Posts

என் தேவதையும் ஆசிரியர் தான்...!

ஆண்களாய் இருக்கும் ஆசிரியர்களுக்கு என்னை ஒருபோதும் பிடிக்காது காரணம் நிறையவே... வாசல் முன் நிறுத்துவார்கள் முகத்தை பார்க்காமல் முறைப்பார்கள் முகத்தை திருப்பி பேசுவார்கள் சொல்லாமல் போவார்கள்... தோட்ட வேலை செல்லுவார்கள் சாக்பீஸ் துண்டுகளால் எறிவார்கள் எல்லாவற்றிற்கும் காரணம் இதுதான்... பெண் ஆசிரியர்களுக்கு என்னை ரொம்ப பிடிக்கும்... என்னை தலையை சாய்த்து சிரிப்பார்கள்... தங்கள் கைப்பைகளை கொடுத்து கொண்டுபோய் தங்கள் அறையில் வைக்க சொல்வார்கள்... மழை பெய்தால் கவிதை சொல்ல சொல்லுவார்கள்... நல்ல சாப்பாடு கொண்டுவந்தால் தனியாக அழைத்து சாப்பிட சொல்வார்கள்... காதலிக்க சொல்வார்கள் காதலிக்கும் பெண்களிடம் சண்டை போட சொல்வார்கள்! பேருந்து வரும் வரை துணைக்கு இருக்கச் சொல்வார்கள்... நான் தவறு செய்தால் அம்மா அடிப்பது போல் என்னை அடிப்பார்கள்... ஆமாம் ஆமாம் அப்போதே சொல்வார்கள்... சிவா ஒரு டீச்சரைத் தான் கல்யாணம் பண்ணுவட என்பார்கள்... ஆம் நண்பர்களே! அதுதான் நடந்தது... ஆசிரியர்கள் தான் என் உலகின் முதல் தேவதைகள்... அவர்கள் தான் என் பால்யத்தின் கனவுகளை திறந்து வை...

தொப்பை இருக்கா உங்களுக்கு..., அப்போ சந்தோசப்பட்டுக்கோங்க!!

ஒருத்தருக்கு தொப்பை  இருந்தாலே எல்லாரும் ஒரு மாதிரி பார்ப்பாங்க. சரக்கடிப்பானோ?! எந்த வேலை வெட்டிக்கும் போகாம திண்ணுட்டு திண்ணுட்டு தூங்குவானோ இல்லை உடம்புக்கு சரியில்லையோன்னு நினைச்சுப்பாங்க. பஸ்சுல கூட்டத்துல நிக்குறதுக்கு சிரமம், ரெடிமேட் சட்டை, டிஷர்ட், ஃபேண்ட் சரியான சைசுக்கு கிடைக்காது. சின்ன சந்துல நுழைஞ்சு போக முடியாது, விடிகாலைல போர்வைக்குள்ள சுருண்டு படுத்துக் கிடக்கும் சுகத்தை இழந்து வாக்கிங், ஜாக்கிங் போகனும், வெளிய விசேஷங்களுக்கு போனால் பசிச்சாலும் கொஞ்சமா சாப்பிடனும் (இல்லாட்டி, இப்படி திங்குறதுனாலதான் தொப்பை வந்திருக்குன்னு கேலிக்கு ஆளாகனும்), பிளட், சுகர்லாம் கரெக்டா செக்கப் பண்றீங்களான்னு தொப்பையா பார்த்துக்கிட்டே கேட்பாங்க.   இப்படி  சின்ன சின்ன இழப்புகளை தினம் தினம் சந்திக்கனும். ஆனா, தொப்பை இருக்குறதால நன்மைகளும் கிடைக்குதுங்க. அதனால, இனி தொப்பை இருக்குறவங்க, சங்கோஜப்படாம, சந்தோஷப்பட்டுக்கிட்டு உங்களை கேலி பண்றவங்ககிட்டயும் நன்மைகளை எடுத்து சொல்லுங்க..... தொந்தி, தொப்பை, செல்லதொப்பைன்னு பல பேர்களால் ஆசையுடன் அழைக்கும் தொப்பையின் நன்மையை பற்றி இனி காண...

பொங்கல் பண்டிகையின் தைப்பொங்கல் வரலாறு

சங்ககாலத்தில் அறுவடை காலத்தில் நல்ல மழை பெய்யவும், நாடு செழிக்கவும் பெண்கள் விரதத்தைக் கடைப்பிடித்தார்கள். தை முதல் நாளில் இந்த விரதத்தை முடிப்பார்கள்.   உழவர்கள் மழையின் உதவியால் ஆடி மாதம் முதல் உழைத்துச் சேர்த்த நெல்லை மார்கழியில் வீட்டிற்குக் கொண்டு வந்து தமது உழைப்பின் பயனை நுகரத் தொடங்கும் நாளே தைப்பொங்கல். உழைக்கும் தமிழ் மக்கள் தாமே கண்டுணர்ந்து, தமது உழைப்பிற்கு உதவிய இயற்கைக்கும், தம்மோடு சேர்ந்து உழைத்த கால்நடைகளுக்கும், தமது நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவிக்கும் விதமாக சர்க்கரைப் பொங்கல் படைத்தது வழிபட்டனர். பொங்கல் விழா சில இடங்களில் நான்கு நாள் கொண்டாட்டமாக கொண்டாடப்படுகிறது. முதல் நாள் போகிப் பண்டிகை தமிழ் ஆண்டின் மார்கழி மாதத்தின் கடைசி நாளன்று கொண்டாடப்படுகிறது. பொங்கல் திருநாளின் முதல்நாள் கொண்டாடப்படுகிறது. இந்த நாள் 'பழையன கழித்து, புதியன புகவிடும்' நாளாகக் கருதப்படுகிறது. பழையவற்றையும், உபயோகமற்றவையும் விட்டெறியும் நாளாகக் கருதப்படுகிறது. போகியன்று, வீட்டின் கூரையில் பூலாப்பூ செருகப்படும். அன்றைய தினம், வீட்டில் தேங்கிப் போயிருக்கும் குப்பைகள் த...

