Sunday, March 12, 2017

குறுந்தொகையில் நீர்வாழ் உயிரினத்திற்குமான உறவுகள்



பண்டைய தமிழ்ச்சான்றோர் நமக்கு அளித்த கொடை சங்க இலக்கியம், காதல், வீரம், இயற்கை,  இலக்கிய சுவை போன்ற அனைத்தும் சங்கப் இலக்கியத்தி;ன பண்புகளாக உள்ளன.  சங்க இலக்கியம் இயற்கை பெறும் இடங்களில் கல உயிரினங்கள் பற்றியும், அவற்றின் செயலபாடுகள் குறித்தும்,அவை மனிதர்களுடன் கொண்ட தொடர்புகளையும் தெளிவாக அறிந்து தொகுத்துள்ள பாடல்கள் பல காணக்கிடைக்கின்றன. அவற்றில் குறுந்தொகையில் காணப்படும் மக்களுக்கும் நீர்வாழ் உயிரிணங்களுக்கும் உள்ள உறவை பற்றி இக்கட்டுரையில் ஆராயப்படுகிறது.
அஃறிணை உயிரினத்திற்குமான உறவுகள்
மனித இனம் தோன்றிய காலத்திலிருந்தே மனிதர்க்ள பிற உயிரினங்களிடத்து உறவு கொண்டே வாழ்ந்து உள்ளனர். தங்களின் பாதுகாப்புகாகவும், உணவுக்காகவும் பிறதேவைகளுக்காகவும்  அஃறிணை உயிரினங்களை பழக்ககப்படுத்தி பயன்படுத்தியுள்ளனர்.  அதேபோல் சங்க காலங்களிலும் மக்கள் அஃறிணை உயிர்களுடன் இயந்து வாழ்நதுள்ளனர்.  அதனால் தான் சங்க புலவவர்கள் மக்களுக்கும் அஃறிணை உயிர்களுக்கும் இடையெ நிகழும் உணர்வியல் சிந்தனைகளையும் உறவுகளையும் எடுத்தாள முடிந்தள்ளது “குறிப்பிட் ஓர் இயற்ககை; காட்சியுடன் குறிப்பிட்ட மனித அனுபவம் பிணைக்கப்பட்டது”1 என்பதில் இருந்து ஒரு மனிதனின் அனுபவம் இயற்கையுடன் ஒன்றிக் காணப்படும் என்பதாகும்.  அதேபோல் சங்க புலவர்க்ள தம் பாடல்களில் மாந்தர்களின் உள்ளத்து உணர்வை எடுதியம்பும் பொது பல அஃறினை உயினங்களைக் கூறியுள்ளார்.
தொல்காப்பியத்தில் உயிரினம்
தெல்காப்பிய பொருளதிகாரத்தில் மரபியலில் உயிரினபாகுபாடு, ஆண்பால் பெயர்கள், பெண்பால் பெயர்கள் போன்றவற்றை கூறும் இடத்து நீர்வாழ் உயிரினங்களையும் கூறியுள்ளார்.
“நீர்வாழ் சாதியுள் அறு பிறாப்பு உரிய” (தொல்.1542)
இந்நூற்பாவிற்கு உரை கூறும் தமிழண்ணல் நீரில் வாழும் சாதியாகிய சுறா, முல்லை,இடங்கள், கராம் வாரல், வாளை எனும் ஆறும் போத்து என்னும் இளமைப் பெயர் பெறும் என்கிறார்.
“கடல் வாழ் சுறவும் ஏறு எனப்படும்   (தொல்.1540)
கடல்வாழ் உயிரினமான சுறாவின் ஆண்பல் பெயர் ‘ஏறு’ என்று குறிப்பிட்டுள்ளார்.
“நீர்வாழ் சாதியுள் நந்தும் நாகே”  (தொல்.1563)
நீர்வாழ் உயிரினங்களுடன் நந்து என்பது நத்தையின் பெண்பால் பெயராகும்.                                                                                      
“நந்தும் முரளும் ஈர் அறிவினவே
பிறவும் உளவே அக்கிளைபிறப்பே”  (தொல்.1528)
நீர்வாழ் உயிரினமான நத்தை இரண்டு அறிவுடையதே என்கிறார்.  மீன் ஐந்தறிவுடைய உயிரினமாக உரையாசியர்களால் கூறப்படுகிறது.
குறுந்தொகையில் நீர்வாழ் உயிரினங்கள்
