பேரா.முனைவர் பூ.மு.அன்புசிவா
149 ஹரிஸ்ரீகாடர்ன்ஸ்
சுண்டப்பாளையம்(அ)
கோயம்புத்தூர் - 641 007
பேச:098438 74545.
வேதங்கள் கடவுள், பிரபஞ்சம், ஆன்மா குறித்த கருத்துக்களை வெளிப்படுத்தியுள்ளன. உயிர், உயிரைப் படைப்பவன், உயிர் உலவுவதற்கான உலகம், உயிர் உடம்போடு செய்யும் செயல்கள் ஆகியவற்றை வேதகாலத்தினரும் பின்வந்தோரும் ஆராய்ந்தது போலவே கவிதையின் உயிர், உடல், கவிதையைப் படைப்பவன், கவிதை வழங்கும் பொருள் ஆகியனவும் பலகாலமாக ஆராயப்பெற்றன. கவிதையின் ஆன்மாவைக் கண்டறியும் முயற்சியும் தொடர்ந்தது. கவிதை என்ற வடசொல் வருவித்தல் நிறந்தீட்டுதல் என்ற இரு பண்புகளைக் கொண்ட தாலுக்களிலிருந்து பிறந்ததென்பர். கவிதை தன்னால் உணர்த்தப்பெறும் அனைத்துப் பொருன்மைகளையும் விளக்கிவிடுவதில்லை. கவிதையால் வெளிப்பட உரைக்கப்பெறாத பொருன்மைகள் கவிதைக்குள் தங்கியிருக்கும். கவிதைக்குள் தங்கி நிற்கும் இப்பொருளை உணரும் நிலையில் கவிதையின் புதிய பரிமானங்கள் விளங்கக்கூடும். இவ்வுட்பொதி பொருளைக் குறித்துத் தமிழ் இலக்கண நூலாராக தொல்காப்பியரும் வடமொழி இலக்கண நூலாரான ஆனந்தவர்த்தனரும் விளக்கியுள்ளனர். இவ்விருவருடைய கருத்துக்களை ஒப்பிட்டுக் காணுதல், கருத்துப் புலப்பாட்டு உத்தியில் இவர்கள் கடைப் பிடித்த நெறியை விளக்கும். தொல்காப்பியர் காட்டும் குறிப்புப்பொருள் தொல்காப்பியர் சொல்லதிகாரத்திலேயே வெளிப்படையாகப் பொருள் உணர்த்துதல், குறிப்பாகப் பொருள் உணர்த்துதல் என்ற இரண்டு பொருளுனர்த்தும் நெறிகளைக் குறிப்பிடுகிறார். தெரிபு வேறு நிலையில், குறிப்பில் தோன்றல் என இவையிரண்டிற்கும் அவர் பெயர் கொடுக்கிறார். இவற்றுள் குறிப்பாகப் பொருள் உணர்த்துதல் என்பது
“தோழி என்னுடைய நிலைபற்றி நீ தலைவர்க்குச்
சென்று சொல்வதாயின் வேறொன்றும் சொல்ல
வேண்டா நம் தோட்டத்தில் இந்த மழைக்காலத்தில்
பூத்துள்ள பீர்க்கம் பூக்கள் சிலவற்றைக் காட்டினாலே போதும்”
