பேரா.முனைவர் பூ.மு.அன்புசிவா
149, ஹரிஸ்ரீ காடர்ன்ஸ்
சுண்டப்பாளையம்(அ)
கோயம்புத்தூர் - 641 007
பேச:098438 74545.
மதனின் பரிணாம வளர்ச்சியில் மொழி என்னும் கூறு இனங்காணப்பட்டது. முதலில் தன் உணர்வுகளையும் எண்ணங்களையும் மொழியால் வெளிக்கொணர்ந்த மனிதன், பின்னர் அதற்கு எழுத்து வடிவத்தைக் கொடுத்து அதன் மூலம் தனது உணர்வுகளை வெளிப் படுத்திய பொழுது உருவாக்கப்பட்டதாக இலக்கி யம் விளங்கியது. இலக்கியமானது இவ்வாறுதான் படைக்கப்பட வேண்டும் என்று அதற்கான கோட்பாடாக இலக்கணம் கண்டறியப்பட்டது. இத்தன்மை உலக இலக்கியம் அனைத்திற்கும் பொதுவானதாக அமைகின்றது. எனவே ஒவ்வொரு நாடும் தனக்கான இலக்கியத்தையும் இலக்கணத்தையும் படைத்துக்கொண்டு அதற்கான கோட்பாடுகளையும் உருவாக்கிக் கொண்டது. தொல்காப்பியம் என்பது தொல் - கா - பியம் என்பதே அதன் விரிவாகும். தொல் என்பது தொன்மை, கா என்பது காட்சி, இயம் என்பது இயம்புதல் அல்லது சொல்லுதல் என்று கொள்ளமுடியும். இதனை அடிப்படையாக வைத்தே தொன்மையான மொழிசார்ந்த காட்சிகளை அழகுறக் கூறியுள்ளார் என்று கொள்ள முடியும்.
தொல்காப்பியம் என்ற பெயரினை அடியொற்றியே அதனை எழுதியவர் தொல்காப்பியர் என்றே குறித்தனர். இலக்கியம் கண்டதற்கு இலக்கணம் இயம்பிய தொன்மையும் திண்மையும் வாய்ந்த செந்தமிழ் எமது தமிழ் மொழியாகும். தொல்காப்பியமே தற்போதைய தொன்மையான நூலெனின் அதற்கு முன்பு எவ்வளவோ இலக்கியங்கள் கால, இயற்கை, செயற்கை அழிவுகளால் எமது கைக்குக் கிடைக்காமற்போயிற்று என்பதற்கு தொல்காப்பியமே சான்றாகும். அதில் ஏறத்தாள 280ற்கு மேட்பட்ட இடங்களிலே என்ப என்றும், என்மனார் புலவர் என்றும் தனக்கு முந்திய புலவர்களால் கூறப்பட்டுள்ளதாகத் தொல்காப்பியர் குறிப்பிட்டுள்ளார். தொல்காப்பியத்தனை இன்றைய தமிழ் மொழியின் வித்து எனலாம். மனிதனையும், உயிரியல் கோட்பாடுகளையும் ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
தொல்கப்பியத்தின் காலம்
தொலகாப்பியத்தின் காலத்தினைப் பல அறிஞர்கள் பலவாறாகக குறிப்பிட்டுள்ளனர். சிலர் கி.மு. 10,000; ஆண்டிற்கு முற்பட்டது என்றும், பொள்ளாச்சி மகாலிங்கம் கி.மு.10,676 என்றும், நாவலர் சோமசுந்தர பாரதியார் கி.மு. 10ஆம் நூற்றாண்டு, மொழிஞாயிறு தேவநேயப்பாவணர் கி.மு. 7ஆம் நூற்றாண்டு என்றும், பேராசிரியர் வெள்ளைவாரணர் மற்றும் வி.ஆர்,ஆர்.தீட்சிதர் கி.மு. 5ஆம் நூற்றாண்டு என்றும், மறைமலை அடிகள் கிமு.3ஆம் நூற்றாண்டு, சீனிவாச ஐயங்கார் கி.மு. 4ஆம் நூற்றாண்டு, பி.டி.சீனிவாச ஐயங்கார் கி.பி. இரண்டாம் நூற்றாண்டென்றும் பேராசிரியர் வையாபுரிப்பிள்ளை கி.பி. 4ஆம் அல்லது 5ஆம் நூற்றாண்டென்றும் கூறியுள்ளார்கள். தொல்ப்பியத்தின் அகப், புறச் சான்றுகளை வைத்தே காலத்தினைக் கணிப்பர். இந்தவகையில் தேவநேயப் பாவாணர் கூறிய கி.மு. 7ஆம் நூற்றாண்டினை அல்லது 5.ஆம் நூற்றாண்டினை அண்ணளவாகக் கொள்ள முடியும் என்று பொதுவாக அறிஞர்களால் ஏற்கப்பட்டுள்ளது.
