகமாக ஓடக் கூடியதாகக் கண்டேன்' என்று அனஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள். நூல்:புகாரி
  • சமூக சேவைகளிலேயே சிறந்தது மக்களை நரகிலிருந்து காப்பற்றி சுவனத்திற்கு அழைத்தும் செல்லும் பணியாகும். இந்த சேவைக்காக தான் அல்லாஹ்வின் தூதர் நபி (ஸல்) அவர்கள் தங்களின் இருபத்தி மூன்று ஆண்டுகளின் வாழ்வை தியாகம் செய்தார்கள்.
  • இன்றைய சமூக சேவை இரண்டு விசயங்கள் மூலம் நடைபெற வேண்டும். ஒன்று உடல் உழைப்பின் மூலம் செய்யபவை மற்றொன்று செல்வத்தின் மூலம் செய்யபவை ஆகும்.
  • இன்று பலர் தங்களுக்கு உடல் வலிமை இருந்தும் செழிப்பான செல்வம் இருந்தும் சமூகத்தின் மீது கொஞ்சம் கூட சிந்தனை இல்லாமல் அலட்சியமாக இருக்கின்றார்கள். ஆனால் நபி (ஸல்) அவர்களின் பாசறையில் வார்த்தெடுக்கப்பட்ட நபித்தோழர்களில் ஒருவர் இந்த சமூகத்தில் அதிக இரக்கமுள்ளவர் அபூபக்கர் சித்தீக் (ரலி) அவர்கள் ஆவார். கஷ்டப்படுபவரின் கஷ்டங்களை களைந்தவர்.பாதிக்கப்பட்டவரின் உரிமைகளை வாங்கி கொடுத்தார்கள்.எவருக்கும் தெரியாமல் தன் குடும்பத்தின் உறுப்பினர்களில் ஒருவருக்கு அவரின் குடும்பத்தின் வாழ்க்கை வசதியை செய்து கொடுத்துக் கொண்டு இருக்கின்றார்.
  • தனது மகள் ஆயிஷா (ரலி) அவர்களை பற்றி தவறான கருத்தை கூறியதற்காக இனிமேல் உனக்கு நான் செய்து கொண்டிருந்த உதவியை நிறுத்தி விடுவேன் என்று கூறிய போது அதை மறுத்து இறைவன் நீங்கள் மன்னியுங்கள் இறைவன் உங்களை மன்னிக்க வேண்டாமா? என்ற இறைசெய்தி வந்த உடன் செய்த சத்தியத்தை முறித்து விட்டு தொடர்ந்து உதவிகளை செய்து கொண்டிருந்தார்கள்.
  • இன்னும் உங்களில் (இறைவனின்) கொடை அருளப் பெற்றவர்களும் தக்க வசதி உடையவர்களும் உறவினர்களுக்கும் ஏழைகளுக்கும் (தம்மிடங்களை விட்டு) அல்லாஹ்வின் பாதையில் ஹிஜ்ரத் செய்தவர்களுக்கும் (எதுவும்) கொடுக்க முடியாது என்று சத்தியம் செய்ய வேண்டாம்; (அவர்கள் தவறு செய்திருப்பின்) அதை மன்னித்து (அதைப்) பொருட்படுத்தாமல் இருக்கவும்; அல்லாஹ் உங்களை மன்னிக்க வேண்டும் என்று நீங்கள் விரும்ப மாட்டீர்களா? மேலும் அல்லாஹ் (பிழை பொறுப்பவன்) மிக மன்னிப்பவன்; அன்புமிக்கவன். அல்குர் ஆன் 24:22.
  • நமது நாட்டின் தேச தந்தை காந்தியடிகள் இந்தியாவின் இறையான்மை உள்ள சிறந்த ஆட்சி அமையவேண்டு மென்றால் உமருடைய ஆட்சியை போல் அமைய வேண்டும் என்று கூறினாரே அந்த உமர் (ரலி) அவர்கள் இந்த சமூகத்தின் மீது வைத்திருந்து அவரின் உணர்வுள்ள சிந்தனைகளை எந்த முஸ்லிமினாலும் மறுந்து விடமுடியாது.ஒட்டு மொத்த மக்களுக்கும் பாதுகாப்பு அரனாகவும் மக்களின் கஷ்டங்களை தனக்கு வந்த ஒரு கஷ்டத்தை போன்று செயல் பட்ட வல்லவராக திகழ்ந்தார். அந்த உமர் மதீனாவின் ஆட்சியாளராக இருந்தபோதும் அதற்கு முன்பும் மக்களின் பாதுகாப்பு கவசமாகவே இருந்துள்ளார்.


Wednesday, January 31, 2018

முல்லைத் திணையில் மருதநில மக்களின் வாழ்வியல் கூறுகள்

 முனைவர் பூ.மு.அன்புசிவா
தமிழ்த்துறைத்தலைவர்
சங்கரா அறிவியல் மற்றும் வணிகவியல் கல்லூரி
சரவணம்பட்டி, கோவை–641 035
அலைபேசி: 98438 74545.

