முன்னுரை
கானக அழிப்பு அரசியல்
“நவீன நாகரிகச் சமுதாயத்தின் சுயநல மதிப்பீடுகளைவிடப்
பழங்குடிகளின் மதிப்பீடுகள் மனிதத் தன்மை மிக்கவையாகவும்
அறவியல்ரீதியில் உயர்ந்ததாகவும் இருக்கிறது”
- வெரியர் எல்வின்
பொருளாதார அதிகார வேட்கைகொண்ட பன்னாட்டுப் பெருமுதலாளிய நிறுவனங்களுக்குச்
சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்கும் அரசு, பூர்வீகக் குடிகளின் வாழ்விடங்களையும் வாழ்வாதாரத்தையும்
ஒருசேரச் சிதைக்கும் போக்கு, வளர்ச்சித் திட்டம் என்ற
பெயரால் காட்டின் வளங்களைச் சுரண்டுவதற்கு ஆண்டுதோறும்
நூற்றுக்கணக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள், பழங்குடிகளின் எழுச்சிப் போர், மக்களோடு
மக்களாக இணைந்து பழங்குடிகளின் வாழ்வாதாரத்திற்குத்
தோள்கொடுத்துப் போரிடும் இளைஞர்களை மாவோயிஸ்டு என்ற பெயரால்
முத்திரை குத்தியமை; அவர்களுக்கெதிராக அரசின்
துணையுடன் ஏற்படுத்தப்பட்ட சல்வா ஜுடும், பசுமை வேட்டை
என்ற பெயரில் தன்னாட்டுப் பூர்வீக
மக்களை அழித்தொழிக்கும் கொடுமைகள் எனப் பழங்குடி மக்களின் வாழ்வில் நிகழ்ந்துகொண்டிருக்கும் ஆற்றொணாத் துயரங்களைத் தன்
அகக்குரலோடு, புறச்சூழலின் யதார்த்தங்களோடு ‘உலராக் கண்ணீ’ராகப்
பதிவுசெய்திருக்கிறார் ஜனகப்ரியா.
பிரிட்டீஷ் ஏகாதிபத்தியம் காலூன்றுவதற்கு முன்பு கொலம்பஸ் என்னும் கடலோடியின் வருகையில் ஆரம்பித்துத் தனது தீரா
நுகர்வுக் கொள்ளைக்காக அன்றே இன அழிப்பை
ஆரம்பித்த கதையிலிருந்து காலனிய முதலாளித்துவம், பின்காலனிய அரசின் தொழில்மயமாதல், இன்று உலகையே
ஆட்டிப் படைக்கும் உலகமயமாதல் பொருளாதார
சூழலில் மலைகளையே விழுங்கும் மகாதேவன்களாக பவனிவரும் பன்னாட்டு நிறுவனங்களின் சர்வாதிகார போக்கு, லால்கர்
மக்களின் கட்டுக்கோப்பான எழுச்சி போர், தேர்தல்
சார்ந்து பிழைப்பு நடத்தும் சந்தர்ப்பவாத அரசியல்வாதிகள், பழங்குடிகளின்
இயற்கை சார்ந்த அறவாழ்வியல் மதிப்பீடுகள், குழப்பத்தை விளைவிக்கும் பாடத்திட்டங்களால் பழங்குடிகள் ஆரம்பக்
கல்வியிலேயே நின்றுவில் பழங்குடிகளின் வழிகாட்டி தலைமையாளர்களே
பழங்குடிகளுக்கு எதிராக சதி செய்வது, லால்கரின்
எழுச்சியை மாவோயிஸ்டுகள் தாங்களால் மட்டுமே நடந்தது என தப்பிதமாக
கொக்கரிக்கும் வேளையில் பழங்குடிகளின் உதவியின்றி அவர்களது செயல்
நிறைவேறாது என்பதை ஆசிரியர் அழுத்தம் திருத்தமாக கோடிட்டு காட்டுவதும்
விரிவான முறையில் அலசி ஆராய்ந்து தமிழ் வாசக பரப்பில் வந்திருக்கிறது
இந்த நூல்.
இந்த நூலில் மூன்றாம், நான்காம் அத்தியாயத்தில்
சந்தால் பழங்குடிகளின் இயற்கையோ சார்ந்த வாழ்வியல், இதிகாசங்களுடன்
தொடர்பு மற்று இனத்தோற்ற வரலாறு ஆகியவற்றை குறிப்பிட்டு
எழுதியுள்ளனர். ஒவ்வொரு பழங்குடிகளுக்கும் தம்முடைய
மூதாதையர் இனத் தோற்ற வரலாற்றை வாய்மொழி கதைப் பாடலாகவும், பழமரபுக் கதைகளாகவும்
அடுத்த தலைமுறைக்கு வாய்மொழி இலக்கியமாக கடத்துகின்றனர்.