குறுந்தொகையில் மீன், மகன்றில் பறவை, நீர்நாய், அன்றில் பறவை, நண்டு, வாளை, நாரை, கொக்கு போன்ற உயிரினங்கள் காணப்படுகின்றன.  ஏறத்தாழ முப்பத்தைந்து பாடல்களில் நீர்வாழ் உயிரினங்களின் குறிப்புகள் உள்ளன.  அதிலும் மருதம்,நெய்தல் திணைப் பாடல்களில் அதிகமாகவும குறிஞ்சி, முல்லை திணைப் பாடல்களில் அறிதாகவும் நீர்வாழ் உயிரினங்கள் காணப்படுகின்றன.  ஆனால் “சங்க இலக்கியங்களில் குறிஞ்சி,முல்லை, இவை திரிந்த பாலை ஆகியவற்றின் பின்னணியில் தீட்டப்படடுள்ள உயிரின ஓவியங்களi நோக்க மருதம், நெய்தல் ஆகிய நிலங்களுக்கு உரிய உயிரினங்கள் மிக சிலவே ஆகும்”-2 (பழந்தமிழ் இலக்கியதில் இயற்கை ப.314) சங்க இலக்கியங்களில் காணப்படும் உயிரினங்களை பார்க்கும் போது நீர்வாழ் உயிரினகள் குறைவே.  மருதம், நெய்தல் ஆகிய நிலங்களில் தான் நீர்வாழ் உயிரினங்கள் காணப்படும். அதனால் சங்க இலக்கியங்களில் நீர்;வாழ் உயிரினங்கள் பற்றிய பாடல்கள் குறைவாகவே உள்ளது.
மாந்தற்கும் நீர்வாழ் விலங்குக்குமான உறவுகள்
சங்க இலக்கியத்தில் புலவர்கள் ஒரு பொருளை உணர்த்துவதற்கு அஃறிணை உயிரினங்களின் செயல்பாடுகளை மறைபொருளாகப் பயனபடுத்தியுள்ளனர் அவ்வாறே மனிதர்களுக்கும் விலங்குகளுக்குமான உறவும் அமைந்துள்ளது.
“கழனி மாஅத்து விளைந்துஉகு தீம்பழம்
பழன வாளை கதூஉம் ஊரான்”  (குறுந்.91.1,2)
இதில் மரத்தில் இருந்து நீர்நிலையில் கனி விழுந்தால் அதை உண்ணுவது மீனின் குணம் இதையெ காதற்பரத்தை தான் தலைவனை அடைதந்தது தவறில்லை.  கனி முதிர்ந்து கனிந்து விழுந்தபோது மீன் உண்டது எவ்வாறு தவறாகும் என்பது போல அமைந்துள்ளது.  மேலும்,
“அரில்பவர்ப் பிலம்பின் வரிப்புற விளைகனி
குண்டுநீர் இலஞ்சிக் கொண்ட கதூஉம்”    (குறுந்.91.1.2)
  எனற அடிகளில் குளத்தின் அருகில் காணப்படும் பரப்பங்கொடியின் விளைந்த கனியினை ஆழமான நீரையுடைய குளத்திலுள்ள கெண்டை மீனானது பற்றியுண்ணும் தண்ணிய நீர்த்துறைகளையுடைய ஊரான் நம் தலைவன் என்று தோழி கூறியுள்ளமையால் இங்கு தலைவனின் ஊரான் சிறப்பை உணர்த்த நீர்நிலையும் மீனும், மீனின்  உணவாகிய பிரப்பம் பழமும் கூறப்பட்டுள்ளது.
“முட்கால் இறவின் முடங்குபுறப் பெருங்கிளை
புணரி இகுதிரை தரூஉம் துறைவன்”    (குறுந்.109.1,2)
கடலில் காணப்படும் இறாமீன் கூட்டத்தை கடல் அலையானது கொண்டுதருகின்ற அளவுக்குச் சிறப்பான துறைக்குரியவன் என்பதால் தலைவியின் வீட்டார் அவன் வரைவொடுவரின் அதனை ஏற்பர். அதனால் நீ அவளை மணம் செய்வது எளிமையான செயல் என்று கூறுவதாக அமைந்துள்ளது.
“எழுகுளிறு மிதித்த ஒருபழம் போலக்”   (குறுந்.24.4)
 தலைவன் மீண்டு வருவதாக கூறிச்சென்ற கார்காலம் வந்ததும், தலைவன் வாராமற்போகவே தோழியர் தலைவனைப் பற்றிக் கொடுமைகூறிப் பழித்து பேசுகின்றனா.; அது ஏழு நண்டுகள் பற்றிச் சிதைத்த ஒரு பழத்தைப் போல தலைவியை சொற்களால் தாக்கி வருவதாக கூறுகிறாள்.  இங்கு நண்டு தோழியராகவும், பழம் தலைவியாகவும் சித்தரிக்கப்பட்டுள்ளது. மேலும்,
“மாரி ஆம்பல் அன்ன கொக்கின்
பார்வல் அஞ்சிய பருவரல் ஈர் ஞெண்டு” (குறுந்.117.1,2)
