Friday, December 23, 2016

இறந்த பின்னும் வாழ்கிறோம்: அறிவியல் ஆராய்ச்சி அளிக்கும் உண்மை!!




நியூ ஸயின்டிஸ்ட்’ NEW SCIENTIST என்ற பிரபல விஞ்ஞான பத்திரிக்கையில் இந்த வாரம் ஒரு சுவையான செய்தி வந்துள்ளது.இறந்தபின்னும்நம்முடைய ஜீன்கள், அதவது மரபணுக்கள் கொஞ்ச நேரத்துக்கு உயிர்வாழ்கின்றன என்று அமெரிக்க ஆராய்ச்சி நிரூபித்துள்ளது.

இதை நம்முடைய யோகிகளின் வாழ்க்கையுடன் ஒப்பிடுவது, இந்துமதத்தின் அறிவியல் பின்னணியை நன்கு விளக்கும்.

இறந்து போன மீன்களின், சுண்டெலிகளின் ஜீன்களை ஆராய்ந்ததில் அவைகளின் மரபணுக்கள் இரண்டு நாட்களுக்கு உயிரோடிருந்தது தெரிய வந்தது.

ஒருவர் இறந்துவிட்டதாக, டாக்டர்கள் அறிவித்த பின்னரும் இப்படி ஜீன்கள்/ மரபணுக்கள் வாழ்வதால் அவர்இறந்ததுஉண்மையா? சட்ட பூர்வமானதா? என்ற புதிய கேள்விகளை இது எழுப்பும். இறந்து போனவர்களின்  மாற்று உறுப்புக்ளை மற்றவர்களுக்கு அளிப்பதிலும் புதிய அணுகுமுறை வரும்.

சியாட்டில் நகரிலுள்ள வாஷிங்டன் பல்கலைக்கழக டாக்டர் பீட்டர் நோபிள்ஸ் நடத்திய ஆய்வில் மீன்களின் ஒரு குறிப்பிட்ட உறுப்பில் 548 ஜீன்களும், எலிகளின் 515 ஜீன்களும் இறந்த இரண்டு நாட்களுக்குப் பின்னரும் உயிரோடிருந்ததைக் கண்டார். நோய்வாய்ப்பட்ட மனிதர்கள் , செத்துப் போன பின்னர் அவர்களின் உடலில் 12 மணி நேரத்துக்கு பல ஜீன்கள் சுறு சுறுப்புடன் செயல்பட்டதையும் கண்டார்.


2kanchi on mat


கருத்து:-

நோய்வாய்ப்பட்ட மனிதர்கள் விஷயத்திலேயே 12 மணி நேரத்துக்கு மரபு அணுக்கள் உயிரோடிருக்குமானால், வாழ்நாள் முழுதும் யோகம், ஆசனம் செய்தவர்களின் உடலில் இறந்த பின்னரும் ஜீன்கள், சுறுசுறுப்புடன் செயல்படுவதில் வியப்பில்லை.


செத்தும் கொடுத்தான் சீதக்காதி என்ற முஸ்லீம் பெரியவரின் வாழ்க்கையில் , அவர் புதைக்கப்பட்ட பின்னரும் , தானம் வாங்க வந்த புலவருக்கு, அவர் கை நீட்டி மோதிரத்தைக் கொடுத்ததாக அறிகிறோம். இதுபற்றி முன்னரே ஒரு கட்டுரையில் எழுதியுள்ளேன். மஹாபாரத அதிசயங்கள் பற்றிய கட்டுரையில் இறந்தவர்களின் உடலிலிருந்து, உயிர்கள் உண்டாக்கப்படதை எழுதிவிட்டேன்.


