Friday, December 23, 2016

என் தேவதை...

கல்லறையும் கண்டுவிட்டேன் காதலியே
நீயில்லா இதயம் எனை கொன்றதனால்
கண்ணீர் வற்றி காதலோடு நானழுக
காலனவன் கடைசி இடம் சேர்த்துவிட்டான்,
அன்பே!
இல்லற மெனும் சிறை விடுத்து
விடுதலை கொண்டேன்
நல்லற மெனும் யாசகனாய் வந்த
நல்ல இட மிதுவென கண்டுவிட்டேன் காதலியென் எரியுண்ட தேகமிது
தனிமையிலே கல்லறையில் கருமேக காற்றாகு முன்காதலது நிழலாகி,,,
நினைப்பு மனம் நீ வேண்டிய தேகம்தனில்
எரியுண்டு மேங்குதடி இதயம்...
இடைவெளி விழுந்த காதல் தனை
இணைத்து மனம் இக்கணமே என்னாவி
ஏகாந்த காதலோடு நான் தினம்
கல்லறை வாசலில் காத்திருப்பேன்
நீ வரும் தேதிவரை,,,,
இரங்கலில் அஃதில்லை என்னுயிரே
எதிரிகள் இல்லாத ஏகாந்த மேதான்....
கல்லறையில் நீயும் நானும் இன்பமுற
இறுதி என்ப தில்லாயிரு இதயத்தை இணைப்போ மன்பு இனிமையிலே
இன்பத் தனிமையிலே!
இதயமும் இணைந்தது முன்னே
காதலில் கணமில்லா!
சுற்றங்கள் பிரித்தது பின்னே
மோதலில் மனமில்லா!
சாதி மதமெனும் அரக்ககுல மாக்களவர்
கொன்றதுவோர் ஆயுதத்தால் பெண்ணே
கண்டதுநம் காதலது குருதி கொட்ட
ஓராயிரம் ஈட்டிதய்த்த செஞ்சதுபோல்
"எத்தனை முறை எய்த்தாலும்
எத்தனை முறை எரித்தாலும்"
எந்தனுயிர் காதலுக்கு தோல்வி யென்பதேது!
நீ அறிவாய் காதலே தேகம்
யுன்னுயிர் இதயம் கொண்ட காதலி
என் தேவதை....
கல் முள் நிறைந்த கல்லைறை தனில்
கம்பனும் கண்டிராத கவிதை நான்- நல்
சொல் முல் நிறையா இல்லற மதில்
காலனும் கண்டிழுத்த பேதை தான்!!!
காதல்மனம் கல்லறையில் பேசுவதேன்
பேதை மனம் பித்தாகி போனதனால்
சாதல் ஒன்று இல்லை எனின் இவ்விடத்தே,
இப்பிறப்பின் நரகமது நீடிக்குமே!!!
தூரிகைசுழ் நந்தவன மீதினிலே மாண்டவர்..,
மெய் துறந்த மானிடர்காண் சொர்க்கமது இந்தவனம்
சேராத காதலர்தன் காதலொடு
செந்தழலில் குளிக்குமவர் சொந்தவனம்...
வெண்சாம்பல் பூசுபவன் ஈசனிங்கே ஆட அரங்கேறும் அழகுமிகுந்த கைலையிது
சமரசமும் உலவுகின்ற வீடு அவன்!!!
யாரவனும் உரிமை அன்று இவ்விடத்தே என்போல்,
காதல்கொண்டு கார்முகிலில் கால் பதித்து
சொர்க்கம் தனில் ஏணி போட்டு ஏரிடலாம்
காதலி உன் கைபிடித்து நாட்களாச்சு
நஞ்சு கொண்ட வஞ்சகரின் வார்த்தையினால்
பிஞ்சு மனம் வாடியதே மறக்கவில்லை...
சேர்த்து வைக்க இவ்வுலகில் நாதியில்லை
எட்டி யுதைத்த கால்களே கல்லறைவரை
வீடு தாண்டி வீதி மறைத்து விட்டனரே
கோர்த்து வைத்த காதல் என்னில்
கொண்டு வந்தேன் பூமாலை...
எத்தனைபேர் என்னைப்போல் இங்குரங்க
பார்த்த உடன் அழுகை நின்று
ஆனந்தம் ,
களிப்போடு கண்துடைத்து காத்திருக்கேன்...
காதலி யுன் நின் வரவை வரவேற்று
வாழ்த்துரைக்கும் மனம் கொண்ட நல் சொந்தங்களே வாழ்கின்ற இடமிதுவே
சேர்ந்தது தானிந்த சொர்க்கம் தனில்...

No comments:

Post a Comment

கணவன் - மனைவி உறவைவிட உன்னதமான உறவு உண்டா?

கணவனுக்குத் தலைவலி. நெற்றியை அழுத்திப் பிடித்துக் கொண்டு சோபாவில் உட்கார்ந்திருக்கிறான். மனைவி கொஞ்சம் தைலம் எடுத்து வந்து, கணவன் அருகில் அம...