என்று வருவதைப் போன்றதாகும். பீர்க்கம் பூக்கள் வெறுத்து நிற்றலைப் போலத் தலைவியின் மேனி பொலிவு இழந்திருக்கிறாள். அதற்கு உன்னைப் பிரிந்திருப்பதே காரணம் என்பது இப்பாட்டு உணர்த்தும் குறிப்புப்பொருளாகும். தொல்காப்பியர் குறிப்புப்பொருள் அகப்பொருளுக்கே உரியது என்ற கருத்துடையவர். ஆகப்பாட்டைப் படித்தார் எல்லாரும் பொருள் விளங்கிகொள்ள இயலாது. குவிதைப் படிக்கும் பழக்கம் உடையவர்களுக்குப் பாட்டின் நுணுக்கமான பொருளமைப்புப் புலனாகும். ‘மானிடர் அறிவுநிலை படிப்படியாக வளர்ந்த நிலையிலேயே பொருட்புலப்பாடு சிறப்புற அமையும்” என்று அறியூர் கூறுவது அகப்பாட்டிற்குப் பொருந்தும். சங்க இலக்கியத்தில் தனித்தன்மைகளில் ஒன்று அக்காலப் புலவர்கள் இயற்கையை அழகுக்காக வருணனை செய்யாமல், ஓர் ஆழந்த குறிப்புப்பொருளை உள்ளடக்கியதாகப் படைத்ததே என்பர்”. இந்த இயற்கையின் பல கூறுகளே கருப்பொருள் எனப்படும். இந்தக் கருப்பொருள்,
“தெய்வம் எனாவே மா, மரம் புள்பறை
செய்தி யாழின் பகுதியொடு தொகை,
அவ்வகை பிறவும் கருவென மொழிப”
எனத் தொல்காப்பியராற் கூறுப்பெறும். தொல்காப்பியர் இந்தக் கருப்பொருளிலேயே குறிப்புப்பொருளை வைத்துக் கூறும் மரபை மொழிகின்றார். தெய்வத்தைத் தவிர்த்த ஏனைய செடி, கொடி, மலர், பறவை, விலங்கு, நீர்நிலை ஆகியவற்றின் வருணையில் அவ்வருணைக்கு அப்பால் ஒரு பொருள் தொகள் நிற்குமாறு வருணிக்கும் மரபு எடுத்துரைக்கப்படுகின்றன. இத்தகைய உத்தி படிப்போரின் உள்ளத்தில் உணர்ச்சியை எழுப்ப உறிய கருவியாயிற்று என்று அறிஞர் மொழிகின்றனர்.
உள்ளுறை உவமம்
உள்ளுறை என்பது இன்னதற்கு இது பொருள் என்று நேரே புலப்படுத்தாமல் புதைநிலையில் ஒரு பொருளைத் தனக்குள் அடக்கி வைத்திருப்பதாகும். எவமை இரண்டு வகைப்படும். ஒன்று ஏனையுவமம் மற்றொன்று உள்ளுறை உவமம், ஏனையுவமம் வெளிப்படையாகப் பொருளை விளக்கும். மலைபோன்ற தோள், தாமரை போன்ற முகம் ஆகியன எல்லாம் ஏனையுவமம்.
உள்ளுறை உவமை குறிப்பாகப் பொருளை விளக்கும். இவ்வுவமம் கருப்பொருள் அடிப்படையில் தோன்றுவது.
“உள்ளுறை உவமம் ஏனை உலம் எனத்
துள்ளாதாகும் நினையுவர் வகையொ
‘உள்ளுறை தெய்வம் ஒழிந்ததை நிலன் எனக்
கொள்ளும் என்ப குறியறிந்தோரோ
‘உள்ளுறுத்து இதனோடு ஒத்துப்பொருள் முடிகென
ஊள்ளுறுத்த இறுவதை உள்ளுறை உவமம்”
பொருளியற்கண் உள்ளுறை ஐந்து வகைப்படுமெனத் தொல்காப்பியர் கூறுகின்றார்.
அவையாவை
1. உடலுறை
2. உவமம்
3. சுட்டு
4. நகை
5. சிறப்பு
என்பன.