பண்டைத்தமிழர் வாழ்ந்த நிலம் குறிஞ்சி, முல்லை மருதம், நெய்தல், பாலை என ஐவகையாகப் பகுக்கப்பட்டன என்பதைத் தொல்காப்பியப் பொருள்திகாரம் வழி அறியமுடிகின்றன. தொல்காப்பியர் உலகில் உள்ள காட்சிப் பொருள், கருத்துப்பொருள் இரண்டையும் முதற்பொருள், கருப்பொருள், உரிப்பொருள் என மூன்று வகைகளாகப் பகுத்தார். இப்பகுப்பின் அடிப்படையில் மேற்குறித்த ஐவகை நிலங்களில் வாழும் மக்களின் வாழ்க்கை முறைகளை வகுத்தார். இந்த ஐவகை நிலங்களிலும் இயற்கைப் பொருள்கள், தொழில்கள், பழக்க வழக்கங்கள் வெள்வேறாக இருந்தன. இதனால் சங்க இலக்கிய அகப்பாடல்களும் குறிஞ்சி, முல்லை, மருதம் நெய்தல், பாலை என ஐந்திணைப்பாடல்களாக அமைந்தன. அவ்வைந்திணைப்பாடல்களுள் முல்லைத்திணைப் பாடல்கள் புலப்படுத்தும் நிலஞ்சார்ந்த மக்களின் வாழ்வியல் பண்பாடு இக்கட்டுரையில் ஆராயப்படுகின்றன.
முல்லையும் – குடும்ப அரசும்
ஐவகை நிலங்களுள் முல்லை நிலமே குடும்பம், அரசு தோற்றங்களுக்கு நிலைக்களனாக விளங்கியது என்று அறிஞர்கள் கருத்துரைக்கின்றார். ஆநிரைகளைப் பேணிக்காத்து, அவற்றினால் பயன்பல பெற்று வாழ முனைந்த தனியுடமைச் சமுதாயமாக முல்லைநிலம் அமைந்திருக்க வேண்டும். ஆதிகால மக்களின் நாகரிக நிலைக்களமாக முல்லைநிலம் அமைந்தது. அப்பொழுது அவர்களுடைய உடமையாக ஆநிரைகள் போற்றப்பட்டன. தனியுடமை தோன்றவே, அங்குத் தலைமைப்பதவியும், அதனை பிடுத்துச்செல்ல வாரிசுரிமையும் தோன்றலாயின. இந்த வாரிசுரிமையை நிலைநாட்ட ஒருவனுக்கு ஒருத்தி என்ற உறவை மேற்கொண்டு வாழவேண்டும் என்ற எண்ணமும், அதில் தவறு ஏதும் நிகழாமல் தடுப்பதற்காகக் ‘கற்பு’ என்னும் ஒழுக்கமும் உருவாயிற்று. சமுதாயத்தில் இத்தகைய நெறி முறைகள் தோன்றக் காரணமாய் அமைந்த நிலம் முல்லை நிலமாகும்” என்று சசிவல்லி விளக்குகின்றார்.
முல்லை நிலமே அரசு தோன்றுவதற்கு அடிப்படையாக அமைந்தது என்பதை ந.சி.கந்தையா “முல்லைநிலத்தில் மிகப் பல ஆடுமாடுகளை வைத்திருக்கும் ஒரு குடும்பத்தவரின் தந்தை செல்வத்தால் அடையக் கூடிய எல்லா முதன்மைகளையும் பெற்றான். நிலங்களைச் சிறு சிறு கூறுகளாகப் பிரித்தலினால். ஆடுமாடுகளை மேய்ப்பதற்குரிய வாய்ப்புகள் குன்றும் ஆகவே, பல குடும்பங்கள் ஒன்று சேர்ந்து வாழ்ந்தன. இவ்வகையில் பல குடும்பங்களுக்கு ஒருவன் தலைவன் ஆனான். ஆதியில் அரசன் தோன்றுவதற்கு இம்முறையே காரணமாக அமைந்தது. இடையனைக் குறிக்கும் ‘கோன்’ என்னும் சொல் அரசனைக் குறித்தது. மந்தைகளை மேய்க்கும் இடையனது கோலே அரசனுடைய செங்கோலாயிற்று.” என்று தன்னுடைய ‘தமிழர் சரித்திரம்’ என்ற நூலில் விளக்கமளிக்கின்றார்.
முல்லை-நிலம்-பொழுது
ஐவகை நிலங்களுள் காடும் காடு சார்ந்த இடமும் ‘முல்லை’ எனப்பட்டது. முல்லை நிலக்காட்டைப் பற்றிய வாழ்வியலோடு இயற்கைச் சூழலோடு இணைந்து இராச மாணிக்கனார்.
‘குறிஞ்சி நிலக்காடு போன்ற மரச் செறிவுடைய காடன்று. இளங்காடு என்று சொல்லத்தகுந்த முறையில் அமைந்த நிலப்பகுதியாகும். இங்கு ஆடுமாடுகளின் மேய்ச்சல் நிலம் நிறைந்திருந்தன. கொன்றை, காயா, குரந்தம் முதலிய மரங்கள் இருந்தன. மல்லிகை, முல்லை, விடவு, தளவம் ஆகிய செடி கொடிகள் இருந்தன. இங்கு வாழ்ந்த ஆயரும் ஆய்ச்சியரும் முல்லை மலர்களைச் சூடிச் கொண்டனர். ஆதலின் இந்நிலம் எனப் பெயர்ப்பெற்றது.” என்று குறிப்பிடுகின்றார். இக்குறிப்புரையில் கருப்பொருள்களான விலங்கு, மரம், மலர் மக்கள் மற்றும் செய்திகளும் அடங்கியுளளமை குறிப்பிடத்தக்கது.
முல்லை நிலத்திற்குரிய பெரும் பொழுதாகக் கார்காலமும் சிறு பொழுதாக மாலையும் அமையும். மழை பெய்யும் கார்காலம் வேனிலின் வெம்மையைத் தணித்து, உயிரினமும் பயிரினமும் குளிர்ந்திட இடமளிக்கிறது. காடும், காடு சார்ந்த இடமுமாகிய முல்லை நிலத்திற்கு இணைந்த பின்னணியாகக் கார்காலம் அமைகிறது. எனவேதான், முல்லை நில வருணனையில் கார்காலச் சித்திரிப்பும் இணைந்தே அமைகின்றன. முல்லைநிலம் கார்காலத்தில் செழித்து விளங்கும் தன்மையை ஐங்குறூநுற்றில் ‘புறவணிப்பத்து’ என்ற பகுதி சிறப்பாகச் சித்திரிக்கிறது: கார்கால வருணனையில் கார்காலம், மழையின் பொழிவு, தளிர்ந்த முல்லைக்காடுகள் உயிரினங்களின் மலர்ச்சிநிலை ஆகியன உவமைத்திறத்துடன் புலப்படுத்தப்பட்டுள்ளன.
கார்கால வருணனையை நெடுநல்வாடை, ‘கார்காலத்தில் முல்லை நிலத்தில் பருவமழை நன்கு பெய்தது. வெள்ளம் கால்நடைகளுக்கு இடையூறாதலால் கோவலர் அதனை வெறுத்தனர். கால்நடைகளை மேட்டு நிலத்தில் மேயவிட்டனர் குளிரால் நடுங்கிய கரங்களை நெருப்பில் காட்டி சூடு உண்டாக்கிக் கொண்டனர். மாமேயல் மற்நதன, குரங்குகள் குளிரால் நடுங்கிள. வாடைக் காற்றின் மிகுதியால் பறவைகள் மரங்களிலிருந்து கீழே விழுந்தன. பசுக்கள் குளிரால் கன்றுகளுக்குப் பால்தர மறுத்து உதைத்தன. மழைநீர் வரைந்து பாய்கையில் கயல்கள் அதன் போக்கை எதிர்த்து நீந்தின. அவற்றைப் பிடிக்கக் கொக்குகளும் நாரைகளும் காத்திருந்தன.’ என்று சித்திரிக்கின்றது.
முல்லை – கருப்பொருள் - இறைவன்
முல்லை நிலத்திற்குரிய தெய்வமாக,
“மாயோன் மேய காடுறை உலகமும்”