இத்தொன்மக் கதை அவரவர்களது இன, சமூக, பண்பாட்டு, வரலாற்று சூழல்களோடு தருக்க உறவுகளை புதுப்பித்துக் கொண்டே
வருகிறது. சந்தால் பழங்குடிகளின் படைப்பு கொள்கையில் உலகம் தோன்றிய
விதம் குறித்தும், ஏழு குலங்களாக
பிரிந்து பின்பு 12 குலங்களாக ஆவது பற்றி
குறிப்பிடும் இந்த நூலாசிரியர் இயற்கையோடு தங்களது வாழ்வையும்
பண்பாட்டையும் நாணயத்தின் இரு பக்கங்களாக
இணைந்திருப்பதை கோடிட்டுக் காட்டுகிறார். இத்தொன்மக் கதையில் ஓர் உண்மை
என்னவென்றால் தண்டகாரண்ய பகுதிகளில் காலனிய ஆட்சியின்போது வெவ்வேறு
பெயர்களால் குறிப்பிடப்பட்ட கோண்ட், கோந்து, பஹாரியா, பீல், பூஞ்சியா ஹோ, கந்தா போன்ற
அனைத்து பழங்குடிகளின் தொன்மக் கதைகளில் ஏழு குலங்கள், ஏழு உலகங்கள், முக்கியமாக
ஏழு என்ற எண் மிகவும் குறிப்பிடத்தக்கதாகவும்
அமைந்துள்ளது.
பழங்குடிகளின் வாய்மொழி தொன்மக் கதைகள் அனைத்தும் அவர்களது வாழ்வின் நடைமுறைகளில் பிரதிபலித்துக் கொண்டிருக்கும்
தொன்மங்களை ஆழ்ந்து நோக்கும்போது அதன் பன்முகச்
செயல்பாடுகள் விரிந்து போவதை காணமுடியும். வாழ்தளத்தின்
முரண்பாடுகளையும், யதார்த்த வாழ்வின்
எதிர்கொள்கின்ற சிக்கல்களை எதிர்கொள்வதற்கு தொன்மங்கள் உதவுகின்றன.
ஒவ்வொரு பழங்குடிகளுக்கும் தான்தோன்றிய இன வரலாறு
(ஷீக்ஷீவீரீவீஸீ னீஹ்tலீ), இனப் பரவலாக்கம்
(னீவீரீக்ஷீணீலீவீஷீஸீ) தாம் வழிபடும் தெய்வ நம்பிக்கை, சட்டதிட்டம்
(லிஷீநீணீறீ கிபீனீவீஸீவீstக்ஷீணீtவீஷீஸீ)
அனைத்தும் வாய்மொழி இலக்கியமாக புனிதத்தன்மை
வாய்ந்ததாக (sணீநீக்ஷீமீபீ லிவீtமீக்ஷீணீtமீ) கூட்டு மனதின் வெளிப்பாடாக காணலாம். சந்தால்
பழங்குடிகளின் இறப்பு சடங்கின்போது ஜடு படுவா
என்றழைக்கப்படும் இந்து மதத்தைச் சார்ந்த தாழ்த்தப்பட்ட
வகுப்பினர் இறந்த நபரை படமாக வரைந்து இரவு முழுவதும் கதை சொல்லுவார்கள்.
இறந்தவரின் மரித்த ஆத்மா குருடாக அலைந்து கொண்டிருக்கும். அலைந்து
கொண்டிருக்கும் ஆத்மாவுக்கு கண்ணொளி தந்து ஆத்மாவை சொர்க்கத்திற்கு அனுப்பிவிடுவதாக ஐதீகம். இந்தப் படத்தை வரையும்போது
சில சடங்குகளை செய்து இன வரலாற்றை கதையாக படிப்பார்கள்.
இந்த சடங்கு சார்ந்த ஓவியத்தை “எமலோக படா” அல்லது பரலோக
படா என்று “சாக்சுதானா” என்றும்
சந்தாலி மொழியில் அழைப்பார்கள்.
பழங்கு மக்களின் இனப் பண்பாடு என்பது உடலுக்கு அழகிய ஆடை உடுத்தி பார்ப்பது போன்று எண்ணிக் கொள்ளலாம். தங்களது
பண்பாட்டு அடையாளத்தை (சிuறீtuணீறீ
மிபீமீஸீtவீயீஹ்) மேற்குறித்த வாழ்வியல் தொன்மச் சடங்கோடு இணைத்துப் பார்க்க வேண்டும். அவர்களது புழங்குசார்
வரிவடிவம் அல்லாத தொல்மொழி அவர்களது தொன்மக் கதைகளிலிருந்துதான்
பார்க்க முடியும்.
மேற்குறித்த பண்பாட்டு அடையாளங்களை அறவே ஒழிக்கும் நிலைமையும், அடையாளங்களை
இழந்து நிர்வாணமாக நிர்க்கதியடையும் நிலைமைக்கு தொடர்ந்து தாங்கள்
பாரம்பரியமாக வாழ்கின்ற தொன்ம பூமியிலிருந்து சுரங்கப் பணிக்காக அரசு உதவியுடன் மிரட்டி இடம் பெயர வைக்கின்றனர்.