“உடலுறை உவமம் சுட்டுநகை சிறப்பெனக்
கெடலரு மரபின் உள்ளுறை ஐந்தே”
இவற்றுள் உடலுறையாவது ஒன்றைச் சொல்லும்போது பிறிதொரு பொருள் உடலுறைந்து காலப்படுதலாம். உவமம் என்பத ஏனை உவமத்தவின்றும் வேறுபட்டு உள்ளுறையாகப் பொருள் பயப்பது. ஒரு பொருளைச் சுட்டி உணர்த்தும் நெறி சுட்டெனப்படும். நகை என்பது வேறுபட்ட ஒரு பொருளை உணர்த்துவதாகும். சிறப்பு, என்பது இதற்குச் சிறந்தது இதுவேன இணையான வேறொரு பொருளை எடுத்துணர்த்துவதாகும். இவற்றுள் சுட்டு நகை சிறப்பென்பனவற்றிற்கு உரையாசிரியர்களாலும் எடுத்துக்காட்டு அளிக்கப்பெறவில்லை.
அகத்திணைக்கே உரியதாகிய உள்ளுறை அவமத்தை உரைத்தற்குரியார் யாரெனவும் எவ்வெப்பொருளை யார் உவமைப் படுத்த உயிரெனவும் தொல்காப்பியர் உணர்த்துதல் குறிப்பிடத்தக்கது.
“கிழவி சொல்லின் அவளறி கிளவி
தோழிக் காயின் நிலம் பெயர்த்துறையாது”
என்று கூறுகிறார். தலைவி தன் வீட்டு எல்லையில் உள்ள பொருள்களையே உள்ளுறைக்குப் பயன்படுத்தத் தோழி அந்நிலத்தில் உள்ளவற்றைக் குறித்தெல்லாம் கூறுவாள். இஃது ஓர் ஆழமான கருத்து நிலையாகும். அகத்திணைப் பாத்திர மரபும்.-- மரபும், தொல்காப்பியரால் தெளிவாக உரைப்பட்ட தன்மையை இஃதெடுத்துரைக்கும். சங்க அகப்பாடல்களில் பெரும்பாலும் உள்ளுறை தோழியாலேயே உரைக்கப்பெறுவதாக அமையும்.
“வாழி ஆதன் வாழி அவிலி
நெற்பல பொலிக பொன்பெறிது சிறக்க
என வேட்டோளே யாயே யாமே
நனைய காஞ்சித் சினைய சிறுமீன்
யாவர் ஜரன் வாழ்க
பாணும் வாழ்க என வேட்டோமே”
இப்பாட்டு தோழி கூற்றாய் அமைந்தது.
இப்பாடல் உள்ளுறை உவமை அமைந்த நிலையிணைக் காட்டுவது. தலைவனுடைய புறத்தொழுக்கத்தை கண்டிக்க என்னும் தோழி ஓர் உள்ளுறையால் அதனை மொழிகிறாள். காஞ்சி மரத்தின் பூஷம் மீவின் சினையும் ஒரு தன்மையவாய் விளைகின்ற ஐரனே: என்று தலைவனைத் தோழி விளித்துக் கூறுவதில் உள்ளுறை அமைந்துள்ளது. காஞ்சி மலரும் மீவின் இ சினையும் போலத் தலைவக்குத் தலைவியும் பொது மகளிரும் மாறுபாடின்றிருப்தை உள்ளுறுத்து பிற்வதைக் காணமுடிகிறது. இவ்வகைக் குறிப்பையே தொல்காப்பியர் உள்ளுறை என்றனர். ஊள்ளுறையை இறைச்சியினின்றும் என்றாகப் பிறித்தறியலாம். உள்ளுறையில் உரு சமன்பாடு (நஙரயவழைn) உண்டு என்பர் அறிஞர்.
“குழவி மா அத்து விளைந்துரு தீம்பழம்
பழவ வாண கதூஉம் ஓரல்”
கழனி - குடும்பம், பழனம் - பரத்தையர் சேரி, மாமரம் - குடும்பப் பினைப்பு, பழம் - தலைவன் வாண – பரத்தை என்று ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொன்று குறியீடாக நிற்கிறது. இவ்வாறானமை உள்ளுறையாகும்.
