Saturday, January 07, 2017

கணினியும் கை வலியும்



கணினி முன் அமர்ந்து  வேலை செய்யும் போது ஏற்படும் கைவலியைக் குறைப்பது எப்படி:

Ø  கணினிகளுக்கும் நமக்கும் இடையில் உள்ள நேரடியான தொடர்பு நம் கைவிரல்கள், மணிக்கட்டு (Wrists) மூலமாகவே.  இதில் முக்கியமாக, நம் மணிக்கட்டுத் தான் மிகவும் பாதிப்புற்று வேதனை மற்றும் வலியைத் தரக்கூடும்.
Ø  கணினியைப் பயன்படுத்தும் போது நாம் முறையான நிலையில்  உட்கார்ந்திருக்க வேண்டியது அவசியம்.
Ø  இல்லையென்றால் மணிக்கட்டு எலும்பு மற்றும் தசைகளில் வலி ஏற்படும்.
Ø  இந்த வியாதிகள்  தீவிரமாகி முற்றிவிட்டால், உங்கள் வாழ்க்கை முழுவதும் கஷ்டப்பட வேண்டிய நிலை வரும். நீண்ட நேரம் கணினி முன் அமர்ந்து நீங்கள் வேலை பார்க்க வேண்டியிருந்தால் உங்கள் மணிக்கட்டுகளை பாதுகாக்க நீங்கள் சில முக்கியமான வழிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டியது அவசியம்.
அவை எவை எனில்:
உங்கள் மேசை ஒழுங்கான முறையில் இருக்கவேண்டும்:
Ø  உங்கள் மேசை விசாலமான இடத்துடன் ஒழுங்குபடுத்தப்பட்டு, Keyboard  மற்றும் Mouse  சுலபமாக நீங்கள் அணுகும் முறையில் இருக்க வேண்டும். செயற்பாட்டுக்கு போதுமான இடம் இல்லாமல் இருந்தால். நாம் குனிந்து, வளைந்து, நிமிர முடியாமல் அதிக நேரம் வேலை செய்யவேண்டி வரும்.  அதனால் நம் தோள்கள் மற்றும் முதுகு என்பன வலிக்க ஆரம்பித்து விடும்.
உங்கள் Mouse, மற்றும்  Key board சரியான இடத்தில் இருக்க வேண்டும்:
Ø  நீங்கள் கணினி முன் உட்கார்ந்திருக்கும் போது உங்கள் தோள்களை தளர்வான நிலையிலும் மற்றும் உங்கள் உடம்பின் மேற் பகுதியை நிமிர்ந்த நிலையிலும் வைத்திருங்கள். 
உங்கள் Keyboardஇன் மேலே உங்கள்கைகள் சுலபமாக நகரவேண்டும்:
Ø  உங்கள் முழங்கைகளுக்கு எட்டும் தூரத்தில் Keyboard இருக்கவேண்டும்.
Ø  உங்கள் மணிக்கட்டை  மேசை மீது ஓய்வாக வைத்திருங்கள். நீங்கள் குனியவோ அல்லது வளையவோ தேவை இல்லாதபடி உங்கள் Mouse, Keyboard அருகில் இருக்க வேண்டும்.
உங்கள் மணிக்கட்டை கவனியுங்கள்:
Ø  கணினியில் நீங்கள் வேலை செய்யும்போது உங்கள் கைகள், மணிக்கட்டுகள் மற்றும் முன்னங்கைகள் ஆகியன ஒரே நேர்கோட்டில் இருக்கவேண்டும்.
Ø  ஒர் அடிமட்டத்தை (Ruler) உங்கள் கைகளுக்கு இணையாக வைத்து, சரியான நிலையில் நீங்கள் அமர முடியும். அப்படி முடியவில்லை என்றால் உங்கள் மேசை ஒழுங்கான நிலையில் இருக்கிறதா என்று பார்த்து, சரி செய்யுங்கள்.
ஒழுங்கான இடைவேளைகள் விட்டு வேலை செய்யுங்கள்:
Ø  ஒவ்வொரு மணி நேரத்திற்கும் 5 முதல் 10 நிமிடங்கள் இடைவேளை விட்டு ஓய்வு எடுங்கள். உங்கள் கைகள் மற்றும் கால்களை நன்றாக நீட்டி சோம்பல் முறியுங்கள்.
Ø  பின்னர் சிறிது நேரம் நடமாடுங்கள். இதனால் உங்கள் மணிக்கட்டுகள் மட்டுமின்றி உங்கள் உடல் மற்றும் மனம் ஆகியனவும் ஓய்வு பெறும் நீண்டநேரம் உங்கள் மேசையில் அசையாமல் நீங்கள் அமர்ந்திருக்கும் போது, உடல்வலி மற்றும் மன இறுக்கம் ஆகியன உண்டாகும்.
Ø  சிறிது நேரம் நடந்தால் தான் உங்கள்களைப்படைந்த தசைகள் ஓய்வு பெறும்.
உங்கள் Keyboard ஐ பலமாகஅடிக்காதீர்கள்:
