தமிழ்த்தாத்தா உ.வே.சா. இல்லாவிட்டால் தமிழன் தொன்மை
தெரிவதற்கு வாய்ப்பே இல்லை. அப்படிப்பட்ட பெரியவரை ஒரு தமிழ் அறிஞர், "தாத்தா வெறும் பதிப்பாளர் தான்' என்று மேடையில் பேசினார்.
அது போன்ற மன வருத்தம்,
வேறு எப்போதும் எனக்கு ஏற்பட்டதே இல்லை.
தமிழ்த்தாத்தா,
தமிழ் மொயின் தொன்மையை, எப்படி எடுத்துரைத்தோரோ, அந்தத்
தொன்மையான புறநானூற்றின் காரணமாகத்தான், சங்க கால நாணயத்தை,
கண்டுபிடிக்கும் வாய்ப்பு, எனக்கு கிடைத்தது.
சீர்திருத்த எழுத்துக்கள்: அந்தக் காலத்தில், நாளேடுகளில், ஈய அச்சுக்கள் தான் இருந்தன. அதன் சிரமத்தை எளிமைப் படுத்தினால் என்ன? ஈ.வே.ரா.வின் சீர்திருத்த எழுத்துக்களைப் புகுத்தினால் என்ன? என,
எனக்குத் தோன்றியது. இதற்குத் தமிழ் ஆசிரியர்கள் எதிர்ப்பு
தெரிவிப்பர் என்பதால் மெல்ல மெல்ல புகுத்தினேன்.
"தமிழ் எழுத்தின் தொன்மையை, ஆய்வு செய்ய வேண்டும்'
என முடிவு செய்து, முதலில் தமிழ் பிராமி,
வட்டெழுத்துக்களைப் படித்தேன். அந்த வட்டெழுத்தின் வளர்ச்சி
தான்,
சேர நாட்டுத் தமிழ் வட்டெழுத்து என்பது.
திருவனந்தபுரத்தில் உள்ள ஓலைச்சுவடி அறிஞர் ஒருவரிடம், எனக்குத் தெரியாத, சில எழுத்துக்களைக் கேட்டறிந்த பின், "சேர நாட்டில் தமிழ் வட்டெழுத்து' என்ற தலைப்பில் நூல் எழுதினேன். அது தற்போது, எட்டாவது பதிப்பாக வெளியாகி உள்ளது.
ஓலைச்சுவடி மீதிருந்த ஆர்வம் காரணமாகத் தான், நாணயங்களைக் கண்டுபிடிக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது.
கொடைக்கானலில் ஒரு கடையில்,
ஓலைச்சுவடிகளை அடுக்கி வைத்து இருந்தனர்.
அதில் வட்டெழுத்தில் எழுதப்பட்டுள்ள சுவடிகள் கிடைக்குமா எனப் பார்வையிட்டேன்.
அதே கடையில் பழைய நாணயங்களை வைத்திருந்தனர்.
அவற்றைப் பார்த்த போது, ஒரு நீள சதுர நாணயம் இருந்தது. அதில் யானை சின்னமும், பின்புறம் கோட்டு வடிவ மீன் சின்னமும் இருந்தன.
இது தொடர்பாக,
மதுரையில் உள்ள முகமது இஸ்மாயில் என்பரை, 1985ல் சந்தித்தேன். அவரிடம் இருந்த சில் நாணயங்களை, ஆய்வு செய்த போது, ஒர நாணயம் வித்தியாசமாகக் காணப்பட்டது.
தொன்மையான நாணயங்களில் ஓர் அழகான பூச்சு காணப்படும். அந்த
நாணயத்தின் முன்புறத்தில்,
குதிரை இருந்தது. அதன் மேல், தமிழ்ப் பிராமி எழுத்துக்கள் பொறிக்கப்பட்டிருந்தன. அதில் சில எழுத்துக்களை
மட்டும் தான்,
என்னால் படிக்க முடிந்தது.