இறைச்சி
இறைச்சி உள்ளுறையில் வேறானது. ஊவமை என்ற ஒன்றும் இங்கு இல்லை. ஆழமாக எண்ணிப் பார்க்கும் அறிவாற்றல் உடையோர்க்கு ஏதோ ஒன்றை உளர்த்துவதுபோல அமைவதே இறைச்சி,
“இலங்கும் அருவித்தே இலக்கும் அருவித்தே
வாணின் இலங்கும் அருவித்தே நாலுற்று
குள் பேனான் பொய்த்தால் மலை”
என்ற செய்யுளடிகளில் ஓர் இறைச்சிப்பொருள் இருப்பதை நச்சினார்க்கினியர் காட்டுகிறார். தான் கூறிய உறுத்மொழியில் பொய்த்தவர் மலையில் மழை ஒழுங்காகப் பெய்கிறது. அருவிகூட ஒழுங்காக விளங்குகின்றது என்ற பாட்டில் உள்ளே அவன் தான் கூறிய உறுதி பொய்க்கவிலை, அனால்தான் அவன் மலையில் அருவி சாயிhக வீழ்கின்றது. என்ற கருத்து இறைச்சியாய் நிற்கக் காணலாம். கருப்பொருள் இங்கும் ஓர் உள்ளார்ந்த பொருளைப் பயக்கக் காணலாம். செய்யுளில் வரும் இறைச்சிப்பொருள் உரிப்பொருளின் புறத்தே வருமென்ற இளம்பூரணர் கருதுகின்றனர். உரிப்பொருளை விளக்கம் கருப்பொருளின் மேலதாக வரும் என்று கொள்வதே பொருத்தமாகும்.
இறைச்சிக்கோட்பாடு இறைச்சிக்குரிய கொள்கைகளைத் தமிழண்ணல் கீழ்க்கண்ட அடிப்படைகளில் விளக்குகின்றார்.
இறைச்சி கருப்பொருள் சார்ந்து வருவது
இறைச்சி தலைமக்களின் நேய வாழ்க்கையை வெளிப்படுத்தும்
மக்களின் உரிப்பொருள் ஐந்தின் புறத்ததாகப் பாடலுட் பயிலும்
உரிப்பொருட் செய்திகட்கு இயைபுப் பின்னனியாகவோ எதிர்ப்பன்னவியாகவோ இறைச்சி அமையும்.
பாடல் முழுவதும் பயின்ற நிறைவில் அதன் அடித்தளத்தில் குறிப்பாய் நிற்பது இறைச்சி
பறவை விளங்குகள் குடும்;ப வாழ்வு பற்றிய செய்திகள் யாவும் இறைச்சி என்ற சுட்டற்பாலன
இறைச்சி அகப்பாட்டிற்கு மட்டுமே உரியது
இறைச்சி வெறும் அடைமொழியாக மட்டும் இடம் பெறலாம். உயிரினைக் காதலை எடுத்துரைத்துப் பாலுணர்ச்சித் தூண்ட இறைச்சி பயன்படலாம்.
உயிரினக் காதல் வாழ்வைச் சுட்டல், பிறிதொரு பொருளை விளைத்தல் என்பவற்றிற்கு மேல் குறிப்புப் பொருள் ஒன்றை விளைத்தல் ஆகியன இறைச்சியின் செயற்பாடுகள்.
இலக்கியத்தில் இறைச்சி
“அழல் அவிர் தனந்தலை நிழலிடம் பெறாது
முடமான் அம்பினை மறியொடு திரங்க
நீர் மரங்கு அறுத்த நிரம்பா இயவின்
இன்னா மன்ற சுரமே
இனிய மன்றயால் ஒழிந்தோல் பன்பே”
“மணஉறை கோழிக் குறுங்காழ் பேடை
வேலி வெருகினம் மாலை உற்றென
புருமிடன் அறியாது தொகுபுடன் குழீஇய
ஐபதல் பிள்ளைக் கிளை பயிர்ந்தா அங்கு
இன்னாது இசைக்கும் அம்பலொடு
வாரல் வாழியர் ஐயஎனஎம் தெருவே”
என்ற பாடல்களில் மடமான், பினை ஆகியவற்றின் அன்பு வாழ்க்கையும், கோழிப் பெடையின் குடும்பம் பேனும் கடப்பாடும் இறைச்சியாய் நின்று தலை மக்களுக்கு இல்லற உணர்வு ஊட்டின.
