Posts

பாரதி…தீ…தீ…தீ!

முனைவர் பூ . மு . அன்புசிவா தமிழ்த்துறைத்தலைவர் சுகுணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி நேரு நகர் , காளப்பட்டி சாலை கோயம்புத்தூர் -641 014. பேச :9842495241. பாரதி … உன் கடைசி கவிதையை   நீட்டினால் தீ … அதனால் தான் என்னமோ உன் கணல் கவிதைகள் எங்கும் தீ …! பாரத தேசம் உன் ஒற்றைப் பார்வையால் பாரதி தேசமானது …! பூனூல் போட்ட மேல் தடடு மக்களுக்கு மத்தியில் தமிழ்ப் பெண்களுக்காக பாநூல் பாடிய பாவலன் நீ …! குடியிருந்த தாய் வீட்டிற்கு வெள்ளை அடிக்கவில்லை நீ ஆனால் ! தன் தாய் நாட்டிற்காக வெள்ளையனையே விரட்டி அடித்தவன் நீ …! சேதுவை மேம்படுத்தி சமுத்திரத்தில் வழி கண்டாய் பெண் சமூக மேம்பாட்டிற்காக உன் பாட்டால் விழி கண்டாய் …! அன்று இந்தியா என்னும் இதழின் ஆசிரியாரும் நீ தான் … இன்று இந்தியாவின் ஆச்சரியமும் நீதான் .  

கோவை ஏசியன் பொறியியல் கல்லூரயில் நடந்த (10.12.2021) முதலாமாண்டு மாணவர்களுக்கான தொடக்க விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்களுக்கு பரிசு வழங்கிய போது எடுத்த படம். அருகில் கல்லூரி முதல்வர் முனைவர் சவிதா அவர்கள் உள்ளார்.

Image
 

கோவை, எஸ்.எம்.எஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் (22.10.2021) தமிழ்த்துறையின் வஞ்சித் தமிழ் இலக்கிய மன்றத் தொடக்கவிழா எடுத்த படம்.

Image
 

நான் பெற்ற விருதுகள்

Image
 

உணவே மருந்து

Image
 

காதல் காட்சி

சங்க இலக்கியப் பாடல்கள் என்றாலே கற்றோர் மத்தியிலேயே ஒரு பயம் தெரியும். சரியான முறையிலும், எளிமையான விதத்திலும் மக்களுக்கு அவை வழங்கப் பட்டால் இப்பாடல்கள் பற்றிய பயம் அறவே நீங்கிவிடும். இரசிகத்தன்மையைப் போல் பயத்தையும், தயக்கத்தையும் போக்க வேறு எதனாலும் முடியாது.  இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் தமிழ் இலக்கியங்கள் பலவும் செய்யுள்களால் ஆக்கப்பட்டன. அவற்றுள் சில தனிப்பாடல்கள் இன்றைய சிறுகதைக்குச் சொல்லப்படும் இலக்கண வரம்புகளுக்கு ஏற்ப அமைந்துள்ளன. குறிப்பிட்ட ஒரு நிகழ்ச்சியை உணர்த்துவதாக, சுருங்கச் சொல்லி விளங்க வைப்பதாக இருக்க வேண்டும் என்ற என்ற சிறுகதை வரம்புக்கு அமைவாக எழுதப்பட்ட ஒரு கழக இலக்கியச் சிறுகதை இது. முன்றில் முஞ்சையொடு முகண்டை பம்பி்ப்      பந்தர் வேண்டாப் பலர்தூங்கு நீழல்               கைம்மான் வேட்டுவன் கனைதுயின் மடிந்தெனப்   பார்வை மடப்பிணை தழீயிப் பிறிதேர்           தீர்தொழில் தனிக்கலை திளைத்து விளையாட   இன்புறு புணர்நிலை கண்ட மனையோள்       ...

திருக்குறள்

வாய்மைத் திரு வள்ளுவனார் வகுத்து வைத்த பாதையிது நான்மறை வேதம் இது வாழ்வு நெறிப் போதமிது! மேன்மையுற மாந்தர் பெற மேதையவர் தந்த மொழி; ஆனவரை பொருள் அறிந்த அனுபவமே குறள் அமுதம்; மூழ்கிவரும் வேளையில் நான் முத்தடுக்கத் துணிந்த துண்மை; வாழந்திருக்கும் நாளுக்குள் யான் வந்தவரை உரைப்பன் குறள்; மேதினியில் வாழ்ந்த வகை மீதம் இது அவ்வளவே! மேவுவது வாழ்வா சாவா? யாதுமவன் இட்ட பணி ஆய்ந்து தமிழ் அறிந்து அரும் பொருள் உரைக்க ஆதிசிவன் தாழ் பணிந்தேன் அமுத மழை பொழிகவே