தொல்காப்பியத்தில் மனிதனும் பிற உயிர்களும்
பொருளதிகாரத்தின் ஒன்பது இயல்களில் 9வது இயலான மரபியலின் ஒரு பகுதியாக உயிர்களின் பகுப்பும் சிறப்பும் மரபும் என்று மனிதன் பற்றியும் பிற உயிர்கள்பற்றியும் வகுத்துச் சித்தரிக்கப்பட்டுள்ளது.
“மக்கள் தாமே ஆறறி வுயிரே
பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே” தொல் -பொரு சூத் 577
மனிதன்; ஆறறிவு உடையவனாகும். தொடுதல், கேட்டல், பார்த்தல், சுவைத்தல், சுவாசித்தல், மனிதனின் சிந்தித்தலினாலும் அதனைப் பகுத்து அதன் சரி, பிழைகளை ஆய்ந்தறிவதாலுமே மனிதனுக்குக் கிடைக்கும் பகுத்தறிவு என்பது ஆறாவது அறிவாக மனிதனுக்கு பகுத்தறிவு என்பது தனிப்பட்ட சிறப்பான அறிவாகக் கொள்ளுகிறார். அதுபோன்று வேறு உயிர்களும் உண்டு என்பதனால் தேவர், அசுரர், இயக்கர் முதலானோர் அடங்கும் எனபர். மனிதர் உடல், வாய், மூக்கு, கண், செவி, மனத்தினால் அறியும் பகுத்தறிவு ஆகியோரும் ஆறறிவு உடையர் என்று வகுத்தார். இதனைவிட மேலும் கூறும்போது
“ஒருசார் விலங்கும் உளவென மொழிப” தொல் -பொரு : 578
விலங்கின் ஒரு பகுதியான கிளி, யானை, குரங்கு அகியன ஆறறிவுடையதெனத் தொல்காப்பியர் குறிப்பிடுகின்றார். குரங்கில் இருந்தே மனிதனது பரிணாம வளர்ச்சி உருவானது என்ற,1870ல் உருவாக்கிய சாள்ஸ் டார்வினின் மனிதனின் பரிணாம வளர்ச்சிக் கோட்பாடு கண்டுபிடிப்பதற்கு எவ்வளவோ காலத்திற்கு முன்பே குரங்கினை மனித உணர்விற்குச் சமனான உணர்வு உள்ள பிராணி என்பதனைக் கண்டறிந்த பெருமகன் தொல்கப்பியராகும், இதனால் அவரையும் நாம் தத்துவஞானி என்றே அழைக்க முடியும்.. அது போலலே ஆட்களை அறிந்து வைத்திருத்தல், பல காலத்திற்கு நினைவில் வைத்திருத்தல், சொல்லும் வேலைகளை ஞாபகமாக வைத்திருந்து செய்தல், மனிதன் அதனைச் சொல்லாவிடினும் அச்செயலைத் தானாகவே செய்தல் என்னும் தொழிற்பாடுகளினால் அவற்றையும் சிலவகைகளில் ஆறறிவுடன் உள்ள பிராணிகளாக யானை கிளி குரங்கு போன்றவற்றினையும் சேர்க்கின்றார்.
இவ்வாறாக புதிய கோணத்தில் அறிவியல் சிந்தினையோடு நோக்கியதாலேயே இவ்வாறான ஒரு புதிய கருத்தினை முன்வைத்து தொல்காப்பியர் எழுதியது எமது தமிழுக்கு அவர் கொடுத்த பெருமையெனலாம். இவ்வாறு அறிவியல் ரீதியில் மரபியலில் ஆய்ந்த தொல்காப்பியர். இவ்வாறு தமிழ் ஒலிப்பிறப்பினை ஆய்ந்து வெளியிட்ட கருத்துக்களும் அறிவியல் ரீதியான சிந்தனைக்குரியன.