உள்ளுறையும் இறைச்சியும்
உள்ளுறை, இறைச்சி இரண்டுமே கருப்பொருளை மையமாகக் கொண்டு வருகின்றன. தலைவன் தலைவியருக்கிடையே நிகழும் அன்பின் எழுச்சியில் இறைச்சி தோன்றும் பொருள். பொருளை உணரும் ஆற்றலுடையவர்க்கே விளங்கும் என்கிறார் தொல்காப்பியர்.
“இறைச்சியின் பிறக்கும் பொருளுமாருளனே
திறத்தியல் மருங்கின் தெளிவு மோர்க்கோ”
உள்ளுறை, இறைச்சி இரண்டுமே குறிப்புப்பொருளாய்ப் பாடலில் அமையும் கோட்பாடுகளைக் கூறுவன. கருப்பொருளில் அடிப்படையில் பிறிது பொருள் கூறுவன. உள்ளுறை கருப்பொருளுடன் ஒத்த நிலையில் காணப்படும். இறைச்சி கருப்பொருளிலும் அப்பால் ஒரு பெயர் உணர்த்தும் எனவே முற்று உவமமாக கூறும்போது உள்ளுறை என்றும். குறிப்புப்பொருள் பற்றிக் கூறும் போது இறைச்சி என்றும் பெயர் பெறுகின்றன. இறைச்சிப் பொருளின்றிக் கவிதை முற்றுப் பெறும். உள்ளுறையின்றிக் கவிதை முற்றுப் பெறாது.
ஆனந்தவர்த்தனரின் தொனிக் கோட்பாடுகள்
காரிகையும் விருத்தியுமான ஆனந்தவர்த்தனர் தொன்யாலோகத்தை இயற்றியுள்ளார். தொவியென்ப்படுவது காவியத்தான்மா என்பது ஆனந்தவர்த்தனரின் கருத்தாகும். தோனி வாழ்ச்சியப் பொருளாகவும் வியங்கியப் பொருளாகவும் வெளிப்படும். இவற்றுள் வியங்வியல் என்பது மகளிர் உடலிற்பொருந்திய இலாவவியத்தன்மை போன்று பாட்டிற்பொருந்துவது.
“வியங்கிய மென்றும் வேறோர் சீர்ப்பொருள்
விளங்குமாக் கவிஞர் விளம்பும் அவற்றில்
பென்ணுடல் வேறாம் இலாவலியம் போன்று”
இவ்வியங்கியப் பொருன்மை வாச்சியத்தில் ஆற்றவால் தோன்றும். இது பொருள் தொனி, அலித்தொன், சுவைத் தொனி என மூவகைப்படும். இவற்றுள் பொருள் தொனியாவது வாச்சியம் தெரிவிக்கும் பொருளிலும் எதிர்மறையான பொருளைத் தெரிவிக்கும், தோழி தலைவனை நோக்கிக் கூறுங்கால்,
“தார்மிகரே கவலையின்றிச் செல்லுங்கள் கோதானவரிக்
கரைப் பூம்புதரில் வாழ்ந்த கோபமிகுந்த சிங்கத்தால்
அந்நாய் கொல்லப்பட்டுவிட்டது”
செல்லுங்கள் என்பதற்கு உன்மையில் செல்லாதீர்கள் என்பதது இங்குப் பொருளாகும். சுpல விதத்தில் வாச்சியம் எதிர்மறையாயிருந்தலும் உண்டு.