என்று தொல்காப்பியம் திருமாலைக் குறித்துக் காட்டுகின்றது. முல்லைப் பாட்டின் தொடக்கத்தில் அமையும் மழையின் வரவு திருமாலின் சிறப்பாக வருணிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
முல்லை – கருப்பொருள் - முல்லைமலர்
முல்லைமலர் அரும்பும் காலம் கார்காலம். மலரும் பொழுது மாலைப் பொழுதாகும். ‘காடும் மாலையும் முல்லைக்குரியன என்கிறது தொல்காப்பியம். இதனை ஐங்குநுறூறு.
“கார் நயந்து எய்தும் முல்லை”
என்று குறிப்பிடுகின்றது. நறுமணமும், தூய்மையும், வெண்மையும் கொண்ட இம்மலர் சங்ககால மக்களின் வழிபாட்டிலும், வாழ்த்திலும் முக்கிய இடத்தைப் பெற்றது.
“நெல்லொடு நாழி கொண்ட நறுவீ முல்லை
அரும்பவிழ் அலரி தூஉய்க்கை தொழுது”
மக்கள் வழிப்பட்டனர் என்று முல்லைப்பாட்டு விளக்குகிறது. முல்லைமலர் தமிழர் வாழ்வில் நடைபெறும் முக்கிய நிகழ்வுகளில் மங்கலச் சின்னமாக இடம் பெற்றது. மணமகளை, முல்லை மலரை நெல்லோடு நீரில் கலந்து அந்நீரால் நீராட்டினர் என்று அகநானூறு காட்டுகிறது. இம்முல்லைமலரை மகளிர் ஒழுக்க வாழ்வோடு தொடர்புடைய ஒன்றாகவும் புலவர்கள் பாடினார். “ஒரு பெண் இல்லற நெறியில் சிறப்புற்று விளங்குபவள்” என்ற கருத்தமையப் பாடவிழையும் புலவர்கள் முல்லைமலரைக் கற்பின் குறியீடாக்கிப் பாடினர்.
“முல்லை சான்ற கற்பின் மெல்லியல்”
“முல்லை சான்ற கற்பின் குறுமகள்”
முல்லை என்ற சொல்லுக்குச் சென்னைத்தமிழ் அகராதி, ‘கொடிவரை, காட்டு மல்லிகை, முல்லைநிலம் உரிப்பொருட்களின் ஒன்றாகிய இருத்தல், கற்பு, வெற்றி, முல்லைக்குழல், முல்லைப்பாட்டு’ முதலான பொருள்களைத்தருகிறது. அவற்றுள் ‘கற்பு’ என்ற சொல்லும் இடம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதனால், முல்லை நிலத்திற்குச் சிறப்புச் செய்கின்ற முல்லை மலர் வழிபாட்டிற்கு உரியதாக, மட்டுமன்றி, கற்பின் குறியீடாகவும் வழங்கப் பெற்றுள்ளமையை உணரமுடிகின்றது.
முல்லை – உரிப்பெருள் - ஒழுக்கம்
அன்பின் ஐந்திணை ஒழுக்கங்கள் பற்றிய பழம்பாடல் ஒன்று.
“போக்கெல்லாம் பாலை புணர்தல் நறுங்குறிஞ்சி
ஆக்கந்சேர் ஊடல் அணிமருதம் - நோக்குங்கால்
இல்லிருத்தல் முல்லை இரங்கல் நறு நெய்தல்
சொல்லிருந்த நூலின் தொகை.”
என்று விளக்குகிறது. இவற்றுள் முல்லைத்திணையின் உரிப்பொருளான ஒழுக்கம் ‘இல் இருத்தல்’ என்பது பெறபடுகின்றது.
சங்க இலக்கியமான ஐந்குறுநூறு முல்லைத்திணையின் நூறு பாடல்களைப் பேயனர் பாடியுள்ளார் இப்பாடல்கள் முல்லையின் உரிப்பொருள் இருத்தலும் இருத்தல் நிமித்தமும் ஆகக் குறிக்கின்றன. எனவே, முல்லையின் உரிப்பொருள் இருத்தலும் இருந்தல் நிமித்தமும் என்பது புலனாகிறது. ‘இருத்தல்’ என்பது ‘இருத்தல் பொருந்திய இல்லற நெறியாகும்’. இதனால், குறிஞ்சிச் சமுதாயத்தை அடுத்துத் தோன்றிய முல்லைச் சமுதாயத்தில் இல்லற ஒழுக்கம் உருப்பெற்று இருக்க வேண்டும் என்பது தெளிவாகின்றது. பழம்பாடலும் ‘இல்லிருத்தல் முல்லை’ என்று விளக்குவது குறிப்பிடதக்கது.
சங்க இலக்கிய முல்லைத்திணைப் பாடல்களுள் நிலம், காலம், பொழுது, மரம், மலர், புள், விலங்கு, பின்னணியாக அமைய, கருத்தொருமித்த தலைவனும் தலைவியும் வாழ்ந்த இனிய வாழ்க்கையைச் சித்திரிக்கும் பாடல்கள் சிலவாக உள்ளன. ஆனால், விளைமேற் சென்ற தலைவன், தான் குறித்துச் சென்ற கார்காலத் தொடக்கத்தே வாராதிருந்த காலத்தில் தலைவி வருந்தும் ஆற்றாமையைப் புலப்படுத்தும் பாடல்கள் பலவாக உள்ளன.
எனவே, ‘இருத்தல்’ என்பது தலைவனும் தலைவியும் இல்வாழ்க்கை மேற்கொண்டோழுகலைக் குறிக்கிறது. தலைவன் பிரிவால் எழும் தலைவியின் ஆற்றாமையும் அதன் தொடர்பான உணர்வு நிலைகளும் இருத்தல் நிமித்தமாகக் கொள்ளலாம். தலைவி அன்பிற்சிறந்த தலைவனை மணந்து இல்லறத்தொழுகும் நாளில், தலவன் தலைவியைப் பார்த்து, ‘அழகிய கூந்தலை உடைய நங்கையே, நம் முல்லை நிலத்தில் மேகம் திரண்டு மழை பெய்வதால் சிறந்த கார்ப்பருவம் தொடங்கிவிட்டது. நமது கானாற்றிலே பெருகி வருகின்ற விருப்பந்தருகின்ற புதுப்புனலில் நாம் விளையாட விரைந்து என்னோடு வருவாயாக’ என்று அன்புடன் அழைக்கிறான். இந்த அழைப்பு, காதலர் இருவர் கருத்தொருமித்து வாழ்கின்ற இல்லற வாழ்க்கையைத் தெளிவாக்குகிறது.
இல்லற நெறியில் ஒழுகும் தலைமகன் பொருள், போர் காரணங்களுக்காகத் தலைவியை விட்டுப் பிரிந்து செல்வான். அவ்வாறு, வினைமேற்செல்லும் தலைவன் ‘தான் முன்னிய வினைமுடித்துக் கார்ப்பருவம் தொடங்குமுன் வருவேன்’ என்று கூறிச் செல்வான். கார்காலத்தில் முதல்மழை பெய்தும் தலைவன் வாராதநிலையில் ஆற்றியிருக்க இயலாத சூழலில் தலைவி வருந்துவாள். இவளுடைய ஆற்றாமையை அகப்பாடல்,
“மாதிரம் புதையப் பா அய்கால் வீழ்த்து”
ஏறுடைப் பெருமழை பொழிந்தென அவல்தோறும்
ஆடுகளப் பறையின் வரிநுணல் கறங்க
ஆய்பொன் அவிழிழை தூக்கியன்ன
நீடிணர்க் கொன்றை கவின்பெறக் காடுடன்
சுடர்புரை தோன்றிப் புதறலைக் கொளாஅ
முல்லை இல்லமொடுமலர கல்ல
படுவாய்ப் பைஞ்சுனை மாவுண மலிரக்
கார் தொடங்கிற்றே காலை காதலர்
வெஞ்சின வேந்தன் வியன்பெறும் பாசறை
வென்றி வேட்கையொடு நம்முள் உள்ளார்
யாது செய்வாங்கொல் தோழி நோதகக்
கொலை குறித்தன்ன மாலை
துணைதரு போழ்தின் நீந்தலோ அரிதே”
சொல்லோவியமாகக் காட்டுகிறது.