பெண்மையை போற்றுவோம்!!

    ஒரு துளி     உதிரத்தை கூட     உருவம் செய்து     குழந்தையாய் தருபவள்  பெண்!!!     செலவு செய்தாலும்     எதோ ஒரு வகையில்     சேர்த்து வைப்பவள் பெண் ...!     தங்கமாய் வாங்கினாலும்     தன் மகள்     தாலிபாக்கியம் பெற     தந்து விடுகிறாள் பெண்!!!     புடவை வாங்கினாலும்     புருஷன் தகைமைக்கு     பெருமை சேர்க்கிறாள் பெண்...!!!     தன் வயிறு காய்ந்தாலும்     மார்பிலே பால்கொடுத்து     மகனை வளர்க்கிறாள் பெண்...!!!     கணவன் கயவன்     என்றாலும்     காரணம் இவள் என்று     கெட்ட பெயர்     வாங்கிக்கொள்கிறாள் பெண் ...!!!     கொண்டவன்     குடிகாரன் ஆனாலும்     குடித்துவிட்டு அடித்தாலும்     குடும்பத்தை காக்கிறாள்...

தமிழர்களின் வாழ்வியல் அடையாளம் ஏறுதழுவுதல்

    பல நூற்றாண்டுகளைத் தாண்டி நிற்கும் எமது இனத்தின் அடையாளம் ஏறு தழுவல் அல்லது ஜல்லிக்கட்டு என்பது தமிழர்களில் தொன்மை குடிகளான ஆயர்களின் எனப்படும் இடையர் மரபு வழி குல விளையாட்டுக்களில் ஒன்றாகும் என்பதே உண்மை.        ஏறு என்பது காளை மாட்டைக் குறிக்கும். மாட்டை மனிதர்கள் அடக்குவது அல்லது கொம்பைப் பிடித்து வீழ்த்துவதான விளையாட்டு. ஜல்லிக்கட்டு தற்போதய தமிழ் நாட்டில் ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு விதமாக நடைபெறுகிறது. மதுரை, அலங்காநல்லூர் போன்ற இடங்களில் வாடிவாசல் வழியாக வெளியேறும் காளைகளை இளைஞர்கள் விரட்டிச் சென்று அதன் திமில் மீது தொங்கியபடி குறிப்பிட்ட தூரம் செல்கிறார்கள்.     பண்டையத் தமிழ் நூல்கள் ஏறு தழுவலை ஒரே விதமாக தான் குறிப்பிடுகின்றன. பெயர்க் காரணம் ஜல்லிக்கட்டு என்ற பெயர் தற்காலத்தில் உருவான பெயர் மட்டுமே. முல்லை நிலத்தில் வாழ்ந்த ஆயர் இன மக்கள் காளையை அடக்குபவனை மணமகனாக தேர்வு செய்யும் முறையை கைவிட, ஆயர் குல ஆடவர்கள் பெண்ணிற்க்காக காளையை அடக்க ஆரம்பித்தனர்.     முல்லை நிலத்தில் வாழ்ந்த ஆயர் இன மக்கள் கா...

ஓவியா கல்வி அறக்கட்டளை

Account Number: 20002875993 Account Holder Name: P.M.Anbushiva Account Type: Current Bank : state bank of india State : Tamil Nadu District : Dindigul   Branch : Oddanchatram IFSC Code : SBI0009588 Phone No: 09842495241/09843874545

நவீன தமிழ்க் கவிதைகளும் செம்மொழிக் கூறுகளும்...

  ந.முருகேசபாண்டியன்                                                             மனித நினைவுகளின் வழியே கடந்த காலத்தை மீட்டுருவாக்கும் மொழியானது, வரலாற்றைச் சாத்தியப்படுத்துகின்றது. சமூகமயமாக்கலின் அடிப்படையில் மொழி, காலந்தோறும் பண்பாட்டுப் பதிவாகவும் விளங்குகின்றது. மனிதனின் ஆறாவது புலனாக விளங்கும் மொழியின் மூலம் சமூகமயமாக்கல் துரிதமாக நடைபெறுகின்றது. பண்டைய இலக்கியப் படைப்புகள் தொடங்கிப் பதிவாகியுள்ள விழுமியங்களின் தொடர்ச்சியானது, அம்மொழியின் வளத்திற்குச் சான்றாக உள்ளது. தொன்மை வாய்ந்த செம்மைமிக்க மேன்மையான அம்சங்கள், செவ்வியல் தன்மையுடையதாக்க் கருதப்படுகின்றன. இன்று பேச்சு வழக்கிலிருந்து அழிந்திருந்தாலும், பண்டைக்காலத்தில் வளமான இலக்கியப் படைப்புகளுடன் சிறந்திருந்த மொழிகளும் செவ்வியல் தன்மையுடையனவாகக் கருதப்படுகின்றன. பொதுவாகச்  செம்மொழி எனத் தனித்த அங்கீகாரம் ...