பழங்குடிகளைப் பொறுத்தவரை அவர்கள் வாழ்கின்ற இடம் மிகவும் முக்கியத்துவமானது. அந்த இடத்தில் மூதாதையர்கள்
வாழ்வதாகவும், முன்னோர்களது ஆவி ஆசீர்வதிக்கும் என்ற தீவிர நம்பிக்கை கொண்டவர்கள்
உதாரணமாக கோண்டு பழங்குடிகளை எடுத்துக் கொண்டால் ஆந்திர மாநிலம்
அதிலாபாத் தொடங்கி ஒரிசா, மகாராஷ்டியா, ஜார்க்கண்ட், பீகார், மத்தியப்
பிரதேசம் வரை பெரிய பரப்பளவில் விரவி
வாழ்கின்றனர். ஒரிசாவில் வாழும் கோண் பழங்குடிகள் வீட்டின் இறப்புச் சடங்கில் குலப் பூசாரி பாடும் ஒப்பாரி பாடலில்
தங்களது மூதாதையர்கள் குறித்தும், ஒவ்வொரு
இனக்குழு சார்புடைய குல தெய்வம், குலக்குறி சின்னம், கோண்டு
ராஜாக்கள் ஆண்ட கோட்டைகள், ஆட்சிப் பரப்பில்
பகிர்ந்தளிக்கப்பட்ட எல்லைகள் ஆகியன குறித்து
விரிவாக அவர்களது ஆதி தொல் மொழியில் படிப்பார்கள். இக்கதைப்
பாடல்கள் மனப்பிரதியாக (னீமீஸீtணீறீ tமீஜ்t) தற்போது
வாழும் சந்ததியினருக்கு புரியாத மொழியில் படிக்கிறார்கள்.
இந்த பண்பாட்டு பழக்கமுடைய தொல்குடிகளை இடம் பெயரச் செய்யும்போது
வேறு இடத்தில் வேற்று கிரகத்தில் வசிப்பது போன்ற
மனப்பிரமையுடன் தனது பண்பாட்டையும் தொல்மொழியையும்
விரைவாக இழந்து விடும் சூழ்நிலைக்கு ஆளாகிறார்கள்.
காலனிய ஆட்சிக்கு முன்பாக பழங்குடிகளின் வாழ்விடங்கள் அந்தந்த பகுதிகளின் ஜமீன்தார்களின் கைவசம் இருந்தது.
ஜமீன்தார்கள் கிராமத்தை பரிபாலனம் செய்யும் கவுண்டியா
மூலம் வரிவசூல் செய்து வருவதுண்டு. பிரிட்டிஷ்
ஆட்சியின்போது உள்ளூர் மன்னர்களை சமாதானம் செய்துகொண்டு பழங்குடியினரல்லாத
வெளி ஆட்களை கொண்டுவந்து கிராம நிர்வாக அதிகாரத்தை அளித்து
வந்தனர். குறிப்பாக ஒரிசாவில் 1853ஆம் ஆண்டு வாக்கில் சம்பல்பூர் பகுதிகளிலிருந்து குல்தா சாதியினரை
(சிutவீஸ்ணீtஷீக்ஷீs) அழைத்துவந்து கோந்து பழங்குடிகளின் கிராமங்களை நிர்வகிக்கும் நில
உரிமையை பறித்தனர். நில உரிமை குல்தா சாதியினருக்கு
மாறியதால் கோந்து பழங்குடிகள் சமூக, பொருளாதார ரீதியாக கீழான நிலைக்குத் தள்ளப்பட்டனர். பிரிட்டிஷ்
அரசாங்கத்தோடு சேர்ந்து கோந்து பழங்குடிகளுக்கு எதிராக பல்வேறு சதி
வேலைகளில் குல்தா சாதியினர் ஈடுபட்டதால் கோந்து பழங்குடிகள் தங்களது
வாழ்வாதாரத்திற்காக அந்தக் காலத்திலேயே
வனப்பகுதிகளிலிருந்து பிழைப்பு தேடி புதிய இடங்களை நோக்கி
சென்றனர். கோந்து பழங்குடிகளுக்கும் குல்தா சாதியினருக்கும் இடையே நடந்த சண்டையை கோந்துமேலி (ரிஷீஸீபீலீuனீமீறீவீ)
பாடல்கள் மூலம் இன்று வரை மனப்பிரதியாக
பாடி வருகின்றனர். குஜராத் மாநில டாங் பகுதிகளில் வாழும் பழங்குடி
இனங்களான வார்லி, குக்னா, காமிட்
மற்றும் பீல் பழங்குடிகள் தத்தமது
வீட்டில் தயாரிக்கப்படும் மோவா சாராயத்தை காலனிய ஆட்சியின் துணையோடு
பார்சி இனத்தவர்கள் பழங்குடிகளை மிரட்டி தயாரிக்கப்பட்ட சாராயத்தை வாங்கி விற்பனை செய்து பெருமளவில் லாபம்
சம்பாதித்தனர் பார்சி இனத்தவர்கள். சாராயம்
விற்பதற்கான விற்பனை உரிமை பார்சி இனத்தவர்களுக்கு அளிக்கப்பட்டதால்
பழங்குடிகளால் தயாரிக்கப்பட்ட சாராயத்தை அவர்களிடம் ஒப்படைத்த
பிறகு முறையான ஒப்புதல் பெற்று தாங்களே அதிகமாக கொடுத்து வாங்கி குடிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டனர்.
இந்தியா முழுவதும் காலனிய நிர்வாக ஆட்சியின்போது வெவ்வேறு பகுதிகளில் அந்தந்த பகுதிகளுக்கு தகுந்தவாறு பழங்குடிகளின்
வாழ்வாதாரத்தை சுரண்ட ஆரம்பித்தனர். இப்பிரச்சினை போக
மதத்துவேஷம் கொண்டவர்கள் அவர்களது பங்கிற்கு
இயற்கை வழிபாட்டை மட்டும் நம்பியிருந்த ஆதிவாசிகளை அவரவர் மதத்திற்கு
தகுந்தவாறு மாற்றி குழப்பிக் கொண்டிருந்தனர்.