முல்லைநிலம் - ஏறுதழுவல் - திருமணம்
கலித்தொகை முல்லைக்கலிப் பாடல்கள் ஏறுதழுவலை விளக்குகின்றன. ஏறுதழுவலைப்பற்றி வ.சுப.மாணிக்கம், காளையை அடக்கியவனுக்கே பெண் கொடுப்பது முல்லை வழக்கம். ஏறுதழுவா முன்னரே ஆயமகனுக்கும் ஆயமகளுக்கும் உள்ளப் புணர்ச்சி உண்டு என நல்லுருத்திரனார் புலப்புடுத்தலின் ஏறுகோள் வழக்கம். அகத்திணைக்கு இயைந்து ஒழுகுகின்றது” என்று கருத்துரைக்கின்றார். ஏறுதழுவலைக் சித்திரிக்கும் முல்லைக் கலிப்பாடல்கள் ஏறுதழுவும் ஆயர்களின் வருணனை, ஆயமகளிர் வருணனை, ஏறுகளின் வருணனை, ஏறு தழுவும் காட்சிகள் ஆகியவற்றைச் சொற்சித்திரங்களாகக் காட்டுகின்றன.
ஏறுதழுவல் நிகழ்ச்சி முடிந்ததும் ஆய்ச்சியர், ‘ஆய்ச்சியர் குரவை’ அயர்வர், பின்னர், திருமண விழா நடைபெறுவதற்காக, ஆயர்தமது இல்லத்தைச் செம்மண் கொண்டு பூசிப் பொலிவுபெறும்படிச் செய்வர், மனை முற்றத்தில் புதுமணல்பரப்பித் தம் குலவழக்கப்படி எருமைக்கோடு நட்டுத் தம் இறைவனை வழிபடுவர். பின்னர் புதைமணல் பரப்பிய இடத்தில் திரையிட்டு வதுவை நன்மணம் ஆற்றுவர்.
தொகுப்புரை
  • சங்க இலக்கிய முல்லைத்திணைப் பாடல்களில் முதற்பொருள், கருப்பொருள் ஆகிய நிலம், பொழுது, இறைவன் மரம், புள், விலங்கு ஆகியவை பின்னணியாக அமைந்தன.
  • இப்பின்னணியில் நாடறி நன்மணம் புணர்ந்த தலைவனும் தலைவியும் நடத்திய இனிய இவ்வாழ்க்கை உரிப்பொருளாய் அமைந்தது. உரியபொருளாகிய ‘இருத்தல் நிமித்தம்’ ஒருவருக்கொருவர் ஆற்றியிருக்கும் பண்பாட்டைப் புலப்படுத்தியது. 
  • ஏறுதழுவி மணம் முடிக்கும் வழக்கம் முல்லை நிலமக்களிடம் மட்டுமே காணப்படுவது குறிப்பிடத்தக்கது. 
  • முல்லை நில ஆயர்கள் காதல், வீரம் இரண்டையும் தம் இரண்டு கண்களாகப் போற்றினர். இங்ஙனம், தமிழ் மக்களுடைய பண்பாட்டு வளர்ச்சியில் முக்கியப்பங்கு வகிக்கும் முல்லைநிலப் பண்பாடு மருதநில வாழ்வியல் மலர்ச்சிக்கு அடிப்படையாக அமைந்தது.


