Thursday, February 02, 2017

ஓட்டுப் போடுவோம் வாங்க...

       
                ஓட்டுரிமை ஓட்டுரிமை நம்முரிமை      
                என்றுச் சொல்லுவோம்
                ஓட்டளிக்க ஒன்றாகக்
                கூடிச் செல்லுவோம்
               

                வறியவரை முதியவரை
                அழைத்துச் செல்லுவோம்
                நம்ம நாட்டிலுள்ள அனைவரையும்
                ஓட்டுப்போடச் சொல்லுவோம்

                ஜாதி மதம் பரர்க்காம
                காசு பணம் வாங்காம
                நாட்டு நலம் காத்திடவே - நாம்
                ஒன்றாகக்கூடிச் சென்று
                ஓட்டுப் போடுவோம்
       
                ஜனநாயகத்தைக் காத்திடவே
                ஓட்டுப் போடுவோம்
                நம்ம நாட்டிலுள்ள
                நல்லவர்கள் ஆட்சி செய்ய
                ஓட்டுப் போடுவோம்.
                
                சுதந்திரத்தைப் பேணிடவே
                ஓட்டுப் போடுவோம் – நாம்
                சுதந்திரமாய் வாழ்ந்திடவே
                ஓட்டுப் போடுவோம்.

No comments:

Post a Comment

கணவன் - மனைவி உறவைவிட உன்னதமான உறவு உண்டா?

கணவனுக்குத் தலைவலி. நெற்றியை அழுத்திப் பிடித்துக் கொண்டு சோபாவில் உட்கார்ந்திருக்கிறான். மனைவி கொஞ்சம் தைலம் எடுத்து வந்து, கணவன் அருகில் அம...