Wednesday, February 01, 2017

உன்னை அறி


உள்ளத்தில் எழும் ஆசைகளை அடக்கி, ஐம்புலன்களையும் அவை செல்லும் போக்கிற்குச் செல்ல விடாமல் தடுத்து வாழ்க்கையின்முக்கியத்துவத்தை உணர்ந்து தமக்கும் தன் குடும்பத்தினருக்கும், தனதுஉற்றார், உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் பயன்பட வாழ்பவர்களேஉண்மையான மனிதர்களாவர். அப்படி வாழாது தமது இன்பத்திற்காகத் தீமைகளைச் செய்வோர்,விதைதானியங்களால் உண்டாகும் பயன்களைஅறியாது அதைத் தீயிலிட்டு அவித்துண்பவர்களாவர்.பயனை எதிர்பாராதுபிறருக்குதவி செய்து வாழ்வதே உடலைப் பெற்ற தன் பயனாகும்.அதைஉணராதவர்கள் தமக்கும் தீமை செய்து பிறருக்கும் தீமை செய்துவாழ்கிறார்கள்.வாழ்க்கை சிறப்படைய வேண்டுமானால், முதலில் தன்னை முழுமையாக அறிதல் வேண்டும். தன்னை அறிந்தவன் உலகை அறிந்துகெர்ளவான். உலகை அறிந்து கொள்பவன் தனக்கும், மற்றவர்களுக்கும் பயன்பட வாழ்வான்.தன்னை அறிந்தவன் தவ வாழ்வு வாழ்கிறான்.தன்னை அறியாதவன் அவ வாழ்வு வாழ்கிறான்.
வாழ்க்கை என்பது துன்பமானது .ஒருவன் தனது வாழ்க்கைத் துணையைத்தேடுமுன், வாழ்க்கையைப் பற்றி அறிந்து கொள்ளல்வேண்டும் . வாழ்க்கையைச் சுமை என்று நினைப்பவர்கள் வாழ்க்கையைத்தொடங்கும் முன் சிந்திக்க வேண்டும்.சிந்திக்காது திருமணம் செய்துவிட்டுத் தமது இன்பத்திற்காகத் தீய செயல்களைச் செய்தால் ஒருகுடும்பம் மட்டும் பாதிக்கப்படாது.சமூகமே பாதிக்கப்படும்.தன்னைஅறியாதவர்களால் தான் இன்று உலகம் கெட்டழிகிறது.
ஒருவன் பெரும் கல்வி அறிவானாக இருக்கலாம்.அவன் கற்ற கல்வி ஆக்கத்திற்குப் பயனாகவில்லையென்றால், அவன் கற்ற கல்வியால் என்ன பயன்?கல்வி வெறும் தத்துவங்களில் இல்லை.கோட்பாடுகளிலும் உளவியல் தத்துவங்களிலும் இல்லை. நடைமுறையில் தான் உள்ளது.நடைமுறை என்பது தன்னைப் பற்றி முழுமையாக அறிந்து கொள்வது. தன்னை அறிபவன் உலகை அறிவான்.இயற்கையை நாம் நிறக் கண்ணாடிகள் அணிந்து பார்த்தால் நிறக் கண்ணாடிகளின் நிறமே உண்மை தெரியாது அதே போல் நீ பிறரை உனது எண்ணப்படி பார்த்தால் அவர்களைப் புரிந்து கொள்ள முடியாது..அதனால் உன்னை நீ பார்.உன்னை நீ பார்க்க வெளிவேஷங்கள் தேவையில்லை. உன்னை உனக்குப்  புரியாவிட்டால் உன்னில் ஏதோ கோளாறு இருக்கிறது.
நாவலூரில் கலைவாணன் என்றொரு கற்றவர் இருந்தார். அவர் கற்றபடி நடப்பதில்லை. மனம் போனபடி நடப்பவர்.அவர் தனது மனைவி, பிள்ளைகளைக் கவனிப்பதில்லை. பிள்ளைகள் பாடசாலைக்குச் செல்லாது தெருவில் திரிந்தனர். பெற்றோர், அயலவர், நண்பர்கள் அவருக்குப் புத்திமதிகள் கூறிக் களைத்து விட்டனர்.அவர் நன்றாகக் குடிப்பார். குடிக்கக் காசில்லாவிட்டால் வீட்டில் உள்ள பொருட்களைத் திருடுவார்.
வெளிநாட்டிலிருந்து அவரது நண்பன் ஒருவன் வந்தான். இருவரும் ஒன்றாகக் குடித்தனர். நண்பன் அவரது பிள்ளைகளின் பெயரில் வங்கியில் பணவைப்புச் செய்தான்.
ஒரு  நாள் இருவரும் பட்டணத்திற்குச் சென்றனர்.அங்கே ஒருவன் அதிர்ஷ்ட லாபச் சீட்டுக்களை விற்பனை செய்தான்.முதற் பரிசு இருபத்தைந்து இலட்சம் எனக் கூவி விற்றான். கற்றவரின் நண்பன் ஓர் அதிர்ஷ்ட லாபச் சீட்டை வாங்கிக் கலைவாணனிடம் கொடுத்து விட்டுச் சொன்னான். அதிர்ஷ்டமிருந்தால் உனக்குக் கிடைக்கும். “எனக்கு அதிர்ஷ்டமில்லை. நூறு ரூபாயைத் தந்தாயானால் நான் குடித்திருப்பேன்”என்றார்.
மறுநாள் குடிப்பதற்குக் கலைவாணணிடம் பணம் இருக்கவில்லை.அவன்தனது நண்பன் வாங்கிக் கொடுத்த அதிர்ஷ்ட லாபச் சீட்டை யாரோ தெருவில் சென்றவனுக்கு ஐம்பது ரூபாய்க்கு விற்று விட்டு மது அருந்தினான்.மறுநாள் கலைவாணனின் “நண்பன் பத்திரிகையுடன் வந்துசொன்னான்,கலைவாணா, உனக்குத் தான் முதற்பரிசு விழுந்திருக்கு வா வங்கியில் சென்று பணத்தை எடுப்போம்” கலைவாணன் திகைத்துப்போனான். இத்தகைய நிகழ்வைப் பற்றி 2000 ஆண்டுகளுக்கு முன் அறவானர் என்ற புலவர் பாடிய அருமையான பாடல் இது
“ அடங்கி அடப்ப ஐந்தினைக் காத்துத்
தொடங்கிய மூன்றினால் மாண்டீண்டு
செல்லும் வாய்க்கேமம் சிறுகாலைச் செய்யாரே
கொள்ளிமேற்கொட்டு வைத்தார்”