காசியில் கேள்வி: முதல் எழுத்தில் பாதிதான் இருந்தது.
அடுத்த எழுத்துக்கள். "ரு, வ' என இருந்தன. இது, "பெருவழுதி'யாக இருக்கலாம் என்ற எண்ணம் தோன்றியது. சென்னை
திரும்பியதும் உ.வே.சா.வின் புறநானூறு நூலை எடுத்துப் படித்தேன். அதன் மூலம், இது சங்க கால நாணயம் தான் என்பதை உறுதிப்படுத்தினேன்.
கடந்த, 1985ல், வாரணாசியில் நடந்த, நாணய கருத்தரங்கில் இது குறித்துக் கட்டுரை சமர்ப்பித்தேன்.
அதைக்கேட்டு வியந்த நாணயவியலாளர்கள், "இது எப்படி, "தமிழ்பிராமி'
என்று கூறுகிறீர்கள்? சேர,
சோழ,
பாண்டியர்கள் நாணயங்கள் வெளியிடவில்லை என்றுதான் வரலாற்று
ஆசிரியர்கள் எழுதியுள்ளனர்.
பண்டமாற்று முறைகளில் தான், அந்த காலத்து அரசர்கள்,
வர்த்தகம் செய்ததாகச் சொல்கின்றனர். அவர்கள் குறுநில மன்னர்கள்
தானே... அவர்கள் நாணயம் வெளியிடவில்லை' என வாதிட்டனர்.
பதிவு செய்யவில்லை: அதற்குப் பதில் அளிக்கும் வகையில்
நாணயங்களின் புகைப்படங்களையும் வெளியிட்டேன். அதைப் பார்த்து ஏற்றுக் கொண்டனர். 1985ல்,
நாணயங்கள் தொடர்பான ஆண்டிற்கு ஒருமுறை, வெளிவரும் அவர்கள் ஏட்டில், வெளியிட்டனர். இதன் மூலம் சங்க கால நாணயங்கள் என்பது முதன்முதலாக உறுதியாக
வெளியானது.
அந்த நாணயங்களைக் கண்டுபிடித்து, 30 ஆண்டுகள் ஆகின்றன. தமிழக வரலாற்று நூலில், அந்த நாணயம் குறித்த இதுவரை, எந்தக் குறிப்பும் வெளிவரவில்லை.
அதன் பின், சோழ நாணயங்கள்
கிடைத்தன. அவற்றை ஆய்வு செய்து, "சங்க
கால சோழ நாணயங்கள்'
என்ற தலைப்பில் நூல் எழுதினேன்.
அதைச் சென்னையில் வெளியிட்டபோது விழாவில் பங்கேற்ற, பல்கலைக்கழகத் துணைவேந்தர் ஒருவர், "நீங்கள் நூலின் அட்டைப் படத்தில் போட்டிருக்கும் பாயும்புலி, நாய் போல உள்ளது' என்றார். அதைக்கேட்டு,
நான் மிகவும் மனவருத்தம் அடைந்தேன். ஆனால் நாணயத்தில்
உள்ளது. பாயும்புலி தான் என உறுதிப்படுத்தப்பட்டது.
சேர நாணயங்கள்: சோழர், பாண்டியர் கால நாணயங்களுக்குப் பின், சேர நாணயங்கள் மட்டும் கிடைக்கவில்லை, அதைத் தேடிச் சில ஆண்டுகள் அலைந்தேன்.
மதுரையைச் சேர்ந்த சிறு வணிகர் ஒருவர், ஐந்து நாணயங்களைக் கொண்டு வந்து காட்டினார். அந்த
நாணயங்களின் பின்புறம் வில், அம்பு
பொறிக்கப்பட்டிருந்தன. அந்த நாணயத்தைப் பார்த்ததும், என் வாழ்க்கையில் உச்சகட்ட மகிழ்ச்சியை அடைந்தேன்.