தொல்காப்பியத்தில் அறிவியல்
தொல்காப்பியர் காலத்திலே இன்று வழங்கிவரும் அறிவியல் என்பது இருக்கவில்லை என்பதனை ஏற்றுக் கொண்டு ஆனால் அன்று தொல்காப்பியராலோ கிரேக்க அறிஞர் அரிஸ்ரோட்டில் அவர்களாலே சிந்திக்கப்ட்ட சிந்தனையின் ஊற்றுக்களே பின்பு சிறுது சிறிதாக மனிதன் சிந்திகத் தொடங்;கியவுடன் அறிவியல் அல்லது உயிரியலில் விஞ்ஞான அறிவாக பரிணமிக்கத்; தொடங்கியதெனலாம். 5000 ஆண்டுகளுக்கு முன்பு தொல்காப்பியரின் சிந்தனை யாவருக்கும் ஒரு வியப்பானதாகவேயுள்ளது.
பொருளதிகாரத்தில் மரபியலில் கூறப்படும் பல விடையங்கள் விஞ்ஞான ரீதியாக இன்று நிரூபிக்கப்பட்டுள்ள பல விடையங்களை அவர் தனது அறிவியல்க் கண்கொண்டு எழுதி எம்மையெல்லாம் வியப்பில் ஆழ்த்தியுள்ளார். விலங்குகளின் உணர்திறனை அழகுறக் கூறுகின்றார்.
தொல்காப்பியத்தில் உயிர்களது பகுப்பும், சிறப்பும், மரபும்.
“ஓன்றறி வதுவே உற்றறி வதுவே
இரண்டறி வதுவே அதனோடு நாவே
மூன்றறி வதுவே அவற்றொடு மூக்கே
நான்கறி வதுவே அவற்றோடு கண்ணே
ஐந்தறி வதுவே அவற்றொடு செவியே
ஆறறி வதுவே அவற்றொடு மனனே
நேரிதின் உணர்ந்தோர் நெறிப்படுத் தினரே” தொல்- பொரு : 571
இங்கு உயிர்களின் உணர்திறனும் அதன் பாகுபாடும் பற்றிக்கூற வந்த தொல்காப்பியர் ஓரறிவு உயிர் என்பது உடலால் மட்டும் உணர்ந்து அறிவதாகும் என்றும்,ஈரறிவு உயிர் என்பது உடம்பினாலும் வாயினாலும் அறிதல் என்றும் மூவறிவு என்பது உடம்பு, வாய், மூக்கு ஆகிய மூன்றினாலும் அறிவது என்றும் நாலறிவு என்பது உடல், வாய், மூக்கு, கண் என்பனவற்றினால் உணரும் உயிர் என்றும் ஐந்தறிவு என்பது உடல், வாய், மூக்கு, கண், செவி என்ற ஐந்து உறுப்புக்களினால் அறிவது என்பதாகும், ஆறறிவு என்பது மேற்குறிப்பிட்ட ஐந்தறிவுடன் சேர்ந்து பொருட்களையோ, ஒரு காட்சியினையோ அன்றி தனது உயிரினையோ, ஒரு கருத்தினையோ பகுத்து அறிந்து கொள்வதே அந்த ஆறாவது அறிவு என்றார். இதனையே தற்காலத்தே பகுத்தறிவு என்பர். இது மனித இனத்திற்கே பொருந்தும்.
“புல்லும் மரனும் ஓரறி வினவே
பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே” தொல் -பொரு : 572
புல், மரம் முதலியன ஓரறிவை உடையன என்றும் இவ்வாறு ஓரறிவை உடையன வேறும் உண்டென்றும் அவை கொட்டி, தாமரை என்றும் இது உடலால் மட்டும் உணர்திறனைப் பெறும் என்று உரையாசிரியர் குறிப்பிடுகின்றார்.
“நத்தும் முரளும் ஈரறி வினவே
பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே” தொல் -பொரு : 573
நத்து என்பது சங்கு, நத்தை, அலகு, நொள்ளை என்றும் கொள்வர். முரள் என்பது சிப்பி, கிளிஞ்சல், ஏரல் என்றும் கொளவர். இவைஈறறிவு உயிரினம் என்பதாகும் அதேபோல மற்றைவையும் அடங்கும். இது உடலாலும் வாயினாலும் இரண்டு அறிவனையும் பெறும் என்று உரையாசிரியர் குறிப்பிடுவர்.