Ø  உங்கள் Keyboardல் தட்டச்சுச்செய்யும் போதுலேசாக அழுத்துங்கள். மிகபலமாக அழுத்தும்படி Keyboard  இருந்தால் அதை மாற்றுவது பற்றி யோசியுங்கள்.
Ø  அழுத்துபோது விசைகள் (Keys) எவ்வளவு தூரம் கீழே செல்கிறது என்பதை கவனியுங்கள். மென்மையான Keyboardகளில் மணிக்கட்டுகளை கொண்டு அதிக சிரமத்துடன் நாம் அழுத்த வேண்டியதில்லை.
உங்கள் மணிக்கட்டுகளுக்கு பயிற்சி அளியுங்கள்:
Ø  உங்கள் கதிரையில் இருந்துகொண்டே பலமணிக்கட்டுப் பயிற்சிகளை நீங்கள் செய்ய முடியும். உங்கள் கதிரையில் நிமிர்ந்து அமருங்கள். உங்கள் முன்னங்கைகளை இருக்கைப்பிடியின் மீது வைத்திருங்கள். இப்போதுஉங்கள் உள்ளங்கை கீழ்நோக்கியும் மற்றும்உங்கள் விரல்கள் லேசாக வளைந்திருக்கும்படியும் வையுங்கள். பின்னர் உங்கள் கையை அசைக்காமல் உங்கள் உள்ளங்கையை,மெதுவாக உயர்த்தவும் கீழே இறக்கவும்செய்யுங்கள். ஒரு Tennis Ball  போன்ற உருண்-டையான பொருளை உள்ளங்கையில் வைத்துநன்கு கசக்குங்கள். இப்படி செய்யும் போது உங்கள் மணிக்கட்டு மற்றும் விரல்கள்நன்றாக வலிமை அடையும்.
உங்களை ஒழுங்காக நிலைப்படுத்துங்கள் ((Position Yourself):  
Ø  நீங்கள் வேலை செய்தாலும் அல்லது அமர்ந்திருந்தாலும் எவ்வகையிலும் உங்கள் உடலை ஒழுங்காக, வசதியமான நிலையில் நீங்கள் வைத்திருப்பது அவசியம். இல்லை யென்றால் நீங்கள் சுறுசுறுப்புடனும் மற்றும் அதிக திறனுடனும் வேலை செய்யமுடியாது. மேலும் நல்ல வசதியான நிலையில் இருந்து கொண்டு கணினியில் வேலை செய்தால் உடல்களைப்பு மற்றும் அசதியை தவிர்க்கமுடியும்.
Ø  நீங்கள் சுறுசுறுப்பாக வேலை செய்வதற்குஉங்கள் கணினி மற்றும் அதன் உபகரணங்களை ஒழுங்குபடுத்தி வைத்திருத்தல் வேண்டும். ஒவ்வொருவரும் ஒரு தனிப்பட்ட உடல் அமைப்பு மற்றும் வேலைச் சூழ்நிலையை கொண்டிருப்பார்கள். அதனால் களைப்பை நீக்கஎது வசதியான நிலை என்று முதலிலேயேவரையறுத்துக் கூறமுடியாது. ஆயினும் கீழ்கண்ட யோசனைகள் உங்களுக்கு மிக உதவும் என நாங்கள் கருதுகிறோம்.
உங்கள்முதுகு:
Ø  உங்கள் முதுகை இலகுவாக சாய்ந்து இருக்கச் செய்யுங்கள். உங்கள் கீழ்புற முதுகை தாங்கி நிற்ககூடிய ஒரு கதிரையைத் தேர்ந்தெடுங்கள்.
Ø  மசையின் உயரத்திற்குத் தக்கவாறு உங்கள் கதிரையை வையுங்கள்.
Ø  அதனால் உங்கள் உடலை இயற்கையான முறையில் (Natural Body Posture)  நன்றாக நிலைப்படுத்த முடியும்.
கால்கள் இலகுவானமுறையில் இருக்க:
Ø  கதிரையின் கீழ்பகுதியில் கிடக்கும்பொருட்களை எல்லாம் அகற்றிவிடுங்கள். அப்போது தான் கால்களை நன்கு நீட்டிக்கொண்டு மிக இலகுவாக இருக்க முடியும்.
Ø  தரையில் உங்கள் கால்களை வைத்திருப்பது வசதிக் குறைவாக இருந்தால் ஒரு foot restIஐ வைத்திருங்கள்.
எதையும் எளிதில் அணுகவும்,தோள்கள் மற்றும் கைகளை இலகுவாக இருக்கவும்செய்யுங்கள்:
Ø  உங்கள் Keyboard மற்றும் Mouseஐ ஒரே உயரத்தில் இருக்கும்படி அமையுங்கள். உங்கள் முழங்கை உயரத்திற்கு இவைகளும் இருக்கவேண்டும். மேற்கைகள் உங்கள் பக்கங்களில் தளர்வாக தொங்கும்படி இருக்கவேண்டும்.
Ø  உங்கள் Keyboard, Mouse ஆகிய இரண்டையும் உங்கள் முன்னால் சற்றுஅருகில் நகர்த்தி வைத்தபிறகு தட்டச்சுச்செய்து பாருங்கள்.
Ø  அடிக்கடி பயன்படுத்தப்படும் பொருட்களைகைக்கெட்டிய தூரத்தில் வைத்திருங்கள்.