சுதந்திர கால இந்தியாவிற்கு பின்பு பின்காலனிய, முதலாளித்துவ அடிப்படையில் பழங்குடிகளின் பொருளாதார நிலையினை
நவீனப்படுத்தவும், கலாச்சாரத்தை காப்பாற்றவும்
ஜவஹர்லால் நேரு சில முயற்சிகளை செய்தார். நேருவின்
கண்ணோட்டத்திற்கு பின்காலனிய பழங்குடிக் கொள்கையின் பிதாமகன் என்றழைக்கப்பட்ட
வெரியர் எல்வின் கருத்துகளே உந்துசக்தியாக அமைந்தன. 1952ஆம் ஆண்டு
நேரு பழங்குடிகள் குறித்து குறிப்பிடுகையில் காலனிய ஆட்சியில்
பழங்குடிகள் இழந்த நிலங்களும், கலாச்சாரமும் பாதுகாக்கப்பட வேண்டும் என்றார். நேருவின் கருத்துகள் சுதந்திர
இந்தியாவின் பழங்குடியினர் பற்றிய
கொள்கையின் அடித்தளமாக அமைந்தன. ஆனாலும், தொடர்ந்து
ஆதிவாசிகளின் நலன்களுக்கு பாதகமாக அவர்கள் உரிமைகள் பறிக்கப்பட்டு
நிலம், உயிரிகளின் பன்முகத்தன்மை, தாது வளங்கள்
ஆகியவற்றின் மீது அரசின் ஏகபோக கட்டுப்பாடு தொடர்ந்தது.
ஆதிவாசிகளின் ஒருங்கிணைந்த வளர்ச்சியை வலியுறுத்திய எவ்வினின் அறிக்கை தோல்வியைத்தான் தழுவியது.
இந்த நூலின் எட்டாவது அத்தியாயத்தில் பழங்குடிகளின் கல்வி நிலை குறித்து விசனத்துடன் பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
பழங்குடிகளின் பண்பாட்டை புரிந்துகொண்டு மதிக்கும் மனநிலை உள்ள
ஆசிரியர்கள் மட்டுமே பணிபுரிய வேண்டும் என்று
அழுத்தந்திருத்தமாக கூறியுள்ளார். பொதுவாக ஆதிவாசிகள்
பகுதிகளில் உள்ள ஆரம்ப நிலை பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் பழங்குடியினரல்லாதார் (ழிஷீஸீ-ஜிக்ஷீவீதீணீறீ)
நகரத்திலிருந்து வந்து பணிபுரிகின்ற ஆசிரியர்களின்
பொதுவான பார்வை பழங்குடி மாணவர்கள் படிக்க இயலாதவர்கள்
என்ற மனக்கண்ணோட்டத்துடன் அணுகுகின்றனர். பழங்குடிகளின் வாழ்வியல்
பண்பாட்டிற்கும், பாடத்திட்டத்தில் இடம்பெறும் கருத்துரைகளுக்கும் சம்பந்தமில்லாமல் அந்நியமாக
உணர்வதால் ஆரம்ப நிலைகளிலே பெரும்பாலும்
பள்ளிப்படிப்பை நிறுத்தி விடுகின்றனர். வீட்டில் பேசுவது வட்டார மொழி, தவனியில்
வரும்பொழுது மாநில பொது மொழி, பாடத்திட்டமோ பெரும்பாலும் ஹிந்தி மொழி. பழங்குடியினரல்லாதவர்களுக்கு
வீட்டில் பேசும் புழங்கு மொழியும் பாடத்திட்ட மொழியும் ஒன்றாக
இருப்பதால் மிகவும் எளிதாகி விடுகிறது.
பழங்குடி மாணவர்களுக்கோ பேசுவது, கவனிப்பது, படிப்பது, எழுதுவது போன்ற நான்கு விஷயங்களும் அவனை அந்நியமாக்கி தாழ்வு
மனப்பான்மை ஏற்பட்டு பள்ளியை விட்டு போகும் அளவுக்கு
போய்விடுகிறான். குறிப்பாக கணிதம் மற்றும் அறிவியல் பாடம்
அவனது பண்பாட்டுக்குச் சம்பந்தமில்லாத கல்வியாகவும், கசப்பாகவும்
அமைந்து விடுகிறது. பழங்குடி பகுதிகளில் 2001லிருந்து
உயர் கல்வியில் 90% இடங்கள்
பூர்த்தியாகாமல் உள்ளது என்பதை குறிப்பிடுகிறார். பின் காலனிய
நவீன அரசு வனங்களில் உள்ள நிலங்கள் மீதான உரிமை மற்றும் கட்டுப்பாடு குறித்த முக்கிய பிரச்னையில் வனங்கள்
மீது அரசு ஏகபோக உரிமையை தன் கையில் கொண்டு வந்தது. வனப்
பகுதிகளை ரிசர்வ் காடுகள், சமூக பாதுகாப்பு காடுகள், கிராமப்புற
காடுகள் எனப் பகுத்து அந்தப் பகுதி காடுகளில் வாழும் மக்களின்
உரிமைகள் மீதும் அரசு அதிகாரத்தை செலுத்தியது. 1952ஆம் ஆண்டு வெளிவந்த தேசிய வனக் கொள்கையின்படி தேசிய
முன்னேற்றத்திற்காக தொழில் மயமாக்குவதற்கு
காடுகளை அரசு தன் அதிகாரத்தின்கீழ் கொணர்ந்து பழங்குடி மக்களின்
வாழ்வாதாரங்களான காடுகளிலிருந்து பிரித்து தினக்கூலி அடிமைகளாக்கி வனங்களை வியாபார லாபத்துக்கும், தொழில் துறை
வளர்ச்சியடைவதற்கும் வழி செய்தது.
