தன்னை மகா ஞானியாக கருதிக்
கொண்ட ஒருவர் முல்லாவிடம் விவாதம் புரிந்து,தனது மேதாவித்தனத்தைப் பறைசாற்ற
விரும்பினார்.தனது விருப்பத்தை முல்லாவிடம் தெரிவித்துக் கொண்டார் முல்லாவும்
ஒப்புக்கொண்டார்.முல்லாவின் இல்லத்திலேயே ஒரு குறிப்பிட்ட நாளில் இருவரும் சந்திப்பது என்று முடிவு செய்யப்பட்டது.
குறிப்பிட்ட நேரத்தில் அந்த மஹா
ஞானி முல்லாவின் இல்லத்திற்கு வந்தார். அனால் முல்லா வேண்டுமென்றே அந்த நேரத்தில்
வேறெங்கோ சென்றுவிட்டார். வெகு நேரம் முல்லாவிற்காக காத்திருந்த ஞானி பொறுமை
இழந்து எரிச்சலுடன் வெளியேற முடிவு முடிவு செய்தார்.
அப்போது ஒரு சுண்ணக் கட்டியால்
முல்லாவின் வீட்டுக் கதவில் "அறிவு கெட்ட கழுதை" என்று எழுதிவிட்டு
சென்றார்.அவர் சென்ற பின் முல்லா வீடு வந்து சேர்ந்தார் வாசற்கதவை பார்த்தார்
தம்மோடு விவாதிக்க வந்தவர்தான் கோவத்தில் எப்படி எழுதி இருக்கிறார் என்று புரிந்து
கொண்டார்.
முல்லா சிறிது நேரத்தில் அந்த
ஞானியின் வீட்டிற்கு சென்றார்.அவரிடம் முல்லா "அறிஞர் பெருமானே தாங்கள் என்னை
பொருத்தருள வேண்டும் தங்களை நன் வர சொன்ன நேரத்தில் வேறொரு வேலையாக வெளியே சென்று
விட்டேன். வீடு திரும்பியதும் தான் தாங்கள் வந்து சென்றதை தெரிவிக்கும் வகையில்
வாசற் கதவில் உங்கள் பெயரை எழுதி விட்டு சென்றதை அறிந்து தங்களிடம் மன்னிப்பு
கேட்க ஓடோடி வந்தேன் "என்று அடக்கமாக கூறினார்.இதற்க்கு அந்த ஞானியால் பதில்
ஏதும் கொடுக்க முடியாமல் அந்த மகா ஞானி அசடு வழிந்தார்.
No comments:
Post a Comment