“சிதலும் எறும்பும் மூவறிவினவே
பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே” தொல் -பொரு : 574
கறையானும், எறும்பும் மூன்றிவு உடையதென்றும் இவ்வாறாக வேறு வகைகளும் உண்டென்றும் இவை உடலாலும் வாயினாலும் மூக்கினாலும் அறியும் திறன் பெற்ற உயிர்கள் என்பர்.
“நண்டும் தும்பியும் நான்கறி வினவே
பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே” தொல் -பொரு : 575
நண்டும் தும்பியும் நான்கு அறிவினையுடையன. அதேபோல் இவ்வாறாக வேறுவகை உயிரினங்களும் உண்டு. இவை உடல், வாய், மூக்கு, கண் ஆகியவற்றினால் அறியும் திறன் பெற்றன.
“மாவும் புள்ளும் ஐயறி வினவே
பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே” தொல் -பொரு : 576
நான்கு கால் விலங்குகளும் பறவைகளும் ஐவகை அறிவினை உடையன. இவ்வாறு வேறும் உண்டு அவை பாம்பு, மீன், முதலை, ஆமை போன்றவையாகும். இவை உடல், வாய், மூக்கு, கண், செவி ஆகிய ஐம்புலன்களால் அறிந்து கொள்ளும் தன்மையனவாம்.
பிற உயிர்களின் உறவு பற்றிய சித்தரிப்பு– ஆண்பால் பெயர்களும் பெண்பாற் பெயர்களும் உயிருள்ளவைகளுக்கே குறிப்பிடுகின்றார். சில மொழிகளில் குறிப்பாகப் பிரஞ்சு மொழியில் மேசையை ஆண்பால் என்றும் கதிரையை பெண்பால் என்றும் அழைப்பர். ஆனால் தமிழில் குட்டிபோடுவன, குஞ்சு பொரிப்பன ஆகியனவற்றை பெண்பால் என்று குறிப்பிடுகின்றார்.
“வேழக்குரித்தே விதந்துகளி தென்றல”; தொல் -பொரு : 579
“களிறென்று சிறப்புறக் கூறுதல் ஆண் யானைக்கு உரியது.
கேழல் கண்ணும் கடிவரை யின்றே” தொல் -பொரு: 580
“பன்றியின் குட்டியும் களிறு என்றழைக்கப்படும்
இவ்வாறாக சூத்திரம”; தொல் -பொரு : 545, 546, 547,
“புல்வாய் புலியுழை மரையே கவரி
சொல்லிய கராமோ டொருத்தல் ஒன்றும்” தொல் -பொரு : 581
தத்துவ மேதை அரிஸ்ரோட்டில் அவர்களின் உயிரியல் பாகுபாடு கிரேக்க தத்துவஞானி அரிஸ்ரோட்டில்
இவர் கிமு 4ஆம் நூற்றாண்டில் கிரேக்க நாட்டில் வாழ்ந்த ஒரு தத்துவமேதையாகும். இக்காலம் தமிழ் நாட்டில் கடைச்சங்கம் இருந்த காலமாகும். இங்காலத்தே கிரேக்கர்களுடன் வணிகத் தொடர்பு தமிழர்களுக்கு இருந்தததென்பது சங்க இலக்கிய நூல்களில் இருந்து அறிந்து கொள்ள முடிகிறது. தமிழ் அரசர்களின் காவற் கடமைகளில் யவனர்கள் இருந்தார்கள் என்று அதே சங்கநூல்கள் குறிப்பிடுகின்றன. யவனர்கள் என்போர் கிரேக்கர்களாகும். அத்தோடு எமது சங்க கவிதைகளின் பாடுபொருட்களும் கிரேக்க இலக்கிய பாடு பொருட்களும் அக்காலத்தே சில பகுதிகளில் கிட்டத்தட்ட ஒரே வகையாக இருந்தததென பேராசிரியர் க. கைலாசபதி அவர்களும் பேராசிரியர் சேவியர் தனிநாயகம் அடிகளாரும் குறிப்பிடுவது ஈண்டு கவனிக்கத் தக்கது. ஆகவே கல்வியியலிலும் ஏதோவொரு தொடர்பு இருந்திருக்கலாம் என்று கருதுவதற்கு தொல்காப்பியரதும் அரிஸ்ரோட்டிலதும் உரியிற்கோட்பாடு எமது சிந்தனையினைத் தூண்டுகின்றது. பேராசிரியர் க. கைலாசபதி அவர்களது வீரயுகக் கவிதைகள் என்னும் நூலில் கிரேக்க வீரயுக இலக்கியத்தினை புறநானூற்றுக் கவிதைகளுடன் ஒப்பிடுகிறார். சில தமிழறிஞர்களின் கருத்துப்படி தொல்காப்பியரும் கிமு 5ஆம் அல்லது 4ஆம் நூற்றாண்டைச் சேர்நதவர் என்றே கருதுகின்றனர். அப்படியாக நோக்கின் இருவரும் ஒரே காலத்தவர் என்றும் கொள்ள முடியும். இருவரும் ஒரே விதமாக வேறு வேறு கோணத்தில் உயிரிகளைப் பற்றிச் சிந்தித்திருப்பது கவனிக்கத்தக்கது.