வனத்துறை அதிகாரிகள் காடுகளை பொருளாதார வளர்ச்சிக்குப் பயன்படும் ஆதார வளங்களில் ஒன்றாகத்தான் பார்க்கிறார்களோ தவிர, வனங்களை
கலாசார சமூக அடையாளங்களாகப் பார்ப்பதில்லை என்று சுற்றுச்சூழல்
பாதுகாப்பு இயக்கங்கள், பழங்குடியினர் இயக்கங்கள்
வாதிடுகின்றனர். காடுகளின் காப்புணர்வு என்பது மரபு ரீதியாக
பழங்குடிகளின் ரத்தத்தில் ஊறிப்போன விஷயம். கார்வால் இமயமலைப் பகுதிகளில் விளையாட்டு சாமான்களுக்காக மரங்களை
வெட்டும் உரிமையை சைமண்ட்ஸ் என்ற நிறுவனம்
ஒப்பந்தம் செய்தபோது அப்பகுதி பழங்குடி பெண்கள் ஒவ்வொரு மரத்தையும்
கட்டிக்கொண்டு போராடினர். அந்தப் போராட்டம் புகழ் பெற்ற சிப்கோ இயக்கம் என்று புகழ் பெற்றது. சிப்கோ இயக்கம்
நடைபெறுவதற்கு நூறாண்டுகளுக்கு முன்பே ராஜஸ்தான் நில ஜோத்பூர் அருகே
கெஜதாலி (ரிலீணீழீணீபீணீறீவீ) என்ற கிராமத்தில்
மரங்களை வெட்டுவதற்கு ஜோத்பூர் மன்னன்
ஆணையிட அப்பகுதிகளில் வாழும் வீஷ்னாய் இனப் பெண்கள் அந்த மரத்தை கட்டி அணைத்துக் கொண்டு மரத்தை வெட்டும் முன் எங்களை
வெட்டுங்கள் என்று கூறி போராடிய வரலாறு உண்டு.
பிஸ்னாய் (ஙிவீsலீஸீஷீவீ சிஷீனீனீuஸீவீtஹ்) இனப் பெண்கள்
இன்று வரை தங்கள் பகுதிகளில் வாழும் பாலூட்டி உயிரிகள், பறவைகள்
போன்றவற்றை தங்கள் குடும்ப உறுப்பினர்களாகவே கருதுவர். மான், நாய் போன்ற
உயிர்களுக்கு பசி தாகம் ஏற்படும்போது தங்கள் மார்பை அவிழ்த்து
முலைப்பாலை கொடுத்து தாகத்தை தீர்த்துவிடும்
உயரிய ஜீவகாருண்யம் கொண்டவர்கள். ஆக, பழங்குடிகள்
தன்னாடு, தன் மக்கள், தன்
வளர்ப்பினங்கள், தன் விளைநிலங்கள் என்ற சூழலியல் சங்கிலியில் பன்முக உயிர்ப்பின் தர்மத்தோடு வாழ
நினைப்பவர்கள்.
இயற்கையை மனித பண்பாட்டு வாழ்வோடு இணைந்த பன்முக உயிர்ப்பு தன்மை கொண்ட சூழலியல் சங்கிலியை சுக்கு நூறாக உடைபடும் விதமாக
இன்றைய நவீன தாராளமய உலகமயமாதல் என்ற வடிவில்
அச்சுறுத்துகிறது. அசுரத்தனமான வளர்ச்சி என்ற பெயரில்
விண்ணுக்கும், ஆகாயத்திற்கும் கொடியினை
நாட்டிக்கொண்டு இந்தியாவின் இதயப்
பகுதியாக விளங்கும் தண்டகாரண்ய காடுகளை உலகின் மாபெரும் நிறுவனங்களான
மிட்டல், ஜின்டால், எஸ்ஸார், டாடா, போஸ்கோ, வேதாந்தா
போன்ற நிறுவனங்களின் குறைந்தபட்ச கமிஷன் டாலர்களுக்காக
மலைகளை சுரண்டுவதற்கு வழிவகுத்து விட்டு வருகிறது
நமது அரசு.
