என்ன தவம் செய்தோமடி -
அன்னைத்
தமிழ் மொழியின்
பிள்ளை
என்ற அழைக்க
-நாம்
என்ன தவம்
செய்தோமடி
மொழி எங்கள்
தாயென்று
சொல்லும் மொழி
தமிழ் தானடி-அதை
உயிர் என்று
உயர்வாக
உணர்வோடு
போற்றுவதும்
தமிழ் தானடி
தமிழ் எங்கள்
மூச்சு
தமிழ் எங்கள்
பேச்சு
தமிழ் எங்கள்
மானம்
தமிழ் எங்கள்
அடையாளம்
என்ன தவம்
செய்தோமடி-அன்னைத்
தமிழ் மொழியின்
பிள்ளை
என்ற அழைக்க-நாம்
என்ன தவம்
செய்தோமடி
No comments:
Post a Comment