Monday, January 29, 2018

சங்கப் பெண் கவிதைகளில் அக ஆளுமைகள்

முனைவர் பூ.மு.அன்புசிவா
தமிழ்த்துறைத்தலைவர்
சங்கரா அறிவியல் மற்றும் வணிகவியல் கல்லூரி,
சரவணம்பட்டி, கோவை–641 035.
அலைபேசி: 9843874545.
சங்க காலச் சமூக மக்கள் தொடக்கத்தில் இனக்குழுச் சமூகமாக வாழ்ந்தனர். தங்களுக்கான ஐந்திணைப் பகுப்பில் அவரவர்களுக்கான வாழ்வுச் சூழலை மேற்கொண்டனர். ஆனால் வேளாண்மையின் செழிப்பும், வாணிபத்தின் வளர்ச்சியும் மேம்பட மெல்ல நிலவுடைமைச் சமூகம் தோற்றம் பெற்றது. இதன் விளைவாக அரசர்களும் நிலக்கிழார்களும் உருவாயினர். பெண்களையும் நிலத்தையும் உடைமைப் பொருள்களாகக் கருதினர். அதில் பெண் பண்பாட்டையும் குடும்ப அமைப்பையும் கட்டிக்காக்கும் பொறுப்புடையவளாக நியமிக்கப்பட்டாள். தமிழ்ச் சமூகம் அரசர்களும் நிலக்கிழார்களும் தலைமை ஏற்று வழி நடத்திய போதும் அடிமை முறையோ தீண்டாமை முறையோ வழக்கத்தில் இருந்ததாகத் தென்படவில்லை. பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் என்ற நிலையிலேயே சமூக வாழ்வு சூழல் நிகழ்ந்ததை அறிய முடிகிறது. பேரரசர்களின் தோற்றத்திற்குப் பின்னரே போர்ச்சூழலில் பிறநாட்டின் வீரர்களை சிறைப்பிடித்தலும் பெண்ணைப் பொருளாக எண்ணி கொள்ளையிட்டு கொணர்தலும் நடந்தேறியது. இவ்வாறு கொள்ளையிட்டு கொணர்ந்தப் பெண்களே “கொண்டி மகளிர்” எனப்பட்டனர். தமிழின் தொன்மைக்கும், பெருமைக்கும் சான்றாய் நிற்பன சங்கப் பாடல்கள் ஆகும். ஆடவர், பெண்டிர் என்ற பேதமின்றி இருபாலாரும் பாடியுள்ளனர். அரசன் முதல் குறமகள் வரை பலரும், பல்வேறு தொழில் செய்தோரும் பாடியுள்ளனர்.
வேதகாலத்துப் பெண்பாற் புலவர்களைப் போன்றே சங்க காலத்துப் பெண்பாற் புலவர்களும் கல்வியில் சிறந்திருந்தனர். எனவேதான் ஒளவையார் பெரும் புகழ் பெற்ற புலவராக இருக்க முடிந்திருக்கிறது.
ஆண்பாற் புலவர்களை நோக்குகையில் பெண்பாற் புலவர்கள் எண்ணிக்கையில் குறைவானவர்களாகவே இருக்கின்றனர். சங்ககாலத்துப் பெண்பாற் புலவர்களின் எண்ணிக்கையைப் பொறுத்தளவில் அறிஞர்களிடையே மாறுபட்ட கருத்துக்கள் இருக்கின்றன.பெரும் பேரா. உ.வே.சா அவர்கள், சங்கப் பெண்பாற் புலவர்கள் கிட்டத்தட்ட ஐம்பது பேர் என்றும், மற்ற புலவர்களின்சொற்களுக்கு எவ்வளவு சிறப்பு உண்டோ, அவ்வளவு சிறப்பு இவர்களுடைய செய்யுட்களுக்கும் உண்டு எனக்குறிப்பிட்டுள்ளார்.
பேரா. ஒளவை. நடராஜன் அவர்களோ, இவர்களின் எண்ணிக்கை 41 என்று குறிப்பிட்டுள்ளார். பேரா. ந.சஞ்சீவி அவர்கள் தமது,சங்க இலக்கிய ஆராய்ச்சி அட்டவணையில் 36 பெண் பாற் புலவர்களைக் குறிப்பிட்டுள்ளார். ஒளவையாரைத் தவிர ஏனையோர்அகப் பாடல்களையே அதிகம் எழுதியுள்ளனர்.
சங்க காலத்தில், பெண்களால் எழுதப்பட்ட இப்பாடல்களிலிருந்து அவர்களின் காதல், வீரம், தனிமைத் துயர், கைம்மைநோண்புக் கொடுமை, பிற புலவர்களைப் புகழும் பெருந்தன்மை, வரலாற்றறிவில் சிறந்திருந்தமை, அவர்களின் சுயமரியாதை,காதலை வெளியிடுவதில் அவர்களுக்கிருந்த தயக்கம், பரத்தமை, வெறுப்பு போன்ற பல்வேறு தகவல்களை அறிய முடிகிறது.
தாய்வழிச் சமூகத்தின் எச்சங்களையும், தந்தை வழிச் சமூகத்தின் பல்வேறு கட்டுப்பாடுகளையும் இப்பாக்களின் வழி அறியமுடிகிறது. ஆண் - பெண் பிரிவினையில் ஆண் எப்போதும் உயர்ந்தவனாகவே காட்டப்படுவதைக் காண முடிகிறது.பொருளீட்டுவது ஆண்களுக்கு மட்டுமே உரிய ஒன்றாகக் காட்டப்பட்டுள்ளது.
தொல்காப்பியர் காலத்திலேயே பெருமையும், உரனும் ஆடவர்க்கும்; அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு பெண்களுக்கும்உரியதாகச் சொல்லப்பட்டுள்ளது. மடலேறுதல் என்னும் காதலை பகிரங்கப்படுத்தும் உரிமை ஆண்களுக்கு மட்டுமேஉரியதாக இருப்பதைக் காண முடியும்.
பாடாண்திணையில், பாடப்படும் ஆண்மகனின் கொடை, வீரம் முதலியவற்றை ஆண்களுக்காக மட்டுமே பாட முடியும். கைக்கிளை என்பது ஆடவர்க்கு மட்டுமே உண்டு.

“தன்னுறு வேட்கை கிழவன் முன் கிளத்தல்
எண்ணுங்கால் கிழத்திக்கு இல்லை”