ஆனந்தவர்த்தனர் காவியத்திற்த் தொனிப்பொருள் பெரும் சுவை சேர்ப்பது என்ற கருத்துடையவர்
“காவிய ஆன்மா அத்தொவிப் பொருளே
ஆவதால் முன்னர் ஆதி கவியின்
கிரவுஞ்சத் துவந்துவப் பரியாழ் கிளந்த்த
சோகமே செய்யுனாத் தோன்றிற் றன்றே”
என வால்மிகியின் இராமாயனத்தில் இடம்பெறும் கிரௌஞ்சவத்தாற் பெறும் தொனிப் பொருளைச் சுட்டிக் காட்டுவர். ‘வேடனே, மிதுனங்களாக கிரவுஞ்சப் பறவைகளுள் காமமோகம் கொண்ட ஆளைக் கொன்றமையால் பல நாள் இவ்வுலகில் நீ நிலைத்திரால் என்பது ஆகும். ஆண்பறவை இறந்ததால் பெண்பறவை கதறுவதைப் பாடிய சோகமே சுலோகமாகப் மாறி வெளிப்பட்டது.
“வேடனே! இணையாம் கிரவுஞ்சகங்களில்
குhமம் மீக்கூர்ந்த ஆனினைக் கொன்றதால்
நீ இவ்வுலகில் நெடிதிராய், காண்கவோ”
இதில் ஆண்பறவை ஆலம்பன விபாவம், பெண் பறவை கதறுகை உத்திபன விபாவம் சோகம் ஸ்தாயிபாவம்: சுவை கருணை ஆகும். இதில் ஸ்தாயிபாவமாகிய சோகமே” வியங்கியப் பொருளால் பெறப்பட்டது.
சொல்ற்றலும் சொற்பொருளும் என இரண்டு உண்டு. இவ்வகையில் ஒரு சொல்லுக்கு மூன்று பொருளுண்டு என்பர்.
1. அபிதா சக்தி (வெளிப்படைப் பொருள்)
2. இலட்சணாசக்தி (குறிப்பு)
3. வியங்கியம் (குறிப்பால் உணர்த்தப்படும் உட்பொருள்)
கங்கை நதி என்ற சொல் நேரடியான பொருளைத் தருவதால் அது அபிதா சக்தி. கங்கையிலுள்ள இடைச்சேற் எனும்போது கங்கை தநியை அடுத்துள்ள கரையில் உள்ள இடைச்சேரி என்று பொருள்படுகிறது. சொல்லும் பொருளும் முரண்பாடு கண்டால் அது இலட்சணாசக்தியாகும். கூறப்பட்ட செய்தியைச் சிறப்பிப்பதற்காகக மேற்கொள்ளப்படும் முயற்சியே வியங்கியம் எனப்படும். கங்கை என்று என்னும்போது அதலுடைய நீள, அகலங்கள், நீர்வளம், புனிதத் தன்மை போன்ற பல பொருட்களை உணர்த்துகின்றன. வியங்கியம் மூலம் தோற்றுவிக்கப்படும் இரசமே தொனியாகும். ஒரு பொருளைக் காண விரும்புகிறவன் விளக்கைத் துணையாகக் கொள்வதுபோன்று, வியங்கியப் பொருளை விரும்புகிறவன் அதற்கு அடிப்படையான வாச்சியப்பொருளைப் பேணுதல் வேண்டும் என்பது தொனி விளக்கமாகும்.
“பொருளைக் கால விழைபவன் விளக்கினைத்
துணையாகக் கொள்ள முயல்வது போன்றே
அப்பொருடன்னினாதர முடையோன்
வாச்சியப் பொருளைப் பேணவும் பெறுமே
வியங்கியம் தொனி அகிறத என்றாலம்”
வியங்கியம் அனைத்தம் தொனியாகிவிடாது. சுpல இடங்களில் ‘எது தொனி, எது வியங்கியம்?” என்பதில் கருத்துவேறுபாடு தோன்றுகிறது. வியங்கியம் தொனி ஆகாத இடங்கிளல் அதனைக் ‘குணபூத வியங்கியம்” என்பர். குனிபூத என்றால் இரண்டாம் தரமான அதாவது தன்னைத் தாழ்த்திக்கொண்ட என்று பொருள்படும்.