மணிக்கட்டு மற்றும்விரல்களை இலகுவானமுறையில் வைத்திருங்கள்:
Ø  நீங்கள் தட்டச்சுச் செய்யும் போதும் Mouseஐப் பயன்படுத்தும் போதும், உங்கள் மணிக்கட்டுகளை நேராக வைத்திருங்கள்.  மணிக்கட்டுகளை மேலேயோ, கீழேயோ அல்லது பக்கவாட்டுகளிலேயோ அசைக்காதீர்கள்.
Ø  key boardன் மேலே உங்கள் கைகள் மற்றும் மணிக்கட்டுகள் மிதப்பது போல இருக்க வேண்டும். அப்போது தான் உங்கள்விரல்களை நீட்டாமல், தொலைவில்இருக்கும் keyகளையும் கைகளாலேயே அணுகமுடியும்.
கழுத்தை அதிகம் வளைக்காமலும் முறுக்காமலும் இருங்கள்:
Ø  Monitor உங்கள் முன்னால் நேராக இருக்கும்படி வையுங்கள். உங்கள் முன் நேர் எதிராக உங்கள் ஆவணங்களை வையுங்கள்.
Ø  கண்பார்வையில் விழும்படி உங்கள்ஆவணங்களை ஒரு Monitor Document Holderyல் வைத்திருங்கள். Screenஇன் உச்சிப்பகுதி கண்பார் மட்டத்திற்கு அருகில் இருக்கும்படி அமையுங்கள்.
கண் வலிக்காமல் இருப்பதற்கு:
Ø  ஒரு கையெட்டும் தூரத்தில் உங்கள் Monitorஐ வையுங்கள்.  
Ø  கண்கள் கூசும்வகையில் இருப்பதைத் தவிர்த்து விடுங்கள்.
Ø  உங்கள் Monitorஐதள்ளிவையுங்கள். வேறு வகையில்பிரகாசம் ஏற்படுவதைத் தடுங்கள். ஒளிவருவதை தடுக்க Window Blindsஐ பயன்படுத்துங்கள்.  
Ø  உங்கள் Screenஐ சுத்தப்படுத்தி தெளிவாக வைத்திருங்கள். நீங்கள் கண்ணாடிஅணிபவராக இருந்தால் அவற்றையும்  சுத்தப்படுத்தி வைத்திருங்கள்.  
Ø  உங்கள் வசதிக்குத் தக்கவாறு Monitor  Brightness, Contrast ஐ மாற்றுங்கள்.

No comments:

Post a Comment

கணவன் - மனைவி உறவைவிட உன்னதமான உறவு உண்டா?

கணவனுக்குத் தலைவலி. நெற்றியை அழுத்திப் பிடித்துக் கொண்டு சோபாவில் உட்கார்ந்திருக்கிறான். மனைவி கொஞ்சம் தைலம் எடுத்து வந்து, கணவன் அருகில் அம...