Thursday, December 22, 2016

ஒரு பிடி ஊசிமழை கவிதைத் தொகுப்பிலிருந்து...



சடலமாக வாழ்வதில் பயனுளதோ?




உனக்கும் எனக்கும்
அரிதாய் நிகழும் ஊடல்பொழுதுகளில்
யாருமற்ற
நெடுந்தொலைவு வாகனப் பயணத்தின்போது
வழித்துணையாயிருந்து
நம்மிருவரையும் ஆற்றுப்படுத்துவது என்னவோ
நிழலாகப் பின்தொடரும்
அடர்மௌனமே என்றாலும்
கொடும்நஞ்சை என்னுள்
வேகமாகப் பாய்ச்சிட்ட
உன் சினக்கொடுக்குகள் கண்டு
என்னால் பரிதாபப்படத் தான் முடிந்தது.
பந்தம் என்பது வெறும் தாலியிலோ,கணையாழியிலோ இல்லை.
அதுபோல,சட்டமும் சரி
கட்டப்பஞ்சாயத்தும் சரி
பாலையாகிப்போன உறவுக்கு வித்தூன்ற முடியுமா?
அந்தக்கவலை உனக்குச் சிறிதும் வேண்டாம்.
அகிம்சை வழி என்னுடையது.
அந்த வகையில் நான் மிகமிகப் பிற்போக்குவாதியாகவே
இருந்து தொலைக்கிறேன்.
வாழ்க்கை என்பது போட்டியல்ல-
தொடர்பயணம்.
பிள்ளைகளின் நல்வாழ்வின்பொருட்டு
நீ தரும் எந்தத் துன்பத்தையும் சகித்துக்கொள்ள
நான் எப்போதும் தயாராகவே உள்ளேன்.
உனக்கு நான் எப்படியோ
எனக்கு நீ உயிர்!
உயிரைப் பிரிந்துவிட்டு
வெறும் சடலமாக வாழ்வதில்
எனக்குத் துளியும் விருப்பமில்லை.


    பெண்ணின் அறைகூவல்

 ஓர் ஆளில்லாத வீட்டில்
அழுத்தப்படும் அழைப்புமணியாக
என் தூய்மையான அன்பு
உன்னால் ஒவ்வொருநாளும் வேண்டுமென்றே
வீணடிக்கப்படுகின்றது
ஆனாலும்
உனக்கிடும் என் படையலை
இந்தத்தடவையாவது
ஒழுங்காகத் தின்னுப்போ!
                                                                                                                 அவள்  
என்
வீட்டுத்தோட்டத்தில் பூத்திருக்கும் ரோஜாவென
இருட்டுக்கிராமத்தில் ஒளிவீசும் நிலாவென
ஒற்றை வானத்தில் சிறகடிக்கும் புதுப்பறவையென
ஆளில்லா நதியில் கடக்கும் மிதவையென
பாலைநிலத்தில் பொழியும் மழையென
வெறுமை ஆகாயத்தில் உதித்த வானவில்லென
திக்குத்தெரியாதக் காட்டில் திசைகாட்டும் விளக்கென
வழக்கொழிந்த மொழிக்கூட்டத்துள் வாழும் கன்னித்தமிழென
பஞ்சம்பிழைக்கும் வாழ்க்கையில் பாயும் ஜீவநதியென
அடங்கொணாச் சிரிப்பில் துளிர்க்கும் ஆனந்தக் கண்ணீரென
இதயக் கருப்பைக்குள் காதலை விதைத்து
தாய்மைச்சுகத்தை அள்ளித் தந்திட்ட
மற்றுமொரு தாய்
நீ.




எதிர் குரல்


என் காயங்களுக்கு உதவாதவை
உன் ஆறுதலும் கவிதைகளும்
என் கண்ணீருக்குப் போதாதவை
உன் சிறு அரவணைப்பும் கைக்குட்டைகளும்
என் தொன்றுதொட்டுத் தொடரும்
கவலைகளுக்கு முழுத்தீர்வு வழங்காதவை
உன் பொய்யான அக்கறையும்
போலியான சலுகைகளும்
எனினும்
மீண்டும் மீண்டும்
முளைக்கவும்
உயிர்த்தெழவும்
உன்னைவிட எனக்கு நன்றாகவே
சொல்லித்தந்து
சென்றிருக்கின்றாள்
ஓரு பழைய ஆதிமனுஷி.

