Tuesday, January 03, 2017

தமிழில் சிறுகதை வரலாறும் வளர்ச்சியும்



தமிழ்நாட்டில் ஜெயகாந்தன் செல்வாக்கு உச்சக்கட்டத்திலிருக்கும் சமயம் இலங்கையிலே இரண்டு சிறந்த படைப்பாளிகள் கோலோச்சியிருந்த வரலாற்றையும் அறிந்து கொள்ள வேண்டும். ஒருவர் சென்னைப் பல்கலைக்கழகப் பட்டதாரி. மற்றவர் இலங்கைப் பல்கலைக்கழகப் பட்டதாரி. இருவரும் ஈழத்துச் சிறுகதைக்கு ஆக்கிக் கொடுத்த பங்கு வரலாற்றுப் பெருமையுடை

முழுமையான இலக்கிய அறிவும் சென்னைப் பல்கலைக்கழகப் பட்டமும் பெற்ற எஸ்.பொன்னுத்துரை ஈழத்து இலக்கியப் படைப்பாளிகளுள் ஒரு அபூர்வ மனிதர். இணைவிழைச்சு சம்பந்தமாக எழுதினாலும், கீதையின் உட்பொருளை விளக்க எழுதினாலும், விமர்சன ரீதியாகப் போர் தொடுத்தாலும். இவருடைய தமிழ் நடையும் வார்த்தைத் தொடுப்புக்களும் போற்றத் தக்க விதத்தில் அமைந்தன. தீ’ , ‘சடங்கு’ , என்ற இரு நாவல்களை எழுதிய போது அந்தப் படைப்புக்களைப் பற்றி ஈழத்திலும் தமிழ்நாட்டிலும் எழுந்த விமர்சனங்கள் பலரது கவனத்தையும் பெற்றன. அதே விதமாக இவர் அவ்வப்போது எழுதிய பல சிறுகதைகளில் பதின்மூன்று கதைகளைத் தொகுத்து வீஎன்ற தலைப்பில் வெளியிட்ட போதும், இலக்கிய விமர்சகர்கள் விறைத்துப் பார்த்தனர். காரணம் இந்தத் தொகுதிகளில் காணப்படும் தலைப்புக்களின் தனித் தன்மை, கருப் பொருளில் தோன்றும் தொனிப்பொருள், பொருளுக்கேற்ற தமிழ் நடை, இப்படியாக அத் தொகுப்பைப் படிக்கும் போது  பல்வேறு புதிய உணர்ச்சிகளைப் பெற முடிகின்றது. இந்தத் தொகுப்பிலுள்ள கதைகள் எல்லாவற்றிற்கும் கொடுக்கப்பட்டிருக்கும் தலைப்புகள், திட்டமிட்டு இடப்பட்டவை. கதைகள் எழுதும்போதே இடப்பட்ட திட்டம் என்று தெரிகின்றது. வீ’ , ‘தேர்’ , ‘அணி’ , ‘வேலி’ , ‘மறு’ , ‘ஈரா’ , ‘சுவை’ , ‘சிதை’ , ‘முள்’ , - இப்படி வீஒன்றைத் தவிர மற்றெல்லாக் கதைகளுக்கும் இரண்டெழுத்துத் தலைப்புக் கொடுக்கப்பட்டிருக்கிறதைப் பார்க்கலாம். இது பற்றிக் கனக செந்திநாதன் எழுதிய முன்னுரையில் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்:

கதைகளுக்குச் சிறிய தலைப்பிடும் மோகத்தை ஈழத்தில் எஸ்.பொவே ஏற்படுத்தியவர். புல தலைப்புக்களைப் பெயராகவும் வினையாகவும் பொருள் கொள்ளலாம். இந்த உபாயத்தினால் கதையின் பூடகமான தொனிப் பொருளையும் வெளிப்படையான சம்பவத் தொகுப்பையும் ஒரு சேர எஸ்.பொ காட்டுகிறார். தமிழ் இலக்கியத்தில் இது புதிய முறை

உதாரணமாக, இத் தொகுப்பிலுள்ள தேர்என்ற கதையை எடுத்துக் கொண்டால் குடும்பமே ஒரு தேர் என்ற பொருளிலும், கதையில் வரும் மக்களில் ஒருவனை இஸ்ட புதல்வனாகத் தேர்ந்தெடுப்பதையும்பூடகமாக, தொனிப் பொருளாக ஆசிரியர் காட்டுவது ஒரு புதிய உத்தியாகத் தெரிகின்றது. சித்திரை வருடப்பிறப்பன்று ஒரு வீட்டில் நடைபெறும் நிகழ்ச்சிகளின் தொகுப்பையும் நடமாடும் பாத்திரங்களின் சாதாரண நடத்தைகளையும் அப்படியே படம்பிடித்துக் காட்டுகிறார் ஆசிரியர்.

