ஆண்களாய் இருக்கும்
ஆசிரியர்களுக்கு என்னை ஒருபோதும் பிடிக்காது
காரணம் நிறையவே...
வாசல் முன் நிறுத்துவார்கள்
முகத்தை பார்க்காமல் முறைப்பார்கள்
முகத்தை திருப்பி பேசுவார்கள்
சொல்லாமல் போவார்கள்...
தோட்ட வேலை செல்லுவார்கள்
சாக்பீஸ் துண்டுகளால் எறிவார்கள்
எல்லாவற்றிற்கும் காரணம் இதுதான்...
பெண் ஆசிரியர்களுக்கு
என்னை ரொம்ப பிடிக்கும்...
என்னை தலையை சாய்த்து சிரிப்பார்கள்...
தங்கள் கைப்பைகளை
கொடுத்து கொண்டுபோய்
தங்கள் அறையில் வைக்க சொல்வார்கள்...
மழை பெய்தால்
கவிதை சொல்ல சொல்லுவார்கள்...
நல்ல சாப்பாடு கொண்டுவந்தால்
தனியாக அழைத்து சாப்பிட சொல்வார்கள்...
காதலிக்க சொல்வார்கள்
காதலிக்கும் பெண்களிடம்
சண்டை போட சொல்வார்கள்!
பேருந்து வரும் வரை
துணைக்கு இருக்கச் சொல்வார்கள்...
நான் தவறு செய்தால்
அம்மா அடிப்பது போல் என்னை அடிப்பார்கள்...
ஆமாம் ஆமாம்
அப்போதே சொல்வார்கள்...
சிவா ஒரு டீச்சரைத் தான்
கல்யாணம் பண்ணுவட என்பார்கள்...
ஆம் நண்பர்களே!
அதுதான் நடந்தது...
ஆசிரியர்கள் தான்
என் உலகின் முதல் தேவதைகள்...
அவர்கள் தான்
என் பால்யத்தின் கனவுகளை
திறந்து வைத்தார்கள்...
அவர்கள் தான்
என் கனவுகளில்
முதல் கவிதைகளை வாசித்தார்கள்...
என் தேவதையும் ஆசிரியர் தான்
என் ஆசிரியரும் தேவதை தான்...
என் ஆரஞ்சு மிட்டாய்
வாழ்க்கையை அதன் ருசி குறையாமல்
அப்படியே எனக்கு திருப்பிக் கொடுத்த
என் வாழ்க்கைத் துணை ஆசிரியருக்கும்
ஆசிரியர் தின வாழ்த்துக்கள்.!!!
சாக்பீஸ் துண்டுகளால் எறிவார்கள்
எல்லாவற்றிற்கும் காரணம் இதுதான்...
பெண் ஆசிரியர்களுக்கு
என்னை ரொம்ப பிடிக்கும்...
என்னை தலையை சாய்த்து சிரிப்பார்கள்...
தங்கள் கைப்பைகளை
கொடுத்து கொண்டுபோய்
தங்கள் அறையில் வைக்க சொல்வார்கள்...
மழை பெய்தால்
கவிதை சொல்ல சொல்லுவார்கள்...
நல்ல சாப்பாடு கொண்டுவந்தால்
தனியாக அழைத்து சாப்பிட சொல்வார்கள்...
காதலிக்க சொல்வார்கள்
காதலிக்கும் பெண்களிடம்
சண்டை போட சொல்வார்கள்!
பேருந்து வரும் வரை
துணைக்கு இருக்கச் சொல்வார்கள்...
நான் தவறு செய்தால்
அம்மா அடிப்பது போல் என்னை அடிப்பார்கள்...
ஆமாம் ஆமாம்
அப்போதே சொல்வார்கள்...
சிவா ஒரு டீச்சரைத் தான்
கல்யாணம் பண்ணுவட என்பார்கள்...
ஆம் நண்பர்களே!
அதுதான் நடந்தது...
ஆசிரியர்கள் தான்
என் உலகின் முதல் தேவதைகள்...
அவர்கள் தான்
என் பால்யத்தின் கனவுகளை
திறந்து வைத்தார்கள்...
அவர்கள் தான்
என் கனவுகளில்
முதல் கவிதைகளை வாசித்தார்கள்...
என் தேவதையும் ஆசிரியர் தான்
என் ஆசிரியரும் தேவதை தான்...
என் ஆரஞ்சு மிட்டாய்
வாழ்க்கையை அதன் ருசி குறையாமல்
அப்படியே எனக்கு திருப்பிக் கொடுத்த
என் வாழ்க்கைத் துணை ஆசிரியருக்கும்
ஆசிரியர் தின வாழ்த்துக்கள்.!!!
No comments:
Post a Comment