 எதிர்பார்ப்பு

விலையில்லா அரிசி
விலையில்லா வேட்டி சேலை
விலையில்லா பசுமைவீடு
விலையில்லா தொலைக்காட்சி
விலையில்லா மின்விசிறி,மிக்ஸி,கிரைண்டர்
விலையில்லா ஆடு,மாடு
விலையில்லா படிப்பு மற்றும் பாடநூல்கள்
விலையில்லா மிதிவண்டி
விலையில்லா மடிக்கணினி
விலையில்லா காலனிகள்
விலையில்லா புத்தகப்பை,குறிப்பேடுகள்,வரைபட புத்தகம்,கணித கருவிப்பெட்டி
விலையில்லா முட்டையுடன் கூடிய சத்துணவு
விலையில்லா பள்ளி மாணவர்களுக்கான பேருந்துப் பயணம்
விலையில்லா தாலிக்கான தங்கம் மற்றும் உதவித்தொகை
விலையில்லா கர்ப்பிணிகளுக்கான நிதியுதவி
விலையில்லா மகப்பேறுக்கால முன்,பின் கவனிப்பு
அனைத்தும் சரி
நாற்பதை நெருங்கிக்கொண்டிருக்கும்
அக்காளுக்கு யார் தரப் போகிறீர்கள்
ஒரு விலையில்லா நல்ல வரனை?

Öòடூ பâநு

å_é ïç,Øடீ¿  Ø«ஏனுà åáß·
Øï·Âï½Ý Ø,_çé ¶ïஷஏ© ¼Ãß·
ÃÞÄனு ¸çÂï ¨ºணனு மயட
மடீ_ ¼çéÂணனு Öºண மÂþ_é
»¼« Öòõ| þ¦Âணஅ
உடூáனு அ½டீஏÝ ½Âணஅ
¨ºïடூ மஏµ¡னு ¨ºïடூ மáஒனு
ºþ© ¼Ãª¼,
ªனு Øமனு¸© ¼Ãª¼,
,வறïØºணனு Öòáâநு
¶ÍறுடீòÂïï¼ம ஷÂïáâநு
,வறஏ ,வறஏ ¨¿Íò
¼Ãç,டழòÍஅ ளயÝ|
ØமணØ,çé_ ½டீழ_çé
¼,窩Ãâ| Öஆ பமØ,ஏஜ®_çé.
¼Ã«¡ ,òனு í¦ºáனு ¨Â?
வஜª_ í¦ வஜÄ«னு ÖòÂண!
,çáÂíßÄçé ÎÝமஏனு
óöடீ பரÅçéß ¼ÄÝமஏனு.

                                         இடவல மாற்றம்
 பூமி போர்த்திய பனி விரிப்பை
மெல்ல உலர்த்திக்கொண்டிருந்த
ஆதிச்சூரியனைக் கனிந்த கோவைப்பழமென
அறியாதக் கிள்ளையொன்று கொத்தி விழுங்கிவிட
தத்தம் சுற்றுவட்ட பாதையை மாற்றிக்கொண்டன
அத்தனைக் கோள்களும்அதன் துணைகளும்
நான் மட்டும் தனியனாய்.

 கலை வளர்த்தான் கதை

 கொழுந்துவிட்டெரியும் பசியுடன்
கர்ண அரிதாரத்தில்
விரைந்தோடும்
வறண்ட மாநகரில்
கையேந்தித் தவிப்பவனுக்கு
ஆகக் கடைசியாகத் தருமமிட்டான்
மற்றுமொரு பரதேசி மனமிரங்கி.


                                                                                      கண்ணோட்டப் பிழை

அவன் இந்த உலகத்தை
ஒரு திரைக்குப் முன்புறமிருந்து
அமைதி தழுவப் பார்த்துக் கொண்டிருக்கிறான்
அவனது சாமர்த்திய வடிகட்டியில்
அத்தனையும் தூக்கிவீசப்படும் கசடுகள்
வல்லாண்மையின் கோர வலைகளில்
வன்புணர்ச்சிகளின் அமில வீச்சுகளில்
அல்லல்படும் சக உயிரிகளின்
அபயக்குரல் கட்புலனாகா மீயொலி அவனுக்கு
குறையொன்றுமில்லாத வாழ்க்கைக்கு வாக்கப்பட்ட
நினைப்பில்
வருவோர் போவோர் புலம்புவோரிடத்தில்
வெறும் வாய்வாள் வீசிக்கொண்டு
எக்காலமும் பொழுதைக் கழிக்கும் அவனை
இந்த உலகமும்
ஒரு திரைக்குப் பின்புறமிருந்து
அமைதி பொங்க உற்றுநோக்கிக் கொண்டிருக்கின்றது


ஆகக் கடைசியாகத் தருமமிட்டான்
மற்றுமொரு பரதேசி மனமிரங்கி.

No comments:

Post a Comment

கணவன் - மனைவி உறவைவிட உன்னதமான உறவு உண்டா?

கணவனுக்குத் தலைவலி. நெற்றியை அழுத்திப் பிடித்துக் கொண்டு சோபாவில் உட்கார்ந்திருக்கிறான். மனைவி கொஞ்சம் தைலம் எடுத்து வந்து, கணவன் அருகில் அம...