அரிஸ்ரோட்டில் உயிர்ப் பகுப்புப் பற்றி என்ன நோக்கியுள்ளார் என்பதனை இவ்வேளையில் பார்ப்பதும் பயனுள்ளதாவிருக்கும். இவர் முதற்பகுப்பாக இரத்தம் உள்ள உயிரிகள் என்றும் இரத்தம் அற்ற உயிரிகள் என்றும் வகுக்கின்றார். ஆனால் தற்போதைய விஞ்ஞானப் பகுப்பாய்வு மேலும் ஒருபடி மேலே சென்று இதே உயிரிகளை முள்ளந்தண்டு உள்ளனவென்றும் முள்ளந்தண்டு இல்லாதனவென்றும் பகுக்கின்றது. இரத்தம் உள்ளன என்று வகுத்ததில் மனிதனும் வேறு பாலூட்டிகளும் முட்டையிடும் பறவைகளும் மீன் இனமும் வரும். இரத்தம் இல்லாத உயிரிகள் எனும்போது பூச்சி, புழுக்களும் கடின ஓடுகளையுடைய கடல்வாழ் உயிரினங்களையும் அதாவது சிப்பி, ஒக்டபஸ் (ழுஉவழிரள)இ கணவாய் போன்றனவும் அடங்கும். அவர் உயிரிகளின் முக்கியத்துவத்தின் அடிப்படையில் (ர்நைசயசஉhiஉயட) அதனை அமைக்கின்றார். இதனால் இதனை டுயனனநச ழக டுகைந ழச ளஉயடய யெவரசயந ழச புசநயவ ஊhயin ழக டீநiபெ என்று உயிரிகளின் ஏணி என்றும் மிகப் பெரிய தொடர் சங்கிலி என்றும் அழைக்கிறார். இவ்வாறாக புல்லில் இருந்து மனிதன் வரை அதன் முதன்மைத் தன்மையிலிருந்து இவர் பாகுபடுத்தியுள்ள உயிரிகளை 11 தரங்களில் பிரித்துள்ளார்.
எந்த மிருகங்களுக்கும் ஒரே நேரத்தில் தந்தமும் கொம்பும் ஒன்றாக இருப்பதில்லை. யானைக்குத் தந்தம் இருப்பதுபோல் மாட்டிற்கு கொம்பு உண்டு ஆனால் குதிரைக்கு இரண்டுயேயில்லை. ஆனால் மாட்டிற்குக் காலில் குளம்பு உள்ளது போல குதிரைக்குக் குளம்பு உண்டு. மாடு இரைமீட்டு அசை போடும் மிருகம் ஆனால் குதிரை அப்படியாக அசைபோட்டு உணவை உண்பதில்லை. இந்த வகையாலும் உயிரிகளைப் பாகுபடுத்தியுள்ளார். அடுத்தாக வெப்பச் சூழலிலும் குளிர்ச் சூழலிலும் வாழும் உயிரினங்கள் என்ற வகையிலும் பாகுபடுத்தியுள்ளார்.