இரசத்தை உருவாக்கவே தொவி பயன்படுகிறது. இரசம் மட்டும் இருந்தால் தனிப்பட்ட பாடல்களுக்குச் சிறப்பின்றிப் போய்விடும். காவியங்களில் சுவை கண்டு, மகிழத் தொனிக்கோட்பாடு வழி வகுக்கிறது என்பது ஆனந்தவர்த்தனரின் கருத்து.
“மணி ஒலி ஒத்தே அதன் முறைத்தோன்றும்
தொனியும் சொற்பொருள் மூலம் இரவகைய”
வாச்சியத்தொனியின் ஒன்றன்பின் ஒன்றாக வியங்கியம் தோன்றுவதால் கணகணவென்றும் மவி ஒலியை ஒத்தது அது எனலாம். ஆத்தொனி சத்தசத்தி (சொல்லாற்றலால் தோன்றுவது), அர்த்தசக்தி (தொருளாற்றலால் தோன்றவது) என இருவகைப்படும். அந்த மணியின் மெல்லிய ஒலியதிர்வுகள் தந்தி மட்னாற்போல ன்விசைக்கோலங்களாகப் பின்னெழுந்து உலவுகிறது. அதுபோலச் சொல்லிலிருந்து
குறிப்பாற்றலால் எழும் சிந்தனை அதிர்வுகளே தொனியாகும். வுpளக்கானது தானும் ஒளிர்ந்து பிற பொருள்களையும் ஒவிரச் செய்வதுபோல, தொனி காவிய உலத்தினை ஒவிரச் செய்கிறது. குதை உடல் என்றால் சுவை ஆன்மாவாகும். ஏல்லா அணிகளிலும் உட்புதைந்து ‘மிகைப்படக்கூறலால்’ காவியத்துக்கு எவிதில் எழில் மிகும் என்றும் குறிப்பாற்றல் உடைய காவியம் சிறந்தது எனக் கூறுகிறார். புதிய பொருட்களை விழைவும் கவிஞன் முயன்று சுவைமிகு காவியத்தில் குறிப்பாற்றலை கைக்கொள்ளவேண்டும். இராமாயண, மகாபாரதங்களில் போரினை வருணத்தாலும், ஒவ்வோர் இடத்தும் புதுமையும் சுவையும் பொலியக் காரணம் கவிஞரின் குறிப்பாற்றல்தான் . ஒரு நங்கைக்கு உடல்வாகு, அங்கலட்சணங்கள், பண்புகள், நடை, ஆடை யணிகள் இவற்றிற்கு மேம்பட்டத் தனித்து ஓர் அழகுத் தத்துவம் அமைந்திருப்பது போல, கவிதை நங்கைக்கும், சொற்பொருள் எனும் உடல், நடை, பண்பு முதலியவற்றிற்கு மேம்பட்ட அழகினைத் தருகின்ற தொலி என்ற தத்தவம் உண்டு என ஆனந்தவர்த்தனர் கூறுகிறார். சுவைத்தொனியே சிறந்தும், காவ்ய ஆன்மாவாகவும் திகழ்கிறது. ஏன்றும் அது குன்றாமலிருக்கச் செய்வதே கவியின் முக்கிய நோக்கமாகும் என்று ஆனந்தவர்த்தவர் கூறுகிறார். காளிதாசனுடைய சாகுந்தலத்தல், சகுந்தலையைக் கண்டு காதல் கொண்ட துஷ்யந்தன் கூறுகின்றான்.
“தேன்செய் வண்டே! யுhம் தவம் இலமே!
மருஞம் கடைக்கண் மருவுகின்றனை நீ!
மறைபொருள் செவிக்குள் உரைப்பவர் எனவே
சகுந்தலை மந்மடந்தைத்ன் செவியரு கொலிப்பாய் !