இதில் என்ன அழகு என்றால், வயது முதிhந்த குடும்பத் தலைவர் ஆறுமுகத்தாரின் இளைய குமாரன் குமாரசாமி, கட்டிலிருந்து பிரிந்து வேற்று மதத்தில் கலியாணம் செய்து கொண்டவன். ஆன்று நல்ல நாளில் வந்து கலந்து கொள்ளப் போகிறான் என்ற சேதியில், பெற்ற பாசம் தத்தளிக்கும் அற்புதமான நிலை, இந்தக் கதையைப் பற்றி விமர்சகர் சாலை இளந்திரையன்’, “லா.ச.ராவின் பாற்கடல்’ , ஜெயகாந்தனின் யுகசந்தி’ , வெல்வராசனின் யுகசங்கமம்ஆகியனவும் தேர்கொண்டுள்ள கருவைச் சுற்றியுள்ளன. ஆவற்றிலே காணமுடியாத கலை முக்கியத்துவத்தை தேர்கொண்டுள்ளது.ஏன்றார்.
            அணிஎன்ற தலைப்பில் மற்றொரு கதை. இது தொழிலாளர் அணியைப் பற்றிய கதை என்ற வெளிப்படைப் பொருளிலும், கதை அமைக்கப்பட்டிருக்கும் புதிய உத்தி ஓர் இலக்கிய அணியாகத் தோன்றவது பூடகப் பொருளிலும் அமைந்துள்ளது கவனிக்கத்தக்கது. ஒரு முடி வெட்டும் சலூன் தொழிலாளி கடைக்கு வருவோர் போவோரையும் வரவேற்றுப் பேசிக்கொண்டே, தன் தொழிலையும் பார்த்துக்கொண்டு, முடிவெட்டும் தொழிலாளி ஒருவர் தேர்தலில் நின்று வெற்றி பெற்றது, தொழிலாளர் அணி திரண்டது, பின்னர் மேல் சாதிக்காரர் கொலை செய்தது போன்ற பல செய்திகளை வேலையோடு வேலையாகச் சொல்லும் உத்தி பிரமாதமாக அமைந்திருக்கின்றது. ஒரு தனி மனிதனின் பேச்சில் பழைய சம்பவங்கள் மாத்திரமல்ல, பேசப்படும் சமயத்திலேயே நிகழும் சம்பவங்களும் அந்தப் பேச்சின் மூலம் வாசகர் தெரிந்து கொள்ளச் செய்யும் உத்தி ஓர் இலக்கிய அணி.
            போன போக்கில் கதை எழுதுபவரல்ல பொன்னுத்துரை. இலக்கிய அமைப்பில் கண்வைத்துக்கொண்டு கதைப்பொருள், உருவ அமைப்பு, புதிய உத்தி என்று திட்டமிட்டு எழுதுபவரென்பது பரவலாக அவர் கதைகளைப் பார்க்கும்போது தெரிகிறது. பேளத்தம், இஸ்லாம், கிறிஸ்தவம் ஆகிய மதங்கள் சம்மந்தப்பட்ட கதைகளை, முறையே வீடு’ , ‘சுவை’ , ‘முள்என்ற தலைப்புக்களில், அந்தந்த மதத்துக்குரிய பரிபாசையுடனும்  புனிதப் பண்புடனும் சித்திரிக்கும் பொன்னுத்துரை வேலி’ , ‘ஈரா’ , ‘மறு’ , ‘விலைஆகிய கதைகளில் பாலுறவுச் சிக்கல்களையும் கிராமிய மக்களின் ஒளிவுமறைவற்ற பேச்சுவார்த்தைகளின் அப்பிசங்களையும் எழுத்தில் வடித்துக் காட்டுவது, கருத்திலும் மொழி வளத்திலும் அவரது திறமையைக் காண்பிக்கின்றது. இந்த இலக்கியத் திறமையைப் பற்றி அவரே விளக்கும் வார்த்தைகள்:

ஓர் இலக்கிய மாளிகையைக் கட்டி எழுப்புவதற்கு எழுத்தாளனுக்குக் கற்கள், சாந்து, வர்ணம், வேலையாள் சகலமுமாகச் சொற்களே பயன்படுகின்றன. ஏதை எதுவாய உபயோகிப்பின் மாளிகை உயிர் அழகு பெறும் என்பதைத் தேர்ந்த எழுத்தாளனே அறிவான். சோற்களைத் தொகுக்கும் முறை நடை’. இந்த நடையைக் கலைப் படைப்பாக இசைக்கும் முறை உத்தி’. கருப்பொருளும் தொனிப்பொருளும் இரண்டறக் கலந்து, கலவி நெறி பயில, நடையும் உத்தியும் உதவுகின்றன.
            எஸ். பொன்னுத்துரை ஈழத்துப் படைப்பாளிகளில் ஒரு சிறந்த எழுத்தோவியர் மட்டுமல்ல, தமிழ் உலகின் சிறுகதைப் படைப்பாளிகளின் முன்வரிசை எளுத்தாளர்களிலும் ஒருவர்.

No comments:

Post a Comment

கணவன் - மனைவி உறவைவிட உன்னதமான உறவு உண்டா?

கணவனுக்குத் தலைவலி. நெற்றியை அழுத்திப் பிடித்துக் கொண்டு சோபாவில் உட்கார்ந்திருக்கிறான். மனைவி கொஞ்சம் தைலம் எடுத்து வந்து, கணவன் அருகில் அம...