அரிஸ்ரோட்டில் அவர்கள் உயிர் வகைகளைப் பாகுபடுத்தும் போது ளுழரட ழக யn ழசபயnளைஅ - உயிருள்ள வாழும் தனித் தாவரம்
ஏநபநவயவiஎந ளழரட - இதனைத் தாவரங்களின் உயிர் என்றும் கூறலாம். பதியமுறை ஆன்மா என்று கூறலாம் ஏநபநவயவiஎந என்பதின் ஊயஅடிசனைபந னுiஉவழையெசல கருத்துப்படி மூளை இயக்கமல்லாதது என்பது பொருள். இது தனது இனப்பெருக்கத்திற்கும் வளர்ச்சிக்குமாகச் செயற்படுகின்றது.
ளுநளெவைiஎந ளழரட- இதனை உணர் திறன் உள்ள உயிர் வகைகளாகப் பிரித்துள்ளார். இது சில தாவரங்களுக்கும் ( தொட்டாற் சிணுங்கி) சில பிராணிகள் ( புழு வகைகளைத் தொட்டால் அது தனது பாதுகாப்புத் தேடி உடலைச் சுருட்டிக் கொள்ளும். மனிதன் நெருப்பினைத் தொட்டால் சுடும் என்ற உணர்வினை உணர்ந்தவன். இதனை அவன் தனது பகுத்தறிவால் அறிவான்.
சுயவழையெட ளழரட - இதனை பகுத்தறிவு உயிர்கள் என்ற வகையில் அடக்கியுள்ளார். இதற்கு மனிதனே உதாரணம். ஒரு வேலையைத் தொடங்கும் போது அதன் சரி பிழைகளை சீர்தூக்கிப் பார்த்து தனக்குப் பாதுகாப்பானதாகவும், பிரயோசனப்படும் வகையில் செய்வது பகுத்தறிவின்பாற்படும்.
மிருகங்களை ஏநபநவயவiஎந ளழரட மற்றும் ளுநளெவைiஎந ளழரட என்ற இரு வகைக்குள்ளும் அடக்குகின்றார். பகுத்தறிவு மூளை இயக்கமல்லாத உணர்வுபூர்வமான உயிர் என்ற வகைக்குள் அடக்குகின்றார். இது இனப்பெருக்கத்திற்கும், இடம்பெயர்ந்து திரிவதற்கும், உணர்திறன் உள்ளதுமான வகைக்குள்ளும் சேர்க்கின்றார்.
மனிதனை ஏநபநவயவiஎந ளழரடஇ ளுநளெவைiஎந ளழரடஇ சுயவழையெட ளழரட என்ற மூன்று வகைகளினுள்ளும் அடக்குகின்றார். விலங்கினுக்குரிய முதல் இரண்டு இலக்கணங்களையும் சிறப்பாக பகுத்தறிவினையும் மனிதனுக்கு சேர்த்துள்ளதே சிறப்பம்சமாகும்.
தொல்காப்பியர் அறிவு என்பதனை அரிஸ்ரோட்டில் உயிர் என்கின்றார். அறிவு என்பது அறியும் திறன் என்பதாகும். அது தொடுதல், கேட்டல், பார்த்தல், சுவைத்தல், சுவாசித்தல், மனிதனின் சிந்தித்தலினாலும் அதனைப் பகுத்து அதன் சரி, பிழைகளை ஆய்ந்தறிவதாலுமே மனிதனுக்குக் கிடைக்கும் பகுத்தறிவு என்பதாம். ஆனால் மூளையைப் பயன்படுத்தாததலாலும், உணர்திறத்தாலும் பகுத்தறிவாலும் மட்டும் உயிர்களாகத் தனித்துப்பிரிக்க முடியாது. ஒரு உடம்பிற்கு ஒரு உயிர் மட்டுமேயுண்டு அதனை எவ்வண்ணம் மனிதனுக்கு ஏநபநவயவiஎந ளழரடஇ ளுநளெவைiஎந ளழரடஇ சுயவழையெட ளழரட ஆகிய மூன்று ளுழரட களும் உண்டு என்று கொள்ள முடியும். ளுழரட என்பதனைத் தமிழில் உயிர் என்றும் சமஸ்கிருதத்தில் ஆன்மா என்றும் கொள்வர்.
எது எவ்வாறெனினும் தொல்காப்பியரது பகுப்புக்களும் அரிஸ்ரோட்டல் அவர்களது பகுப்புக்களும் நவீன விஞ்ஞானத்திற்கு மேலும் ஆய்விற்கு ஒரு வழியைத் திறந்து விட்டுள்ளதென்றே கூறவேண்டும். தொல்காப்பியரது பகுப்பில் கூடுதலாக உயிரின் பகுப்பினைவிட அறிவு பற்றி விளக்கமே உள்ளதனைக் காணலாம்.
