காலம் கரைத்த சாபமா?
சாபங்களின் தீர்ப்பாகியது காலம்
கரைந்து கரைந்து
ஓழுகிப்போவதை சுயமற்றுப் பார்த்திருந்தோம்
பச்சைநிறச் சமிஞ்ஞைகள் அண்மையிலும்
சிவப்புநிறச் சமிஞ்ஞைகள் தூரத்திலும்….. மின்னின
சாபங்களை வலிமையாக்கத் துணையென
அந்தப் பெரிய கவிஞனும் பாடினான்
புகழ்பாடினான் சிந்தைனைத் தெளிவின்றி
சாபம் ஒவ்வொருவர் மீதும்
முக்காடிட்டபடி விரைந்தது
சிலர் கழித்தனர்
யாதுமறியாது சிலர் முழித்தனர்
சாபத்தின் திசைவழியே பயணித்தனர்
உண்டவர்கள் அதனால் உறங்கியவர்கள்
தாம் சாபங்களுக்கு வசப்பட மாட்டோமென்று…
சாபங்களின் தீர்ப்பின் நீட்சியால்
புகழ்பாடிய கவிஞனும்
சில பொழுதுகளில் உள்ளுர நனைந்தும்
வெளிப்படுத்த மறுத்திருந்தான்
தன் கடமையைச் செய்வதில் தவறினான்
உச்சியைப் பிளந்த போது உதறியவர்களும்
உச்சியவர்களுமான
கலவையொன்றின் துகளாகினேன் நான்
உதறியவனாக உதறியவனாக மீண்டேன்
வெண்மையாய்
ஆனால் அவர்கள்
என்ன ஆச்சரியம்
மீண்டார்கள் பளிங்கென
எம்மையும் நாளை நனைப்பீரோ? என்பதாய்
காலத்தை நகர்த்துகிறேன் நான்.
சாபங்களின் தீர்ப்பாகியது காலம்
கரைந்து கரைந்து
ஓழுகிப்போவதை சுயமற்றுப் பார்த்திருந்தோம்
பச்சைநிறச் சமிஞ்ஞைகள் அண்மையிலும்
சிவப்புநிறச் சமிஞ்ஞைகள் தூரத்திலும்….. மின்னின
சாபங்களை வலிமையாக்கத் துணையென
அந்தப் பெரிய கவிஞனும் பாடினான்
புகழ்பாடினான் சிந்தைனைத் தெளிவின்றி
சாபம் ஒவ்வொருவர் மீதும்
முக்காடிட்டபடி விரைந்தது
சிலர் கழித்தனர்
யாதுமறியாது சிலர் முழித்தனர்
சாபத்தின் திசைவழியே பயணித்தனர்
உண்டவர்கள் அதனால் உறங்கியவர்கள்
தாம் சாபங்களுக்கு வசப்பட மாட்டோமென்று…
சாபங்களின் தீர்ப்பின் நீட்சியால்
புகழ்பாடிய கவிஞனும்
சில பொழுதுகளில் உள்ளுர நனைந்தும்
வெளிப்படுத்த மறுத்திருந்தான்
தன் கடமையைச் செய்வதில் தவறினான்
உச்சியைப் பிளந்த போது உதறியவர்களும்
உச்சியவர்களுமான
கலவையொன்றின் துகளாகினேன் நான்
உதறியவனாக உதறியவனாக மீண்டேன்
வெண்மையாய்
ஆனால் அவர்கள்
என்ன ஆச்சரியம்
மீண்டார்கள் பளிங்கென
எம்மையும் நாளை நனைப்பீரோ? என்பதாய்
காலத்தை நகர்த்துகிறேன் நான்.
No comments:
Post a Comment