தலைவி ஊரலருக்கு அஞ்சுகிறாள், அதனால் விரைந்து மணம் செய்து கொள்ள விரும்புகிறாள் என்பதை கொக்கின் பார்வைக்கு அஞ்சிய நண்டானது தாழைவேரிடத்தான  அளையுள்ளே விரைந்து சென்று தன்னைக் காத்துக்கொள்கிறது. இதனையே, “மீன் முதலிய நீர்வாழ் நீர்வாழ் உயிரினங்கள் தம் பகையாய் அமைந்த உயிர்களுக்கு அஞ்சுவது இயற்கை”3    என்பர். மேற்கூறிய பாடல்களில் இருந்து நீர்வாழ் விலங்குகளுடன் மனிதர்களின் தொடர்பும் அதனை அக்கால புலவர்கள் உற்று நோக்கித் தம் பாடல்களில் புனைந்த விதமும் அறிய முடிகிறது.
நீர்வாழ் பறவைகளுக்குமான உறவுகள்
அன்றைய கால மக்கள் பறவைகளை தூதுப் பொருளாக அதிக அளவில் பயன்படுத்தி வந்துள்ளனர்.  பறவைகளின் செயல்பாடுகள் மக்கள் மனதிற்கு இதம் தருவதாகவும், மனகவலைகளை எடுத்துறைக்கும் வாயல்களாகவும் அமைந்துள்ளன.  “மகன்றில் பறவைகள் இணைபிரியாமல் வாழும் தன்மை உடையன. எனவே, இப்பறவை பிரியாமல் வாழும் காதலருக்கு உவமையாக்கப்படுகிறது.” அது போலவே குறுந்தொகையிலும்,
“பூ இடைப்படினும் யாண்டு கழிந்தன்ன
நீர் உறை மகன்றிற் புணர்ச்சி போலப்
பிரிவு அரிது ஆகிய தண்டாக காமமொடு
உடன் உயிர் போகுகதில்லை – கடன்அறிந்து
இருவோம் ஆகிய உலகத்து,
ஒருவோம் ஆகிய புன்மை நாம் உயற்கே”    (குறுந்.57)
என்ற பாடலிலும் மகன்றில் பறவையின் புணர்ச்சி போலத் தலைவன் பிரிந்தவுடன் தானும் உயிர் பிரிவதாக என்று தலைவி கூறுவதாக உள்ளது.
“இரைதேர் நாரைக்கு எவ்வம் ஆகத்
 தூஉம் துவலைத் துயர்கூர் வாடையும்”  (குறுந்.103.3,4)
பிரிந்த தலைவன் தான்; மீண்டு வருவதாகக் குறித்துச் சொல்லிய பருவம் வந்துவிட்டது அவன் வரவில்லை.  அந்த பருவத்தை குறிக்க, நாரையானது தனக்குறிய இரையாகிய மீனைத் தேர்ந்தவாறு இருக்கும் போது நாரைக்கும் துன்பமுண்டாகுமாறு துளிகளைச் சிதறுகின்ற வாடைக் காற்றும் இப்போது வந்தது. நம் காதலர் இக்காலத்தினும் வாராதார் போல்வராயினர் என்கிறாள்.  இவற்றில் இருந்து மக்கள் இயற்கையோடு இயைந்து  வாழ்ந்தவர்கள் அவர்கள் பறவைகளுடன் கொண்ட உறவுகளைச் சங்கபுலவர்கள் பல சங்க பாடல்களில் பதிந்துள்ளனர்.
முடிவுரை
குறுந்தொகையில்  நீர்வாழ் உயிரினங்கள் பற்றிய பதிவுகள் ஏறத்தாள மூப்பத்தைந்து இடங்களில் காணப்படுகின்றன.  அதிலும் மருதம், நெய்தல் திணைப்பாடல்களில் நீர்வாழ் உயிரின குறிப்புகள் அதிகளவிலும், குறிஞ்சி, முல்லை ஆகிய திணைகளில் மிக குறைவாகவும் உள்ளது.  சங்ககால மக்கள் விலங்குகள், பறவைகள் போன்றவற்றுடன் தொடர்புகொண்டு வாழ்ந்துள்ளனர். அவற்றின் செயல்பாடுகளை உற்று நோக்கி சமூகத்தில் தேவையான இடத்தில் உவமையாகப் பயன்படுத்தியுள்ளனர்.  சமூக நடைமுறையில் மக்கள் பயன்படுத்திய உவமைகளையே புலவர்கள் முறைப்படுத்தி கவிதை நடையில் நயம்பட எடுத்து இயம்பியுள்ளனர்.

சான்றெண் விளக்கம்
1.   முனைவர் மு.வரதராசன். பழந்தமிழ் இலக்கியதில் இயற்கை. ப.34
2.   மேலது. ப.314
3.   மேலது. ப.326
4.   மேலது ப.389

No comments:

Post a Comment

கணவன் - மனைவி உறவைவிட உன்னதமான உறவு உண்டா?

கணவனுக்குத் தலைவலி. நெற்றியை அழுத்திப் பிடித்துக் கொண்டு சோபாவில் உட்கார்ந்திருக்கிறான். மனைவி கொஞ்சம் தைலம் எடுத்து வந்து, கணவன் அருகில் அம...