உலகில் நிலையானது அறம்.செல்வம் ,நிலையில்லாதது. அதிகாரம் நிலையில்லாதது. பதவி நிலையில்லாதது.இவை எல்லாம் இருக்கும் போது
எல்லோரும் வருவார்கள் ,புகழ்வார்கள்,தமக்கு வேண்டியவற்றைப் பெற்றுச்செல்வார்கள். இவை எதுவும் இல்லாவிட்டால் யாரும் வரமாட்டார்கள். “இருந்தால் ஆயிரம் பேர். இல்லாவிட்டால் யாரும் இல்லை” என்றொரு முதுமொழி உண்டு.பதவி,அதிகாரம்,செல்வம் தான் மதிக்கப்படுபவை.இந்த விடயத்தில் பகுத்தறிவில்லாத உயிரினங்களும் அடங்கும்.மரம் பழுத்தால் பறவைகள் யாவும் அழையாமலே வரும்.பழம் முடிந்து விட்டால் எந்தப்பறவையும் திரும்பிப் பாராது.இதை உணர்ந்து வாழ்பவர்களுக்குஎவ்வேளையிலும் துன்பம் வராது.
நேர்மையாக வாழ வேண்டும்.தைரியமாக வாழ வேண்டும்.சற்றும் நீதி பிறழ்வுடையாத நீதிமானாக வாழ வேண்டும்.தோல்வியைக் கண்டுமனமுடையாது அதை வெற்றியாக்குதல் வேண்டும்.மனத்தைரியமில்லாதவர்கள் தான் அடிக்கடித் தோல்வியைச் சந்திக்கிறார்கள். மனத்தைரிய முள்ளவர்கள் எதையும் ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ள மாட்டார்கள். எல்லோருடனும் அன்பாகப் பழகுவார்கள். தன்னைப் போல  பிறரையும் நேசிப்பார்கள். தானும் தைரியமாக வாழ்ந்து பிறரையும் தைரியவானான வாழச் செய்வார்கள். மனிதனுக்கு வேண்டியவற்றைக் கொடுப்பது முயற்சியல்ல. நல்ல குணம் தான் வேண்டியவற்றைக் கொடுக்கும். கோழைத்தனமின்மையும், பலவீனமின்மையும் பாவமின்மையும் உள்ளவன் கடவுளின் சக்தியைப் பெறுவான்.அவனுக்குக் கடவுள் எவ்வேளையிலும் உதவியாக இருப்பார்.
பணம், பதவி, அதிகாரம் என்பன தற்செயலாக ஒருவனை வந்தடையும். அதுவந்துதும் பலர் தலைகால் புரியாது நடந்து கொள்வர்.பணமும், பதவியும் அதிகாரமும் வந்தவுடன் பணிவும் வரவேண்டும். பணிவு எல்லோரையும் கவர்ந்திழுக்கும்.அத்துடன் பதவி,அதிகாரம் உள்ள போது மனிதத்தன்மையுடன் நடந்து கொண்டால் ஓரளவேனும் மதிப்பைப் பெறலாம்.
அவர் பெரிய அதிகாரி.சட்டப்படி தான் நடந்து கொள்வார். இரக்கம் காட்டமாட்டார். இருப்பினும் தனக்கும்,தனது மனைவிக்கும் வேண்டியவர் களுக்குத் தாராளமாக உதவி செய்வார். அவர் பதவியில் இருக்கும் போது அவரின்வீட்டின் முன்னாலுள்ள தெருவால் இலகுவில் பிரயாணம் செய்ய முடியாது. வீதியின் இருபுறமும் வாகனங்கள் வரிசையாக நிற்கும். அவர் பதவியில் இருக்கும் போதுஅவரது மனைவியின் தந்தையார் இறந்து விட்டார்.மாமனாரொரு சாதாரண விவசாயி.மரணச் சடங்கு நடைபெற்ற வேளை நூற்றுக்கு மேற்பட்ட மாலைகள் போடப்பட்டன. அஞ்சலி விளம்பரங்கள் வெளியிடப்பட்டன. பத்திரிகைகளில் கண்ணீர் அஞ்சலிகள்வாரக் கணக்கில் பிரசுரிக்கப்பட்டன்.

No comments:

Post a Comment

கணவன் - மனைவி உறவைவிட உன்னதமான உறவு உண்டா?

கணவனுக்குத் தலைவலி. நெற்றியை அழுத்திப் பிடித்துக் கொண்டு சோபாவில் உட்கார்ந்திருக்கிறான். மனைவி கொஞ்சம் தைலம் எடுத்து வந்து, கணவன் அருகில் அம...