பன்னாட்டு நிறுவனங்களோ மலைகளை மட்டும் தானே சுரண்டுகிறோம் என்ற பெயரில் சுத்திகரிப்பு ஆலைகள் வெளிப்படுத்தும் நச்சுப்
பொருட்களால் நிலம் பாழாகி, நதிகள் அசுத்தமாகி, நூற்றுக்கணக்கான
பறவைகள், விலங்குகளை சந்தடியின்றி அனாதரவாக்கி, காலம் காலமாக
வாழ்கின்ற பழங்குடிகளை மிரட்டி பெண்களை பாலியல் வன்முறைகளுக்கு
ஆட்படுத்தி, வேற்று கிரகத்தில் வாழும் மனப்
பிரமைகளை உருவாக்கி புலம் பெயரச் செய்து தாங்க முடியாத
மனஉளைச்சலுக்கு பாதகமாகும் சூழ்நிலைக்கு
நாசமாக்கி வருகின்றனர்.
இந்நூலாசிரியர் பழங்குடிகளின் சட்ட திட்டங்களை நிர்வகிக்கக்கூடிய மரபு முறை பஞ்சாயத்து குறித்து ஆழமாக கருத்துகளை
பதிந்துள்ளார். ஆதிவாதிகளின் கலாசாரத்தை
பேணி பாதுகாப்பதற்கான (சிuறீtuக்ஷீணீறீ ஸிவீரீலீts) உரிமையுள்ள சட்டத்தை பரிந்துரைக்க திலீப் சிங் பூரியா
(ஞிவீறீமீமீஜீ ஷிவீஸீரீலீ றிலீuக்ஷீவீணீ)
என்பவரை தலைவராக கொண்ட பூரியா கமிட்டி 1995ஆம் ஆண்டுவாக்கில் ஏற்கனவே அட்டவணைப்படுத்தப்பட்ட பழங்குடிகளுக்கான
சிறப்பு ஐந்தாம், ஆறாம்
அட்டவணையில் உள்ள திட்டங்களையொட்டி பெசா சட்டம் என்ற பெயரில் 196ஆம் ஆண்டு
அறிமுகமாகியது.
றிணிஷிகி (றிணீஸீநீலீணீஹ்ணீts ணிஜ்tமீஸீtவீஷீஸீ tஷீ tலீமீ ஷிநீலீமீபீuறீமீபீ
கிக்ஷீமீணீ கிநீt) பூரியா கமிட்டியால் பரிந்துரைக்கப்பட்ட அட்டவணைப்படுத்தப்பட்ட பஞ்சாயத்து
இட நீட்டிப்பு சட்டத்தின்படி கீழ்க்கண்டவாறு சட்டப்படி நடவடிக்கைகளை
மேற்கொள்ள பரிந்துரைக்கிறது.
1. பழங்குடிகளின் வாழ்வாதாரங்கள், மரபுமுறை
நிர்வாக பஞ்சாயத்து, சமூக, மத
பழக்கவழக்க நடவடிக்கைகள் ஆகியவற்றை பாதுகாக்க வேண்டும்.
2. எந்தவொரு அரசுசார் உதவி
திட்டங்களும், கிராம நிர்வாக பிரச்னைகளும், சுரங்கம்
தோண்டுவதற்கான நிலத்தை கையகப்படுத்த முயற்சி செய்தாலும், நில மீட்பு, நில
அபகரிப்பு, நதிகளின் உரிமை, ஏழை நலவாழ்வு
திட்டங்கள் அனைத்தும் பழங்குடிகளின் நிர்வாக கிராம
பஞ்சாயத்து தலைவரின் முன் ஒப்புதல் இல்லாமல் எந்த
நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என்று வலியுறுத்துகிறது. ஆக மரபுசார் கிராம நிர்வாக பஞ்சாயத்து அமைப்புக்கு முழு அதிகாரம்
அளிக்கிறது இந்த கமிட்டி.
மூன்றாவதாக பழங்குடிகளின் பழக்கவழக்கங்கள், வாழ்வியல்
மதிப்பீடுகள், கலாச்சார அடையாளம் ஆகியவற்றை பாதுகாக்கவும்
கிராம நிர்வாக பஞ்சாயத்துக்கு அதிக
அதிகாரம் அளிக்கிறது.
மேற்குறித்த ஆதிவாதிகளின் கலாச்சார பண்பாட்டை காப்பதற்கான உரிமை சட்டம் தேசிய அளவில் நடைபெறுவதை கண்காணிக்க அகில உலக அளவில்
பல்வேறு அமைப்புகள் கலாச்சாரத்தை பேணி
பாதுகாக்கக்கூடிய பன்முக உயிரியல் ஒருங்கிணைப்பு (சிஷீஸீஸ்மீஸீtவீஷீஸீ ஷீஸீ tலீமீ
ஙிவீஷீறீரீவீநீணீறீ ஞிவீஸ்மீக்ஷீsவீtஹ்), புவி உச்சி
மாநாடு அறிக்கை (ணிணீக்ஷீtலீ ஷிuனீனீவீts) அகில உலக
தொழிலாளர் அமைப்பு (மிலிளி), ஐ.நா.
அமைப்பு (ஹிழிளி) போன்ற நிறுவனங்கள் ஆதிவாசிகளின் கலாசார
அடையாளங்களை பாதுகாக்க பல்வேறு சட்ட திட்டங்களை
இயற்றி வருகிறது. மனித உரிமை அமைப்புகளும் பூர்வீக குடிகளின் கலாச்சார
சுதந்திரத்தை பாதுகாப்பதற்கான பல்வேறு நடவடிக்கைகளை
மேற்கொண்டுள்ளது. ஆனால், நடைமுறை சிக்கலில்
எந்த சட்டத்தையும் பின்பற்றுவதாக தெரியவில்லை.