என்பது தொல்காப்பியத்தில் வரும் களவியல் சூத்திரமாகும்.
கைக்கிளை என்னும் குறியீடு இரு பாலார்க்கும் கொள்ளத்தக்க பொது நிலையில்தான் அமைந்துள்ளது தெளிவு என்ற போதிலும்,ஆண்பாற் படுத்திக் கூறுவதே, இளைஞனின் காதலை எடுத்துக் கூறுவதே இலக்கண மரபாகும் என்பார் நாவலர் சோமசுந்தரபாரதியார்.
மேற்கண்ட களவியல் சூத்திரத்தில் பெருமிதற்குரிய நான்கனுள், முதலாவதாக வைக்கப்பட்டுள்ள கல்வியும் ஆண் மக்களுக்குரியஒன்றாகக் கூறப்பட்டுள்ளதைக் காணலாம். இருப்பினும் ஒரு சில பெண்கள் கல்வி கற்றதோடு கவியாகும் ஆற்றல்மிக்கவர்களாகவும் விளங்கினர். தந்தை வழிச் சமூகத்தின் கட்டுப்பாடுகள் இறுக்கமடையாத சூழலில் பெண்கள் கல்வி கற்கும்சூழல் இருந்திருக்கலாம் என்று தோன்றுகிறது.
உலகப் பெண்பாற் புலவர்களையெல்லாம் ஆய்வு செய்த பெருமைக்குரியவரான பெ.சு.மணி அவர்கள், கல்வி கற்பதில் ஆடவர்,பெண்டிர், இரு பாலாருக்கும் சம வாய்ப்பு அளிக்கப்பட்டது. கல்வி கற்கும் முறையில் வேறுபாடு நிகழ்ந்தது. போர்க்கலை,ஆட்சியியல், பொருளீட்டுதல் முதலான துறைகளில் ஆடவர்களுக்கும், இல்லறம் பேணும் கல்வியோடு, நுண்கலைகளும் பயின்றுபெரும் புலவர்களாகவும் விளங்க பெண் கல்வியும் அமைந்திருந்தன என்று கூறும் கருத்து ஓரளவிற்குப் பொருத்தமாக உள்ளதுஎனலாம். இப்படி இல்லறம் பேணும் கல்வி கற்ற பெண்டிர் பிற்காலத்தில் தமது சொந்த முயற்சியால் கவி பாடும் அளவிற்கு தம்மைவளர்த்துக் கொண்டிருக்கக் கூடும் என்று தோன்றுகிறது.
தமிழின் மகுடமென விளங்கிய பேரா. வ.சுப. மாணிக்கனார், தமது தமிழ்க் காதல் என்னும் நூலில், சங்க காலத்தில் ஆண் - பெண்சமத்துவம் நிலவியது எனக் குறிப்பிட்டுள்ளார்.
அவரது கருத்து, பண்டைத் தமிழ்ச் சமுதாய அளவில் நோக்கின் பெண், கற்கும் உரிமையும், கவிபாடும் உரிமையும், காதல்உரிமையும், காதற்களவு செய்யும் உரிமையும், காதலனை இடித்துரைக்கும் உரிமையும், இல்லற தொழிலுரிமையும்,பெருமையும், புகழும் எல்லாம் ஆடவர்க்கு நிகராகப் பெற்றிருந்தனர் என்பது நெற்றித் திலகம்.
சமுதாயத்தின் நாகரீகத்தை அதன் மொழிச் சொற்களில் கண்டு கொள்ளலாம். மொழி, நாகரீகத்தை வஞ்சிக்காது.தலைவன்-தலைவி, காதலன்-காதலி, கிழவன்-கிழத்தி என்னும் பால் நகர்ச் சொற்கள், தமிழ்ச் சமுதாய மொழியில் உள்ளன.பிறப்பே குடிமை, ஆண்மை ஆண்டு என இரு பாலார்க்கும் ஒப்பினது வகைகளைத் தொல்காப்பியர் ஏற்றத் தாழ்வின்றிச் சுட்டுவர்என்பதாகும்.
வ.சுப.மாணிக்கனார் குறிப்பிட்டது போல, காதலனைத் தேர்வு செய்யும் உரிமை அவளுக்கு இருந்திருக்கிறது. அதேநேரத்தில்,அவளது வெளி வீடாக மட்டுமே இருக்கிறது. கற்பு பேணப்படுகிறது. தலைவன் பரத்தையிடம் சென்று, பல காலம் கழித்துவந்தபோதிலும் அவனை முகமலர்ச்சியுடன் ஏற்றுக் கொள்ள வேண்டியிருக்கிறது.
பொன்முடியார் தமது பாடலில் பாடியதுபோல், ஈன்று புறந்தருதல் பெண்ணுக்குரிய கடமையாக இருக்கிறது. புலவர்பெருங்கடுங்கோ பாடியதுபோல் வினை ஆடவர்க்கு உரியதாகவும், மனை உறை மகளிர்க்கு ஆடவர் உயிராகவும்இருக்கிறார்கள். இதுவே சமூக நியதியாகவும் இருக்கிறது.
குறுந்தொகை 14வது பாடலில் (அமிழ்து பொதி ..) நல்லோர் கணவன் இவன் எனப் பல்லோர் கூற மகிழும் அதே நேரத்தில்,சிறிது நாணமும் ஏற்படுகிறது தலைவனுக்கு. சங்க காலத்தில் உடன்கட்டை ஏறும் வழக்கம் இருப்பதற்குப் பூதப்பாண்டியன்மனைவி பெருங்கோப் பெண்டின் பாடல் சான்றாக இருக்கிறது. உடன்கட்டை ஏறாத பெண்கள் கைம்மை நோண்பு என்றபெயரில் கொடும் துயரை அனுபவித்திருக்கிறார்கள்.
இக்காலத்தைப் போலவே சுற்றத்தை விடுத்து, பிரிந்து கணவனுடன் வாழ்கிறார்கள் (கற்பு வலியுறுத்தப்பட்டமையைக் காணமுடிகிறது.) மேலோட்டமாகப் பார்க்கும்போதே பெண்ணுக்கெதிரான பல கூறுகளைப் பட்டியலிட முடிகிறது. இன்னும் ஆழமானமறு வாசிப்பில் நிறையச் செய்திகளைக் காண முடியும் என்று தோன்றுகிறது. எனவே சங்க காலச் சூழல் என்பது, தாய்வழிச்சமூகத்தின் மிச்ச சொச்சங்களையும், தந்தை வழிச் சமூகம் வேரூன்ற ஆரம்பித்த கால கட்டத்தையும் கொண்டிருப்பதாகக் கூறலாம்.

சங்கப் பெண்களின் அகம்
சங்க காலப் பெண்பாற் புலவர்களில், ஒளவையார் முதன்மையானவராவார். வெள்ளி வீதியாரும், நன்முல்லையாரும் அடுத்தநிலையில் வைத்து எண்ணத்தக்கவர்களாவர். கழார்க் கீரன் எயிற்றியார், கச்சிப்பேட்டு நன்னாகையார், நச்சௌ;ளையார், ஒக்கூர்மாசாத்தியார், வெண்ணிக்குயத்தியார், மாற்றோக்கத்து நப்பசைலயார், வெறிபாடிய காமக்கண்ணியார், நக்கண்ணையார்,பொன்முடியார், நல்வெள்ளையார், தாயங்கண்ணியார், குறமகள் இளவெயினியார், பாரிமகளிர், ஆதிமந்தி, காவற்பெண்டு,பெருங்கோப்பெண்டு போன்றோர் குறிப்பிடத்தக்கவர் ஆவர்.
அகத்திணையியல் முதல் சூத்திரத்திற்கு உரையெழுத வந்த நச்சினார்க்கினியர், ஒத்த அன்பான் ஒருவனும், ஒருத்தியும் கூடுகின்றகாலத்துப் பிறந்த பேரின்பம், அக்கூட்டத்தின் பின்னர் அவ்விருவரும் ஒருவருக்கொருவர் தத்தமக்குப் புலனாகஇவ்வாறிருந்ததெனக் கூறப்படாததாய், யாண்டும் உள்ளத்துணர்வே நுகர்ந்து இன்பமுறுவதோர் பொருளாதலின் அதனை அகம்என்றார்.
எனவே அகத்தே நிகழ்கின்ற இன்பத்திற்கு அகமென்பது ஓர் ஆகுபெயராம் என்று விளக்கமாக கூறியுள்ளார். எனவே அகத்திணைஎன்ற சொல்லில் உள்ள அகம் என்ற சொல் வீடு, இல், மனை அல்லது குடும்பத்தையே குறிக்கிறது. அக்குடும்பத்தில் வசிக்கும்தலைவன்-தலைவியின் வாழ்க்கையைக் குறிக்கிறது எனக் கொள்ளலாம்.
சங்க காலப் பெண்பாற் புலவர்கள் காதலை மிகவும் சிறப்புடன் எவ்விதமான பூச்சுக்களும் இல்லாமல் பாடி இருக்கின்றனர்.தலைவி, தலைவன், தோழி எனக் கூற்று யாருடையதாக இருப்பினும் வெளிப்படையாகவே நிகழ்கிறது.
காதலில் தவிக்கும் தலைவியின் மன நிலையை ஒளவையின் பாடலொன்று அற்புதமாகப் படம் பிடித்துள்ளது. தலைவி காதல்நோயால் தகித்துக் கொண்டிருக்க, தென்றல் வீசி அந்நோயை அதிகமாக்குகிறது. ஊரோ அமைதியாக உறங்கிக்கொண்டிருக்கிறது. தன் துயரத்தை உணராமல் உறங்கிக் கொண்டிருக்கும் இவ்வூரை,