தன்னை விரட்ட நீளகரம் அசைத்திடின்
தன்சுவை றிதியாம் இதழை நீ சுவைப்பாய் !
ஆதலின் நீயே பேறு பெற்றணை
ஆறிந்து மனம் மிக அழிந்தனம் யாமே!”
துஷ்யந்தன் அகுந்தலையின் கடைக்கண்பார்வையை நாடுகின்றான். ஆனால் அப்பேறு வண்க்குக் கிடைத்துள்ளது. தன் காதலை ஓரகசியமாகக் காதுகளுக்குள் சொல்ல விழைகின்றான். ஆனால் வண்டிற்குத்தான் அவ்வாய்ப்புக் கிட்டியுள்ளது. அவள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் முத்துமிட்டுவிடவேண்டும் என்று துடிக்கிறது அவனுள்ளம். அதுவும் விரப்ப விரட்டப்படுகிற வண்டுக்கே கிடைக்கிறது! இவையெல்லாம் வியங்கியப்பொருள் ஆகும். இதில் தன்மை நவிற்சியணி அமைந்து சவைத் தொனிக்கு அங்கமாகின்றது. இவ்வாறு பாட்டினுள்ளே படிப்பவர் சொற்களுக்கப்பால் உணரத்தக்க ஒரு குறிப்புமொழியை அறிவுமாறு அமைந்ததே தொவியென்று ஆனந்தவர்த்தனர் கூறினர்.
தொல்காப்பியரும் ஆனந்தவர்த்தனரும்
தொல்காப்பியர் கி.மு.மூன்றாம் நூற்றாண்டினர் என்பது அறிஞர் பலரின் கருத்தாகும். தொல்காப்பியருக்கு முன்பே பழந்தமிழ் இலக்கியப் பரப்புப் பெரிதாக இருந்திருக்கிறது. தொல்காப்பியர் குறிப்புப் பொருண்மை உள்ளுறை இறைச்சி ஆவிய இரண்டின் வழியே வெளிப்படும் என்ற கருத்துடையவர். ஆனந்தவர்த்தனர் தொல்காப்பியர்க்குப் பல நூற்றாண்களுக்குப் பின் வந்தவரெனினும் தொலிக் கோட்பாட்டின் முழு ஆற்றலையும் விளக்குகின்றவராகவே அமைகிறார்.
தொல்காப்பியர் அணிக் கோட்பாட்டில் உவமையனிக்கு மட்டுமே இடம் அளிக்கிறார். பிற அணிகளெல்லாம் உவமையின் மாறுபட்ட வடிவங்களே என்பது அவர் கொள்கையாகும். வடமொழி அலங்கார சாத்திரம் அணிகளைப் பலவாகப் பெருக்கிக் காட்டியிருக்கிறது. இதுபோலக் குறிப்புப் பொருண்மையினையும் தொல்காப்பியர் உள்ளுறை இறைச்சி என்ற அளவில் எடுத்துரைத்த இவை அகப்பொருட்கே உரியன என்று உரைக்கின்றார். ஆனந்த வர்த்தனர் காவியங்களின் ஆன்மா தொணியென்று கருகின்றார். தொனி இடம்பெறும் அடிப்படையிலேயே வடமொழிக் காவியங்கள் உத்தம காவியங்கள் அத்ம காவியங்கள் எனப்பகுக்கப்படுகின்றன.
தொனி என்பது இறைச்சியேயாம் என்று மு.வரதராசனார் கூறுவதை அறிஞர் எடுத்துக் காட்டுகின்றனர். உள்ளுறை உவமத்தைவிட இறைச்சியே தொனியுடன் நெருங்கிய தொடர்புடையது. இறைச்சியின் சாயலைப் பெற்றுள்ள வேற்றுமையளி, வேற்றுப்பொருள் வைப்பவி, தற்குறிப்பேற்ற அணி, ஒட்டணி ஆகியவை தொணியோடும் தொடர்புடையன.
No comments:
Post a Comment