தொல்காப்பியர் மனிதர்களுக்குரியன
5000 – 7000 ஆண்டுகளுக்கு முன்பே மனிதனுக்கு உரியவகையான உறவுகளை ஏனைய மொழிகளில் இவ்வாறான மரபுகள் வரமுன்பே அதனைத் தொல்காப்பியர் சுட்டிக் காட்டுகின்றார். முக்கிய அவதானமாக பிற்காலத்தில் சாதியப் பிரிவுகளுக்கு அடிப்படையாக அமைந்த வருணாச்சிரமத் தர்ம வகுப்புக்களையும் முதல் நூலிலேயே வகுத்துக் காட்டியுள்ளார். ஒரு இலக்கணகாரணாக நின்று அவர்காட்டிய வருணப்பாகுபாடுகள் அந்தணர், அரசர், வணிகர், வேளாண் சமூகம் என்பனவாகும். அக்காலத்தில் இத்தகைய வைப்பு முறையினால் மேலோர், கிழோர் என்னும் பார்வை அவரால் முன்வைக்கப்பட்டது.
“மேலோர் மூவர்க்கும் புணர்ந்த கரணம்
கீழோர்க்கு ஆகிய காலமும் உண்டே” பொரு – கற்பியல் : 144
உரையாசிரியர் கருத்துப்படி மேலோர்களாகிய அந்தணர், அரசர், வணிகர் ஆகிய மூவர்க்கும் சடங்குடன் கூடிய திருமண விழாவிற்கு உரித்துடையவர் என்றும் நான்காமவராகிய சூத்திரற்கு அவ்வாறான திருமண விழா எதுவும் இல்லை என்றும் அதற்கு வேறு காலம் உண்டு என்றும் கூறப்பட்டது. இங்கு சூத்திரர் என்போர் கீழோர் எனப்படும் வேளாண் மாந்தர் என்று கொள்ளப்பட்டது. சூத்திரர் என்ற பிரிவிலேயே தற்போது இருக்கக்கூடிய ஏனைய சமூகப் பிரிவுகள் யாவும் இருந்தன என்றும் கூறமுடியும் ஆனால் அப்பிரிவுகள் மேலும் காலம் தாழ்த்தி உருவாக்கப்பட்டதோ என்பதற்கான சான்றுகள் எதுவும் இல்லை. தொல்காப்பியம் குறிப்பிடும் உயர்ந்தோரும் அல்லோரும்.
உயர்ந்தோர்
வெற்பன், சிலம்பன், கொடிச்சி, குறும்பொறைநாடன், தொன்றல், மனைவி, கிழத்தி, ஊரன், மகிழ்ஞன், கிழத்தி, சேர்ப்பன், புலம்பன், நுளைச்சி, காளை, எயிற்றி
அல்லோர்
குறவர், கானவர், குறத்தியர், இடையர், இடைச்சியர், ஆயர், ஆய்ச்சியர், உழவர், உழத்தி, கடையர், கடைச்சியர், நுளையர், நுளைச்சியர், பரதர், பரத்தியர், அளவர், அளத்தியர், எயினர், எயிற்றியர், மறவர், மறத்தியர், பாணர், விறலியர், கூத்தன், (பாணரில் யாழ்ப்பாணர், இசைப்பாணர், மண்டைப்பாணர்) ஆகியோர் அடங்கும்.
தொல்காப்பியத்தோடு சங்க நூல்களில் எவ்வாறாக சமூகப் பிரிவுகள் பற்றிக் குறிப்பிடப்படுகின்றது.
இந்த இடத்தில் தொல்காப்பியரால் ஆரியர்களிடத்தில் இருந்த சமூகப் பகுப்பு முறையான மேலோர் என்றும் கீழோர் என்ற பாகுபடுத்தப்பட்ட பிரிவானது முதலில் தமிழரது இலக்கண நூலாகிய தொல்காப்பியத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.மரபியலில் அந்தணர்க்குரியதும், அரசர்களுக்குரியதும், ஏனையோருக்கும் உரியதுமான செயற்பாடுகளை தொல்காப்பியர் பொதுவாக மனிதர்களுக்குரிய செயற்பாடுகளாகக் குறிப்பிட்டுள்ளார். சூத்திரம் 615 – 629 வரையுள்ள 15 சூத்திரங்களில் சித்தரிக்கின்றார்.
