
உங்களைப்பற்றி?
சாய்பிரியா: பிறந்தது வளர்ந்தது
எல்லாமே சென்னையில் தான். அப்பா சஞ்சீவி பிரபல ‘ரேமண்ட்ஸ்’ ஆடை நிறுவனத்தில் ஆலோசகராக உள்ளார். அம்மா இப்போது இல்லை.
கோவையில் ஆடை வடிவமைப்பு படிப்பை படித்து முடித்து அது தொடர்பான
பணியில் சேர்ந்தேன். சிறிது காலத்திலேயே புகைப்படத்
துறைக்கு தாவிவிட்டேன்.
ஆடை வடிவமைப்பு பணியிலிருந்த
உங்களுக்கு புகைப்பட ஆசை எப்படி வந்தது?

புகைப்பட பயண அனுபவங்கள்
குறித்து?
சாய்பிரியா: ஆரம்பத்தில் கேமராவை கையிலேந்த
கூச்சமாக இருந்தது. ஆனால் கலாச்சாரத் தேடலும், பயணங்களில்
கிடைத்த அனுபவமும் இன்று என்னை தொழில்முறை புகைப்படக் கலைஞராக உருவாக்கியிருக்கிறது. புகைப்பட துறையில்
ஐக்கியமானதுடன் புகைப்படத் தேடல்கள்
விரிந்தன. சென்னையை கேமரா கண்களில் ரசித்த பின்னர், இயற்கை எழில் கொஞ்சும் ராமேசுவரத்தை நோக்கி பயணத்தை தொடங்கினேன்.
புகைப்படங்களுக்காக மேற்கொண்ட முதல் பயணம் அது.
பாம்பன் பாலத்தில் 2.9 கி.மீ. கடலின் அலைக்கு இணையாக காற்றின் சுழற்சிக்கு ஈடுகொடுத்து
நடந்துசென்று வித்தியாசமான படங்களை
எடுத்தேன். அதைப்பார்த்து என் நண்பர்கள் வெகுவாக பாராட்டினார்கள். அந்த உற்சாகத்தில் புகைப்படப் பயணத்தின் தூரமும், தங்கும்
காலமும் அதிகரித்தது. வீட்டைப் பிரிந்து 20 நாட்கள்
வரையிலும் தனியாக வெளியூரில் தங்கி
புகைப்படங்களை எடுத்து வந்திருக்கிறேன். பெண்கள் இப்படி இருக்கக்கூடாது, வேறு
இடங்களில் தங்கக்கூடாது போன்ற சித்தாந்தம் என் புகைப்பட
ஆர்வத்தை தடுப்பதில்லை. விரும்பிய இடத்திற்கு நினைத்த நேரத்தில் கிளம்பி விடுவேன்.
எங்கெல்லாம் புகைப்பட பயணம்
சென்றிருக்கிறீர்கள்?

புகைப்பட பயணங்களில் மறக்க
முடியாத அனுபவம்?
சாய்பிரியா: வடமாநிலத்தில் நடந்த கும்பமேளா போய் எடுத்த படங்கள்
என் வாழ்க்கையில் மறக்க முடியாதது. கங்கையில் குளிக்க
நாக சாதுக்கள் என்றழைக்கப்படும் நிர்வாண சாதுக்கள்
இமயமலையிலிருந்து இந்த மாதிரியான திருவிழாக் காலங்களில் மட்டுமே இறங்கி வருவார்கள். அவர்களை படம் பிடிப்பது சவாலான
ஒன்று. சில சாதுக்கள் படம் எடுப்பவர்களை ஆசீர்வாதம்
பண்ணுவார்கள்; சிலர் கோபத்துடன் பார்ப்பார்கள்; சிலர்
யாராவது தங்களை நெருங்கிவந்து படம் எடுத்தால் கையில்
இருக்கும் சூலாயுதம் போன்ற கம்பிகளால் கேமிராவை அடித்து நொறுக்கிவிடுவார்கள், அவர்கள்
சுபாவம் அப்படி என்பதால் அவர்களை எதுவும் சொல்லவும்
முடியாது, செய்யவும் முடியாது.
இந்த சாதுக்களை படம் எடுக்க
காலை 6 மணி முதல் மதியம்
2 மணிவரை கங்கை ஆற்றங்கரையில்
சாப்பாடு கூட இல்லாமல் நின்று கொண்டிருந்தேன்.
உடையும் அபாயத்திலிருந்த என் கேமராவையும் அதன் பாகங்களையும்
என் உயிரை காப்பது போல் காப்பாற்றினேன். நெடுநேர பதைபதைப்பான காத்திருப்புக்கு
பின் சாதுக்களின் வரம் கிடைத்தது போல யாருக்கும் கிடைக்காத
தத்ரூபமான படங்கள் நிறைய கிடைத்தது, அது என்
மனதிற்கு நிறைவான படங்களாகவும் அமைந்தது.

புகைப்பட துறையில் கால்
பதிப்பவர்களுக்கு சொல்ல விரும்புவது?
சாய்பிரியா: புகைப்படம் என்பது
பனிமலையை படம் பிடிப்பது அல்ல, அதன் குளிர்ச்சியை உணரச்
செய்வது. புகைப்படங்கள் நம்முடைய இவ்வுலக வாழ்வின் ஞாபகங்களை
எப்போதும் தேக்கி வைத்துக் காட்டும் கண்ணாடிகள். சில புகைப்படங்கள் உலக
வரலாற்றையே மாற்றியுள்ளன. புகைப்படம் எடுப்பது ஒரு கலை அதை
கற்றுக்கொள்ள நாம் நிறைய மெனக்கெட வேண்டும் . கலைநயமான
படங்களை எடுக்க தொழில்முறை கேமராக்களும், புகைப்பட
பயிற்சியும் தேவையில்லை. காட்சிகளை ரசிக்க தெரிந்திருந்தால் போதும்.
அழகழகான புகைப்படங்களை எடுக்கலாம்.
எதிர்கால லட்சியம்?
சாய்பிரியா: புகைப்படக்கலையில் இன்னும் நிறைய சாதிக்கவேண்டும்.
நான் எடுத்த படங்களை கொண்டு புகைப்பட கண்காட்சி நடத்தவேண்டும்.
புகைப்பட பயணத்தின்
சுவாரஸ்யத்தையும், சாகசத்தையும் ரசிக்கும்
விதத்தில் சொல்லி முடித்தார் சாய்பிரியா!
No comments:
Post a Comment