“முட்டு வேன்கொல் தாக்கு வேன்கொல்
ஓரேன் யானும்ஓர் பெற்றி மேலிட்டு
ஆஅ ஓல்எனக் கூவு வேன்கொல்
அலமரல் அசைவலி அலைப்பஎன்
உயவுநோய் அறியாது துஞ்சும் ஊர்க்கே” (குறுந்: 28. ஒளவை)

என்ன செய்து எழுப்புவேன்? என்று கலங்கி நிற்கிறாள்.
தலைவன் ஒருவனை காலை, பகல், மாலை, யாமம், விடியல் என எல்லாப் பொழுதும் காதல்ஃகாமம் வருத்திக் கொண்டிருக்கிறது.நினைவெல்லாம் பொழுதெல்லாம் அவளை நினைத்துக் கொண்டிருக்கும் அவன் தனது காதலே உண்மைக் காதல் என்கிறான்.

“காலையும் பகலும் கையறு மாலையும்
ஊர்துஞ்சு யாமமும் விடியலும் என்றுஇப்
பொழுதிடை தெரியின் பொய்யே காமம்”

என்கிறது அள்ளூர் நன்முல்லையாரின் (குறுந்:32) பாடல். தன் மன விருப்பத்தையேநன்முல்லையார் நாணம் காரணமாக தலைவன் மேல் ஏற்றிக் கூறினார் என்று கொள்ளலாம்.
தலைவன் இல்லாத சமயத்தில் பெண்கள் அழகுபடுத்திக் கொள்ளும் வழக்கம் அக்காலத்தில் இல்லை. இதனை கச்சிப்பேட்டுநன்னாகையாரின் பாடலின் மூலம் அறிய முடிகிறது.

“ஈங்கே வருவர் இனையேல் அவர்என
அழா அற்கோ இனியே நோய்நொந் துறவி!
மின்னின் தூவி இருங்குயில் பொன்னின்
உரைதிகழ் கட்டளை கடுப்ப மாச்சினை
நறுந்தாது கொழுதும் பொழுதும்
வறுங்குரற் கூந்தல் தைவரு வேனே!” (குறுந்: 162)

என்பது பாடல். பொருளீட்டச் சென்ற தலைவன் விரைவில் திரும்பி வருவார் என ஆறுதல் கூறும் தோழிக்கு தலைவி, நான்எவ்வாறு அழாமல் இருக்க முடியும்? தலைவன் இல்லாத காரணத்தினால் இந்த இளவேனில் காலத்திலும் மலர் இல்லாமல் வறிதாகஇருக்கும் கூந்தலைத் தடவுகிறேனே என வருந்திக் கூறுகிறாள்.
ஒத்த தலைவனும் தலைவியும் களவொழுக்கத்திற்குப் பிறகு மணம் செய்துகொள்வதன் மூலம் கற்பொழுக்கத்திற்கு வருகின்றனர், என்றாலும் காதலை சொல்வதில் தயக்கமும் இருந்திருக்கிறது. இதனை வெள்ளிவீதியாரின் குறுந்தொகை பாடலொன்று உறுதிசெய்கிறது.


“இடிக்கும் கேளிர் நும் குறை ஆக
நிறுக்கல், ஆற்றினோ நன்று மன்தில்லை
ஞாயிறு காயும் வௌ;அறை மருங்கில்
கைஇல் ஊமன் கண்ணில் காக்கும்
வெண்ணெய் உணங்கல் போலப்
பரந்தன்று, இந்நோய்; நோயன்று கொளற்கரிதே.”

பாறையின் மீது வைக்கப்பட்டிருக்கும் வெண்ணெய் சூரியனின் கதிர்களால் உருக ஆரம்பிக்கிறது. இதனைப் பார்த்துக்கொண்டிருப்பவன் கை இல்லாதவன் அத்துடன் ஊமையும் கூட, கைகள் இருந்திருந்தால் வேறிடத்தில் வைத்திருக்கலாம். வாய்இருந்தாலாவது யாரையாவது அழைத்துப் பாதுகாக்கலாம். அதுபோல இக்காதல் நோயை அடக்கிப் பாதுகாக்கவும் இயலவில்லை. பிறரிடம் வெளியிடுவதற்குரிய மனத் திண்மையும் இல்லை. கையில்லாத ஊமையின் நிலையில் தலைவிபடும் துயரில் காதலை வெளிப்படுத்த இயலாத ஆதங்கம் தொனிப்பதையும் காண முடியும்.
வெள்ளி வீதியின் மற்றொரு பாடலில் (குறு: 149) தலைவியின் நாணம், காமத்தை எதிர்த்துத் தாங்கும் அளவிற்குத் தாங்கிப் பிறகுநிற்காமல் போய் விடுகிறது. வெள்ளம் கரையை உடைத்துக் கொண்டு ஓடுவது போல் இங்கு காமம் நாணத்தை வென்று விடுகிறது.
பொருளீட்டச் சென்ற தலைவனின் நிலையை எண்ணி வருந்தும் பாடல்கள் சங்க இலக்கியத்தில் ஏராளமாக உள்ளன. ஆயினும்பெண்பாற் புலவர்களின் பாடல்களில் அந்த வருத்தம் உணர்வுப்பூர்வமாக இருப்பதைக் காண முடிகிறது. பிரிந்து சென்றதலைவனை நினைத்து கவலையுடன் வருந்தும் தலைவியின் நிலை எப்படி இருக்கிறது என்றால் ஓர் ஊரில் அமைக்கப்பட்டுள்ளகொல்லனின் உலைக்களத்து துருத்தியானது, ஏழு ஊர்களின் பொது வேலைகளை ஏற்று வருந்துவது போல் அளவற்றதாக உள்ளதுஎன்கிறார் கச்சிப்பேட்டு நன்னாகையார்.
வெள்ளிவீதியின் நற்றினை 348வது பாடல் இப்படிப் போகிறது...

