Monday, January 04, 2016

எடுத்துச் செல்லட்டும் உனது கவிதைகளை……

பகலவனின் அஸ்தமனமும்
உனது மரணமும்
இருளாய்ப் படர்கின்றன
எமது முகங்களில்
எங்கள் நடைபாதையில்
நாம் உன்னை இழந்தோம்.
பூமிக்கும் வைகறைப் பொழுதிற்குமிடையில்
நீ மூன்று கவிதைத் தொகுதிகள் படைத்தாய்
பயணிப்போர் தனித்துப் போவதிலும்
பயணங்களைக் கடந்து செல்ல
எடுத்துச் செல்லட்டும்
உனது கவிதைகளையும்
இச் சுழலும் கோளம்
அழித்துவிடப் போவதில்லை.
ஓர் படைப்பாளியின்
படைப்புகளின் ஆயுட்காலத்தை
என் வீட்டிற்கும் நான்
எடுத்துச் செல்கின்றேன்
முளை விதைகளையும் உன் கவிதைகளையும்
நமது வயல்கள் இன்னமும் உழப்படவில்லை.
கிடுகு வேலிகளும் தகரப் படலைகளும்
சுற்று மதில்களாயும் இரும்புக் கேற்றுக்களாயும்
உரு மாறுகின்றன.
எமக்குத் தேவை
விளக்கும் படைப்புக்களும் உணவும்
கடலுக்குத் தெரிகிறது
மக்களெனும் அலை குமுறியெழவில்லையென்று
இனிப் படைப்புக்களே தீ மூட்டவேண்டும்……
…ம் !

No comments:

Post a Comment

கணவன் - மனைவி உறவைவிட உன்னதமான உறவு உண்டா?

கணவனுக்குத் தலைவலி. நெற்றியை அழுத்திப் பிடித்துக் கொண்டு சோபாவில் உட்கார்ந்திருக்கிறான். மனைவி கொஞ்சம் தைலம் எடுத்து வந்து, கணவன் அருகில் அம...