“நூலே கரகம் முக்கோல் மணையே
ஆயுங் காலை அந்தணர்க்குரிய” பொரு – மரபியல் : 615
முப்புரிநூல், கரகம், முக்கோல், மணை என்பன அந்தணருக்கு மட்டும் உரியனவாகச் சித்தரிக்கின்றார். படையும் கொடியுங் குடையும் முரசும் நடைநவில் புரவியுங் களிறுந் தேரும்
தாரும் முடியும் நேர்வன பிறவும்
தெரிவுகொள் செங்கோல் அரசர்க்குரிய பொரு – மரபியல் : 616
மேற்குறிப்பிட்டவற்றை அரசருக்கு மட்டும் உரியனவாகச் சித்தரிக்கின்றார் இவ்வாறாக அந்தணருக்கும் அரசருக்கும் பொதுவாக உரித்தான சித்தரிப்பினை தொல் -பொரு : 617, 618 இரண்டிலும்; குறிப்பிடுகின்றார்.
“ஊரும் பெயரும் உடைதொழிற் கருவியும்
யாருஞ் சார்த்தி அவைஅவை பெறுமே” பொரு–மர : 619
இவ்வாறாக ஒருவனுக்கு ஊர்ப்பெயரும், சிறப்புப் பெயரும் தத்தமது தொழிலுக்கேற்ற தொழிற் கருவிகளும் பொதுவாக எல்லோருக்கும் உரியனவாகச் சித்தரிக்கின்றார்.
“வைசிகன் பெறுமே வணிக வாழக்கை” தொல் -பொரு : 622
வணிகனுக்கு வியாபாரம் சார்ந்த வாழக்கையே அமையும் என்பதாகும்.
வேளாண் மாந்தர்க்கு உழுதூண் அல்லது
இல்லென மொழிப பிறவகை நிகழ்ச்சி தொல் -பொரு : 625
விவசாயம் செய்யும் மனிதனுக்கு உழுது அதில் பயிர் விளைவித்து உண்பது அல்லாமல் பிறவாழ்க்கை இல்லை என்று சித்தரிக்கின்றார். இவ்வாறாக 15 சூத்திரங்களில் குறிப்பிட்ட மனிதனுக்குரிய சித்தரிப்புகளை நேரமும் இடவசதியும் கருதி உதாரணத்திற்காக மட்டும் 7 சூத்திரங்களை மட்டும் விபரித்துள்ளேன்.
“ஓரறிவு உயிரின் சில சிறப்பு இயல்புகள்
புறக்கா ழனவே புல்லெனப் படுமே” தொல் -பொரு: 630
புறவுயிர்ப்பு உடையனவற்றைப் புல் என்று அழைப்பர் அவை தென்னை, பனை, கமுகு, மூங்கில் போன்றனவாகும் என்று சித்தரிக்கிறார்.
“அகக்கா ழனவே மரனெனப் படுமே” தொல் -பொரு : 631
உள்ளுறுதி உடைய தாவரம் மரமென்று கூறப்படும்.
“புல் வகையின் உறுப்புக்கள்
தோடே மடலே ஓலை என்றா
ஏடே இதழே பானை என்றா
ஈர்;க்கே குலையே சேர்ந்தன பிறவும்
புல்லொடு வருமெனச் சொல்லினர் புலவர்” தொல் -பொரு : 632
தோடு,மடல், ஓலை, ஏடு, இதழ், பாளை,ஈர்க்கு, குலை என்பனவும் வேறு சிலவும் புறவுயிர்ப்பும், உள்வயிர்ப்பு மில்லாதவற்றுள் ஒரு சாராவை புல்லெனப்படும். இவ்வாறாக தொல் -பொரு : 633, 634, 635 ஆகியவற்றிவும் விபரிக்கப் படுகின்றது. இப்பகுதியை மேலும் விரிவாக எடுத்துக்கூற முடியும் 6 பக்கங்களுக்குள் முடிக்கப்பட வேண்டும் என்ற வரையறையால் இத்துடன் இப்பகுதியை முடித்துக் கொள்ளுகிறேன்.
No comments:
Post a Comment