நிலவே, நீல் நிற ...
...யானே? புனையிழை நெகிழ்ந்த புலம்புகொள் அவலமொடு
கனையிருள் கங்குலும் கண்படை இலெனே;
அதனால், என்னொடு பொரும் கொல்இவ் உலகம்?
உலகமொடு பொரும்கொல், என் அலமரு நெஞ்சே?
இரவெல்லாம் தூக்கமின்றித் தனிமைத் துய்வில் வருந்தியுள்ளேன். (ஊர் உலகமோ மகிழ்ச்சியாக இருக்கிறது) அதனால் இந்தஉலகம் தன்னோடு மகிழவில்லையென்று நினைத்து என்னோடு வந்து போரிடுமா? அல்லது என்னுடைய துயரங்கொண்டநெஞ்சமானது, தன்னோடு வருந்தவில்லையென்று சென்று உலகத்தோடு போய்ப் போரிடுமா? எதுவுமே தோன்றவில்லையே எனக்கு (எதுவுமே தோன்றாதவளை தனிமை துயரம் மட்டும் வருத்திக் கொண்டே இருக்கிறது).
வெள்ளிவீதி, நன்முல்லை ஆகியோரின் பிரிவுத் துயரம் கல் நெஞ்சையும் கரைத்து விடும் ஆற்றல் பெற்றவை.
தலைவனின் மனம் விழாக் களத்தில் ஆடும் பெண்ணின் மீது போய் விடுமோ என அஞ்சும் அவனது காதலி, வெள்ளை ஆம்பலின்அழகான நெறிப்பையுடைய தழையை, மெல்லியதாக அகன்ற அல்குல் அழகுபெறுமாறு உடுத்துக் கொண்டு, அவன் முன்னால்சென்று தானே அவனை கைப்பற்றிக் கொள்ளப் போவதாக அந்தப் புதியவளின் ஏவல் பெண்டுகள் காதில் விழுமாறு கூறுகிறாள்.
இப்படித் தன் அழகைக் காட்டி அவன் அவளை மணந்து கொண்ட பின், மற்ற பெண்களின் தோள் நலம் வாடி விடுமே!.அவைதாம் இரங்கத்தக்க என்று பொய்யாக வருந்துகிறாள் காதலி. வாளை வாளின் பிறழ .. என்னும் ஒளவையின் இந்தப்பாடலில் வரும் காதலி தன் உடல் அழகின் மீது எவ்வளவு நம்பிக்கை வைத்திருக்கிறாள் என்பது வியப்பூட்டுகிறது.
இக்காலத்தைப் போலவே சங்க காலத்திலும் சுற்றத்தாரிடம் இருந்து பிரிந்து தலைவனோடு சென்று இல்லறம் நடத்தும் சிறப்பைநக்கண்கைணயாரின் பாடல் (நற்றினை 19) மூலம் அறியலாம்.
திருமணம் நடக்கும் வரை, தலைவியின் நாணம் நீங்காதபடி கற்புத் தலைவியை அவள் விரும்பும் ஆடவர்க்கு மணம் செய்துவைப்பது தாயின் கடமையாக உள்ளது. எனவே சிறுகோட்டுப் பெருங்குளம் காவலன் போல, அருங்கடி அன்னையு துயில்மறந்தனளே! (அகம் 256-12-14) எனத் திருமணம் வரை பெண்கள் கற்புடன் இருக்க, தாய் உறக்கமின்றி காவலிருந்ததைப்பாடுகிறார் நக்கண்ணையார்.
கணவனை இழந்த பெண்கள் உடன்கட்டை ஏறுவது அல்லது கைமம்மை நோன்பு இருப்பது அக்கால வழக்கமாக இருந்தது.கைம்மை நோன்பின் கொடுமையை பூதப்பாண்டியனின் மனைவி பெருங்கோப்பெண்டு எடுத்துரைப்பதோடு, கைம்மைநோன்பிருப்பதை விடவும் ஈமப் படுக்கையில் படுத்து உயிர் விடுவது, தாமரைக்குளத்து நீரைப் போல் இன்பமானது என்றுபாடுகிறார்.
தாயங்கண்ணியார் என்ற மற்றொரு புலவரின் பாடலில் இருந்து (புறம். 250) கணவரை இழந்தப் பெண்கள் தலைமயிரைக்குறைத்து, வளையல்களைக் களைந்து, அல்லியரிசி உணவு உண்ட நிலையை அறிய முடிகிறது. மாறோக்கத்து நப்பசலையாரின்புறம் 280வது பாடல் கணவன் சாவை, ஒவ்வொரு நிமிடமும் எதிர்நோக்கும் துயரமான மன நிலையைச் சித்திரமாக வடித்துத்தந்துள்ளது. இந்தப் பாடலும் கைம்மை நோன்பின் கொடுமையை வெளிப்படையாகச் சொல்கிறது.
சங்க காலப் பெண்பாற் புலவர்களின் பாடல்களிலிருந்து அக்காலத்துப் பெண்களின் காதல் -வீரம், பெரும்பாலும்பொருளாதாரத்தைத் தேடும் உரிமையின்மை, பெண்ணுக்கான இடம் பெரும்பாலும் வீடாக இருத்தல், பரத்தையிடம் சென்றுவரும் கணவனை கமலர்ச்சியோடு ஏற்றுக் கொள்ள வேண்டிய கட்டாயம், காதலவன் வேறொரு பெண்ணோடு போய் விடாமல்இருக்க காதலி செய்யும் முயற்சிகள், கைம்மைத் துயரம், உடன்கட்டை ஏறுதல் என பல்வேறு சமூக நிகழ்வுகளையும் அறிந்துகொள்ள முடிகிறது.

கணவன் - மனைவி உறவைவிட உன்னதமான உறவு உண்டா?

கணவனுக்குத் தலைவலி. நெற்றியை அழுத்திப் பிடித்துக் கொண்டு சோபாவில் உட்கார்ந்திருக்கிறான். மனைவி கொஞ்சம் தைலம் எடுத்து வந்து, கணவன் அருகில் அம...