இதற்குக் காரணம், தமிழ்த்தாய் அருள்தான். அந்த நாணயம் எங்கு கிடைத்தது என அவர் கூறவில்லை. கரூர்
பகுதியில் கிடைத்திருக்கலாம் என முடிவு செய்து, அங்கு சென்றேன். கரூரில் சிறுபாத்திரக் கடைகளில், இந்த வகை நாணயங்கள் குவிந்து கிடந்தன.
இதுகுறித்து விசாரித்த போது, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பழங்குடி இனத்தவர் ஆற்றில் தங்கத்துகளைத் தேடி
சலித்தபோது,
நாணயங்கள் கிடைத்தது தெரிய வந்தது.
ஆனால், பழைய பாத்திர
வியாபாரிகள்,
பெரும்பாலான நாணயங்களை உருக்குவதற்கு, திருப்பூர், "ரோலிங்மில்'லுக்கு அனுப்பியது தெரியவந்ததும் நம் வரலாற்று பெருமை
தெரியாமல் அழித்து விட்டனரே என்ற அளவில்லா வருத்தம் ஏற்பட்டது.
கடந்த 2000
ஆண்டுகளுக்கு முன் சேர நாட்டிற்கும், ரோமாபுரிக்கும் உள்ள தொடர்புகளை இந்த நாணயங்கள் எடுத்துக் காட்டுகின்றன.
நான் சேகரித்த நாணயங்களில் "லேட் ரோமன் காப்பர்' நாணயங்கள் உள்ளன. பிற்கால ரோமானியர்கள் பயன்படுத்திய
நாணயங்களும் உள்ளன. அவற்றில் உள்ளவற்றை என்னால் படிக்க முடியவில்லை.
ரோமானிய நாணயங்கள்: இந்த நாணயங்கள் குறித்த ஜெர்மனி
பேராசிரியர் ஒருவரின் மாணவர் ஆய்வு செய்து இருந்தார். அவரிடம் சில நாணயங்களின்
புகைப்படங்களை அனுப்பி அதில் உள்ள எழுத்துக்கள் குறித்து விளக்கம் கேட்டேன்.
அதற்கு அவர் "என்னால் எந்த உதவியும் செய்ய முடியாது' என்று எழுதி புகைப்படங்களை திருப்பி அனுப்பினார். அந்த
பதில் என்னை வருத்தப்பட வைத்தது.
பின் லண்டன் சென்ற போது, அங்கு இருந்த மேக்டோவல் என்ற பேராசிரியர் லண்டனில் உள்ள 150 ஆண்டுபழமையான நாணயவியல் நூலகத்துக்கு அழைத்துச் சென்றார்.
அங்கு நான் கேட்ட நூல் இருந்தது.
அதன் மூலம் நாணயங்களில் உள்ளவற்றுக்கு விளக்கம் பெற்று
"லேட்ரோமன் காப்பர் காயின்ஸ் பிரம் கரூர் அண்டு மதுரை' என்ற நூலை எழுதினேன்.
அந்நூலை அப்போதைய மத்திய அமைச்சராக இருந்த சி.
சுப்பிரமணியம் தான் வெளியிட்டார். அந்த நூலை பார்த்த பின் லண்டனில் உள்ள
"ராயல் நியூமிஸ்மேட்டிக் சொசைட்டி' எனக்கு "எப்.ஆர்.என்.எஸ்' பட்டம் கொடுத்து உறுப்பினராக்கியது.
மேலும் அவர்களின் நாணயம் தொடர்பான நூலில, என் நூலுக்கான மதிப்புரையும் எழுதினர்.
எனக்கு உ.வே.சா. வழிகாட்டினார்; அவரின் வழியில் சென்றேன். தமிழுக்குச் சிறப்பு செய்ய வேண்டும் என்று
ஆசைப்பட்டேன்.
No comments:
Post a Comment