முனைவர்
பூ.மு.அன்புசிவா
எம் தலைவா
நீ ஏற்றிவைத்த நெருப்பு
நீ ஏற்றிவைத்த நெருப்பு
எங்கள் நெஞ்சங்களில்
எரிமலையாய் பொங்கும்...
அதில் ஆதிக்க வெறி
சாத்தான்கள் சாம்பலாய் கருகும்...
சமத்துவம் பிறக்கும் வரை
நாமும் சாதி வெறி
கொண்டு போர் புரிவோம்...
தென்
தமிழகத்தில் குறிப்பாக, ராமநாதபுரம் மாவட்டத்தில் தொல்குடி சமூகங்களின் உரிமைப் போராட்டங்களுக்கான
அடையாளமாக, மள்ளர் சமூக இயக்கம் வேர்கொள்ளத் தொடங்கியது. 1922ல் அதாவது, "ஆப்பநாடு
மறவர் சங்கம்' தொடங்கப்பட்டதன் உடனடி எதிர்வினையாக, "பூவைசிய இந்திர குல சங்கம்”
தனது முதல் மாநாட்டை முதுகுளத்தூர் வட்டம் செங்கோட்டைப்பட்டி என்னும் கிராமத்தில் நடத்தியது.
இதன் மூன்றாவது மாநாடு 6.6.1923 அன்று நடத்தப்பட வேண்டிய அளவுக்கு, குறிப்பாக, மறவர்களின்
சமூக ஒடுக்குமுறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டிருந்தன என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்.
இந்திர
குல சங்கம், இப்பகுதி வாழ் மள்ளர் சமூகத்தினரை ஒருங்கிணைப்பதையும், நெறிப்படுத்துவதையும்
தலையாயக் கடமையாகக் கொண்டு செயல்பட்டு வந்தது. மறவர்களின் சமூக மேலாதிக்கத்திலிருந்தும்,
வன்முறை நடவடிக்கைகளிலிருந்தும் தம் மக்களைப் பாதுகாப்பதில் பெருமாள் பீட்டர் அவர்களின்
முழுமையான அக்கறை, வரலாற்றில் பதிவு செய்யப்படாமலேயே இருக்கிறது. அவரின் அறிவார்ந்த
செயல்பாடுகள், மள்ளர் சமூகத்தினரின் வாழ்வியல் பண்புகளைப் பிரதிபலிப்பவையாக இருக்கின்றன.
இந்திர
குல சங்கம் பதிவு செய்யப்பட்ட இரண்டு மாதங்களில் ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர்
வட்டம், செல்லூர் எனும் கிராமத்தில் 9.10.1924 அன்று பள்ளி ஆசிரியரான வேதநாயகம் – ஞானசவுந்தரி
ஆகியோரின் மகனாகப் பிறந்தார் இம்மானுவேல் சேகரன். தனது 18 ஆவது வயதிலேயே "வெள்ளையனே
வெளியேறு' இயக்கத்தில் பங்கெடுத்து, மூன்று மாத சிறைத் தண்டனை அனுபவித்தார். இதம்பாடல்
கிராமத்தைச் சேர்ந்த தொடக்கப்பள்ளி ஆசிரியரான அமிர்தம் கிரேஸ் என்பவரை மணந்தார். இவர்களுக்கு
நான்கு பெண் குழந்தைகள் பிறந்தனர். 1945இல் இந்திய ராணுவத்தில் ஹவில்தார் மேஜராகப்
பணியில் சேர்ந்தார். பெருமாள் பீட்டர் அவர்களின் கடைசி மகனான திரு. வில்லியம் அவர்களின்
பள்ளித் தோழரான இம்மானுவேல் சேகரன் பின்னாளில், சமூக அக்கறை கொண்டு பெருமாள் பீட்டரின்
அரசியல் வாரிசாக உருவெடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தேக்கம்பட்டி
பாலசுந்தர்ராஜ் அவர்கள் அண்ணல் அம்பேத்கரை அழைத்து மதுரையில் 29.12.1946 அன்று நடத்திய
தேவேந்திர குல வேளாளர் சங்க மாநாட்டில், பெருமாள் பீட்டரோடு இம்மானுவேல் சேகரனும் கலந்து
கொண்டார் என்பது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. அம்பேத்கரின் கருத்துகளால் ஈர்க்கப்பட்டும்,
பெருமாள் பீட்டரின் வேலைத் திட்டங்களில் ஒன்றியும், ராமநாதபுரம் பகுதிவாழ் ஒடுக்கப்பட்ட
சமூகங்களின் வாழ்நிலையைக் கருத்தில் கொண்டும் தனது ராணுவப் பணியைத் துறந்து விட்டு,
1951இல் நேரடியான சமூகப் போராட்டங்களில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். 1953 இல் ஒடுக்கப்பட்டோர்
இளைஞர் இயக்கத்தை உருவாக்கி, மள்ளர் சமூகத்தினரை மட்டுமல்லாமல், அனைத்து ஒடுக்கப்பட்ட
சமூகங்களையும் உள்ளடக்கியதாக அவரின் சமூக விடுதலைப் போராட்டங்கள் உருவெடுத்தன. அம்பேத்கரின்
பிறந்த நாள் அன்று, ராமநாதபுரத்தில் ஒடுக்கப்பட்டோர் எழுச்சி மாநாட்டினை நடத்தினார்.
