Friday, December 23, 2016

எங்கே விவசயிகள்...

வருடந்தொறும் வருகிறது தேசிய
விவசாயிகள் பெருதினம்..
செய்தியும் வருகிறது விவசாயி
தற்கொலையென்று அனுதினம்..
அற்ப பணத்திற்காக சொற்ப
நிலம்தானே என்றெண்ண வேண்டா!
சிற்ப வியர்வைத்துளிகள் சிந்தி
உழைத்தான் விவசாயி அதிலே!
பசிதீர்க்க அவதரித்த மாமனிதர்கள்
பட்டினியில் வாடக் காரணம்தான்
பணப்பசி கொண்ட உதவாகரைகள்
இன்னும் தேசத்தில் உலாவுவதால்!
வாழ வைக்கும் அவர்களை
வாழ விடாமல் செய்துவிட்டு
வாழ்ந்திடலாம் நன்றிங்கு உளம்
மகிழ்ந்திடலாம் என்றெண்ண வேண்டாமே!
கண்கண்ட ஊரெதிலும் விளைநிலங்கள்
காணவில்லை விவசாயியையும் காணவில்லை
எந்தன் கண்செய்த குற்றமல்லவோ,
என்நாட்டில் விவசாயம் செழிக்கக்காணாதது?
உணர்க மக்கள்!
வாழ்க விவசாயி!
வளர்க விவசாயம்!
உயர்க பாரதம்!

No comments:

Post a Comment

கணவன் - மனைவி உறவைவிட உன்னதமான உறவு உண்டா?

கணவனுக்குத் தலைவலி. நெற்றியை அழுத்திப் பிடித்துக் கொண்டு சோபாவில் உட்கார்ந்திருக்கிறான். மனைவி கொஞ்சம் தைலம் எடுத்து வந்து, கணவன் அருகில் அம...