நூலாசிரியர் குறிப்பிட்ட ஜார்க்கண்ட், ஒரிசா, மத்திய
பிரதேசம், சத்தீஸ்கர், குஜராத்
பகுதிகளில் கிராம சபைகளுக்கு எந்த அதிகாரமும் வழங்கப்பட்டதாக
தெரியவில்லை. 1996ஆம் ஆண்டில் ‘பெசா’ சட்டம்
நடைமுறைக்கு கொண்டு வந்திருந்தால் மரபு கிராமநிர்வாக
பஞ்சாயத்துஅமைப்புக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரத்தின்படி
சத்தீஸ்கர் மாநில பஸ்தார் பகுதிகளில் மாவோயிஸ்டு-சல்வாஜூடும்
பிரச்சினையின் வெளிப்பாடாக 644 கிராமங்களின் இடப்பெயர்வு வெளியேற்றத்தை கண்டிப்பாக தவிர்த்திருக்க
முடியும். சத்தீஸ்கர் மாநிலம் ஜாஸ்பூர் பகுதிகளில்
சுரங்கப் பணிக்காக 6.093 சதுர கிலோ மீட்டர் பரப்பளவுள்ள நில ஆக்கிரமிப்பை தவிர்த்திருக்கலாம்.
ஜார்க்கண்டில் மட்டும் 71 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்
அடிப்படையில் 98.547 ஏக்கர் பரப்பளவுள்ள இடத்தை ஆக்ரமித்திருக்கிறார்கள்.
ஒரிஸா பகுதிகளில் 33.268 ஏக்கர் பரப்பளவு நிலத்தை
கார்ப்பரேட் நிறுவனங்கள் ஆக்ரமித்துள்ளது. ஆக பெசா சட்ட
பரிந்துரைகளுக்கு பின்பு இவ்வளவு இடங்கள் ஆக்ரமிப்பு, அப்பகுதிகளில்
வாழ்கின்ற பழங்குடிகள் வெளியேற்றம், பழங்குடிகளின்
வெளியேற்றத்தால் வனத்தை நம்பி வாழ்ந்த வாழ்க்கை மட்டும்
தெரிந்தவர்கள் என்ன வேலை செய்வது என்று தெரியாமல் பல்வேறு நகரங்களில் நடைபெறும்
கட்டுமானப் பணிகளில் தங்களை தினக்கூலிகளாக மாற்றிக்கொண்டு
வேலை செய்வது, பாலியல் தொழிலில் ஈடுபடுவது
என்று பல்வேறுவிதமாக வாழ்க்கை திசை மாறி போய்விட்டது.
ஆக, சட்டங்கள் என்பது கிராமம் முதல்
ஐ.நா. சபை வரை ஷரத்துகளிலேயே தூங்கிப்
போய் விடும் நிலைதான் இருக்கிறது. தவிர, நடைமுறையில் செயல்படுவதில்லை என்று தெரிய வருகிறது. கிராம நிர்வாக
சபைக்கு தெளிவாக கலாச்சாரத்தை பாதுகாப்பதற்கான சட்டப் பரிந்துரைகளை
பின்பற்றப்படவில்லையே! சொல்லப் போனால் மேற்குறித்த
எந்த மாநிலங்களிலும் பஞ்சாயத்து தேர்தல்கூட நடத்தவில்லை
என்பது வெட்டவெளிச்சமாக தெரிய வருகிறது. மனித உரிமை மீறல்களும் கண்டுகொள்ளப்படுவதில்லை. பூர்வீக குடிகளை
கிள்ளுக்கீரைகளென துச்சமாக எண்ணியிருப்பதால்தான்
பழங்குடிகளின் கிராம நிர்வாக சபையின் அதிகாரம் அரசுகளுக்கு
பொருட்டாக மதிக்கப்படவில்லை எனத் தெரிகிறது. அப்புறம் நாம் எப்படி பேச
முடியும் ஜனநாயக அதிகார பரவலாக்கம் கிராம நிர்வாக சபைக்கு அளித்திட
வேண்டும் என்று!
பழங்குடிகளைப் பொறுத்தமட்டில் அவர்கள் வாழும் மலை, வனம், நதி போன்றவை அவர்களது பண்பாட்டுச் சின்னமாகவும் முடிவற்ற தொன்ம
அடையாளமும் ஆகும். அவர்கள் வாழ்கின்ற பகுதியை மற்றும் பாரம்பரிய அறிவை
சுயநலமிக்க பன்னாட்டு நிறுவனங்கள் வன்புணர்ச்சிக்கு
உட்படுத்துவதை எப்படி சகித்துக் கொள்ள முடியும்? அம்மக்களை
பொறுத்தவரை அதிகாரத்தில் உள்ளவர்களிடமிருந்து எந்த தொந்தரவும்
வராமல் இருந்தாலே நிறைவாக வாழ்ந்துவிட முடியும் என்று கருகிறார்கள்.