ஒரு யோகியின் சுய சரிதை என்ற புத்தகத்தில் பராஹம்ச யோகானந்தா(1893-1952) பற்றிய அதிசய செய்தி உள்ளது. அவர் இறந்து போய் இருபது நாட்களுக்குப் பின்னரும் அவர் உடல் அழுகவில்லை; அத்தோடு ஒளிவீசிக்கொண்டு திவ்ய தேஜசுடன் விளங்கியது என்று அமெரிக்காவிலுள்ள லாஸ் ஏஞ்சலிஸ் மார்ச்சுவரி/ சவக் கிடங்கு டைரக்டர் ஹாரி டி.ரோவ் எழுதியுள்ளார்.
            திருக்கோவிலுர் சுவாமி ஞானானந்தா சமாதி அடைந்த போது, அவர்களுடைய சிஷயர்களுக்கு ஒரு சந்தேகம் ஏற்பட்டது; சுவாமிகள் அடிக்கடி சமாதி நிலைக்குச் சென்று 150 ஆண்டுகளாகியும் இறக்காததால், இந்த முறையும் இப்படி அதிசயம் நடக்குமோ என்று காத்திருந்தனர். ஆனாலப்படி சமிக்ஞைகள் ஏதும் வராததால், காஞ்சி பரமாசார்ய சுவாமிகளிடம் (1894-1994) சென்று கேட்டனர். அவரும் சில நாட்கள் பொறுத்திருந்து அடக்கம் செய்யலாம் என்று கருத்து தெரிவித்தார்.

            அதர்வவேத, ரிக் வேத மந்திரங்களில் மரணம் பற்றிய மந்திரங்களில் உள்ள கருத்துகள் எதிர்காலத்தில் உண்மை யென்று நிரூபிக்கப்படும். இவை எகிப்திய மரணப் புத்தகத்தில் (THE BOOK OF DEAD தி புக் ஆப் டெட்) உள்ளதைப் போல இருப்பதையும் ஒரு ஆரய்ச்சிக் கட்டுரையில் காட்டியுள்ளேன்.

ஒருவன் மரணம் அடைந்தவுடன் அவன் ஆவி உடலில் இருப்பதாகவும், சிதைத்தீ உடலில் பட்ட பின்னரே ஆவி வெளியேறும் என்பதும் இந்துக்களின் நம்பிக்கை.


மேலும் 12 நாட்களுக்குப் பின்னரே அது பூமியைவிட்டு மேலுலகம் செல்லும் என்பதும் இந்துக்களின் நம்பிக்கை. இதனால்தான் உலகம் முழுதும் 13 நாட்களுக்கு அரசு துக்கம் அனுஷ்டிக்கப்படுகிறது. கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படுகிறது.

            உடலில் இருந்து வெளியேறும் ஆவிக்கு, இருளில் எங்கு செல்வது என்று தெரியாதாகையால், ஒருவர் இறந்த இடத்தில் விளக்கு ஏற்றிவைப்பதும் இந்துக்களின் வழக்கம். இதை மற்ற மதங்களும் பின்பற்றி மெழுகு வர்த்தி ஏற்றிவைக்கின்றனர். ஒருவர் இறந்த இடத்தில், இந்துக்கள் 12 நாட்களுக்கு விளக்கு ஏற்றிவைப்பதும் இதனால்தான். 13ஆவது நாளன்று ஆவி, இறந்த இடத்திலிருந்து மேலுலகத்துக்குப் பறந்துவிடும். கருடபுராணம் மற்றும் புரோகிதம் செய்துவைக்கும் பிராமணர்களின் செவிவழிச் செய்திகள் இதுபற்றி நிறைய தகவல்கலைத் தருவர். எதிர்காலத்தில் இவை அனைத்தும் விஞ்ஞான உண்மைகளாகி விடும்.
            நியூ ஸைன்டிஸ்ட் பத்திரிக்கையில் இப்போது வந்துள்ள செய்தி அதில் முதல் படி என்றால் மிகை இல்லை.

No comments:

Post a Comment

கணவன் - மனைவி உறவைவிட உன்னதமான உறவு உண்டா?

கணவனுக்குத் தலைவலி. நெற்றியை அழுத்திப் பிடித்துக் கொண்டு சோபாவில் உட்கார்ந்திருக்கிறான். மனைவி கொஞ்சம் தைலம் எடுத்து வந்து, கணவன் அருகில் அம...