சாதி ஒழிப்பு, விதவை மணம், கலப்பு மணம் ஆகியவற்றை வலியுறுத்தும் தீர்மானங்களை மாநாட்டில்
நிறைவேற்றினார்.
26.5.1954
அன்று இரட்டைக் குவளை ஒழிப்பு மாநாட்டை அருப்புக் கோட்டையில் நடத்தினார்.
2.10.1956 அன்று, ஒடுக்கப்பட்ட மக்களின் அரசியல் பங்கேற்பு மாநாட்டை முதுகுளத்தூரில்
முன்னெடுத்தார். 6.12.1956 அன்று அண்ணல் அம்பேத்கரின் மறைவையொட்டி மாபெரும் இரங்கல்
கூட்டத்தை நடத்தினார். ஒடுக்க பட்ட சமுகங்களின் ஒப்பற்ற தலைவராக உருவெடுக்க தொடங்கிநார்
முதுகளத்தூர் பகுதி வாழ் பறையர் மக்கள் பொது கினறுகளில் தன்னீர் எடுக்க விடாமல் மனித
மலம் கலந்த ஆதிக்க சாதிகளின் கொடுமைகளை துனிந்து எதிர்தார். ஒடுக்க பட்ட மக்களுக்கு
எதிரான சொல்லான வன்முறைகளை பொருக்க முடியாது. படை திரட்டி எதிர் தாக்குதல்கள் நடத்தினார்...பள்ளர்,பரையர்,சக்கிலியர்,சானர்
குழந்தைகள் பள்ளி கூடத்துக்கு போககுடாதுனு சொன்ன ஆதிக்க வெறியர்கள அடித்து நொருக்க
சொன்னர். அருந்ததியர் சிலர் மீது மறவர் சமூகத்தினர் நடத்திய வன்முறைக்குப் பதிலடி தரும்
விதமாக, மள்ளர் சமூக இளைஞர்களைக் கொண்டு திருப்பித் தாக்கிய அவரின் செயல்பாடு, ஒடுக்கப்பட்ட
அனைத்து மக்களின்பால் அவர் கொண்டிருந்த அன்பைப் புலப்படுத்தும். ஒடுக்கப்பட்ட மக்களின்
அரசியல் பங்கேற்பை உறுதி செய்வதற்காக காங்கிரஸ் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார்.
தனது சமூக விடுதலைப் போராட்டங்களுக்கு ஆளும் கட்சியாகயிருந்த காங்கிரசு அரசும், முதலமைச்சராகயிருந்த
காமராசரும் உறுதுணை யாக இருப்பார்கள் என்ற நம்பிக்கையே, அவரை காங்கிரசு கட்சியோடு இணைத்தது.
1957
இல் பசும்பொன் முத்துராமலிங்கம் நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றதால், முதுகுளத்தூர்
சட்டமன்றத் தொகுதியில் அவர் பதவி விலக, மறு தேர்தல் நடந்தது. காங்கிரசுக்கு ஆதரவாக
இம்மானுவேல் பிரச்சாரம் செய்தார். ஆனால், பார்வர்டு பிளாக் வேட்பாளரான சசிவர்ண வெற்றி
பெற்றவுடன், மறவர்கள் முதுகுளத்தூர் பகுதியில் வன்முறையில் இறங்கினர். இம்மோதலில்
42 பேர் கொல்லப்பட்டனர்.
1957
செப்டம்பர் 10 ஆம் தேதி நடைபெற்ற அமைதிப் பேச்சுவார்த்தைக்கு முத்துராமலிங்கம் வந்தபோது,
மாவட்ட ஆட்சியர் உட்பட அனைவரும் எழுந்து நின்று மரியாதை தெரிவித்த நிலையில், இம்மானுவேல்
சேகரன் தனது மக்களின் எதிர்ப்பைப் பதிவு செய்யும் விதமாக, அத்தகைய மரியாதையைத் தரவில்லை.
மேலும், தன்னைக் குறைவு படுத்திப் பேசிய முத்துராமலிங்கத்துடன் சரி நிகராக நின்று,
இம்மானுவேல் வாதம் புரிந்தது, மறவர் சமூகத்தினர் அவரை அடுத்த நாளே படுகொலை செய்யும்
அளவிற்குத் திட்டமிடத் தூண்டிய நிகழ்வாகக் குறிப்பிடப்படுகிறது. ஆனால், 33 வயதேயான
இம்மானுவேலின் துணிவும், எதிர்ப்பு மனநிலையும், சுயமரியாதை உணர்வுமே அவரை இன்றைய நாளிலும்
– மள்ளர் சமூக மக்களின் இணையற்ற தலைவராக இருத்தியுள்ளது
No comments:
Post a Comment