பழங்குடிகள் வாழும் பகுதிகளை கலாசார சமூக அடையாளங்களாக பார்த்தாலே
நமது கரிசனம் அவர்களை வாழ வைக்கும். வளர்ச்சி திட்டம் என்ற பெயரில்
பழங்குடிகளை அணுகும்போது அவர்களுக்கான பண்பாட்டு நம்பிக்கையின் அடிப்படையில் திட்டமிடப்பட வேண்டும். இந்தியப்
பழங்குடிகளில் வாழ்க்கையின் எதிர்காலம்
சிறப்பாக அமைய வேண்டுமானால் கிராம நிர்வாக பஞ்சாயத்து அமைப்புக்கு
எல்வின் கமிட்டி, பூரியா கமிட்டியின்
அணுகுமுறைகளை வலியுறுத்தி பழங்குடி
மக்களுக்கான நில உரிமைகளை அந்த மக்களுக்கு உறுதிப்படுத்துவதில் சுற்றுச்சூழல்வாதிகளும், இடதுசாரிகளும்
தொடர்ந்து போராடி மீட்டுக் கொடுப்பார்களா? நாகரீகம்
என்ற பெயரில் சுயநலமிக்க நவீன மனிதர்களும் வாழ்கின்ற
வாழ்க்கையை எளிமைப்படுத்தினாலே, நுகர்வு கொள்ளை குறையத் தொடங்கும். நுகர்வு கொள்ளை குறையும்போது
பழங்குடிகளின் வாழ்வாதாரங்களான இருப்பிடங்களுக்கும்
நிம்மதி வந்து விடும் என்று நம்புவோமாக!
இந்நூலாசிரியர் எனக்கு முந்தைய தலைமுறையின் படைப்பிலக்கியத்தில் பல்வேறு தளங்களில் சமூகம் சார்ந்த பல பிரச்சினைகளுக்கு தனது
எழுத்தின் மூலம் கட்டுரைகளை தீட்டிக் கொண்டு வருபவர். காந்திய எளிமையை
தனது எழுத்துக்களில் வாழைப்பழத்தில் ஊசியை ஏற்றுவது
பல இடங்களில் காணமுடிகிறது. மார்க்சிய சித்தாந்தம்
மீது பேராவல் கொண்ட இந் நூலாசிரியரின் படைப்பில் வெளிவரும் “உலரா கண்ணீர்” புத்தகத்தை
தமிழ் வாசகர்கள் தீவிர புரிதலுடன் படித்து வரவேற்பார்கள்
என்ற நம்பிக்கை ஆழமாக இருக்கிறது. இந்நூலினை வெளியிடும் ‘புலம்’ லோகநாதன் அவர்களுக்கும், இப்புத்தகத்திற்கு
முன்னுரை எழுத வாய்ப்பளித்ததற்கும் மேலான நன்றியினை தெரிவித்துக்
கொள்கிறேன்.
ரெங்கையா முருகன்
சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனம்
பயன்பட்ட நூல்கள்
1.
அர்ச்சனா பிரசாத், 2005, சுற்றுச்சூழலும் வாழ்வுரிமையும், பழங்குடிமக்கள்
: சமகால விவாதமும் எதிர்காலத் திட்டமும், சென்னை, பாரதி புத்தகாலயம்
2.
ரெங்கையா முருகன், வி.ஹரிசரவணன், 2010, அனுபவங்களின் நிழல் பாதை, இந்திய
திணைக்குடிகளினூடாக நீள் பயணம், திருவண்ணாமலை, வம்சி புக்ஸ்
3.
க்ஷிமீக்ஷீக்ஷீவீமீக்ஷீ ணிறீஷ்வீஸீ, 2002, ஜிலீமீ ஜிக்ஷீவீதீணீறீ கீஷீக்ஷீறீபீ ஷீயீ
க்ஷிமீக்ஷீக்ஷீவீமீக்ஷீ ணிறீஷ்வீஸீ : கிஸீ கிutஷீதீவீஷீரீக்ஷீணீஜீலீஹ், ழிமீஷ்
ஞிமீறீலீவீ, ளிஜ்யீஷீக்ஷீபீ
4.
மிஸீபீக்ஷீணீ விuஸீsலீவீ (ணிபீ.)2012, ஜிலீமீ கிபீவீஸ்ணீபீவீ னிuமீstவீஷீஸீ : மிssuமீs ஷீயீ
றீணீஸீபீ யீஷீக்ஷீமீst ணீஸீபீ றீவீஸ்மீறீவீலீஷீஷீபீ, ழிமீஷ்
ஞிமீறீலீவீ, ளிக்ஷீவீமீஸீt ஙிறீணீநீளீ ஷிஷ்ணீஸீ & ணிறிகீ
5.
யிஷீsமீஜீலீ விணீக்ஷீவீணீஸீus ரிuழீuக்ஷீ, 2010, சிuறீtuக்ஷீணீ
ஸிவீரீலீts ஷீயீ கிபீவீஸ்ணீsவீs, ஜீஜீ.323-338, ஷிஷீநீவீணீறீ கிநீtவீஷீஸீ (ஷீநீt. – ஞிமீநீ.) ஸ்.60, ழிஷீ. 4
*
பதிப்பு: டிசம்பர் 2012
பக்கங்கள்: 136
விலை ரூ. 85.00
வெளியீடு: புலம்
332/216, திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை
திருவல்லிக்கேணி
சென்னை _ 600 005
No comments:
Post a Comment